Pages

Jul 28, 2013

என்னுயிர்த் தமிழே!..


பழைய காலப் படமான வின்ரேஜ் (Vintage)
எனக்கூறப்படும் தொகுப்பிலுள்ள இப்படத்தினைக் கூகிளில் எடுத்து
என் கற்பனை, ரசனைக்கு ஏற்றவகையில்
‘என்னுயிர்த் தமிழே’ என
க்விலிங் கைவேலையினைச் சேர்த்துச் செய்துள்ளேன்.
உங்களுடன் இதனைப் பகிர்வதில் மகிழும் தருணம் இதைப்பற்றிய
உங்கள் கருத்தினையும் அறிய ஆவலாயுள்ளேன்..
மிக்க நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

குறள் வெண்பா


கரையிலாக் காதல் கவியதிற் கண்டே
வரைந்திட வைத்த தமிழ்!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

என்னுயிர்த் தமிழே!.
அறுசீா் விருத்தம்
[விளம் - மா - தேமா]

என்னுயிர்  காக்கும் செல்வம்
ஈடிலா மொழியே! வாழ்வே!
பொன்னதில் உயர்வே காணும்
புதையலே! புகழே! பேறே!
விந்தையே! வனப்பே! இன்பம்
தந்திடும் சுவையே! என்றன்
சிந்தையில் நிறைந்த சீரே!
செந்தமிழ்த் தாயே! போற்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

புது மணம்..
அறுசீா் விருத்தம்
[விளம் - விளம் - விளம்]

 பூவிது பெற்றிடும் புதுமணம்!
புன்னகை பூக்குதே அனுதினம்!
தாவிடும் மனமிது கணம்கணம்!
தவிப்பொடும் ஆசையைப் பெருக்கிடும்!
கூறிட முடியுமோ அனுபவம்!
கொள்வதும் உணர்வதும் ஆயிரம்!
ஆருயிர்த் தோழியாம் அருந்தமிழ்
அடியினைச் சேரும்நாள் எண்ணிடும்! 
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

மனதின் பாட்டு
அறுசீர் விருத்தம்
[விளம் - மா - தேமா]

மாதிவள் மனதின் பாட்டு
மயங்கிட நாளும் கேட்டு
காதிலே நிற்கும் மெட்டு
கரைந்திடும் கண்ணீர் விட்டு
தூதினைத் தேடும் உள்ளம்
துடித்திடும் இதயம் சொல்லும்
ஏதிவள் செய்வாள் இங்கே
ஏங்கிடும் மனந்தான் சாகும்!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

பதிவோடு பகிரும் பதிவர்


இந்த முறை என் பதிவோடு பகிரும் பதிவராக என் தோழியும் க்விலிங் கைப்பணி (மானசீக ஆசிரியையும்) வல்லுநருமாகிய வலைப்பூப் பதிவர் அஞ்சு என்று நாம் செல்லமாக அழைக்கும் ஏஞ்சலின் அவர்களின்


எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!

அஞ்சு க்விலிங் மற்றும் ஏனைய கைப்பணிகளுக்கென
என்னும் ஆங்கில வலைப்பூவினையும் வைத்திருக்கின்றார்.

தோழி தமது வலைப்பூவில் பலவிதமான கைப்பணிகள், சமையல், இன்னும் முகப்புத்தகத்திலுள்ள பசுமை விடியல் பற்றிய பதிவுகள் என நிறைய விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். முகப்புத்தகத்தில் பசுமை விடியல் பகுதியில் ஒரு பிரதான பதிவாளராகவும் திகழ்கின்றார்.

அத்துடன் இவர் தனது வலைப்பூவில் தான் கண்ணுற்ற கேள்விப்பட்ட மனதிற்குப் பிடித்த சமையல் விடயங்களை உடனுக்குடன் செய்து பார்த்து அழகான படங்களுடன் பதிவிட்டு அசத்தும் திறமைசாலி.

எவராயினும் எப்பொழுது என்ன கேட்டாலும் சலிக்காமல் பதில் தருவதும், உதவுவதும் அஞ்சுவின்  உயர்ந்த பண்பாகும்.

ஆரம்பத்தில் ஆர்வத்தினால் இணையத் தளங்கள் மூலம் இந்தக் க்விலிங் கைப்பணியை நானும் தேடிக் கண்டுணர்ந்து செய்துவந்தபோதிலும் சில நுட்பமான விடயங்களை எனக்கு அஞ்சுவே தானே அவற்றைச் செய்து படங்களாக எடுத்தும் அது தொடர்பான சில வலைத்தளத் தொடர்புகளைத் தேடித் தொகுத்தும் தந்து ஊக்குவித்துள்ளார்.
அவரின் உதவி, ஊக்கமில்லாது போயிருந்தால் நானும் இவ்வளவுக்கேனும் இக்கலையைக் கற்றிருக்க முடியாது.  அவ்வகையில் என் அன்புத் தோழிக்கு இதயங்கனிந்த நன்றிகளை இங்குக் கூறிக்கொள்கிறேன்.

