Pages

Nov 15, 2013

விரைந்திடுக!...

கூகிளில் கண்ட ஓவியம் என் க்விலிங் கைவேலையில்!.

இது என்னவென்று தெரிகிறதா?...

தொடர்புபடுத்தி இதற்கென எழுதிய குறள் தருகிறேன்
கண்டுபிடியுங்கள்!..:)

கூட்டினுள் பூட்டிவிட்டோ குள்ளநரி கும்மாளம்
காட்டிடுமே தன்பலங் கோர்த்து!
~~~O~~~

விரைந்திடுக!...


தேடி அலைந்தேன் தினந்தினமே
தேனே! மலரே! கண்டதுண்டோ?
வாடி நிதமும் வலிகொண்டே
வாழ்ந்த தேசம் எண்ணுகிறேன் !
கூடி இருந்த சுற்றமெங்கே?
கூறக் கேட்போர் யாருமில்லை!
பேடி அங்கே கொல்லுவதைப்
பேச்சு இழந்தே பார்ப்பதுவோ?

கூவிக் களிக்கும் கோகிலமே
கூச்சல் ஏதும் கேட்கிறதா?
தீவில் நடக்கும் கொடுமைகளைத்
தீர்க உரக்கக் கூவிடுங்கள்!
மேவி அவனை வென்றிட்டே
மேன்மை யோடு வாழ்ந்திடலாம்
தாவிக் குதிக்கும் கொடியவனைத்
தாக்கி நாட்டை மீட்டிடுவோம்!

ஆவி சோர்ந்து போகுமுன்னே
ஆற்றும் கடமை மிகவுண்டு!
தேவி அன்னை துணைஉண்டு
தேடிப் பகைவன் தலைகொய்வோம்!
பாவி அவனை அழித்தால்தான்
பழியும் நீங்கி நாம்வாழ்வோம்!
கூவி அழைத்தேன் உறவுகளே
கூடி ஒன்றாய் விரைந்திடுக!
~~~~~~~

உதிக்கின்ற எண்ணங்கள் உள்ளத்துள் ஓங்க
பதிக்கின்ற பாக்களைப் பார்!
~~~O~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
  விமலன் அவர்களின் சிட்டுக்குருவி
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.


சகோதரர் விமலன் தனது வலைப்பூவில் சிறுகதை, கவிதை, சொற்சித்திரம், சமூகம்… என இன்னும் பல எழுத்தாக்கங்களைப் பதிந்துவரும் ஒரு ஆர்வமிக்க பதிவாளர்.
ஒரு நாளைக்கு ஒரு பதிவென்றில்லாமல் சிலசமயங்களில் இரண்டு மூன்று பதிவுகளைக்கூட தனது வலையிற் பதியும் ஒரு வேகமான பதிவர் விமலன் ஆவார்.

இவரின் சிறுகதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு குறும்படம் பார்க்கும் உணர்வே தோன்றும். காட்சிகளை எழுத்தில் வடிக்கும் விதமே அலாதியானது. அதிலும் இயற்கைக் காட்சிகளை அத்தனை விருப்போடு மிக மிக அழகாக வர்ணித்து அதிலேயே ஒன்றித்து எழுதுவார்.

சகோதரர் தரும் கவிதைகளும் கருப்பொருள் சிறப்பாக இருக்கும்.

விமலன் அவர்கள் வலைச்சர ஆசிரியராகவும் கடந்த மாதங்களில் இருந்திருக்கின்றார்.

தன் பதிவுகளுக்கு தகுந்த அழகிய படங்களையும், அனிமேசன் காட்சிகளையும் சேர்த்துப் பதிவிடுவதில் ஆர்வமிக்கவர்.

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் இயல்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே விமலன் அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

விமலன் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
_()_

82 comments:

 1. சிங்கத்தின் கிவிலிங் வேலைப்பாடு சிறப்பு.தவிர என்னை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் சிலிர்க்கச்செய்வதாக.அதற்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக நான்/நன்றி.வணக்கம்/

  ReplyDelete
  Replies
  1. [im]http://www.wallpaperup.com/uploads/wallpapers/2013/05/06/82742//thumb_58b75dffaa661b98a0dd2240579e8ef0.jpg[/im]

   [co="BlueViolet"]வணக்கம்!.. நல்வரவு விமலன்!..

