Pages

Jul 17, 2015

இடர்நீக்கிக் காப்பாய் இனி!..

ஊனை உயிரை உலுக்கிய நோயதுவும்
தானே தளர்ந்து தணிந்ததுவே! - தேனே!
சுடர்தமிழே! உன்னைத் தொழுகின்றேன்! என்றன்
இடர்நீக்கிக் காப்பாய் இனி!
~~~~~~~~~~~~~~~

வலையுலக அன்பு உறவுகளே!..


உங்கள் அனைவரதும் அன்பினாலும் வேண்டுதல்களினாலும்
கருணைக்கண் திறந்த இறைவன்  நல்லருளினால் 
ஓரளவுக்கு நலமாகி மீண்டும் வலையுலகிற்கு வந்துள்ளேன்.

எனைத் தேடித் தங்கள் வலைகளில் பதிவுகளிட்டுப் பிரார்த்தனை,
வேண்டுதல்கள் செய்தும், வாழ்த்துக்கள் பகிர்ந்தும்,
அனைத்து வழிகளாலும் என் சுகநலம் விசாரித்த அத்தனை 
அன்பு நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியுடன் 
அன்பு வணக்கத்தையும் இனிய வாழ்த்தினையும் கூறிக்கொள்கின்றேன்!
 ~~~~~~~~

சொன்னேன் நன்றி உறவுகளே!
~~~~
கொஞ்சும் மொழியில் படைப்புகளைக்
குளிர வலையில் தருவோரே!
தஞ்சம் கொண்டேன் தமிழிடமே
தந்தாள் தயவு பாடுகிறேன்!
விஞ்சும் அன்பு நிறைந்தவரே!
வேண்டி வணங்கி நிற்கின்றேன்!
நெஞ்சம் நிறைந்த நன்றியினை
நெகிழ்வாய் இங்குத் தருகின்றேன்!

வஞ்சம் கபடம் ஏதுமில்லை
வலையில் என்னைத் தேடினீரே
மிஞ்சும் உங்கள் அன்பொன்றால்
மீண்டும் எழுதத் தூண்டினீரே!
மஞ்சும் மருண்டு போய்விடவே
மழையாய்ப் பாசம் தனைப்பொழிந்தீர்!
பஞ்சாய் உள்ளம் கொண்டவரே!
பகர்ந்தேன் நன்றி உங்களுக்கே!

அஞ்சும் நோய்கள் அகன்றிடவே
அன்பாய்ச் சொன்னீர் கைமருந்தே!
இஞ்சி கடுக்காய் இன்னுமென
எடுத்தால் பெறுலாம் நலமென்றீர்!
கஞ்சி காய்ச்சிக் குடியுமெனக்
காற்றின் வழியே உரைத்திட்டீர்!
துஞ்சல் துயரம் போனதுவே!
சொன்னேன் நன்றி உறவுகளே!


படங்கள் உதவி கூகிள்!

71 comments:

 1. ஆஹா ஆஹா ....அருமைத் தோழியே வருக !வருக ! நலம் பல பெறுக !
  என்றும் இதுபோல மகிழ்வுடன் வலம்வர வருத்தும் நோய் வடிந்து விடும். மிக்க மகிழ்ச்சியம்மா. பார்த்தவுடன் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை திரும்பதிரும்ப பார்த்துவிட்டுத் தான் உள் நுழைந்தேன். ஹா ஹா ...வீறு நடை போடுங்கள் தோழி வலையில்.
  நம்பிக்கை தானே வாழ்க்கை இல்லையா எம் எல்லோரது நம்பிக்கையும் வேண்டுதலும் பலித்தது. எல்லா நலன்களும் சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! ஆண்டவனுக்கும் என் நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் என் அருமைத் தோழியே!..

   ஓடோடி வந்து என்னை வாழ்த்தி வரவேற்றமைகண்டு
   உள்ளம் நெகிழ்ந்தேன்!
   தங்களின் அன்பும் வேண்டுதலுங்கூட என்னை மீண்டும்
   வலையுலகிற்கு இழுத்து வந்துள்ளது! மிக்க நன்றி தோழி!
