Pages

Aug 26, 2013

பதிவுலகில்...

அன்புத் தோழி அதிரா தம்பதியினருக்கு 
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்! 

அதிராவின் திருமண நாள் வாழ்த்து மடலினைக் க்விலிங் கைவேலையில்... 

இக் க்விலிங் கைவேலையை இணையத்தளத்தில் கண்ட
dreame-quillingwithlove.blogspot.com இவ்வலைப் பூவில் உள்ளதைப் பார்த்துச் செய்தேன். நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ


ஒன்றாகி இணைந்தீர் உறவுக்கோர் உதாரணமாய்
நன்றான நல்லறம் நாம் வாழ்கின்றோமென்று
உணர்வுகளை மதித்து உரிமைக்கும் இடங்கொடுத்து
திணறும் தருணங்கள் திகட்டாமல் தானுணர்ந்து
ஆசை அகல்விளக்கில் அன்பினைச் சுடராக்கி
ஓசை கேட்டிடா உயிரதன் நெருக்கமுடன்
இல்லறப் பள்ளியிலே என்றுமே மாணவராய்ப்
பல்லறங்கள் பலவகுப்பில் பாங்குடன் பயின்றுமே
வாழ்க்கைத் துணையுடன் வளமாக வாழ்வோங்க
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடனே!!!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

முதற் பதிவும் முத்தான சொத்தும்!...


முதற்பதிவு தந்த முழுமையான மனமகிழ்வு!
அதற்கென வலைப்பூ எனக்கமைத்தாள் என்தோழி!
எல்லோர்க்கும் இனியவள் என்றும் இளைவள்
நல்லோர் புகழும் நல்தோழி அதிராவாம்
அன்பாய் வடிவமைத்து அழகிய வலைப்பூவுக்கு
நன்றாய் ஒருபெயர் நல்கிடு நீயென்றாள்
இனிமையாய் என்தன் இதயத்தின் நாதமெனப்
பனிமலைக் குளிர்ச்சியாய்ப் பக்கமாய் இருந்திட்ட
இளமதியென் மனமதியாம் இளையநிலா என்றிட
நலமெலாம் மின்னும் நற்பெயரைச் சூடினோம்!
கவிமேல் காதலால் கூறிய வணக்கப்பாடல்
குவித்த கைவரவு காட்டிடும் கைப்பணியும்
சேர்த்தங்கே சுய அறிமுகமும் முதற்பதிவாய்க் 
கோர்த்துக் கட்டிக் கூவினேன் நட்புகளை
வந்த நட்புகள் வழங்கிய வாழ்த்தினில்
இந்த உலகமே இணைந்திட இன்புற்றேன்!
தெரிந்த நட்புகள் திரண்டு வந்தனர்!
பெரியோர் வரவும் பேருவகை தந்தது!
கொஞ்சும் அன்பும் கோலக் கருத்தும்
நெஞ்சம் நிறைந்த நேசம் நல்கின!
மறக்க முடியா மனவெழுச்சி எனக்குள்
துறக்க முடியாதே தொடரும் நட்புகளை
இறைஞ்சுகிறேன் இறைவா இன்னும் இவைதொடர!
குறையின்றி அருளும் கூடுமுறவுகள் வாழ்ந்திடவே! 


முதற் பதிவும் முத்தான சொத்துமென என் முதற்பதிவு அனுபவத்தினை உங்களுடன் பகிருவதற்கு என்னைக் கோரிய வலையுல நட்புகள்

வேதாவின் வலை - கோவைக்கவி
தேன்மதுரத் தமிழ் - கிரேஸ்
ஆகியோருக்கு என் அன்பு நன்றியைக் கூறும் அதேசமயம்

முதற் பதிவின் மகிழ்வென இதன் தொடரை
என் ஆரம்ப கால அன்புத் தோழிகளான
அதிரா, இமா,
அஞ்சு - ஏஞ்சலின்,
அம்முலு - பிரியசகி ஆகியோரைத் தொடரும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   
மிக்க நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

 ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

பதிவோடு பகிரும் பதிவர்


இம் முறை என் பதிவோடு பகிரும் பதிவராக நான் வலையுலகில் காலடி வைத்த ஆரம்ப காலம் தொடக்கம் என் உற்ற தோழியாக இருக்கும் வலைப்பூப் பதிவர் அதிரா அவர்களின்

என் பக்கம்

http://gokisha.blogspot.de/


எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!

