Pages

Jan 13, 2013

தைத் திருநாள்

வாழ்த்துக்கள்!

அன்பு நண்பர்களே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
 என் மனமார்ந்த தித்திக்கும் 
தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!! 
_()_

+++++++++++


பொங்க வேண்டும்...
-----------
                         பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
                         அகல வேண்டும் எங்கள் துன்பம்
                         பெருக வேண்டும் மனதில் மகிழ்வு
                         சிறக்க வேண்டும் யாவர்க்கும் நல்வாழ்வு! 

தை மகளும் வந்தாச்சு
~~~~~~~~~
                          தை மகளும் வந்தாச்சு
                          தமிழர் உள்ளம் மகிழ்வாச்சு
                          தன்னலமில்லா உழவர் உம்மால்
                         தரணியில் பஞ்சம் போகலாச்சு.

                         ஏர் பிடித்த உங்களினால்
                         பார் இன்று வாழுதையா
                         பேர் புகழும் உங்களுக்கே
                         பெருமிதம் கொள்ள வேண்டுமையா.

                         தைத்திருநாளில் எல்லோர்க்கும்
                         நல்வாழ்வுடன் புகழ் பெருமை
                         நலம் பல கிடைத்திட இறைவா 
                         உன்னருள் வேண்டி வாழ்த்துகிறேன் நான்...
அன்புடன்
இளமதி
                         
                                                                            


************

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 


குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலைப்பில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

49 comments:

  1. வாழ்த்து அட்டை அழகா இருக்கு .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பு அஞ்சு..மிக்க நன்றி...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

      என் அன்புக் குருவின் வாயால் முதல் வாழ்த்து... மிக்க மகிழ்ச்சி...:)
      பாராட்டுக்கும் மிக்க நன்றி...:)

      Delete
    2. நோஓஓஓஓஓ மீத 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) இதை நான் எப்படி மிஸ் பண்ணினேன்ன்.. அடுத்தடுத்து வாழ்த்து என்றதும் பழசாக்கும் என நினைச்சுட்டேன் போல.. அஞ்சுவும் தகவல் சொல்லாமல் தான் முதலாவதா வந்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. அதிராஆஆ...நான் அப்பப்ப சாடை மாடையா கேட்டனே...நீங்க இந்தளவுக்கு ட்டியூப் ல..வேணாம் நான் ஒண்ணுமே சொல்லை ஜாமீஈஈஈ...;)))

      Delete
  2. வணக்கம் சகோதரி...
    இதுதான் இங்கே என்னுடைய முதல் வரவு...
    தைய தைய என
    ஆடிவரும்
    தைமகளுக்கு
    வரவேற்புக் கவிதை
    மிக அழகு...
    உங்களின் கைவண்ணமும் மிகவும் அழகாக இருக்கிறது...
    தொடரும் என் வரவு...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் மகேந்திரன். வாருங்கள்...:)
      மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இங்கு உங்கள் வருகை...:)

      நீங்கள் எழுதும் கவிதைகளுக்கு முன் நான் எழுதுவது மிகமிக சாதாரணமே. இருந்தும் உங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
  3. அழகான வாழ்த்து இளமதி! சூரியன் மிகவும் அழகாக இருக்கிறார்..கவிதையும் நன்று! :)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி...:)

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

      Delete
    2. /// சூரியன் மிகவும் அழகாக இருக்கிறார்./// விடுங்கோ விடுஞ்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:) பூஸ் அழகு எனச் சொல்லேல்லையாக்கும்:)

      Delete
  4. இளமதி உங்களுக்கும் என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.
    கார்ட் மிக அழகாக செய்திருக்கிறீங்க. பொங்கல் நாளில் என்னென்ன இருக்குமோ அதை அழகாக செய்திருக்கிறீங்க.
    கவிதை மிகவும் நன்றாக இருக்கு இளமதி. கருத்தும் நன்றாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மு...

      நேரக்குறைபாட்டுக்கு மத்தியில் இந்தக் கார்ட்டை செய்தேன். இருட்டிவிட்டபின் எடுத்த படமானதாலும் நிறங்கள் மாற்றங் காண்பிக்கின்றது.
