Pages

Oct 15, 2013

வேண்டுகிறேன்!..


கூகிலில் கிடைத்த படம் ஒன்றிற்கு
க்விலிங்க் கைவேலையில் முயன்றேன்...:)
~~~~~~~~~~~~

வேண்டுகிறேன்!..


பனித் துளியாய்ப் பூமியிலே பிறந்திடுவேனோ!..
பசுமையான புல் நுனியில் அமர்ந்திடுவேனோ!..
மனம் மகிழும் மாமலராய்ப் பிறந்திடுவேனோ!..
மாண்பு நிறை  மாதவனடி சேர்ந்திடுவேனோ!..

கருமைநிற முகிலென நான் பிறந்திடுவேனோ!..
களனியெலாம் பயிர் வளரப் பொழிந்திடுவேனோ!..
வயல்களிலே நெல் மணியாய்ப் பிறந்திடுவேனோ!..
வறுமைதனில் வாடும் வயிறு நிறைத்திடுவேனோ!..

வானமதில் வெண் நிலவாய்ப் பிறந்திடுவேனோ!..
வாழும் இருள் வீதியெங்கும் ஒளிதருவேனோ!..
செங்கதிரோன் சூரியனாயப் பிறந்திடுவேனோ!..
சூதுகொள்ளும் வஞ்சகரைச் சுட்டெரிப்பேனோ!..

சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..
~~~~~~~~~~~


அன்பில் தோன்றுதே அமைதி!
அறிவில் தெரியுதே திறமை!
நட்பில் பிறக்குதே உறுதி!
நலத்தில் மலருதே மகிழ்ச்சி!.
********


காற்றாய்க் கலந்திடக் கற்பனை உன்னோடு
ஊற்றாய்ச் சுரக்கும் உணர்வு!
*******


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~


 வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
 ரூபன் அவர்களின் ரூபனின் எழுத்துப் படைப்புக்கள்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.

  ரூபனின் எழுத்துப் படைப்புக்கள்

  http://2008rupan.wordpress.com/

சகோதரர் ரூபன் அவர்கள் ஈழமணித் திருநாட்டினைத் தாயகமாகவும் மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர். தமிழ்மொழிப் பற்று மிக்கவர்.

  இவர் தனது வலைப்பூவில் கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதிப் பதிவிட்டுவருகிறார். 

தீபாவளித் திருநாளையொட்டி அண்மையில் தனது வலைத்தளத்தில் கவிதைப் போட்டி ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தனது வலைப்பூவினில் பதிவிடுவதுடன் சக பதிவர்களிடமும் சென்று கருத்துரையிட்டு அவர்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் நிற்கும் ஒருவர்!.
அன்புமிக்கவராய் அனைவர் மனதிலும் நிறைந்தவர் ரூபன்!…

 இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

ரூபனின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்!...
மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__

111 comments:

  1. சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
    சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
    தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..

    இளையநிலவாய் மனதை பொழிந்த அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

      உங்களின் உடனடி வரவுகண்டு மனம் மகிழ்ந்தேன்!..:)

      அருமையாக ரசித்தமைக்கும், வாழ்தியமைக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி ...[/co]

      Delete
  2. சகோதரர் ரூபன் அவர்கள் வலைப்பதிவைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"] என் அன்பான நன்றி சகோதரி!...[/co]

      Delete
  3. க்விலிங்க் கை வண்ணத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மனதை கவர்ந்தன... நீங்களும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்...

    ரூபனின் கவிதைப் போட்டி பற்றிய அறிவிப்பை உங்களின் தளத்திலும் அறிவித்தமைக்கு நன்றிகள் பல... கருத்திட வருபவர்கள் அவருக்கு ஊக்கம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் தனபாலன்!..

      உங்களின் அன்பான வரவும் ரசனைமிக்க கருத்துக்களையும்கண்டு உவகை மிகக் கொண்டேன்!

      ரூபனின் போட்டியில் கலந்துகொள்ளுமளவிற்கு... நானோ என்று பயமாக இருக்கின்றது சகோ.! முயற்சிக்கின்றேன்... :)

      அன்பு வாழ்திற்கும் நல்ல ஊக்குவிப்புக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ! ...[/co]

      Delete
  4. இனிய வணக்கம் சகோதரி...
    இணையத்தில் கிடைத்த
    நிழற்படத்திற்கு அழகான கைவண்ணம் படைத்தீர்கள்...
    ===
    நீங்கள் வேண்டியதெல்லாம் நிதர்சனமே
    அத்தனை வேண்டுதல்களும் நன்மைகளும்
    நன்மைகளுக்காய் அடிப்படையாகவும் மூலமாகவும்
    இருப்பதால் உங்களுடன் சேர்ந்து நானும் வேண்டுகிறேன்..
    ==
    இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நண்பர் ரூபனின்
    வலைத்தளம் பார்த்தேன்..
    இப்போது கவிதைப் போட்டி கூட வைத்திருக்கிறார்..
    நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் மகேந்திரன்!..

      உங்களின் அன்பான வரவும் யதார்த்தமான கருத்தும் கண்டு
      உவகை கொண்டேன்!

      ரூபனின் தளம் அறிந்துள்ளமையும் மகிழ்வே!..

      அருமையாக ரசித்தமைக்கும், வாழ்தியமைக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ! ...[/co]

      Delete
  5. தாயகத்தில் மீண்டும் பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!..

    - ஒவ்வொருவருக்கும் இப்படியோர் தாகம் ஏற்படவேண்டும்!..

