Pages

Sep 29, 2015

கம்பன் விழாவும் கரம் சேர்ந்த பட்டமும்!..

கம்பன் விழாவும் அங்கு நடந்த பட்டமளிப்பு நிகழ்வும்!.
ஒரு தொகுப்பு!..

வணக்கம் அன்பான வலையுறவுகளே!

எங்கள் ஆசான் கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா தனது பணியாகக் கடந்த 2 வருடங்களாக எமக்குச் சிறந்த முறையில் யாப்பிலக்கத்தை மிகவும் அருமையாகக் கற்பித்து வருகின்றார். நானும் கவிதைக் கலையினை ஓரளவு கற்றுத் தேர்ச்சி பெற்று வருகின்றேன். அதன் தொடராகச் சென்ற
27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸில் நடைபெற்ற கம்பன் விழாவில் அங்கு வந்திருந்தோர் அனைவரின் முன்னிலையில் ”பாவலர்” என்னும் இப் பட்டத்தினை ஐயா அவர்கள் எனக்கும் வழங்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை
இங்கு மகிழ்வு பொங்க உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்!
~~~~~~~~~~~~


சென்ற 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எனது வசிப்பிடத்திலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் ஐயா இருக்கும் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று விழாவினைக் கண்டு கலந்து மகிழ்ந்து திங்கட்கிழமை இரவு மீண்டும் எனது வசிப்பிடம் வந்து சேர்ந்தேன்.

எங்கள் ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயா அவர்தம் அருமை மனைவி, பிள்ளைகள் அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.
ஐயா அவர்களின் அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாமல் அவரின் இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை சென்றதிலிருந்து மறுநாள் பிற்பகல் எனது இருப்பிடம் திரும்பும் வரை தங்கியிருந்தேன். ஐயாவின் மனைவியாரின் விருந்தோம்பலும் மிக மிக அருமை!
அவருக்கு மீண்டும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொளின்றேன்.

ஐயா வெளியீடு செய்த நூல்கள் யாவும் எனக்கும் கிடைக்கப் பெற்றதும்
பெரும் பேறாகும்.

நான் விழாவிற்குச் சென்ற தருணத்தில் அங்கு
விழா நாயகர்களான

முனைவர்  கு.இளங்கோவன்
அவர்கள் மனைவி தேவிகா இளங்கோவன்  - குவைத்
முனைவர் இ. பாலசுந்தரம் - கனடா
முனைவர் மு. இளங்கோவன் - இந்தியா
ஐயா சுரேசு பாரதி - சவுதி அரேபியா ஆகிய பேரறிஞர்களையும்

கம்பன் கழக உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களையும் கண்டு
அவர்களுடன் அளவளாவிய நிகழ்வுகளும் என் மனதில்
நல்ல ஒரு பதிவாகிக் கொண்டது.

இதெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்  எங்கள் ஆசான் ஐயா அவர்களின் தன்னனலமற்ற சேவையினைக் கண்ணாற் கண்டும் கேட்டும் உணர்ந்தும் வந்தேன் என்றால் மிகையாகாது!!

அரங்கேறிய பல நிகழ்வுகளுடன் எங்களுக்களித்த
”பாவலர்” பட்டமளிப்பு நிகழ்வு
என் வாழ்க்கையில் தடம் பதித்த ஒன்றாகியது.
வாழ் நாள் காலத்தில் மறக்கவொண்ணா நிகழ்வாக
என் நெஞ்சில் உறைந்து கொண்டது!

ஐயா அவர்கள் எங்களை மேடைக்கழைத்து அங்கு வந்திருந்த விழாப் பிரமுகர்கள் முன்னிலையில் அமரச் செய்ததும் நாம் இதுவரை கற்றுக்கொண்ட விதம், எமது படைப்புகள் ஆர்வம் போன்றவற்றை விபரமாக எடுத்துக் கூறித் தானும் மகிழ்ந்து எல்லோரையும் மகிழச்செய்து பட்டமளித்த நிகழ்வு விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தது.
ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியினை
மீண்டும் ஒருமுறை இங்கும் கூறிக்கொள்கின்றேன்.

பட்டமளிப்பு நிறைவில் நானும் ஒரு சிறிய நன்றிக் கவிதையை
அரங்கில் கூறி மனம் நிறைந்தேன்.