நீங்களும் அஞ்சுவின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்த்து அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__

89 comments:

 1. சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் தனபாலன்!

   உங்களின் முதல் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   மனமுவந்த நன்றி!

   Delete
 2. உயிர்போன்ற தமிழ்போன்ற உன்னதமான பதிவு. பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 3. //என் கற்பனை, ரசனைக்கு ஏற்றவகையில் ‘என்னுயிர்த் தமிழே’ என க்விலிங் கைவேலையினைச் சேர்த்துச் செய்துள்ளேன்.//

  செய்பவர் செய்தால் எதுவுமே அழகாகத்தான் இருக்கும்.

  உங்கள் கற்பனை + ரசனைக்குத் தலை வணங்குகிறேன்.
  மிகவும் அழகோ அழகாகச் செய்து அசத்தியுள்ளீர்கள்.

  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 4. நான்கு பாடல்களும் மிக அருமையாகவே உள்ளன.

  கவிதாயினிக்கு இதெல்லாம் ஜுஜுபி தான். படித்து ரஸிக்கும் எங்களுக்குத்தான் [எனக்குத்தான்] மிகவும் பிரமிப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைகோ ஐயா!
   உங்களின் வரவும் வாழ்த்துக்களும் இனிய நல்ல ரசனையும்கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல ஐயா!

   Delete
 5. //இந்த முறை எனது பதிவோடு பகிரும் பதிவராக என் தோழியும் க்விலிங் கைப்பணி (மானசீக ஆசிரியையும்) வல்லுனருமாகிய வலைப்பூப் பதிவர் அஞ்சு என்று நாம் செல்லமாக அழைக்கும் ஏஞ்சலின் அவர்களின்
  காகிதப் பூக்கள் http://kaagidhapookal.blogspot.de/
  எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!//

  என் அன்புக்குரிய செல்லத்தங்கை நிர்மலாவை இந்தத் தங்களின் பதிவினில் சிறப்பித்துள்ளது மனதுக்கு ஒரே மகிழ்ச்சியாக உள்ளது. நிர்மலாவுக்கும் தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 6. //அஞ்சு க்விலிங் மற்றும் ஏனைய கைப்பணிக்களுக்கென
  papercrafts http://cherubcrafts.blogspot.de/ என்னும் ஆங்கில வலைப்பூவினையும் வைத்திருக்கின்றார்.//

  நிர்மலாவின் தனித்திற்மைகளுக்கும், தங்கமான குணத்திற்கும், உதவிடும் உயர்ந்த உள்ளத்திற்கும் ..... ஒன்றென்ன இரண்டென்ன எவ்வ்ளவு வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், தான். ;)

  மிக்க மகிழ்ச்சி ! ;)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி அஞ்சுவைப் பாராட்டியமைக்கும் வாழ்த்தியமைக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete

 7. வணக்கம்!

  மென்னுயிர்ப் பட்டாம் பூச்சி
  மேனிபோல் மின்னும் பூக்கள்!
  பொன்னுயிர் என்றே கொஞ்சிப்
  புலமையைப் பொழியும் பாக்கள்!
  உன்னுயிர்க் குள்ளே ஓடும்
  உணா்வினைக் கண்டு கொண்டேன்!
  என்னுயிர்த் தமிழே! தாயே!
  இளமதி எழுத்தில் வாழ்க!

  சொல்லிய வண்ணம் பாடிச்
  சுவையினைத் தந்தாய் தோழி!
  மெல்லிய பொன்னுால் போன்று
  மின்னிடும் சொற்கள் வாழி!
  பல்லியல் பயின்ற தோ்ச்சி
  படைத்துள பாவில் பார்த்தேன்!
  வல்லியல் மேலும் சொல்வேன்
  வளமுறக் கற்பாய் நன்றே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. சுரந்திடும் அமிழ்தின் ஊற்றாய்ச்
   சுவைத்திடும் உங்கள் பாக்கள்!
   அருந்திட மேலும் ஆவல்
   அலையெனப் பெருகும் ஐயா!
   மரபினில் யாத்த சீர்கள்
   மணித்தமிழ் மாண்பைக் காட்டும்
   தருகிற வாழ்த்தைக் கண்டு
   தளைத்திடும் எந்தன் நெஞ்சே!

   வணக்கம் ஐயா! ..
   உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு உள்ளம் மிக மகிழ்வுறுகிறேன்.

   மரபு வழிக் கவியாகப் பதிவுதனை எழுது என்று கூறினீர்கள். மறுக்க முடியாமல் உள்ளம் பதைக்கப் பயந்து கொண்டு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறு காணத் தவிக்கும் மாணவரின் மன நிலையாயிருந்தது எனக்கு...

   உங்களின் அன்பான வாழ்த்தினைக் கண்டதும் நான் அடைந்த அமைதிக்கு அளவில்லை.
   எனது கைவேலை கண்ட உங்கள் ரசனையும் எனக்கு மகிழ்வே!

