Pages

Oct 15, 2014

நல்லவரம் தா!..


பொன்வேண்டாம்! பாழும் பொருள்வேண்டாம்! பாடவொரு
பண்வேண்டாம்! இப்பணமும் வேண்டாமே! - என்றுமென்
இன்னுயிராம் பைந்தமிழ் ஓங்கவே நல்வரம்..தா!
என்னுயிரும் ஈவேன் இதற்கு!
**********



என்னையே நான்தருவே னே!


எங்கும் எதிலும் எமதுயிர்ப் பைந்தமிழைப்
பொங்கும் உணர்வோடு போற்றுவோம்! - தங்கமொழி
வென்று விரைந்துயர வீசுபுகழ் ஓங்கிடவே
என்னையே நான்தருவே னே!



கொஞ்சிடும் கோகிலமே! கோல மயிலழகே!
பிஞ்சுமொழிப் பாட்டிசைக்கும் பெட்டகமே! – அஞ்சுகமே!
அன்பால் அகம்நிறைய அம்மா எனவழைத்தால்
என்னையே நான்தருவே னே!



எண்ணம் முழுதும் இனியவனே உன்னினைவு!
உண்ணும் உணவிலும் உன்னுருவம்! - வண்ணமாய்
மின்னிடும் வாழ்வமைய வென்றிடும் சீரமைய
என்னையே நான்தருவே னே!



வீரமக்கள் வீழாது வெல்வார் எனஎண்ணித்
தீரமுடன் செய்வோம் செயல்களை! - போரிட்டே
அன்னைமண் காத்தே அரசொன்று தானமைக்க
என்னையே நான்தருவே னே!



பார்க்கும் இடமெலாம் பாய்விரித்தே நற்பசுமை
சேர்க்கும் இயற்கைச் சிறப்பென்பேன்! - சீருறும்
மண்மடி மேவும் மலையருவி பேரழகில்
என்னையே நான்தருவே னே!
*************


படங்களுக்கு கூகிளிற்கும் நன்றி

79 comments:

  1. நல்ல கவிதை..
    வாழ்த்துக்கள் சகோதரி.
    படங்களோடு கவிதைகள் இணைந்துள்ள விதம் அருமை..
    எனினும் படங்களை தவிர்த்து கவி வரிகளை தொடர்ந்தேன் முதல் வாசிப்பில் அடுத்த வாசிப்பில் தான் படம் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் மது!

      உங்கள் உடனடி வருகையும் இனிய இரசனையும் கண்டு
      உள்ளம் மிகவே மகிழ்ந்தேன்!

      அன்புடன் இனிய நன்றி சகோதரரே!

      Delete
    2. சகோதரரே!.. கிடைத்தப் படங்களுக்குக் கவிதை எழுதுவதும்
      கவிதைக்காகப் படங்களைத் தேடுவதும் என் ப(வ)ழக்கமாகிவிட்டது!..:)

      அதனால் இரண்டும் அமைந்துவிட இங்கு ஏற்றிவிட்டேன்!
      அதிகமாகிவிட்டதோ படங்கள் என இப்போது எண்ணுகிறேன்!...:0

      Delete
  2. இந்த மாதிரி பாடல் வரிகளை படிப்பதற்காக, என்னையே நான் தருவேனே!!!

    அருமை சகோதரி. அழகான படங்களுடன் அதற்கேற்ற மாதிரி அருமையான கவிவரிகள். அற்புதம். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      //இந்த மாதிரி பாடல் வரிகளை படிப்பதற்காக, என்னையே நான் தருவேனே!!!..//

      இரசித்தீர்களோ? அல்லது கலாய்த்தீர்களோ?..:))

      அன்பான வரவுடன் இனிய கருத்துப் பகிர்வும்
      வாழ்த்தும் இட்டீர்கள்! உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  3. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் விமலன்!

      உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!.. ஆயினும்
      குற்ற உணர்வு குறுகுறுக்கின்றது!.. :(
      தற்போதைய உங்கள் பதிவுகள் சில நான் பார்க்க வரவில்லை என்பதால்..:(
      வருவேன் விரைவில் அங்கும்!

      உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  4. நல்லதொரு கவிதை..மற்றும் பொருத்த‌மான படங்களும் கூட‌

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் ஜெயசீலன்!
      உங்கள் முதல் வருகை இங்கு வாருங்கள்!..

      உங்கள் இரசனையும் கண்டு மகிழ்கின்றேன்!
      மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  5. அருமையான பாடல்கள். படங்களுக்குப் பொருத்தமான பாடல்கள். பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் வெங்கட்!

