Pages

Dec 24, 2013

விண்மகன் வந்துதித்தான்!..

வலையுலக அனைத்து உறவுகளுக்கும்
என் இதயங் கனிந்த நத்தார் திருநாள்
நல் வாழ்த்துக்கள்!
~~~000~~~

விண்மகன் வந்துதித்தான்!


அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
அருந்தவன் வந்துதித்தான்! - எங்கள்
ஆதவன் வந்துதித்தான்!
துன்பங்கள் தொலைந்திடத் துயரங்கள் அகன்றிடத்
தூயனாய் வந்துதித்தான்! - நல்ல
தூதனாய் வந்துதித்தான்! 

பொய்மையைப் போக்கவும் உண்மையைக் காக்கவும்
புனிதனாய் வந்துதித்தான் !- உலகில்
புதுமையாய் வந்துதித்தான்!
நல்லதை நாட்டவும் நன்மையைக் கூட்டவும் 
நமக்கென வந்துதித்தான்! - யேசு
நாட்டினைக் காக்க வந்தான்!

வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும் 
வேதமாய் வந்துதித்தான்! - வானில்
விண்மீனாய் வந்துதித்தான்!
விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
விரைவாக வந்துதித்தான்! - அந்த
விண்மகன் வந்துதித்தான்!

விரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய
ஆண்டவன் வந்துதித்தான்! - ஒளி
பூண்டவன் வந்துதித்தான்! -
அரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே
நலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு
மலரடி போற்றிடுவோம்!
~~~000~~~


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
~~~
எண்ணங்கள் அனைத்தும் இனிதாக வேண்டும் - எங்கும்
வண்ணங்கள் மலர்ந்து வளமாக வேண்டும்!
இன்பங்கள் சிறந்து எழில்பாட வேண்டும்  - எங்கள்
இனியதமிழ் உலகை அரசாள வேண்டும்!

~~~000~~~

பாருடன் கூடியே பைந்தமிழைக் காப்பேனே!
சீருடன் நற்பணிகள் செய்து!

~~~000~~~

பதிவோடு பகிரும் பதிவர்




வலையுலகில் எனது அன்புக்குரியவர்களில் இன்னுமொரு தோழியான
தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் முகிலின் பக்கங்கள்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.
முகிலின் பக்கங்கள்

http://tamizhmuhil.blogspot.com/

தோழி தமிழ்முகில் பிரகாசம் தனது இந்த வலைப்பூவில் மிகுந்த ஆர்வமுடன் இனிய நல்ல கவிதைகளை எழுதிப் பதிவு செய்து எம்முடன் பகிர்ந்து வருகின்றார்.

தோழி அவர்கள் இவ் வலைப்பூவினைத் தவிர இன்னும் இரண்டு வலைப்பூக்களையும் படைத்துப் பதிந்து வருகிறார்.
 muhilneel
இவ் வலைத்தளத்தில் கதம்பமாக பல விடயங்களைப் பதிவிட்டும்…

My Clicks  
இவ் வலைத்தளத்தில் தான் எடுக்கும் நிழற் படங்களைப் பதிந்தும் வருகிறார்.

இவர் தனது இவ் வலைத்தளத்தைவிட வேறு பல தளங்களிலும் தனது பங்களிப்பாகத் பல படைப்புக்களைப் பதித்துவருகிறார்.
தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களையும் ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களும் தோழியின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து மேலும் அறிந்து கொள்ளலாம்.

தோழி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் அவர் தளத்திற்கும் சென்று படித்துக் கருத்துப் பகிர்வு செய்து அவரையும் ஊக்குவிக்கலாமெனும் நோக்கோடு இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வடைகின்றேன்!.
மிக்க நன்றி அன்பு உறவுகளே!

_()_

81 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    காலம் அறிந்து கவிதை வடித்த விதம் அருமை கவிதையின் வரிகள் மிகச்சிறப்பாக உள்ளது. இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.சகோதரி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ரூபன்!..