என்னுடன் விழா அரங்கில் கம்பன் கழக உறுப்பினர்களான
திருமிகு தேவராசு
திருமிகு சரோசா தேவராசு
திருமிகு தணிகா சமரசம்
இவர்களுடன்
வலையுலகத் தோழி அம்பாள் அடியாளும்
”பாவலர்” பட்டம் கிடைக்கப் பெற்றனர்.

விழா நிறைவு நிகழ்வாக கம்பன் கழக உறுப்பினர்கள் பொன்விழாக் கண்ட செம்மலாம் ஐயாவுக்குப்  ”பாட்டரசர் பாரதிதாசன்” எனும் சிறப்புப் பட்டமும் வழங்கி வாழ்த்தி வணங்கினர்.

அரங்கில் பட்டமளிப்புச் செய்த சான்றிதழ், பதக்கம்,
தொல்காப்பிய மன்றச் சான்றிதழுடன் 
அங்கே படித்த எனது நன்றிக் கவிதை மற்றும் 
ஐயாவின் பொன் விழா வாழ்த்து நிகழ்வின் சில படங்களையும்  
இங்கு தருகின்றேன்.

ஐயாவிடம் மேலும் மேலும் மரபிலக்கணத்தைக் கற்றுக் கவிதை படைப்பதில் இன்னும் உயர்நிலைக்கு என்னை வளர்த்துக்கொள்ளப் பேராவலுடையேன்.

என் வலைப்பூவில் என் படைப்புகளை வாசித்துக் கருத்துகள் கூறி
என் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருந்த இருக்கின்ற
அன்புள்ளங்கள் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி மகிழ்வெய்துகின்றேன்! மிக்க நன்றி!
~~~~~~~~~~கூறுகின்றேன் நன்றி என்றே!
~~~~~~~~~~~

உலகினிலே நிறைந்திருக்கும் தமிழே! தாயே!
  ஒப்பற்ற உயர்மொழியே! வணக்கம் அம்மா!
பலமாக உடனிருந்து காப்பாய் நீயே!
  பாவலரின் சபையினிலே பாடும் என்னை!
தலமான பாரீசில் கண்டேன் காட்சி!
  தமிழரெலாம் கொண்டாடும் கம்பன் மாட்சி!
நிலமிழந்த நங்கையென்றன்  சிந்தை பூக்க
  நெடுஞ்சாணாய் அனைவரையும் வணங்கு கின்றேன்!

அரங்கினிலே இருக்கின்ற அறிஞர் முன்னே!
  அடியெடுத்துப் பாடிடவே வந்தேன் கேளீர்!
சிரமதனிற் சேர்ந்திருக்கும் தமிழின் ஆர்வம்
  சிறியவளைச் சபையேற செய்த தின்று!
வரங்கொடுக்கும் இறையருளால் அமைந்த ஆசான்!
  வளர்தமிழ்த்தாய் பாரதியின் தாசன்! நாளும்
மா..இலக்க ணம்யாப்பை எனக்க ளிக்க
  மாண்போடு கவிக்கலையை கற்று வந்தேன்!

கவிஞரையா வழிகாட்டப் பெற்றேன் தேர்ச்சி!
  கரமளித்தார் பாவலரென் றேநற் பட்டம்!
செவிகேட்டுச் சிந்தைவரை உறைந்தேன் அன்று!
  செயலிழந்து சிலையாகி நின்றேன் இன்று!
புவிபோற்றும் சான்றோர்கள் முன்பாய்க் கூவிப்
  புகழ்ந்திட்டார்! பொறிகலங்கித் திணற லானேன்!
குவிக்கின்றேன் கரங்களைநான் கண்ணீர் மல்கக்
  கும்பிட்டுக் கூறுகிறேன்! நன்றி என்றே!
~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~

63 comments: 1. நிகழ்ச்சிகளைக் கண்முன் கொண்டு வந்த பாவலர்க்கு வாழ்த்துகள்

  தங்களைக் காண நேர்ந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  தங்களின் நன்றிப்பா அருமை.

  ReplyDelete
  Replies
  1. அன்போடு உடன் வந்து கண்டு மகிழ்ந்து
   வாழ்த்தியமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 2. ஆஹா! ஆஹா! என் மகிழ்ச்சிக்கு அளவேது! என் அன்புத் தோழிக்குப் பாவலர் பட்டம் மகிழ்வென்றால் தோழியைக் காணவும் கிடைத்தது பன்மடங்கு மகிழ்ச்சியன்றோ! வாழ்த்துகள் அன்பு இளமதி :) :) :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அன்புத் தோழியே!