அதிரா தமது வலைப்பூவில் பலவிதமான பதிவுகளை பல்சுவைக் கதம்பமாகப் பதிந்து வருகிறார்.
மனதிற்கு இனிமையும் மகிழ்வையும் நகைச்சுவயாகப் பதிவுகளில் தருவதில் அதிராவுக்கு நிகராக எவரும் இல்லை.

தான் காணுகின்ற ரசனைக்குரிய காட்சிகளை, விடயங்களைப் படமாக்கி எமக்கும் காணவென வலையில் பதிவிட்டு எல்லோரையும் மகிழ்விக்கும் திறமைசாலி.

வலையுலகில் எனக்குத் தெரிந்தவரை மனம் சலியாமல் மறுக்காமல் உதவும் உன்னதமான குண இயல்புடையவர்.

வலைப்பூவைப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு தனது வேலைகளுக்கு மத்தியில் இதனை வடிவமைத்துத் தந்ததே அவராவார். 

என்னை வலையுலகில் உங்களில் ஒருவராக அறிமுகப்படுத்திய  இனிய தோழி அதிராவுக்கு என் இதயங் கனிந்த நன்றிகளை இத் தருணத்தில் மீண்டும் கூறுகின்றேன்.

அதிராவின் பதிவுகளை நான் கூறுவதைவிட நீங்களே பார்த்திருப்பீர்கள். பாராதவர்கள் அவர் வலைப்பூவிற்கும் சென்று பார்த்து அவரையும் ஊகுவித்து நீங்களும் மகிழலாமென இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
 
மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__

111 comments:

  1. அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

    க்வில்லிங் கார்டும் முதற்பதிவு பற்றிய கவிதையும் அழகு இளமதி! பூஸாரின் தளம் பற்றிய பகிர்வுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகி!.

      உங்கள் உடன் வரவு மனதிற்கு பெரும் மகிழ்வாயிருக்கு.!.:)

      அழகான ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் உளமார்ந்த நன்றி மகி!

      அதிரா தம்பதிகளை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. அச்சச்சோ ஆருக்கு நன்றி சொல்வேன் எப்பூடிச் சொல்வேன்ன்ன்.. என்னை அந்தக் கதிர மலையாந்தான் காப்பாத்தோணும்:)..

      மியாவும் நன்றி மகி.

      Delete
  2. இனிய வணக்கம் சகோதரி இளமதி...
    அடடா..
    சகோதரி அதிராவுக்கு இன்று திருமணநாளா ...
    அழகான பரிசுடன்
    இன்தமிழால் வாழ்த்தும் பாடிவிட்டீர்கள்..

    அத்துடன் என்னுடைய
    அன்பான வாழ்த்துக்களும்
    என்றும் வளமுடன் நலமுடன் வாழ்ந்திட
    பிரார்த்தனைகளும்...
    ==
    முதல்பதிவு நாம் மனதில் புடம்போட்டு வைத்த
    பொற்குவியலுககுச் சமம்..
    மிகவும் அழகாக இருந்தது தங்கள் முதல் பதிவு..
    ===
    சகோதரி அதிராவின் உதவியால் உருவான தங்களின்
    வலைத்தளம் மென்மேலும் மெருகேறி
    பளபளக்கும் வைரமாய் மின்னிட என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அடடா மகேந்திரன் அண்ணன்.. என்னை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் வாழ்த்துறீங்க.. மிகவும் சந்தோசம் மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோ மகி!..

      உங்கள் அன்பான வரவும் கருத்துகளும் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பாகவும் மகிழ்வாயும் இருக்கிறது.

      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகி![/co]

      Delete
  3. அக்காவுக்கும், அத்தானுக்கும் இனிய இல்லற நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! தொடர்ந்தும் சகல சௌபாக்கியங்களோடு வாழ வாழ்த்துகிறேன்!

    அன்புடன் நிரூபன்

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.. வாங்கோ லபக்குடாஸ்.. நல்லவேளை பெயர் போட்டீங்க இல்லாட்டில் இளமதி பயந்திருப்பா...

      அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி நிரூபன்.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் நிரூபன்!..
      உங்கள் முதல் வரவு இங்கு... வாங்கோ! சந்தோசம்!

      உண்மையில் அதிரா சொன்னதுபோல நீங்கள் உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருக்காட்டி ஐயோ இதாரிது எண்டு பயந்து டிலீட் செய்திருப்பன்....:).

