Pages

Jun 4, 2013

மௌனம்...


க்விலிங் கைவேலையில் ஆரம்ப காலத்தில் 
 (15 நிமிடங்களில்) செய்த ஒரு 
அவசர வாழ்த்து மடல்!...
*****

Oriental Garden

மௌனம் வென்றதே... 
~~~~~~~~~

சொல்ல நினைத்ததெல்லாம்
மெல்ல பக்கம் வந்தும்
சொல்ல முடியவில்லையே
மனது சும்மா இருந்ததுள்ளேயே..

முல்லைப்பூவின் வாசம் காற்று
வந்து சென்ற போதும்
தள்ளித்தான் போய்விடுமோ
தேங்கி இருக்குமே பூவுக்குள்ளேயே..

நெருங்கி வந்த போதும்
உருகி எந்தன்  உள்ளம்
கரைந்ததே கண்களுடனே கலந்து
வார்தையும் வரவில்லையே..

இதழ்கள் திறந்தே சொல்ல
இதயம் இனித்தே துள்ள
மனதும் துடித்தது உடனே ஆனால்
மௌனம் விரைந்து வென்றதே...
ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ


மௌனமொழி...
~~~~~

அதட்டினால் அரண்டிடும்
அணைத்துப்பார்
அடிமையாகிவிடும்
பேசும் உன்னோடு
புரியும் அப்போது!...
~-~-~


********************

பதிவோடு ஒரு அறிமுகம்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

வலைப்பதிவாளர் தோழி கிரேஸ் அவர்களின் தேன் மதுரத் தமிழ் எனும் வலைப்பூவினை  இங்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

தேன் மதுரத் தமிழ்!       http://thaenmaduratamil.blogspot.de/

கிரேஸ் அவர்களையும் அவரின் வலைப்பூவினையும் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 
அவரே சில மாதங்களுக்குமுன் வலைச்சர ஆசிரியராக இருந்தவருமாவார்.  
இருப்பினும் தெரியாதவர் யாரேனும் இருந்தாலும் அவர் வலைப்பூவினை தெரிந்துகொள்வதற்காகவும் அவரை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் இங்கு அவரின் வலைப்பூவினை அறிமுகம் செய்வதில் மகிழ்வுறுகிறேன்.

தோழி கிரேஸ் தனது வலைப்பூவில்  அழகான கவிதைகள் - கவிதை என்றால் கவிதையில் காட்சியைக் காட்டிவிடும் அதிதிறமைசாலி -, கதைகள், சங்க இலக்கியம், கட்டுரை இப்படி இன்னும் நிறைய அறிவுக்கு விருந்து படைக்கும் விடயங்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

ஆர்வமுள்ளவர்கள் அவரின் வலைப்பூவிற்கும் சென்று தோழி கிரேஸ் அவர்களையும் ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி உறவுகளே!...
~~~~~~~~~

96 comments:

  1. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வைகோ ஐயா!
      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்!...

      Delete
    2. Please visit

      http://gopu1949.blogspot.in/2013/06/11.html

      Delete
  2. Qulling அருமை தோழி. மெளனம் பற்றிய கவிதைகள் அருமை.வலைப்பதிவு அறிமுகம் சிறப்பு.வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி தமிழ்முகில்...
      உங்கள் ரசனைக்கும் அன்பான வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் பல...

      Delete

  3. வணக்கம்!

    உன்றன் மௌன கவிபடித்தேன்!
    உயிரின் துடிப்பை அதில்கண்டேன்!
    என்றன் நெஞ்சை உன்சொற்கள்
    இறுகப் பிடித்துக் கொண்டனவே!
    நன்றுன் வளா்ச்சி! தினம்பாடு!
    நண்ணும் துயரம் பறந்தோடும்!
    மின்னும் மதியே! செந்தமிழை
    விளைக்கும் நதியே! வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞர் ஐயா!...

      உங்கள் வாழ்த்தின் ஊக்கத்தால்
      எங்கள் தமிழை வளர்த்திடுவேன்
      தங்கள் தயவால் நானுமிங்கே
      பொங்கும் உவகையில் புனைகின்றேன்

      எங்கள் இனமும் மொழியதுவும்
      மங்காப் புகழ்கண்டு ஓங்கிடவே
      கங்குல் பகல்பாராமல் காணும்
      உங்கள் பணியும் சிறக்கட்டுமே!

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!...

      Delete
  4. வாழ்த்து மடல் அழகாக உள்ளது...

    அழகுக் கவிதை... வாழ்த்துகள்...

    மௌனம் தானே எப்போது வெல்லும், அன்பு வளர்ந்து நிறையும் பொது மௌனம் மட்டுமே முன் நிற்கும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே! மௌனத்தைப்பற்றி மிக அழகாகவே சொன்னீர்கள். அன்புநிலையில் வெல்வது மௌனமே...
