Pages

Aug 21, 2015

கொள்ளையிடும் குட்டிநிலா!..

கொள்ளையிடும் குட்டிநிலா!
மும்மண்டில வெண்பா!
~~~~~~~~~~~~~

கொத்துமலர் கோர்த்தஎழில்! கொள்ளையிடும் குட்டிநிலா!
முத்துமுகிழ் முத்தமழை முல்லைமணம்! - முத்திதரும்
சொத்துமவள்! சொல்லரும்தேன்! சுத்திநிதம் சூழ்ந்தவளி!
சித்தத்தைக் கொல்லுறும் சீர்!



கோர்த்தஎழில் கொள்ளையிடும் குட்டிநிலா! முத்துமுகிழ்
முத்தமழை முல்லைமணம்! முத்திதரும் - சொத்துமவள்!
சொல்லரும்தேன்! சுத்திநிதம் சூழ்ந்தவளி! சித்தத்தைக்
கொல்லுறும்சீர்! கொத்து மலர்!

கொள்ளையிடும் குட்டிநிலா! முத்துமுகிழ் முத்தமழை
முல்லைமணம்! முத்திதரும் சொத்துமவள்! - சொல்லரும்தேன்!
சுத்திநிதம் சூழ்ந்தவளி! சித்தத்தைக் கொல்லுறும்சீர்!
கொத்துமலர் கோர்த்த எழில்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இலக்கண விளக்கம்
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் முதல் அடியில் உள்ள இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்.

முதல் வெண்பாவில் உள்ள முதல் சீர் இரண்டாவது வெண்பாவில் இறுதிச் சீராக வரும். முதல் வெண்பாவில் முதல் அடியில் உள்ள இரண்டாம் சீர் இரண்டாம் வெண்பாவில் முதல் சீராக வரவேண்டும். இப்போது முதல் அடியில் மூன்றுசீர்கள் இருக்கும். இரண்டாம் அடியில் உள்ள முதல் சீர் முதல் அடியின் நான்காம் சீராக அமையும் இப்படி சீர்கள் மேல் நோக்கி நகரும்.

இவ்வாறே மூன்றாம் வெண்பாவும் அமைய வேண்டும்.

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

41 comments:

  1. Kavitai Azagu Nila SUPER
    From... Cell

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!

      கைப்பேசியில் என்றாலும் கண்டதும் படித்துக் கருந்துப்
      பகிர்ந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
    2. மிக்க நன்றி சகோ!

      Delete
  2. கொள்ளையிட்டது மனதை தங்கள் எழுத்துநடை தோழி.
    தங்கள் மும்மண்டிலம் கண்டதும் மறுபடி எழுதவேண்டுமென்கிற ஆவல் எழுகிறது என்னிலும்.
    அசத்திட்டிங்க போங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆகா!.. வாங்க தென்றல்!

      Delete
  3. சின்னவிழி வண்டழகு! தென்மொழியின் பொன்னழகு!
    கன்னமதில் பண்ணிசைத்துக் கண்மயங்கும்! - தன்னிலையை
    மண்ணுலகில் வண்ணமுறக் கண்டாடும்! வண்டமிழின்
    ஒண்ணழகில் ஒன்றும் உயிர்!

    வண்டழகு! தென்மொழியின் பொன்னழகு! கன்னமதில்
    பண்ணிசைத்து கண்மயங்கும்! தன்னிலையை - மண்ணுலகில்
    வண்ணமுறச் கண்டாடும்! வண்டமிழின் ஒண்ணழகில்
    ஒன்றுமுயிர்! சின்ன விழி!

    தென்மொழியின் பொன்னழகு! கன்னமதில் பண்ணிசைத்து
    கண்மயங்கும்! தன்னிலையை மண்ணுலகில் - வண்ணமுறக்
    கண்டாடும்! வண்டமிழின் ஒண்ணழகில் ஒன்றுமுயிர்!