      உங்கள் அன்பான வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிரூபன்![/co]

      Delete
  4. வாழ்க்கைத் துணையுடன் வளமாக வாழ்வோங்க
    வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடனே!!!//

    நானும் உங்களுடன் சேர்ந்து அதிரா அவர்களை வாழ்கைத் துணையோடு வளமாக வாழ்வோங்க வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன்.
    க்வில்லிங் கார்டு மிக அருமை.

    //இனிமையாய் என்தன் இதயத்தின் நாதமெனப்
    பனிமலைக் குளிர்ச்சியாய்ப் பக்கமாய் இருந்திட்ட
    இளமதியென் மனமதியாம் இளையநிலா என்றிட
    நலமெலாம் மின்னும் நற்பெயரைச் சூடினோம்!//

    அழகான பெயர் அதிராவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வலைத்தள அனுபவ கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அரசு... என்னோடு பழக்கமில்லாவிடினும் அன்பாக வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோதரி கோமதி அரசு!..

      உங்கள் அன்பான வரவும் அழகிய ரசனையும் கண்டு மனம் மகிழ்ந்தேன்.

      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி!..[/co]

      Delete
  5. க்விலிங் கலையால் அழகாய் வாழ்த்தி, முதல் பதிவு அனுபவத்தை சிறப்பான கவிதையால் சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் முரளிதரன்!..

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..![/co]

      Delete
  6. புதுமணத் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    உங்கள் வாழ்த்தும், கைவண்ணமும், முதல் பதிவின் கவி வண்ணமும் மிக அழகு! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி கவிநயா.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் கவிநயா!..

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி![/co]

      Delete
  7. க்வில்ங் வேலைப்பாடு அருமை,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோ விமலன்!..

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி![/co]

      Delete
  8. திருமதி அதிரா தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
    முதல் பதிவின் மகிழ்ச்சியை அற்புதமான கவிதை வரிகளால் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் க்விலின் கலைத் திறமை வியக்க வைக்கிறது.
    மனமுவந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோசம் மிகவும் நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோதரி!..

      உங்கள் அன்பான வரவும் கருத்துகளும் கண்டு மனதிற்கு மிக்க மகிழ்வாயிருக்கிறது.

      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி![/co]

      Delete
  9. அன்புத் தோழி அதிரா தம்பதியினருக்கு
    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் ராஜேஸ்வரி அக்கா... மியாவும் நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோதரி!..

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி![/co]

      Delete
  10. க்விலிங்க் வேலைப்பாடு மிகவும் அருமை... முதல் பதிவைப் பற்றிய அனுபவத்தை கவிதையாகவேஅருமையாக தந்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள் உங்களுக்கும், திருமண நாளைக் கொண்டாடும் உங்கள் தோழிக்கும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோசம், மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் பிரியா!..

      உங்கள் அன்பான வரவும் கருத்துகளும் கண்டு மகிழ்வாயிருக்கிறது.
      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி![/co]

      Delete
  11. தங்களின் உள்ளத்தின் அழகை மனமுருக வெளிக்காட்டி விட்டீர்கள்
    தோழி .கைவேலை மிகவும் அழகாக உள்ளது ! .கவிதையால் மற்றுமொரு மறக்க முடியாத நினைவுப் பரிசினை இங்கே பதிவு செய்துள்ளீர்கள் .தம்பதியினர் இருவருக்கும் என் வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .உங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் தோழி !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்பாளடியாள்.. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் அம்பாளடியாள்!..

      அடடா... உங்கள் அன்பான வரவும் கருத்துகளும் மனதிற்கு மட்டற்ற மகிழ்வாயிருக்கு.

      அன்பு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி![/co]

      Delete
  12. வாழ்க்கைத்துணையுடன் அதிரா இனிதே மகிழ்வுடனும் அனைத்து வள‌ங்களுடனும் வாழ்வாங்கு வாழ மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    அழகிய கைவேலையாலும் அருமையான கவிதையாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தந்த‌ உங்களுக்கும் என் மனம் க‌னிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனோ அக்கா நலம்தானே? பேசி நாளாச்சூ.. மிக்க சந்தோசம், மிக்க நன்றிகள்.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் மனோ அக்கா!..

      அன்பான வரவும் இனிய கருத்துகளும் கண்டு ரொம்பவும் மகிழ்வாயிருக்கு அக்கா...

