Pages

Nov 23, 2013

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!..

கார்த்திகைப் பூ எனது க்விலிங் கைவேலையில்...
~~~~~~~
கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
 _()_

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!
  

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள் - ஈழ
மறவர் எனும்தமிழ் முத்துக்கள்!
கண்ணாய்ப் போற்றிடும் சொத்துக்கள் – வீரம் 
கமழும் நறுமணக் கொத்துக்கள்!

வெல்லும் இலட்சியம் பாருங்கள் - யாவரும்
விரைந்தே ஒன்றெனச் சேருங்கள்!
சொல்லும் மந்திரம் கூறுங்கள் - உலகில்
துணிவாய் உரிமையைக் கோருங்கள்!

நாளை நமதெனப் பாடுங்கள் - வாழ
நன்னாள் நெருங்கிடும் ஆடுங்கள்!
காலைக் கதிரினைச் சூடுங்கள் - நம்
கடமை உணர்ந்துநடை போடுங்கள்!
~~~~~~~~~~~~


வானில் ஒளிர்கின்ற சூரியனை, வாழ்வினில்
வீணென எண்ணுதல் வீம்பு!
~~~~~~~~~~~

மண் காக்கத் தமையீந்த மாவீரர் நினைவான பதிவென்பதால்
இம்முறை பதிவோடு பகிரும் பதிவரை இணைக்கவில்லை...
_()_

75 comments:

  1. ''..கடமை உணர்ந்துநடை போடுங்கள்!...'''
    Vetha.Elangathilakam.
    ..

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  2. கார்த்திகைப்பூவிலிருந்து உணர்சிமிக்க கவிதை வரை அனைத்துமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //வானில் ஒளிர்கின்ற சூரியனை, வாழ்வினில் வீணென எண்ணுதல் வீம்பு!//

    இருந்தாலும் இவ்வளவு வீம்பு கூடவே கூடாது !

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  3. மாவீரர் நினைவு நாளில் மிக உணர்ச்சிகரமான கவிதை. மனதை மிகவும் நெகிழ்வித்துவிட்டது. மிக அருமையாக இருக்கு.
    கார்த்திகைப்பூவினை க்விலிங் ல் மிகமிக அழகாக‌ செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் அம்மு!..

      கார்த்திகைப் பூ இன்னும் கொஞ்சம் தெளிவாகச் செய்திருக்கலாம்.
      அவசரமாக முடித்துவிட்டேன். உங்கள் ரசனைகண்டு மகிழ்ந்தேன் அம்மு!

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும் மகிழ்வுடன்
      மனமுவந்த நன்றி!...[/co]

      Delete
  4. Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  5. வணக்கம்
    சகோதரி

    க்விலிங் கைவேலையில்...கார்த்திகைப் பூ மிக அழகாக உள்ளது....நினைவு சுமந்த கவிதை எம் இதயங்களை ஒரு கனம் கலக்கியது..... அருமை வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ரூபன்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி ரூபன்!...[/co]

      Delete
  6. மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட கார்த்திகைப் பூவை அப்படியே
    தத்துரூபமாக உங்கள் கைவேலையிலும் காட்டியுள்ளீர்கள் தோழி
    அருமை !..சிறப்பான கவிதைக்கும் கை வேலைக்கும் என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் அம்பாளடியாள்!..
      ரசனைகண்டு மகிழ்ந்தேன்!

      மனதில் மறக்கமுடியாதவற்றில் இதுவும் உண்டு...

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  7. மாவீரர் நினைவு நாளில் மிக உணர்ச்சிகரமான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  8. நம்பிக்கைப் பூ.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஸ்ரீராம்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  9. க்விளிங் வேலைப்பாடு அருமை.. அதுசரி அது என்ன சகோ கார்த்திகைப்பூ? செந்தூரப்பூ மாதிரி கற்பனைப் பூவோ?

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ!..


      உங்களின் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி
      இது கற்பனை அல்ல நிஜம்! பூவைச் சொல்கின்றேன்...

