Pages

Dec 31, 2012

புதுவருட வாழ்த்து..


வாழ்த்துகிறேன்...

வலையுலக அன்புத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!

அனைவரும் உடல் உள ஆரோக்கியமுடன் உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறி நலம் பல பெற்று, நீடூழி வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!!!


வாழ்க வளமுடன்!
----------------



%%%%%%%%

_()__()__()__()__()__()__()__()__()__()__()__()__


வாழ்வென்றால்....
********

நம்பிக்கை வேண்டும் வாழ்க்கையிலே
நடந்தவை என்றும் நடந்தவையே...

சுகமோ துக்கமோ களிப்போ கண்ணீரோ
முடிந்தது என்றும் முடிந்தவையே...

கடந்ததை எண்ணிக் கலங்கி நின்று
விடிந்திடும் பொழுதை இழந்துவிடாதே...

வருந்திப் புலம்பி வதைபல பட்டு
வாழ்வை வீணே அழித்துவிடாதே...

இரவு வந்தால் விடியலும் வரும்
இயற்கை நியதி சுழற்சியிது தொடரும்...

இருள் மறைந்து ஒளி பிறக்கும் 
இறையருள் என்றும் துணையென நிற்கும்...

சோகங்கள் மட்டும் வாழ்க்கை அல்ல
சுகமும் எமக்கு நிரந்தரமல்ல...

சோர்ந்துவிடாதே தொடர்ந்து நடைபோடு
இதுவும் ஓர்நாள் கடந்து போகும்....

அன்புடன் இளமதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வாழ்ந்தே தீருவோம்...:)




*************

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).

_()_()_()_

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை      ”கிளிக்”         
                பண்ணவும். ...நன்றி..:)

48 comments:

  1. அழகான கவிதை.
    ஆள வரும் புத்தாண்டில் ஓர்
    அன்புசார் அறைகூவல்.
    இல்லங்கள் எங்கேயும்
    ஏற்றிவைத்த தீபங்கள்.
    ஏற்றமிகு எண்ணங்கள்.
    எம் உவகைக்கோர் எல்லையில்லை.

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சூரி சிவா... முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்லீட்டீங்கள்...மிக்க நன்றி...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      உங்கள் வாழ்த்துக் கவியும் அருமை, வாழ்த்திற்கும் மிக்க நன்றி....

      Delete

  2. இருள் மறைந்து ஒளி பிறக்கும்
    இறையருள் என்றும் துணையென நிற்கும்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
  3. Replies
    1. ஜலீலாக்கா..வாங்கோ..
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
  4. இளமதி உங்களுக்கும்,உங்ககுடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    மிகவும் அழகான கார்ட் செய்திருக்கிறீங்க.சூப்பர்,சூப்பர் கார்ட். பாடல்,அதைவிட "வாழ்வென்றால்" கவிதை கருத்தாழமிக்க கவிதை,படித்ததில் பிடித்தது எல்லாமே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆ..அம்மு...வாங்கோ..மிக்க நன்றி எல்லாவற்றிற்கும்...:)

      கவிதை..ஏதோ சும்மா எழுதிப்பார்த்தது..சொற்குற்றம் பொருட் குற்றம் பொறுத்தருள்க...:)

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
  5. உங்களுக்கும் புத்தாண்டு இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள் இளமதி.
    கவிதை அருமை. உலகம் அழிந்து 10 நாள் ஆகிவிட்டது. இனி... வாழ்ந்தே தீருவோம். ;)
    க்வில்லிங் இரண்டும் வெகு அருமை.