   பதிவேற்றியதும் முதல் வரவும்... உங்களினதாகக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

   உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

   க்விலிங்க் விடையைப் பார்ப்போம். காத்திருங்கள்.
   நான் தேறுகிறேனா
   இல்லை உங்கள் விடை சரியாகிறதா பார்ப்போம்..

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோ!...[/co]

   Delete
 2. இதைத்தான்!....இதைத்தான் முன்பே கேட்டேன் முகநூலில் தங்கள் வலை இணைப்பையும் போடும்படி.
  இந்த முறை அது நடந்துள்ளது. அது தான். பாருங்களேன் நானே 2 தாக வந்துள்ளேன்.
  விமலனுக்கு இனிய வாழ்த்து.
  உதித்த எண்ணத்தில் பதித்த பாவிற்கு இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரி!..

   உங்களின் அன்புக்கு நானடிமை...:)
   வரவுடன் அருமையான நல்ல
   கருத்துகளையும் கண்டு மனம் மிகவே மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோதரி!...[/co]

   Delete
 3. சகோதரிக்கு வணக்கம்.
  புலிமுகம் வரைந்து (புடலங்காயை அல்லது இலவம்பஞ்சு காயை இரண்டாக பிளந்து வைத்து உருவம் கோர்த்தது போல தெரிகிறது என்னவென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்),
  கவிதையிலும் புலிமுகம் காட்டி சீறி இருப்பதைப் பார்க்கும் போது, தொப்புள்கொடி உறவுகளின் இன்னல்களைக் கண்டு பொங்கும் தமிழனின் உணர்வு இன்னும் மறித்து போகவில்லை என்பதைக் காணும் போது அகம் மலர்ந்து தங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
  சகோதரர் விமலன் அவர்களின் வலைத்தள அறிமுகம் நன்று. அவ்ரது தளம் நன்கு பரிச்சயம். வாழ்த்துக்கள் சகோதரருக்கு.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் பாண்டியன்!

   உங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!

   எனது க்விலிங் கைவேலையைப் புலிமுகம் எனக்கூறியது மிகச் சரியே...:)
   எனக்கு ஐயோ இது புலிமுகம்தானா என்று குழப்பமாகிவிட்டது. ஒருவேளை ரொம்பவே அதனோடு ஒன்றிச் செய்தும் ஏதாகிலும் சரியில்லாமல் இருந்திடுமோ எனச் சந்தேகம்... எனக்கே இதனைப் பதிவேற்ற முற்படுகையில் "யாராவது இது புலி முகம்தானா" என்று கேட்பார்களோ என ஒரு பயம் உள்ளூர ஏற்பட்டது.

   அதனாலே அப்படிக்கேட்டு வைத்தேன்...:))

   இது வர்ணக் காகிதத்தை மெல்லிய நாடாக்களாக வெட்டிச் சுருட்டிச் செய்யும் ஒரு அழகியல் கைவேலை. நீங்கள் கூறுவதுபோல வேறேதும் இதற்கென உபயோகிக்கவில்லை.

   தமிழனின் தீராத தாகம் இன்னும் இருக்கிறது சகோ.
   விடிவு கிட்டும்வரை முடியாத தாகமது...

   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய நல்ல கருத்துகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியும்,
   உளமார்ந்த வாழ்த்திற்கு மிக்க நன்றியும் சகோ!..[/co]

   Delete
 4. தங்களது க்வில்லிங் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது புலியின் முகம் என எண்ணுகிறேன். சரியா என்பதை சொல்லுங்கள்.

  தமிழரின் வலியும், பொங்கும் சீற்றமும் கவிதையில் புலப்படுகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.தங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

  ஐயா விமலன் அவர்களது தளம் நான் விரும்பிப் படிக்கும் வலைதளம் ஆகும். அவருக்கு எனது இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் தோழி தமிழ்முகில் பிரகாசம்!

   உங்களின் வருகையும் எனக்கு மிக்க மகிழ்வைத் தருகின்றது!

   எனது க்விலிங் கைவேலை புலிமுகம்தான்.