      http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D

      இந்த இணைப்பில் விபரம் உண்டு பாருங்கள்

      இனிய வாழ்த்திற்கும் நன்றி சகோ!...[/co]

      Delete
  10. விதை உறக்கம் சில நாளைக்குத்தானே. கவிகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் முரளிதரன்!..

      உண்மைதான், விதை முளைவிடும் காலம் அதிகமில்லை...

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  11. கவிதை படித்து மனதில் நம்பிக்கை பிறக்கிறது ஈழம் மலரும் நாள் தூரம் இல்லை என்று.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர் மனோ!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  12. மண் காக்கத் தமையீந்த மாவீரர் நினைவான பதிவுக்கு வணக்கங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் இராஜராஜேஸ்வரி!..

      உங்களின் அன்பு வரவிற்கும் உளமார்ந்த கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோதரி!...[/co]

      Delete
  13. க்வில்லிங் அழகாக இருக்கிறது இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் இமா!..

      உங்களின் நேர நெருக்கடிக்குள்ளும் வந்து
      வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!...[/co]

      Delete
  14. வணக்கம் தோழி..!
    கார்த்திகை பூக்கள் எல்லாம் காகிதப்பூ அல்ல
    கனிந்து வரும் நாளும் வெகு தூரம் இல்லை
    என்று உணர்ச்சி ததும்ப நம்பிக்கை நடை போட எடுத்து இயம்பிய உன்னத பெண்ணே உன் உள்ளமும் கவியும் அழகோ அழகு....!
    கை வேலையும் அதற்கேற்ப அழகே.
    நன்றி ....!தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் இனியா!..

      உங்கள் கருத்துகள் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன.

      அன்பு வரவிற்கும் உளமார்ந்த கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  15. http://kaviyakavi.blogspot.ca/2013/04/blog-post_24.html
    http://kaviyakavi.blogspot.ca/2013/04/blog-post_13.html

    முடிந்தால் பாருங்கள் தோழி இவை முன்னர் எழுதியவை.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]பார்த்தேன்.. பதிலும் பகிர்ந்தேன் தோழி!

      எழுத்துலகில் உங்களுகென ஒரு இடம் நிச்சயம் உண்டு.

      தொய்வோ துயரமோ வேண்டாம்!.. தொடருங்கள்!...
      உளமார வாழ்த்துகிறேன்!...[/co]

      Delete
  16. வேகம் தரும் வரிகள்

    வேகம் பெரும் தலைவனுக்காக விசையோடு புறப்பட வேண்டும்.

    ReplyDelete
  17. க்வ்லிங் குறித்து குறிப்பிட மறந்துவிட்டேன்...
    வீட்டில் எப்படி செய்வது என்று நீண்ட நேரம் பேசினோம்..
    மிகுந்த கடினமான பணி என்று தெரிந்து கொண்டேன்...
    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ மது!..

      வேகமுடன் விவேகமும் உண்டு. தாகம் தீரும் நாள் விரைவில்...

      க்விலிங் ஆரம்பத்தில் கை பழகும்வரை சற்றுச் சிரமம்தான்.
      பழகிவிட்டால் யாவும் சுலபம்.
      முயற்சி திருவினையாக்குமல்லவா...:)

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  18. எதுகை, மோனை, இயைபு, பொருள் என அனைத்து அலங்காரங்களும் கொண்ட தங்கள் கவிதைப் பெண்ணை ரசித்தேன் தோழி !

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் குருச்சந்திரன்!..

      உங்களின் அன்பு வரவும் ஆழ்ந்த கவிதை ரசனையும்
      மகிழ்வைத்தருகிறது. சமீபகாலமாகத்தான் மரபுக்கவிதை
      எழுத ஓரளவு புரிதலுடன் கற்றுவருகிறேன்.

      இனிய கருத்திற்கும் வாழ்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  19. மனதை நெகிழ வைத்த கவிதை...

    கார்த்திகைப் பூ க்விலிங் பிரமாதம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர் தனபாலன்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  20. கார்த்திகைப் பூ க்விலிங் பிரமாதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் வெங்கட் நாகராஜ்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  21. அருமை அருமை... நிச்சயம் ஒரு நாள் வரும் நாளை நமதென்று உரைத்திட...

