Pages

Sep 11, 2015

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!

வலைப்பூ உறவுகளே!..
வலைப்பதிவர் திருவிழாப் பார்க்கப் போக ஆயத்தமா?.
புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழாவில்
புதுமைகள் பல படைக்கவுள்ளனராமே!...
நான் அங்குப் போகமுடியாமல் மனம் வருந்துகிறேன்!...
எனக்காக அங்குச் சென்று
வாழ்த்தி வாருங்கள் உறவுகளே!
வண்ணப் படங்களாகக் காணொளியாக
நிகழ்வுகளைக் காண ஆவன செய்யுங்கள்!

உள்ளம் மிகவே மகிழ்வேன்!

நிகழ்வுகளை மனக் கண்ணில் காணும் காட்சியாக இங்குப் பாடியுள்ளேன்!..
~~~~~~~~~~~~~~~~~~


புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!..

புதுக்கோட்டை போய்வருவோம் தங்கமே தங்கம்!
   புவியெங்கும் தமிழ்மணக்கத் தங்கமே தங்கம்!
மதுக்கோட்டை போல்மயக்கும் தங்கமே தங்கம்!
   வலைப்பதிவர் திருநாளாம் தங்கமே தங்கம்!
அதுக்காகச் சேலைவாங்கு தங்கமே தங்கம்!
   அழகாக வளையலணி தங்கமே தங்கம்!
செதுக்கிடாத சிலையும்..நீ! தங்கமே தங்கம்!
   சீக்கிரம்..வா! போய்வரலாம் தங்கமே தங்கம்!

பதிவரெலாம் ஒன்றிணைந்து தங்கமே தங்கம்!
   பாசமழை பொழியுறாங்க தங்கமே தங்கம்!
நிதியுதவி செய்யவேண்டும் தங்கமே தங்கம்!
   நினைவெல்லாம் இனிக்குதடி தங்கமே தங்கம்!
மதியசோறு கமகமக்கத் தங்கமே தங்கம்!
   வயிறாரச் சாப்பிடலாம் தங்கமே தங்கம்!
அதிகதூரம் இல்லையடி தங்கமே தங்கம்!
   அருந்தமிழைப் பாடிடுவோம் தங்கமே தங்கம்!

புத்தகங்கள் வெளியீடாம் தங்கமே தங்கம்!
   புதையலாக இருந்திடுமே தங்கமே தங்கம்!
வித்தகர்கள் பேச்சுமுண்டு தங்கமே தங்கம்!
   விளம்பரமே சேதிசொல்லும் தங்கமே தங்கம்!
சித்திரமும் கவிதைசேர்த்துத் தங்கமே தங்கம்!
   செய்யும்ஏடு புகழ்வீசும் தங்கமே தங்கம்!
பத்திரமாய்ப் பாதுகாக்கத் தங்கமே தங்கம்!
   பகிரவேண்டும் சுயவிவரம் தங்கமே தங்கம்!
~~~~~~~~~~
விழா சிறப்புற நடைபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்!

மேலும் விழா பற்றிய விபரங்களை உடனுக்குடன் அறிய
இங்கே பாருங்கள் உறவுகளே!
மிக்க நன்றி!
கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

66 comments:

  1. புதுகையில் கூடுவோம்
    அருந்தமிழைப் பாடுவோம்
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      ஆமாம் ஐயா புதுகையில் நீங்களெல்லோரும்
      கூடப் போகின்றீர்கள்! மகிழ்ச்சியின் எல்லையில்
      அனைவரும் உள்ளீர்கள்!..:) எனக்கும் மகிழ்வே!

      அன்போடு வருகை தந்து வாழ்த்தும் வாக்கும் தந்தீர்கள்!
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  2. புதுக்கோட்டையில் சங்கமிப்போம். கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவுடன் வாழ்த்தி வாக்கும் இட்டமைக்கு
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  3. ஆகா
    அருமை சகோ
    தம +
    (பில்டப்பை மெய்ண்டைன் பண்ணனுமே)

    ReplyDelete
    Replies
    1. ஆகா... என்ன சகோதரரே பில்டப்பு..:))
      என்னமோ.. மெயிண்டைன் பண்ணுங்க... !
      ஆமா அங்கிருந்து காட்சிகளை காண ஆவன செய்கிறீங்க தானே!
      அப்புறம் அது வேலை செய்யல.. இது சரியா வரலைன்னு
      சொல்லப்பிடாது ஆமா. இப்பவே சொல்லீட்டன்..:)

      அன்பான வரவிற்கும் கலாய்ப்புக்கும்
      வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
    2. ஆமா போன தடவை சவுண்ட் டே வரலை .....

      Delete
  4. இந்த தளம் மிக பாதுக்காக்கப்பட வேண்டியது காரணம் இங்கு தங்கம் மிக அதிகமாக கொட்டிகிடக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்க சகோதரரே!

      அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே..!!
      பாதுகாப்பு தாறதுக்குன்னு..:))

      அன்பான வரவிர்கும் ரசிப்பிற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  5. அழகான அருமையான பாட்டு... நன்றி... வாழ்த்துகள்...

    // வண்ணப் படங்களாகக் காணொளியாக
    நிகழ்வுகளைக் காண //

    கண்டிப்பாக செய்வோம் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      காத்திருக்கின்றேன் காட்சிகளைக், காணொளியைக்
      காண்பதற்கு..:)

      Delete
  6. தங்கமான நிகழ்வுக்கு
    தங்கத் தமிழ்ப் பாட்டு!..

    மனமார்ந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  7. அருமை கவிஞரே மீண்டும் மீண்டும் பாடிப்பார்க்கின்றேன் மெட்டு மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது வாழ்த்துகள் - தமிழ் மணம் தேனாறு

    ReplyDelete
    Replies
    1. அட.. அப்படியா?.. பாடிப் பதிவிடுங்கள் கேட்போமே!

      அன்பின் வரவிற்கும் வாழ்த்து வாக்கிற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  8. ஆஹா! சூப்பரா இல்ல பாடி அசத்துறிங்க.
    ஒவ்வொரு வரியும் செதுக்கியிருக்கிங்க.
    பிரமாதம்! பிரமாதம்!
    விழாவிற்கு செல்லும் ஆவலை ஏற்படுத்தும் தங்கள் கவிதை வரிகள். வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்கள் கவிகளைப் பார்த்து வந்ததுதான் தோழி!
      இவ்வகைப் பாக்கள் நான் பாட எனக்கு வழிகாட்டியே நீங்கள் தான்!

      அன்பான வரவுடன் இனிய வாழ்த்துக்கும்
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  9. அருமையாக இருக்கும்மா ,,,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  10. அழகான நாட்டுப்புறப் பாடல் மூலம் விழாவிற்கு அழைத்திருக்கும் முறை மனத்தைக் கொள்ளைக் கொள்கிறது.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோதரரே!..

      தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு
    என்றைக்கும் மறக்க முடியாச் சந்திப்பு
    பாட்டாலே போட்டுடைத்தீர் உண்மையை
    தொடருங்கள்
    மிக்க நன்றி.

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே ஐயா!
      மாபெரும் திருவிழாவாக இருக்கப் போகிறது!
      மறக்க முடியுமா யாராலும்..

      தங்களின் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  12. புதுக் கோட்டைக்குச் செல்லமுடியாவிடினும் பதிவர் கையேட்டுக்கு தகவல்கள் தரலாமே. என் தளத்துக்கு வர அழைக்கிறேன் கதைப் போட்டி பற்றி அறிவித்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! நானும் கையேட்டுக்குத் தகவல்கள் கொடுத்துவிட்டேன்!

      மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. அருமையான பாட்டும்மா...நீங்கள் கலந்து கொள்ள மாட்டீர்களே என்ற வருத்தம் உண்டு எனக்கு...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி!

      எப்பொழுது என் ஆவல் நிறைவேறும் என்று
      ஏக்கமுடன் இருக்கின்றேன் நானும்!

      தங்களின் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  14. அட எல்லோரையும்அருமையான இந்தப் பாடல் மூலம் உசுப்பேத்தி விட்டீர்களே. இப்ப பாருங்க எனக்கே போகணும் போல இருக்கே ம்..ம் ஆமா அப்போ நம்ம பெண்கள் எல்லாம் புதுசு புதுசா சாறி வளையல் எல்லாம் வாங்கி இருப்பாங்க இல்ல சரி சரி நாம தான் கலந்து ரசிக்கப் போகிறோமே என்ன அவங்களோடு நேரடியா பேசமுடியாது அவ்வளவு தானே. ம்..ம் அடுத்த வருஷம் நாமளும் கலந்துக்கலாம் ok வா என் அன்புத் தோழியே. நன்றி நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அதுஅதே தான் தோழீஸ் !!! அதை டிஸ்கஸ் பண்ணக்கூட எங்களுக்கு நேரம் இல்லபா!!! இப்போ டைம்லியா ஞாபகப்படுத்திய செல்லங்களுக்கு நன்றி! நன்றி! (கீதாக்கா என்ன saree எடுப்போம்மா??)

      Delete
    2. ஆகா!.. உசுப்பேத்திவிட்டேனா?.. போகமுடியவில்லையே
      என்னும் வருத்தத்துடன் இருக்கின்றேன் நான்.
      அங்கு உள்ளவர்கள் யாவரும் போவார்கள் கட்டாயம்!