      இருந்தாலும் உங்கள் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்கநன்றி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

      Delete
  5. /// பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
    அகல வேண்டும் எங்கள் துன்பம்
    பெருக வேண்டும் மனதில் மகிழ்வு//// உங்கள் இனிய வரிகளாலேயே உங்களையும் பொங்கல், புத்தாண்டில் வாழ்த்துகிறேன்... அழகிய கலைவண்ணத்துக்காகவும் என் பாராட்டுக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூங்கோதை...முதல்முறையாக வந்திருக்கின்றீர்கள்...
      மிக்க மகிழ்ச்சி..

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

      வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோதை...:)

      Delete
  6. //குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலைப்பில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..://

    தினமும் கருத்துப்பதிவு செய்ய வரும் ஏராளமானவர்கள் இதுபோல உங்கள் தலையில் கிள்ளிக்கொண்டே இருந்தால், உங்கள் தலை என்னாவது? புண்ணாகி விடாதா?

    [தலையில்=தலைப்பில்; கிள்ளிக்கொண்டே=கிளிக் பண்ணிக்கொண்டே]

    ReplyDelete
  7. //வாழ்த்துக்கள்!

    அன்பு நண்பர்களே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தித்திக்கும்
    தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!! //

    கற்பனையில் ருசித்துப் பார்த்தேன்; நல்லா தித்திப்பாகவே இருந்தது, உங்களுடையது.

    தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றியோ நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  8. நம் அம்முலு சொல்வதுபோல பொங்கலுக்குத் தேவையான சம்பந்தப்பட்ட அனைத்தையும் இணைத்து குயில் கார்டு செய்திருக்கீங்க்கோ.

    அது அய்கோ அய்காக உள்ளதூஊஊஊ.

    ஆனால் என் மனம் *அங்கலாய்த்து*ப்போனது.

    எப்போ வந்து எப்போ சொல்லிக் கொடுப்பீங்களோ; இதுபோலெல்லாம் எல்லாவற்றையும் சூப்பராகச் செய்வதற்கு.

    >>>>>

    ஊசிக்குறிப்பு:

    *அங்கலாய்த்து* இது நீங்கள் கதைத்து, நான் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட வார்த்தையாக்கும். ;)))))

    ReplyDelete
    Replies
    1. *அங்கலாய்த்து* இது நீங்கள் கதைத்து, நான் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட வார்த்தையாக்கும். ;)))))/// டமில் வகுப்பும் நடக்குதோ?:) பீஸை என் எக்கவுண்டில் போட்டிடோணும் சொல்லிட்டேன்ன்ன்:)

      Delete

  9. பொங்க வேண்டும்...
    --------------------
    பொங்க வேண்டும் வாழ்வில் இன்பம்
    அகல வேண்டும் எங்கள் துன்பம்
    பெருக வேண்டும் மனதில் மகிழ்வு
    சிறக்க வேண்டும் யாவர்க்கும் நல்வாழ்வு!//

    பொங்கிவரும் பால் போல அழகாக ஆடையுடனும் நுரையுடனும் எழுதியுள்ளீர்கள் ... கவிதாயினி.

    >>>>>

    ReplyDelete
  10. ”தை மகளும் வந்தாச்சு”

    [ஆனாலும் எனக்கு மெயில் த்கவல் ஏதும் வரவில்லை. ;( ]

    //ஏர் பிடித்த உங்களினால்
    பார் இன்று வாழுதையா
    பேர் புகழும் உங்களுக்கே
    பெருமிதம் கொள்ள வேண்டுமையா.//

    இந்த மிகச்சிறப்பான வரிகளில் தான் மூன்றாம் பிறைச் சந்திரன் போன்ற ’இளைய நிலா’ இளமதி, முழுமதியாக சித்திரா பெளர்ணமி நிலாவாக எனக்குக் காட்சி தருகிறாங்கோ. ;)

    >>>>>

    ReplyDelete
  11. ஆஹா, அடுத்து அந்தக் காணொளி மிக அருமை.

