Pages

Sep 7, 2015

தமிழையே வேண்டு!..

தமிழையே வேண்டு!
(ஒன்றில் நான்கு)

பஃறொடை வெண்பா

கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
நெஞ்சம் மயங்கும் நெகிழ்ந்துருகி! - வஞ்சியே!
கஞ்சி குடித்தாலும்! கந்தல் அணிந்தாலும்!

பஞ்சம் அடைந்தாலும்! பாரினிலே! - அஞ்சாமல்
விஞ்சும் தமிழையே வேண்டு!


நேரிசை வெண்பா

கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
நெஞ்சம் மயங்கும்
நெகிழ்ந்துருகி! - வஞ்சியே!
கஞ்சி குடித்தாலும்! கந்தல் அணிந்தாலும்!
விஞ்சும்
தமிழையே வேண்டு!

சிந்தியல் நேரிசை வெண்பா

கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
நெஞ்சம் மயங்கும்
நெகிழ்ந்துருகி! - வஞ்சியே!
விஞ்சும்
தமிழையே வேண்டு!

குறள் வெண்பா


கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
விஞ்சும் தமிழையே வேண்டு!

இலக்கணக் குறிப்பு!

பஃறொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வரவேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வரவேண்டும்!
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்கக்
குறள் வெண்பா வரவேண்டும்.



கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

43 comments:

  1. கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
    விஞ்சும் தமிழையே வேண்டுவோம்
    அருமைசகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும்
      வாக்கும் கண்டு மனம் மகிழ்ந்தேன்!

      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  2. என்னே இனிமை...! வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரரின் ரசனையில் மகிழ்கின்றேன்!

      இனிய வரவுடன் வாழ்த்து மற்றும் வாக்கிற்கு
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  3. சகோதரி! கலக்குகின்றீர்கள்! தமிழில் புகுந்து விளையாடுகின்றீர்கள். பலசமயங்களில் தோன்றும் எண்ணம் நாங்கள் நன்றாகக் கற்றத் தமிழை, கல்லூரிக்குப் பிறகு பேண முடியாமல், வளர்த்துக் கொள்ள முடியாமல், முனைந்து வளர்க்காமல் விட்டு விட்டோமே என்று....

    அருமை அருமை! தங்கள் பாக்கள்! பாராட்டுகள்! வாழ்த்துகள்! வணக்கங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்போடு வந்து ஆழ்ந்து ரசித்துக் கருத்தும் இட்டு
      இனிய வாழ்த்தும் வாக்கும் தந்தமை கண்டு
      உள்ளம் பூரித்தேன்!
      மிக்க மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  4. அருமை தோழி! பல விதமான வெண்பாக்களில் இனிமை சேர்க்கிறீர்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பல வெண்பாக்களாக எழுத
      எங்கள் ஆசான் கற்பித்தவை இவை!
      முயன்று பார்த்தேன்! உங்கள் ரசனையும் வாழ்த்தும்
      எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது தோழி!

      மிக்க நன்றி!

      Delete
  5. கொஞ்சும் தமிழ்மொழியின் கோல எழிற்கண்டு
    விஞ்சும் தமிழையே வேண்டு!

    ஆஹா நன்றாக வேண்டுங்கள் அம்மா இன்னும் தருவாள் அன்னை. நாவுக்கரசி நடனமே ஆடுகிறாள் நாவில் நின்று. அருமை தோழி அருமை! அசத்துங்கள் மேலும் காத்திருக்கிறேன் காண ஆவலோடு.
    மகிழ்ச்சியில் துள்ளுகிறது உள்ளம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தமிழை வேண்டித் தரணியில் உயந்திடுவோம் தோழி!

      நீங்களும் அற்புதமாகப் பாடி அசத்துகின்றீர்களே!
      வாழ்த்து மற்றும் வாக்கிற்கு நன்றியுடன்
      உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் தோழி!

      Delete
  6. ஒன்றில் நான்கில் ஒன்றிது நெஞ்சம்.
    என்ன சொல்ல!
    வியந்து நிற்கிறேன் ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போதெல்லாம்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்! நீங்கள் எனது பாக்களைப் பார்த்து வியக்க
      நான் உங்கள் பாக்களைப் பார்த்து வியக்க இப்படியே
      முடிவிலாமல் வியந்து கொள்வோம்..:))

      அன்பான வரவுடன் மகிழ்வாய்க் கருத்திட்டு
      வாழ்த்தி வாக்கும் தந்தீர்கள்!
      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  7. ​படிக்க இனிமையாக இருக்கிறது தோழி. ஆனால் வெண்பாவெல்லாம் நமக்கு கொஞ்சம் தூரம். நமக்கு தெரிஞ்சதெல்லாம் எதோ குறும்பா, ஆவிப்பா அவ்வளவே.. :)​

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...!! வாருங்கள் என் சகோதரரே!..