    அன்பில் தோன்றுதே அமைதி..
    அறிவில் தெரியுதே திறமை..
    நட்பில் பிறக்குதே உறுதி..
    நலத்தில் மலருதே மகிழ்ச்சி!..

    - கவித்துவமான வரிகளுக்கும் நண்பர் ரூபனின் வலைதளத்தினை அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள்..

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் துரை செல்வராஜூ!..

      மிக்க மகிழ்வாயிருக்கின்றது ஐயா உங்களின் நுணுக்கமான
      ரசனையைக் காணும்போது...

      அன்பான உங்கள் வரவுக்கும் அருமையான வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!...[/co]

      Delete
  6. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் வைகோ ஐயா!..

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  7. தாங்கள் நினைத்தபடி எல்லாம் வாழ்வமைய வேண்டுகிறேன் தோழி. நச்சுனு நால்வரிக்கவிதை.. க்விளிங் வேலை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சசிகலா!..

      உங்களின் அன்பான வரவுடன் இதமான வார்த்தைகளும்
      அருமையாக ரசிப்பும் மகிழ்வாயுள்ளது தோழி!

      வாழ்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!...[/co]

      Delete
  8. கவிதை அருமை .க்விலிங் கண்டிப்பா நீங்க பொறுமை திலகம் தான் .என்னே ஒரு மெனக்கெடல் .

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் மகிவதனா!..

      ஆஹா... பொறுமை திலகமா... :))
      உண்மைதானுங்க... நாம் செய்யும் எந்த ஒரு
      அழகியல் வேலைக்கும் நிறைந்த பொறுமை அவசியம்!
      இதுவும் பழகும்வரைதான் மிகுந்த பொறுமை தேவை...:)

      உங்களின் அருமையான ரசிக்கும் தன்மைக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  9. சூப்ப்ப்பர் இளமதி. மிக மிக அழகாக,need ஆக‌ க்விலிங் செய்திருக்கிறீங்க.தேர்வு செய்த படமும் அழகானபடம். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கு. உங்க முயற்சி வீண்போகவில்லை. இதைப்போல் இன்னும் செய்வதற்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வாங்கோ அம்மு!..

      உங்க ரசனைக்கு மிக்க நன்றி அம்மு!
      படம் இதுக்கெனத்தேடி எடுத்தேன். ஆனா நான் தேடியது தமிழ்ப் பெண் ஓவியமே..
      சரி கிடைச்சதில செய்து பார்த்திடுவமெனச் செய்தேன்..:)

      அன்பு வாழ்திற்கும் நல்ல ஊக்குவிப்புக்கும்
      என் மனமார்ந்த நன்றி அம்மு!...[/co]

      Delete
  10. "வேண்டுகிறேன்" கவிதை,நான்கு வரிக்கவிதையும் நன்றாக எழுதியிருக்கிறீங்க.
    "காற்றாய்க் கலந்திடக் கற்பனை உன்னோடு
    ஊற்றாய்ச் சுரக்கும் உணர்வு!"
    மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீங்க.
    ரூபனின் வலைத்தள அறிமுகம் சிறப்பு.பதிவர் ரூபனுக்கு என் வாழ்த்துக்கள்.
    நீங்களும் இக்கவிதைப்போட்டியில் பங்குபற்றவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.அதில் பங்குபற்றி பரிசும் பெற இப்பவே வாழ்த்துகின்றேன் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"] உங்கள் கவிதை ரசனைக்கும் மிக்க நன்றி அம்மு..
      ஆனா என்னைப் போட்டி... அது இதுன்னு சும்மா ஏத்தி விடாதேங்கோ...:)
      விழுந்தா எழும்பமாட்டன்...:)))..[/co]

      Delete
  11. அற்புதமான க்விலிங்க் வேலைப்பாடு
    கவிதை மிக மிக அற்புதம்
    குறிப்பாக கடைசி இரண்டு வரிகள்
    அதன் அருமை புரிந்தவர்களுக்குத்தான் புரியும்
    கவிஞர் ரூபனை அருமையாக அறிமுகம்
    செய்தமைக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ரமணி ஐயா!..

      உங்களின் அன்பான வரவும் நல்ல ரசனையும் யதார்த்தமான கருத்தும் கண்டு உவகை கொண்டேன்!

      அன்பு வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா! ...[/co]

      Delete
  12. கை வேலை சிறப்பு.மிக மிக அழகு.
    கவிதை மிக சரளமான மொழி. தங்கள் கட்டுக்குள்! அருமை!.
    ரூபன்- இனிய வாழ்த்து.
    வெள்ளையில் மஞ்சள் எழுத்து கண் வலிக்கிறது வாசிக்க.
    வேறு நிறம் தெரிவு செய்திருந்தால் நன்று. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரி கோவைக்கவி!..

      மிக்க மகிழ்வாயிருக்கின்றது உங்களின் நுணுக்கமான
      ரசனையும்...

      நீங்கள் குறிப்பிட்ட நிறத்தை மாற்றியுள்ளேன்..:)
      அன்பான உங்கள் வரவுக்கும் அருமையான வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!...[/co]

      Delete
  13. கை வேலை சிறப்பு - கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் குமார்!..

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  14. //களனியெலாம் பயிர் வளரப் பொழிந்திடுவேனோ!..//
    //சூதுகொள்ளும் வஞ்சகரைச் சுட்டெரிப்பேனோ!..//
    //தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..//
    அருமை தோழி! அழகிய இலட்சியக் கனவுகள்!