   எண்ணம் போல் எல்லாம் அமைய
   இறை அருள் துணை வரட்டும்!..

   மீண்டும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

   Delete
 2. உங்களை மறுபடியும் பதிவுலகில் நல் உடல்நலனுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி, இளமதி அவர்களே! :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் வருண் அவர்களே!

   உங்களையும் இங்கு முதன் முதலில்
   காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

   அன்பான வரவிற்கும் நல் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

   Delete
 3. நல்ல தமிழ் சொல்லெடுத்து
  மெல்ல நல்ல கருத்தைச் சொல்ல
  அழகுத் தமிழ் நடையிலே
  அன்பு உள்ளங்களைக் குடையும்
  பாப்புனையத் தமிழ்த்தாய் உதவ
  உடல்நலம் பேணி வந்திங்கே
  தமிழ்நலம் பேணும் பாக்களைத்தர
  தாங்கள் நலமடைய வேண்டி
  நான் வணங்கும் விநாயகரை
  பணிவாக வேண்டி நிற்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உள்ளம் மகிழ உவந்தளித்த உங்கள் இனிய
   கருத்துப் பா மழையில் நனைந்தேன்!

   அன்போடு வாழ்த்தி வேண்டுதல் செய்திடும் உங்களுக்கு
   என் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 4. மீண்டும் உங்களை வலையுலகிற்கு வரவைத்த இறைவனுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி ...
  வருக வருக :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்பு அஞ்சு!..

   உங்கள் அன்பினையும் நான் அறிவேன்!
   இனிய வருகைக்கும் வரவேற்பிற்கும் உளமார்ந்த நன்றியுடன்
   என் வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

   Delete
 5. மிக்க மகிழ்வு தரும் செய்தியுடன்
  அற்புதமான கவிதையுடன்
  தங்கள் பதிவினைக் கண்டதும்
  மனம் மிக மகிழ்ந்தோம்

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களை இங்குக் கண்டதும் மட்டற்ற மகிழ்வு கொண்டேன்!
   இனிய வரவிற்கும் அன்பு வாழ்த்திற்கும்
   என் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 6. தாங்கள் உடல் நலம் பெற்று ப் பொங்கி வரும் புது நுறையுடன் கூடிய புது வெள்ளம் போல்,
  புதிதாகத் தோன்றும் தாமரை போல்,
  வலை உலகில் தோன்றியது
  எனக்கு உவகை அளிக்கிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   என் மனத்திலும் உங்களின் அன்பும் அரவணைப்பும் கண்டு
   உவகை மேலோங்குகின்றது. மிக்க மகிழ்ச்சி ஐயா!

   அன்புடன் நன்றியையும் கூறுகின்றேன்!

   Delete
 7. மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி. தமிழால் நன்றிக் கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   மீண்டு(ம்) வந்துள்ளேன் தான்! இத்தனை அன்பு இதயங்களின்
   ஆதரவும் வேண்டுதலும் என்னை மீட்டு வந்துள்ளது!

   இனிய வரவுக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

   Delete
 8. வணக்கம் இளம்தி, வாழ்க வளமுடன். நானும் நான்கு மாதங்கள் வலை பக்கம் வரவில்லை அதனால் உங்கள் உடல் ந்லை சரியில்லை என்பது தெரியாது. இப்போது இறைவன் அருளாலும் அன்பர்கள் பிராத்தனையாலும் நலம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.
  கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   அடடா..! என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் வலைப்பக்கம்
   உங்கள் வருகையும் தடைப்பட்டது?..
   எது எப்படியோ நலமோடிருக்க வேண்டுகிறேன் அக்கா!

   நானும் உங்கள் எல்லோரினதும் அன்பெனும் சக்தியால்
   இறையருள் கிட்ட ஓரளவுக்குத் தேறி வந்துள்ளேன்.

   தங்கள் வரவும் இனிய அன்புப் பகிர்வும் கண்டு மகிழ்கிறேன்.
   மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா!

   Delete
 9. வரவை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் சகோதரி... தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மிக்க உவகையும்
   தெம்பும் தருகிறது!
   நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!

   Delete

 10. வணக்கம்!

  வண்ண இளமதியார் வாழ்வோங்க! எந்நாளும்
  எண்ணம் இனித்தோங்க! இன்போங்க! - திண்ணமுடன்
  நண்ணும் நலமோங்க! நற்றமிழின் சீரோங்கக்
  கண்ணன் திருவடியே காப்பு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   வண்ண மலர்க்காடாய் வாசம் தருவது
   எண்ணம் நிறைந்திட்ட இன்தமிழே! - மண்ணுலகில்
   திண்ணமுடன் வாழ்ந்து தெளிவுறக் கற்கவந்தேன்!
   பண்ணவர் உம்மைப் பணிந்து!

   (பண்ணவர் = குரு)

   தங்களின் அன்பான வரவுடன்
   இனிய வெண்பா வாழ்த்தும் கண்டு
   உள்ளம் மிகவே மகிழ்கின்றேன்!

   திருவருளுடன் குருவாகிய உங்கள் அருளும் கிட்டிடப்
   பெருகும் எனக்குத் தமிழ்மொழி வளமும் ஐயா!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. நம்பவே முடியவில்லை
  முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்
  தம +

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   நம்புங்கள்!... நானேதான்..:)
   வந்துவிட்டேன்..:))

   தங்களின் அன்புத் தேடலிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 12. நலம் பெற்று மீண்டும் வலையுலகம் வந்தமைக்கு வாழ்த்துகள்.

  தொடர்ந்து சந்திப்போம்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு உவகை கொண்டேன்!

   நிச்சயம் வருவேன் உங்கள் வலைப்பூக்களுக்கும்!
   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 13. Replies
  1. வணக்கம் சகோதரரே!

   சென்னையில் நின்றாலும் என்னை வரவேற்றிருக்கின்றீர்கள்!..

   மிக்க மகிழ்ச்சி! + நன்றி! + வாழ்த்துக்கள்!

   Delete
 14. வாருங்கள்! வாருங்கள்! என் அன்புத் தோழியே எத்தனை நாள் ஏங்கித்தவித்திருப்போம் என்று வருவார் எங்கள் தமிழ் ஆர்வம் மிக்கத் தோழி என்று. இன்றைய என் மகிழ்விற்கு எல்லையில்லை..
  நலம் தானே தோழி?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் தோழி!

   உங்களின் மகிழ்ச்சி எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது இங்கு..:)
   தேடல் கொண்ட நல் இதயங்களின் ஆத்மார்த்தத் தொடர்பு
   அவ்வளவு விரைவில் தொலைந்திடாதல்லவா?..

   அனைவரின் அன்பு சூழ்ந்திருக்க ஏது இனி எனக்குக் குறை?..
   தேறிவருகிறேன்.
   அன்புமிகு வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!
   உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

   Delete
 15. தங்களுக்கு நல்வரவு!..

  பல்லாண்டு பல்லாண்டு நலங்கொண்டு வாழ வாழ்த்துகின்றேன்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   பிரார்த்தனைகளின் வலிமைக்கு என் வாழ்வே சான்று ஐயா!
   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கூறும் வேளை
   உங்களுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

   Delete
 16. வணக்கம்
  சகோதரி

  வரவு கண்டு மகிழ்ந்தது மனம்... தொடர்நது எழுத எனது வாழ்த்துக்கள். த.ம 12

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் ரூபன்!

   என் மனமும் இன்று சொல்லொணா மகிழ்வில்...:)

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றியுடன்
   உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 17. வணக்கம்.

  கொல்லும் விதிக்கொடுக்கின் கோபம் தணிந்ததுவோ?
  வெல்லும் தமிழ்வென்று விட்டதுவோ ?- சொல்லின்
  சுடர்கொண்டு வந்தீர்! சுவைகாணக் கண்ணிற்
  கிடரென்று மில்லை இனி!