    ReplyDelete
    Replies
    1. என்னது உலகம் அழிஞ்சு போச்சோ? ஆவ்வ்வ்வ்வ் அப்போ இங்கின இருப்பது எல்லோரும் ஆவியோ? ஹையோ ஆண்டவா.... நான் மட்டும்தேன் அழியாமல் காலோடு:) இருக்கிறேனோ:)))

      Delete
    2. வாங்கோ இமா உலகம் எங்கை அழிஞ்சது...:) எல்லாம் அப்பிடி அப்பிடியேதான் இருக்கு..அதுதான் நான் கவிதை எழுதி அழிக்கிற முயற்சியில இறங்கியிருக்கிறன்....:)))

      மிக்க நன்றி உங்க அன்பிற்கும் வாழ்த்திற்கும்...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
    3. //என்னது உலகம் அழிஞ்சு போச்சோ? ஆவ்வ்வ்வ்வ் அப்போ இங்கின இருப்பது எல்லோரும் ஆவியோ?//

      அப்பப்ப நாங்க ஆவியா இருந்தாத்தான் எல்லாத்துக்கும் நல்லது அதிரா...:)))

      Delete
  6. வாழ்வென்றால்...
    ஒவ்வொன்றும் அவசியமான சிந்திக்கத் தூண்டும் வரிகள்..
    உங்கள் கைவண்ணம் (?) அழகான இருக்கிறது
    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சிட்டுக்குருவி...
      ஆகா கவிதை சிந்திக்கவைச்சிருக்கோ.....

      உங்கள் கைவண்ணம்(?) எண்டிட்டு பிறகேன் ? இப்புடீ என்க்கும் விளங்கேல்லை...:))) வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
  7. கவிதை க்வில்லிங்கையும் தூக்கி சாப்பிட்டு விட்டது
    நீங்க எழுதினதுதானே கவிதை இளமதி லைட்ட தெரியுது நல்லா ஹைலைட் செயுங்க
    ..சூப்பர்

    க்விலிங் சொல்லவே வேணாம் சூப்பர் .
    இதை QUILLING CAFE இல் இணையங்க ப்ளீஸ் .
    லிங்க் என் ஆங்கிலபக்கதில் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு...என்ன இம்முறை கார்ட் நல்லா இல்லையோ...:)
      கவிதை க்விலிங்கை சாப்பிட்டுதோ ஓ..அவ்வலவு நல்லாவா இருக்குது....;)

      ஏதோ பாத்ரூம் பாடகர் மாதிரி அப்பப்ப கிறுக்குவன் இம்முறை இங்கை முதல்முதல் ஏதும் எழுதி போடுவமே எண்டு போட்டுட்டன் நல்லா இருக்கெண்டுறது சந்தோஷம்...மிக்கநன்றி..அப்ப நானும் கவிஞி....:))))

      ஆங்....க்விலிங் கஃபேலயோ...ஐயோ ஜாமீ...அங்கை நான் வந்து...யோசிப்பம்...:)

      வாழ்த்திற்கு மிக்க நன்றி அஞ்சு!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      Delete
  8. ஆஹா வரவர இளையநிலா:) பயங்கர முன்னேற்றம்... குயில் எல்லாம் சூப்பர்... ஆனா இம்முறை சிம்பிளாச் செய்து பேய்க்காட்டினமாதிரி இருக்கு.... :) கர்ர்ர்ர்ர்ர்ர்ர். அஞ்சூஊஊஊஊஊஊஊ... பாருங்கோ உங்கட சிஷ்யை கலக்கிறா.. அடுத்த சிஷ்யை இன்னும் சொற்ப வேளையில் கலக்க இருக்கிறா:) அது நாந்தேன்:)).

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. என்ன நான் பயங்கரமா தெரியுறனோ... அவ்...:)))
      க்விலிங்கை சொல்லுறீங்களோ பயங்கரம், சிம்பிள் & பேய் மாதிரி எண்டூஊ...:)))
      பிள்ளையாரை பேய் எண்டாதேங்கோ...தும்பிக்கையால ஒரே அடி அடிச்சுப்போடுவர்...:)

      ம்..கலக்குறீங்க நீங்களும்...கலக்குங்கோ...சந்தோஷம்...