   தங்கள் அன்பில் நெகிழ்ந்தேன்!
   இனிய வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி கிரேஸ்!

   Delete
 3. மனம் நிறைந்த மகிழ்ச்சியும் பாராட்டுதல்களும் மா ....உங்கள் முயற்சி அளவிடற்கரியது....மா...அய்யாவின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றியதற்கு கிடைத்த பரிசாய் பாவலர் பட்டத்துடன் , தமிழ்த்தாய் உங்கள் நாவினில் நடனமாடுகின்றாள்......தொடர்ந்து வாழ்வில் மகிழ்வே நிலைக்கட்டும் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி!

   உங்கள் எல்லோரினதும் அன்பில் திக்கித் திணறுகின்றேன்!
   இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 4. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! விழா நிகழ்ச்சி நேரில் பார்த்த உணர்வு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு!

   உள்ளம் நிறைகிறது உங்கள் அன்பினால்!

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி அஞ்சு!

   Delete
 5. ஆஹா அருமை அருமை இளமதி.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. நீங்கள் இப்படி வெளியே வந்து, மேடையேறியிருப்பது பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு, எனக்கு விருது கிடைத்ததுபோல் இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை அதிரா!
   உற்சாகமூட்டி என்னை அங்கு சென்று விருது வாங்கி வரச்செய்த என் அன்பு வலையுறவுகள் எல்லோரினது
   பங்கும் மிக முக்கியமானது!.

   என் வாழ்நாட்குறிப்பில் பொனெழுத்துக்களால் பதிக்கப்பட்ட
   ஒரு நிகழ்வு இது!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அதிரா!

   Delete
 6. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 7. இளமதி,

  விருது பெற்றதையும், படங்களையும், உங்கள் மகிழ்ச்சியையும் எங்களோடு பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி இளமதி. இப்படியே மேலே ஏறிஏறி பல சிகரங்களையும் தொட வாழ்த்துக்கள் இளமதி !

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சித்ரா..! முதலாவதாக வந்து ஏதோ கோளாறாகி நீங்கிவிட்டதே பின்னூட்டம் என மனம் கவலையுற்றிருந்தேன்.
   மீளக் கண்டது மிக்க மகிழ்ச்சி!

   உங்கள் மகிழ்வும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது! அன்பு வரவுடன் வாழ்த்திற்கு மிக்க நன்றி சித்ரா!

   Delete
 8. விருது பெற்ற பலபேரில் வித்தகராய் மாற நல்வாழ்த்துகள்! என்றும் அன்புடன் 'சிற்றுளி' ராம் கணேஷ்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   உங்கள் முதல் வருகை என் வலைத்தளத்தில் கண்டதும் மிக்க மகிழ்ச்சி!

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 9. வாழ்த்துக்கள் அம்மா இன்று போல் என்றும் வாழ்வில் இன்புற்று இருக்க
  எல்லாம் வல்ல இறையருள் கிட்டட்டும் ! இன் நிகழ்வில் நாம் சந்தித்து
  மகிழ்ந்த அந்தத் தருணங்கள் தொடரட்டும் ! நான் இனிமேல் தான் பதிவிடப்
  போகின்றேன் :)) தங்களின் பகிர்வு அருமை ! தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி!
   இனி நான் சகோதரி என்றுதானே உங்களை அழக்க வேண்டும்!..:)
   சந்தித்த அந்த அழகிய தருணங்கள் நெஞ்சில் சம்மணமிட்டு
   அசையாமல் அமர்ந்துவிட்டது எனக்கும்!

   தொடர்புகளைத் தொலைய விடாமல் காப்போம் சகோதரி!
   அன்பு வரவுடன் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 10. வா.வ் சூப்பர் இளமதி. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
  நேரிலே சென்று கலந்துகொண்டு விருதினையும் பட்டத்தினையும் பெற்றமை மிக்க மகிழ்ச்சி இளமதி. அழகு தமிழில் நன்றி நவின்றமை அருமை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை பிரியா!
