Pages

Aug 17, 2015

நிறைய வேண்டும்!..


நிறைய வேண்டும்!
~~~~~~~~~~
உலகமெலாம் ஓர்மொழியே பேச வேண்டும்!
   ஒப்பில்லா மொழியாக அன்பு வேண்டும்!
கலகமில்லா வாழ்க்கைதனைக் காண வேண்டும்!
   கலந்துறவாய் மக்களெல்லாம் களிக்க வேண்டும்!
விலகிடாத பாசமொடு வாழ வேண்டும்!
   வேதனைகள் சோதனைகள் தீர வேண்டும்!
நலமடைய நல்வழிகள் தேட வேண்டும்!
   நாடெல்லாம் ஓரினமாய் உயர வேண்டும்!



புலர்கின்ற நாளெள்ளாம் பொலிய வேண்டும்!
   பொழுதெல்லாம் மென்பஞ்சாய் இருக்க வேண்டும்!
மலர்கின்ற பூக்கள்போல் உள்ளம் வேண்டும்!
   மாந்தரெல்லாம் மகிழ்வோடு குலவ வேண்டும்!
உலர்கின்ற வயல்நனைய மழைநீர் வேண்டும்!
   ஊர்காணும் பிணிபஞ்சம் ஓட வேண்டும்!
புலவரெல்லாம் பூந்தமிழைப் போற்ற வேண்டும்!
   பூமியிலே தமிழோங்கி ஒலிக்க வேண்டும்!

விலங்கெனவே வாழுமினம் விழிக்க வேண்டும்!
   வீரமொடு வீறுநடை போட வேண்டும்!
தலமெங்கும் தலைநிமிர்ந்த தமிழர் வேண்டும்!
   தாரகமாய்த் தன்மொழியைக் கொள்ள வேண்டும்!
புலமிழந்தால் என்ன?தாய்நாட்(டு) எண்ணம் வேண்டும்!
   புத்துணர்வைச் சேர்க்கின்ற வண்ணம் வேண்டும்!
நிலமதனை மீட்கும்நாள் விரைய வேண்டும்!
   நிம்மதியாய் நம்வாழ்வு நிறைய வேண்டும்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

54 comments:


  1. வணக்கம்!

    நிலம்மீட்டும்! வீர நிலையூட்டும்! வாழ்வின்
    நலம்தீட்டும்! நெஞ்சப் பலங்கூட்டும்! - உலகோங்க
    வல்ல வழிகாட்டும்! வண்ண மதிபாட்டு
    நல்ல மொழிகாட்டும் நன்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மகிழ்வூட்டும் உங்கள் வரவோடு பாவும்
      முகிழ்விடுதே இங்கே முதல்!

      முதற் கருத்தாக முத்தான வெண்பா உங்களிடம்
      இங்கு பெற்றது என் பாக்கியமே!.
      மிக்க மிக்க மகிழ்வாக இருக்கின்றது ஐயா!

      தங்களின் அன்பான வரவிற்கும், அருமையான வெண்பா வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  2. நிறையட்டும்
    தம +

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்து
      மற்றும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  3. நிலமதனை மீட்கும்நாள் விரைய வேண்டும்!
       நிம்மதியாய் நம்வாழ்வு நிறைய வேண்டும்!

    விரைவில் நடக்கும் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் கூற்றுப்படி நடந்திடில் அதைவிட வேறு மகிழ்ச்சி ஏது?..

      அன்பான வரவிற்கும் நற்கருத்திற்கும் வாக்கிற்கும்
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. புறச்சூழல்களே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன/

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      உண்மைதான்!..
      அன்பான வரவிற்கும் நற்கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  5. ஒவ்வொரு வரியும் அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவொடு இனிய கருத்திற்கும்
      வாழ்த்து மற்றும் வாக்கிற்கும் மிக நன்றி சகோதரரே!

      Delete
  6. எல்லா வேண்டும்களும் நிறைவேறவேண்டும். இளமதியின் இனிமைக் கவிதையில் மகிழ்ந்தோம் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர் முரளி!

      வேண்டுதல்கள் விரைவில் நடந்தேறணும்!
      தங்களின் இனிய ரசனைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  7. Replies
    1. தலமெங்கும் தலைநிமிர்ந்த தமிழர் வேண்டும்
         தாரகமாய்த் தன்மொழியைக் கொள்ள வேண்டும்

      அருமை சகோ வாழ்த்துகள்
      தாங்கள் வசிப்பது எந்த நாடு ?