      ( வேறு )

  தீயின் நடுவொரு தேம்ப லழுகுரல்
    தீர்ந்திடுங் கால மிது! - நிதந்
  நோயின் இடைபடு வாழ்வைச் சுடுங்கனல்
    நீங்கிடும் கால மிது - கடுங்
  காயி னிடைதமிழ் பாய மடையுடை
    காட்சியின் ஓல மிது! – இடர்
  மாயும் இருள்கெட மீண்ட இளமதி….
    மந்திர சால மிது!

  தங்களின் நலனிற்கும் வரவிற்கும் மகிழ்வும் நன்றியும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   காலச் சில்லு சுழலுகையில்
    காணும் மறையும் வாழ்வோட்டம்!
   நீல வானில் சேரும்நீர்
    நின்றே பொழியும் வான்மழையாய்!
   ஞாலம் காணும் நாளிரவும்
    நன்றாம் இயற்கை செயல்தானே!
   கோலம் இன்று நான்கண்டே
    கூட வந்தேன் பாடிடவே!

   அன்பு வரவுடன் அருமையான வெண்பா
   விருத்தப் பாக்களும் தந்தீர்கள்! ஆனந்தக் கூத்தாடுகிறது மனம்!
   கண்கள் கரைகிறது என்மேலுள்ள உங்கள் யாவரினதும்
   அன்பை எண்ணி!

   வருவதும் போவதும் இயற்கை நியதி! அவ்வகையில்
   நானுற்ற நோய் துன்பமும் அப்படியே!..
   தேறிவிட்டேன் என முழுமையாகச் சொல்லாவிடினும்
   இங்கு காணும் அன்பின் அலைகளால் தேறி விடுவேன்
   என நம்பிக்கை இப்போ வருகிறது!

   உளமார்ந்த என் நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

   Delete
 18. தமிழ் உங்களை காத்து நிற்க நோயெல்லாம் என் செய்யும்? தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதர் சுரேஷ்!

   தன்னம்பிக்கையையும் தகர்த்துவிடுமளவிற்கு கொடுவினைக் கூத்து நிகழ்ந்தது. ஆயினும் இத்தனை இனிய நெஞ்சங்களின்
   அன்பை எதிர்க்கமுடியாமல் சுழன்ற சூறாவளியாய் அடங்கிப் போனது யாவும்!..

   மிக்க நன்றியுடன் உங்களுக்கும் உளமார்ந்த நன்றியும்
   என் வாழ்த்துக்களும்!

   Delete
 19. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை இளமதி .
  வருக வருக உடல் நலத்துடன் கவிதைகள் தருக

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழி கிரேஸ்!

   மகிழ்ச்சியில் இப்பொழுது என் இதயம் அடைக்கிறது!.
   வழிகிறது கண்கள்!..

   உங்கள் தேடலை அறிந்தேன். என்னால் அவ்வேளை எந்தத் தொடர்பும் கொள்ளமுடியாத நிலை. உடன் பதில் தந்திட முடியவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்!..

   எல்லோரும் அன்புக் கயிற்றால் கட்டி இழுத்து வந்துவிட்டீர்கள் என்னை!.. பார்ப்போம்! எப்படி எதிர்காலம் எனக்கு அமையப் போகிறதென..:)

   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
  2. அன்பு இளமதி, நீங்கள் வந்ததே பெரும் மகிழ்ச்சி தோழி. கவலைப் படாதீர்கள். நலமுடன் வலம் வருவீர்கள். உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

   Delete
 20. வாருங்கள் தோழி. பல நாட்கள் கழித்து தங்களது பதிவு கண்டதில் மகிழ்ச்சி.

  தங்களுக்கு நல்ல உடல் நலனையும், ஆரோக்கியத்தையும் வழங்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!

   எனக்கும் உங்களையும் இங்கு காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!
   வருகைக்கும் அன்பு மொழிக்கும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

   Delete
 21. ரொம்ப சந்தோஷமாக இருக்கு அக்கா...
