Pages

Sep 2, 2015

நான்போற்றும் தெய்வம்!..

அன்புநிறை வலையுலக உறவுகளே!...
இன்று அதிகாலை எனக்கு மின்மடலில் பிரான்சு கம்பன் கழகத்தினரால்
அனுப்பப்பட்ட செய்தியை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் 
மிக்க மகிழ்வுறுகின்றேன்!

அனுப்புனர்: kambane kajagam

பெறுநர்:
திருமதி இளமதி
சர்மனி.

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து,
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில்
’பாவலர் பட்டம்’ அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

~~~~~~~~~~~~~~~~~~~~


நான்போற்றும் தெய்வம்நீ!
~~~~~~~
நான்போற்றும் தெய்வம்நீ! நல்லதமிழ் கற்பிக்கும்
தேன்மலர்ப் பண்புநிறை செம்மல்நீ! -தென்றல்நீ!
வான்மழைநீ! வல்லகவி பாரதி தாசன்நீ!
நான்சொன்னேன் நன்றி நயந்து!

மண்மீது நான்செய்த மாதவமே என்றிதனை
    மகிழ்ந்து சொல்வேன்!
பண்ணோடு பாடிடுவேன் பார்முழுக்கக் கேட்டிடுவீர்
    பகரும் உண்மை!
கண்போன்றே தாய்த்தமிழைக் காக்கின்ற எங்களாசான்
    கவிஞர் இன்று
விண்போற்றும் செய்திதந்து மேதினியில் உயர்வளித்தார்
    விரைந்து கேட்பீர்!

இம்மண்ணும் செய்திட்ட எல்லையிலாப் புண்ணியமே

    எங்கள் ஆசான்!
அம்புவியில் நாங்களுமே அருந்தமிழைக் கற்றிடவே
    ஆற்றும் தொண்டால்
செம்மையுறக் கற்கின்றோம்! சிறக்கின்றோம்! பெருமையுறச்
    சேர்க்கும் பட்டம்!
கம்பீரம் தரும்அழைப்பாய்க் கண்டோமே! மகிழ்விதனைக்
    காண்பீர் காட்சி!

என் மனம் கொள்ளும் மகிழ்விற்கு எல்லை இல்லை!
என்னை இத்தகைய தகுதிபெறத் தமிழறிவை ஊட்டி உயர்த்திய 
என் ஆசான் கவிஞர் ஐயாவுக்குக் கரங்கூப்பிக் 
கண்ணீர் மல்க நன்றியைக் கூறுகின்றேன்!!!

வலையுறவுகளே!.. 
உங்கள் அனைவராலும் கிட்டிய பேறும், உயர்வும் இது!
ஆதரவு தந்து என்னை வலையுலகில் மிளிரச்செய்த பெருமை
உங்களையே சேரும்!
என்றென்றும் உங்கள் அனைவரினதும்
அன்பு என் நெஞ்சினில் இருக்கும்!
என் உளமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்!

மேலும் தொடர்ந்து எனக்கு ஆதரவு நல்கிட
உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன்!
மிக்க மிக்க நன்றி உறவுகளே!

74 comments:

 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

  மேலும் பற்பல விருதுகள் பெற விழைகின்றேன்..

  அன்பின் நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் உடன் வருகையும் உளமார்ந்த வாழ்த்தும் கண்டு
   மெய் மறந்து நிற்கின்றேன்!
   வலையுலக அன்புறவுகளால் வந்த விருது!
   கோடிமுறை நன்றி கூறினும் போதது!..

   தங்கள் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!

   Delete
 2. ஆஹா! நமக்குள் என்ன ஒற்றுமை பாருங்க. நானும் இந்த நிமிடம் தான் பதிவிட்டு இங்கு வந்தேன் இங்கும் அதே பகிர்வு கண்டு மகிழ்வில் துள்ளி குதிக்கிறது என் மனம் தோழி. என்ன சொல்ல! நம்முடைய இந்த தமிழ் ஆர்வத்திற்கு வித்திட்ட ஆசானின் ஆசிர்வாதம் தான் எல்லாம் என்பேன். அவர் பாதம் பணிந்து தொடர்கிறேன். தங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி! மிக்க நன்றி!

   நாமெல்லோரும் ஐயாவையே மெச்சிக் கொண்டாட
   வேண்டும்!.
   என்னைப் பொறுத்தவரை கற்றிடும் ஆவலிருந்தும்
   சரிவரக் கற்காமல் கல்லாக இருந்த என்னைக் கவி படைக்கும் ஆற்றல் மிக்கவளாக, இத்தகைய உயர்வு நிலைக்கு ஆளாக்கிய ஐயாவின் கற்பித்தற் சிறப்பே காரணம்!