      உங்களின் அன்பான வரவிற்கும் நல்ல ரசனை, கருத்து மற்றும் வாழ்த்துகளுக்கும் அன்பு நன்றி!

      Delete
  5. ஆஹா குயில் வேர்க் சூப்பர்ர். அந்த சிவப்பு குழல் மலர்கள் சூப்பரா இருக்கு. ஆனா அதுக்கு மேலா ஆரைத் திட்டி வச்சிருக்கிறீங்க என்றுதான் தெரியவில்லை:). ஒருவேளை முதலாவதாப் பின்னூட்டம் போட்டவரையோ?:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) மீ தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)).. ஆறு வயசிலிருந்து:).

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா...
      வாழ்த்துமடலில் நான் திட்டவில்லை... அது உளமார்ந்த வாழ்த்துக்கள் என்பதை இங்கு ஜேர்மன் மொழியில் இப்படித்தான் எழுதுவோம்.

      'ஹேர்ற்ஸ்லிஹென் க்ளூக்வுன்ஷ்' எண்டு சொல்லுவினம்.

      அதைதான் நான் கார்ட்டில் எழுதிவிட்டுள்ளேன். இது ஒரு ஜேர்மனிய நட்புக்கு கொடுத்த வாழ்த்து மடல்... :).

      Delete
  6. கைத்திற‌னும் க‌விதைத்திற‌னும் வெகு அழ‌கு இள‌ம‌தி! இனிய‌ பாராட்டுக்க‌ள்! அன்பு நிறைந்த‌‌ வாழ்த்துக்க‌ள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மனோ அக்கா...:).
      உங்கள் அன்பான வரவும், கருத்தும், வாழ்த்தும் மனதிற்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. மிக்க் நன்றி அக்கா!.

      Delete
  7. புதுசு புதுசா கவிதை சொல்லிக் கலக்குறீங்க வாழ்த்துக்கள். அதெப்படி மெளனமொழி பேசுமாம்?:))

    ReplyDelete
    Replies
    1. ம்.ம் தெரியாதோ மௌனம் எப்படிப் பேசுமெண்டு?
      வாங்கோ சொல்லித்தாறேன்.... :).

      Delete
  8. mounam!
    arumai......


    kvik velaiyum!

    arimukathirkum mikka nantri!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ சீனி... வணக்கம்.
      உங்கள் அன்பான வரவுக்கும் வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றிகள்!...

      Delete
  9. அழகான க்விலிங் வாழ்த்து..அருமையான மௌன மொழி! :) மே மாதம் படத்தில் வரும் "என் மேல் விழுந்த மழைத்துளியே.." பாடல் நினைவுக்கு வருகிறது! :)

    நல்லதொரு பகிர்வு இளமதி!

    //ஆனா அதுக்கு மேலா ஆரைத் திட்டி வச்சிருக்கிறீங்க என்றுதான் தெரியவில்லை:). ஒருவேளை முதலாவதாப் பின்னூட்டம் போட்டவரையோ?:).. // ரிப்பீட்டு! ;)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்கோ மகி!...
      எதுக்கு இந்தப்பாடல் நினைவுக்கு வருகிறதென சொல்றீங்கன்னு புரியலையே... கவிதைக்கும் அதற்கும் தொடர்போ... தெரியலை. கேட்டுப்பார்க்கிறேன்... :).
      அது திட்டலில்லைன்னு உங்களுக்கு முன் அதிராவுக்கு பதில் சொல்லீட்டேனே. ஆகவே பதிலுக்கு அங்கே ரிப்பீட்டு...:))).

      உங்க அன்பான வரவுக்கும் அருமையான கருத்து, வாழ்த்து யாவுக்கும் இனிய நன்றிகள் மகி!..

      Delete
  10. மெளனம் !ம்ம் எழுத்துப்பிழை என் கூடப்பிறந்த உறவு என்பதால் கவிதையும் மெளன் மொழி ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வணக்கம்...
      எழுத்துப்பிழை அதென்ன உங்களுடன் மட்டும் கூடப்பிறந்ததோ... என்னுடனும்தான்... :))). எல்லாருக்கும் அது ஒரு சகோதரம்தான் நேசன்...:)

      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

      Delete
  11. அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா.. அதீஸ்!... நன்றி நன்றி... உங்களுக்கும் நன்றிக்கும் அத்தனைக்கும் மிக்க நன்றி அதீஸ்... :).

      Delete
  12. அழகான கைவேலை.
    அருமையான பாடல்..
    அன்பிற்கோர் அறிமுகம்...

    அனைத்தும் சூப்பர்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி அருணா!...

      உங்கள் அன்பான அழகான அருமையான வரவு கருத்து வாழ்த்து அத்தனைக்கும் மனமார்ந்த என் நன்றிகள் பல...

      Delete
  13. வணக்கம் இளமதி,
    இப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு! 15 நிமிடங்களிலா அதைச் செய்தீர்கள்! நல்ல நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது!