      உங்களின் முதல் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      உங்களுக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.!

      அன்பார்ந்த வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!..[/co]

      Delete
  2. வணக்கம்
    வலைத்தள உறவுகளே.
    முகிலின் வலைப்பக்கம் சென்று வாழ்த்தி தங்களின் பின்னூட்டங்கள் வாயிலாக உச்சாகப்படுத்துங்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]உங்களின் அன்பான ஊக்குவிப்பு
      எண்ணத்திற்கு உளமார்ந்த நன்றி ரூபன்!..[/co]

      Delete
  3. இனிய கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்,கூடவே இனிக்கட்டும் புத்தாண்டு/தமிழ் முகில் பிரகாம் அவர்களின் வலைப்பதிவை பார்த்திருக்கிறேன்,இனியும் அவசியம் பார்த்து விடுகிறேன் தவறாமல்.வழக்கமாய் இடம்பெறுகிற க்விலிங்கை காணவில்லையே/

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]இனிய வணக்கம் விமலன்!..

      மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய நத்தார் தின புதுவருட வாழ்த்துக்கள்.!

      முதலாவது படத்தில் இருப்பது எனது க்விலிங்தான்..:)
      கண்டுபிடிக்கவில்லையோ!..:) இன்னுமொருதரம் பாருங்கள்...

      அனபான வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  4. இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளும்....

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ மனோ!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  5. எனது வலைதளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல தோழி.

    கர்த்தரைப் பற்றிய கவி வரிகள் அருமை.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி.

    நானும் விமலன் ஐயா சொன்னது போல் க்வில்லிங் காணோமே என்று தான் எண்ணினேன். நன்கு உன்னிப்பாக கவனித்த பின் தான், அது க்வில்லிங் என்றே உணர்ந்தேன்.அன்னை மரியாளின் க்வில்லிங் மிகவும் அருமை.பிரமித்துப் போனேன். வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் தோழி தமிழ்முகில்!..
      [im]http://www.wallpaperup.com/uploads/wallpapers/2013/04/26/78610//thumb_dea7c7c2f322ec2fe9abdb0b103c24d4.jpg[/im]
      நல்வரவு!..
      வாழ்த்திற்கு மிக்க நன்றி! உங்களுக்கும் என் மனங்கனிந்த
      நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

      எனது க்விலிங்க் என கீழே எழுதவில்லை. அன்றியும் பார்த்தால் தெரிகிறது தானே என்று விட்டுவிட்டேன்...:)
      பிரமிப்பாக இருக்கிறது என்றதே
      எனக்கும் மிகுந்த ஊக்குவிப்பாக இருக்கிறது.

      உங்களின் அன்பு வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!..

      உங்களின் வலைத்தளத்தில் இன்றுதான் ஏனைய இரண்டு தளங்களையும் கண்டேன்!
      வந்து அங்கும் கருத்துகள் பதியவேண்டும். வருவேன்...

      உளமார்ந்த வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  6. விண் மகன் வந்துதிக்க
    விதைத்திட்ட கவிதை
    தூயவன் துணை செய்வான்
    துயர் தனை துடைக்க

    புனிதனை போற்றி வாழ
    புலர்ந்திடும் பொழுது நல்லாய்
    மலர்ந்திடும் எண்ணம் எல்லாம்
    விளைந்திடும் உன் தன் முன்னால்

    அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
    அருந்தவன் வந்துதித்தான்! - ஆரம்பமே அசத்தல் தான் அருமை தோழி க்வில்லிங் மிக்க அழகு ஏனையவையும் அழகான படங்களே
    அருமை ...! புதிய பதிவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சென்று பார்க்கிறேன். எபோதும் போலவே அசத்துகிறீர்கள் தோழி மிக்க மகிழ்ச்சி.
    அழகிய பணி தொடர வாழ்த்துக்கள் தோழி .....!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் இனியா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் அழகிய கவியமுத வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!