   ஐயா!... அஞ்சுவின் வலைத்தளத்திற்குச் சென்று அவரை வாழ்த்தியமைக்கும்,
   இங்கும் உங்கள் அன்பான வரவு மற்றும் இனிய நல் வாழ்த்திற்கும் என் உளமார்ந்த இனிய நன்றிகள்!.

   Delete
 8. //எவராயினும் எப்பொழுது என்ன கேட்டாலும் சலிக்காமல் பதில் தருவதும், உதவுவதும் அஞ்சுவின் உயர்ந்த பண்பாகும்.//

  ஆமாம். இது விஷயங்களில் நிர்மலாவுக்கு ஈடு இணையாக யாரையுமே சொல்லமுடியாது தான். அன்பு, ப்ண்பு, எது கேட்டு மெயில் கொடுத்தாலும் உடனுக்குடன் பதில் என SHE IS REALLY VERY GREAT ;))))))

  >>>>>

  ReplyDelete
 9. ‘என்னுயிர்த் தமிழே’ என
  க்விலிங் கைவேலை//

  மிக அழகு. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  கவிதைகள் அருமை.
  ஏஞ்சலின் பதிவுகள் எனக்கும் பிடிக்கும்.
  ஏஞ்சலினுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கோமதி அரசு!

   அஞ்சுவின் ரசிகைதானோ நீங்களும். மகிழ்ச்சி!

   உங்களின் வரவும் இனிய ரசனையும் வாழ்த்துகளும் நிறைந்த மகிழ்வாயுள்ளது.
   அஞ்சுக்குக் கூறிய வாழ்த்தினுக்கும் உங்கள் அன்பிற்கும் மனமுவந்த நன்றி சகோதரி!

   Delete
 10. அருமையான பகிர்வு.

  தோழிக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ குமார்!

   உங்கள் வரவிற்கும் தோழிக்குக் கூறிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 11. Replies
  1. வணக்கம் சகோ சீனி!

   உங்கள் வரவும் தருகிறது மகிழ்வெனக்கு!
   மிக்க நன்றி!

   Delete
 12. ஆஹா என்ன அருமை.சுதிமாறாமல் இலக்கணச் சுத்தமாய் மிகவும் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.மங்கைக்கு மலர் வைத்ததுபோல் ஏஞ்சலின் தளமும் அறிமுகம் செய்துள்ளீர்கள்.
  கவிதையை படித்தபோது மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.தங்களுக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பைபோல் நானும் பெற்று தங்களைப் போன்று சிறப்பான கவிதைகளைத் தருவேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ கவியாழி கண்ணதாசன்!..

   நீங்களே இப்படி வியப்பது எனக்கு வியப்பே... நீங்களும் நல்ல ஒரு படைப்பாளி. உங்கள் பெயரிலேயே இருக்கின்றதே!

   கண்டிப்பாக கவிஞர் ஐயா இணையவழிக் கற்பித்தலுக்கான ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார். செய்வார். எல்லோரும் அவரிடம் கற்றுத்தேறலாம்.
   நீங்களும் நான் எழுதியதை விட இன்னும் சிறப்பாக அப்போது எழுதுவீர்கள்!

   உங்கள் அன்பு வரவிற்கும் இனிய நற் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ!

   Delete
 13. க்வீலிங் கலக்கல். இலக்கண குறிப்புடன் அறுசீர் விருத்தங்கள் அருமை. மரபுக் கவிதை எழுத முயல்வோர்க்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது கவிதைகள் . உங்கள் தொழியின் paper crafts வலைப பக்கம் பார்த்தேன். மிக சிறப்பாக உள்ளது. கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ முரளிதரன்!

   கவிஞர் ஐயாவின் கூற்றுப்படி இம்முறை மரபுக் கவிதைதான் பதிவிட வேண்டுமென்பதற்கமைய இக் கவிதைகளை எழுதினேன். கூடவே ஐயா அதற்கான இலக்கணக்க வாய்ப்பாடினையும் குறிக்கவேண்டுமென்றார். அதையே செய்ய இன்று அதுவே நல்லதென நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் மகிழ்வாயுள்ளது.

   உங்கள் வரவுக்கும் சிறந்த நற் கருத்திற்கும் தோழிக்கும் நல்கிய உங்கள் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ!

   Delete
 14. அறுசீர் விருத்தம் - அனைத்தும் மிகப் பொருத்தம். தமிழின் இனிமையை அழகான பாக்களாக்கிப் படைத்த விதம் சிறப்பு. பாராட்டுகள் இளமதி.

  க்வில்லிங் நேர்த்தி மனம் கொள்ளை கொண்டது. நிஜப்பூக்களைப் போலவே நெஞ்சத்துக்கு மிக நெருக்கமாய் மணம் வீசுகிறது. அதற்கு விசேடப் பாராட்டுகள் இளமதி.

  தோழி ஏஞ்சலின் வலையை அறிமுகப்படுத்திய விதம் அழகு. அவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!