   உங்களுக்கும் கிடைத்த உயர்வில் மனம் மகிழ்கின்றேன்!
   வாழ்த்துக்களுக்கு நன்றியுடன் உங்களுக்கும்
   என் வாழ்த்துக்கள் தோழி!

   Delete
 3. வாழ்த்துகள் கவிஞரே மிக்க மகிழ்ச்சி மென்மேலும் உயர் பெற எமது வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இனிய வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் சகோ!

   வாக்கிற்கும் மிக்க நன்றி!

   Delete
 4. சென்று வருக! வாழ்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா!

   சென்று வர ஆவல்தான் எனக்கும்! முயற்சி செய்கிறேன்!
   இனிய வரவுக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 5. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரி! தங்களுக்கு தங்கள் மொழிப் புலமைக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் வியப்பில்லை!

  மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   என்னைப் பற்றிய தங்கள் மதிப்பீட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே!
   அன்பு வரவிற்கும் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 6. வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே! உள்ளம் துள்ளுகிறது இந்த நற் செய்தி கேட்டு. நாவினிக்கப் பாடும்மா என்று கிடைத்த நற்சான்று இது. தாயின் ஆசி பூரணமாக கிடைத்தது விட்டது. இனி அசத்துங்கள்.
  நாம் என்றும் போல் தங்கள் கவிமழையில் நனைய காத்துக் கொண்டு இருக்கிறோம் தாயே ! பாடும்மா பாடு ........நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!

   தங்கள் மகிழ்வுகண்டு என் மனமும் இன்னும் மகிழ்கின்றது!

   எல்லாம் அன்னைத் தமிழும் ஆசான் ஐயாவும் தந்த ஆசி!
   கூடவே, உங்களைப் போன்று அன்புறவுகளின் வாழ்த்துமே!

   இனிய கருத்தும் வாழ்த்தும் வாக்கும் தந்தீர்கள்!
   மிக்க மிக்க நன்றி தோழி!

   Delete

 7. வணக்கம்!

  பற்றுடன் பைந்தமிழைப் பற்றி வளர்கின்றீர்!
  பொற்புடன் பாக்கள் புனைகின்றீர்! - நற்றமிழைப்
  போற்றிப் பொலிகின்றீர்! பொங்கும் கவியுணர்வின்
  ஆற்றல் ஒளிர்கின்றீர் ஆழ்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் இனிய வெண்பா வாழ்த்தில்
   என்னையே நான் மறந்தேன்!..

   எல்லாம் நீங்கள் தந்த கற்பித்தற் சிறப்பே ஐயா!
   அன்பு வரவிற்கும் நல் வாழ்த்துடன் வாக்கும் இட்டமைக்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 8. "மனமார்ந்த வாழ்த்துக்கள் இளமதி..!!" வாசிக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. மேன்மேலும் உங்களுக்கு விருதுகளும், பட்டங்களும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.!

  ReplyDelete
  Replies
  1. அன்புப் பிரியசகி!

   உங்களின் அத்தனை ஆர்வமான உளப்பூர்வமான
   வாழ்த்தும் மகிழ்வும் கண்டு உள்ளம் சிலிர்த்தேன்!

   இனிய வரவுடன் வாழ்த்தும் வாக்கும் தந்தமைக்கு
   நெஞ்சார்ந்த நன்றி பிரியா!

   Delete
 9. மனமார்ந்த வாழ்த்துக்கள் ! ரொம்ப சந்தோஷமாயிருக்கு கவியரசி

  ReplyDelete
  Replies
  1. ஆகா!.. அஞ்சு!..:)
   இந்தக் கவியரசி பட்டம் எப்போ எனக்கு யார் தந்தார்கள்?..:))

   ஹா ஹா ஹா..:) அருமை!
   உங்கள் மட்டற்ற மகிழ்வு எனக்கும் பெருமகிழ்ச்சி அஞ்சு!
   அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 10. ஆவ்வ்வ்வ் மிக நீண்ட கால இடைவேளைக்குப் பின் , இம் மகிழ்ச்சியான வேளையில் கால் எடுத்து வைக்கிறேன்... மிக மகிழ்வாக இருக்கு இளமதி... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...

