Pages

Jan 17, 2015

பூந்தமிழ் வாழ்த்துக்கள்!..


வலையுலக அன்பு உறவுகள் அவர்தம் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் உளமார்ந்த தமிழர் புத்தாண்டுப்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

1.
பொங்கல் திருநாளின் பூந்தமிழ் வாழ்த்துக்கள்!
எங்கும் மலர்க எழில்!

2.
தமிழரின் புத்தாண்டைச் சாற்றி மகிழ்ந்தே
அமிழ்தப் பொங்கலை ஆக்கு!

3.
திருவள்ளுவர் ஆண்டின் சிறப்புகளைப் போற்றி
அரும்பொங்கல் ஆட்டத்தை ஆடு!

4.
நீருயர ஏருயரும்! ஏருயர ஊருயரும்!
சீருணர்ந்து பொங்கலைச் செய்!

5.
அன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!
இன்பத் தமிழ்போல் இனித்து!

6.
பண்பமுது பொங்கட்டும்! பாசத்தேன் பொங்கட்டும்!
பண்ணமுது பொங்கட்டும் பாடு!

7.
ஒற்றுமை பொங்கட்டும்! ஒண்டமிழ்த் தாயவளின்
நற்றுணை பொங்கட்டும் நன்கு!

8.
மனிதம் மலரட்டும்! மாண்பு மணக்கட்டும்!
கனிபோல் உலகம் கமழ்ந்து!

9.
எங்கும் பொதுமை இனிதே பொலிந்தாடச்
சங்கத் தமிழ்நெறியைச் சாற்று!