    சின்ன விழி!வண் டழகு!

    ReplyDelete
    Replies
    1. சின்னவிழிச் சித்திரத்தைச் சேர்ந்திங்கே பாவிசைக்க
      மின்னலாய் வந்ததென்றல் வீச்சு!

      அம்மாடியோவ்!... தென்றல்!!...

      எசப்பாட்டு பாடி அசத்தியது நீங்களன்றோ!
      மிக மிக அருமை தோழி!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும்
      இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  4. சந்தம் மயக்கும் வெண்பா! அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ சுரேஷ்!

      தங்களின் ரசனைக்காகவே இன்னும் பாட ஆவல் பிறக்கிறது!
      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  5. ஆஹா அருமை வெண்பா ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  6. படிக்கும் போது நன்றாக இருக்கு. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்க இளமதி ! வாழ்த்துக்கள் .!!

    ReplyDelete
    Replies
    1. அம்மு வாங்கோ!..

      அப்படியா!.. ரொம்பச் சந்தோஷம் மா!
      படைப்புகள் படிப்பவர்கள் மனதைத் தொட்டால்
      வருகின்ற சந்தோஷமே தனி!
      அதைவிட வேறென்ன வேண்டும்!

      அன்பான வரவிற்கும் இனிய ரசனை மற்றும் வாழ்த்துடன்
      வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி அம்மு!

      Delete


  7. வணக்கம்!

    மண்டிலம் பாடி மயக்கும் இளமதியே!
    தொண்டுளம் கொண்ட சுடரொளியே! - கண்டாகப்
    பாக்கள் இனித்தனவே! பாவலன்யான் இன்புற்றுப்
    பூக்கள் அளித்தேன் புகழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மண்டிலம் பாடுவது மாபெரும் சாதனைதான்!
      கண்டதும் பாடிடக் காரிகையால் ஆகவில்லை!
      பண்டை மரபுக் கவிவாணர் உம்தயவால்
      வண்டெனப் பாடுகிறேன்! வந்திங்கே மகிழ்ந்து!

      தங்கள் தயவால் நாம் கற்றுக் கொண்டு
      இங்கும் பாவிசைத்துப் பதிவேற்றி மகிழ்கின்றோம்!

      தொடர்ந்தும் தங்களின் வழிகாட்டலை வேண்டி நிற்கின்றேன்!

      அன்பான வரவிற்கும் இனிய வெண்பா வாழ்த்திற்கும்
      வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  8. அருமை அக்கா...
    ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ!

      தங்களின் ரசனையும் எனக்கு மிக்க மகிழ்வே!
      மிக்க நன்றி சகோ!

      Delete
  9. அருமை
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவுடன் இனிதாய் ரசித்து வாக்கும் இட்டீர்கள்.
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. அருமை அருமை! வேறு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை...சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      வார்த்தைகள் இல்லாவிடினும் வந்து ரசித்து வாழ்த்துவது
      மாபெரும் ஊக்கம் எனக்கு!
      மகிழ்வோடு மிக்க நன்றி சகோ!

      Delete

  11. வணக்கம் !
    தங்களின் மும்மண்டில வெண்பா கண்டு ரசித்தேன் மிகவும் அருமையாக உள்ளது தோழி வாழ்த்துக்கள் ! ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அதிகம் வலைத் தளப் பக்கம் வருவதில்லை அனேகமாக எல்லோருடைய ஆக்கங்களையும் வாசித்துக் கருத்துரை இட வேண்டும் என்ற ஆவல் மனதில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவது என்பது கடினமாக உள்ளது தோழி தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் விரைவில் இந்நிலையும் மாறும் அதுவரைப் பொறுத்திருங்கள் தங்களைப் பற்றிய நினைவு எப்போதும் என் மனத்தில் குடியிருக்கும் தோழி கவலை வேண்டாம் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி!

      தங்களை விடவா நான் பாடிவிடுகிறேன்!