    //காற்றாய்க் கலந்திடக் கற்பனை உன்னோடு
    ஊற்றாய்ச் சுரக்கும் உணர்வு!// அற்புதம் தோழி! க்விளிங் கேட்கவா வேண்டும்..அழகோ அழகு! வாழ்த்துகள் தோழி!

    ரூபன் அவர்களின் தளம் பகிர்விற்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் கிரேஸ்!..

      உங்களின் அன்பான வரவுடன்
      அருமையான ரசிப்பும் மகிழ்வாயுள்ளது தோழி!..

      வாழ்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!...[/co]

      Delete
  15. அடடா குயிலிங்கில் கலக்கிட்டீங்க.... ஒரு குறையும் சொல்ல முடியவில்லை..(தேடினேன் கிடைக்கல்ல ஹா..ஹா..ஹா..).. சூப்பர். கலர் பொருத்தமும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  16. //பனித் துளியாய்ப் பூமியிலே பிறந்திடுவேனோ!..// இம்முறை சுத்தத் தமிழில் வடிக்காமல் புரியும் தமிழில் எழுதியிருக்கிறீங்க.. அதனால எனக்கு எல்லாமே புரியுது.. அழகிய கற்பனை... ஆனா ஒரு டவுட்டு.. இனியும் பிறக்கும் ஆசை இருக்கோ???:)))

    ReplyDelete
  17. ரூபனுக்கு வாழ்த்துக்கள்.. நான் போக நினைத்து நினைத்து இன்னும் போனபாடில்லை... இதனூடாகவென்றாலும் போய்விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம்! வாங்கோ அதிரா!..

      ஆஹா...க்விலிங் மற்றும் கவிதையில் இம்முறை உங்களிடம் நல்ல பெயர் வாங்கியாச்சு..
      மெத்தச் சந்தோஷம் எனக்கு..:)

      மறுபடி பிறக்கும் ஆசையில்லை..
      பிறந்தால் அங்கைதான்.. அதுக்காக மட்டும்தான்...:)

      ம்... சரி.. இனி ரூபனிட்ட அவரின் வைப்பூவுக்கு போவீங்க.. சந்தோசம்...:)

      உங்களின் அருமையான ரசிப்புக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் அதிரா!..[/co]

      Delete
    2. ரூபனின் பக்கத்தில் என்னால் பின்னூட்டமிட முடியவில்லையே.. அது மெயில் ஐடி கொடு பெயர் சொல்லு எண்டெல்லாம் என்னை மிரட்டுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    3. [co="red"]அதிரா...

      ரூபனின் வலைத்தளம் http://2008rupan.wordpress.com/ ல் இருக்கு.!..
      அங்கு நீங்கள் முதன்முதல் கருத்துப் பகிர்வது என்றால்
      அவற்றை நீங்கள் செய்யத்தான் வேண்டும்.
      உங்கள் வலைத்தளத்தினையும் மெயில் ஐடியும் கொடுங்கள்.
      ஒன்றும் தப்பில்லை..:)

      அது வேர்ட் பிரஸ்சில் சாதாரணம்தான்...:)..[/co]

      Delete
  18. முயன்றதே இப்படியா?நன்றாயிருக்கிறது/வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் விமலன்!..

      ஹா.. ஹா.! உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  19. அன்பு சகோதரிக்கு
    வழக்கம் போல் சும்மா க்லிவிங்க் வேலையில் கலக்கியிருக்கிறீர்கள். கொள்ளை அழகு மனதை அப்படியே கவ்விப் பிடிக்கிறது. கவிதை வரிகள் ஒவ்வொன்றும் உங்கள் இயற்கை மற்றும் வாழ்வியல் மீதான உற்றுநோக்கலைப் பிரதிபலிக்கிறது.
    //தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..// தங்களின் தமிழ்ப்பற்றுக்கு சிறப்பு நன்றிகள்.
    --------------------------------------------
    ரூபன் அண்ணாவின் வலைத்தளத்தை சமீப காலமாக அறிவேன். நல்லதொரு அறிமுகம் சகோதரி. ரூபன் அண்ணாவைப் பற்றி திண்டுக்கல் தனபாலன் அய்யா கூறியுள்ளார்கள். நல்ல மனசுக்காரர், பாசக்காரர்க்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் பாண்டியன்!..

      அட... உங்க ரசனை.... அற்புதம்!..:) அதை நான் ரசிக்கின்றேன் சகோ!..:)

      //தங்களின் தமிழ்ப்பற்றுக்கு சிறப்பு நன்றிகள்.//...
      மிக்க நன்றி சகோ.. தமிழ் எம் உயிர் மூச்சல்லவோ!..:)

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  20. க்விலிங்க் வேலைப்பாடு அருமை! சிறப்பான கவிதை! வலைதள அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் சுரேஷ்!..

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  21. வேண்டும் வரங்கள் விரையட்டும் - உன்
    வேதனை எல்லாம் மறையட்டும்
    தாண்டும் காலம் தவறவிடும் - உன்
    தாகம் எல்லாம் கிடைக்கட்டும்...!

    அழகிய க்விலிங் சகோ
    கவிதை அருமையோ அருமை

    அறிமுகப்பதிவருக்கும் வாழ்த்துக்கள் நானும் சென்று பார்த்திருக்கிறேன்

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் அன்புறவே சீராளா!..

      அழகிய கருத்துக் கவியோடு வந்து என்னை மகிழ்விப்பதே உங்களது சிறப்பு! அருமை!

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  22. தங்கள் கவிதை
    கடைசி இரண்டு வரிகள்
    கண்களை குளமாக்கின .