    மௌனமொழி கவிதை சூப்பர்!

    நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் சக பதிவருக்கு வாழ்த்துக்கள்! முடியும் போது அவரின் பக்கம் செல்கிறேன் - ஆனால் ஒன்று சும்மா எல்லாம் போக மாட்டேன்! வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பீடா இதெல்லாம் வைத்து அழைத்தால்தான் வருவேனாக்கும்ம் :) :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ.... வணக்கம் ஐயா!... பெருமதிபிற்குரிய மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ.... ஹையோ பெயர் எழுதுறதுக்கே புறம்பா படிக்கோணும்.
      மாத்தியோசிக்கிறீங்க எண்டுறதுக்காக இப்பிடி வாய்க்குள்ள நுளையாம உங்கட பெயரையும் மாற்றி ஜோயிஜீட்டீங்களே...:))).

      வந்து அருமையா ரசிச்சு எழுதியிருக்கிறீங்கள் மணி.

      Delete
  14. புதுசு புதுசா கவிதை சொல்லிக் கலக்குறீங்க வாழ்த்துக்கள். அதெப்படி மெளனமொழி பேசுமாம்?:)) ///

    அதெல்லாம் நாங்கள் பேசப் பண்ணுவோமாக்கும்! இதற்கு எங்களிடம் நீங்கள் டியூஷன் வரவேண்டும்!

    முதலாவது மணித்தியாலத்துக்கு 60 பவுண்ட்ஸ்!
    2 வது மணித்தியாலத்துக்கு 50 பவுண்ட்ஸ்!
    3 வது மணித்தியாலத்துக்கு 40 பவுண்ட்ஸ்!

    4 வது மணித்தியாலத்துக்கு........................................ அட, அதுவரை நீங்கள் பொறுமையாக இருந்து படித்தால், நாங்களே உங்கள் பொறுமையைப் பாராட்டி 100 பவுண்ட்ஸ் தருவோம்ம் :) :)

    ReplyDelete
    Replies
    1. மௌனமொழி உங்களுக்கு புரியுது...
      பூஸாருக்கு புரியேலையாம்.

      டியூஷன் குடுப்பீங்கள் சரி. ஆனா அதுக்காகா இப்பிடி மணித்தியாலத்திற்கு இவ்வளவெண்டு பவுண்ஸ் கணக்கில சொல்லியிருக்கிறீங்கள். டியூஷனும் குடுத்து கூடவே பவுண்ஸ்லயும் குடுக்கிற வாத்தியார் நீங்கள் ஒருத்தர்தான் உலகத்திலயே ஒருத்தர். உங்களின் மொழிப்பற்று தெரியாதவை படிச்சு முன்னேறவேணுமெண்ட உங்களின் சமூக பொதுநல சிந்தனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை மணி... :).
      அருமை.
      கனகாலத்திற்குப் பிறகு இப்பிடிவந்து கலகலப்பா கதைச்சுபேசி வாழ்த்தினதுக்கு மிக்கமிக்க நன்றி மனீ மனீ...:))).

      Delete
  15. இதழ்கள் திறந்தும்
    இனிமைக் கிடைக்காத
    தனிமையில் தவிக்கும்
    தாராள மனமே ..மௌனமே
    நீ எப்போ களையப் போகிறாய்
    நிம்மதியாய் சிரிக்கப் போகிறாய் ....
    அழகிய வேலைப் பாட்டுடன் செய்த க்விலிங் வேலை மிக அற்புதம்.உங்களைபோல இதே வேலை செய்யும் நம்ம தோழி கிரேசுக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க நலமுடன் மன வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ கவியாழி கண்ணதாசன்!... வாங்கோ...

      மனதின் மொழியாம் மௌனமென்றே
      கனவில் பேசிடும் கதைமிகவே
      உணர்வில் யாவர்க்கும் இருப்பதுவே
      உரைத்தேன் இங்கு பொதுவாக...

      உங்கள் அன்பான வரவிற்கும் இனிய நற் கருத்துக்கள், வாழ்த்துக்கள் அனைத்திற்கும் இதயங்கனிந்த நன்றிகள் பல...

      Delete
  16. க்விலிங் வாழ்த்து அழகு.

    கவிதைகள் அருமை.
    /
    /இருந்ததுள்ளேயே..//

    டைப் செய்யும்போது கூகிள் தவறுவது போல என் கண்கள் இதை 'இருந்துள்ளயே', அதாவது 'இருந்துள்ளாயே' என்பது அப்படி வந்திருக்கிறதோ என்று யோசிக்க வைத்தது முதலில்! அப்புறம் 'இருந்த துள்ளேயே' என்று புரிந்தது! :))

    ஆக மௌனம்..
    1) சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!
    2) சொல்லப்படாத அன்பு தெரியப்படாமலே போகலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் ஶ்ரீராம்!...
