Pages

Aug 25, 2015

இன்தமிழே! என்னுயிரே!..

இன்தமிழே! என்னுயிரே!
(பதினான்கு மண்டிலம்)
~~~~~~~~~~~~~~~~
1.
இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே!
மென்தமிழே நன்மையொளிர் பொன்மலையே! - அன்றுமொளிர்
இன்றுமொளிர்! என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே!
சின்னவள்நான் சென்னியில் சேர்!

2.
என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே!  மென்தமிழே!
நன்மையொளிர் பொன்மலையே! அன்றுமொளிர் - இன்றுமொளிர்!
என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே! சின்னவள்நான்
சென்னியில்சேர்! இன்தமி ழே!

3.
தென்மொழியே! தொன்மொழியே!  மென்தமிழே! நன்மையொளிர்
பொன்மலையே! அன்றுமொளிர் இன்றுமொளிர்! - என்றுமொளிர்
நன்மொழியே! பன்மலரே! சின்னவள்நான் சென்னியில்சேர்!
இன்தமிழே! என்னுயி ரே!

4.
தொன்மொழியே!  மென்தமிழே! நன்மையொளிர் பொன்மலையே!
அன்றுமொளிர் இன்றுமொளிர்!  என்றுமொளிர் - நன்மொழியே!
பன்மலரே! சின்னவள்நான் சென்னியில்சேர்! இன்தமிழே!
என்னுயிரே! தென்மொழி யே!

5.
மென்தமிழே! நன்மையொளிர் பொன்மலையே! அன்றுமொளிர்
இன்றுமொளிர்!  என்றுமொளிர் நன்மொழியே! - பன்மலரே!
சின்னவள்நான் சென்னியில்சேர்! இன்தமிழே! என்னுயிரே!
தென்மொழியே! தொன்மொழி யே!

6.
நன்மையொளிர் பொன்மலையே! அன்றுமொளிர் இன்றுமொளிர்!
என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே! - சின்னவள்நான்
சென்னியில்சேர்! இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே!
தொன்மொழியே!  மென்தமி ழே!

7.
பொன்மலையே! அன்றுமொளிர் இன்றுமொளிர்! என்றுமொளிர்
நன்மொழியே! பன்மலரே! சின்னவள்நான் - சென்னியில்சேர்!
இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே!
மென்தமிழே! நன்மை யொளிர்!

8.
அன்றுமொளிர் இன்றுமொளிர்! என்றுமொளிர் நன்மொழியே!
பன்மலரே! சின்னவள்நான் சென்னியில்சேர்! - இன்தமிழே!
என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே! மென்தமிழே!
நன்மையொளிர்! பொன்மலை யே!

9.
இன்றுமொளிர்! என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே!
சின்னவள்நான் சென்னியில்சேர்! இன்தமிழே! - என்னுயிரே!
தென்மொழியே! தொன்மொழியே! மென்தமிழே நன்மையொளிர்!
பொன்மலையே! அன்று மொளிர்!

10.
என்றுமொளிர் நன்மொழியே! பன்மலரே! சின்னவள்நான்
சென்னியில்சேர்! இன்தமிழே! என்னுயிரே! - தென்மொழியே!
தொன்மொழியே! மென்தமிழே நன்மையொளிர்! பொன்மலையே!
அன்றுமொளிர்! இன்று மொளிர்!

11.
நன்மொழியே! பன்மலரே! சின்னவள்நான் சென்னியில்சேர்!
இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே! - தொன்மொழியே!
மென்தமிழே நன்மையொளிர்! பொன்மலையே! அன்றுமொளிர்!
இன்றுமொளிர்! என்று மொளிர்!

12.
பன்மலரே! சின்னவள்நான் சென்னியில்சேர்! இன்தமிழே!
என்னுயிரே! தென்மொழியே! தொன்மொழியே! மென்தமிழே
நன்மையொளிர்! பொன்மலையே! அன்றுமொளிர்! இன்றுமொளிர்!
என்றுமொளிர்! நன்மொழி யே!

13.
சின்னவள்நான் சென்னியில்சேர்! இன்தமிழே! என்னுயிரே!
தென்மொழியே! தொன்மொழியே! மென்தமிழே - நன்மையொளிர்!
பொன்மலையே! அன்றுமொளிர்! இன்றுமொளிர்! என்றுமொளிர்!
நன்மொழியே! பன்மல ரே!

14.