      Delete
  9. ஆவ்வ்வ் இளமதியோ அக் கவிதை எழுதியது?.. ஆஆஆஆஆஆஆ.. ஷொக்ட் ஆகிட்டென்ன் நான்ன்.. வாழ்க்கை.. நம்பிக்கை பற்றி எல்லாம் அக்குவேறு ஆணி வேறா... அஞ்சூஊஊஊஊஊஊஊ சுட்டாறின தண்ணி தெரியுங்கோ மீக்கு:)

    ReplyDelete
    Replies
    1. ஹையோ என்ன இது இப்புடீ சவுண்டா சொல்லீ...ஏதோ சும்மா நானும் கிறுக்கிப் பார்த்தன்...ஆனா உங்கள மாதிரி எழுதுற திறமை இல்லை...:)

      புரட்சி எவ்எம்ல கொடி கட்டிப் பறக்குறீங்க...:) வாழ்த்துக்கள் உங்களுக்கு...

      Delete
  10. அருமையான தத்துவப் பாடல்...

    கடசியில் ஆரது உப்பூடி நசிப்பது ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
    Replies
    1. வாழ்ந்தே தீருவோம் இல்லாட்டி இதுக்காக திருப்பி பிறக்காவா முடியும்...வேணாம் சாமீ...:))))

      அது நசிக்கேல்லை... வடிவாப் பாருங்கோ...அங்கை இங்கை ஓடாதேன்னு காலுக்கை பத்திரமா பிடிச்சு வைச்சிருக்கினம்ம்ம்ம்....;)

      Delete
  11. இனிய புதுவருட வாழ்த்துக்கள்... வாழ்த்துக்களுக்கு நன்றி.. ரீ ஆயாசம் ஏதுமில்லையோ?:)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு ரொம்ப நன்றி அதிரா!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

      ஆயாசமோ அதுதான் நீங்க ட்ரீட் குடுக்கிறீங்கள்தானே..அதுவே போதும்...:)

      Delete
  12. [co="red"]இங்கு வாழ்த்துக் கூறும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

    நேரப் பற்றாக்குறையினால் தனித்தனியே பதில் தரத் தாமதமாகின்றது. மன்னிக்க வேண்டுகிறேன்... விரைவில் வருகிறேன்....:)[/co]

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நோஓஓஓஓஓஒ ஒத்துக்க மாட்டேன்ன் ஒத்துக்க மாட்டேன்ன்ன்.. நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே....:)))

      Delete
    2. ஏன்ன்ன்.கர்...அப்பப்ப இப்புடித்தான்..அஜெஸ் பண்ணிக்கோணும்ம்ம்...:)))

      Delete
  13. Wish You & Your Family A Very Happy and Prosperous 2013 Ilamathy!

    Quilling cards are beautiful! I love the Ganesha card very much! Kavithai- super! Kalakkareenga! Will come later for the rest! :)

    ReplyDelete
    Replies
    1. மகி..வாங்கோ உங்களுக்கும் என் மனமார்ந்த புதுவருட நல் வாழ்த்துக்கள்..

      பிள்ளையாரை ஒருமாதிரி பிடிச்சு உட்கார வைச்சுவிட்டேன் அவரும் உங்களுக்காகவே காத்திருந்தார்..:)

      ரொம்பச் சந்தோஷம்..கவிதையையும் ரசிச்சீங்களோ..அப்போ இனி கவிதையா பொழிஞ்சிடுவோம்..ரசிக்க நிறையப்பேர் வந்தாச்சே..ஆ.அ ஓடாதீங்கோ நான் சும்மா சொன்னேன்...:)))

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மகி!

      Delete
  14. இப்புத்தாண்டில் இளையநிலா முழுவண்ண நிலவாக ஜொலிக்கட்டும் . வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜீவன்சுப்பு...முதன்முறையாக இங்கு வந்திருக்கிறீங்க..மகிழ்ச்சி..

      உங்களுக்கும் இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  15. //புதுவருட வாழ்த்து..//

    ஆஹா, இந்தத்தலைப்பே தென்றலாக எம்மை வருடிச்செல்கிறது.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வைகோ ஐயா..:)

      Delete
  16. //வாழ்த்துகிறேன்...//

    ஆஹா அனைவரையும் வாழ்த்துங்கோ !