      ம்.. நானும் கவிதையிலும் கத்துக்குட்டிதான். அதனாலும் இப்படி ஏதாகிலும் கோளாறு பண்ணிவிடுகிறேன்... :).
      பெரிய மனதுபண்ணி இங்கு வருபவர்கள் அதனை பொருட்படுத்துவதில்லை போலும்...
      நீங்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் - இருந்தது உள்ளேயே - என பிரிக்கவேண்டும். ஆனால் அவ்விடத்தில் வரி நீண்டுவிடுமோ என யோசித்து இப்படி எழுதிவிட்டேன்...

      கைவேலை, கவிதைகளை ரசித்தவிதம் ரசித்தேன். மிக்க நன்றி உங்கள் அன்பான வரவு, கருத்து, வாழ்த்து அத்தனைக்கும் சகோ!...

      Delete
    2. ஐயோ... கத்துக்குட்டியா? நீங்களா? மிக நன்றாக எழுதுகிறீர்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அவ்வளவுதான்.

      Delete
  17. மெளனமும் தவம்தான் என்கிற வரி மிக ரசிக்க வைத்தது. மற்ற கவிதைகளும் ரசனைக்கு விருந்துதான்! க்விலிங் அவசரத்தில் ஆரம்பகாலத்தில் செஞ்சதுன்னு நீங்க சொன்னாலும் அழகாவே வந்திருக்குது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ பாலகணேஷ்!...
      உண்மையிலும் இந்த க்விலிங் அவசரத்தில் செய்ததுதான். நம்புங்கள். உற்றுப்பார்த்தால் சொதப்பல் நிறையவே தெரியும்... :))).
      உங்கள் ரசனைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ!...

      Delete
  18. அழகான அருமையான க்விலிங்... பாராட்டுக்கள்...

    கவி வரிகள் அனைத்தும் அருமை... முக்கியமாக :

    /// மௌனம் இதுவும் தவம் தான்.../// சூப்பர்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் சார்!...
      இப்பவெல்லாம் உங்கள் வரவு முன்னணியில் காணவில்லையே... மின்வெட்டுத்தான் காரணமென நினைக்கிறேன்.
      தவம் என்றால் மௌனமாயிருப்பதுதான். நாள்முழுதும் அநாவசியமாக பேசாமல் மௌனமாய் இருப்பதும் தவம்தான். பல பிரச்சனை அதனால் அற்றுப்போய்விடும்... :).

      உங்கள் அன்பான வரவிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  19. க்விலிங் அவசரத்தில் ஆரம்பகாலத்தில் செய்தது என்றாலும் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! வாருங்கள்...

      உங்கள் ரசனை எனக்கு மிகுந்த மகிழ்வினைத் தருகிறது.
      வரவிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த இனிய நன்றிகள் பல....

      Delete
  20. க்வில்லிங் அவசர வாழ்த்து மடல் மிக அருமை, மௌனம் பற்றிய கவிதைகள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசியா... அவசரமென்றால் ஒருவருக்கு உடனடியாக கிடைத்த ஒரு நல்ல செய்திக்கு அவரை வாழ்த்தும்விதமாக இதனை அவர் நமது வீட்டிற்கு வருவதற்கு 15 நிமிட நேரமிருக்க செய்த க்விலிங்க் இது.

      Delete
  21. அவசர வாழ்த்து மடலே இத்தனை அருமையாக உள்ளதே ! கவிதைகலூ சூப்பர்,.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியா உங்கள் வரவிற்கும் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும்...

      Delete
  22. க்விலிங் கைவேலை மிகவும் அருமை... உண்மைதான் மௌனம் மிகப் பெரிய தவம் தான்.. பழகுதல் கடினம் பழகிவிட்டால் வெளிவர பிடிக்காத தவம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரியா!...

      நன்றாகவே உணர்ந்து சொன்னீர்கள். மௌனம் பழகுதல் கடினமே பழகிவிட்டாலோ அதலிருந்து வெளியே வரவே பிடிக்காது...

      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி பிரியா!...

      Delete
  23. // முல்லைப்பூவின் வாசம் காற்று
    வந்து சென்ற போதும்
    தள்ளித்தான் போய்விடுமோ // அற்புதமான வரிகள்!
    அட படித்துக்கொண்டே வந்தால் இனிய அதிர்ச்சி!!! என்னை அறிமுகம் செய்துள்ளீர்கள்!! வார்த்தையே இல்லை தோழி, தலைவணங்கி நன்றி கூறுகிறேன். மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்கோ கிரேஸ்...:).

      இம்முறை இங்கே யாரை அறிமுகம் செய்ய என யோசித்தபோது சட்டென உங்கள் ஞாபகம் வரவே இப்படிச் செய்தாயிற்று... கேட்கவில்லை, அறிவிக்கவில்லை ஆயினும் கோபிக்கமாட்டீர்களென நினைத்துச் செய்தேன். உங்களை தெரியாதவர்கள் யாரவது இருந்தால் தெரிந்துகொள்வதுடன் உங்கள் திறமை எல்லோருக்கும் தெரியட்டுமே என எண்னம் அவ்வளவுதான்.
