Pages

Aug 23, 2015

கனவு காணுங்கள்!..


கனவு காணுங்கள்!..
(பதினைந்து மண்டிலம்)
~~~~~~~~~~~~~~

1.
மனமே தினம்காண் கனவு! வனம்போல்
நனிசீர் கனிவு! புனைவாய் - இனஞ்சேர்
நினைவு! சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து
புனல்சீர் உனைச்சேர் முனைந்து!

2.
தினம்காண் கனவு! வனம்போல் நனிசீர்
கனிவு! புனைவாய் இனஞ்சேர் - நினைவு!
சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து புனல்சீர்
உனைச்சேர் முனைந்துமன மே!

3.
கனவு வனம்போல் நனிசீர் கனிவு!
புனைவாய் இனஞ்சேர் நினைவு! - சினம்ஏன்?
கனல்ஏன்? கனிந்து புனல்சீர் உனைச்சேர்
முனைந்துமன மேதினம் காண்!

4.
வனம்போல் நனிசீர் கனிவு! புனைவாய்
இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்? - கனல்ஏன்?
கனிந்து  புனல்சீர் உனைச்சேர் முனைந்து
மனமே தினம்காண் கனவு!

5.
நனிசீர் கனிவு! புனைவாய் இனஞ்சேர்
நினைவு! சினம்ஏன்? கனல்ஏன்? - கனிந்து
புனல்சீர் உனைச்சேர் முனைந்து! மனமே
தினம்காண் கனவுவனம் போல்!

6.
கனிவு புனைவாய் இனஞ்சேர் நினைவு!
சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து - புனல்சீர்
உனைச்சேர் முனைந்து! மனமே  தினம்காண்
கனவுவனம் போல்நனி சீர்!

7.
புனைவாய் இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்?
கனல்ஏன்? கனிந்து புனல்சீர் - உனைச்சேர்
முனைந்து! மனமே  தினம்காண்  கனவு
வனம்போல் நனிசீர் கனிவு!

8.
இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்? கனல்ஏன்?
கனிந்து புனல்சீர் உனைச்சேர் - முனைந்து!
மனமே  தினம்காண்  கனவு! வனம்போல்
நனிசீர் கனிவுபுனை வாய்!

9.
நினைவு சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து
புனல்சீர் உனைச்சேர் முனைந்து! - மனமே
தினம்காண்  கனவு! வனம்போல் நனிசீர்
கனிவுபுனை வாய்!இனஞ் சேர்!

10.
சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து புனல்சீர்
உனைச்சேர் முனைந்து! மனமே - தினம்காண்
கனவு! வனம்போல் நனிசீர் கனிவு
புனைவாய்! இனஞ்சேர்! நினைவு!

11.
கனல்ஏன்? கனிந்து புனல்சீர்  உனைச்சேர்
முனைந்து! மனமே தினம்காண் - கனவு!
வனம்போல் நனிசீர் கனிவு! புனைவாய்
இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்?

12.
கனிந்து  புனல்சீர்  உனைச்சேர் முனைந்து!
மனமே தினம்காண் கனவு! - வனம்போல்
நனிசீர் கனிவு! புனைவாய் இனஞ்சேர்
நினைவு!சினம் ஏன்?கனல் ஏன்?

13.
புனல்சீர்  உனைச்சேர் முனைந்து! மனமே
தினம்காண் கனவு! வனம்போல் - நனிசீர்
கனிவு! புனைவாய் இனஞ்சேர் நினைவு!
சினம்ஏன்? கனல்ஏன்? கனிந்து!

14.
உனைச்சேர் முனைந்து! மனமே தினம்காண்
கனவு! வனம்போல் நனிசீர் - கனிவு!
புனைவாய் இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்?
கனல்ஏன்? கனிந்துபுனல் சீர்!

15.
முனைந்து மனமே தினம்காண் கனவு!
வனம்போல் நனிசீர் கனிவு! - புனைவாய்
இனஞ்சேர் நினைவு! சினம்ஏன்? கனல்ஏன்?
கனிந்துபுனல் சீர்!உனைச் சேர்!


இலக்கணக் குறிப்பு

பதினைந்து மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!

இந்தப் பதினைந்து மண்டில வெண்பாவை எங்கள் ஆசானின் பதிவில் காணலாம்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

44 comments:

  1. அருமை. சமீபத்தில் இதே முயற்சியை ஊமைக்கனவுகள் தளத்திலும் கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் சகோதரரே!

      ஆமாம் சகோ! இது தற்போது எங்கள் ஆசான்
      எமக்குக் கற்பித்த இலக்கணப் பாடம்!
      அதன்படி பா எழுதிப் பதிவிட்டேன்!

      அன்பான வரவும் இனிய கருத்தும்
      வாக்கும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோ!