    //வலையுலக அன்புத் தோழர்கள் + தோழிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!//

    எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்தும் உங்களுக்கே

    //அனைவரும் உடல் உள ஆரோக்கியமுடன் உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறி நலம் பல பெற்று, நீடூழி வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!!!//

    சும்மாச்சொன்னால் போதாது. நிஜமாகவே மனசார வேண்டிக்கொள்ளணும். அப்போது தான் எல்லோர் எணணங்கள் யாவும் நிறைவேறும். உடல் + உள்ள ஆரோக்யம் பெருகும். நலமும் பெற முடியும்.

    //வாழ்க வளமுடன்!//

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் + நலமுடன்.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. மனசார எல்லோருக்குமாக வேண்டிக்கொண்டேன் சந்தேகமே வேண்டாம். உங்களுக்காக வேண்டுமென்றால் இன்னொருதரம் வேண்டிக்கட்டுமா...:)))

      மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு! உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!

      Delete
  17. குயில்கள் மூன்றும் அருமை. அதாவது குயிலிங் கார்டுகள் மூன்றும் அருமையோ அருமை என்றேன்.

    அவைகளை நீங்களே நீங்களா செய்தீங்கோ?

    செய்திருப்பீங்கோ தான். இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். ஆள் ஆளுக்கு இப்போ இது மாதிரி செய்து வெளியிட ஆரம்பிச்சுட்டீங்களே !

    இதற்கான கொப்பி வலது [COPY RIGHT] என் அன்புத்தங்கை நிர்மலாவுக்கும் அவங்க அன்பு மகளுக்கும் மட்டும் தான் உண்டு.

    கேட்டால் அவங்க தான் எங்கள் “குரு” என்று சொல்லி சமாளிக்கிறீங்க.

    என்னவோ போங்க, பாவம் என் அப்பாவித்தங்கை அஞ்சு.

    அஞ்சுவின் நிலைமையை நினைத்து நான் அஞ்சுகிறேன்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. //குயில்கள் மூன்றும் அருமை. அதாவது குயிலிங் கார்டுகள் மூன்றும் அருமையோ அருமை என்றேன்.//

      மன்னிக்கவேண்டும் நான் செய்தது முதல் 2 கார்ட்டுகள் மட்டுமே...மூன்றாவது கூகிளாரினது...:)

      //அவைகளை நீங்களே நீங்களா செய்தீங்கோ?//

      ஹையோ இந்தச்ச சந்தேகத்திற்கு இனி நான் என்ன செய்ய...:(
      ஹாஆ வேண்டுமானால் என் குருநாத(ர்)..(ரி, ரினி) அஞ்சுவிடம் கேட்டுத் தெளிவடையுங்கோ...:) அவங்க சொன்னா நம்புவீங்களோ...:)

      அஞ்சு..அஞ்சு...ஜெல்ப் மீ...:)))

      இந்தக்கைவேலை செய்ய கொப்பிவலது தேவையில்லை. முயற்சி தான் வேண்டும்...:)))

      யார்வேணுமெண்டாலும் செய்யலாமே...ஏன் நீங்களே முயற்சி செய்து பாருங்க..முயற்சி திருவினையாக்கும்...:)

      Delete
  18. ”வாழ்வென்றால்” கவிதை ஜோரா இருக்கு. யாரோ அனுபவித்து எழுதினால் போல அதில் ஒரு வீரமும் விவேகமும் இருக்கு.

    நிச்சயம் நீங்களே தான் எழுதி இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கையும் இருக்கு. முன் ஒரு பதிவில் உங்களை உசிப்பி விட்டவன் நான் அல்லவோ. அதனால் நீங்க தான் எழுதியிருப்பீங்க. பாராட்டுக்கள்.

    //சோகங்கள் மட்டும் வாழ்க்கை அல்ல
    சுகமும் எமக்கு நிரந்தரமல்ல...

    சோர்ந்துவிடாதே தொடர்ந்து நடைபோடு
    இதுவும் ஓர்நாள் கடந்து போகும்....//

    அச்சா, பஹூத் அச்சா.

    எல்லாமே ஒரு நாள் கடந்து தான் போகப்போகிறது. அது என்னவோ உண்மை தான்.