   வாழ்க்கையில் கிடைத்திடும் அரிய அதிர்ஷ்டமே இவையும்.
   நழுவ விட்டிருந்தால் நான் பாவி ஆகியிருப்பேன்!
   இனித்திடும் நினைவுப் பட்டியலில் இணைந்திட்ட நிகழ்வு!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிரியா!

   Delete
 11. பாராட்டுக்கள் பாவலர் பட்டமளிப்பும் பதிவும் இன்னும் பெருகட்டும் வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி நேசன்!

   Delete
 12. ஆஹா அருமையான தொகுப்பு தாங்களும் விழாவில் கலந்து சிறப்பித்தமையும் பாவலர் பட்டம் பெற்றமையினையும் கண்டு பேரானந்தம் அடைந்தேன் ஐயாவினை நேரில் பார்த்த சந்தோசம் பதிவில் தெரிகிறது ...நெஞ்சினிக்கும் வாழ்த்துப் பா மொத்தத்தில் கிடைத்தர்க்கரிய வரம் வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் தமிழ் கற்று ஐயாவின் புகழினை மேலும் உயர்த்த நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!
   தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி!

   இனிய வாழ்த்துப் பகிர்ந்தமைக்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 13. வாழ்த்துக்கள் இளமதி...மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது..வெற்றியின் படிகளில் தொடர்ந்து ஏறிட என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி!
   உங்கள் அன்பான வரவும் இனிய வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி மகி!

   Delete
 14. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோ!

   Delete
 15. எவ்வளவு சந்தோஷமான நிகழ்வுகள்? உங்கள் மகிழ்ச்சியில் நானும் இணைகிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகையுடன் இனிய மகிழ்வுத் தருண உணர்வோடு இணைந்து கொண்டமைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 16. நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டஓர் உணர்வு
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 17. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். விழா நிகழ்வினைத் தொகுத்துப் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகையும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 18. அன்புத் தோழியே
  நிகழ்சிகளை நேரில் காணும்படியாய் அனைத்தையும் தொகுத்து வழங்கினீர்கள். பாவலர் பட்டம் பெற்றதை இட்டு பேரானந்தம் கொண்டேன் தங்களை நேரில் கண்டதும் மேலும் கூடியது மகிழ்வு.
  புலம் பெயர்ந்து புண் பட்டு கிடக்கும் நெஞ்சங்கள் மகிழ நாட்டுக்கும் எமக்கும் பெருமை சேர்க்கும் படி பாவலர் பட்டம் பெற்று எம் உள்ளங்கள் குளிர வைத்தீர். உலகுள்ள வரை பேசட்டும் தங்கள் புகழை. மேலும் எல்லா நலன்களும் பெற்று பா பல படைக்க வாழ்த்துகிறேன்.....!. நன்றி !

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!

   உங்கள் ஆத்மார்த்த நட்பில் கரைகின்றது என் உள்ளம்!
   நிறைந்த அன்போடு வந்து வாழ்த்தினீர்கள்!
   உங்களுக்கும் இப்படியொரு சந்தற்பம் கிட்டும் விரைவில்.
   அப்போது நான் அங்கு உங்களுடன் இருக்க விரும்புகிறேன்.

   அன்பு வாழ்த்திற்கு உளம் நிறைந்த நன்றி மா!

   Delete
 19. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் சகோதரரே!

   உங்கள் முதல் வருகை இங்கென் வலைத்தளத்தில்..-
   மகிழ்வாக இருக்கின்றது!

   அன்பு வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 20. மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
  விழாவினை நேரில் பார்த்து மகிழ்ந்தாற் போலிருக்கின்றது..

  மேலும் மேலும் பல சிறப்புகளை எய்திட வேண்டுகின்றேன்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   எல்லாம் தங்கள் ஆசியே!
   மேலும் சிறந்திடட்டும்!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 21. என் அருமைத்தோழியை இன்றே முதல் முறை கண்ட மகிழ்ச்சியும் இத்தனை அற்புதமான நிகழ்வில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற ஏக்கமும் கலந்து கண்கள் கலங்கி நிற்கிறேன். இப்போது என்னால் எதுவும் எழுத இயலவில்லை தோழி. வணங்குகிறேன். பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எனதன்புத் தோழியே!

   உங்கள் ஆதங்கம் புரிகிறதம்மா!