      Delete
    2. வாருங்கள் சகோதரரே!

      தங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி!
      நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன் சகோ!
      அன்பான வரவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  8. தலமெங்கும் தலைநிமிர்ந்த தமிழர் வேண்டும்..
    தாரகமாய்த் தன்மொழியைக் கொள்ள வேண்டும்!..

    வாழ்க தமிழ்..
    வளர்க தமிழர்!..

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் வாழ்த்தும் ஆசியும் கிடைத்தாலே
      அனைத்தும் கைகூடும்!

      மனம் நிறைந்த மகிழ்வுடன் மிக்க நன்றி ஐயா!

      Delete
  9. கலம்சேர்த்த நெல்லாக கருத்தும் சொல்ல
    கற்றவுடன் நானிட்டேன் நன்றி இங்கு
    நலம்பாடி வந்துதித்த பாவால் இன்று
    நற்கருத்தை விதைத்தீரே உள்ளம் சென்று
    உலகெங்கும் ஓங்கட்டும் உந்தன் பேரே
    உளமார வாழ்த்துகிறேன் நானும் இங்கே
    நிலம்செழிக்க மழைவேண்டும் நல்ல உள்ளம்
    நீடுழியே வாழட்டும் நலமே பெற்று!

    என்ன இருந்தும் என்ன வேண்டுவது நிறைவான மனநிம்மதி தானே அந்த நிம்மதிகிடைக்கும் வழியையும் பாட்டில் அழகாகச் சொன்னீர்கள் தோழி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி!

      வேண்டும் அனைத்தும் விரும்பிய வண்ணமே
      ஆண்டவன் தந்தால் அழகு!

      அன்போடு இங்கு வந்து அழகிய விருத்தப்பாவால்
      என்னுள்ளம் மகிழ வாழ்த்தினீர்!
      வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  10. எல்லாமே நிறைவேற வேண்டும். அருமையான வரிகள் கொண்டு அழகாக வடித்திருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பிரியா!

      உங்களையும் நீண்ட நாட்களாகக் காணவில்லையே!
      நலம் தானே!

      அன்போடு வந்திங்கு அழகாக வாழ்த்தினீர்கள்!
      என் உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி பிரியா!
      வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. நல்ல ஆசைகள்! நிறைவேறட்டும்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரரே!

      ஆசைகள் என்பதுடன் எதிர்பார்ப்பும் இது!
      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  12. எத்தனை வேண்டும்கள். அத்தனையும் நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் வாழ்த்தும் எல்லாம் கிடைக்கத்தரும்
      மாபெரும் சக்திதான்!
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. அன்புள்ள சகோதரி,

    நிறைய... வேண்டியவை எல்லாம் வேண்டியபடி கிடைக்க வேண்டும்!

    நன்றி.
    த.ம. 10

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      வேண்டியவைகள் நியாயமானவையே!
      நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்!

      அன்பான வரவிற்கும் வாழ்த்துடன் வாக்கிற்கும்
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  14. இன்றுபோல் என்றும் உங்கள் கவி வேண்டும்.... நல்ல கவிதை....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      உங்கள் ரசனை என்னை மேலும் எழுதத் தூண்டும்
      நல்ல ஊக்க சக்தி!

      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  15. அருமையான பாடல்கள் சகோ.

    வேண்டாச் சுயநலத்தின் வேரகழ்ந்(து) இக்கவிதை
    வேண்டும் பொதுநலத்தின் வித்திடலால் - தூண்டுமொளி
    கள்ளமிலா துள்ளமனப் பள்ளமதி லுள்ளுறையு
    வெள்ளமென உள்ளத்துள் ளும்!

    வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      நன்னலம் என்றுமே நம்தேசம் ஓங்குவதே!
      பொன்னிலும் மேலான பொற்பு!

      அன்பான வரவுடன் பொருள் நயமிக்க வெண்பா தந்தீர்கள்!
      மிக்க மகிழ்ச்சி! வாழ்த்து, வாக்கிற்கும்உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  16. என் அன்புத் தோழியே! தாமத்திற்கு மன்னிக்கணும்ம்மா.
    \\\புலர்கின்ற நாளெள்ளாம் பொலிய வேண்டும்!