   பயந்து பயந்தே கவிதைகளை வெளியிட்டேன். ஆனால் உங்கள் பாராட்டும் ரசனையுமே எனக்கு நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்ததாய் மகிழ்கின்றேன்.

   உங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றிகள் தோழி!

   Delete
 15. "...தாவிடும் மனமிது கணம்கணம்!
  தவிப்பொடும் ஆசையைப் பெருக்கிடும்..."

  "..காதிலே நிற்கும் மெட்டு
  கரைந்திடும் கண்ணீர் விட்டு.."

  அடங்காது துடிக்கும்
  மனத்தின் குணத்தை
  மிக அருமையாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைத்தியர் ஐயா!

   மிக அருமையாகக் கவனிக்க வேண்டியவற்றைக் கவனிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான் ஐயா!

   உங்களின் அன்பு வரவும் கருத்தும் மனதிற்கு மிகுந்த மகிழ்வும் நிறைவும் தருகிறது.
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 16. தமிழ் குறித்த கவிதைகள் அமுதம்! சிறப்பான படைப்பு! ஓவியங்களும் சிறப்பு! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

   உங்கள் ரசனையும் அருமை. ஓவியம் கூகிளில் எடுத்தது. அதை வைத்துக் கைவேலையினைச் செய்தேன்.

   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 17. அறுசீர் விருத்தம் - சுட்டுப்போட்டாலும் எனக்கு வராது இளமதி.அற்புதமாக எழுதிருக்கிறீர்கள்.ஏஞ்சலுக்கும் என் அன்பு வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஹேமா!...

   சுட்டுட்டா மயங்கீடுவமெல்லோ...;) ஒருத்தருக்கும் ஒண்ணுமே வராது...:))).

   எவ்வளவு கவிதை எழுதுறீங்க நீங்க இப்பிடிச் சொல்லலாமோ? எல்லாம் வரும். கொஞ்சம் வாய்பாடுகளை மனசில நிறுத்தீட்டா பிறகு நொன்ஸ்ரொப்தான்..:)

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்தும்கண்டு உள்ளம் மகிழ்வில் குதிக்குது ஹேமா!

   எங்களுக்கு சொன்ன வாழ்த்துக்களுக்கும் உங்களுக்கு எங்களின் இனிய நன்றிகள்!

   Delete
 18. கைவேலைத்திறனும் கவிதைகளும் மிக மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மனோ அக்கா!

   வந்ததும் சென்றதும்ன்னு ஓடீற்றீங்க...:)

   உங்கள் அனபும் ஆதரவும் ஊக்குவிப்பும் என்னை இப்படியெல்லாம் செய்யவைக்கிறது அக்கா!

   மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும் உங்களுக்கு!

   Delete
 19. வலைப்பூப் பதிவர் அஞ்சு என்று நாம் செல்லமாக அழைக்கும் ஏஞ்சலின் அவர்களின் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 20. புன்னைகையுடன் பூக்கும்
  புதுமலரின் மணமாய் அழகிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!

   உங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கும் அஞ்சுவுக்கான வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் பல!

   Delete
 21. ஒவ்வொரு ஆக்கமும் மனத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறதே !!
  வாழ்த்துக்கள் தோழி கை வேலை ,கவிதை இவையிரண்டும் அருமையாக
  உள்ளது .ஒரு சின்ன சந்தேகம் தாங்கள் பிறந்த திகதி ஏழா ?.....அல்லது இரண்டா ?..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்பாளடியாள்!

   உங்கள் கவித்திறனைவிடவா நான்....

   நீங்களே பாராட்டும்போது என்மனம் என் வசமில்லை.
   மகிழ்வில் பறக்கின்றது தோழி!

   சந்தேகம் வேறா உங்களுக்கு... நீங்கள் ஜோதிடரோ?????

   அங்குவரும்போது சொல்கிறேன்...:)

   வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றிகள் தோழி!

   Delete
 22. ஆகா இளமதி அறுசீர் விருத்தத்தில் பாடல்கள். கலக்குங்க. மிகமிக அருமை இளமதி. அறுசீர் விருத்தமெனில் எனக்கு உமர்கயாவின் பாடல் ஒன்றைத் தழுவிக் கவிமணி எழுதிய வரிகள்::_
  "வெய்யிற் கேற்ற நிழலுண்டு"
  "வீசும் தென்றல் காற்றுண்டு" ஞாபகத்தில்.
  இது படிக்கும் காலமதில் மனதில் படிந்ததொன்று.பாடமாக்கி பாடித்திரிந்த தன்றோ. இதன் "அழகு" வாய் விட்டு படிக்கும்போது கொஞ்சும். சூப்பர் இளமதி. குறள் வெண்பாவும் அருமையாக இருக்கு.
  க்விலிங் அழகாக செய்திருக்கிறீங்க.
  இப்படியே எழுசீர்,எண்சீர்,பன்னிருசீர்.. விருத்தங்களும் எழுத வாழ்த்துக்கள் இளமதி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ !!!! எனக்கு மயக்கம் வர்து ..அமுலு என்னென்னமொசொல்றாங்க ..