      தங்கள் அன்பு வருகையும் பாராட்டும் தருகிறது மகிழ்வு!

      உளமார்ந்த நன்றி சகோதரர்!

      Delete
  6. கொஞ்சிடும் கோகிலமே! கோல மயிலழகே!

    கிள்ளை மொழியழகில் அழகான ஆக்கம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி!

      சில கால இடைவெளியின் பின்பு இங்கு
      உங்களைக் காண்பது மகிழ்ச்சி!

      இனிய இரசனையுடன் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி சகோதரி!

      Delete
  7. பாக்களாய் சிந்துமுன் நோக்கமின்னும்
    பாகாயுருகி பல்கிப் பெருகட்டும்...!
    பால்நிலவாய் பொழியட்டும் நின்
    பால்அறிவும் திறனும் மிகுந்து !

    அருமை தோழி !படங்களும் ஏற்றாற்போல் பாக்களும் வடித்தாய். தன்னையும் இழந்து தமிழையும் பெறவேண்டும் என்று துடிக்கும் இதயம் கொண்டாய் எத்துணை பற்று கொண்டாய் தமிழில் விரும்பிய அத்தனையும் பெற்றிடவே வாழ்த்துகிறேன் தோழி....! வாழ்க பல்லாண்டு...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இனியா!

      தேக்கிய எண்ணங்கள் தேர்ந்தது பாதையின்று!
      பாக்களாய்ப் பூத்ததே பார்!

      உங்கள் அன்பான வரவுடன் உணர்வு நிறைந்த
      ஊக்குவிக்கும் கருத்துகள் கண்டு கண்கள் கசிகின்றன!..
      பிறந்த பிறப்பிற்கு நல்ல அர்த்தம் நிறைந்த
      செயல்கள் - சேவைகள் ஆற்றல் வேண்டும்!

      அவ்வகையில் என்னிய மொழிக்காக என்னால்
      இயன்றதைச் செய்யச் சித்தமானேன்!

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு
      என் இதயம் நிறைந்த நன்றி தோழி!

      Delete
  8. வணக்கம் !

    தன்னையே தந்து தமிழை வளர்க்கையிலே
    என்னை விடுவேனா என்னுயிரே !-இன்பமாய்
    என்னிடத்தில் வாழும் இனிய தமிழையும்
    என்னையும் செர்த்தே எடு!

    இன்பத் தமிழால் கவிதை வடித்து என் இதயத்துள் புகுந்த
    என் ஆருயிர்த் தோழியே நீ கேட்ட வரம் என்றோ கிட்டி விட்டது !
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்பே !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்பாளடியாள்!

      உன்னையும் பாரில்நான் உள்ள வரைமறவேன்!
      அன்னை மொழிகாப்போம் ஆர்வமோடு! - பொன்னெனப்
      போற்றித் தமிழாற் புனைவோம் கவிமாலை!
      ஏற்றுவோம் தீபம் இணைந்து!

      அன்புத் தோழியே! உங்கள் உவப்பான வெண்பாவும்
      உள்ளன்பான இனிய கருத்துங் கண்டு
      என்னையே நான்மறந்தே னே!..

      எங்கள் வாழ்வே இன்மொழியோடுதானே!
      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      இதயம் நிறைந்த என் நன்றி தோழி!

      Delete
  9. அருமையான படங்களும் கவிதைகளும் சகோதரி...நீங்கள் விரும்பும் தமிழ் உங்களிடமே..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      நான் மட்டுமல்ல நீங்களும் அத்தனை ஆர்வலரும்
      ஆதரிக்கும் அன்பு மொழியல்லவோ நம் தமிழ்மொழி!..:)

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  10. வெண்பாக்கள் வெகு அருமையாய் அமைத்தல்
    பண்பாய் இணைந்துள்ளது வளர்க!- மேலும்
    எண்ணிலா வரிகள் இணைக இணைக
    இனிய நல் வாழ்த்துகள்.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் சகோதரி!

      எண்ணிலாப் பாடல்கள் என்றுமே பாடு(ம்)உன்
      அன்பில் அகம்நிறைந்தேன் ஆழ்ந்து!

      அன்பு வரவோடு அளித்த வாழ்த்திற்கு
      இனிய நன்றி சகோதரி!