      இனிய ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும்
      மிக்க மிக்க நன்றி தோழி!.[/co]

      Delete
  7. அற்புதமான சிறப்புக் கவிதை
    மீண்டும் மீண்டும் படித்துச் சுவைத்தேன்
    பதிவர் அறிமுகமும் மிகச் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ரமணி ஐயா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் அன்பான வருகையும் இனிய ரசனையையும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!...[/co]

      Delete
  8. மரியாளின் க்வில்லிங் மிகவும் அருமை.
    இனிய கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
    பதிவர் அறிமுகம் -
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகைக்கும் உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...[/co]

      Delete
  9. சிறப்பான கவிதை..

    இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஆதி வெங்கட்!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க நன்றி...[/co]

      Delete
  10. இதயங் கனிந்த நத்தார் திருநாள்
    நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்!.[/co]

      Delete
  11. அன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட
    அருந்தவன் வந்துதித்தான்! - எங்கள்
    ஆதவன் வந்துதித்தான்!


    அழகான பாடல்பதிவுக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]உங்களின் வருகையும் உளமார்ந்த கருத்தினையும் கண்டு மகிழ்ச்சி சகோதரி!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  12. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    ஆஹா! க்லிவிங் என்றே கண்டுபிடிக்க முடியாத வகையில் கைவண்ணத்தைக் காட்டி விட்டீர்கள் மிகவும் அசர வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அற்புதமான வரிகளால் யேசுபிரான் பிறப்பைப் போற்றி விட்டீர்கள். நம்மை காயப்படுத்துவர்களையும் ரட்சித்த உலகரட்சகரின் திருவருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவான வாழ்வைப் பெற வேண்டுமென வேண்டிக்கொள்வோம். சகோதரிக்கும் தனது இல்லத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    ====
    பதிவோடு பகிர்ந்து கொண்ட தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளத்திற்கு எனது விஜயம் கண்டிப்பாக உண்டு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
    ====
    சாரணர் (scout) உறைவிடப் பயிற்சியில் கலந்து கொண்டமையால் இணையப்பக்கம் கருத்திட வர முடியவில்லை. உடல்நிலையும் அவ்வப்போது ஒத்துழைக்க மறுக்கிறது இதுவே தாமதத்திற்கான வருகை இனி தொடர்ந்து வருவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம் சகோதரி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோ பாண்டியன்!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் அன்பான வருகையும் உளமார்ந்த இனிய ரசனைமிக்க கருத்துக்களையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!..

      தாமதம் இதிலொன்றும் இல்லை. நாம் எல்லோருமே பதிவுலகத்தில் முழு நேரத்தையும் செலவிடுபவர்கள் அல்லவே!..:)
      கிடைக்கின்ற நேரத்தில் அன்புமிக்க வலையுலக வலைப்பின்னல் உறவுகளுடன் எமது உணர்வுகளை ஆக்கங்களைப் பகிர்கின்றோம்.
      நீங்களும் உங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்!

      வரவும் வாழ்த்தும் கண்டு பேருவகை கொள்கின்றேன் சகோ!
      மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  13. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் முகிலின் பக்கங்கள்
    வலைப்பதிவுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]மிக்க நன்றி சகோதரி!..[/co]

      Delete
  14. வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
    வேதமாய் வந்துதித்தான்! - வானில்
    விண்மீனாய் வந்துதித்தான்!
    விந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற
    விரைவாக வந்துதித்தான்! - அந்த
    விண்மகன் வந்துதித்தான்!//
    அருமையான கவிதை.
    அன்பை போதிக்க வந்த விண்மகனுக்கு வாழ்த்துக்கள்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    தமிழ்மிகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    முகிலின் பக்கங்களை படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி கோமதி அரசு!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  15. உங்க க்விலிங் கைவண்ணத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை இளமதி. சூப்ப்ப்ப்ப்ப்பர்ப்.
    கவிதை. அழகான கவிவரிகளில் விண்மகனுக்கு கவி வடித்திருக்கின்றீர்கள். எல்லாமே மிகமிக அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்,பாரட்டுக்கள்.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.