   உண்மைதான் அம்முலு ..தமிழை இந்த அளவுக்கு நேசிக்க இளமதி .நீங்க மேலே பின்னூட்டமிட்ட அம்பாளடியால் ,இரண்டு கவி அரசர்கள் .டாக்டர் , சுப்பு ஐயா போன்றோரால் மட்டுமே சாத்தியம் ....
   உங்களைபோன்றோரால்தான் தமிழ் இன்னமும் வாழ்கிறது .குறைந்தபட்சம் இனி ஆங்கில எழுத்துக்கள் சேர்க்காமல் எழுத பழகனும் நான்

   Delete
  2. அஞ்சு... உங்கள் நல் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   நானும் எனக்கு அறிவு தெரிந்த காலம் தொடக்கம் தமிழ்மேல் கொண்ட பற்றும் ஆர்வமும் காரணமாக அவ்வப்போது ஏதாவது எனக்குள்ளே கிறுக்கி வந்ததை இப்போது எங்கள் கவிஞர் ஐயாவிடம் ஓரளவிற்காயினும் அவ்வப்போது கற்றுவருகிறேன். அதில் வந்த முயற்சியே இங்கு பகிர்ந்தது.

   இனி முழுநேர முயற்சியாய்க் கற்றல் வேண்டும்.. காலமும் நேரமும் கை கொடுத்தால் அதிர்ஷ்டமே!

   Delete
 23. அஞ்சு வின் இணையதளத்தினை பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் அஞ்சுவின்
  தளத்தினூடாகவே க்விலிங் ஐ அறிந்துகொண்டேன். நீங்க கூறியபடி //எவராயினும் எப்பொழுது என்ன கேட்டாலும் சலிக்காமல் பதில் தருவதும், உதவுவதும் அஞ்சுவின் உயர்ந்த பண்பாகும்.// முற்றிலும் உண்மை. அஞ்சுவிற்கு என் நன்றிகளை இத்தருணத்தில் நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்முலு!

   என்னதிது இப்படி என்னைப் புகழுகின்றீர்கள்...:)
   இதுதான் எனது முதன்முதலான மரபுக் கவி முயற்சி!
   இதிலேயே இன்னும் மெருகாக்க இடமுண்டு.

   கற்பனைப் பஞ்சம், சொற்பஞ்சம் எனக்கு. எழுதுவதற்க்கு அமைதியான சூழல் மிக முக்கியம்.. தேடி எங்காவது காடு வனாந்தரம் போத்தான் இனி எழுதவேண்டும்...:).

   நீங்களும் எழுதுங்கள். கவிஞரையாவைக் கேளுங்கள். படிமுறையாகச் சொல்லித்தருவார்.

   உங்கள் அன்பான வரவும் கருத்துப் பகிர்வும் மனம் நிறைந்த மகிழ்வெனக்கு அம்மு!

   வாழ்த்துகளுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி!

   Delete
 24. இளமதி, அறுசீர் விருத்தம், குறள் வெண்பா...என்னென்னமோ சொல்லுறீங்க..பத்தாவது-பன்னிரண்டாவதில் படித்த தமிழ் இலக்கணமெல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போன நிலைமையில்.... என்ன சொல்லிப் பாராட்ட என்று தெரியவில்லை! உங்கள் தமிழ் ஆர்வம் வாழ்க, வளர்க! :)

  விண்டேஜ் க்வில்லிங்-ல் பூக்கள் அழகு! ஏஞ்சல் அக்காவின் தளப்பகிர்வு கண்டு மகிழ்ச்சி! பிஸியாக இருக்காங்க என நினைக்கிறேன், அடுத்த வாரம் வரக்கூடும்!

  உங்கள் கவிதைப்பணியும், க்வில்லிங் கைவேலையும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகி!

   மறந்துதானே போயிருக்கின்றீங்கள்... தூசுதட்ட எல்லாம் சரியாகும்...:) உங்களுக்கும் நன்றாக எழுத வருமே..
   அற்புதமான கற்பனையும் எழுத்துக்களும் உங்களிடம் கண்டிருக்கின்றேன்!..

   உங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் மனதிற்கு நிறைவான மகிழ்வாயுள்ளது.

   மிக்க நன்றி மகி!

   Delete
 25. நிலவென்ன பேசும்... குயிலென்ன பாடும்...
  மலரென்ன சொல்லும்... சொல்லுங்கள் ...:).

  Listen here


  http://www.youtube.com/watch?v=NbzhR0b_KjQ

  subbu thatha
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   நீங்கள் இங்கு வரும்போதே பாட்டாகப் பாடி அதையும் எடுத்து வந்துவிட்டீர்களா...