      Delete
  11. வரம் கேட்கப் போகிறீகள் எனும் முன்பே தமிழ் தாய் தங்களுக்கு எப்போதோ...வரம் தந்து விட்டார்கள். தங்கள் வாயிலாக தமிழ் சுவையை நாங்கள் சுவைத்துக் கொண்டு இருக்கிறோம். பாடலும்,படமும் மாறி மாறி மனதை கொள்ளை கொண்டு விட்டது தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி உமையாள்!..

      எப்படி.. எப்படி...!..:) வரம் முன்பே தந்திட்டாளோ எனக்கு!..:)
      அதிகமாகப் புகழ்கின்றீர்கள் என்னை!..
      அவளருள் உங்களுக்கும் வாய்த்திருக்கின்றது.
      அழகிய பாடல்களாய்த் தருகிறீர்களே நீங்களும்!
      அருமை! நான் மிகவே இரசிக்கின்றேன்!

      அன்பான வரவோடு இனிமையான கருத்துப் பகிர்தலுக்கு
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  12. Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தாய்நாடு போனாலும் தருகின்ற ஆதரவு கண்டு
      உள்ளம் சிலிர்த்தேன் சகோதரரே!

      அன்பு நன்றி!

      Delete
  13. அழகு அழகு! என்ன சொல்ல மிக அருமையாக அமைந்திருக்கிறது. தோழி பாக்கள். தங்கள் ஆர்வம் என்னிலும் மிக இதோ நேரம் இருப்பின் வருகை தரவும்.
    http://veesuthendral.blogspot.in/2014/10/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி சசிகலா!

      உங்களைவிட நான் அழகில்லை!..:)
      மணக்க மணக்க நீங்கள் தரும் மண்வாசனைப் பாடல்களுக்கு
      இவை ஈடாகுமா?.. சொக்க வைக்கின்றீர்களே! அற்புதம்!

      உங்களின் அன்பான வரவிற்கும் இனிய இரசிப்பிற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  14. வெண்பாக்களை கோர்த்து தந்த பாமாலைகள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      பாமாலை என்று படைத்த புகழ்மாலைக்கு
      மிக்க நன்றி சகோ!

      Delete
  15. வணக்கம்
    சகோதரி
    சொல் விதைத்தீர் அச்சொல்லே. என்
    நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல் .பதிந்தது..

    அழகான வரிகள்.... இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் ரூபன்!

      சொற்கள் விதையெனில் சொல்வோம் நனிநன்றி!
      கற்பிக்கும் ஆசானுக் காம்!

      அன்பான வரவிற்கும் இனிய நற்கருத்துப் பகிர்விற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  16. தோழி இளமதியின் கவிதை இனிமை:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி மைதிலி!

      வாருங்கள்!.. கிணற்றடியில் பிள்ளையோ?..:)
      மிக அவசரமாக வந்து போகின்...றீர்..கள்
      அதுதான் கேட்டேன்!..:))
      சும்மா கலாய்த்தேன்! கர்ர்ர் என்றிடாதீர்கள்!..:)

      எப்படியாயினும் உங்கள் வரவும் இரசனையும்
      எனக்கு மகிழ்வே! நன்றி தோழி!..:)

      Delete
    2. வாருங்கள்!.. கிணற்றடியில் பிள்ளையோ?..:)
      மிக அவசரமாக வந்து போகின்...றீர்..கள்
      அதுதான் கேட்டேன்!..:))
      சும்மா கலாய்த்தேன்! கர்ர்ர் என்றிடாதீர்கள்!..:)***
      ஹா....ஹா...சூப்பர் டா!
      பொதுவா இறைவணக்கம் போல உள்ள கவிதைகளை நான் கொஞ்சம் தவிர்ப்பேன் அவ்ளோ தான். கரக்டா பிடிச்சுடீங்களே:))

      Delete
  17. விண்ணோங்கு மெந்தமிழில் வீறுடைய வெண்பாவில்
    எண்ணங்கள் பாடும் இளமதியார் - பண்கேட்டு
    அன்னை தமிழ்மகிழும் ஆழ்ந்த கவிச்செருக்கில்
    என்னையே நான்மறந்தே னே!

    கவிஞரே!
    தவறாக நினைத்துவிடக் கூடாது..
    உண்மையில்
    இது
    புலியைப் பார்த்துப் பூனை போட்டுக் கொண்ட சூடு!!!
    வேறென்ன சொல்ல..
    கவிதைகள் மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!.. வாருங்கள்!..

      என்னையே நான்மறக்க இங்கெழுதும் அன்புடையீர்!
      சின்னவளென் சிந்தை சிறப்பித்தீர்! - என்றுமே
      இன்னுயிராம் நம்தமிழ் எங்கும் மிளிர்ந்திடவே
      ஒன்றிணைந்து ஆற்றுவோம் தொண்டு!