      Delete
  2. வெண்கா அருமை சகோதரியாரே
    அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவுடன் இனிய கருத்தும்
      வாக்கும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

      Delete
  3. கனிந்த கவிதை அருமை..!

    ReplyDelete
    Replies
    1. இனிய வரவிற்கும் நற்கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோதரி!

      Delete
  4. கன்னல் தமிழ் கொண்டு - கலாம் ஐயா அவர்களுக்கு
    கவிதாஞ்சலி!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      கனிவுகொண்ட மாமேதையை இப்படியாயினும்
      இங்கு நினைவுகூரக் கிட்டியது என் பாக்கியமே!

      அன்பான வரவும் இனிய கருத்தும்
      தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

      Delete
  5. மனமே தினம் காண் கனவு என்பது புரிகிறது. மற்றவை பாட்டுக்காக எழுதிய வார்த்தைகளா.? பதவுரை பொழிப்புரை எல்லாம் தேவைப் படும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

      Delete
  6. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      வரவிற்கும் வேண்டுகோளிற்கும் நன்றி!

      Delete

  7. மிகவும் அருமையாக உள்ளது பதினைந்து மண்டிலம் !வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவும் இனிய கருத்தும்
      வாக்கும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தோழி!

      Delete
  8. அன்புள்ள சகோதரி,

    கனவுகள் காணக் கலாமய்யா சொல்ல

    நனவாக்கப் பாடுபட்டே நாளுமினி - காண்பாய்

    கனவுகள் மெய்ப்படும் காலம் வருமே

    உனதாகும் வல்லரசாய் நாடு.

    பதினைந்து மண்டிலம் முனைந்து பாடி மகிழ்ந்தாயே...! மகிழ்ச்சி.
    பாராட்டுடன் வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      கனவு காணச் சொன்ன கலாம் ஐயாவின் கனவுகள்
      பலிக்கும் காலம் வந்துவிட்டது!

      அன்பான வரவும் இனிய கருத்தும்
      வாக்கும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

      Delete

  9. வணக்கம்!

    அன்பும் அருளும் அறிவியலும் ஆட்சியுற!
    என்றும் மனிதம் எழுச்சிபெற! - வன்னாற்றல்
    பெண்ணெலாம் ஏற்றுப் பெருமையுற! நம்மினிய
    இன்கலாம் கண்ட கனவு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மண்டிலப் பாமாலை மாட்சிமை பெற்றது
      கண்டஉன் வெண்பாவைக் கற்று!

      தங்களின் கற்பித்தலில் நான் எழுதும் பாக்களுக்கு
      உங்களாலேயே அங்கீகாரம் கிடைப்பதை எண்ணி
      மனம் மகிழ்கின்றேன்!

      தங்களின் அன்பான வரவிற்கும் அருமையான வெண்பாவிற்கும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  10. இளநிலவே நீதொடுக்கும் பாக்கள் பார்த்து
    இதயம் மகிழ்கிறது, கலாம் கண்டகனவு
    காலஓட் டத்தில் காவியம் மாகும்
    காட்சிப் படுத்தும் மாட்சியை

    வெண்பா பார்த்தே பைத்தியம் ஆனேன்
    வெண்பா மும்மண்டிலம் கண்டு நான்
    மூர்ச்சை ஆகுமுன் முத்தான கருத்துனக்கு
    முகிழ்த் தேன்மதி தோழி
    வாழ்த்துக்கள் மா,,,

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோதரி!

      கவிதை கூறி அமர்களப்படுத்துகின்றீர்களே!
      அருமை! அருமை!

      இனிமையாய்ப் பாடி என்னைக் கரைத்தீர்கள் சகோதரி!
      அன்பான வரவுடன் இனிய கவிதைப் பொழிவிற்கும்
      வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  11. அருமையான கவிதாஞ்சலி சகோ
    தமிழ் மணம் 7

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவிற்கும் இனிய ரசனை மற்றும்
      வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  12. அடடாசகோதரி அருமை,அருமை
    நானும் இதுபோல் ஆக்கலாம்என்று
    மட்டுமேநினைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      அதென்ன ஆக்கலாம்..:)
      ஆகியாச்சே நீங்கள்!.. ஓ..! என்னை உங்களைப் போல
      அந்த இடத்திலேயே கவி யாத்திட ஆக்கலாம் என நினைத்தீர்களோ?..:))

      அன்பான வரவுடன் இனிய கருத்துப் பகிர்விற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  13. சிறப்பான கவிதாஞ்சலி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் வருகைதந்து ரசித்து வாழ்த்தியமைக்கு
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  14. ஆஹா! உங்களுக்குப் பா புனைவது அல்வா சாப்பிடுவது போல்..பதினைந்து மண்டிலம் கூட அருவியாய்க் கொட்டுகிறதே! :-)

    வாழ்த்துகள் தோழி..