      உங்களின் பாக்கள் என்றாலே அது ஒரு தனிரகமே!
      சுவையை மிஞ்ச என்னிடம் சக்தியில்லை!

      இப்படியாகவாவது உங்களை இங்கு காணும்போது
      என்மனம் கொள்ளும் மகிழ்வுக்கு எல்லை இல்லை!

      உங்கள் நிலை புரிந்தேன் இன்று! கோபத்திலோ அல்லது
      வேறேதும் காரணமாகவோ வரவில்லையோ என வருந்தினேன்.. அதனாலேயே அங்கு கேட்டுவிட்டு வந்தேன் தோழி!

      அன்பான வரவுடன் உளமார்ந்த கருத்துமிட்டு
      வாழ்த்தி வாக்கும் இட்டீர்கள்!
      மிக்க நன்றி தோழி!

      Delete
  12. அருமை தோழி. தாங்கள் நலம் பெற்று வளைத்தளத்தில் எழுதுவது மிக்க மகிழ்ச்சி. உடனடியாக வர முடிவதில்லை, மன்னிக்கவும் தோழி.

    வாழ்த்துகள்! த.ம.9

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி கிரேஸ்!

      தங்களின் ஊக்கமுமே என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது!
      உடனடியாக என்றில்லாவிட்டாலும் பின்னரும் வந்து பார்த்துக் கருத்து இடுவதே மகிழ்ச்சிதான்!

      அன்பான வரவுடன் வாழ்த்தும் வாக்கும் தந்தமைக்கும்
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  13. குட்டி நிலா போலவே வெண்பாவும் மனதைக் கொள்ளையிடுகிறது இளமதி.

    ReplyDelete
    Replies
    1. அட..! அப்படியா!..:)

      அன்பான வரவுக்கும் இனித்திடும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சித்ரா!

      Delete
  14. படித்தேன். ரசித்தேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ந்தேன்!.. வழங்னேன்!.. நன்றி!

      Delete
  15. த ம வாக்கு எப்போதும் போல +1

    ReplyDelete
    Replies
    1. உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  16. தோழி,தமிழ்த்தாயின் ஏக்கங்கள் தீர்க்க
    திரும்பவந்துபாடியதுகண்டு
    மனம் குளிர்ந்து...........நன்று..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      தமிழ்த்தாயின் ஏக்கமும் எங்களின் தாகமும் அல்லவா?

      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  17. இப்படியும் ஒன்று இருக்கின்றதா!..
    அழகு.. அற்புதம்..ஆச்சர்யம்!..

    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      தங்களின் ஆச்சரியம் என்னை இன்னும் ஆச்சரியப்பட வைக்கின்றது ஐயா!..

      இனிய வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  18. எவ்வளவு அருமையான வெண்பாக்கள். ரஸித்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா!

      தங்களின் ரசனையும் என் பாக்கியமே!
      தமிழைப் பாடிக்கொண்டு இங்கேயே இருக்கின்றேன்.
      வருகிறேன் உங்கள் வலைப்பக்கமும் விரைவில்!

      தங்களின் அன்புக்கு கோடனுகோடி நன்றிகள் அம்மா!

      Delete
  19. அன்புள்ள சகோதரி,

    உள்ளத்தைக் கொள்ளையிடும் உந்தன் நிலாக்குட்டி

    வெள்ளமாய் மும்மண்டி லம்.

    நன்றி.
    த.ம. 11

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவுடன் இனிய குறள் வாழ்த்தும்
      வாக்கும் தந்தீர்கள்! மிக்க நன்றி ஐயா!

      Delete
  20. இனிமை! மிகவும் இரசித்தேன்! உங்களதும் உங்கள் ஆசானதும் இன்னும் சிலரது வலைப்பூக்களையும் பின்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் படைப்புக்கள்! மிக்க நன்றி தோழி!

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.