      அட.... இதுக்கெல்லாம் எதற்குங்க பெரிய வார்த்தை சொல்கிறீர்கள்...
      இப்பொழுது எனக்கும் மனமகிழ்வாயிருக்கு.
      நீங்களும் ரசிக்கும்படி என் கிறுக்கல் அமைந்தது சந்தோஷமே... உங்கள் வரவு, வாழ்த்து அனைத்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!...

      Delete
    2. வணக்கம் தோழி..அன்பான வரவேற்பு :)
      கோவிக்க என்ன இருக்கிறது தோழி, மகிழ்ச்சிதான். :)
      கிறுக்கல் என்று நீங்கள் சொல்லும் உங்கள் கவிதைகள் அழகோ அழகோ..அவ்வாறு என்னால் எழுத முடியுமா தெரியவில்லை.

      Delete
    3. // உங்கள் கவிதைகள் அழகோ அழகோ..அவ்வாறு என்னால் எழுத முடியுமா தெரியவில்லை.//

      என்ன தன்னடக்கம்....:).

      என்னைப்போல் இப்படிக் கொத்திக் கொலைசெய்து எழுத உங்களால் முடியாதுதான் தோழி...:))).

      Delete
  24. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
    மாத்தியோசி மணி அவர்களையும் மற்ற அனைத்து நண்பர்களையும் தாம்பூலத்துடன் அன்புடன் வரவேற்கிறேன் :)

    ReplyDelete
  25. மௌனமொழி அழகு ...!

    தேன் மதுரத் தமிழ்! அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!...

      உங்கள் ரசனையும் மிக அழகு.!..
      வாழ்த்துக்கள் பாராட்டிற்கும் மனமார்ந்த இனிய நன்றிகள் பல.

      Delete
  26. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
    மாத்தியோசி மணி அவர்களையும் மற்ற அனைத்து நண்பர்களையும் தாம்பூலத்துடன் அன்புடன் வரவேற்கிறேன் :) ///

    நோ நோ என் பேர் மாத்தியோசி மணி கிடையாது! அது பழைய பேர். இப்போது மாடலாக “ மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ” என்று வைத்திருக்கிறேன் என்பதை உண்மையாகவும் :) , நேர்மையாகவும் :) அறியத்தருகிறேன் :)

    ReplyDelete
  27. க்விலிங் மிக அழகு.
    கவிதைகள அதைவிட அழகு.
    சகோதரி கிரேஸ் நானும் பார்ப்பதுண்டு . எனக்கும் பிடித்துள்ளது. கருத்துகளும் இட்டுள்ளேன். எனது ராசி நான் போகிறவர்கள் என்னிடம் திரும்ப வர நேரமற்றவர்கள் தான்.
    என்ன செய்ய முடியும் பொறுமையைத் தவிர..
    இனிய வாழ்த்து இளமதி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி கோவைக்கவி!...

      உங்கள் அன்பான வரவும் இனிய ரசனையும் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது சகோதரி.

      உங்கள் ஆதங்கம் புரிகிறது. மனம் வருந்த வேண்டாம் சகோதரி. நானும் உங்களிடம் வர ஒருசில சமயம் தாமதமாகிவிடுகிறது. மன்னியுங்கள். இனி ஒழுங்காக வருவேன். ஏனையவர்களும் வருவார்கள் சகோதரி...

      உங்கள் இனிய வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றிகள் பல.

      Delete
  28. க்வில்லிங் எல்லாம் அருமை. இந்த பேரே உன்னை ஞாபகப்படுத்தி விடுகிரது.தமிழோ அதைவிட அருமை. க்ரேஸும் உன்மாதிரி தமிழ் படித்தவர்கள் என்று நினைக்கிறேன். எல்லா தளங்களுக்கும் போகணும், எல்லோருடனும் அறிமுகமாகணும் என்று நினைக்கிறேனே தவிர தட்டெழுத்தும் நிதானம்தான்.மௌன மொழிக்கவிதை பேசாதவர்களையும்
    பேசவைத்துவிடும். என்ன அருமைக் கவிதை!!!!!!!!!!!!!அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் காமாட்சி அம்மா வாங்கோ...
      உங்கள் வரவு கண்டு மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு. உங்கள் ரசனை அற்புதம் அம்மா.

      கிரேஸ் மிகுந்த திறமைசாலி. அவர்களிடம் நான் படிக்க நிறைய இருக்கிறது. இப்பொழுது உங்கள் வாழ்த்தினை இங்கு பார்க்கும்போது நிச்சயம் தோழி சந்தோஷப்படுவார்.