  அம்முலு, அஞ்சு தெரிவித்திருக்காட்டில் எனக்கு இது தெரியாமலே போயிருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ! வாங்கோ!. அதிரா!.:)
   மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் மீள் வருகை இங்கு கண்டு
   கண்கள் குளமாயிற்று! இதற்காகவே என்றும் மகிழ்வுச் செய்திகளை நான் இங்கு தரலாமோ என நினைக்கிறேன்!..:)
   சாத்தியப் பட்டால்..:))

   ஓ.. அம்முலுவும் அஞ்சுவும் செய்தி கொண்டுவந்து தந்தனரோ?.. ரொம்பச் சந்தோஷம்!

   அன்புள்ளம் கொண்ட அம்முலு அஞ்சுவுக்கு என்
   உளமார்ந்த நன்றிகள்!
   இதனை அறிந்தவுடன் அதிரா ஓடோடி வந்திட்டாவே!
   இனி வருங்காலத்திலும் இப்படியான உங்கள் சேவை
   எனக்குத் தேவை!..:)) நன்றி! நன்றி!..

   Delete
 11. நேரில் சென்று பரிசை வாங்குங்கோ இளமதி.
  நன்றியைக் கம்பன் கழகத்துக்கும் கவிஞர் பாரதிதாசனுக்கும் சொல்லுங்கோ, எனக்கு ட்ரீட் தாங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. நேரில் போய் வாங்கி வரவே என் மனமும் துடிக்குது!

   முயற்சி செய்வேன்! திருவினையாவது இறை சித்தம்!

   கண்டிப்பாக உங்கள் நன்றியை அவர்களுக்கும் தெரிவித்து
   வரும்போது ட்ரீட் தருகிறேன்!..:) லண்டன் முகவரி ப்ளீஸ்!..:))

   அன்பான வரவுடன் இனிமையான கருத்துப் பகிர்வும்
   வாழ்த்தும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி அதிரா!

   Delete
 12. விழா சிறக்க வாழ்த்துக்கள்! பாவலர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   விழா சிறப்புடன் நடைபெற நானும் வேண்டுகிறேன்!
   தங்களின் அன்பு வரவும் வாழ்த்தும் பெற்றதில்
   உள்ளம் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி!

   Delete
 13. வாழ்த்துகள் இளமதி!உங்களையும் சசிகலாவையும் பிரான்சு அழைக்கிறது.சென்று வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! வாருங்கள்!

   தங்களின் முதல் வருகை இனிமையான இந்தச் சந்தர்ப்பத்தில்
   அமைந்தது கண்டு மிகவே மகிழ்கின்றேன்! மிக்க நன்றி ஐயா!

   ஆமாம் அன்புத்தோழி சசிகலாவையும் அழைத்துச் செல்ல விருப்பம் தான் ஐயா! முயல்கின்றேன்!

   தங்களின் இனிய கருத்துப் பகிர்விற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 14. அன்புள்ள சகோதரி,

  ’பாவலர் பட்டம்’ அளித்துச் சிறப்பிக்கும் கம்பன் கழகத்திற்கும் (பிரான்சு) தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அய்யா அவர்களுக்கும் நன்றி.

  பாவலர் பட்டம் பெற இருக்கும் தங்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

  நன்றி.
  த.ம. 9.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   எல்லாம் தங்களைப் போன்றோரின் உளமார்ந்த வாழ்த்துக்களினாலேயே சாத்தியமாயிற்று!

   தங்களின் இனிய வரவுபோன்றே வாழ்த்தும் கண்டேன்!
   வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 15. அன்பின் நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மனமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 16. ஹை!!! இன்று முதல் தோழி இளமதி பாவலர் இளமதி இல்லையா!!! நீங்கள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள் தோழி! மிக்க மகிழ்ச்சி!!

  ReplyDelete
  Replies
  1. ஹை!.. நம்ம தோழி! வாங்கோ!

   இன்றுமுதல் இல்லை..! அங்கு வைத்துப் பட்டம் தரவேண்டும்!
   அதை நான் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்!
   அதன்பின்பே இந்த அடைமொழியெலாம்..:)))

   மிக்க மகிழ்ச்சி தோழி! மனமார்ந்த நன்றி உங்கள்
   வரவிற்கும் வாழ்த்திற்கும் தோழி!

   Delete
 17. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 18. பாவலர். இளமதி அம்மாவிற்கு தம்பியின் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்!... ஓ!.. வலைப்பதிவர் சந்திப்பு 2015!..

   தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு உள்ளம் மகிழ்கின்றேன்!

   உளமார்ந்த நன்றி ஐயா!
   தங்கள் விழாவும் - வலைப்பதிவர் விழாவும்
   சிறப்புற அமைய என் வாழ்த்துக்கள்!