      என்ன இது.. மீண்டும் கவிஞரே என்...று... கர்ர்ர்ர்...:))

      ஆமாம் புலி நீங்கள் பூனை நானே! ஆமோதிக்கின்றேன்!
      ஐயா!... உங்களைப் போன்றோர் செதுக்கும் சிலையில்
      சிதறும் சில துணிக்கைகளை மெல்லச் சுட்டு
      இட்டவை இவை! உங்களுக்கு எதிரில் நான் நிற்கலாமா?..:))

      ஐயா!.. அன்பான வரவுடன் அருமையான வெண்பா வாழ்த்துத் தருவது கண்டு உள்ளம் உவகையாற் துள்ளுகிறது!
      இதற்காகவே தினம் ஏதாவது பதிவிடலாமோ எனவும் எண்ணுகிறேன்!

      வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  18. படங்களும், கவிதை வரிகளும் அருமை சகோதரி! ஹப்பா எப்படி இவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள்! மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      உங்களின் அன்பான வரவுடன் இனிய கருத்துக்கு
      உளமார்ந்த நன்றி சகோதரர்!

      Delete
  19. முதல் இரண்டு பாக்கள் பாவிற்காக மட்டுமே இருக்க முடியும். மற்ற பாடல்களில் உண்மை வெளிக்காட்டுகிறது. அருமையாய் புனையப்பட்ட பாக்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பான வரவுடன் இனிய நற் கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  20. படங்களும் கவிதைகளும் அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete

  21. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவும் இனிய கருத்தும் கண்டு மகிழ்கின்றேன்!
      நன்றி ஐயா!

      Delete
  22. அன்புச்சகோதரி,

    ’என்னையே நான்தருவே னே’
    நல்ல பாவைத் தந்தீர்கள்...
    பைந்தமிழ் ஓங்கவே உயிரைக் கொடுக்கத்
    தயாரான தமிழ்ப்பற்றுத்தான் என்னே!

    ’போரிட்டு அன்னைமண் காத்து அரசொன்று
    தானமைக்க என்னையே நான்தருவே னே! ’

    அருமையான உணர்ச்சிப்பூர்வமான கவிதை.... வாழ்த்துகள்.
    ‘இவர்கள் இருக்கிறார்கள்’ -எனதுசிறுகதைக்கு தங்களின் பின்னூட்டம்
    கண்டேன்... உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. என்னுடைய முந்தைய சிறுகதைகளை நேரம் இருப்பின் பார்த்துக் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன். தங்களின் டேஸ்போர்டில் தெரியவில்லை என்றால் மீண்டும் அந்தக் கதைகளை வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      எங்கள் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்தது
      தமிழ் மொழி இனப் பற்று!
      எத்தனை அல்லலுற்றும் அவளக் காக்க உயிரையும் தர வேண்டுமெனத் துடிக்கிறது இன்னும் எனது இதயமும்..

      தங்களின் அன்பான வரவுடன் உணர்வுமிக்க
      ரசனைகண்டு நெகிழ்ந்தேன் ஐயா!

      தங்களின் பழைய பதிவுகளை அங்கேயே அவ்வப்போது வந்து படித்துக் கருத்திடுவேன்.. நேரம் கொஞ்சம் பஞ்சமாக இருக்கின்றது!.. மீள் பதிவு தேவையில்லை!

      தங்கள் அன்பிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  23. அன்பில் அகம்நிறைய அம்மா எனக்கூறு
    என்னையே நான்தருவே னே!//

    அருமையான தாய்மை நிறைந்த வரிகள்.
    பக்தி, பாசம், காதல், நாட்டுபற்று அனைத்தும் நிறைந்த கவிதை, அதற்கு பொருத்தமான படங்கள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா!

      தங்களின் இனிய வருகையும் இரசனையும் கண்டு மகிழ்கின்றேன்!

      வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி அக்கா!

      Delete
  24. தீபாவளி நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      அன்பு வாழ்த்திற்கு நன்றியுடன்
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      Delete
  25. இளமதியே உங்கள் இனியதமிழ்ப் பாட்டில்
    உளம்மகிழ்ந்து போனேன் உவந்து- வளர்தமிழின்
    கன்னல் கவிதைக்கு கண்ணிரண்டும் மூடியே
    என்னையே நான்தருவே னே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      உளம்மகிழத் தந்தீரே உன்னத வெண்பா!
      இளமதியென் உள்ளம் இனிக்க! - வளர்தமிழில்
      இன்கவி நான்பாட என்னாசான் நல்லருளே!
      சொன்னேனே நன்றி தொழுது!