   பார்ப்பவர் கண்களுக்கு நான் செய்தது சரியாகத் தோன்றுகிறதா என அறியவே கேட்டேன்...:)

   கவிதையில் உங்கள் நல்ல ரசனைகண்டு மனமகிழ்ச்சியும் நல்ல ஊக்கமுமாகவும் உணர்கின்றேன்..

   உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!..[/co]

   Delete
 5. ஆவ்வ்வ்வ் இளமதியும் இப்போ.. “சொல்லுங்கள் வெல்லுங்கள்” :)என போட்டி.. ஆரம்பிச்சிருக்கிறா போல?? பரிசு உண்டுதானே??? இதிலென்ன சந்தேகம்.. புலி முகம்தான் ஹா..ஹா...ஹா.. காது, வாய் முகத்தின் மேல் பகுதி சொல்லுகிறது...:)).. சரி சரி கெதியா பரிசைத் தாங்கோ:))

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அதிரா!..
   வாங்கோ...:)

   போட்டியோ... ஹையோ ஹயோ!..:)
   சும்மா நானும் ஒரு விளையாட்டுக்குத்தான்...:)))

   நான் இதைப் புலிமுகம் எண்டு சொல்ல,.. வந்து பார்க்கிறவைக்கு இதென்ன பூனையோ, இல்லை சிங்கமோ இல்லை அதையும் விட வேறேதாலுமோ என்று தோணினா..
   அதனால இப்படி எழுதிவிட்டேன்..;)

   இப்ப அது புலிதான்னு ஏற்றுக்கொள்ளப் பட்டாச்சு..முடிஞ்சுபோச்சு சந்தேகம்...:)))

   நீங்க வேணுமெண்டா அந்த புலியையே கூட்டிப்போங்க.. பரிசா...:) எப்புடீ...:))).[/co]

   Delete
 6. விரைந்திடுவோம் கவியழகு.

  //உதிக்கின்ற எண்ணங்கள் உள்ளத்துள் ஓங்க
  பதிக்கின்ற பாக்களைப் பார்!... ///
  ஆஹா.. அதிராவுக்கும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கவிதை புரியுதாக்கும்...:). அழகு.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]கொஞ்சமாயோ கவிதை புரியுது...:(
   அவ்வளவு கடினமோ என் கவிதைகள்...:))

   அன்பான வரவுடன் கலகலப்பான நல்ல
   கருத்துகளையும் கண்டு மகிழ்ந்தேன் அதிரா!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 7. ”சிட்டுகுருவி” ஓனர் விமலன் அவர்களின் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்... இதுவரை போனதில்லை.. போய்ப் படிக்கிறேன்ன்... நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]ம். ம். போய்ப் பாருங்கோ.. நன்றி!...[/co]

   Delete
 8. அழகிய கைவேலையோடு மெய் சிலிர்க்க வைத்த கவிதையினையும் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழி .இன்றைய அறிமுகத்திற்கும் மிக்க நன்றி தொடரட்டும் தங்கள் பணி .

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அம்பாளடியாள்!..

   உங்களின் அன்பு வரவுடன் அருமையான நல்ல
   கருத்துகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 9. பயன்தரும் சிறந்த பதிவு.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் வரவையும் நல்ல கருத்தினைக் கண்டும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 10. திரு விமலன் அவர்களைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். வாழ்வியல் யதார்த்தங்களை, நடைமுறைகளை, உள்ளது உள்ளவாரே படம் பிடித்துக் காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர். வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் வரவையும் நல்ல கருத்தினைக் கண்டும் மகிழ்ந்தேன்!
   உண்மைதான் ஐயா. சிறந்த சிந்தனாவாதி விமலன் அவர்கள்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 11. //கூகிளில் கண்ட ஓவியம் என் க்விலிங் கைவேலையில்!.
  இது என்னவென்று தெரிகிறதா?...//

  எல்லாமே சந்தேகம் இல்லாமல் தெரிகிறது.

  இருப்பினும் பகிரங்கமாகச் சொல்லத் தான் தயக்கம் - தப்பாகி விடுமோ என்றுதான்.

  >>>>>

  ReplyDelete
 12. //விரைந்திடுக!...//

  கவிதை சோகத்தின் உச்சம். நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் உள்ளது. படத்தேர்வு மிகப்பொருத்தம்.