10.
நல்லாண்டு நாடி இளமதி வாழ்த்துரைத்தேன்
பல்லாண்டு வாழ்க படர்ந்து!
~~~~~~~

உடல் நலக்குன்றலின் காரணமாய் வாழ்த்துத் தருவதில்
காலதாமதமானதற்கு வருந்துகின்றேன்!!! 


பட உதவி கூகிள்!

46 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இளமதி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அஞ்சு!..

      அன்பான முதல் வரவுடன் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி!
      உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

      Delete
  2. எப்போது வாழ்த்தினாலும் அது வாழ்த்துதான். தங்களுக்கும் வாழ்த்துக்கள். ( ஆமா.. உடல்நிலை இப்போது பரவாயில்லையா.!)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!
      (உடல் நலம் ஓரளவு பரவாயில்லை.. அக்கறையான விசாரிப்பிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ!)

      Delete
  3. வணக்கம்
    ஒதிய வரிகள் படித்தேன் உள்ளம் மகிழ்ந்தது,..சகோதரி...
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் ரூபன்!

      உள்ளம் மகிழ்ந்து உடன் வாழ்த்தியமைக்கும்
      இனிய நன்றி சகோ!

      Delete

  4. வணக்கம்!

    பொங்கல் திருநாளைப் பொங்கும் குறட்கவிதை
    எங்கள் மனத்துள் இருந்தொளிரும்! - திங்களே!
    உன்றன் தமிழாற்றல் ஓங்கி வளரட்டும்!
    அன்பாம் அமுதை அளித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      பொங்கும் தமிழறிவைப் போற்றி மகிழ்ந்திட
      எங்களுட னேயிருப்பீ ரே!

      தாங்கள் எம்முடன் இருக்கத் தடையறக் கற்று
      ஆற்றலை ஓங்கச் செய்வோம் ஐயா!

      இனிய வெண்பா வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  5. நன்றி சகோதரியாரே
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    தம 4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பு வாழ்த்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும்
      நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  6. மனிதம் மலரட்டும்! மாண்பு மணக்கட்டும்!
    கனிபோல் உலகம் கமழ்ந்து!//
    அருமை.
    இனிமையான பொங்கல் , புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    இப்போது உடல் நலமாகி விட்டது அல்லவா இளமதி? மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோமதி அக்கா!

      அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அக்கா!
      நலமாகி வருகின்றேன்.. எனக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  7. பொங்கல் திருநாளின் பூந்தமிழ் வாழ்த்துக்கள்..
    எங்கும் மலர்க எழில்!.

    உடல் நலனைக் கருத்தில் கொள்க..
    எங்கும் நலமே நிறையட்டும்..
    அன்பின் நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பிற்கும் அக்கறையான விசாரிப்பு, வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா! கவனம் கொள்கின்றேன்! நன்றி!..

      Delete
  8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்களின் உதவியாற்தான் தமிழ்மணம் வாக்குப் பட்டை வேலை செய்யத்தொடங்கியது! அதற்கு என் உளமார்ந்த நன்றி!..
      உங்கள் ராசி அப்படி! ஒருதரம் உங்கள் பார்வை பட்டாற் சரியாகிவிடுகிறது!.. அதனாற்தான் சென்ற முறையும் இதோ இம்முறையும் எனக்கு வாக்கு இட்டு தமிழ்மணத்தில் என் பதிவுகள் வலம் வருகின்றன!

      மிக்க மகிழ்ச்சியுடன் மீண்டும் உளம் நிறைந்த
      நன்றி சகோதரரே!

      Delete
  9. Replies
    1. வணக்கம் சகோ!

      வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      Delete
  10. //நீருயர ஏருயரும்! ஏருயர ஊருயரும்!
    சீருணர்ந்து பொங்கலைச் செய்!//
    கட்டுற பள்ளிக்கூடம் பஸ் ஸ்டாண்ட் என அத்துணை அரசுக் கட்டிடங்களும் கண்மாய்ப் புறம்போக்கில்தான் ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      உணர்வோடு கூறிய உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றி!

      Delete
  11. Replies
    1. தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சகோ!

      Delete
  12. அடடா வியந்தேன்! அழகுவெண்பா பொங்கல்
    சுடச்சுட தந்தாய் விருந்து:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி!

      படபட என்றிங்கு பாடினீர் தோழி!
      வெடவெடத்து நின்றேன் வியந்து!

      மிக்க நன்றி!..:)

      Delete
  13. திங்களே தாய்நாட்டின் தென்றலே என்றும்நாம்
    மங்கள மாய்வாழ பொங்கியே பூரிக்க
    பூங்கவிதை தான்புனைவாய்! பொன்மகளே
    சங்கடம் இன்றிவாழ்வாய் நன்கு !

    சிறந்த கவிகளை சிந்தை குளிரவே
    தந்தாய் நிறைவாய் துதித்து!

    அருமைம்மா தோழி! தாமதமான இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் ...!

    ReplyDelete
    Replies
    1. வனக்கம் இனிய தோழியே!

      சங்கடங்கள் தீரத் தமிழன்னை காப்பாளே!
      இங்கிடுவேன் பா!..உனக்கே என்று!

      அன்புடன் இட்ட அருந்தமிழ்ப் பா வாழ்த்துகளுக்கு
      உளமார்ந்த நன்றி மா!

      Delete
  14. பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இளமதி.
    அருமையான வெண்பா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வணக்கம் தோழி !

    கறந்தபா லில்கருந்தேன் இட்டதுபோல் நற்குறளும்
    தந்தாய் இனிக்கும்நல் வாழ்த்து !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
    வாழ்துக்களும் உரித்தாகட்டும் தோழி !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி!

      கன்னற் தமிழ்ச்சுவை காணும் கவிகற்க
      மின்னி வரும்பா மிதந்து!

      அன்பு வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  17. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இளமதி.
    அழகாக குறள் வெண்பா வாழ்த்துக்கள் தந்திருக்கீங்க.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரியசகி!

      இனிய கருத்தும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      உளமார்ந்த நன்றி பிரியா!

      Delete
  18. குறள் வடிவில் வாழ்த்துக்கள் அருமை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் சுரேஷ்!

      அருமையான கருத்தும் இனித்திடும் வாழ்த்திற்கும்
      மனமார்ந்த நன்றி சகோ!

      Delete
  19. அன்னையிட்ட அத்தீ அணைத்தெழுந்த இப்பொங்கல்
    நன்றுநன்று என்பேனே நான்!

    வாழத்துகள் சகோ!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      ஆக்கும் அணைத்திடும் அன்னையிட்ட தீயது!
      ஊக்குமே என்னுள் ஒளிர்ந்து!

      அன்புடன் வந்திட்ட வாழ்த்திற்கும் ஊக்கந்தரும்
      இனிய உணர்வுக் குறளிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      த ம வுக்கும்!...:)

      Delete
  20. திருக்குறள் மாதிரி இது பொங்கல் குறள். சூப்பர்.வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  21. அன்புச் சகோதரி,

    சொல்லாண்டு கூடி சுகமதி பெற்றிட்டே
    எல்லா நலமுடன் வாழ்!
    த.ம.10

    ReplyDelete
  22. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  23. அடடா கொஞ்ச நாளா புளொக் உடன் மீ கோபம்:) எட்டியே பார்க்கவில்லை.. இன்றுதான் பார்க்கிறேன் வோட்டும் போட்டேன்.

    பொங்கலும் கவியும் அருமை.. உங்களுக்கும் இனிய தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ஐயஓ சகோதரி எப்படியோ இது விடுபட்டு போனது! மன்னிக்கவும்.

    கவி அருமை!குறளாய் வாழ்த்துக்கள்! அருமை! சகோதரி! சுவையுடன் பொங்கல் நாள் கடந்தாலும் சுவையுடன், இனிதே உள்ளது....

    ReplyDelete
  25. ரொம்ப நாட்களாகி விட்டது. இளமதியை விசாரிக்க வேண்டும் என்று தோன்றியபோது உடனே வந்திருக்கிறேன். உடல் நலம் எப்படி இருக்கு. கவிதை வடிவில் பொங்கலுக்கான குறள்கள் எல்லாம் இனிமை,அருமை. வாழ்த்துக்கள் உனக்கு எப்போதும். ஆசிகளுடனும்
    அன்புடனும்

    ReplyDelete
  26. வரிகள் அருமை! கருத்திட்ட நினைவு.....

    தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது சகோதரி. விஜு ஆசானின் தளத்தில்தான் தெரிந்து கொண்டோம்....தங்கள் உடல் நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்...சகோதரி!

    ReplyDelete
  27. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  28. நலமா சகோதரி,
    இறைவன் உங்களுக்கு உடல்நலத்தை அருளட்டும் ...
    பிரார்த்தனைகளோடு

    ReplyDelete
  29. அன்பு நட்புகளுக்கு இனிய வணக்கம்!

    இங்கு வந்து இட்ட உங்கள் கருத்துகளுக்குத் தனித்தனியாக பதில் எழுதவில்லை எனக் குறை எண்ண வேண்டாம்.

    அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இனிய கருத்துகளுக்கும் என் உளமார்ந்த நன்றியுடன் மனமார்ந்த நல் வாழ்த்துக்களும்!

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.