      நீங்களே மகாகவி!
      உங்கள் புகழ்ச்சி கண்டு உளம் மகிழ்கின்றேன் நான்!

      அன்பான வரவுடன் இனிய வெண்பா வாழ்த்திற்கு
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  26. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உமையாள்!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      Delete
  27. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி இனியா!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      Delete
  28. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      Delete
  29. இனிய கவிதைகள் படைத்திட்ட தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்மு!

      வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
      இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      Delete
  30. வெண்பாக்களும் அதற்கேற்ற பொருத்தமான படங்களும் அருமை

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் சாம்! வாருங்கள்!..
      தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மகிழ்வுறுகிறேன்!

      இனிய கருத்து நல்கினீர்கள்!
      இதயம் நிறைந்த நன்றி!

      உங்கள் வலைத்தளத்திற்கும் வந்து கருத்திட்டேன் சகோதரரே!
      வாழ்த்துக்கள்!

      Delete
  31. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த இனிய நன்றி!
      தங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா

      Delete
  32. அன்பின் இளமதி! மிகச் சரளமான வரிகள்.சுகமான வெண்பாக்கள். அத்தனையும் பூவாய் மலர்ந்த கவிதைகள். சிவகுமாரன் தன்னையே தருவதாய் வாழ்த்திய பின் வேறென்ன சொல்ல?. இந்தக் கவிமனத்தை சிப்புக்குள் அடைத்து கவிதை முத்துக்களாய் உதிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் மோகன்ஜி!..
      என் வலைத்தளத்தில் உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்வடைகின்றேன்!..

      உங்களின் இனிமையான இரசனையும் அருமையான கருத்தும் என் உள்ளத்தைக் குளிரச்செய்கிறது.
      கவிஞர் சிவகுமாரன் மெச்சியதுகூட என் பேறுதான் சகோதரரே!..
      எல்லோரின் மனமும் உவக்கக் கவியெழுத
      இன்னும் ஆற்றல் பெருகிட வேண்டுகிறேன்..!

      தங்களின் அன்பு வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்விற்கும்
      என் உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete

  33. வணக்கம்!

    மின்னும் இளமதியார் மீட்டிய வெண்பாக்கள்
    பொன்னின் மணியாய்ப் பொலிந்தனவே! - இன்பமுடன்
    அன்னை அருந்தமிழை அள்ளி அருந்தியதும்
    என்னை இழந்தேன் இளைத்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மின்னிடும் வெண்பா மிகவே தருவதற்கு
      இன்னுமே கற்றிட எண்ணுகிறேன்! - கண்ணெனப்
      போற்றியே காத்திடும் பைந்தமிழ்த் தாயுவக்க
      என்னையே ஈவேன் இதற்கு!

      தங்களின் அன்பு வருகையுடன் ஊக்கப்படுத்தும்
      ஒப்பற்ற வெண்பாக் கருத்துக் கவி கண்டு உள்ளம் பூரித்தேன்!

      உங்களிடம் மேலும் கற்கவே ஏங்குகிறது மனம்.
      காலம் கைகொடுத்தால் கற்பேன்!
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  34. அன்புச்சகோதரி,
    நலம். நாடுவதும் அதுவே!
    மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா, மதுரையில் நடைபெற்றதில் முதல்முதலாக கலந்து கொண்டேன். மகிழ்ச்சி.

    அதில் நான் அறிமுகம் செய்து கொள்கின்ற பொழுது, தாங்கள் எனது படைப்பிற்கு பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துவதை பெருமையோடு அரங்க மேடையில் நினைவு கூர்ந்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பலரின் அறிமுகம் கிடைத்தது.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தாங்கள் கலந்துகொண்ட வலைப்பதிவர் விழாவில்
      அடியேனையும் அங்கு நீங்கள் சிறப்பித்துக்
      கூறியமை கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன் ஐயா!
      என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!.. என
      என்னை நானே கேட்டுக்கொண்டேன்!

      இத்தகைய விழாக்களில் கலந்துகொள்ளவோ மகிழவோ
      கிட்டாவிடினும் உணர்வால் ஒன்றியிருந்த நிலையில்
      நீங்களும் அங்கு என்னைக் குறித்தும் கூறியமைகண்டு
      பேச்சிழந்து நிற்கின்றேன்!