      பார்ப்போம் எங்களுக்கும் ஒரு காலம் வரும். சேர்ந்தே போவோம்..:)

      உளமார்ந்த அன்பிற்கு மிக்க நன்றி தோழி!

      மைதிலி.. தோழி!
      நாங்க அடுத்த வருடம் வருவோம். என்ன புடவை எடுப்போம்ன்னு அப்ப சொல்றோம்! சொல்வதென்ன எல்லோரும் ஒரே நிறப் புடவைதான் உடுத்திக்குவோம்.
      சரியா!..:))

      Delete
    3. அந்த நாளுக்காக இப்போதே காத்திருக்கிறேன் தோழி!!! உங்கள் ஈடற்ற அன்பில் புதுகையே திகைத்து நிற்கிறது தோழி!!! மிக்க நன்றி!

      Delete
    4. குழுவினருக்கு இன்னொரு வேலை வைத்தமைக்கு நன்றிகள்

      Delete
  15. இயன்றவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.இயலாத நம் போன்றோர்மனம் அங்கு இருக்கும்.
    அருமை

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

      அவர்களின் விழா ஏற்பாடுகளைப் பார்க்கும்போது தவிப்பில் மனம் படும்பாடு கொஞ்சமல்ல!

      அன்பிற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  16. அன்புள்ள சகோதரி,

    வலைப்பதிவர் சந்திப்பாம் தங்கமே தங்கம்!

       வகைவகையாய் ஏற்பாடாம் தங்கமே தங்கம்!

    சிலைபோல ஓவியமாம் தங்கமே தங்கம்!

       சிறப்பாகப் பதிவர்கள் தங்கமே தங்கம்!

    அலைபோல கூடிடுவர் தங்கமே தங்கம்!

       அன்புமொழி பேசிடுவர் தங்கமே தங்கம்!

    கலைத்தாயும் களிப்படைவாள் தங்கமே தங்கம்!

       காட்சிகண்டு மகிழ்ந்திடுவாள் தங்கமே தங்கம்!


    பாடல் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      பாடியே வந்து வாழ்த்தினீர்கள்!
      மிக்க மகிழ்ச்சி!
      அன்பான வரவிற்கும் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  17. ஆஹா...
    கவிதையிலேயே எல்லோரையும் கூப்பிட்டுட்டீங்க....
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

      அன்பின் வரவுடன் வாழ்த்திற்கும் இனிய நன்றி!

      Delete
  18. ஆஹா! அருமையான நாட்டுப்புறப்பாடல் மூலம் அழைப்பு விடுத்தமைக்கு வாழ்த்துகள்! வணக்கம்! அருமை....உங்களைத்தான் சந்திக்க இயலவில்லை! இப்படித் தங்கமாய் பாடினால்....மின்னி ஒளிராமல் இருக்குமா...ஜெக ஜோதியாக மின்னுகின்றது..தங்கள் தளம்!!!!! தமிழில்!!!!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வருத்தமே சகோதரரே!

      எல்லோரையும் ஒருசேரக் காண்பதைப் போல வேறென்ன மகிழ்வு!.. பார்ப்போம் காலம் கிட்டும்! காண்போம்!

      அன்பு வரவுடன் வாழ்த்துகந்தீர்கள்! மிக்க நன்றி!

      Delete
  19. பொறுப்பு அதிகமாகிட்டே போகுது... பதிவு அருமை அம்மா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே! பொறுப்புடன் செயலாற்றுவோமே!

      வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ!

      Delete
  20. ஆஹா அழகு தமிழில். எவ்வளவு அருமையாக, மாநாட்டை காண ஆவலை உண்டாக்கும் கவி வரிகள். வாழ்த்துக்கள் இளமதி..!!!

    ReplyDelete
    Replies
    1. போகத்தான் முடியவில்லை..
      இப்படிப் பாடியாவது மகிழ்வோமே!..:)

      அன்பு வரவுடன் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
      மிக்க நன்றி பிரியா!

      Delete
  21. அருமை. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவுடன் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  22. தோழி!!! செம பாட்டுமா:) நீங்க வரமாட்டீங்க:( அதனால என்ன next டைம் கண்டிப்பா meet பண்ணுவோம்:) புதுகை விழாக்குழு சார்பாக நன்றி!நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மா..! மனசு கிடந்து தவிக்குதில்ல..
      ஒரு நாள் நமக்கும் அமையும்! காண்போம்!

      அனைவரின் அன்பிற்கும் அகம் நிறைந்த நன்றி! நன்றி!

      Delete
  23. ஆஹா அழகான பாடல் வரவேற்பு சகோதரி! நோர்வே வந்தால் அவசியம் வீட்டுக்கு வாருங்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!.. மிக்க மகிழ்ச்சி சகோதரி!
      கண்டிப்பாக அங்கெல்லாம் வந்தால் வருவேன்!