சென்னியில்சேர்! இன்தமிழே! என்னுயிரே! தென்மொழியே!
தொன்மொழியே! மென்தமிழே நன்மையொளிர்! - பொன்மலையே!
அன்றுமொளிர்! இன்றுமொளிர்! என்றுமொளிர்! நன்மொழியே!
பன்மலரே! சின்னவள் நான்!


இலக்கணக் குறிப்பு
பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!

மேலும் அறிந்துகொள்வதற்கு எங்கள் ஆசானின் வலைத் தளத்தில் பாருங்கள். நன்றி!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

48 comments:

  1. இன்றும் என்றும் ஒளிரும் இன்தமிழிற்கு நீங்கள் ஆக்கிய பதினான்கு மண்டில பா மிக அருமை தோழி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி!

      என்றும் என்னோடிருக்கும் இன்தமிழ்போல்
      நீங்களும் வலையுறவுகளும் இருக்கின்றதும்
      பெரும் மகிழ்வே!

      அன்புடன் வந்து அழகுக் கருத்திட்டீர்கள்!
      மனமார்ந்த நன்றி தோழி!

      Delete
  2. //மென்தமிழே //
    இப்படி வார்த்தைகள் விழிகளில் விழுந்தால் இனிக்கிறது தமிழ் ...
    தொடருங்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ!.. நீங்கள் கவிஞராகி விட்டீர்கள் என்பதற்கு
      நல்ல சான்று! //வார்த்தைகள் விழிகளில் விழுந்து இனிக்கிறது//
      மிகவும் ரசிக்க வைத்த வசனம்! என்னைக் கவர்ந்தது சகோ!

      மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!
      வாக்கிற்கும் நன்றி சகோ!

      Delete
  3. படிக்கப் படிக்க இன்பம்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!
      தங்களின் ரசனை எனக்குச் சந்தோஷம்!
      இனிய வரவிற்கும் வாழ்த்து, வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. என்னம்மா இப்படிக் கலக்கிறீங்களே ம்மா. ஹா ஹா .....அடுத்தடுத்து ஆச்சரியத்தில் வேறு சொற்கள் வரவில்லை. தங்களால் தமிழுக்கு பெருமையா ? தமிழ்மொழியால் தங்களுக்கு பெருமையா? என்று சந்தேகம் வந்து விட்டது. இப்போ....
    தம் ஆற்றல் எனைப் பிரமிக்க வைக்கிறது தோழி. மேலும் சிறக்க வென் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா இப்புடி கேட்டுப்புட்டீங்களேம்மா..:)))
      என்னதிது சந்தேகம்?.. தமிழ்மொழியால்தான் எனக்குப் பெருமை!!

      தங்களின் அன்பான வரவுடன் இனிமையான ரசனையும்
      கருத்தும் என்னை மயக்குகிறது தோழி!..

      சேர்ந்தளித்த வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  5. இன்தமிழே!.. என்னுயிரே!..
    தென்மொழியே!.. தொன்மொழியே!..

    வாழ்க தமிழ்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா!
      தொன்மொழியும் தென்மொழியுமான எங்கள் இன்மொழி அது!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா!

      Delete

  6. வணக்கம்!

    என்றும் பதினாறாய் மின்னும் இளமதியே!
    உன்றன் பதினான்கு மண்டிலம் - இன்றேனே!
    கண்டு களித்தேன்! கனித்தமிழ்க் கட்டழகை
    உண்டு களித்தேன் உவந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      இளமதியின் பாக்கள் என்றும் பதினாறாக இருப்பதற்கு
      தங்களின் அன்பான கற்பித்தலே காரணம் ஐயா!

      அன்பான வரவுடன் இனிய வெண்பா வாழ்த்திற்கும்
      வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  7. ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய வரவும் ரசனையும் கண்டு ரொம்ப மகிழ்ச்சி சகோ!
      மிக்க நன்றி!

      Delete
  8. ஆஹா ஆஹா! என்னென்பேன்! என்தோழி பாமாலை தினம்சூடி மகிழ்விக்க கண்டு களிப்புற்றேன்.
    மெய்மறக்கச் செய்யும் உங்கள் தமிழ்ப்புலமை.
    அகமகிழ்ந்த வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. ம்..ம் உங்களை விடவா நான் எழுதிவிடுகிறேன்!
      உங்கள் பாக்கள் என்றால் எனக்கு எப்பவுமே
      இனம்புரியாத ஒரு ஆவல்! ஆசை! நிகழ்வுகளை சர்வ சாதாரணமாகப் பாடுபொருளாக்கிப் பாடுவதில் சாமர்த்திய சாலியல்லவா நீங்கள்!