      ஆவி வடிவில் எல்லா இடமும் போய் வந்தீர்களே
      எங்கே ஆளையே காணோமே என நினைத்திருந்தேன்..:)
      ஆவியுலகில் எல்லோரும் நலமா?..

      ”ஆவிப்பா” புதிதாக இருக்கிறது. ஆசான் ஐயாவிடம்
      கேட்டுப் பாடுகிறேன்!..:)

      அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  8. இவ்வாறான வெண்பாக்களையெல்லாம் உங்கள் மூலமாக அறிகிறோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      நாங்கள் இவையெல்லாம் எங்கள் ஆசிரியர் ஐயா
      சொல்லித்தரக் கற்று எழுதிப் பார்க்கிறோம்.

      அன்பான வரவிற்கும் வாழ்த்து மற்றும் வாக்கிற்கும்
      இதயம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  9. Dr. ஜம்புலிங்கம் ஐயாவை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  10. கொஞ்சும் தமிழில் நெஞ்சம் அள்ளும் பாமகளின் திறன் கண்டு வியந்து நிற்கின்றேன்! பாமழை பொழிந்து அனைவர் நெஞ்சம் என்றும் நனைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. பூமழை பெய்ததுபோல மெய் மறந்தேன்
      உங்களின் இனிய கருத்துரையால்!

      உளமார்ந்த நன்றி தோழி!

      Delete
  11. ஆஹா என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா,
    சரிம்மா முயற்சி செய்து எழுதி வருகிறேன். தங்களைப் போல் உடன் முடியாதும்மா,,,,,
    தமிழ்மகள் தங்களிடம் கொஞ்சும் விளையாட்டில் நான் கொஞ்சம் கெஞ்சி வார்த்தை வாங்கி வருகிறேன்.
    வாழ்த்துக்கள், அருமைம்மா,,

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி!

      முடியாது என்பதைவிட
      முயற்சி திருவினையாக்கும் அன்றோ!..:)

      அன்பு வருகைக்குக் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரி!

      Delete
  12. ஒன்றையே பல வடிவில் நீங்கள் தரும்போது சொல்லத்தான் தோன்றுகிறது “விஞ்சும் தமிழையே வேண்டு!”

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      நீங்கள் சொன்னால் சரிதான்!

      அன்புடன் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  13. என்னவெல்லாமோ சித்து விளையாட்டுக்கள் பதிவில் செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இனிய பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  14. அருமை கவிஞரே மென்மேலும் வெண்பா படைக்க வாழ்த்துகள்
    தமிழ் மணம் நவரத்தினம்

    ReplyDelete
    Replies
    1. நவரத்தினம் தந்து வாழ்த்தியுள்ளீர்கள் சகோ!

      நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  15. வணக்கம் !
    வாழ்த்துக்கள் என் அருமைத் தோழியே புதிய முயற்சி பொன் போல
    மின்னுதே !

    ReplyDelete
    Replies
    1. அன்பு வரவொடு வாழ்த்தியும்
      வாக்கும் இட்டீர்கள் தோழி!
      உளமார்ந்த நன்றி!

      Delete
  16. அன்புள்ள சகோதரி,

    தமிழினில் ஒன்றி தமிழிடம் வேண்டி

    அமிழ்தம் எடுத்திட்டாய் பஃறொடை வெண்பாவை

    ஒன்றினில் நான்கையும் ஓசையுடன் பாடிய

    உன்பாடல் விஞ்சும் தமிழ்!

    த.ம. 11

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் என்னைத்
      திக்குமுக்காட வைக்கின்றது ஐயா!

      வாக்கிற்கும் மகிழ்சியுடன் நன்றி ஐயா!

      Delete
  17. அருமை சகோதரி! அருமை! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்களின் முதல் வருகை இங்கு! மிக்க மகிழ்ச்சி!

      வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      Delete
  18. தமிழ் புகுந்துவிளையாடுது பாவலர் இளமதியிடம்.கவிதை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      நான் தான் தமிழைத்தேடி ஓடுகின்றேன்!
      அவள் கண்ணாமூச்சி விளையாடுகிறாள்..:)

      வரவிற்கும் இனிய ரசனைக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete

  19. வணக்கம்!