   Delete
 19. 'பாவலர் இளமதி' _____ சொல்லிப் பார்க்கிறேன். சந்தோஷமா இருக்கு இளமதி ! சோர்வடைந்திருந்த மனதுக்கு மிகப்பெரிய உந்துதலாச்சே !

  நேரில் போய் பெற்றுக்கொண்டு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சித்ரா!.. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!..:)

   என்னைத் தூக்கி நிறுத்தியுள்ளது இன்றைய செய்தி!
   பாரீசுக்குப் போக ஆசைதான். முயல்கின்றேன்!
   நடப்பது நடத்திதருவது இறை செயல்!

   அன்போடு வந்து வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி சித்ரா!

   Delete
 20. வாழ்த்துக்கள் இளமதி! மிக்க மகிழ்ச்சியாயிருக்கு செய்தியையைக் கேட்டு!! இன்னும் பல பட்டங்கள் பெற்று புகழ் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி!..

   உங்களையும் மீள இங்கு காண்பதே அளவில்லாத
   மகிழ்வெனக்கு!..:)

   அன்பான வரவுடன் உளமார்ந்த வாழ்த்து என்னை ஊக்குவிக்கின்றது! நிறைந்த மகிழ்வோடு நன்றிகள் பல!

   Delete
 21. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ!

   பாராட்டும் வாழ்த்தும் வாக்கும் கண்டு நிறைந்த மகிழ்ச்சி!
   மிக்க நன்றி சகோ!

   Delete
 22. தகுதியானவரை நாடி
  தகுதியான பட்டம்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்!

   தங்கள் வாழ்த்து என்னை இன்னும் மேம்படுத்துகிறது!
   அன்பு வருகைக்கும் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 23. வணக்கம்
  சகோதரி.
  தகவலை பார்த்த போது மகிழ்ச்சியடைந்தேன் ... மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
  த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உங்களைப் போன்றோரின் ஊக்கத்தினாலேயே
   இது சாத்தியமானது!
   வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 24. Replies
  1. இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 25. வணக்கம் !
  வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !
  கவிஞர் .இளமதி என்று அழைக்கும் போதெல்லாம் உலகமே தங்களை
  வியந்து பார்க்கும் நிலை உருவாகட்டும் தங்களின் புகழ் ஓங்கட்டும் தோழி வாழிய வாழிய பல்லாண்டு .

  ReplyDelete
  Replies
  1. அடடா.. வாருங்கள் என் அன்புத்தோழியே!

   தங்கள் பாராட்டினை அப்படியே உங்களுக்கும் உரைக்கின்றேன்!
   உங்கள் புகழும் ஓங்கட்டும்!
   அன்னை தமிழாள் அருகிலிருக்கின்றாளே!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்துரைத்து வாக்கும் இட்டமைக்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 26. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பான வரவுடன் உளமார்ந்த வாழ்த்தும் வாக்கும் கண்டு மிகவே மகிழ்கின்றேன்!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 27. உங்கள் பாவியற்றும் திறமைக்குக் கிடைத்த பரிசு இது! நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் இளமதி! இன்னும் பல சிகரங்களைத் தொட இப்பரிசு உங்களை ஊக்குவிக்கும்! வாழ்த்துக்கள் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   தங்களின் இனிய வருகையுடன் உளமார்ந்த பாரட்டும்
   வாழ்த்தும் கண்டு நெஞ்சம் நிறைகிறது!

   உண்மைதான் இப்படியான விருதுகளும் இன்னும்
   எம்மை ஊக்குவிக்கும் சக்தி கொண்டவையே! அதனோடு
   வந்து கருத்திடும் உங்களைப் போன்ற உறவுகளுமே எனக்கு முக்கிய ஊக்குவிப்பாகும்!

   அன்பிற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 28. வணக்கம் சகோ !

  நெஞ்சம் இனிக்க நினைவெல்லாம் பூத்தூவ
  கொஞ்சும் தமிழைக் கொடுத்திட்டாய் - அஞ்சுகமே
  விஞ்சும் மொழியின்பம் மீட்டுகின்ற உன்பாக்கள்
  மஞ்சரியில் ஊறும் மது !

  வாழ்த்துக்கள் சகோ பாவலர் இளமதியே மென்மேலும் உன்புகழ் வானளவு உயர்ந்து நிற்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  தமிழ்மணம் +!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   நெஞ்சம் இனிக்கிறது! நேசக் கவிகண்டு!
   விஞ்சும் சுவையாய் மிளிர்ந்து!