  ஒரு முறை முகநூலில் என்னோடு அளவளாவும் போதுதான் உங்களது நிலமை எனக்குத் தெரிந்தது.
  தாங்கள் நலம் இல்லை என்ற போது வருத்தமாக இருந்தது... பின்னர் தாங்கள் தற்போது நலமாக இருப்பதாக சகோதரி ஒருவரின் பகிர்வின் மூலமாக அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  தற்போது தங்கள் பதிவின் மூலம் மீண்டும் வந்திருக்கிறீர்கள்... ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

  பூரண குணம் அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரரே!

   உங்கள் எல்லோரினதும் அன்பு கண்டு பிரமித்து நிற்கின்றேன்!
   என்ன சொல்வது அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை!

   அன்பிற் கட்டுண்டு போய்விட்டேன் அவ்வளவே!
   மிக்க மகிழ்ச்சி சகோ!

   அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

   Delete
 22. wow!!!!! இது நம்ம நிலா!!!! எத்தனை நாள் வலையுலகே அமாவாசையாக இருந்தது தோழி!!! உங்கள் வருகை பெரும் உவகை!!! மீண்டுவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி!!! மீண்டும் மீண்டும் வருக! செவி தீண்டும் நல்கவி தருக:)

  ReplyDelete
  Replies
  1. ஓ..! வாங்கோ! வணக்கம் தோழி மைதிலி!..:)

   கண்கள் நிறைந்து வழிகிறது..! தட்டச்சிட முடியவில்லை!
   அன்பிற் தோய்ந்து திணறுகிறேன் இப்போது நான்!

   அனைத்திற்கும் என் அன்பு நன்றியும்
   இனிய வாழ்த்துக்களும் தோழி!

   Delete
 23. நீண்ட நாட்களுக்குப்பிறகு இங்கே இளமதியைக்கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓரளவு உடல் நலம் தேறி வந்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இனிய வாழ்த்துக்கள்! முழுவதுமாக உடல் நலம் குணம‌டைய என் அன்பான பிரார்த்தனைகள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா!

   காலச் சக்கரச் சுழற்சியில் மாட்டிய வாழ்வியல்.
   மேலும் கீழுமாகப் போய் வந்து கொண்டிருக்கின்றேன்.

   உங்கள் யாவரினதும் அன்பினால் மீண்டும் பூரண நலமாகிடுவேன் என நம்பிக்கை வருகிறது.

   அன்பு வாழ்த்து, பிரார்த்தனைகளுக்கு
   என் உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா!

   Delete
 24. தொடரட்டும் உங்கள் இரண்டாம் இன்னிங்க்ஸ் :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   இரண்டாம் இன்னிங்ஸ்..!! ஆகட்டும் அப்படியே!..:)

   நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

   Delete
 25. ஆஹா! சகோதரி தாங்கள் மீண்டும் வலையுலகிற்குத் தாங்கள் மீண்டு வந்தமைக்கு இறைவனுக்கு நன்றி. நன்றி உரை கவிதை அருமை! இறைவன் எல்லா நன்பையும் அருள எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்! இனி கல்க்குங்கள் தமிழால்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் எல்லோரினதும் அன்புத் தேடலை அறிந்த இறைவன்
   நற்கருணையாக இட்ட பிச்சை வலையில் எனது மறு பிரவேசம்!

   தங்களின் அன்பு வாழ்த்திற்கும் பிரார்த்தனைகளுக்கும்
   உளமார்ந்த நன்றியுடன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 26. மீண்டும் உங்களை இங்கு கண்டது பெருமகிழ்ச்சி இளமதி. தொடருங்கள் உங்கள் இடுகைகளை. படிக்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் இமா!

   நானும் மீண்டு(ம்) வருவேன் என எண்ணியிருக்கவே இல்லை!
   எனக்கும் ஆச்சரியமே இது!..:)
   எல்லோரையும் மீளவும் சந்திப்பது பெரு மகிழ்ச்சி!

   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   நன்றியுடன் வாழ்த்துக்கள் இமா!