  சோகம் நீங்கி சுகம் ’விரைந்திடுக’ என வேண்டுகிறேன்.

  >>>>>

  ReplyDelete
 13. //உதிக்கின்ற எண்ணங்கள் உள்ளத்துள் ஓங்க
  பதிக்கின்ற பாக்களைப் பார்!//

  அனைத்துத்தளங்களிலும் தான் பார்த்து மகிழ்கிறேனே!.

  >>>>>

  ReplyDelete
 14. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்களின் வரவையும் நுணுக்கமான கருத்துகளைக் கண்டும் மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 15. வணக்கம்
  சகோதரி
  நீங்கள் செய்த க்விலிங் படம் நல்ல கருத்தை உணர்த்துகிறது..
  கவிதையின் ஒவ்வொரு வரியிலும் புரட்சி வடிவம் வெடிக்கிறது....சக வாழ்க்கையில் துன்பச்சிலுவையை சுமந்த எமக்குத்தான் அதன் விலை மதிப்பு தெரியவரும் அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள்

  இன்றைய சிறப்புபதிவாக விமலன் அவர்களை பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள் சகோதரி....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் ரூபன்!..

   வாழ்வில் பட்ட துயரங்கள் ஆறாத ரணமாக உளத்தில் உறைந்துள்ளதே...
   அவைதான் எழுத்திலும் உடனே முன் நிற்கின்றது...

   அன்பான வரவுடன் அருமையான நல்ல
   கருத்துகளையும் கண்டு மனம் நெகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 16. வணக்கம் தோழி...! அசத்திட்டீங்க...! எப்படி இவ்வளவு அழகா அடுக்கடுக்கா எழுதிறீங்க. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

  தாவிக் குதிக்கும் கொடியவனைத்
  தாக்கி நாட்டை மீட்டிடுவோம்!
  ஆவி சோர்ந்து போகுமுன்னே
  ஆற்றும் கடமை மிகவுண்டு!

  கூடிக்குலவும் இன்பமதை கொளுத்திப் போட்டு அணைத்தார்கள்
  பாடிப்பரவும் பண்பதனை மோதி காலில் போட்டு மிதித்தார்கள்
  ஆணை உண்ட விளாங்கனி போல் ஆகாரோ ஆகும் காலம் விரைவினிலே வராதோ. எல்லாம் அருமை சோகம் நெஞ்சை பிழிகிறது. கைவேலை பிரமாதம்(.புலிதானே)

  விமலனை தொடர்கிறேன் நன்றி தோழி அறிமுகத்திற்கு.

  நல்ல மனசுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...!
  மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் இனியா!..:)

   உங்களின் இனிய வரவுடன் அருமையான உணர்வுகள் தெறிக்கும்
   கருத்துகளையும் கண்டு உளம் சிலிர்த்தேன்!
   உங்களின் உணர்வும்கண்டு மகிழ்ந்தேன்!

   அன்பு வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 17. கிவிலிங் வேலைப்பாடு உட்பட அனைத்தும் சிறப்பு... இனிய நண்பர் விமலன் அவர்களின் தள அறிமுகமும் நன்று... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..

   உங்களின் அன்பான வரவையும் நல்ல கருத்துகளைக் கண்டும் மகிழ்ச்சி!

   கணினி சரியாகிவிட்டதா...
   எங்கே வரமுடியாமல் இருந்திடுவீர்களோன்னு வருந்தியிருந்தேன்.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தனபாலன்!...[/co]

   Delete

 18. வணக்கம்!

  வன்புலி கண்டேன்! தமிழ்மறவன் காத்திட்ட
  இன்கொடி கண்டேன் இசைத்து!

  கூவி அழைத்த குரல்கேட்டுப் பாமறவன்
  தாவி உடைப்பேன் தடை!

  உதிக்கின்ற கற்பனைக்குள் ஊறுகின்ற பாவை
  விதிக்கின்ற பார்வை விருந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஐயா!.. வாருங்கள்!..

   என்னையும் நற்கவி ஏற்றிடத் தூண்டினை
   மண்ணைத் தமிழை மறப்பேனோ? - இன்கவியே!