      அன்பான வரவுடன் இனிக்க இனிக்கக் கருத்திட்டு வாழ்த்தி வாக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி தோழி!

      Delete
  9. பா அருமை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வலைச்சர ஆசிரியரே!
      மிக்க நன்றி!

      Delete
  10. அருமை !அருமை ! என் ஆருயிர்த் தோழியே இன்புற்றேன் இன்தேன்
    கவிதை மழையில் நனைத்து வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. இன்பமுற எழுதும் உங்கள் பாக்களின் அழகு
      சொல்லிட அடங்காதே தோழி!

      அன்பான வரவுடன் ரசித்து வாழ்த்தி வாக்கும் இட்டமைக்கு
      மிக்க நன்றி தோழி!

      Delete
  11. அருமை இளமதி! அழகு தமிழை மேலும் அழகு செய்து விட்டீர்கள்! இதற்கான ஓவியத்தை எங்கே கண்டு பிடித்தீர்கள்? அதுவும் கொள்ளை அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அக்கா!

      தமிழ் எப்பவும் அழகுதான் அக்கா!
      எங்கள் பிள்ளைகள் எப்பவும் அழகானவர்களே.
      ஆனாலும் அவர்களைப் பார்த்துப் பார்த்து ஒப்பனை செய்து
      அழகு பார்ப்போமே! அதுபோல அழகி தமிழாளையும்
      சிறப்பித்துப் பாவிசைத்துப் பார்த்து மகிழ்கின்றேன்!..

      அந்த ஓவியம் கூகிள் ஆண்டவரின் உபயம் அக்கா!
      அன்பான வரவுடன் இனிய கருத்துப் பரிமாற்றத்திற்கு
      உளமார்ந்த நன்றி அக்கா!

      Delete
  12. அன்புள்ள சகோதரி,

    உன்னுயிராய் எண்ணி உவகையில் பாடினாய்

    ஒன்றாய் இணைக்கும் உணர்வினில் - நன்றாய்ப்

    பதினான்கு மண்டிலத்துப் பண்ணில் சிறந்தாய்

    உதிர்த்த அனைத்துமே முத்து!


    -தமிழ்க்கடலில் மூழ்கி முத்துக்குளித்ததற்கு வாழ்த்துகள்!

    நன்றி.
    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுப்பதெல்லாம் அவ்வளவு
      இலகுவாயில்லை ஐயா! நானும் முத்தெடுக்கப் போனேன் என்று பாவனை காட்டுகிறேன் அவ்வளவே!..

      அன்பான வரவுடன் இனிய வெண்பா வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  13. தமிழ்ப்பால் குடித்தேன் கவிஞரே
    தமிழ் மணம் 100

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ! மிக்க மகிழ்ச்சி!

      தமிழ் மணம் 100.!..
      ஓ.. எனக்கு 100 வாக்கு இட்டுள்ளீர்களா?
      அதாவது ஒரு வாக்கு என்றாலும் அது 100 வாக்கிற்குச் சமம் அப்படித்தானே!..:)))

      இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும்
      மனம் நிறைந்த நன்றி சகோ!

      Delete
  14. முத்து மாலை! வெண்பா கொத்து மாலை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      முத்தாகக் கொத்தாகக் கண்டீர்களோ வெண்பா மாலையை!..

      தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் வாக்கும் கண்டேன்.
      மிக்க மகிழ்சியுடன் நன்றி கூறுகின்றேன் ஐயா!

      Delete
  15. நீண்டநாள் கழித்து வருகின்றேன் சகோதரீ! பதினான்கு மண்டிலம் கண்டு வியந்தேன். சின்னவள் நான் என்பதைச் “சின்னவள்என்“ என்று வைத்தால் தொடரும் தொடருக்கு இன்னும் பொருத்தமாக இருக்குமோ? என்றாலும் அழகும் ஆச்சரியமும் தந்த வெண்பாக்கள் உனக்கு வாழ்த்துகளும் உன் ஆசிரியர் அய்யா பா.தா.அவர்களுக்கு என் வணக்கமும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      ஆமாம் நீண்ட நாட்களாகிவிட்டது ஐயா!
      நானும் உங்கள் வலைப்பக்கம் வந்து.. விரைவில் வருகிறேன்!