      வாழ்த்துகளுக்கும் மிக்க மிக்க நன்றி![/co]

      Delete
  13. அழகிய வலையை துவங்கி கொடுத்த தோழியின் திருமண நாள் அன்றே தோழிக்கும் வாழ்த்து கூறி தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டீர்கள். கைவேலை மிகவும் அழகுங்க.
    அதிரா தோழிக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு, மிக்க நன்றி சசிகலா.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சசிகலா!..

      அன்பான வரவும் கருத்துகளும் மிக மிக மகிழ்வாக இருக்கிறது.

      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி![/co]

      Delete
  14. அதிரா தம்பதியர்க்கு எங்கள் இனிய (மணநாள்)வாழ்த்துகளும்!

    வாழ்த்தையும், தொடர்பதிவையும் கவிதையிலேயே அமைத்திட்ட உங்கள் பதிவு அழகு, சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி, மிகவும் நன்றிகள்.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் ஸ்ரீராம்!..

      மீண்டும் உங்கள் வரவு கண்டு மகிழ்வாயிருக்கிறது.
      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ!.[/co]

      Delete
  15. அதிரா தம்பதியருக்கு வாழ்த்துக்கள்! முதல் பதிவு கவிதையும் பதிவர் அறிமுகமும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி சுரேஸ்.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோ சுரேஷ்!..

      உங்கள் வரவும் மகிழ்வைத்தருகிறது.
      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி![/co]

      Delete
  16. அதிரா தம்பதியினர் இன்றுபோல் என்றும்
    சிறப்போடு வாழ மனமார வாழ்த்துகிறேன்
    தங்கள் கவித்திறம் கண்டு பெரும்மகிழ்ச்சி கொண்டேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து மகிழ்ச்சி அளிக்குது ரமணி அண்ணன் மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் ரமணி ஐயா!..

      உங்கள் அன்பான வரவு எனக்கு மனமகிழ்வாயிருக்கின்றது. கருத்துக்கள் என்னை இன்னும் எழுத ஊக்குவிக்கின்றது ஐயா!

      வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!..[/co]

      Delete
  17. அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    அழகாக கவிபாடி,அதனோடு அழகிய கைவேலை க்விலிங்கில் அசத்தியிருக்கிறீங்க‌
    இளமதி. அதிராவின் இணையதள அறிமுகம் இன்றையதினதில் மிகப்பொருத்தமாக பகிர்ந்திருக்கிறீங்க.
    உங்க முத்தான சொத்து முதற்பதிவை அழகாக கவிமாலை தொடுத்து சூட்டியிருக்கிறீங்க.அது என்றும் எப்போதும் வாடாதிருக்க என் வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. செல்லாது செல்லாது:)) கார்ட் ஒன்று போட்டு வாழ்த்தோணும் சொல்லிட்டேன்ன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. ஹையோ இரவிரவா செய்தாலும் செய்திடுவீங்க.. நான் ச்சும்மா சொன்னேன்ன்.. இப்பவே ரொம்ப ஷையா இருக்கிறேன்ன்.. இன்னும் ஷை ஆனால்ல்.. ஃபிரீஸ் ஆகிடுவேனாக்கும்..

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி அம்முலு.. மிகுதிக்கு நன்றி சொல்லி இளமதி வருவா:).

      Delete
    2. [co="DeepPink"]வாங்கோ அம்மு!..

      உங்கள் அன்பான வரவும் ஆழமான ரசனையும் நல்ல சந்தோஷமாக இருக்கு எனக்கு.[/co]

      [co="Red "]உங்களையும் தொடர் பதிவெழுதச் சொன்னேனே பார்க்கேலையோ...;)
      கெதியா எழுதுங்கோ...[/co]

      [co="DeepPink"]வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்மு!..[/co]

      Delete

  18. இருமனச் சேர்க்கை
    இன்பமாய்க் கண்ட
    இனிய நாள் தன்னில்
    இறையாசி பெற்று
    இனிவரும் காலமும்
    இப்படியே மகிழ்வுற
    இதயம் கனிய
    இவ்விடத்தில் வாழ்த்துகிறேன்...!