   உன்னைக் குருவாக உற்றஇப் பேறிற்குப்
   பொன்னும் நிகராமோ போம்!

   நீங்கள் அவ்வப்போது எனக்குத்தரும் ஊக்கமும் திருத்தமுமே
   இவ்வண்ணம் என்னையும் எழுதத் தூண்டுகிறது.

   உங்கள் அன்பு வரவிற்கும் இனிய குறட்பாக் கருத்துகளுக்கும்
   மனம் நிறைந்த மகிழ்ச்சிடன்,
   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!...[/co]

   Delete
 19. உதிக்கின்ற எண்ணங்கள் உள்ளத்துள் ஓங்க
  பதிக்கின்ற பாக்கள் அழகு ..!

  பூனையல்ல புலிதான் அந்த க்வில்லிங்..!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!..

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளைக் கண்டும் மகிழ்ச்சி!
   ஆமாம் அது புலியேதான்...:)

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 20. கிவிளிங் புலி தோழி இளமதி காட்டுப் புலியை க்விளிங்கில் அழகாகப் படைத்துவிட்டாரே!!
  // கூவிக் களிக்கும் கோகிலமே
  கூச்சல் ஏதும் கேட்கிறதா?// நன்றாகக் கேளுங்கள்!! மூடிய செவிகள் திறக்கட்டும்! கவிதை மிக அருமை தோழி!
  உங்கள் குறளும் அருமை தோழி!
  விமலன் அவர்களின் தள அறிமுகத்திற்கு நன்றி, அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் கிரேஸ்!.. வாங்க..:)

   ஹையோ க்விலிங் புலியோ நானோ...
   புலிதான்!.... மறுக்கேலை.. அதூஊஊ... வேற விஷயத்தில...:)))

   உங்களின் வரவுடன் அசத்தலான ஆக்ரோஷமான கருத்துகளைக் கண்டும் மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 21. விமலன் அவர்களை உங்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்.நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர்!..

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளைக் கண்டும் மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

   Delete
 22. கவிதை மனதில் நிற்கிறது.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஸ்ரீராம்!..

   உங்களின் வரவும் அன்பான கருத்துங்கண்டு மகிழ்ச்சி சகோதரரே!

   வாழ்த்திற்கும் நன்றி!...[/co]

   Delete
 23. https://www.youtube.com/watch?v=nP-80vaBD54

  listen to your patriotic song here
  subbu rathinam

  ReplyDelete
  Replies
  1. [ce][im]http://3.bp.blogspot.com/-ce0B3dqWbXI/UocedWFjVNI/AAAAAAAAA-I/5Mvl6IYMlpU/s1600/Thx.jpg[/im][/ce]

   [co="BlueViolet"]வணக்கம் ஐயா!..

   உங்கள் அன்பிற்கு என்ன கைமாறு நான் செய்வேன்...

   கண்கள் நீர்மல்க இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!

   உங்கள் ஆசியுடன் என் கவிப்பயணம் தொடர்கிறது...

   இங்கும் அருமையான மெட்டமைப்பில் நீங்கள் பாடிய
   என் கவிதையைச் சேர்த்துள்ளேன்.

   மீண்டும் என் அன்பு நன்றிகள் ஐயா!..[/co]

   Delete
  2. [ma+][co="red"]ஐயா பாடிய என் கவிதையை இங்கே வலதுபக்க நிரலில் கேட்கலாம்!!![/co][/ma+]

   Delete
 24. வணக்கம் தோழி.புலி முகத்தில் அதன் சீற்றமும் உணர்கிறேன்.சிறப்பான ஓவியம் .வாழ்த்துக்கள்.கவிதையும் புதிய பதிவு அறிமுகமும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் கீதா!..

   உங்களின் அன்பான வரவுடன் அருமையான நல்ல
   கருத்துக்களையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 25. கைவேலைப்பாடும் தொடர்புடைய கவிதை வரிகளும் மனதை இங்கேயே கட்டிப்போட்டு விட்டன தோழி.
  நண்பர் விமலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சசிகலா!..