    வாத்யார் பாட்டு என்றாலே ஒரு தனி ஜோர் தான்.

    ”விவசாயி ..... விவசாயி ..... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .... விவசாயி.
    என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ...
    ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்? ...”

    பொங்கலுக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான பாட்டுத் தேர்வுக்குப் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. //படித்ததில் பிடித்தது..பகிர்ந்துகொள்ள விரும்பியது:

    நல்ல நட்பைத்தேடிக்கொள்ள பல வருடம் போதாது.

    ****நல்ல நட்பை இழக்க ஒரு நிமிடம் போதும்****//

    ஆம் உண்மை தான். இதை எல்லோருமே உணர வேண்டும்.

    ஆமாம் ... இளமதி ... எங்கே நம் Sweet Sixteen அதிராவைக்காணோம்?

    நல்ல நட்பை இழந்திருப்பாங்களோன்னு கவலையாக்கீதூஊஊஊ.

    ஆனாக்க நல்ல பொண்ணு. அப்படியெல்லாம் இருக்காதூஊஊஊ. ஜல் அக்கா வீட்டுக்குத் தான் ரிஸல்ட் தெரிஞ்சுக்கப் போயிருப்பாங்கோ.

    நாம் எல்லோரும் கைத்தட்ட ரெடியாக இருக்கோணும், சொல்லிட்டேன்.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா...
      உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

      அன்பான உங்கள் வரவிற்கும், நல்ல ரசனைக்கும் , வாழ்த்து மற்றும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்ட உங்கள் கருத்துப்பகிர்வுகள் அத்தனைக்கும் மிக்க மிக்க நன்றி...

      தனித்தனியாக பதிலளிக்க நேரம் போதவில்லை..குறை எண்ண வேண்டாம்..:)

      Delete
    2. ஆவ்வ்வ்வ்வ் வந்துட்டேன்ன்ன்ன்ன்.... பாருங்கோ இளமதிகூட தேடவில்லை என்னை :( கோபு அண்ணன் தேடியிருக்கிறார்ர் :).. ஆனாலும் கைதட்டி எனக்குக் கேட்கவில்லை சத்தம்.. இன்னும் பலமாத் தட்டுங்கோ :))இன்னும்...இன்னும்... :)

      Delete
    3. //பாருங்கோ இளமதிகூட தேடவில்லை என்னை//
      கர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்...:)))

      Delete

  13. வணக்கம்!

    ஏா்பிடிக்கும் கைகளையே எண்ணிப் பார்த்தே
    எழுதிவைத்த கவிபடித்தே இன்பம் கொண்டேன்!
    கூா்பிடிக்கும் நுண்மையென ஆக்கம் செய்தால்
    குளிர்பிடிக்கும் நெஞ்சுக்குள் சூட்டை ஏற்றும்!
    சீா்பிடிக்கும் சிந்தனைகள்! கொள்கை வன்மை!
    சீழ்பிடிக்கும் உலகுக்கு மருந்தை ஏவும்!
    தோ்பிடிக்கும் திருநாளின் மகிழ்வைப் போன்றே
    தேன்வடிக்கும் இளமதியார் காலம் வெல்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞர் பாரதிதாசன் அவர்களே...

      உங்கள் வருகையும் அழகிய வாழ்த்துக் கவிதையும் எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது. மிக்க நன்றி ஐயா.

      இப்பொழுதுதான் கவிதை என்னும் அரிச்சுவடியில் எழுத்துக்கூட்டுகின்றேன். உங்களைப் போன்றோரின் ஊக்கம் என்னை மேலும் உயர்வடையச் செய்யும்.
      வருகைக்கும் அன்பு கனிந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

      Delete
  14. இளமதி தந்த இனிப்புக் கவிதை
    வளமிகு வாழ்வின் வடிவு!


    வாழ்த்துக்கள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ..அருணா செல்வம்..முதன்முறையாக இங்கு வந்திருக்கிறீங்கள் மிக்க மகிழ்ச்சி.

      உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

      உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

      Delete
  15. இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இராஜராஜேஸ்வரி...
      மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு.

      உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

      Delete
  16. அன்புள்ள இளமதி ஆஹா உள்ளே நுழைய முடிந்தது. இதுவேபோதும் எனக்கு. எல்லாமே அருமை. எல்லாவற்றிலும் வல்லவி போலத் தோன்றுகிறது. இனிமே வருவேன். ஆசிகள் அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்மா...முதல்முறையாக இங்கு வந்திருக்கிறீங்கள். மிக்க சந்தோஷமாக இருக்கிறது. பொங்கல் பதிவுடன் உங்கள் ஆசியும் கிடைக்கப்பெற்றது எனக்கு சொல்லிலடங்கா மகிழ்வைத் தருகிறது.

      நீங்கள் கூறுவது போல அப்படி எல்லாவற்றிலும் வல்லவி என்றாகவில்லை இன்னும். ஏதோ எனக்குத்தெரிந்தவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

      உங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி அம்மா!

      Delete

  17. வணக்கம்!

    என்வலைக்கு வந்தே எழுதிய பின்னுாட்டம்
    இன்சுவைக்கு ஈடாய் இனிப்பென்பேன்! - மின்னும்
    இளமதி வந்தே எழுத்தொளி ஊட்ட
    உளம்மகிந் தாடும் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்!
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஐயா!

      உவகையாக்கும் தரம் தந்ததோ என் எழுத்து
      என் பங்கில் பயின்றேற இன்னும் உளதே
      உள்ளன்போடு தரும் உங்கள் உற்சாகம்
      எந்தனுக்கு தருமே அளவற்ற திடமே...

      மிக்க நன்றி ஐயா உங்கள் வரவிற்கும் அன்பான ஊக்கத்திற்கும்...

      Delete
  18. வாழ்த்து அட்டை மிக அழகான ரசனையுடையதாய் இருந்தது. பொங்கலுக்கு பொங்கல் பொங்குதோ இல்லையோ.. வாழ்வில் இன்பம் பொங்க வேண்டும். தங்கள் தளத்தில் இணைவதன் மூலமாக நல்ல நட்பை நானும் தேடிக்கொண்டேன்.
    வாழ்த்துக்களுடன்
    விச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ விச்சு...வணக்கம். முதன்முறையாக இங்கு வந்திருக்கின்றீங்கள். எனக்கும் உங்கள் நட்புக்கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது...:)

      வாழ்க்கையில் துன்பம் அகன்று இன்பம் பெருக வேண்டாதவர் யாரும் இருப்பினமோ...:)

      உங்கள் அனபான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி விச்சு! உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

      Delete
  19. எங்கட எம்.ஜி.ஆர் பாட்டும் ,கவிதையும் அழகு !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கவிதாயினி ஹேமா...:)
      அதென்ன எங்கட எம் ஜி ஆர்...:)))
      ஓமென்ன பொன் மனச் செம்மலை பிடிக்காதவையும் இருப்பினமோ...:)

      கவிதையும் அழகோ...நன்றி நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஹேமா!

      Delete
    2. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:) எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது.. ஆனா அவர் நடித்த பாடல்கள் அத்தனையும் புய்க்கும்.. கண்ணை மூடிக்கொண்டுதான் அதிகம் ரசிப்பேன்ன்.. ஏனெனில் பார்க்கப் பெரிதாகப் பிடிப்பதில்லை:)) அதுக்காக அவரைக் குறை கூற முடியுங்களா? எனக்குப் பிடிக்காது அவ்ளோதான்ன்:).

      Delete
  20. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா...

      என்னதிது என்னால இன்னும் நம்பவே முடியேலை...
      அங்கை இப்ப ஓடிப்போய்ப் பார்த்திட்டு பின்னூட்டம் குடுத்திட்டு வாறன்......