   Delete
 27. நீண்ண்ண்ட காலத்தின் பின் வலையில் சந்திப்பது மகிழ்ச்சி இதே சுறு சுறுப்புடன் என்றும் பல பதிவுகள் தொடர உங்களின் ஆரோக்கியத்துக்கு பிரார்த்திக்கின்றேன் அக்காச்சி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   என் மனதிலும் இங்கு வந்த பின்பு உங்கள் எல்லோரின்
   அன்பினால் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது!..

   அன்பான பிரார்த்தனைகளுக்கும் இனிய வரவிற்கும்
   நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

   Delete
 28. மீண்டும் உங்களை இங்கு கண்டது பெருமகிழ்ச்சி// இமா டீச்சரைப்பார்பதும் மகிழ்ச்சி[[[[[[[[[[[[[[[[[[

  ReplyDelete
 29. இறைவன் அருளால் மீண்டு வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்! மீண்டும் கவிதை மழையைப் பொழிக!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இறையருளைத் தூண்டிவிட்ட வலையுலக உறவுகளின்
   அன்பிற்கு நிகரேது!

   தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 30. வருக வருக இளமதியே! இனி குறை ஏதும் வாராது . இனி எலாம் நலமே
  அனுப்பு நெஞ்சங்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை . பூரணமாய் ஒளிவீசட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர் முரளி அவர்களே!

   உண்மை!.. உண்மை!!.
   நானே இப்படி மீண்டும் இங்கு வருவேனென எதிர்பார்க்கவில்லை!
   அத்தனை துன்பப்பட்டேன்!..
   மீட்டு வந்த அன்பு உறவுகளுக்கு வாழ்நாள் கடன்
   எனக்கு இப்போது!.. மட்டற்ற மகிழ்ச்சி சகோ!

   அன்பு நன்றியுடன் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

   Delete
 31. அன்புள்ள சகோதரி,

  வருக! வருக! வாழ்வில் சுகமே பெருக!
  தருக! தருக! தமிழில் இனிமை நிலவ!
  இளைய நிலா! உலாவ உவகை பொங்க!
  களையும் இன்னல் களிப்பு மிஞ்சும் விஞ்சும்!


  பாயில் படுத்து நோயில் விழுந்தால்
  காதல் கான்ல் நீரே
  இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
  போகும் ஞானத்தேரே

  இல்லறம் கேட்டால் துறவரம்
  பேசும்இதயமே மாறி விடு

  இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
  உன்னை நீ மாற்றி விடு

  இது காலதேவனின் கலக்கம்
  இதை காதல் என்பது பழக்கம்.
  ஒரு ஆணும் ஒரு பெண்னும்
  பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

  உடலும் உடலும் சேரும் வாழ்வை
  உலகம் மறந்தாலென்ன
  தினம் ஒடியாடி ஒயுமுன்னே
  உன்மை உணர்ந்தாலென்ன

  இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
  இதற்குள்ளே ஆசையென்ன

  -நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வரவும் உளமார்ந்த வாழ்த்தும் கண்டு
   விக்கித்து நிற்கின்றேன்! மிக்க நன்றி!

   உண்மைதான் ஐயா.. இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
   இதற்குள்ளே ஆசை என்ன...!
   அருமையான காலத்திற்கும் மறக்கவொண்ணாப் பாடல்!

   தங்களின் உடல் நலன் தேறிவிட எல்லாம் வல்ல
   இறையருளை நானும் வேண்டுகிறேன்!
   மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

   (தங்களின் பின்னூட்டம் ஸ்பாமுக்குள் சென்றுள்ளது.
   அதனை இப்போதுதான் கண்டெடுத்து வெளியிட்டுள்ளேன்!)

   Delete
 32. வலையில் கண்டு மனம் துள்ளியது. நலமுடன் இனி குறைவின்றி வாழ்க சகோ. இறைவன் அருளால் நலமுடன் எங்களுக்கு பாக்களைத் தாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அன்புச் சகோதரி உமையாள்!

