Pages

Sep 1, 2015

பாத்து வாடி ஆச புள்ள!..

நாத்து நட போற புள்ள - உன்
நடையழக என்ன சொல்ல!
பாத்து வாடி ஆச புள்ள!  - கண்
பாயுதடி உன்ன அள்ள!


நல்ல தங்கம் வாச முல்ல! - உன்
நா பேச்சுக்கெல்ல இல்ல!
சொல்ல உந்தன் அழக இங்க - பொழியு
திந்த வானம் மெல்ல!

காத்தா வந்து சேதி சொல்லி - என்னில்
கலந்துபுட்டா காதல் கள்ளி!
சேத்துமட  நீரப்போல - வந்து
ஊத்துறாளே நேசம் அள்ளி!

ஊத்துத் தண்ணீ  பொங்கி வரும் - ஆசை
உறவ எண்ணி தொங்கி வரும்
ஒட்டிக் கிட்டா உடும்பா என்னை! - மாலை
கட்டுறாளே அரும்பா மின்ன!

பாத்து வாடி ஆச புள்ள! - தென்னங்
கீத்துக் கொட்டா பக்கம் மெல்ல!
கிளம்பி போறேன் நானும் முன்னே! - வா!நீ!

சோத்துப் பானைகொண்டு பின்னே!

வந்துடடீ ஒண்ணா  தும்போம்! - காதல்
உந்துதடீ இன்பம் காண்போம்!
காத்து வீசக் கண்ணும் சொருக - கவிதை
போல ஆசை ஊற!

