Pages

Sep 17, 2015

வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!..

 
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!
கணநாதன் இன்னருளால் யாவும் சிறக்க 

வேண்டி வாழ்த்துகிறேன்!!
 ~~~~~~
வல்வினைகள் வடிந்தோட வாரும் ஐயா!
  வருந்துயரும் மடிந்திடவே செய்யும் ஐயா!
சொல்லுகின்ற வாய்மணக்கும் உன்றன் நாமம்!
  சுந்தரனே வந்தெங்கள் சோகம் தீர்ப்பாய்!
நில்லென்றால் ஊழ்வினையும் நிற்கும் உன்னால்
  நித்திலனே வந்தெமது புத்தி சேர்வாய்!
அல்லல்கள் அகற்றிடவே ஆடி வாராய்!
  அற்புதனே! ஆனைமுகா! அகிலம் காப்பாய்!

பேரின்பம் தருகின்ற நெறியைக் காட்டிப்
  பெரியதொரு மந்திரமாய் ஒலித்து நிற்பாய்!
சீர்மிகவே தருகின்ற கருணை நாதா!
  செல்வமென என்றுமெங்கள் சிந்தை சேர்வாய்!
கூர்விழியால் கொடுவினைகள் கூறு போட்டே
  குவலயத்தில் நாம்வாழ வழிகள் நல்கி
வாரியருள் வழங்குகின்ற செம்மல் உன்னை
  வலம்வந்து வேண்டுகிறோம் வாராய் ஐயா!

யானைமுக கணபதியே போற்றி! போற்றி!!
  ஈடில்லா முன்னவனே போற்றி! போற்றி!!
பானையெழில் தொந்தியனே போற்றி! போற்றி!!
  பக்தர்களைக் காப்பவனே போற்றி! போற்றி!!
தேனைமிகும் வண்ணத்தில் பாக்கள் தீட்டும்
  திறமெனக்குத் தந்திடுவாய் போற்றி! போற்றி!!
ஊனையினி நானடக்கி உள்ள டக்கி
  ஓங்குவழி ஈந்திடுவாய் போற்றி! போற்றி!

தொப்பையப்பா! தொடருகின்ற விழாவாம் கம்பன்!
  சொல்லத்தேன் சுரக்கின்ற பதிவர் கூடல்!
இப்புவியில் இவைபோன்று எங்கும் காணோம்
  என்றுவக்க இன்னருளைத் தரவே வாராய்!
செப்பமுற வலைப்பதிவர் செயலாய்க் கோரும்
  சிறப்பான பதிவரேடும் செல்வச் சீரும்
ஒப்பில்லா ஒண்டமிழின் உயர்வாம் போட்டி
  ஒப்பேற உடனிருந்தே அருள வாராய்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

40 comments:

 1. அருமையான பிள்ளையார் போற்றிக்கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நேசன்!

   உங்கள் அன்பான முதல் வருகைக்கும் இனிய ரசனைக்கும்
   மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 2. அருமையான விநாயகரைப் போற்றிய வரிகள்! சகோதரி! வல்வினைகள் யாவும் களைந்திட அவர் அருள் புரியட்டும்...இந்த நம்பிக்கைதானே தேரின் வடமாக நம் வாழ்க்கையை இழுத்துச் செல்கின்றது....எங்கள் தளத்தில் கூட இதை ஒத்த ஒரு பதிவுதான்..இறை உணர்வு...

  அருமை..சகோதரி வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரரே!
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 3. வணக்கம் சகோ !

  ஒரே மூச்சில் பிள்ளையாரிடம் ஒப்புவித்தாச்சு எல்லாவற்றையும்
  உங்கள் மனம் போல் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாய் நடக்கும் அவனருளால் ! மிகவும் அருமை சகோ

  இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 4. சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கேட்காமலேயே உங்களிடம் ஆனைமுகத்தோன் தமிழை வழங்கி இருக்கிறானே சகோதரி.. அருமையான பாமாலை. வாழ்த்துகள்.
  தம ​+1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!
   அட அப்பிடியா..:)
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 5. அன்புள்ள சகோதரி,

  சொல்லத்தேன் சுரக்கின்ற பதிவர் கூடல்!
  இப்புவியில் இவைபோன்று எங்கும் காணோம்
    என்றுவக்க இன்னருளைத் தரவே வேண்டிய பாடல் அருமை.

  வாழ்த்துகள்.

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா!
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 6. அருமை
  விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்சகோதிரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா!
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 7. அருமை....

  அவன் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரரே!
   தங்களின் அன்பான வரவிற்கும் பிரார்த்தனைக்கும்
   மிக்க நன்றி!

   Delete
 8. அருமை சகோ தங்களுக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சுட்டிகளை கவிதையில் கோர்த்த விதம் சிறப்பு
  தமிழ் மணம் 10

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரரே!

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி!