   உங்கள் யாவரினதும் அன்பின் சக்தி அளப்பரியது!
   ஆகட்டும்! முயல்கிறேன்!

   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

   Delete
 33. என்ன பெண்ணே நானும் தேடினேனே தவிர உடல்நலக்குறைவு போன்ற விஷயங்கள் தெரியாது. நலமுடன் வளையவா. எத்தெத்தனை உறவுகள். யாவரின் நல்லெண்ணங்களும் துணைநிற்கும்.. ஆசிகள் உங்களனைவருக்கும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா!

   வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எத்தகையதோ
   அவ்வகையிலில் எனக்கு வந்த நோயும் அதன் மீட்சியும் ஆகும் அம்மா!

   எவ்வளவு துன்பத்திற்குள்ளும் இத்தகைய அன்பு இதயங்களையும் இறைவன் எனக்கே எனக்காகத் தந்துள்ள கருணையை என்னவென்பேன்!.. கண்கள் கரைகின்றன!..

   மெள்ளத்தேறி வருகிறேன். முன்பு போல உடனேயே எல்லாம் முடிகிறதென்பதில்லை. ஆயினும் முயல்கின்றேன் அம்மா!

   ஆசிக்கும் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி தாயே!
   நீங்களும் நலமோடிருக்க இறைவனை வேண்டுகிறேன்!

   Delete
 34. வணக்கம் !
  என்றனுயிர்த் தோழியே! இன்பமுற வாழியநீ !
  நன்மைபல தேடிவரும்! நாளினிக்கும் !-இன்னல்
  பறந்தோடும் !பார்போற்ற பாடம்மா ! உன்னை
  மறவாமல் வாழ்த்தும் மனம் !

  அன்புத் தோழியின் வருகையைக் கண்டு உள்ளம்
  ஆனந்தக் கூத்தாடுகின்றது !வாழ்த்துக்கள் தோழியே !
  வாழ்வாங்கு வாழ்வாய் வையகத்தில் வந்த துன்பம்
  பறந்தோடும் !இனி என்றும் பாப்புனைந்து பாரெங்கும்
  புகழ் பெறுவாய் !உடல் நலத்திலும் கவனம் செலுத்துங்கள்
  தோழி .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் என் இனிய தோழியே!..

   செப்பிய உன்கவியில் சிந்தை இழந்தேனே!
   ஒப்பேது உண்டு உனக்கம்மா! - இப்படியே
   பாப்புனைய என்னையும் பக்கத்திற் சேர்ப்பாயா?
   தோப்பாக்கு வோம்நாம் துணிந்து!

   கண்கள் கரைந்தோடுகிறது உங்கள் அனபினைக் கண்டு!..

   என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன் என் மனநிலையை!..
   இன்னும் எத்தனை துன்பமோ நோயோ வந்தாலும் பரவாயில்லை. அத்தனைக்குள்ளாலும் எனை மீட்டிடும் உங்கள் அனைவரின் அன்பு என இன்று தைரியம்
   கொள்கிறது என் மனம்!

   முன்பு போல் அதி வேகமாக இயங்க முடியவில்லையாயினும்
   கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காணலாம் என நம்புகிறேன்!

   அன்பிற்கு உளமார்ந்த நன்றியுடன்
   இனிய வாழ்த்துக்களும் தோழி!

   Delete
 35. வணக்கம்மா,
  தங்கள் வருகை வேண்டி வலையுலகில் பல பதிவுகள் கண்டேன், வருகை மகிழ்வளிக்கிறதம்மா,,,,,,,,,
  தாங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டுகிறேன், வாழ்த்துக்கிறேன்,
  நன்றிம்மா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!..

   இங்கு தங்களின் முதல் வருகையும் ஆத்மார்த்தமான
   அன்பினையும் கண்டு நெகிழ்கின்றேன்!

   படிப்படியாக நலம் பெற்று வருகிறேன்.

   தங்கள் வலைப்பக்கமும் விரைவில் வருகிறேன் சகோதரி!

   அன்பிற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.