      உங்கள் அன்பான வரவுக்கும் அருமையான ரசனைக்கும் வாழ்த்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் அம்மா!...

      Delete
    2. நன்றி காமாட்சி அம்மா..இளமதி என்னைத் திறமைசாலி என்றெல்லாம் சொல்வது அவர்களது இனிய குணமே..அவர்கள் அளவு எனக்கு கவிதை வரவில்லை என்றே நினைக்கிறேன். எனினும் ஊக்கம் நிறையப் பெற்றேன், அதற்காக நன்றி.

      Delete
  29. கை வேலைப்பாடு அழகு. இது போல் வேலை தெரிந்தவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமை வந்து விடும்.
    மோனம் வென்றதே அருமை. சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்.
    புதிய அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் சிவகுமாரன்!..

      முன்பும் இங்கு வந்தீர்களோ தெரியவில்லை. இல்லை இதுதான் முதல் வரவோ? எதுவாகிலும் அன்பாக வரவேற்கின்றேன்.

      கைவேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமையோ சகோ...:)
      ம்.. எனக்கு உங்கள் கவிதைகள், ஹைகூ இதைப்பார்த்து பொ...ஆமை...:). கைவேலை பிரமாதம் ஒன்றுமில்லை. கவிதைவேலை அதற்கு ஞானம் வேண்டும். அது கிராம் என்ன விலை என்று என்னிடம்...:( இருந்தும் கிறுக்குகின்றேன். ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவே!..

      உங்கள் அன்பான வரவும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி சகோதரரே!...

      Delete
  30. பதினைந்து நிமிடத்தில் இவ்வளவு அழகான க்விலிங்கா?expert தான் நீங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ டினேஷ் சுந்தர்!...

      இது பெரிய வேலை இல்லை என்பதாலும் ஆரம்பத்தில் செய்ததாலும் 15 நிமிடங்கள் தேவைப்பட்டது. அதற்காக நான் நீங்கள் சொல்வதுபோல expert என்றெல்லாம் இல்லை...:).

      மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!.

      Delete
  31. அவசர வாழ்த்து மடல் என்றாலும் நன்றாகவே உள்ளது...

    பதிவோடு பதிவர்களையும் அறிமுகம் செய்வது மிக அற்புதமான விஷயம்
    சிலகாலம் நானும் செய்துவந்தேன்... மீண்டும் தொடர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் சீனு!...

      இங்கு உங்கள் முதல்வரவு இது. நல்வரவு...!

      பதிவோடு அறிமுகம் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது சகோதரர் K.s.s.Rajh -நண்பர்கள் வலைப்பூ பதிவாளர் - அறிமுகப்படுத்திய இவ்விடயம் எனக்கும் பிடித்தமையால் நானும் அதனைத்தொடருகிறேன். இதனால் சக பதிவர்களையும் ஊக்குவிக்கலாமே...!
      ம்..நீங்களும் தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

      உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமகிழ்ச்சியும் நன்றியும் சகோ...!

      Delete
  32. சிறப்பான படைபிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் தோழி அம்பாள் அடியாள்!...

      மனம்நிறைந்த நன்றிகள் உங்களுக்கும்!

      Delete
  33. @ மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ: உங்கள் பெயர் மாற்றம் அறிந்து கொண்டேன்..காரணமும் அருமைதான்.. :)

    ReplyDelete
  34. கோவைக்கவி அவர்களே, உங்கள் பதிவுகளைப் படித்துள்ளேன்..முன்னர் கருத்தும் இட்டுள்ளேன் என்று நினைக்கிறேன்..சரியாக நினைவில்லை.ஆனால் இப்போது ஏனோ கருத்து பதிவு செய்யும்பொழுது தவறு என்றே சொல்கிறது..wordpress அவ்வளவு பரிச்சியம் இல்லை,,மன்னிக்கவும். wordpress அக்கௌன்ட் இல்லாமல் ப்லொக்ச்பொட் அக்கௌன்ட் வைத்து கருத்து இட முடியாதா? தெரிவிக்கவும்..நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி கோவைக்கவி இதனைப் பார்த்திருப்பாரென நினைக்கிறேன் தோழி!

      Delete
  35. நெருங்கி வந்த போதும்
    உருகி எந்தன் உள்ளம்
    கரைந்ததே கண்களுடனே கலந்து
    வார்தையும் வரவில்லையே..

    இதழ்கள் திறந்தே சொல்ல
    இதயம் இனித்தே துள்ள
    மனதும் துடித்தது உடனே ஆனால்
    மௌனம் விரைந்து வென்றதே...


    மௌனம் என்பது உண்மை
    முடிவு மிகவும் அருமை
    கிரேஸ் அவர்கள் வலைத்தளத்திற்கும் செல்கிறேன் பகிர்வு நன்றிகள் பல

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ஹிஷாலீ..!