    YOU WILL HAVE TO ENDURE WHAT U CANNOT CURE, AND THAT IS
    TO LEARN TO LIVE WITH IT FOR EVER AND EVER.

    சோகத்தையே சுகமாக நேசிப்பது ஒன்று தான் வழி போன்று தெரிகிறது.

    சுப்பு தாத்தா.

    www.vazhvueri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. http://www.youtube.com/watch?v=s2ZB9LIEorc
      you may listen to this also.
      HAPPY BIRTHDAY
      SUBBU THATHA.

      Delete
    2. [co="Purple"]வணக்கம் ஐயா!..
      உங்கள் அன்பும் ஆதரவும் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்...
      பேச வார்த்தைகள் இல்லை ஐயா!..

      இங்கும் என் கவிதையை மிக அருமையாகப் பாடலாக்கி யூடியூப்பில் பதிந்து பிறந்த நாள் வாழ்த்துடன் எனக்குத் தந்துள்ளீர்கள்!
      மிக்க மகிழ்ச்சி ஐயா!..
      இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்!..

      வழமைபோல் உங்கள் பாடலை இங்கே பதிவேற்றியுள்ளேன்!

      தங்களின் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!.[/co]

      Delete
  23. அழகான க்வில்லிங், தேவதையின் உடையும் சிறகுகளும் மிக அழகா இருக்கு!

    கவிதைகள் அனைத்தும் அருமை..உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!

    (இந்த முறையும் இரண்டு வரி கருத்துத்தானா என எண்ண வேண்டாம், ஐ-பேட் தமிழ் எழுத்துகளை எக்ஸ்பெரிமென்ட் பண்ணிகிட்டிருக்கேன், டைப் செய்ய நேரமெடுக்கிறது! ;))

    ReplyDelete
  24. ரூபன் அவர்களின் வலைப்பூ அஅறிமுகத்துக்கு நன்றி!

    மறுபடியும் லேப்டாப்பிலிருந்து வரேன்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் மஹி!..

      உங்களின் அன்பான வரவே மகிழ்வுதான் மஹி எனக்கு...:)
      ரசனையும் வாழ்த்துங்கூட என்னை மேலும் ஊக்குவிக்கின்றது...
      மிக்க நன்றி!..

      ஐபாட்டில் தமிழில் எழுத ’செல்லினம்’ டவுண்லோட் செஞ்சு
      அதில எழுதலாமே..தெரியும்தானே...

      ரூபனுக்கு வாழ்த்துக்கும் நன்றி!..:)[/co]

      Delete
  25. [im]http://1.bp.blogspot.com/-QRs96oC6VgE/Ul2Y2U_qYyI/AAAAAAAAFto/6dsAKkqWgFU/s400/123.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]ஹையோ... கடவுளே... இதென்ன இது அதிரா...:)
      இங்கையுமா....:O
      இப்படி இங்கை பப்ளிக்கில போட்டு உடைச்சு....:0

      மிக்க மிக்க நன்றி அதிரா!
      உளமார்ந்த உங்கள் அன்பிற்கு என்ன சொல்ல...

      அழகிய ரோஜாப் பூ.. வாழ்த்து மடல்!
      எனக்குப் பிடித்த மென்மையான நிறமுடன்...

      உங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த என் அன்பு நன்றிகள் அதிரா !!!.[/co]

      Delete
  26. இளையநிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்§

    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]வணக்கம் நேசன்..
      அன்பான உங்கள் வாழ்த்துகண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

      உங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த என் அன்பு நன்றிகள் நேசன் !!!.[/co]

      Delete
  27. ரூபனின் வலைக்கு வாழ்த்துக்கள்§

    ReplyDelete
  28. ரூபன் வலையுலகில் பலருக்கு பின்னூட்டம் இட்டு இன்னும் தன்னை அறிமுகம் செய்யவேண்டும் !!வாழ்த்தி வணங்குகின்றேன் !ம்ம்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]மிக்க நன்றி நேசன்!..[/co]

      Delete
  29. க்விலிங்க் கைவேலையில் தேவதை அழகு.
    .
    சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
    சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
    தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..//

    நெகிழ வைத்த கவிதை வரிகள்.

    அன்பில் தோன்றுதே அமைதி!
    அறிவில் தெரியுதே திறமை!
    நட்பில் பிறக்குதே உறுதி!
    நலத்தில் மலருதே மகிழ்ச்சி!.//
    நலத்தில் மலரும் மகிழ்ச்சி அருமை.
    கவிதைகள் எல்லாம் அருமை.
    ரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இளமதிக்கு பிறந்த நாளா?
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.


    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]வணக்கம் சகோதரி கோமதி அரசு!..

      உங்கள் அன்பு வருகையும் அருமையான ரசனைமிக்க கருத்துக்களும் மகிழ்வைத்தருகிறது.

      அன்பான உங்கள் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி!..[/co]

      Delete
  30. தோழி இளமதி,

    க்விலிங்கில் எப்படிங்க இப்படியெல்லாம் அசத்துறீங்க.

    கவிதை வடிவிலுள்ள உங்கள் வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகள். அறிமுகமான பதிவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சித்ராசுந்தர்!..

      ஹா ஹா.. க்விலிங் பிடிச்சிருக்கா..:)).

      நல்ல ரசனைதானுங்க.. நன்றி.:)

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் தோழி!..[/co]

      Delete
  31. க்விலிங் வேலை நன்றாக இருக்கிறது.

    'வேண்டுகிறேன்' - அருமை.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் ஸ்ரீராம்!..