    //சுகமும் எமக்கு நிரந்தரமல்ல...//

    எனக்கும் இது பொருந்துகிறது ;(((((

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ம். கவிதை நானே எழுதினேன்..மிக்க நன்றி ஐயா வாழ்த்திற்கு..ஏதோ என் அறிவிர்கெட்டியவரை ஒரு சிறு முயற்சி...அவ்வளவே.

      முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கிணங்க முயன்றேன் முடிவு நன்றாக அமைந்தது. பாருங்கள் நீங்களும் ரசித்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமே...

      Delete
  19. நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் அந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்தது.

    //வாழ்ந்தே தீருவோம்...:)//

    வேறு வழி ??????????

    >>>>>>>>>>

    ReplyDelete
  20. படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...
    எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.

    நாயின் அரவணைப்பில் மியாவ் [பூஸாரோ?]

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. //நாயின் அரவணைப்பில் மியாவ் [பூஸாரோ?]//

      பழகினால்...பழக்கினால் எல்லாம் சாத்தியமே...:)

      Delete
  21. சிந்திக்கும் போது நிதானமாகவே சிந்திக்கிறேன்.

    ஆனால் உறுதியுடன் செயல்பட முடிவது இல்லையே!

    விட்டுக்கொடுத்தல் உண்டு தான் ..... ஆனால் அது எப்படி மன நிறைவோடு விட்டுக்கொடுக்க முடியும்?
    யாராலும் இது முடியாதே!

    என்னால் முடிவது இல்லை.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. //அது எப்படி மன நிறைவோடு விட்டுக்கொடுக்க முடியும்?
      யாராலும் இது முடியாதே! //

      சாதாரணமாக முடியாவிட்டாலும் சில நேரங்களில் சில சந்தற்பங்களில் உயிரையே வைத்திருக்கும் சிலவற்றை நாமே விட்டுக்கொடுக்கவேண்டிய நிலை வரும்போது சில நன்மை, தேவை கருதி மனநிறைவோடு விட்டுக்கொடுக்கும் மனோநிலை தானாகவே வரும்.

      எனக்கு அது சாத்தியமே...:) நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது....

      Delete
  22. அன்புள்ள இளமதி,

    தங்களின் இந்தப்பதிவு மிகவும் அருமையாகவே உள்ளது.

    குறுகிய காலத்தில் ஆறாவது பதிவு. ;)))))

    இருப்பினும் என்னை ஆறாவது விரலாக நினைத்து அழைப்பேதும் தராததால் என் வருகையில் சற்றே தாமதமாகிவிட்டது. மன்னிக்கணும்.

    நான் அகஸ்மாத்தாக இன்று இங்கு வந்து சேர்ந்துள்ளேன். மனது கேட்காமல் வரிக்கு வரி எனிமா கொடுத்து [பின்னூட்டமிட்டு] பாராட்டியுள்ளேன்.

    மகிழ்ச்சிதானே யங்மூன் ?

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. ஆறாவது பதிவு எனக்கே தெரியவில்லை இவ்வளவு விரைவாக பதிவிட அமைந்திருக்கிறது...:)

      உங்கள் எல்லோருக்கும் என் பதிவுகளால் சந்தோஷம் கிடைத்தது எனக்கும் மகிழ்ச்சியே..
      அழைக்காவிடினும் தேடிவந்து வாழ்த்தி கருத்துக்கள் பல கூறியுள்ளீர்கள்...மிக்க நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனம் நிறைந்த இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்!

      Delete
  23. athira31 December, 2012 19:19
    என்னது உலகம் அழிஞ்சு போச்சோ? ஆவ்வ்வ்வ்வ் அப்போ இங்கின இருப்பது எல்லோரும் ஆவியோ? ஹையோ ஆண்டவா.... நான் மட்டும்தேன் அழியாமல் காலோடு:) இருக்கிறேனோ:)))//

    சிரித்தேன். ரஸித்தேன். மிக்க நன்றி அதிரா ! ;)

    அன்புள்ள
    கோபு அண்ணன்

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.