      வாருங்கள். உங்கள் ரசனையும் எனக்கும் மனநிறைவே. மகிழ்சியுடன் இனிய நன்றிகளும் உங்களுக்கு...!

      Delete
  36. வாழ்த்து மடல் பதினைந்து நிமிடத்தில் இவ்வளவு அழகாக...Superb...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா விஜிபார்த்திபன்!... முதல்வரவிங்கே... நல்வரவு!

      மிக்க நன்றி அக்கா! உங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மனநிறைவாய் இருக்கின்றது...!

      Delete
  37. ஸ்ஸப்பா..... நானும் ஓர் கொமண்ட் போடுவம் எண்டால்... இவ்வளவயும் தாண்டி வாறதுக்குள்ள மூச்சுத் திணறுது .......
    கைவண்ணம் கவி வண்ணம் கண்டேன்
    மௌனத்தின் புது மொழி கேட்டே‌ன்...
    இரசித்தேன்.. சுவைத்தேன்... விருந்துக்கு நன்றி அம்மா.... :)

    ReplyDelete
    Replies
    1. வாம்மா கோதை!.. வணக்கம்!

      என்ன இப்பெல்லாம் ஒரு இடமும் உம்மைக் காணக் கிடைக்குதில்லையே...
      ரொம்பவே பிஸியாக்கும்...;).
      தூரம் தாண்டிப் பயணம் செய்தவர்கள்தானே நாமெல்லாம். இதுவெல்லாமா ஒரு தூரம்...:))).

      சரி.. சரி நீர் இங்கு வந்ததே எனக்கு பெரீய மகிழ்வுதானம்மா...

      கவியரசி அம்மா என என்னை கூப்பிடுவதற்காகிலும் ஏதாகிலும் எழுதவேண்டாமோ... அதுதான் நானும் கொஞ்சமாய் இப்படி கிறுக் ...:)
      மிக்க மகிழ்ச்சி மகளே. உம்வரவும் ரசனையும் தருகுதே எனக்குப் பேரின்பம்!

      Delete
  38. 15நிமிட க்விலிங்..ஆரம்பகாலத்தில் செய்ததே அவ்வளவு அழகாக செய்திருக்கிறீங்க இளமதி. கவிதைகள் எல்லாமே மிக‌ மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
    அறிமுகப்படுத்திய பதிவரான கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட... வணக்கம் அம்மு... ! ஆச்சரியம்...!

      மின்னலாய் வந்து மாயமாய் மறைந்துவிட்டீர்களே!...
      மிகுந்த அவசரமோ...
      வேலையுடன் வீட்டில் தோட்டம் இப்படி.. நேரம்போகிறது போலும்.

      உங்கள் வரவும் ரசனையும் வாழ்த்துக்களும் எனக்கு ரொம்ப உற்சாகத்தை தருகிறது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அம்மு..!

      ஏன் உங்கள் வலைப்பூத் தோட்டத்தில் ஒன்றும் பயிரிடவில்லை இன்னும்...;).

      Delete
  39. வேகமாக செய்த கிவிலிங் வேலைப்பாடே இப்படி என்றால் இன்னும் சற்று மெதுவாக செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் சகோ விமலன்!...

      நான் அநேகமாக செய்யும் க்விலிங் வேலையெல்லாம் ஓரளவு அது எனக்குத் திருப்திதரும்வரை மினக்கெடுவேன். இது செய்த அவசரம் போல் வேறொன்றும் இதுவரை செய்யவில்லை...

      மிக்க சந்தோஷம் உங்கள் வரவிற்கும் இனிய கருத்துக்கும் சகோ!.

      Delete
  40. இத்தனை ரசிகர்களும் சொன்ன பின்னர்
    என்னிடம் மொழி ஏது?
    அருமையான கவிதை.

    சொல்ல நினைத்தும் வாய் திறக்காது
    மெல்ல மனத்துள் கவிதையாகும்
    இன்னமும் வார்த்தைகள் ஊற்றெடுக்கும்
    கணகளிலும் பெருங்கடலாய் அலை மோதும்
    மெளனத்தின வார்த்தைகளுக்கு அளவும் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் வைத்தியர் ஐயா!...

      உங்களிடமும் நல்ல ரசனை இருக்கிறதே... நீங்களும் நல்ல ரசிகரும்தானே... :).

      உங்கள் கவிக்கருத்தும் அருமைதான். மிகவும் ரசித்தேன். அருமை!

      மிக்க நன்றி ஐயா உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல கவிதைக்கும்!...

      Delete
  41. நான் சொன்ன விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சொல்லியுள்ளீர்கள் மிக்க சந்தோசம் பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் சகோதரர் ராஜ்!..
      உங்கள் முதல் வருகையும் பாராட்டும் மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. மிக்க நன்றி!