      வாங்க.. என்ன ரொம்ப நாளா காணோம்னு நினைச்சேன்
      வந்திட்டீங்க சகோ!..:)

      உங்களின் அன்பான வரவுக்கும் ரசனைக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  32. Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ஐயா கரந்தை ஜெயக்குமார்!..

      உங்களின் அன்பான வரவும் எனக்கு ஆச்சரியமே!..
      வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா!..[/co]

      Delete
  33. கை வேலைப்பாடு மிகவும் அருமை.... கவிதையின் கடைசி வரிகள் கணக்க வைத்தன....

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் பிரியா!..

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  34. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]அன்பான உங்கள் வாழ்த்தினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அம்மு!..
      என் அன்பு நன்றிகள்!!.[/co]

      Delete
  35. வணக்கம்.
    இளையநிலா(சகோதரி)

    அன்பில் தோன்றுதே அமைதி!
    அறிவில் தெரியுதே திறமை!
    நட்பில் பிறக்குதே உறுதி!
    நலத்தில் மலருதே மகிழ்ச்சி!.

    தங்களின் ஒரு படைப்பு மட்டுமல்ல உங்களின் அத்தனைபதிவுகளும் என்னைப் போன்ற வாசக நெஞ்சங்களுக்கு மணித்துளிகலாக அமையப் பெற்றுள்ளது கவிதையின் வரிகளும் படங்களும் வார்ணிக்கமுடியாது (அனிர் வசனியம்)என்று பொருள்படும் இப்படியாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.... முதலில் வாழ்த்துக்கள்.
    ------------------------------------------------------------------------------------------------------------------------என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் தளத்தில் என்னுடைய முகவரியும் அறிமுகம் செய்து.என்னுடைய கவிதைப்போட்டி சம்மந்தம்மான பதிவையும் விளம்பரப்படுத்தியுள்ளீர்கள் அதற்கும் எனது நன்றிகள்...அத்தோடு பல இணையத்தள உறவுகளின் வாழ்த்துமடல்கள்.... இன் நெஞ்சுக்கு பூமழை பொழிகிறது அவர்களின் விரியம் மிக்க வைரவரிகள் என்னை என்னும் பல படைப்புக்கள் உதிக்க ஒரு உந்து சக்தியாக அமையும் என்பது எனது உறுதி...... .இத்தனை வாழ்துமடலுக்கு நீங்களும் ஒரு காரணம்....

    -----------------------------------------------------------------------------------------------------------------------
    விசேடமாக திண்டுக்கல் தனபால்(அண்ணா) எனக்கு பலவகையில் பல புத்திமதிகளை சொல்லுவார்..... எனக்கு அண்ணா அக்கா என்றவுகள் இல்லை என்னுடன் உடன் பிறவா உறவு என்றாலும் என்னுடைய உடன் பிறப்பு அண்ணா போல மதிக்கிறேன்......இந்த சந்தர்பத்தில் இக்கருத்தை பதிவிடுகிறேன் உங்கள் தளத்தில்

    நன்றி!...........நன்றி!...................நன்றி!.............நன்றி!.........நன்றி!...........

    முதலில் வந்து கருத்து சொல்லவேண்டியது நான்.... தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ரூபன்!.. வாங்கோ!...

      [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSNOnMZO-vPSxjvIa_NbMoxtX_Y08QIMFrE76TdDu2CbDw-8ScNHw[/im]

      உங்களின் அன்பான வரவுகண்டு
      மிகமிக உவகை கொண்டேன்!

      இங்கு உங்கள் ரசனையும் வாழ்த்தும் எனக்கு
      மிகப் பெரிய ஊக்குவிப்பாக இருக்கிறது!
      மகிழ்ச்சி சகோ!...

      இங்கு நான் வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதென்பதுடன்
      தெரியாதவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்!

      நாம் மட்டும் சாதிக்கின்றோம் என்றில்லாமல் சக பதிவர்களையும் எம்மால் இயன்றவரை ஊக்குவித்தல் நல்லதென்னும் நோக்கமே...
      அவ்வகையில்...

      இங்கு உங்களை இம்முறை
      பதிவுடன் பகிருரும் பதிவராக்கினேன்...:)

      அனைவரையும் மதிக்கும் உங்களின் இந்தப் பண்பு போற்றுதலுக்கு உரியது சகோ!..

      உங்கள் வருகைக்கும் மகிழ்வான கருத்துகளுக்கும்
      வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த இனிய நன்றிகள் ருபன்!..[/co]

      Delete
  36. வணக்கம் தோழி !
    எங்கு பிறப்பேன் எப்படிப் பிறப்பேன்
    என்றளகாய் தொடுத்த வினா
    உள்ளத்தில் புகுந்து பேருவகை கொள்ள வைத்து
    வாழ்த்துக்கள் தோழி .எங்கு பிறப்பினும்
    எப்படிப் பிறப்பினும் இன்பம் என்ற சொல்
    இணைந்தே இருக்கட்டும் .

    நடப்பைக் கூட நன் முறையாகக் கௌரவித்த விதம்
    அருமை ! ரூபனின் தளத்தை நிட்சயம் மாமும்
    கண்டு மகிழ்வோம் .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் அன்பு அம்பாளடியாள்!..

      எம்பிறப்பை இறைவன் எண்ணியே படைத்தனன்
      நல்பிறப்பாய் இன்னும் நலம்பல செய்திடவே
      வல்லமையொடு வரமாய்த் தர வேண்டினேன்
      நல்லவை கிடைக்கச் சேருமே இன்பமே..!.