வேத்து ஆளா நானுபுள்ள - வேணாம்
வெக்கம் வாடி புள்ள!
ஆத்தா அப்பன் வந்துட முன்னே - நீ
பாத்து வாடி ஆச புள்ள!..
~~~~~~~~~~~~
கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

47 comments:

  1. ஆஹா! ஆஹா!
    என்ன இது வலை மாறி வந்துட்டோமோன்னு பார்த்தேன்.
    நாட்டுப்புற பாடலிலும் அசத்திட்டிங்கப்பா. சூப்பர்! சூப்பர்!
    அப்படியே நாத்து நடும் சின்னபுள்ள முகமும்... ஆசையோட பாட்டெடுக்கும் அழகும் கண்ணில் வந்து போகிறது படிக்கும் போதே..
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ என் தோழியே!

      எல்லாம் உங்களைப் பார்த்துதான்!..:)
      நீங்க தந்த ஊக்கமே எனது இப்படியான பாட்டுக்கும் காரணம்!

      உங்கள் அன்பான வரவுடன் இனிய ரசனையும் வாழ்த்தும்
      வாக்கும் கண்டு மிக்க மகிழ்ச்சி! ரொம்ப நன்றி தோழி!

      Delete
  2. Replies
    1. தங்களின் வரவும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
      வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  3. அருமையான நாட்டுப்புற பாடல்! இசையமைக்கலாம் அழகாய்! தூண்டும் பாடல்!!! வரிகள் அழகோ அழகு..

    ReplyDelete
    Replies
    1. நாட்டுப்புறப் பாடல் வகையில் இது எனது முதல் முயற்சி!
      உங்களின் ரசனை என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது!

      அன்பான வரவுடன் இனிய ரசனையும் வாழ்த்தும்
      வாக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  4. அடடே கிராமத்துப் பாணியில் பாடிப்படித்துப் பார்த்தேன் ஸூப்பர் கவிஞரே...
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. அப்படியா சகோதரரே!

      தங்களின் மகிழ்வே எனக்கும் நிறைவு!

      அன்புடன் வருகைதந்து ரசித்து வாழ்த்தி
      வாக்கும் இட்டமைக்கு உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  5. நாட்டுப்புறப் பாடல் அருமை
    இனிமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      தங்களின் ரசனையும் இனிமை!
      இனிய வரவிற்கும் வாழ்த்து வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. கிராமத்தின் தென்றல் - தென்னஞ்சோலை ஊடாக வீசுவதைப் போலிருக்கின்றது..

    அருமை..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஐயா! மிக்க மகிழ்ச்சி!

      இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மனமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  7. பாடிப் பரவசம் உற்றேன் வாழ்த்துக்கள் தோழி !நாட்டுப் புற மெட்டு அருமை !பாராட்டுக்கள் தொடர்ந்தும் கலக்குங்கள் .

    ReplyDelete
    Replies
    1. அட.. நீங்களும் இப்படியெல்லாம் பாடுவதில் வல்லவராச்சே!
      எனது முதல் முயற்சி இது!
      அன்பு வரவுடன் வாழ்த்தி ரசித்து வாக்கும் தந்தீர்கள்!
      மிக்க நன்றி தோழி!

      Delete
  8. அருமை அம்மா.... பாடி பார்த்துக்கொண்டிருக்கிறேன்```

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      மிக்க மகிழ்ச்சி! நன்றி!

      Delete
  9. அன்புள்ள சகோதரி,

    நானும் வந்தேன் ஆச மச்சான்

    காணும் இன்பம் கோடி!

    சேதி ஒன்னு சொல்லு மச்சான்

    சேர்ந்திடவே ஆச வச்சேன்....!


    பாத்து வாடி ஆச புள்ள! ...பாடல் அருமை...!

    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!
      எசப்பாட்டு அருமை!

      அன்பு வரவுடன் பாடி வாழ்த்தி வாக்கும் தந்தமைக்கு
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. அட!தோழி!!! நாட்டுப்புறப்பாடல்கள் எல்லாம் ஒரு இலக்கண கட்டுக்குள் அடக்கியிருக்கிரீர்களே!! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதுவே இலக்கணக் கட்டுக்குளா?.. இன்னும் மெருகு செய்யவேண்டும் என நான் நினைத்தேன்!

      அன்பு வரவுடன் ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி!

      Delete
  11. அட அட...அடா..........அடடா....அசந்துட்டேன்போங்கோ! ஐயாவின்மாணவிஎன்றுஅச்சாகத்தெரிகிறதுசகோதரி.

    ReplyDelete
    Replies
    1. அட.. அட.. அடடா..! அப்படியா சகோதரி!

      சொக்கிவிட்டேன் உங்கள் ரசனையில் நான்!..:)

      மிக்க நன்றி!

      Delete
  12. வா.வ் இளமதி சூப்பர். கலக்கிறீங்க. வாழ்த்துக்கள்.!!! நீங்க எழுதியவற்றுள் இது மிக வித்தியாசமாக கிராமியமணம் கமழ்கிறது.
    முதல் முயற்சியே நன்றாக இருக்கு. வரிகள் அருமை. எழுதுங்க தொடர்ந்து.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பிரியா!

      ஆமாம்! இவ்வகைப் பாடலில் எனக்கு ஆர்வம் அதிகம்!
      அதனால் முதற்தடவையாக முயற்சித்தேன்!

      எல்லோரின் ரசனையும் எனக்கு நல்ல மதிப்பெண்ணைத்
      தந்துள்ளது! துணிந்து இப்படிப் பாடலாம் என்கிறீர்களா நீங்களும்!..:)

      மட்டற்ற மகிழ்ச்சி உங்கள் ரசனை கண்டதால்!
      அன்பு வரவுடன் ரசித்து வாழ்த்தி வாக்கும்
      தந்தமைக்கு உளமார்ந்த நன்றி பிரியா!

      Delete
  13. வரிகளுக்கேற்ப பொருத்தமான படத்தை தேர்ந்தெடுக்கின்றீங்க. அழகு.!!

    ReplyDelete
    Replies
    1. ம்.. எல்லாம் கூகிளாரின் அருள்!..:))
      நன்றி!

      Delete
  14. அருமையான நாட்டுப்புறக்கவி நானும் இதுக்கு போட்டியாக சந்தம் எழுத ஆசை வருகின்றது.நல்ல படங்கள் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோதரரே! பாடுங்கள்! நன்றாக இருக்கும்!