       பொழுதெல்லாம் மென்பஞ்சாய் இருக்க வேண்டும்! ///////// என்று எண்ணும் என் அன்புத் தோழியின் வேண்டுதைகள் ஈழமே பலிக்கட்டும் மா வாழ்த்துக்கள்!. அத்தனையும் அருமை !

    உலகமெலாம் அன்பினிலே நிறைய வேண்டும்
    உயிர்தமிழில் அறிவியல்நூல் நிறைய வேண்டும்
    கலகஅனல் கருணையினால் நிறைய வேண்டும்
    கன்னித்தமிழ் காப்பவர்கள் நிறைய வேண்டும்
    திலகெமென மரபெழுந்து நிறைய வேண்டும்
    திங்கள்ஒளி இருளகற்றி நிறைய வேண்டும்
    பலகரங்கள் தட்டுமொலி நிறைய வேண்டும்
    பா..இதைப்போல் தாமதியே நிறைய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழியே!

      என்றுமே உன்அன்பு என்றனுக்கு வேண்டுமே!
      சென்றிடுமே துன்பம் தொலைந்து!

      அருமையான விருத்தப் பா வாழ்த்து!

      உங்கள் மரபுப் பாக்கள் காண்கையிலே
      உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது!
      தொடர்ந்து எழுதுங்கள்!

      அன்பான வரவுடன் வாழ்த்தும் வாக்கும் இட்டீர்கள்!
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  17. உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சித்ரா!

      Delete
  18. ஆஹா! அத்தனையும் அருமையான வேண்டும்ங்களாக இருக்கிறதே! நானும் வழிமொழிகிறேன்.....வேண்டும், வேண்டும்:)

    ReplyDelete
    Replies
    1. ஆகா..!! அன்புத் தோழியின் வருகையும் கருத்தும்
      எனக்கு என்றும் வேண்டும் .. வேண்டும்!!..:))

      மிக்க நன்றி தோழி!

      Delete
  19. சின்னச் சின்ன ஆசைகள். காலத்தின் கோலத்தில் பேராசையாய்க் காட்சியளிக்கும் அவலம். எல்லா 'வேண்டும்'களும் நிறைவேற வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே!

      வேண்டும்கள் நிறைவாகிட வேண்டும்!

      அன்பான வரவிற்கும் உயரிய கருத்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  20. மன்னிக்கணும் தோழி அவசரத்தில் தவறு நேர்ந்து விட்டது.

    வேண்டுதல்கள் எல்லாமே பலிக்கட்டும் என்று வாசியுங்கள்மா ....

    ReplyDelete
    Replies
    1. ம் ..ம்..!..:)

      எல்லாமே.. பலிக்கட்டும்!..:)

      Delete
  21. ஆகா ... மனதை வருடும் கவிதை ..அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      தங்கள் வரவும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
      நன்றி!

      Delete
  22. அருமை , வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்!

      இனிய ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  23. Replies
    1. வணக்கம் சகோதரி!
      தாங்களும் இங்கு முதன்முறையாக வந்துள்ளீர்கள்!
      மனம் மிக மகிழ்வடைகிறேன்!

      வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  24. அருமை சகோதரி! தமிழ் விளையாடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தமிழோடு நானும் குழந்தையாகி விளையாடுகிறேன்..:)

      Delete
  25. வேண்டும் வேண்டும் எல்லாமே வேண்டும்....நடக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. தேடல் இருந்தாற்தானே கையில் கிட்டும்!
      வேண்டலும் அப்படியே!
      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  26. நல்லவை அனைத்தும் நிறையவேண்டும்சகோதரி

    ReplyDelete
  27. வாருங்கள் சகோதரி!

    இங்கு உங்கள் முதல் வருகை!
    மனம் மகிழ்கின்றேன்!
    நல்லவைகள் நடக்கவேண்டி விரும்புவோம்! வேண்டுவோம்!

    மிக்க நன்றி உங்கள் இனிய வரவிற்கும்
    நற்கருத்திற்கும் சகோதரி!

    ReplyDelete
  28. வணக்கம்,
    வேண்டும் எல்லாம் நிறைவேற வேண்டும்
    வேணிடியது சுயநலமில்லா வேண்டுதல் அன்றோ
    வேண்டும் எல்லாம் வேண்டிய மட்டும்
    வேண்டுவோம் நம்புவோம் தோழி,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.