      அன்பிற்கு மிக்க நன்றி!

      Delete
  24. www.youtube.com/watch?v=2X5f3aLDEhA

    UNGAL PAATTAI INGE KEZHUNGA.

    SUBBU THATHA
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      மீண்டும் தங்களின் குரலில் என் கவிதை மிளிர்கிறது!
      கேட்கும்போது எல்லோரையும் புதுக்கோட்டைக்கு வலைப்பதிவர் திருவிழாவிற்கு கிளம்பி வரவேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்துகிறது ஐயா!

      மிக மிக அருமை! இனிமை!

      காலம் முழுவதும் உங்களுக்கு என் நன்றியைக் கூறக்
      கடமைப் பட்டுள்ளேன்!

      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  25. அருமையானகவிதையிலேதங்கமேதங்கம்
    அழகாக காட்ச்சிதருவாய்தங்கமேதங்கம்.

    ReplyDelete
    Replies
    1. அடியெடுத்துத் தந்தாயே தங்கமே தங்கம்!
      அழகாகப் பாடிட்டுவோம் தங்கமே தங்கம்!..:))

      உங்கள் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  26. சும்மா அழைத்தாலே போகவேண்டும் என்ற துடிப்பிருக்கும். இப்படி இனிக்கும் தமிழ்ப்பாவால் அழைத்தால் என்ன செய்வது? போகத்தான் ஆசை.. உங்களைப்போலவேதான் நானும். நாம் இருக்குமிடத்திலிருந்தே விழா சிறக்க இனிதே வாழ்த்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. அட.. நீங்களுமா?.. என்னைப் போல ஏங்கிடுவோர் லிஸ்டு அதிகமாகிட்டே போகுதே!..

      பார்ப்போம் ஒரு நால் எமக்கும் அமையும்!
      என்று தமிழால் இணைந்தே இருப்போம்! வாழ்த்துவோம்!

      அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி கீதா!

      Delete
  27. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் மகிழ்ந்தேன்!
      அறிவிப்பிற்கு மிக்க நன்றி!

      Delete
  28. போட்டிக்கானதங்களின்கவிதையைஎதிர்பார்க்கிறோம்சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. போட்டிக்கென்றில்லாவிடினும் கலந்து
      ஊக்குவிக்க வேண்டும் எனும் எண்ணம் உண்டு!

      காலநேரம் கைவர கவிதையும் வரும்!.:)
      மிக்க நன்றி சகோதரி!

      Delete
  29. வணக்கம் சகோ !

    காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் !

    அடடா அசத்தல் இதைக் கவனிக்கல்ல தங்கம் !


    இனிக்கும் பாட்டில் இதயம் நிறைந்தேன் சகோ
    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    போட்டியில் பங்கு பற்றுகிறீர்கள்தானே
    அப்போ வெற்றி உமதே வெற்றி உமதே
    வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!

      இப்பவெல்லாம் உங்களைப் பிடிக்கவே முடிவதில்லை!..:)

      தங்கத்தைக் கவனிக்காது அப்படியென்ன வேலையோ..!:))
      அன்போடு வந்து வாழ்த்தியமைக்கும் வாக்குத்தந்தமைக்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  30. சித்திரமும் கவிதைசேர்த்துத் தங்கமே தங்கம்!
      செய்யும்ஏடு புகழ்வீசும் தங்கமே தங்கம்!
    பத்திரமாய்ப் பாதுகாக்கத் தங்கமே தங்கம்!
      பகிரவேண்டும் சுயவிவரம் தங்கமே தங்கம்! அமுதமான தமிழில் பாட்டுப் பாடி அழைப்பது அருமையிலும் அருமை! பாராட்டுக்கள்! உங்களை ச் சந்திக்க முடியாது எனும் போது வருத்தமாயிருக்கிறது இளமதி!

    ReplyDelete
    Replies
    1. இனிமைதரும் உங்கள் வரவும் கருத்தும் வாழ்த்தும் கண்டு
      மனம் மகிழ்ந்தேன்!
      எனக்கும் ஒருவரையும் காணக் கிட்டவில்லையே என ஆதங்கமாக இருக்கிறது..! என்ன செய்வேன்?..

      தங்கள் அன்பில் கரைகிறேன்! மிக்க நன்றி சகோதரி!

      Delete
  31. இப்படி ஆள் ஆளுக்கு தூள் பறத்துவது எங்கள் பொறுப்பை அதிகப்படுத்துகிறது

    ReplyDelete
  32. ஆஹா ..அருமை ! வாழ்த்துக்கள் தோழி நான் தான் இன்னும் எதுவும் போடவில்லை
    என்று எண்ணுகின்றேன் இருப்பினும் பதிவர் விழா சிறக்க என் இனிய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.