      நீங்கள் சொல்லவது போலவே சின்னவள்என் என்றே முதலில் நான் எழுதினேன். ஆனால் பாருங்கள் பதினான்காவது வெண்பாவில் இச் சொல் இறுதிச் சீராகப் பிரிந்து வருகிறது. அப்போ அந்த என் என்னும் சீர் தனித்து வரும்போது அதற்குப் பொருளின்றி அங்கு நிற்பதாயிற்று. அதனாலேயே சின்னவள்நான் என மாற்றி எழுதினேன் ஐயா!

      தங்களின் அன்பான வரவுடன் ஆக்கம் மிக்க அருமையான கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  16. தமிழ் வாழ்க ....ஆகா அழகு ..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      வாழ்க தமிழ்!

      இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோதரி!

      Delete
  17. ஓவியமும்,கவிதையும் அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அக்கா!

      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி அக்கா!

      Delete
  18. படித்து ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி!

      Delete
  19. Replies
    1. வணக்கம் சகோதரரே!
      இங்கு உங்களின் முதல் வருகையென எண்ணுகிறேன்.
      மட்டற்ற மகிழ்ச்சி!
      மிக்க நன்றி!

      Delete
  20. ஆஹா அருமை தோழி! எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளையும் சுற்றி நடப்பவைகளையும் மட்டும் தாய்மொழி கொண்டு வெளிப்படுத்தும் என் போன்றவர்களுக்கு உங்கள் தமிழறிவு வியக்க வைக்கிறது தோழி! சூழ்நிலைகள் காரணமாக தமிழை ஆழக் கற்க முடியவில்லை. இவ்வாறான அறிவைப் பெறவேண்டுமே என்ற ஏக்கம் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. மனதினை ஒருநிலைப்படுத்தி கற்க முடியவில்லை... வாசித்து இன்புற்றேன். உங்கள் இனிய தமிழ் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி!
      தங்களுக்குள் இருக்கும் திறன் மரபில் கற்க இலகுவானது.
      மொழியறிவும் ஆற்றலும் மிக்க உங்களுக்கு இதுவும் சாத்தியமே!
      முயலுங்கள். முன்னேற்றம் காண்பீர்கள்!

      அன்பான வரவுடன் இனிமையாகக் கருத்துப் பகிர்விட்டீர்கள்.
      வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  21. உங்கள் அன்பான ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றி தோழி. மரபு வழியை கற்க முயற்சி எடுக்கின்றேன்! :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி!

      Delete
  22. வணக்கம் சகோ !

    அற்புதமான படைப்பு இன்னும் இன்னும் எழுதி எல்லாப் புகழும் உமைச் சேர நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    தொடர்கிறேன் சகோ நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை சகோ!

      உங்களை இங்கு கண்டதே பெரும் மகிழ்வாயிருக்கின்றது.
      நலமோடிருக்கின்றீர்களோ? அவ்வப்போது நீங்களும் கொஞ்சம்
      உங்கள் வலையில் எழுதலாமே!

      வரவும் வாழ்த்தும் என் எழுத்துகளுக்கு உரமூட்டுகின்றன!

      மிக்க நன்றி சீராளா!

      Delete
  23. அக்கா,
    இப்போது 14, 15 மண்டிலங்களாக எழுதி எல்லோரும் கலக்குறீங்க...
    நாங்களெல்லாம் ரசித்து வாசிப்பதோடு சரி...
    நமக்கெல்லாம் மண்டிலம் மண்டையில் ஏறுவதில்லை...
    முதல் கருத்தில் ரசித்தேன் அக்கான்னு போடுவதற்குப் பதில் ஐயான்னு வந்திருச்சு... தவறுதலுக்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      ஐயாவிடம் கற்பதை எம் வலையிலும் பதிவிட்டு அனைவரின்
      கருத்துகளையும் கேட்டு மகிழ்கிறோம்.
      நீங்கள் ரசித்திருப்பதே எங்களுக்கு மேலும் கற்று எழுதிடத்
      துணையாகிறது!

      மிக்க நன்றி சகோ அன்பான வரவுடன் இனிய நற் கருத்திற்கும்!

      Delete
  24. அப்பப்பா..!! என்னமா வார்த்தைகள் வந்துவிழுகின்றன. வாசிக்கும்போதே ஒருவித மயக்கம். எழுதும்போது எவ்வளவு கவனமாக எழுதவேண்டும். சூப்பர் இளமதி. மேலும் தொடர வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.