Pages

Sep 25, 2015

காண வாரீர்!. காண வாரீர்!..
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!..

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழா.

நாள்:
26.09.2015 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை
27.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 முதல் 20.30 வரை

இடம்:
Le Gymnasz Victor Hugo
Rue Renoir
95140 Garges les Gonesse
[RER - D - Garges Sarcelles]
France

அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
__()__


காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~~~~~~
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
எங்கும் தமிழ்மொழி எதிலும் தமிழென்று
இங்கும் அரசோச்சுசும் எங்கள் தமிழழகைக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

ஐரோப்பா கண்டத்தில் அழகான பாரீசில்
உய்வோம் தமிழர்நாம் உயிரே தமிழென்று
செய்கின்ற செயலெலாம் சீராகச் சிறப்போங்க
மெய்சிலிர்க்க வைக்கின்ற மேன்மை விழாவினை - நீவீரும்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

பேரறிஞர் சிறப்புரை! பீடுடைப் பட்டிமன்றம்!
தேரென  அசைந்திடும் தேர்ந்தபரத நாட்டியங்கள்!
ஊர்வியக்கும் இன்னிசை! ஒப்பற்ற நூல்வெளியீடு!
கார்கால ஆரம்பமோ கலங்காதீர் விருந்தும்தருவர்! - ஆதலால்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!

தொல்காப்பிய மன்றம் தொடங்கும் இரண்டாம்நாள்!
நல்லார் கழகத்தார் நம்கவிஞர் சேர்ந்தொன்றாய்
சொல்லிடவே நாஇனிக்கும்! சூட்டும் பட்டமளிப்பு!
கல்விச் சிறப்பினைக் காட்டும் நிகழ்வுகளை - ஒன்றாகக்
காண வாரீர்!. காண வாரீர்!.
கம்பன் விழாவினைக் காண வாரீர்!!
~~~~~~~~

29 comments:

  1. கண்டிப்பாக வருவேன் கவிஞரே...
    அழைப்பு மடல் அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      மின்னல் வேகத்தில் உங்கள் வரவுகண்டு வியந்துபோனேன்!

      வாருங்கள்!.. வாருங்கள்!.. மிக்க மகிழ்ச்சி!
      அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  2. விழா சிறக்க வாழ்த்துகள் சகோ.

    கம்பன் விழாவினை மனதிலே கண்டு ரசிக்க தயாராகிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோதரரே!..:)
      மிக்க மகிழ்ச்சி!

      வரவிற்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  3. விழா சிறப்பாக நடந்தேறவும், பட்டமளிப்பு விழா இனிதா நடைபெற வாழ்த்துகின்றேன்.
    அருமையான வரிகள் கொண்டு அழகுதமிழில் அழைப்பினை எழுதியிருக்கிறீங்க.. சூப்பர் வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா.. பிரியா!

      நலமாக இருக்கிறீங்களா?..:)

      அழகுதமிழைப் பார்த்துப் பார்த்துச் சொல்லித்தரும் எங்கள்
      ஆசானும் கழகத்தினருடன் நடத்தும் கம்பன் விழாவல்லவா..!

      ஏதோ என்னால் முடிந்த சிறு அர்ப்பணம்!

      அன்பு வரவிற்கும் இனிய கருத்துடன் வாழ்த்திற்கும்
      வாக்கிற்கும் உளமார்ந்த நன்றி பிரியா!

      Delete
  4. ஆஹா! அழகாக பாட்டாகவே பாடி அசத்திட்டிங்க தோழி. மனம் ஏங்குகிறது எங்கே நான் வருவது?
    என் சார்பாக தாங்களே சென்று களிப்புற்று வாங்க. உங்கள் கண் வழியாக நானும் காண்பேன் காணக்கிடைக்காத காட்சிகளை உங்கள் கரங்களே என் பட்டத்தையும் வாங்கட்டும் . வாழ்த்துக்கள் தோழி. பிரம்மாண்டமான விழா காண கொடுத்து வைக்க வேண்டுமே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி.. புரிகிறது!
      உங்களுக்கு இங்கு வந்து இந்த நிகழ்வில்
      கலந்திட முடியாதது வருத்தமே!.. நானும் போவதாகத்தான்
      இந்த நிமிடம் வரை முடிவோடு இருக்கின்றேன்!
      எதுவும் எப்படியும் மாறலாம்!..

      கண்டிப்பாக அங்கு சென்றால்... உங்களுக்காக உங்கள்
      விருப்பத்தினை நிறைவேற்றுவேன்!

      நிழற்படங்கள் எடுத்து வந்து உங்களுக்காக அதனையும் இங்கு
      பதிவிடுவேன்.

      வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி!

      Delete
  5. வணக்கம் சகோ !

    அழகான கவிதையில் விழாவுக்கான அழைப்பு மிக்க மகிழ்ச்சி சகோ
    இனிதாக விழா நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் கவிதையில் அசத்திட்டீங்க செம !

    தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுடன் வாழ்த்தும் தந்தமைக்கு
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      சகோதரி
      விழா சிறக்க எனது வாழ்த்துக்கள் த.ம 8
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    2. வணக்கம் ஐயா!
      தங்களின் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
    3. சகோதரர் ரூபன்!
      உங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
      உளமார்ந்த நன்றி!

      Delete
  7. அட அழகான கவிதையில் அழைப்பு. ம்..ம் நல்லதும்மா வாழத்துக்கள்.!
    சென்று, வென்று வாருங்கள். விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழியே!

      போவது மகிழ்ச்சியாக இருப்பினும் பயங்கர ரென்ஷனாக இருக்கிறது..:)

      அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி தோழி!

      Delete
  8. வணக்கம்மா...விழா சிறக்க வாழ்த்துகள்...மனம் நிறைய கம்பன்.விழாவைப்பற்றிய கற்பனை மனதை நிறைக்கின்றது....வாழ்த்துகள்மா.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி தோழி!

      Delete
  9. விழாக்காணவெகுஆசை,வெகுதூரமாயிற்றே.....என்னசெய்யசகோதரி
    விழிகளைநான்காக்கிக்காணுங்கள்தங்களின்கரங்களதைசெதுக்க
    பாரதிதாசன் ஐயாகம்பன்விழாவினைக்காட்சிகளாக்க
    ,கண்டுமகிழ்வோம்யாம்வாழ்த்துக்கள்சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி!

      Delete

  10. விழாச் சிறப்பாக நிகழ வாழ்த்துவதோடு
    பட்டங்கள் பெறும் பாவலர்களுக்கும்
    எனது வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!

      Delete
  11. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!

      Delete
  12. ஆஹா பா வரவேற்பு அருமைம்மா,,,,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி!

      Delete
  13. அழைக்கும் அழகே விழாவில் பங்கேற்கும் ஆவலைத் தூண்டுகிறதே.. விழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி!

      Delete
  14. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.