      அன்பு வரவுக்கும் இனிய கருத்துக் கவி வாழ்த்துக்கும்
      மனமார்ந்த நன்றி தோழி!...[/co]

      Delete
  37. கலைக் குவியலாய் இருக்கிறீர்கள். கைவேலையும் கவிதையும் மிக அழகு.
    வேண்டுதல்கள் நிறைவேற இறைவன் அருளட்டும். சுப்பு தாத்தாவின் இசையிலும் குரலிலும் கேட்டும் மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  38. ரூபன் அவர்களின் வலைப்பூ அறிமுகத்திற்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் கவிநயா!..

      உங்களின் அன்பான வரவும்
      அருமையான ரசிகத்தன்மையும் கண்டு மகிழ்ச்சி!..

      உளம் நிறைந்த வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!..:)[/co]

      Delete
  39. க்வில்லிங் தேவதை கொள்ளை அழகு !
    எல்லாமாக பிறந்து இன்புற்று பயன் தர
    வாழ்த்துக்கள். கள்ளமில்லா வெள்ளை மனம்
    அழகாக வெளிப்படுகிறது கவியில்.
    அறிமுகம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ஸ்ரவாணி!..

      ஆஹா.. க்விலிங் உங்களுக்கும் பிடிச்சிருக்கா..:)).

      நல்ல ரசிகைதான் நீங்களும்..கவிதையில் எழுதியபடி
      எல்லாம் கிடைக்க வாழ்த்துகிறீர்கள்.. நன்றி.:)
      கள்ளமில்லா வெள்ளை மனமா... அப்ப வெளிலை எடுத்து
      ஒருதடவை நல்லாக் கழுவிக் காயப் போடணும்..:))

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் தோழி!..[/co]

      Delete
  40. Happy Birthday Ilamathy! Wish you many more happy returns! :)

    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]வாழ்த்துக்கு மிக்க நன்றி மஹி!..[/co]

      Delete

  41. வணக்கம்!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இன்பம்
    கனிய மகிழ்க கமழ்ந்து!

    எல்லா வளமும் இளமதி பெற்றிட
    வல்லோன் தருக வரம்!

    வண்ணத் தமிழ்பாடி வாழ்வு சிறந்திடக்
    கண்ணன் கழலிணை காண்!

    கற்றோர் களிப்புறும் கன்னல் கவிபாடப்
    உற்றாய் தமிழின் உறவு!

    கலையுலகு வாழ்த்திடக் கைவினை தீட்டி
    வலையுலகு வாழ்த்திட வாழ்!

    நலந்தரும் நட்பினை நாளும் நயந்து
    வளந்தரும் வாழ்வில் மகிழ்!

    மின்னும் வலைப்பதிவைப் பின்னும் திறன்காண்க!
    மன்னும் புகழாம் மலை!

    என்றும் இனிமை இருந்து தழைத்திட
    என்றன் கவிபோல் எழுது!

    பல்லாண்டு பாடிப் பசுந்தமிழில் வாழ்த்தினேன்
    சொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    என்னுயிர்த் தோழி இளமதியே! எந்நாளும்
    இன்றமிழ்ச் சீரினை ஏத்து

    16.10.2013

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]ஐயா வணக்கம்!

      குறட்பாக்கள் பத்து குழந்தை எனக்கு
      அறப்பாக்கள் இதுவெனத் தந்தீர்! - மறக்காது
      வாழ்வில் மகிழ்வு வேறுண்டோ! உம்தயவால்
      தாழ்வில்லை தமிழுக்கு என்பேன்!.

      மனதில் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை ஐயா!

      உங்கள் வரவும் குறட்பா வாழ்த்தும்
      எனக்குக் கிடைத்த பெரும் பரிசு!
      உவக்கின்றேன்.

      தங்கள் தயவால் வளர்த்திடுவேன் என்னில் தமிழை மேலும்!

      உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
      உளப்பூர்வமான என் நன்றிகள் ஐயா!..[/co]

      Delete
  42. இளமதியே பெயராகி
    இன்முகமே மொழியாகி
    இணையில்லா அன்பாகி
    இணையத்திலே இணைந்திருக்கும்
    எங்கள் அன்புத் தோழிக்கு வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்.
    எண்ணிய எல்லாம் பெற்று இன்பமாய் வாழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் தென்றல் சசிகலா!..

      கலக்கிட்டீங்க வாழ்த்துக் கவியில் நீங்களும்..:)

      அட.. எனக்கொன்னும் ஔவையார் வயசாகலை இன்னும்..
      என்ன... உங்கள விட இரண்டு வயசுதான் அதிகம்...:))

      உங்களின் அன்பான வரவுக்கும் (வாழ்த்திற்கும்) வேண்டுதலுக்கும் மிக்க நன்றியும்,
      உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களும்!..[/co]

      Delete
  43. நீ பிறந்த நாள் நாள் என்று
    நினைவுக்குள் வரவில்லை
    வான்மகளே இளமதியே
    மறந்துவிட்டேன் அறியாமல்..!

    புகழ்மாலை சூடும்
    புலவர்கள் நடுவினிலே
    பாமாலை நான் எழுத
    பண்தேடி அலைகின்றேன் ..!

    கவியோடு கைவினையும்
    கனிவான நற்பண்பும்
    கலந்து தரும் வலைப்பூவில்
    கண்டுகொண்டேன் இந்நாளை...!

    மங்காத புகழ்கொண்டு
    மன்னுலகம் உள்ளவரை
    மகிழ்வாய் நெகிழ்வாய்
    மனமுவந்து வாழ்த்துகிறேன்..!