   மிக மிக அருமையாக இருக்கின்றது. என்ன சொல்லி உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிப்பேன்... உங்கள் அன்பிற்கு என் இதயங்கனிந்த இனிய நன்றிகள் ஐயா!

   எனது வலையில் மிக விரைவில் நீங்கள் பாடும் பாடல்களைப் பத்திரப்படுத்தி சேர்க்கின்ற பகுதியில் இதனையும் சேர்த்துவிடுகிறேன்.

   மீண்டும் என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

   என்னுள நன்றி இயம்பினேன் சுப்பையா!
   உன்னிசைக்கு இல்லை இணை!

   Delete
  2. // இதனையும் சேர்த்துவிடுகிறேன்.//

   enge ??

   subbu thatha.
   www.subbuthatha.blogspot.com

   Delete
  3. ஐயா வணக்கம்.

   சேர்த்துவிட்டேன். வலபூப் பக்கத்தில் வலது பக்கத்தில் மேலிருந்து கீழாகப் பாருங்கள்...
   அங்கே நீங்கள் பாடித்தந்த அத்தனையும் இட்டுள்ளேன்.

   Delete
 26. எனது வலைபூக்களை இங்கே அறிமுகம் செய்த இளமதிக்கும் ..மற்றும் எப்போதும் என்னை தவறாமல் அன்பான கருத்துக்களாலும் பின்னூட்டங்களாலும் ஊக்குவிக்கும் சகோதரர் தனபாலன் ,அன்பு கோபு அண்ணா ,ராஜேஸ்வரி அக்கா மற்றும்
  எனது வலைபூவுக்கு வந்து என்னை வாழ்த்திசென்ற கவிஞர் பாரதிதாசன் ஐயா ,சகோதரர் குமார் ,சகோதரர் சீனி ,
  கவியாழி கண்ணதாசன் ,சகோ முரளிதரன் ,கீதா ,ஹேம்ஸ் .சுரேஷ் ,மகி ,அம்முலு மற்றும் மஅனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள் .
  தாமதத்திற்கு மன்னிக்கவும் ..போனில் பார்த்தேன் ..தமிங்க்ளிஷில் இங்கு கருத்து இட மனம் வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அக்கா , உளமார்ந்த நன்றிகள் .

   Angelin.

   Delete
  2. வாங்கோ அஞ்சு...

   உங்க வரவுகண்டு மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.
   சொல்லாமல் பதிவோடு பகிரும் பதிவர்ன்னு இம்முறை உங்களை இங்கு சொன்னது தப்பாப் போச்சோன்னு பயந்திருந்தேன்...:)

   வந்து பார்த்து மகிழ்ந்து வாழ்த்தி நன்றியும் கூறியமைக்கு மனமார்ந்த நன்றிகள் அஞ்சு!

   Delete
 27. க்வில்லிங் கைவண்ணம் அருமை. ஏஞ்சலின் அவர்கட்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மாதவி!

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமுவந்த நன்றி!

   Delete
 28. க்வில்லிங் கைவண்ணம் அருமை. ஏஞ்சலின் அவர்கட்கு வாழ்த்துகள்.

  good poems.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   உங்கள் வாழ்த்துகளுக்கும் என் அன்பான இனிய நன்றிகள்!

   Delete
 29. சகோதரி தங்களைத் தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்.
  எழுதுங்கள்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com/2013/08/04/28-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே பல தொடர்கள் என்னிடம் தொடரமுடியாமல் இருக்கின்றன...:)
   இதையும் அவற்றுடன் சேர்க்காமல் எழுத முயற்சிக்கின்றேன்.

   மிக்க நன்றி!

   Delete
 30. அறுசீர் விருத்தம் அறியாதவன் அதன் மணம் கண்ட கவிதை ரசித்தேன் வாழ்த்துக்கள் !அஞ்சலின் பகிர்வுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நேசன்!

   நானும் இப்பொழுதுதான் இப்படி எழுத முயற்சிக்கின்றேன்.

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி நேசன்!

   Delete
 31. க்விலிங் கைவேலையுடனான உங்கள் கற்பனை ரசனை வியப்பாக உள்ளது, வாழ்த்துகள்.

  உங்கள் தோழியின் வலைப்பூவையும் அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சித்ராசுந்தர்!

   உங்கள் வரவும் நல்ல ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

   Delete
 32. அறுசீர் விருத்தம் அழகாக பாடியுள்ளீர்கள்... வாழ்த்துகள் தோழி. நலமா? இடையில் சில வாரங்கள் இணையம் இல்லை, ஆதலால் சிறு இடைவெளி விழுந்துவிட்டது... தமிழ் தேன் மற்றும், இந்த வார அறிமுகம் அழகு...

  வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெற்றிவேல்!

   தாமதமானாலும் வருகை தந்ததே மகிழ்சிதான்...

   உங்கள் நல்ல ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 33. தேனைப்போல் பாக்கள் பாடி
  தெள்ளுதமிழ் குளிரவைத்தாய்
  மோனைகள் சிறப்புக் கண்டேன்
  மொழியிலும் வாசம் தூவ..!