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் பிரியா!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  22. ஈழம் பற்றி யோசிக்கும்போதெல்லாம் வார்த்தையற்ற கனம் கொண்டு மனம் பாரமாகிவிடுகிறது., எல்லோரையும் போலவே விடியல் வரும் என்று நம்புகிறேன் நானும் !
    ஈழம் பற்றி இரு வருடம் முன் ஒரு கவிதை எழுதியிருந்தேன் நான்,
    பதிவுலகில் என் முதல் பதிவு இது !

    http://kavithaicorner.wordpress.com/2011/04/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் விஜயன்!..

      உங்களின் அன்பு வரவும் ஆழ்ந்த கருத்தும் உளத்தில் இனம்புரியா வேகத்தைத் தருகிறது. நம்புவோம்!. வெல்வோம்!
      வாழ்திற்கும் மிக்க நன்றி!

      உங்கள் பதிவினைப் பார்த்தேன் சகோ! மிக மிக அருமை!
      கருத்துப் பகிர்தல் இட்டுள்ளேன். மிக்க நன்றி!...[/co]

      Delete
  23. அழகிய க்வில்லின் அருமை கவிதை.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஸாதிகா!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  24. க்விலிங் வேலை வழக்கம்போலவே மிகமிக அற்புதம் சகோ

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ கண்ணதாசன்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  25. // காலைக் கதிரினைச் சூடுங்கள் - நம்
    கடமை உணர்ந்துநடை போடுங்கள்!//
    // வானில் ஒளிர்கின்ற சூரியனை, வாழ்வினில்
    வீணென எண்ணுதல் வீம்பு!// அருமை தோழி!
    க்விளிங் எப்பொழுதும் போல அழகு..வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் கிரேஸ்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் இனிய கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  26. மாவீரர்கள் விதைத்துச்சென்ற விதை ஒருநாள் விருட்சமாகும்...

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ கலியப்பெருமாள்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் நம்பிக்கை தரும் நற்கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  27. ///நாளை நமதெனப் பாடுங்கள் - வாழ
    நன்னாள் நெருங்கிடும் ஆடுங்கள்!..///

    நிச்சயம் ஒரு நாள் புலரும். புதிதாய் பூக்களும் மலரும்!...

    எண்ணிய ஈடேற - இறைவன் நல்லருள் புரிவானாக!..

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!.. வாருங்கள்!

      உங்களின் அன்பு வரவிற்கும் திடமூட்டும் கருத்திற்கும்
      வாழ்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  28. வீரமூட்டும் வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சுரேஷ்!..

      உங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
      இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  29. Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ இராஜ முகுந்தன்!..

      உங்களின் அன்பு வரவிற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  30. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    க்விலிங் கைவேலையில் கார்த்திகை பூவின் வாசம் பார்ப்பவர்களின் மனதில் மணம் கமழ இதழ் விரித்து வரவேற்கிறது.
    வீரத்தோடு வீறுகொண்டு புறப்பட்டு வந்த வார்த்தைகள் துவண்டு கிடக்கும் நம் சொந்தங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் எனும் நம்பிக்கையும் நாளை நமது என்னும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. வீரத்தை விதைத்து செல்லும் தங்கள் வரிகளில் சற்று ரத்தம் சூடாவதைத் தவிர்க்க முடியவில்லை. இக்கவிதை அழகை ஆராதரிக்கும் கவிதை அன்று ஆற்றாமையால் பொங்கிய எழுந்து வந்த கவிதை என்பதையும் நான் அறிவேன். அருமையான கவிக்கும்,க்விலிங் வேலைக்கும் நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் பாண்டியன்!..

      உங்களின் அன்பு வரவோடு அத்தனை ஆழ்ந்த ரசனை கண்டு
      உள்ளம் பூரித்தேன்! நுட்பமான ரசனையும் கருத்தும் என்னை
      மேலும் ஊக்கப்படுத்துகிறது.