    எந்நாளும் உன்னுள்ளம்
    ஏகாந்தம் இன்றிருக்க
    இறையன்பு தழுவட்டும்
    என்னுறவே உன்னோடு...!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. [co="Purple"]அமிழ்தாய்த் தந்தாய் ஒருவாழ்த்து!
      தமிழ்த்தாய் தந்த தவப்புதல்வா! நீரில்
      குமிழோ இல்லை எம்நட்பு! போற்றும்
      சிமிழ்தான் மகிழ்ந்தேன்! மிகநன்றி!

      வாழ்த்துக்கும் இனிய கவிக்கும் மிக்க நன்றி சீராளன்!..[/co]

      Delete
  44. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    "வானமதில் வெண் நிலவாய்ப் பிறந்திடுவேனோ!..
    வாழும் இருள் வீதியெங்கும் ஒளிதருவேனோ!..
    செங்கதிரோன் சூரியனாயப் பிறந்திடுவேனோ!..
    சூதுகொள்ளும் வஞ்சகரைச் சுட்டெரிப்பேனோ!"

    அழகிய கவிதை வரிகள் அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் ஐயா வியபதி!..

      உங்களின் அன்பான வரவுக்கும் அழகிய ரசனைக்கும்
      இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  45. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  46. தங்களின் கருத்துரைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் தனபாலன்!..

      ஆச்சரியமே!...
      வலைச்சர வாழ்த்துக்கும் அறிவித்தலுக்கும் மிக்க நன்றி சகோ!!..
      சென்று பார்த்து கருத்துப் பகிர்ந்துள்ளேன்!..

      உங்கள் தளமும் வந்து பார்த்தேன்!
      இன்பம் எங்கே என்று கண்டுகொண்டேன்..:)
      அருமை!..[/co]

      Delete
  47. காலம் தாழ்ந்த போதும்
    பிறந்த நாள் வாழ்த்து
    சொல்ல வந்திருக்கும் தோழனின்
    வாழ்த்துகளை ஏற்றுக் கொள்க!!

    ReplyDelete
  48. க்விலிங்க் என்றால் என்ன.. கொஞ்சம் எனக்கும் புரியும்படி சொல்லவும்..

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் ஆ. வி!..:)

      அன்புகொண்ட மனமிருந்தால் எந்நாளும் திருநாளே!...
      வாழ்த்துவதும் வாழ்த்துப் பெறுவதற்கும் அப்படியேதான் சகோ...:)

      மிக்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு!..

      க்விலிங்க் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்
      வண்ணத்தாள்களில் 3 மில்லிமீற்றர் பருமனில் வேண்டிய நீளத்திற்கு நாடாக்களாக வெட்டி quilling tool இருக்கிறது அதனால் சுருட்டி - roll - அதனை பலவடிவங்களில் அழுத்தி வேண்டிய வடிவங்களாக ஒட்டி எடுப்பது...
      இதைப் பற்றி விரிவாக விளக்கப் படத்துடன் இங்கு விரைவில் தருகிறேன்.

      க்விலிங்கில் உங்களின் ஆர்வத்தினைக்கண்டும் மகிழ்வுறுகிறேன்!

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  49. உள்ளம் கனிந்த ஏக்கம்

    ReplyDelete
  50. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் கவியாழி!..

      உங்களின் அன்பான வரவுக்கும் நல்ல கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  51. க்விலிங் அற்புதமாக வந்திருக்கிறது இளமதி.
    'வேண்டுகிறேன்' ஆஹா! ;) நிச்சயம் அனைத்துமாக வரம் கிடைக்கும்.
    குட்டிக் கவிதைகள் இரண்டும் படங்களும் அழகு.

    ரூபனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம்! வாங்கோ ...இமா!..

      ம் ம். வரம் கேட்டிருக்கிறேன்.. தருவது அவன் சித்தம்!...:)

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  52. வலிக்கும் வரிகள் ... கனக்கிறது இதயம்..
    // தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..//

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் மது கஸ்தூரி ரெங்கன்!..

      உங்களின் முதல் வருகை இங்கு வாருங்கள்! .. மகிழ்ச்சி!

      உங்களின் அன்பான வரவுக்கும் உணர்வுமிகு ரசனைக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  53. எம் உள்ளத்தில்தான் எத்தனை எத்தனை ஆசைகள். சின்னவை பெரியவை எனப் பேதமில்லாமல். விதவிதமாய் சொல்லி ஆசை மூட்டுகிறீர்கள்.
    ".. சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
    சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!...."
    மற்றொரு எதிர்பாராத ஆச்சரியம். நான் வேண்டாமை பற்றி எனது 'மறந்து போகாத சில' புளக்கில் எழுதிய அதே 15ம் திகதி உங்கள் "வேண்டுதல்" பதிவும் வந்திருக்கிறது
    http://suvaithacinema.blogspot.com/2013/10/blog-post_15.html
    ரூபன் எனது வலைப்பக்க நண்பர். அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் வைத்தியர் ஐயா!..

      ஆமாம் ஐயா.. ஆசைகள்தான் எல்லாம்...
      அதனால்தான் தேடலுடன் வாழ்வை நகர்த்துகின்றோம்..

      உங்கள் அழகான ரசனை என்னை மேலும் உயர்த்துகின்றது.. மகிழ்ச்சி!
      நீங்கள் குறிப்பிட்ட பதிவை வந்து பார்க்கின்றேன்.
      ஆச்சரியம்தான் இரண்டு பதிவுகளுக்கும் ஒரே நேரத்தில்
      ஒரே தலைப்பும்..:)
      இணைப்புக்கு நன்றி ஐயா!