  அழகிய அறுசீர் விருத்தங்கள் அசத்தலான கைவேலைகள் அனைத்தும் அழகோ அழகு மேலும் தமிழ் மணக்க கவி பாட உளமார வாழ்த்துகிறேன் சகோ...!
  அறிமுக வலைப்பதிவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீராளன்!

   நீண்ட காலமாகக் காணவில்லையே... நலந்தானே!

   அழகிய கவிவரிகளில் அன்போடு வாழ்த்தினை சகோ!
   உன் வரவும் வாழ்த்தும் தரும் உவகை மிகவே.

   மிக்க நன்றி சீராளா!

   Delete
 34. முப்பொழுதும் உங்கள் கற்பனைகள்.வாழ்த்துக்கள்/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விமலன்!

   எப்பொழுதும் என் கற்பனைகளில் தமிழ்தான்!..:)

   தேடிக் கற்கின்றேன். உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமுவந்த நன்றிகள்!

   Delete
 35. 'எனது முதல் பதிவின் சந்தோசம்' தொடர் பதிவு எழுத உங்களை மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். http://thaenmaduratamil.blogspot.in/2013/08/mudhal-padhivin-sandosam.html பார்க்கவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய தோழி கிரேஸ்!

   வரும்போதே தொடர் சங்கிலியோடு வருகின்றீர்களே...:)

   ம். முயற்சிக்கின்றேன். ஏற்கனவே பல தொடர்கள் இன்னும் எழுதாமலே இருக்கின்றன.

   மிக்க நன்றி தோழி!

   Delete
 36. க்விலிங் எப்பொழுதும் போல அழகு. கவிதை ஒவ்வொன்றும் அருமையோ அருமை. அறி விருத்தமா..படித்தது போல நினைவு..எப்படி எழுத என்று தெரியவில்லை..எவ்வளாவு அழகாக எழுதுகுன்றீர்கள்! வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசனைகண்டு பேருவகையாக இருக்கின்றது.

   இவ்வளவு எழுதும் உங்களுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை கிரேஸ்!

   உங்களாலும் முடியும். எழுதுவீர்கள்! வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 37. [co="blue green"] மீஈஈஈஈஈஈ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

  அதாவது அதிரா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. கேட்குதாஆஆஆஆஆ? மீ கூப்பிடுவது கேட்குதோ?:))..

  வந்ததும் வராததுமா.. “அஞ்சு” எனக் கூப்பிட்ட அனைவரையும் பிரித்தானிய நீதிமன்றம் வரும்படி, மேன்மை தங்கிய ஜனாதிபதி.. சே..சே.. டூர் போனதால எல்லாமே தடுமாறுது:).. நீதிபதி ஆணையிடுகிறார்ர்ர்ர்ர்:).

  காரணம்:
  அது என் “கொப்பிவலது” பெயராக்கும்... சரி சரி பெரிய மனது பண்ணி மன்னிச்சு விட்டிட்டுறேன்.. கூப்பிடுங்கோ அப்படியே..:) ஆனா என் எக்கவுண்டுக்கு.. பவுண்டில காசைப் போட்டுவிட்டு:). [/co]

  ReplyDelete
  Replies
  1. ஓம் வாங்கோ... அதிரா... இப்பதான் இங்கை வெளிச்சம் வந்தமாதிரி இருக்குதெனக்கு!

   ஹையோ அஞ்சு என நானும் முந்திக் கூப்பிடேக்கை நீங்க ஒண்ணும் சொல்லேலையே.. அதனால அப்பிடியே கூப்பிட்டுப் பழகீட்டேன்...:) தப்பாப் போச்சே... சரி அபராதம் கட்டீடுறேன்.

   காசுதானே கட்டாயம் போட்டுவிடுறேன்.
   எல்லாருக்கும் சேர்த்து..;)

   Delete
 38. அழகிய குயிலிங்.. நல்ல நீட்டாக இருக்கு சூப்பர்.

  கீழே தமிழ் ஏதும் சுத்தமாப் புரியேல்லை:).. ஆனா நேக்கு டமில்ல “டி” ஆக்கும்:)....

  ஓ புதிய பதிவர்... :).. காகிதப்பூ ஓனர்:) அஞ்சலின் எனும் அஞ்சுவின் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்:).. இப்பவே அவரின் தளம் சென்று பார்க்கிறேன்:)).

  ReplyDelete
  Replies
  1. தமிழில் ’டி’ எடுத்த உங்களுக்கு இது புரியேலையோ?..
   அப்ப ‘டி’ யும் சந்தேகம்தான்...:)

   வந்ததும் உடனேயே இங்கும் வந்து என்னை மகிழ்வித்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அதிரா!

   அங்கே சொந்தங்கள் எல்லோரும் சுகமோ?

   பிறகு வாறேன் கதைக்க...:)).