    ReplyDelete
    Replies
    1. அல்வாவா?.. யார் யாருக்குக் கொடுத்தது?..:))
      ம் ம்..! நீங்களும் குறைந்தவரா என்ன?..
      இலக்கியப் பாடல் புலி! தற்சமயம் பாப்பாப் பாட்டுப் பாடி
      மயக்குகிறீர்களே.. பிறகென்ன..!

      அன்பான வரவிற்கும் மகிழ்வான கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  15. அழகான கவி தோழி...தமிழறிவு வியக்க வைக்கிறது..கற்றுக் கொள்ளும் ஆவலை தூண்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      தங்கள் தளத்திலும் தரும் கவிதைகள் என் மனத்தில்
      ஒட்டிக்கொள்கின்றனவே! அருமையாக இருக்கின்றன!

      மரபில் பாடக் கற்றுக்கொள்ளுங்கள்!
      கட்டாயம் உங்களுக்குக் கைவரும்!

      அன்பான வரவிற்கும் இனிய கருத்திற்கும்
      மனமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  16. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      தங்கள் தளத்திற்கு நான் வந்து கருத்திட்டுவிட்டேன் ஐயா!
      நன்றி!

      Delete
  17. ஆஹா அருமைமா....வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிமா!

      Delete
  18. ஆஹா ..அழகு தமிழில் அற்புதமான (வெண்) பாக்கள்.
    வாழ்த்துக்கள் இளமதி.!!

    ReplyDelete
    Replies
    1. அன்போடு வந்து ரசித்துக் கருத்திட்டமைக்கும்
      வாழ்த்தி வாக்கிட்டமைக்கும் உளமார்ந்த நன்றி பிரியா!

      Delete
  19. கலக்குங்க சகோதரி
    பயந்து ஓட வேண்டியிருக்கு உங்கள் தமிழ் செழுமை கண்டு ...
    பதிந்து வைத்துக் கொள்கிறேன்
    தம +

    ReplyDelete
    Replies
    1. அடடா... ஏன் பயந்து ஓடணும் சகோ!
      இதுவே செழுமைன்னா இலக்கியப் பாடல்களை என்னவென்பது?...

      அன்பான வரவும் ஆர்வத்தைத் தூண்டும் கருத்தும்
      இட்டு மகிழ்வித்தீர்கள்!
      வாக்கும் இட்டமைக்கு மனமார்ந்த நன்றி சகோ!

      Delete
  20. தங்களின் ஓட்டத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியுமா?
    இத்தனை வேகமாக என்னை இழுத்துக்கொண்டு ஓடினால் எப்படி?
    அற்புதம்! தோழி! வியந்து நிற்கிறேன்.
    அகமகிழ்ந்த வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. அகமகிழ்வுடன் வந்து உளம் நிறைத்த தென்றலே
      அன்பு வாழ்த்து வாக்கிற்கு மனமார்ந்த நன்றி தோழி!

      Delete
  21. வாழ்த்துகள்! வளர்க மேலும் நாளும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் வாழ்த்து என்னை இன்னும் வளரச்செய்யும்!
      அன்போடுங்கள் வரவிற்கும் வாழ்த்து வாக்கிற்கும்
      பணிவுடன் நன்றியும் வணக்கமும் ஐயா!

      Delete
  22. அன்புத் தோழியே தாமதத்திற்கு மன்னிக்கணும் ஊரில் இல்லடா அதான்.
    அட அட அடடா ம்..ம் என்ன நான் சொல்ல வியந்து நிற்கிறேன் வடிவமைக்கும் வித்தை கண்டு சுயநினைவற்று சொக்கித் தான்.

    அருமை அருமை ! என்று மட்டும் சொன்னால் போதுமா? எது சொன்னால் போதுமென்று தெரியலையே wow வளரட்டும் வல்லமை இன்னும்.

    மொட்டு மலர்ந்ததுபோல் மெட்டுடன் மண்டலம்
    கட்டிடும் வல்லமை காட்டினாய் - சொட்டும்தேன்
    சீரெல்லாம் சேர்த்தெந்தன் சிந்தை நிறைக்கிறது
    பாரெலாம் போற்றிடப் பாடு !

    கொட்டியு மாம்பலும்போல் கூடவே வருவேன்நான்
    ஊட்டமிட் டுன்னுடன் ஓது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழியே!

      தாமதம் ஒன்றுமில்லை! காத்திருக்கின்றேன் உங்களுக்காக!..:)

      பாரெலாம் போற்றியே பாடிட மேலும்நான்
      சீரெல்லாம் கற்கச் சிறப்பு!

      இன்னும் நான் கற்கைப் பயணத்தில் தான் இருக்கின்றேன்.
      அதிகமாகப் புகழ்ந்து பாராட்டுகிறீர்களே என்னை!.

      அன்பான வரவுடன் ஆர்வமாய்க் கவிதையால் வாழ்த்தியமைக்கு உளமார்ந்த நன்றி தோழி!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.