      பெரீய பூக்கூடையை தலையில தூக்கி வைச்சிட்டீங்கள்...ஐயோ பாரமாகிடக்கு..பூக்கூடை எண்டதால பாரமாயிருந்தாலும் சந்தோஷமாயும் இருக்கு...:)

      பெரிய பெரிய பதிவாளர்களுக்கு இடையில என்னையும் ஒரு ஆள் எண்டு அறிமுகப்படுத்திவிட்டிருக்கிறீங்கள்.
      உங்கள் எதிர்பார்ப்பு வீணாகிவிடாமல் இன்னும் இன்னும் சிறந்த நல்ல பதிவுகளை இங்கு தர வேண்டுமென என் மனதில் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி மனோ அக்கா!

      Delete
  21. ஆவ்வ்வ்வ் கார்ட் அழகோ அயகு.. இதை எங்கயோ பார்த்து கருத்தும் சொல்லிவிட்டமையால்தான் நான் குழம்பிப்போய் இது பழைய தலைப்பென விட்டுவிட்டேன் போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 மீ:)

    ReplyDelete
    Replies
    1. அதிரா...வாங்கோ...

      நிலவு வெளிச்சம் இப்பதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு போலை...:) முகில்கூட்டமாய் மறைச்சுப்போட்டுது எண்டு நினைக்கிறன்...:)

      எங்கை பார்த்தனீங்க...கனவிலையோ..இருக்கும் இருக்கும் எப்பவும் என் நினைப்பா இருந்தா அப்பிடித்தானே...:)))..

      ம்.கார்ட் எனக்கு சுமார்தான்..உங்களுக்கு இது அழகெண்டா சரி. நன்றி அதிரா...நேரமில்லாட்டியும் எட்டிப்பார்த்திட்டீங்க.அடுத்த பதிவு போடுறதுக்குள்ள வந்திட்டீங்கள்...;)

      Delete
  22. என்னமா கவிதை வருது உங்களுக்கு.. சும்மா எவெரெஸ்ட் சிகரத்திலிருந்து நீரூற்றுபோலக் கொட்டுது.. அடுத்து அதிராவுக்கு ஒரு கவிதை எழுதி இங்கின அங்கின எல்லாம் போஸ்ட் பண்ணோனும் சொல்லிட்டேன்ன்ன் :)).. உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா மிரட்டினால் பயந்திடுவா:) அதனலயே அடிக்கடி மிரட்டுவதே எனக்குத் தொழிலாப்போச்சுது உவவை:)..

    ReplyDelete
    Replies
    1. கவிதை அதுதான் இப்பெல்லாம் எனக்கு தலைக்கை ஓடிக்கொண்டிருக்கூஊஊ... நீங்களும் க்விலிங்கில எக்ஸ்பேர்ட் ஆகிறதால தொழிலை மாத்துவம் எண்டு யோசிக்கிறன்...:)))

      ஏன் அதிரா அங்கை உங்களுக்கு பொங்கலுக்கு கவிதையில பொயிங்கின்னாந்தானே பாக்கேலையோ..கர்ர்ர்...:) அது கவிதையா தெரியேலைப்போல..:( நானே தடியை குடுத்து அடி வாங்குறதே பிழைப்பா போச்சு...:)))

      Delete
  23. பிளக் அண்ட் வெள்ளை:) பாட்டெனினும் சூப்பர் பாட்டூஊஊஊஊஊஉ.. எனக்குப் புரியுது.. ஆனா என் நாட்டிலிருக்கும் கோல்ட்டுக் கலர்:) ஆட்களுக்குப் புரிய மாட்டேங்குதே:)

    ReplyDelete
    Replies
    1. ஓல்ட் இஸ் கோல்ட் எண்டு அனுபவிக்காமலோ, தெரியாமலோ சொல்லுறவை. அதுக்காக உடனே என்னையும் உங்களையும் ஓல்ட் எண்டீடப்புடாது சொல்லிப்போட்டன்...:) என்ன சரிதானே அதிரா...
      எனக்கு விளங்குது உங்களுக்கு விளங்குது ஆனா ....வேனாம் இதுக்குமேல விளக்கம்...:)

      அன்பு அதிரா வரவிற்கும் ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!!!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.