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள்!..[/co]

      Delete
  54. ////தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..///


    தாயகத்தில் மட்டுமல்ல.. தரணியில் எங்கிருந்தாலும் தங்களைப் போன்றவர்களின் மூலம் தமிழன்னை வளர்ந்துகொண்டேதான் உள்ளாள்....

    கவிதையில் எத்தனை எத்தனை வேண்டுதல்கள்... உள்ளக்கிடக்கையை உயர் தனிச் செம்மொழியில் எளிமையாய் எடுத்துரைக்க இக்கவிதை ஒன்றே போதுமே..படிக்கப் படிக்கப் பரவசம்.. !!!

    வலைப்பதிவர் ரூபனைப் பற்றிய அறிமுகம் நன்று. பெரும்பாலானவர்களுக்கு ரூபனும், அவர்தம் வலைப்பூவும் அறிமுகம்தான்.

    கூகிலில் கிடைத்தப் படத்தில் தங்களது கைவண்ணத்தையும் கூட்டி மெருகேற்றிருப்பது நன்று.

    கவிதையினூடே, அதற்குப் பொருத்தமான படங்களிட்டிருப்பதும் கண்களைக் கவர்ந்தன. தங்களது எழுத்துகளும், எழுத்துக்களினூடே ஒட்டி உறவாடும் உணர்வுகளும் உணர முடிந்தது.

    பகிரவுக்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்.. !!!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் தங்கம் பழனி!..

      வாருங்கள்!.. இங்கு உங்களின் முதல் வருகை!.. மிக்க மகிழ்ச்சி சகோ!

      அடடா.. எத்துனை அழகாக ரசித்திருக்கின்றீர்கள் அத்தனையையும்..
      உண்மையில் உங்கள் ரசனைகண்டு நானே இப்படியெல்லாமா என் வலைப்பதிவு பார்ப்பவர்களுக்கு மகிழ்வைத்தருகிறது என வியக்கின்றேன்..!

      மட்டற்ற மகிழ்ச்சியும் இன்னும் இப்படி மேலும்
      பதிவிட வேண்டும் என்னும் உத்வேகமும் வருகிறது!

      என் கவிதைகளுக்கு தங்களின் ரசனையும் கருத்தும்
      நல்ல உரம்! நன்றி!...

      உங்களின் அன்பான வரவுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  55. படங்களை ரசிப்பதா அல்லது கவிதையை ரசிப்பதா..இன்னும் குழப்பத்திலிருந்து மீளவில்லை..சென்றவாரம்தான் ரூபனின் வலைப்பூவில் இணைந்தேன்..

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் சகோதரர் கலியப்பெருமாள்!..

      வாருங்கள்... ஆஹா... இதென்ன குழப்பம்...:)
      அவ்வளவு கொடுமையாகவா இருக்கிறது இங்கு...:))

      நல்ல ரசனைதான்! ரசித்தேன் நானும்...

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  56. //அன்பில் தோன்றுதே அமைதி!
    அறிவில் தெரியுதே திறமை!
    நட்பில் பிறக்குதே உறுதி!
    நலத்தில் மலருதே மகிழ்ச்சி!.// படங்களைப் போல் கவிதையிலும் அழகு மிளிர்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் கலாகுமரன்!..
      வாருங்கள்!... உங்களின் முதல் வருகை இங்கு!.. மகிழ்ச்சி!

      அழகியலில் உங்கள் ரசனையும் அருமை!..

      உங்களின் அன்பான வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் சகோ!..[/co]

      Delete
  57. ஓவியங்கள் அற்புதம். அதுவும் தண்ணீரிடையே நின்று கொண்டு, பறவையைத் தாவிப்பிடிக்க முயலும் அந்தப்பெண்ணின் முக பாவமும் சுற்றியிருக்கும் பசுமையின் வண்ணச்சேர்க்கையும் மிக மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. [co="DeepPink"]வணக்கம் மனோ அக்கா!..

      வாங்கோ!... ஊருக்குப் போய் வந்தாச்சோ!...:)

      உங்களின் ரசனை என் தேடல்களைத் தூண்டுகிறது!...

      உங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      என் மனமார்ந்த நன்றிகள் அக்கா!..[/co]

      Delete
  58. வணக்கம் தோழி

    இனிமையான எண்ணங்கள்
    கொண்டு மீட்டிய இக்கவிதை
    என் இதயத்தில் இடம் பிடித்த
    இனிய கவிதை உம் எண்ணம்
    ஈடேற துன்பமும் விரைந்தாற
    வேண்டுகிறேன் வேலவனை....!

    சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
    சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
    தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
    தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ !!..

    என்னை உருக்கியது, உலுக்கியது இதே எண்ணங்கள் என்னுள்ளும் இருக்கிறதே....! உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது இளமதி.

    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்....!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!

    கருத்திட வந்தபோது ரொம்ப கெடுபிடியாக இருந்தது( போலீஸ்) அதனால் திரும்பி விட்டேன்.இப்பொழுது யாரும் இல்லை எனவே கருத்திட வசதியாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இனிய இனியா..:)

      அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நல்ல ரசனைக்கும்
      மனமார்ந்த நன்றி தோழி!

      இடையில் சிறுது உடல் நலக் குறை.. அதனால் இங்கு நன்றிகூறத் தாமதமாகிவிட்டேன்...

      உங்கள் உள்ளார்ந்த உண்மை உணர்வுக் கருத்துகளும் கவியும் கண்டு மிக நெகிழ்ந்தேன்.
      மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.