      நீங்கள் அன்று வலைச்சரத்தில் பதிவோடு ஒரு அறிமுகமென ஒரு கருத்தினைப்பதிவு செய்தமையாலேயே எனக்கும் அது மிக நல்லதென செயற்படுத்தத் தோன்றியது. அன்றிலிருந்து இதனை என் பதிவுகளுடன் நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

      இப்படி ஒரு நல்ல கருத்தினைப் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ ராஜ்!

      Delete
  42. 15 நிமிடத்தில் செய்த க்விலிங்.... ச்சா..நச்சுன்னு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
    உங்க கவிதைகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தோழி! வணக்கம்!

      முதன்முறை உங்களின் வரவு இங்கு. மகிழ்ச்சி.

      ம். உங்கள் வாழ்த்தும் நச்சுன்னுதான் இருக்கு...:).

      மிக்க நன்றி தோழி!

      Delete


  43. மௌனம் வென்றது எனும் உங்கள் பாடலைப்படித்தேன்.
    மௌனமாக இருக்க இயலவில்லை. அவ்வளவு அழகான பொருட்செறிவு.

    மொஜார்ட் அவர்கள் இசையில் ஒரு சிம்பொனி இருக்கிறது. அதிலும்
    ஒருவன் ஒருத்தியை ப்பார்க்கிறான். தன் உள்ளத்தை வெளியில் சொல்ல இயலாது
    மௌனம் சாதிக்கிறானாம். கிட்டத்தட்ட அதேபின்னணியில் உங்கள் பாடல்
    அழகு. அதை சொல்லில் சொல்ல இயலாது.

    என் பேத்தி உதவியுடன் அதை இடாலியன் இசையில்
    பாட முயன்றுள்ளேன்.

    கவனிப்பீர்கள். . சற்று நேரத்தில் அதன் தொடர்பு லிங்கைத்தருகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ஐயா... வணக்கம் ஐயா வாருங்கள்!...

      நீண்டகாலமாக கூகில் + தொலைதூரத்திற்கு உங்களை நகர்த்திவிட்டதே என வாடினேன். வந்துவிட்டீர்கள்.

      மிக்க சந்தோஷமாக இருக்கிறதெனக்கு.

      இங்கு நீங்கள் குறிப்பிட்ட
      // மொஜார்ட் அவர்கள் இசையில் ஒரு சிம்பொனி இருக்கிறது.//

      இதனை நான் கேட்தில்லை ஐயா.

      உங்களின் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. என்ன ஒரு கலாரசிகன் நீங்கள்!...

      காத்திருந்து கவனித்தேன் களித்தேன்...

      Delete
  44. http://www.youtube.com/watch?v=mAZOYJqh-9Y

    இந்தத் தொடர்பினில் பாட்டை இத்தாலி இசையில் கேளுங்கள்.
    பின்னணியில் பெண் குரல் எனது பேத்தி சஞ்சிதா .

    சுப்பு தாத்தா

    ReplyDelete
    Replies
    1. மீனாக்ஷி அம்மா வணக்கம்!... வாருங்கள்!.

      ஐயா உங்களை பாடல் பதிவேற்றமுடன் அழைத்துவந்துள்ளாரே...
      மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

      ஐயா... என்னவென சொல்வேன்..
      இம்முறையும் உங்கள் அயராத இந்த முயற்சியை!....

      அத்தனை சிறப்பாக இருக்கிறது பாடல்.
      உங்களின் குரலோடிணைந்த உங்கள் பேத்தி சஞ்சிதாவின் ஹம்மிங் அதி உச்ச ஸ்தாயியில் அற்புதமாக மிளிர்கிறது.

      இத்தனை சிறப்பா நான் எழுதிய பாடலுக்கு....

      வியப்பிலிருந்து மீளவில்லை இன்னும் நான்.

      விரைவில் வழமைபோல் என் வலையில் உங்களுக்கென இடப்பட்ட இடத்தில் இதன் இணைப்பை ஏற்படுத்துகிறேன்.

      ஐயா... உங்களுக்கும் உங்கள் பேத்தி சஞ்சிதாவிற்கும் என் உளமார்ந்த இனிய நன்றிகள்!.

      இது போதுமென எனக்குத்தோன்றவில்லை. இருப்பினும் நன்றி மட்டுமே இங்கு பகிர்கின்றேன்.
      உங்கள் அனபிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் என் நன்றியும்
      சேர்ந்தே இருக்கும்.

      அம்மாவுக்கும் என் அன்பான நன்றிகள்!


      Delete
    2. ஐயா... இங்கு உங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் நீங்கள் பாடிய இப்பாடலின் இணைப்பை ஏற்றிவிட்டேன்.

      மிக்க நன்றி! நன்றி! நன்றி ஐயா...

      Delete
  45. கலர்ஃபுல் க்வில்லிங் வர்க் சூப்பர்ப் இளமதி.பஞ்சபூதங்களையும் கவிதையாக தொடுத்து படைத்திருப்பது கதம்பமாக மணமணக்கிறது.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.