    பஃறொடை வெண்பா

    வண்ண இளமதி வார்த்த கவிபடித்தேன்
    எண்ணம் பறப்பதை என்னென்பேன்! - திண்ணமுடன்
    நண்ணும் நலங்கள்! நறுந்தமிழின் சீர்வளங்கள்!
    கண்ணுள் புகுந்து கமழ்ந்தனவே! - ஒண்ணருள்
    அண்ணல் இராமன் அருள்!

    நேரிசை வெண்பா

    வண்ண இளமதி வார்த்த கவிபடித்தேன்
    எண்ணம் பறப்பதை என்னென்பேன்! - திண்ணமுடன்
    நண்ணும் நலங்கள்! நறுந்தமிழின் சீர்வளங்கள்!
    அண்ணல் இராமன் அருள்!

    சிந்தியல் நேரிசை வெண்பா

    வண்ண இளமதி வார்த்த கவிபடித்தேன்
    எண்ணம் பறப்பதை என்னென்பேன்! - திண்ணமுடன்
    அண்ணல் இராமன் அருள்!

    குறள் வெண்பா

    வண்ண இளமதி வார்த்த கவிபடித்தேன்
    அண்ணல் இராமன் அருள்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      [hi="Pink"]பஃறொடை வெண்பா[/hi]

      வண்ணப்பா வாழ்த்தாய் வழங்கிய வெண்பாக்கள்!
      கிண்ணம் நிறைபலாக் கீற்றென்பேன்! - உண்ணவே
      நண்ணிடும் ஆசையை நன்றே பெருக்கினீர்!
      மண்ணில் கிடைத்த மகிழ்விது! - கண்வழியே
      எண்ணம் நிறைந்ததே இன்று!

      [hi="Pink"]நேரிசை வெண்பா[/hi]

      வண்ணப்பா வாழ்த்தாய் வழங்கிய வெண்பாக்கள்!
      கிண்ணம் நிறைபலாக் கீற்றென்பேன்! - உண்ணவே
      நண்ணிடும் ஆசையை நன்றே பெருக்கினீர்!
      எண்ணம் நிறைந்ததே இன்று!

      [hi="Pink"]சிந்தியல் நேரிசை வெண்பா[/hi]

      வண்ணப்பா வாழ்த்தாய் வழங்கிய வெண்பாக்கள்!
      கிண்ணம் நிறைபலாக் கீற்றென்பேன்! - உண்ணவே!
      எண்ணம் நிறைந்ததே இன்று!

      [hi="Pink"]குறள் வெண்பா[/hi]

      வண்ணப்பா வாழ்த்தாய் வழங்கிய வெண்பாக்கள்!
      எண்ணம் நிறைந்ததே இன்று!

      அன்போடு வந்து தந்திட்ட வெண்பாக்கள் அற்புதம் ஐயா!
      நானும் பதிலாய் எழுதினேன். தவறிருப்பின் சுட்டுங்கள்!
      மிக்க மிக்க நன்றி ஐயா!

      Delete
  20. தமிழின் இனிமை கூட்டும் அழகான கவி வரிகள்... இன்னின்னப் பாவடிவத்துக்கு இன்னின்ன பெயர் என்று அறியமுடிவதில் மகிழ்ச்சி. பாராட்டுகள் இளமதி.

    ReplyDelete
  21. வணக்கம் சகோ !

    இனித்திடும் பாக்கள் இதயம் நிறைக்கும்
    கனிக்கூழை உண்ட களிப்பு !

    அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. வாங்கோ சகோ!

      அதிகமாக உண்டாலும் திகட்டும்!..:))

      அன்பான வரவுடன் இனிய குறள் வெண்பா வாழ்த்தும்
      வாக்கும் தந்தீர்கள்! உளம் நிறைந்த நன்றி சகோ!

      Delete
  22. வெண்பாக்கள் அருமையாக இருக்கு கவிஞர் இளமதி. கலக்கிறீங்க. கூடவே விளக்கம் தருவதால் அதைப்பற்றி தெரிந்துகொள்ளமுடிகிறது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ பிரியா!

      எல்லாம் எங்கள் ஆசான் கற்றுத் தரும் விளக்கமே!
      உங்கள் அழகான ரசனையும் கருத்தும் என்னை இன்னும்
      எழுதத் தூண்டுகிறது. மிக்க மகிழ்ச்சி!

      அன்பான வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பிரியா!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.