    நூறாண்டுப் பூவாய்
    வாழ்வாங்கு வாழ்ந்து
    வையகத்தில் இன்புற
    இனிய திருமண நாள்
    நல்வாழ்த்துக்கள் அதிரா
    வாழ்க வளமுடன்...!
    *******************************************************
    அழகிய வாழ்த்தும்,அத்துடன் முதற்பதிவு அனுபவம் ,அறிமுகம் எல்லாம் அருமை சகோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடடா, அழகிய கவிதையோடு வாழ்த்திட்டீங்க சீராளன், மிகவும் சந்தோசம், மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வாங்கோ சீராளன்!
      நல்ல கவிதையோடு அதிராவை வாழ்த்தியிருக்கிறீங்கள்..
      மெத்தச் சந்தோஷம்!

      அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றிகள் அன்புறவே!..[/co]

      Delete
  19. [co= "purple"]ஹையோ நேக்கு ஷை ஷையா வருது:)).. பதிவு முழுக்க என் பெயரே அடிபடுதே.... இவ்ளோ அழகிய கார்ட்டை செய்து.. பென்னாப்பெரிய வாழ்த்து, இப்படி நான் எதிர்பார்க்கவேயில்லை... எதிர்பார்க்காததெல்லாம் நடக்குதே சாமீஈஈஈஈஈஈ:))..

    இளமதிக்கு எப்படி நன்றி சொல்வேன்ன்ன்... முடியல்ல... மியாவும் மியாவும் நன்றி இளமதி.[/co]

    [im]http://www.jaredwyckoff.com/images/CatRoseRing.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. [co="Crimson"]ஆஹா... வாங்கோ வாங்கோ அதிரா! வணக்கம்!..:)

      இண்டைக்கு இங்கால வர நேரமிருக்குமோ எண்டு நினச்சன்.. வந்திட்டீங்க. சந்தோஷம்!

      இதென்ன பெரிசு.. நீங்கள் செய்த உதவிகளுக்கு முன்னால...:)

      எனக்கும் ஒரு சந்தற்பம் கிடைச்சுது. செய்திட்டன்.

      உங்கள் வரவிற்கு மிக்க நன்றி அதிரா.!

      ஆறுதலா வாங்கோ...:)[/co]

      Delete
  20. //முதற் பதிவும் முத்தான சொத்துமென என் முதற்பதிவு அனுபவத்தினை //
    அடடா என்னைப் பற்றி என்னமோ எல்லாம் சொல்லியிருக்கிறீங்க.. நான் அப்படி என்ன செய்தேன்ன்.. என்னிடம் பதிவெழுத ஏதுமில்லை எனச் சொன்ன உங்களுக்கு.. கொஞ்சம் ஊக்கம் கொடுத்தேன்.. ஆனா இப்போ உங்கள் உள்ளிருந்து அருவியாக் கொட்டுதே குயிலிங், கவிதை என... தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதிலயும் நானோ?:) எனக்கு இவ்வாரம் இருகுரு சந்திரயோகமாம்ம்ம்ம்.. வெள்ளி துலாவிலயாம்:) அதுதான் தமிழ் மணத்தில மகுடமும் சூட்டுப்பட்டது:))...

    அச்சச்சோ நன்றி எனச் சொல்வதைவிட என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

    அத்தனை கவிதையும் அழகு இளமதி.. உங்களிடம் ஒளித்திருந்த தமிழ் எல்லாம் இவ் புளொக் ஆரம்பித்தமையால் வெளியே வருகிறது...

    என்னையும் தொடருக்கோ?.. ஹையோ முருகா... தடவி தடவி மேல ஏத்தி:)).. முடிவில கவித்துப் போட்டீங்களே:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..:) ஹா..ஹா..ஹா.. முயற்சிக்கிறேன், இதுபற்றி முன்பே எழுதியாச்சென நினைக்கிறேன் நான்.. அதாவது முன்பு ஒரு தொடர் போனது.. பத்து கேள்விகள் எனும் தலைப்பென நினைகிறேன்ன் அதில அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொன்னதா நினைவு பார்ப்பம்..