   உங்களின் அன்பான வரவுடன் அருமையான நல்ல
   கருத்துக்களையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 26. உணர்வுபூர்வமான கவிதை

  உணர்வுகள் பிரவகிக்கும் பொழுது
  மடையுடைக்கும் வார்த்தைகள்
  தீட்டும் வண்ணங்கள்
  வலிகளுடன் வாழப் பழகிய சிலருக்கு மட்டும் ...
  நல்ல கவிதை...

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோ மது!..

   உங்களின் அன்பான வரவுடன் நெகிழவைக்கும் நல்ல
   கருத்துக்களையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 27. க்விலிங் வேலைப்பாடில் சிறப்பாய் இருப்பது பாயும்புலியின் உருவம்.சிறப்பாய் இருக்கிறது.கவிதையில் புரட்சியின் வலித் தெரிகிறது..வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் கண்ணதாசன்!..

   உங்களின் அன்பான வரவுடன் அருமையான நல்ல
   கருத்துக்களையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 28. வணக்கம் தோழி

  விரைந்திடுக பாடலும் வீழ்த்தும் புலியை
  வரைந்தவிதம் நல்லருமை! வாழ்க! - உரைத்தக்
  கருத்தினுள் உள்ளுணர்வைக் காட்டி அழகாய்
  விருத்தத்தில் வைத்தீர் விருந்து!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அருணா!..

   உங்களின் அன்பான வரவுடன் அருமையான அழகிய
   வெண்பாக் கருத்தினைக் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 29. க்விலிங் வேலைப்பாடு அழகு! கவிதை சீற்றமாயினும் வலி புரிந்தது! பதிவர் அறிமுகம் சிறப்பு! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சுரேஷ்!..

   உங்களின் வரவையும் அருமையான
   ரசனைக் கருத்தினையும் கண்டும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 30. விரைவாய் வந்து சேர்கின்றேன்
  விதியே உன்னை மாற்றிடவே
  நிரையாய் சேர்ந்தே ஈழத்தில்
  நிம்மதி கொள்வோம் முற்றத்தில்
  கரைகள் கழுவிய குருதிகளை
  கண்ணில் ஒற்றி திடம்கொள்வோம்
  தரைகள் எங்கும் நாமிருப்பின்
  தாயக ஆன்மா தளைத்திடுமே..!

  அழகிய கைவேலை ,அசத்தும் கவிதைகள் , பதிவோடு அறிமுகம் அத்தனையும் அருமை சகோ

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் சகோதரர் சீராளன்!..

   ஏற்றிய வீர எழுச்சிக் கவியினிலே
   போற்றினீர் மண்ணைப் புகழ்ந்து!

   எங்கள் வாழ்வில் பட்ட இன்னல்கள் ஆறாத காயங்களாக
   உள்ளத்தில் இருக்கின்றது...
   உங்கள் அன்பான வரவுடன் அருமையான நல்ல
   கவிக் கருத்தினையும் கண்டு மனம் நெகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 31. க்வில்லிங் வேலப்பாடு வித்தியாசமாக உள்ளது.கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஸாதிகா!.. வாங்கோ..:)

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளைக் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 32. அருமையான க்வில்லிங்
  யதார்த்தமான வார்த்தைகளில்
  அழுத்தமாக ஆழப்பதிந்த உணர்வுகளை
  பகிர்ந்த கவிதை மிக மிக அருமை
  விமலன் நான் விரும்பித் தொடரும் பதிவர்
  அவரை அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ரமணி ஐயா!..

   உங்களின் வரவும் அன்பான கருத்துங் கண்டு
   மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்!..

   இங்கு உங்கள் வரவையும் ரசனையையும் எதிர்பார்ப்பது வழமையாகிவிட்டதால் இம்முறை காணவில்லையே
   என்று உங்களிடம் வந்து அழைப்புத் தந்தேன்..

   உடனேயே வந்து இனிய கருத்திட்டு வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!...[/co]

   Delete
 33. விமலன் அவர்களின் தள அறிமுகம் உள்பட அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் குமார்!..

   உங்களின் வரவையும் அருமையான
   ரசனைக் கருத்தினையும் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் நன்றி சகோ!...[/co]

   Delete
 34. இன்றைய யதார்த்த நிலையினை அற்புதமான கவிவரிகளில் வடித்து, அசத்தலான க்விலிங் செய்து, அருமையான பதிவாக தந்திருக்கிறீங்க.