   Delete
 39. [im]http://31.media.tumblr.com/883094714a174b9c944c29b01e7830c7/tumblr_mjiysc819L1s1f4sxo1_250.gif[/im]

  ReplyDelete
  Replies
  1. சே சே..சே.... இன்னும் ஒரு ரீ தரக்கூட ஆரும் இல்லை:).. இதை விட “இந்தாட்டிக்காவிலயே” இருந்திருக்கலாமே முருகா:)..

   Delete
  2. அடடா... வாங்கோ வாங்கோ... இங்கை வந்து இப்பிடி டான்ஸ் ஆடி.... :)

   சூப்பர் அதிரா! அழகோ அழகு!

   அங்கையிருந்து கூட்டிவந்திட்டீங்களோ... நல்லாத்தான் ஆடுறார்..:)

   மிக்க நன்றி அதிரா!

   Delete
 40. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
  சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
  இனிய அன்பு நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கு நன்றி சகோதரி!

   Delete
 41. ஆஹா...
  தமிழ் மணம் பரவும் வலைத்தளம்
  அமிழ்தெனப் பாக்கள் நிதம் தரும்
  தனித்திறன் கொண்ட என் தாயே
  இனியில்லை தமிழுக்குச் சாவே

  அழகிய கைப்பணி சமைத்து
  அறுசீர் விருத்தமும் படைத்து
  அறிமுகம் அழகுறக் கொடுத்து
  அரும்பெரும் விருந்தளித் தாயே

  சிந்தனை ஊற்று திறக்கட்டும்
  சீரிய செந்தமிழ் சிறக்கட்டும்
  வந்தனை செய்தேன் தாயே
  வாழிய வண்டமிழ் உன்நாவில்........

  ReplyDelete
  Replies
  1. கைப்பணியுடன் கவிதனை ரசித்து
   தையெனத் தாளமும் போட்டு
   மெய்யுடன் உளமுங் குளிரச்
   செய்தனை பாடல் இசைத்தே!

   தமிழாய்ப் பாடுமீழக் குயிலே
   அமிழ்தோ என்பாடல் இங்கெ
   தலைவன் உந்தந்தை உனக்கே
   கலையெனத் தந்தகவி மிகவே!

   எனை வாழ்த்தி மகிழ்ந்தமகளே!
   உனைக் காண மகிழ்வுமெனக்கே
   இணையேது உன் வாழ்த்துக்கிங்கே
   நினைப்பேன் என்நன்றி உனக்கே!

   Delete
 42. குவில்லிங் கை வண்ணம் மிக அருமை,
  அத்துடன் படத்துடன் உள்ள கவிதகளும் அருமை

  நம்ம ஏஞ்சலினை அறிமுக படுத்தியது அதை விட அருமை
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜலீலா...:)

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்!

   Delete
 43. வணக்கம்
  சகோதரி
  உங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்த போது என்னை பிரமிக்க வைத்தது என்ன அழகாபடங்கள் குறுகிய வரிக்கவிதை என்றாலும் கருத்து மிக அருமை உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
  ஏஞ்சலினை அறிமுக படுத்தியது அருமை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்!

   முன்பும் இங்கு வந்துள்ளீர்கள். நாந்தான் உங்கள் வலைப்பூவுக்கு வரத் தாமதமாகியிருக்கின்றேன்.
   உங்கள் ரசனை கண்டு நானும் வியந்தேன்.
   மிக்க நன்றி சகோதரரே!

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றிகள்!

   Delete
 44. க்வில்லிங் வெகு அருமை இளமதி. வர்ணங்கள், நேர்த்தி எல்லாமே குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது.
  உங்கள் கவிதைகள், அவற்றுக்காக நீங்கள் தெரிந்து வெளியிடும் படம் அனைத்தும் அருமை.
  'புது மணம்' கவிதைக்கு இணைத்திருக்கும் ஓவியம் அழகாக இருக்கிறது. அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா!...
   குறிஞ்சி மலரைப்போல் உங்கள் வரவும் இங்கு...:)
   மட்டற்ற மகிழ்ச்சி!
   உங்களின் படிப்படிப்படியான ரசனைக்கு நானும் அடிமை தெரியுமோ....

   என்னை ஊக்குவிக்கும் பெரும் பலம் உங்களிடமுள்ளது. ஆனால் எப்பவும் நிறையையே சொல்லாமல் குறையையும் சொல்லுங்கள். திருந்(த்)த வேண்டும் நான்..

   ”புது மணம்” உங்களுக்கு வித்தியாசமாக மணக்கிறதோ...அவ்வ்வ்.
   எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடக்கூடாது...;).

   இமா!.. உங்களின் நேரக் குறைபாட்டிற்குள்ளும் இங்கும் வந்து பார்த்துக் கருத்துப் பகிர்ந்த்து வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

   Delete
 45. நல்ல கவிஞருக்கு இலக்கணம்
  ஒரு தடையல்ல துணையே
  என்பதற்கு தங்கள் கவிதைகள்
  நல்ல உதாரணம்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.