    FROHE WEIHNACHTEN

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் அம்மு!. வாங்கோ!...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      அன்பான வருகையுடன் இத்த்த்...தனை ரசனையான இனிய கருத்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..:))

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி அம்மு..[/co]

      Delete
  16. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...[/co]

      Delete
  17. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! படங்களும் கவிதை வரிகளும் ரசிக்கும்படி இருந்தன! முகிலின் பக்கம் எட்டிப் பார்த்தேன். அங்கு ஒரு மயில் ஆடிக் கொண்டு இருந்தது. என்னைக் கண்டதும், இன்னொன்று பறந்தது! அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் ரசனைமிக்க இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!...[/co]

      Delete
  18. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பதிவில் இல்லை. எனவே கூகிள் ப்ளஸ்!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]மிக்க நன்றி ஐயா!...[/co]

      Delete
  19. https://www.youtube.com/my_videos?o=U

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!ஏசுபிரான் அவதரித்த இந்த கிருஸ்துமஸ் பொன்னாளில்
    தாங்கள் இயற்றிய மிக அழகான பாடலை நானும் பாடி,
    அந்த பூக்களிலே அவைகளைக் கோர்ப்பதிலே நானும் ஒரு நாராகி,
    அந்த பூக்களை நேசிக்கும் உள்ளஙகள் அனைத்திற்கும்
    உங்கள் வலை மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சுப்பு தாத்தா.



    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா! வாருங்கள்!..

      [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR7f_9tkd2NHQaZu6-vOpueOyV5CE979s2fargRnmlmJJQlfH5pSg[/im]

      இன்று மீண்டும் தங்களின் குரலில் எனது பாடல் ஒலிக்கக் கேட்டு மட்டிலா மகிழ்வடைகின்றேன்!

      என்னவென்று என் மனச் சந்தோஷத்தையும் உணர்வினையும் உங்களுக்கு உரைப்பதெனத் தெரியாமல் நிற்கின்றேன் ஐயா!

      நான் எழுதும் பாடல்கள் தங்களால் மெட்டமைக்கப்பட்டு
      பாடித்தரப்படும் பேறு என்னைப் புளகாங்கிதமடைய வைக்கின்றது.

      மிக்க மகிழ்வும் என் உளமார்ந்த நன்றியும் ஐயா!

      பாடலை இங்கேயே பத்திரப்படுத்திவிட்டேன்!...

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்
      இனிய நத்தார், புதிவருட தின நல் வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  20. அன்பின் இளைய நிலாமுதலில் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.எங்கெங்கு எவ்வெப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அங்க்ங்கு அவ்வப்போது நான் அவதரிப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளதாகப் படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஏசு கிருஸ்து ஈசன் கிருட்டினன் எல்லோரும் வாழ்க்கையின் நம்பிக்கைக்கு ஆதாரமானவர்கள். ஒவ்வொருவனிலும் கடவுள் உய்கிறார், என்று நம்பி மனித நேயத்தை பேண இந்நாளில் உறுதி எடுப்போம். கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!.. வாருங்கள்!

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      ஆமாம் ஐயா! இறைவன் ஒன்றே!,, அவனருளும் ஒன்றே!
      அவரவர் தமக்கு விரும்பிய வடிவங்களில் வைத்து வணங்குகிறோம்.. எனக்கும் கிறுஸ்துவென்றாலும் கிருஷ்ணரென்றாலும் எல்லாம் ஒன்றுதான்.

      நீங்கள் கூறுவதுதான் மனித நேயத்தைப் போற்றும் எல்லோருமே போற்றப்படக் கூடியவர்கள்! அதனை வளர்ப்போம்!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!...[/co]

      Delete
  21. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் விஜி பார்த்திபன்!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகைக்கும் உளமார்ந்த இனிய கருத்து, வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  22. அன்புத் தோழிக்கு,
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும், நத்தார் தின வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"] மிக்க நன்றி தோழி!