  வாழ்த்துக்கள். நன்றி.
  சகோ.விமலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் அம்மு!.. வாங்கோ..:)

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளையும் கண்டு மகிழ்ந்தேன்!

   நல்ல ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

   Delete
 35. அழகான க்வில்லிங், அற்புதமான கவிதைம் விமலன் தளம் அறிமுகப் பகிர்வுக்கு நன்றி.வாழத்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் ஆசியா!..

   உங்களின் வரவையும் அருமையான
   ரசனைக் கருத்தினையும் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆசியா!...[/co]

   Delete
 36. விமலனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
  அழகான க்வில்லிங்
  தேசம் பற்றிய உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடான கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் வைத்தியர் ஐயா!.. வாங்கோ..:)

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!...[/co]

   Delete
 37. குவீலிங் கவிதை எதை பாராட்டுவது. அருமை சகோதரி. நான் இரண்டு ஆண்டோலாக விமலன் அவர்களின் வலைப பக்கம் படித்து வருகிறேன். டீக்கடை நிகழ்வுகளை கூட அருமையாக சொல்வதில் வல்லவர் . வாழ்த்துக்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் முரளிதரன்!.

   உங்களின் வரவையும் அன்பான கருத்துகளையும் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 38. இனிமையான பகிர்வு... க்வில்லிங் படம் ரொம்பவே அருமை இளமதி....

  கவிதை மனதைத் தொட்டது.

  விமலன் பதிவுகள் இதுவரை படித்ததில்லை.... படிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் வெங்கட் நாகராஜ்!.. வாங்கோ..:)

   உங்களின் அன்பான வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

   Delete
 39. உடல் நலம் இப்போது பரவாயில்லையா சிஸ்டர்! க்விலிங்கில் நீங்கள் சித்தரித்திருப்பது எதுவாக இருந்தாலும் கைவண்ணத்தில் நீங்கள்தான் புலி! கவிதை ரசனை!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் பால கணேஷ்!.. வாங்கோ பிரதர்..:)

   உங்களின் அன்பால் நான் இதோ நலமாகிவிட்டேன்...:)
   ’க்விலிங் புலி’... அட!.. இதுகூட நல்லாத்தான் இருக்கு...:))
   அன்பான வரவுடன் ரசனையான கருத்துகளையும் தந்து மகிழ்விக்கின்றீர்கள்!

   வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி பிரதர்!...[/co]

   Delete
 40. தோழி என் குட்டி மகள் பார்த்தவுடன் அசந்து கூவுகிறாள் .அம்மா tiger ..வழக்கம் போல கலக்கல் .சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. [co="BlueViolet"]வணக்கம் தோழி மகிவதனா!.. வாங்கோ..:)

   உங்களின் குட்டி மகளும் படு சூட்டிதான். மகிழ்ச்சி!
   அன்பான உங்கள் கருத்தும் என்னை ஊக்குவிக்கின்றது.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

   Delete
 41. கவிதை வாசித்து மனம் கனக்கிறது தோழி. எத்தனை எத்தனை நட்புறவுகள் தாங்கள் சுவாசித்த காற்றை, நேசித்த மண்ணை பூசித்த உறவுகளை விட்டுப்பிரிந்து எங்கோ கிடந்து வாடுகிறார். நினைக்கையிலேயே வருத்தம் மேலிடுகிறது. ஆழ்மன வருத்தத்தையும் ஆதங்கக்கவிதையாய் அழகுற மொழிந்தமை சிறப்பு. வாழ்த்துகள் இளமதி.

  ReplyDelete
 42. புலியின் க்விலிங் வேலைப்பாடு, மனதை கனக்கவைக்கும் கவிதை, விமலன் அவர்களின் அறிமுகம் எல்லாம் அருமை.

  ReplyDelete
 43. Replies
  1. இன்றைய 06.02.2014 வலைச்சரத்தில் தங்களின் தளம் புகழ்ந்து பாராட்டிப்பேசப் பட்டுள்ளது கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


   http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html#comment-form

   விரைந்திடுக! விரைந்துசென்று பார்த்திடுக !! ;)

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.