      தங்கள் மதிப்பிற்கும் அன்பிற்கும் என்
      இதயம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  35. மிகவும் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்!!!..

    //பொன்வேண்டாம்! பாழும் பொருள்வேண்டாம்! பாடவொரு
    பண்வேண்டாம்! இப்பணமும் வேண்டாமே! ///
    அப்போ என் அட்ரசுக்கு அனைத்தையும் அனுப்பிடுங்கோ :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா!
      தாமதமானாலும் வாழ்த்துக்களுக்கு வயசாவதில்லையே!..:)
      அன்புதானே முக்கியம்!..
      மிக்க நன்றி! உங்களுக்கும் என் உளமார்ந்த அதே
      தாமதமான இனிய வாழ்த்துக்கள் அதிரா!..:)

      ஓ.. அனுபினாப் போச்சு.!. உங்களுக்கில்லாததோ...:)
      அட்டரஸ் தாங்கோ..
      இப்பவே.. இங்கேயே...:))

      Delete
  36. சிக்காது ஓடிடும் நதியின் ஊற்றாய்
    மலைச் சறுக்கில் நிற்கா சரளமாய்
    பொழியும் பொன்னருவி போலே தாக்கம்
    செம்மை செய்திட்டாய் தாயே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்கள் முதல் வருகை இங்கு கண்டு மகிழ்வு கொண்டேன்!

      செம்மையைத் தந்தவள் செந்தமிழ் தாயவள்!
      இம்மையில் பாடென்னை என்று!

      அருமையான கவிவாழ்த்தும் தந்தீர்கள்!
      எல்லாம் அன்னைத் தமிழருளும்
      என் ஆசான் அன்பு வழிகாட்டலுமே!

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  37. வணக்கம்..!சகோதரி,! தங்களின் கவியுள்ளம் கண்டு,சுவைமிக உண்டு,நான் ஆனேன் சிறு வண்டு.!
    "இன்னுயிராம் பைந்தமிழ் ஓங்கவே நல்ல வரம் தா"
    "என்னையே நான் தருவே னே"..கவிதைகள் அத்தனையும் சுவைக் கற்கண்டு !
    வாழ்த்துகள்.! ..
    இயன்றால் என் வலைத் தளத்திற்கு வாருங்கள்.!

    ReplyDelete
    Replies
    1. வனக்கம் சகோதரரே!
      தங்களின் முதல் வருகை இங்கு காண்கிறேன்!
      மிக்க மகிழ்ச்சி!

      வரவோடு இட்ட வளமான வாழ்த்தில்
      உறவாகி நின்றேன் உவந்து!

      தங்கள் வாழ்த்திற்கு என் உளமார்ந்த நன்றி சகோதரரே!
      அதிகமாகப் புகழுகின்றீர்கள்!..:)

      வருவேன் உங்கள் தளத்திற்கும்!
      வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

      Delete
  38. “நல்லவரம் தா“என்றீர், தந்தானா? தங்கையே?
    “நல்வரம்தா“ என்றிருந்தால் நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! வாருங்கள்!..
      இங்கு உங்களைக் காண்பது மட்டற்ற மகிழ்வைத்தருகிறது!

      நாரணன் அருள் தந்துவிட்டானே!.. உங்கள் மூலமாக..:)
      நல்லவரம் அதனை நல்வரமாகக் கேள் தருகிறேன் என்று..!

      எழுதும்போது ஏதாவது ஒரு சிந்தனை இப்படி எழுதிவிடுவதுண்டு. பின்னர் பார்த்துப் பார்த்துத் திருத்துவேன்.
      கற்றுக்குட்டிதானே ஐயா இன்னும் நான்..!

      அப்படியே செய்கிறேன்!
      ஆனால்... தலயங்கம் இனித் திருத்தலாமோ?..
      விபரம் தெரியாது எனக்கு...! யாரையாவது கேட்டபின்பு திருத்திவிடுகிறேன் ஐயா!

      மிக்க நன்றி வரவிற்கும் நற் கருத்திற்கும் ஐயா!

      Delete
  39. தமிழோடு தாய்மை, காதல், வீரம், இயற்கை என வாழ்வின் அனைத்தம்சங்களையும் சிலாகித்து அற்புதமாய்க் கவியியற்றியுள்ள உங்களுக்கு என் அன்பான பாராட்டுகள் இளமதி. உங்கள் கையசைப்பில் தமிழ்த்தாய் நளினமாய் நடமிடுகிறாள்.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.