      இனிய வாழ்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!...[/co]

      Delete
  31. இதயத்தில் இருந்தது வந்திருக்கின வரிகள்
    உணர்வை வேர்வரை தொடுகிறது
    தமிழன் என்றோர் இனமுண்டு
    தனியே அவர்கோர் குணமுண்டா ???
    அருமையான கவிதையும் ,க்வேளிங்கும்
    வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ!..

      உங்களின் அன்பு வரவோடு அத்தனை ஆழ்ந்த ரசனை கண்டு
      மிகவே மகிழ்ந்தேன்! நல்ல கருத்தும் என்னை
      மேலும் ஊக்கப்படுத்துகிறது.

      இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!...[/co]

      Delete
  32. அடடா என்னமோ தெரியவில்லை, இம்முறை எங்கேயும் போக முடியாமல் போய் விட்டது, இனித்தான் எல்லா வீட்டுக்கும் போய் ரீ குடிக்க வேண்டும். முதலில் தாமதத்துக்கு மன்னிக்கவும் இளமதி.

    ReplyDelete
  33. கார்த்திகைப் பூ மிக மிக சூப்பர், ஊரை நினைவு படுத்துகிறது. மாவீரருக்கான கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் வாங்கோ அதிரா!..

      உங்களின் அன்பு வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!
      நல்ல ரசனையும் கருத்துங்கூட என்னை ஊக்கப்படுத்துகிறது அதிரா!...

      இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!...[/co]

      Delete
  34. Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் வெற்றிவேல்!..

      உங்களின் அன்பு வரவிற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  35. மாவீரருக்கான கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் குமார்!..

      உங்களின் அன்பு வரவிற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  36. மாவீரர் நினைவாய் இளையநிலாவின் முற்றத்தில் மலர்ந்திருக்கும் செங்காந்தள் மலரும் மனத்தில் நம்பிக்கையும் புத்துணர்வும் ஊட்டும் கவிதையும் மனம் பறிக்கின்றன. காத்திருப்போம்.. விடியத்தானே வேண்டும் என்றேனும்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் கீத மஞ்சரி!..

      உங்களின் அன்பு வரவும் நல்ல ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete

  37. வணக்கம்!

    பாவீரன் பாரதிநான் பாடிப் பணிகின்றேன்
    மாவீரா் தம்மை மனத்து!

    மண்ணில் உறங்கும் வித்தென்று
    மனத்தை உருக்கும் கவியளித்தீா்!
    கண்ணில் வாழும் மாவீரா்
    காலம் வென்று உறங்குகிறார்!
    விண்ணில் தோன்றும் கதிராவார்!
    வீரம் ஊட்டும் நுாலாவார்!
    பண்ணில் அவரின் புகழ்பாடிப்
    படைப்போம் ஈழத் தமிழ்நாடே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      அன்போடு உங்கள் வரவும், உரமூட்டும் உணர்வுக்
      கருத்துக் கவிகள் கண்டு உளம் பூரித்தேன்!..

      மண்ணின் பெருமை மதிப்புகளை
      மனதில் கொண்டே வாழுகிறோம்!
      எண்ணும் செயல்கள் என்றென்றும்
      எங்கள் நிலந்தான் என்றிருக்கும்!
      கண்ணில் மின்னும் தாயகமும்
      கருத்தில் கலந்தே இருக்கிறது!
      விண்ணும் அதிரும் நாள்நெருங்கும்
      விரைந்தே கடமை ஆற்றிடுவோம்!

      உங்களின் ஊக்கந்தரும் உன்னத வரிகள்
      இன்னும் எம்மை எழுச்சிகொள்ள வைக்கின்றன.

      வரவிற்கும், திடமூட்டும் கருத்திற்கும்,
      வாழ்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!...[/co]

      Delete
  38. கார்த்திகைப் பூ க்விலிங் கைவேலையில். மிக அருமை.
    மாவீரர்களுக்காக கவிதைகள் மிக அருமை.
    மாவீரர்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி!..

      உங்களின் அன்பு வரவிற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!...[/co]

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.