   தாங்களும் பாவலர் பட்டம் பெறவுள்ளதை அறிந்தேன்.
   மிக்க மகிழ்ச்சியொடு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

   கவிஞர் ஐயாவின் செல்லக் குழந்தைகள் நாம்! சேர்ந்து கற்று
   சேர்ந்தே பட்டமும் பெறப்போவதை எண்ணப் பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது!

   அன்பான வரவுடன் இனிய வெண்பா வாழ்த்தும் நல்கி
   வாக்கும் இட்டமைக்கு உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 29. அன்புப்பெண்ணே உன்னை எப்போதும் கவிதாயினி என்றே நான் சொல்லுவேன் இன்னும் பல பட்டங்கள் பாய்ந்தோடிவரும். மிக்க ஸந்தோஷமான தருணம் இது. உனக்கு எங்கும் எப்போதும் என்னுடைய வாழ்த்துக்கள். பாவலர்,நாவலர் . புலவர் யாவும் சொல்லலாம். ஆசிகள் இளமதி. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அன்பு அம்மா!.. கோடி வணக்கங்கள்!

   தாங்களாகவே இங்கு வந்து ஆசி வழங்கியமை கண்டு கண்கள் கரைந்தோட எழுதுகின்றேன்!
   என்னை ஈன்ற தாய் இல்லை எனும் குறையைப் போக்கும் அருமைத்தாயே உங்கள் உளமார்ந்த வாழ்த்தொன்றே போதும்
   நான் இன்னும் உயர்வடைய!..

   மிக்க மிக்க நன்றி அம்மா!

   Delete
 30. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே! வணக்கம்!.

   இங்கு உங்கள் முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 31. மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி! உங்களுக்கு இன்னும் பல பட்டங்கள் வந்து சேரட்டும். :) :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கிரேஸ்!

   அன்பு வருகையும் வாழ்த்தும் காண்கையில்
   எனக்குக் கூடுதல் மகிழ்வாக இருக்கின்றது!

   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 32. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் பல கவிதை படைக்கட்டும் பாவலர் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. இனிய வருகைக்கும் அன்பு வாழ்த்துக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 33. வாழ்த்துக்கள் மேன் மேலும் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் அன்பு வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி!

   Delete
 34. வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரரே!

   Delete
 35. வணக்கம் பாவலரே,
  நான் தான் கடைசி ஆளா?? மன்னித்துக்கொள்ளுங்கள்,
  என்உளம் நிறைந்த அன்பின் வாழ்த்துக்கள்
  என்றும் தாங்கள் பாபல எழுதுங்கள்
  மலர்தேடும் வண்டாய் பாதேடி நாங்கள்
  மகிழ்ந்தேன் பாவலரே நான்
  வாழ்த்துக்களம்மா,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி!

   என்ன கடைசி ஆளா? எங்கு?..
   உங்கள் வீட்டில் நீங்கள் தான் கடைக்குட்டியோ!..:)
   மனமார வாழ்த்தும் போது முதலாவதென்றாலும் கடைசியாக வந்தாலும் வாழ்த்து வாழ்த்துத்தானே!..

   தங்கள் அன்பு வரவும் இனிய வாழ்த்தும் கண்டு
   மட்டற்ற மகிழ்ச்சி சகோதரி! மிக்க நன்றி ம்மா!

   Delete
 36. கல்கண்டு போலினிக்கும் உங்கள் கவித்தமிழைக் காணுந்தோறும் எப்போதும் வியந்து ரசித்து மகிழ்வேன் இளமதி. இப்போது இன்னுமின்னும் மகிழ்ச்சி எனக்கு. பாவலர் என்னும் பெருமை உங்களை வந்து சேர்ந்திருப்பது உங்கள் திறமையை மேலும் மேலும் வளர்க்க உதவும் ஒரு உன்னதப் பரிசாகும். மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ஊக்க மருந்தாக உற்சாகமூட்டும் உங்கள் கருத்துரை காணவே இன்னும் இன்னும் எழுதத் தோன்றுகிறது எனக்கு!

   உங்கள் அன்பில் நெகிழ்ந்தேன் தோழி!
   உளமார்ந்த நன்றி!

   Delete
 37. இது போன்ற உயர்ந்த‌ விருதுகள் மேலும் மேலும் பெறுவதற்கான திறமையும் தன்னடக்கமும் முயற்சியும் உங்களிடம் எப்போதுமே இருக்கின்றன!! இனிய நல்வாழ்த்துக்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. அக்கா!.. உங்களின் அன்பான வரவுடன் மனம்தொடும்
   இனிய கருத்துக்கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றது!

   அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி அக்கா!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.