      பட உதவி கூகிளார்தான்!
      அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி நேசன்!

      Delete
  15. இளமதி,

    என்னதிது ! நம்பவே முடியல ! ஆனாலும் நாட்டுப்புற பாடலுக்கென்று உள்ள அழகே தனிதான். பலமுறை வாசிச்சாச்சு இல்லையில்லை பாடியாச்சு. அடுத்தடுத்த சொற்கள், அழகா தானாவே வருது. அதானே சிறப்பு. சந்தோஷத்துடன் நன்றி இளமதி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை!.. உண்மை!.. உண்மையாக இது
      நாட்டுப்புறப் பாடல்தான் சித்ரா!..:) ஒருவேளை அப்படி இல்லையோ?..:) நம்பினீர்கள் தானே!
      பாடியே பார்த்துவிட்டீர்கள்!..:)))

      அன்போடு வந்து அழகாக ரசித்துப் பின்னூட்டம் தந்து
      வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சித்ரா!

      Delete
  16. ஆகா ஆகா .....!

    அள்ளுதுதே மனம் துள்ளுதே சகோ !

    அருமையா இருக்கு தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !





    ReplyDelete
    Replies
    1. அட.. உங்களுக்கு இப்படிப் பாடிட விரல்
      நொடிக்கும் நேரம் போதும்தானே!..

      நான் இப்போதான் கற்கின்றேன். நிதானமாக முன்னேறுவோம்!

      அன்பான வரவுடன் இனிய ரசனையோடு
      வாழ்த்தும் வழங்கினிர்கள்!
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  17. என்னம்மா இப்படி மாறி மாறி அசத்துறீங்களே wow கிராமியப் பாடலில நான் சரி நானும் சும்மா கிறுக்குகிறேன் பாருங்க ஆனா சிரிக்க கூடாது ok வா நன்றி வாழ்த்துக்கள் ...! ok வா

    என்னம்மா கண்ணுநீ அசத்துறீயே - நின்னு
    ஏரிகுளம் தாண்டி வந்து இங்கு
    எண்ண மெல்லாம் உன்மேலே- கண்ணு! நான்
    எடுத்த அடி வைத்ததுமே பின்னும்!

    பாத்து வாடி பேச புள்ள - நான்
    பாசக்காரன் உன்னை வெல்ல
    நேசக் கரம் நீட்டுகிறேன் - வாடி யுனை
    நெஞ்சிலேயே தச்சு வச்சேன் போடி

    மீசை வச்ச ஆம்பிளை தான் - நானு உன்
    மோகத்தில வீரம் எல்லாம் போச்சு !
    ஆசையலை மோதிடுதே நாளும் - அது
    அரிக்கிறது உள்ளமதை கேளும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தோழி!

      என்னை சிரிக்க வேணாம்ன்னுட்டு நீங்க சிரிக்கலாமா?..:))

      அசத்தலா எசப்பாட்டு பாடுறீங்க.:) அப்போ விரைவில்
      உங்க வலையிலும் மண்வாசந்தேன் வீசப்போவுது..:))

      அருமை தோழி! முயற்சி செய்யுங்கள்! முடியும்!

      அன்பான வருகையுடன் இனிக்க இனிக்கக் கவியால் வாழ்த்தி
      வாக்கும் இட்டமைக்கு மிக்க நன்றி தோழி!

      Delete
  18. ஆஹா கலக்கல் கிராமியப்பாடல் :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்! ரசனை தருகின்றதே மகிழ்வு!..:)

      மிக்க நன்றி அஞ்சு!

      Delete

  19. வணக்கம்!

    நாற்று நடும்பெண்ணின் கூத்து நடங்கண்டேன்!
    காற்றில் மனம்நீந்திக் கட்டுண்டேன்! - ஊற்றிலுறும்
    துள்ளல் நடையழகும் தொன்மை மரபழகும்
    அள்ளும் அகத்தை அணைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      நாட்டுப் பாடல் பாட ஆசைப்பட்டுப் பாடிவிட்டேன்! ஆயினும்
      பயம் அதிகம் இருந்தது.

      தங்களின் அன்பான வாழ்த்துக் கவி கண்டதும்
      இன்னும் பாடிடத் தெம்பு வந்துவிட்டதையா!

      அன்பான வரவுடன் இனிமை சேர்க்கும் வெண்பா வாழ்த்தும்
      வாக்கும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  20. நாட்டுப் புற மெட்டு நாவினிக்க கேட்டு தலையை ஆட்டுதம்மா பாட்டு

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்களா ஐயா!
      மிக்க மிக்க மகிழ்ச்சி!
      நல் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் அன்புடன் வருகைக்கும்
      மனமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  21. வணக்கம்,
    அழகான பாடல், நேற்றே படித்தேன் கருத்திட்ட நினைவில் சென்றேன் போலும்,
    கண்டாங்கி சேலைக் கட்டி தலையில்
    மல்லிகைப் பூ கட்டி,,,,,,,,,
    இப்படி ஒரு படம் எனில் இன்னும் கூடுமோ அழகு,,,,,,,,
    பாவிற்கு அல்ல படம் மட்டும்,,,,,,,,,,
    பாட்டு செம,,,,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      உண்மைதான் படங்கள் கூகிலில் கொட்டிக்கிடக்கிறது.
      எனக்குத்தான் நேரம் போதவில்லை..!

      இனிய கருத்தும் வாழ்த்தும் கண்டு மிக மகிழ்ச்சி!
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  22. அழகு அழகு... கிராமிய மணத்தில் நாட்டுப்பாடல் மனதை அள்ளுகிறது. ரசித்தேன் தோழி. தளங்களில் இணையும் சுட்டியில் ஏதோ தவறுள்ளதால் யார் தளத்தையும் இணைக்கமுடியவில்லை. சரி பண்ண முயன்றேன் முடியவில்லை. அதனால் பதிவிடுவது தெரிவதில்லை. வந்து தான் பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவும் ரசனையும் வாழ்த்துமே பேரழகு!
      மிக்க நன்றி தோழி!

      தங்களின் தேவையை யாராவது வலைத்தளத்
      தொழில்நுட்பம் மிகுந்தவர்களிடம் கேளுங்கள் உதவுவார்கள்!

      Delete
  23. அருமை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாருங்கள் சகோதரரே!

      உங்கள் முதல் வருகை இங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி!
      வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  24. பாடல் போல உள்ளது . சூப்பர்.

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.