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]ம் ம்.. மிக்க நன்றி அதிரா.. உங்கள் ரசனையோ ரசனைதான்... சந்தோசம்...:)

      என்னை ப்ளொக் ஆரம்பிக்க வைச்சு என்ன எழுதுவது எனத் திகைத்த எனக்கு தெரிஞ்சதை எழுதுங்கோ பதியுங்கோ என தொடர் ஊக்கமும் தந்தது நீங்கள்தானே. ஆக உங்கள் பங்கில்லையெனில் நான் வெளியே வந்தே இருக்கமாட்டேன். என் உளமார்ந்த இனிய நன்றிகள் அதிரா...:)

      பரவாயில்லை மீண்டுமொருமுறை முதற் பதிவின் மகிழ்ச்சியை எழுதுங்கோ.. இம்முறை போனமுறை எழுதாம விட்டதையெல்லாம் ஞாபகப்படுத்தி எழுதுங்கோ..;)[/co]

      Delete
  22. இனிய இல்லற இணைவு நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா தம்பதிக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ நேசனும் இங்கயோ... மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி நேசன்..

      இளமதி நல்ல திக்கா, நேசனுக்கு ஒரு பால்கோப்பி குடுங்கோ பிளீஸ்ஸ்:).

      Delete
    2. [co="DeepPink"]வாங்கோநேசன்!..
      மிக்க நன்றி வரவிற்கும் வாழ்த்திற்கும்![/co]

      Delete
  23. aaaaaawwwww:))அழகான ரெட் ரோஸ் அண்ட் வாழ்த்து அட்டை இளமதி ...இனிய அன்பான வாழ்த்துக்கள் மியாவ் அதிரா தமபதியினருக்கு ..
    அழகான வாழ்த்து கவிதை மற்றும் முதல் பதிவின் இன்பம் ...!!
    ....நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா தொடர்கிறேன் இளமதி ..மீண்டும் பள்ளி துவங்குது ..எனக்கு வேலையும் கூட ...இயன்றவரை முயற்சிக்கிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் மியாவும் நன்றி அஞ்சு.

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு “புதிய” பதிவரை அறிமுகம் செய்திருக்கிறா இளமதி.. அதைப் போய்ப் படிப்பம் வாழ்த்துவம் என்றில்லை:))...

      Delete
    2. [co="DeepPink"]வாங்கோ அஞ்சு! உங்கள் வரவும் ரசனையும் மிகுந்த மகிழ்வுதான் எனக்கும்..:).

      இங்கு எனது புதிய அறிமுகப் பதிவரை வாழ்த்தீட்டீங்களோ...:)
      கர்ர்ர் சொல்லிச்சினமே அதுதான் கேட்டேன்..:)

      தொடரை நேரங்கிடைக்கும்போது தொடருங்க.

      வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அஞ்சு![/co]

      Delete
  24. மீண்டும்.. இனிய மணநாள் வாழ்த்துக்கள் அதிரா.

    வாழ்த்திதழ் வேலைப்பாடு... ஒற்றை ரோஜா, மெல்லிய நிறங்கள்... வெகு அருமை இளமதி. வாழ்த்துப்பா வெகு அருமை. முதற்பதிவு அனுபவத்தையும் அழகாகக் கவிதையாக்கிவிட்டீர்கள். :-) நிச்சயம் தொடருவேன். மிக்க நன்றி. கொஞ்சம் கால அவகாசம் மட்டும் வேண்டுகிறேன்.

    தள அறிமுகம்.. மியாவ்வ்வ் :-)

    ReplyDelete
    Replies
    1. மியாவும் நன்றி றீச்சர். உந்த அறிமுகப் பதிவரைத் ஏற்கனவே தெரியுமோ உங்களுக்கு இமா?:)

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம்! வாங்கோ இமா!...:)

      ரசிகைக்கு ஓர் உதாரணம் இமாதான்...:)
      எல்லாவற்றிற்கும் மெத்த நன்றி!..:)))[/co]

      Delete
  25. வணக்கம் இளமதி.

    அதிராவா? யார் அது? யாரோ புதிய பதிவரா? சரி சரி அவருக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்!!

    ஸாரி...... திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!! வாழிய பல்லாண்டு..!!

    ReplyDelete
    Replies
    1. புதுப் புதுப் பெயரோடெல்லாம் வந்து எம்மை வாழ்த்தீனம்ம்:)).. மியாவும் நன்றி..