   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 9. ஆஹா! தங்கள் அன்புள்ளத்தை அப்படியே படம் பிடித்துப்போட்ட வரிகள் டியர். என்ன சொல்ல! ஏது சொல்ல! என்று பாடிக்கொண்டிருக்கிறேன். விழாக்களும் இனிதே நடக்க வாழ்த்திய நல்ல உள்ளத்தை வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி!
   உங்களின் அன்பில் நெகிழ்கின்றேன்..!

   அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 10. வெற்றியினை நல்கிடவே வருவான் அம்மா!
  .........வினையாவும் போக்கிடவே அருள்வான் அம்மா!
  நற்செய்தி விரைவாகத் தருவான் அம்மா!
  ..........நலம்யாவும் உனைச்சூழக் காண்பாய் அம்மா!
  பொற்பாதம் பணிந்தாலே போதும் அம்மா!
  ..........புயலாகக் கருணைமழை பொழிவான் அம்மா!
  கற்கண்டாய்ப் படைத்தாயே கவிதை இன்று!
  ..........கணநேரம் கடவாது காப்பான் அம்மா!


  தப்பேதும் நடந்தாலே தொப்பை அப்பன்
  ...........தாள்பணிந்தால் தயவுடனே போதும் அம்மா!
  எப்போதும் எம்பக்கம் நிற்பான் என்றும்
  ...........எதிர்வினையைத் தன்னருளால் மாய்ப்பான் அம்மா!
  ஒப்பில்லா உயர்வுகளைத் தந்தே உன்றன்
  ...........ஒளிர்முகத்தைக் கண்டிடவே உருகி நிற்பான்!
  செப்பனிடக் கேட்டதெல்லாம் செய்வான் அம்மா!
  ..........சிறப்போடு விழாவோங்கச் சேர்ப்பான் அருளே!

  அருமையான வேண்டுதல். விருத்தம் தேனாய் இனித்தது விநாயகரும் உண்டு மகிழ்ந்து வரமருள வருவான். பதிவுக்கு நன்றி! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்மா ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி!

   விருத்தத்திற்கு விருத்தத்தில் வாழ்த்திய விதம் மிகச் சிறப்பு!
   உள்ளம் மிகவே மகிழ்ந்தேன்.
   அபாரம் உங்கள் திறமை! வாழ்த்துக்கள்!

   உங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 11. விநாயகன் அருள்!
  கவிதை அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 12. அருமைஜி
  பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/t.html

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!
   இங்கு உங்கள் முதல் வருகை என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது!

   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 13. பிரார்த்தனைகளுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரரே!
   தங்களின் அன்பான வரவிற்கும் நன்றிக்கும்
   மிக்க நன்றி!

   Delete
 14. வணக்கம்
  சகோதரி
  நாள் உணர்ந்து கவி பாடிய விதம் சிறப்பு... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்த.ம 14
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 15. இளமதிக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா!

   அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 16. லேட்டா வந்ததற்காக
  விநாயகர் கொவிச்சுக்கறார்.
  your song is here
  www.subbuthathacomments.blogspot.com
  இங்கன வந்து பாருங்க.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வரவுடன் இனியமையாக இவ் விநாயகர் துதியைப் பாடியதே என் பேறு ஐயா!
   இதில் கால தாமதம் என்றொன்றுமில்லை!

   மிக அருமையாக இருக்கின்றது! மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்தேன்.
   விரைவில் இங்கே பாடலை இணைத்துவிடுவேன்.!!

   உளமார்ந்த நன்றி ஐயா!
   விக்ன விநாயகன் யாவருக்கும் நல்லருள்
   வழங்க வேண்டுகிறேன்.

   மீண்டும் மீண்டும் நன்றிகள் பல!

   Delete
 17. விநாயகருக்கான கவிதை மிக அழகான சமர்ப்பணம் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா!

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அக்கா!

   Delete
 18. அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 19. கவி படைக்கும் திறமையினை அள்ளி தந்த விநாயகனை அருந்தமிழால் அருமையாக துதி பாடியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் இளமதி..!!

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கு மிக்க நன்றி பிரியா!
   விநாயகன் அருள் அனைவருக்கும் என்றும் கிட்டட்டும்!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.