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்!..[/co]

      Delete
  23. அழகழகான படங்கள்
    அருமையான பாடல்
    wish u a merry Christmas friend
    ஆனால் என் விருப்ப க்வேல்லிக் missing .ok இப்போ உங்களுக்கு டைம் இருந்திருக்காது

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர் மது!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      என்ன சகோ.. க்விலிங் இல்லையா.. உங்களுக்கு அதைப் பார்க்க க்விலிங் போன்று தெரியவில்லையா... அவ்வ்வ்வ்...:))

      அப்போ நான் இம்முறை நன்றாகச் செய்யவில்லையோ..:)

      நன்றாக முதலாவது படத்தை உற்றுப்பாருங்கள்.
      மேரி மாதாவும் பாலன் ஜேசுவும்...
      அதைக் கிளிக் பண்ணினால் பெரிதாகக் காட்டுமே..

      பார்த்துச் சொல்லுங்கள் சகோ!..:)..[/co]

      Delete
  24. விழாக்கால நற்பாடல் ...

    பல பணிகளுக்கு மத்தியிலும் இப்படி ஓர் கவிதையையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்த உங்கள் சுறுசுறுப்பு எனக்கு நிறைய பாடங்களை தருகிறது.. சகோதரி வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]உண்மைதான் சகோ... வேலைகள், கடமைகள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன... ஆனாலும் இங்கு வந்து உங்களையெல்லாம் இப்படித்தொடர்பு கொள்வது அதிலிருந்து சிறிது நேரமாகிலும் என்னை வேறுலகிற்கு இட்டுவந்து மனதிற்கு ஒரு மாறுதலான சிந்தனையைத் தருகிறதே..
      அதற்காக நேரத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

      உங்கள் அன்பான ஆதரவான கருத்தும் அக்கறையும் கண்டு உள்ளம் நெகிழ்கிறேன் சகோ!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  25. வேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்
    வேதமாய் வந்துதித்தான்! - வானில்
    விண்மீனாய் வந்துதித்தான்!///நல்லவையாய் நடக்குமென நம்புவோம்.சிலர் பாட்டியாகவும் வந்து மண்ணில் பிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர்!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  26. nature yana padam polave ungal kaivannam manathai kollai kondathu.iniya xmas&puththandu vaalthukal thozhi

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் கீதா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய ரசனையையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  27. சிறந்த கவிதைக்குப் பாராட்டுகள்
    நத்தார், புதுவருட வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  28. இயல்பான வரிகொண்டு
    இறைதூதன் புகழ் பாடும்
    இனிய கவிதை கண்டேன்

    இரக்கத்தை எமக் கீந்த
    இயேசுபிரான் சிறப்போடு
    இளையநிலா அறிவும் கண்டேன்

    அத்தனையும் அருமை சகோ
    அறிமுகப்பதிவருக்கும் வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்களும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் அன்புறவே சீராளா!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உங்கள் கவித்திறனுக்கு முன் நான் எழுதுவது எம்மாத்திரம்...:)
      இருப்பினும் உங்களின் அன்பு வருகையுடன்
      அருமையான கவி வாழ்த்தால் என்னைப் புகழ்ந்தமை கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      இனிய வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!...[/co]

      Delete
  29. "அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே" என்ற சினிமா பாடல் நினைவில் உதித்தது உங்கள் பதிவை வாசிக்கையில் , கிட்டத்தட்ட உங்கள் கவியும் அந்த பாடலின் ராகத்தினுள் பொருந்துகிறது ! :) இனிய கிருத்துமஸ் வாழ்த்துக்கள் !., வேண்டும் வேண்டும் என்ற வேண்டுதல்கள்களை சுமந்து நிற்கும் வெண்பா அருமை ,வேண்டியன யாவையும் கிட்டட்டும்,திக்கெட்டும் தமிழ் முழங்கட்டும் ! புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா :)

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் தம்பி விஜயன்!..

      உங்களுக்கும் இனிய நத்தார், புதுவருட தின வாழ்த்துக்கள்.!