      Delete
    2. [co="DeepPink"]வாங்கோ மணி...:)
      ஹையோ... ஹையோ..:)))[/co]

      Delete
  26. பிரித்தானிய குயினின் பேத்தி அவர்கள்,

    1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
    2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
    3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
    4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
    5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
    6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
    7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
    8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
    9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
    குழந்தைகள்)
    10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
    11.மாறாத வார்த்தை (வாய்மை)
    12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
    13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
    14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
    15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
    16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

    ஆகிய 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் :))

    ReplyDelete
    Replies
    1. என்ர சிவனேஏஏஏஏஏஏஏஏ.. பிறந்து வளர்ந்ததுக்கு இப்படி ஒரு வாழ்த்தைக் காணவில்லை நான்ன்ன்... இவ்ளோவும் மணியா எழுதியது?..:).. மியாவும் நன்றி மணி.. இதுக்காக ஒரு சின்ன பரிசு ஐஃபோன் 5:)) இது உங்களுக்குத்தான்.. இளமதி காணமுன்:) எடுத்திடுங்கோ:))

      [im]http://www.standardmedia.co.ke/sdemedia/sdeimages/pulse/cat-with-phone.jpg[/im]

      Delete
    2. ஓம் அதிரா... நானும் இப்பிடியொரு வாழ்த்தைக் கண்டதே இல்லை...:)

      மணிக்கு ஐபோனோ... உது சேப்பில்லை... அளாப்பி விளையாட்டு.. அப்ப இங்கை வந்து பாட்டுப்பாடி வாழ்த்தின மற்றவைக்கு....:)))

      Delete
    3. அருமை.. அருமை. மணி உங்கள் கற்பனையும் வாழ்த்தும்!

      உண்மையிலேயே சிறந்தமுறையில் தொகுத்து எழுதிவிட்டிருக்கிறீங்க...

      நன்றி நன்றி! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

      Delete
    4. //மணிக்கு ஐபோனோ... உது சேப்பில்லை... அளாப்பி விளையாட்டு.. அப்ப இங்கை வந்து பாட்டுப்பாடி வாழ்த்தின மற்றவைக்கு....:)))///

      சே..சே.. நீங்க வேற:) அது இப்பதிவை ஒபாமா அங்கிளுக்கு காட்டினனா:) உடனே அவர் ஒரு பிளேன் முட்ட:)) பிரசண்ட் ஏத்தி அனுப்பியிருகிறார்ர்... எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லி:)) வந்திட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இருக்குது:))

      Delete
  27. அப்புறம், இளமதி ஒரு பரம ரகசியம் சொல்கிறேன் கேளுங்க! பூஸாருக்கு புதிதாக ஒரு குழந்தை பிறந்திருக்கு. இப்ப அவவின் பொழுது குழந்தையுடனேயே கழிகிறது. விரைவில் பதிவு போட்டு அறிவிக்கப் போறாவாம்!!

    நான் சொன்னன் எண்டு சொல்லிப் போடாதேங்கோ :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ.. மணி.. வந்தாலும் வந்தீங்க பெரீஈஈஈஈஈய குண்டைக் கொண்டந்து போட்டிட்டு போறிங்க...:)

      இப்ப இங்கை வாறவை அதிராக்கு குழந்தை பிறந்திருக்கோன்னு கேட்கப்போகினம்...
      உதுக்கினி அதிரா என்ன செய்யப் போகிறாவோ...
      ஐயோ .. நான் இங்கை நிக்காம ஓடிடுறன்...
      என்னவோ உங்கபாடு...:))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பதிவு போட்டுச் சொல்லலாம் என இருக்க இப்பூடி முந்திட்டாரே:)) அதுசரி உவருக்கு எப்பூடி இது தெரிய வந்துது??:).

      Delete
    3. மணியெண்டா சும்மாவோ அதிரா?...:)
      அவருக்கு எல்லாமே தெரியும். எங்கெங்கை என்னென்ன நடக்குது நடக்கப் போகுதென்னு...:)

      Delete
    4. //நான் சொன்னன் எண்டு சொல்லிப் போடாதேங்கோ :)))// ஹா..ஹா..ஹா.. இல்ல, அவ “நான்” எண்டு சொல்ல மாட்டா:) “மணி” எண்டுதான் சொல்லுவா:).