      உண்மை!...சரியாகச் சொன்னீர்கள்! அந்தப் பாடல் என் மனதில் ஓடிக்கொண்டிருக்க அதே மெட்டை அடிப்படையாக வைத்தே இப்பாடலையும் எழுதினேன்..

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மிகவே மகிழ்ந்தேன்!..

      அன்பு வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!..[/co]

      Delete
  30. அட சொல்ல மறந்து விட்டேனே !! க்வில்லிங்க் வேலைப்பாட்டில் மேரியும்,குட்டிப்பாப்பா யேசுவும் சூப்பர் !!!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]ஓ!..:) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ!...[/co]

      Delete
  31. இளமதி,

    உங்களுக்கும் எங்கள் நத்தார் வாழ்த்துகள், புதுவருட வாழ்த்துகள் + உங்கள் புதுவருட கனவு நிறைவேறவும் வாழ்த்துகள். இனிய வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

    பதிவோடு பகிர்ந்த பதிவர் தமிழ்முகில் அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சித்திரா சுந்தர்!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  32. அருமையான கவிதை.

    விழாக்கால வாழ்த்துகள்......

    நேற்று தான் எனது பக்கத்தில் தமிழ் முகில் அவர்களின் கவிதையை பகிர்ந்து கொண்டேன்.....

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரர்!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  33. கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கவைதையும் பகிர்வும் வழக்கம் போல் அருமை.பதிவர் தமிழ்முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நிறைய புதிய பதிவர்களை உங்கள் வலைப்பூ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது இளமதி.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஆசியா!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  34. தூயனாய் வந்துதித்தான்! - நல்ல தூதனாய் வந்துதித்தான்!
    புனிதனாய் வந்துதித்தான் !- உலகில் புதுமையாய் வந்துதித்தான்!
    அருமையான வரிகள் மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..
      நீண்ட கால இடைவெளியின் பின்னர் வந்துள்ளீர்கள்! மகிழ்ச்சி!

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  35. க்வில்லிங் மாதாவும் ஏசுபாலனும் மனம் கொள்ளை கொள்கிறார்கள். விண்மகன் வந்துதித்த கவிதை விஜயன் அவர்கள் சொன்னதுபோல் பாடலை வாய்விட்டே பாடவைத்துவிட்டது. அற்புதமாய் மனம் வருடும் வரிகள். பாராட்டுகள் இளமதி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் கீத மஞ்சரி!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் ரசனையும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி தோழி!...[/co]

      Delete
  36. belated christmas and happy new year .க்வேளிங் அட்டகாசம் தோழி .
    விடுமுறையில் தான் வேலைகள் அதிகமாக இருக்கின்றன .
    sorry for late wishes

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் தோழி!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  37. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    பிறக்கப் போகும் புத்தாண்டால் எல்லா நலனும் வளமும் பெருகிட
    என் இனிய வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் தோழி!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

      Delete
  38. அன்பின் சகோதரி,

    அழகான சித்திரங்களுடன் இனிய கவிதை. பாராட்டுகள்

    அவசரமாக 36 மணி நேரத்தில் = வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஏற்க வேண்டியுள்ளதாம். தங்களால் இயலும் எனில் அன்பின் சீனா ஐயா அவர்களை மின்னஞ்சலில் அணுகவும். நான் தங்கள் பெயரைப் பதிவிட்டுள்ளேன்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் ஐயா!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      உங்களின் வருகையும் உளமார்ந்த இனிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்!..

      வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!...[/co]

      Delete
  39. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. [co="OrangeRed"]வணக்கம் சகோதரி!..

      உங்களுக்கும் இனிய பண்டிகைக் கால நல் வாழ்த்துக்கள்.!

      இனிய வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி...[/co]

      Delete
  40. "விண்மகன் வந்துதித்தான்" மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. அருமை தோழி..நன்றி..உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
    க்விளிங் சொல்லவும் வேண்டுமா? அப்பொழுதும் போல மிகவும் அருமை! :)

    ReplyDelete
  42. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.