      Delete
  28. இப்ப இங்கை வாறவை அதிராக்கு குழந்தை பிறந்திருக்கோன்னு கேட்கப்போகினம்... ///

    அட, கேட்கட்டுமே? குழந்தை பிறப்பது என்ன அதிசயமா? :)) அது சாதாரணம் தானே இளமதி?? :))

    நீங்க பயப்பிடாதேங்கோ :)))

    அதிராவுக்கும் அவரது குழந்தைக்கும் எனது வாழ்த்துக்கள் :))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சாதாரணம் தான்,...:) ஆனா அதுவே ரணமாயிடக்கூடாதெல்லோ அதான்...:)))

      Delete
    2. ஹா..ஹா..ஹா.. :)

      Delete
  29. மியாவும் நன்றி மணி.. இதுக்காக ஒரு சின்ன பரிசு ஐஃபோன் 5:)) //

    ஐந்து என்று போட்டிருக்கீங்க, ஆனா ஒரு ஃபோன் தானே இருக்கு?? மிகுதி 4 ம் எங்கே?? :)))))))))))))

    ReplyDelete
  30. [im]http://2.bp.blogspot.com/--MoKdFgOvZ8/Uh3-teHZguI/AAAAAAAAAxc/WbKCAo05L6c/s1600/cat.jpg[/im]


    இருங்கோ மணி! அதிரா ஓடர் குடுக்கிறா ஓன்லைன்ல...:)))

    ReplyDelete
  31. தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    கவிதையில் தொடர் பதிவு நன்று.
    கைவினையும் அழகு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரி!..
      உங்களின் அனபு வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளேன்.

      உங்கள் அன்பிற்கும் வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்கநன்றி![/co]

      Delete
  32. http://imaasworld.blogspot.co.nz/2013/08/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTBooRGdo9VTHJRTeJR4rwgH_5s38V5sE2cE4dl68VoVeBopU1_HQ[/im]

      Delete
  33. சகோதரி அதிராவுக்கு வாழ்த்துக்கள்...
    தொடர்பதிவு அருமை....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோ குமார்!

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்![/co]

      Delete
  34. அதிரா தம்பதியினருக்கு
    யாழ்பாவாணனின்
    இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.

      Delete
    2. [co="DeepPink"]வணக்கம் சகோதரரே!

      அன்பான உங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்![/co]

      Delete
  35. அதிரா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!
    இனிய கவிதை, கைவினை :)

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் வைத்தியரையா!..

      அன்பான உங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்![/co]

      Delete
  36. வணக்கம்
    சகோதரி

    திருமணத் தம்பதியினருக்கு கைவேலைப்பாடு உள்ள வாழ்த்து மடல் பரிசாக அளித்து அழகான கவிமாலையும் பரிசாக அளித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு அதிரா தம்பதியினருக்கும் எனது வாழ்த்துக்கள் (உங்கள் மனசு பரந்ததுபட்டது)

    இருகரம் கூடி மணப்பந்தல் ஏறி
    மணமாலை சூடும்
    இரு இதயங்களும் ஒன்றாகச் சேர
    என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ரூபன்!..

      அன்பான உங்களின் வரவிற்கும் கவிதை வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகோ![/co]

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. வணக்கம் இளமதி...

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்...
    தாங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
    அதற்கான சுட்டி இதோ....

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_6.html

    நன்றி.

    நட்புடன்

    மனசு சே.குமார்

    ReplyDelete
    Replies
    1. [co="BlueViolet"]வணக்கம் சகோ. குமார்!..

      நல்ல செய்தி சொன்னீர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றது..:)

      என்னையும் அறிமுகப் பதிவர்களில் ஒருவராக இன்றைக்கு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கும் இங்கு வந்து கூறிய உங்களின் அன்பிற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்![/co]

      Delete
  39. அதிரா தம்பதிகளுக்கும் உங்களுக்கும் எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]தங்களின் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      [/co]

      Delete
  40. பதிவுலகில்...
    அன்புத் தோழி அதிரா தம்பதியினருக்கு
    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!


    ஆஹா, நம் அன்புச் சகோதரி [ஸ்வீட் சிக்ஸ்டீன்] திருமணம் ஆனவரா? இது இன்று எனக்கோர் புதிய செய்திதான். மிகவும் சந்தோஷம்.

    அந்த தம்பதியினருக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகளையும் உங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    //அதிராவின் திருமண நாள் வாழ்த்து மடலினைக் க்விலிங் கைவேலையில்... //

    சூப்பரோ சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]தங்களின் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
      [/co]

      Delete
  41. அதிரா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். (இன்று தான் இந்தப் பதிவை படிக்க நேரம் கிடைத்தது..அதனால் தாமதமான வாழ்த்து :) ).

    உங்கள் முதல் பதிவின் மகிழ்ச்சியை அழகாகக் கவிதையில் படைத்து விட்டீர்கள்..அருமை..நன்றி இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]தங்களின் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!
      [/co]

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.