   உங்களுக்கும் இப்படி இன்னும் சிறப்பான சந்தற்பம் கிட்டும்.
   ஐயா அவர்கள் அங்கு அரங்கில் உங்களைப் பற்றியும் தம்பி சீராளனைப் பற்றியும் மிகவே மகிழ்ந்து கூறினார்!

   யாவும் கிட்டும்!
   உங்கள் அன்பில் நெகிழ்கின்றேன் நான்...
   மிக்க நன்றி தோழி!

   Delete
 22. எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா?பாவலர்,பட்டம் பெற்றமைக்கு மிகவும் ஸந்தோஷம்.மேன் மேலும் பட்டங்கள் உன்னை அடைந்து அவைகளும் உயர்வு பெறுதல் வேண்டும். விழாவினை நேரில் கண்ட ஒரு மகிழ்ச்சி. உன்னையும்தான். எங்கள் இளமதி மனதில் இருத்தி வைத்திருந்த இளமதி படத்தில் பார்க்கக் கொள்ளை மகிழ்ச்சி. இது போன்ற ஸந்தோஷங்கள் உனக்குப் பெருகட்டும். நாங்களும் அதில் திளைக்கிறோம். ஆசிகளுடனும் அன்புடனும்

  ReplyDelete
  Replies
  1. அம்மா!.. தங்களின் அன்பும் ஆசியும் என் உயர்வுக்கு என்றும் உறுதுணை!
   அன்பான வரவுடன் மனம் நிறைய வாழ்த்தியமைகண்டு கண்கள் கரைகின்றன அம்மா..!

   மிக்க மிக்க நன்றி அம்மா!

   Delete
 23. பாவலர் பட்டம் கிடைத்தமைக்குப் பாராட்டுகள்
  விழா நிகழ்வு விவரிப்பு அழகு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா!

   தங்களின் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 24. நேரில் கண்டதுபோல பதில் கண்டேன்! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் கிடைக்கப் பெற்றதே
   பெரும் பேறுதான் ஐயா!

   மிக்க நன்றி!

   Delete
 25. மனம் நிறைந்த வாழ்த்துக்களம்மா,
  தங்கள் பாவும்,, அருமை,
  இன்னும் பல பட்டங்கள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்களம்மா,

  ReplyDelete
  Replies
  1. அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரி!

   Delete
 26. படித்து மகிழ்ந்தேன்;பாவலருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் அன்பு வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி!

   Delete
 27. அன்புள்ள சகோதரி,

  பாவலர் பட்டம்பெற்ற பாசமிகு கவிஞருக்கு

  பாட்டில் நன்றிசொன்ன பண்பின் காவலருக்கு

  நாட்டில் நன்மையறியா நாயகி ஆனபோதும்

  வீட்டில் இன்னலுற்றும் விடியும் நாளையென்றே

  வீரத்தில் தமிழ்மகளாய் வெற்றித் திருமகளாய்

  தீரமுடன் திகழ்ந்திடுவாய் வாகை சூடிடுவாய்!

  வாழ்த்துகள்.

  த.ம.12

  ReplyDelete
  Replies
  1. அன்போடு வந்து இனிய பாமாலையால் வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 28. வணக்கம் கவிஞரே தமாதமத வருகைக்கு முதலில் மன்னிப்பு கோரல்...
  மிகவும் மகிழ்ச்சி தங்களது விழாவை நேரில் கண்டதைப்போன்ற உணர்வு மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்
  தமிழ் மணம் 12

  ReplyDelete
  Replies
  1. உளமார வாழ்த்துவதற்கும் பெறுவதற்கும் கால தாமதம் ஒன்றுமில்லை சகோதரரே!

   உளமார்ந்த நன்றி!

   Delete
 29. வாழ்வின் உன்னதமான தருணங்களில் இதுவுமொன்று. அது என்னவோ நானே பெற்றது போல மனம் ஆனந்த கூத்தாடுகிறது. வாழ்த்துகள் சகோதரி. இன்னும் பல பட்டங்களும் அனுபவங்களும் பெற்று எங்களைப் போன்றோரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!
   நலமாக இருக்கின்றீர்களா?..

   அன்பு வரவும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியுடன்
   நன்றி சகோ!

   Delete
 30. நீங்கள் விமானம் ஏறி சென்று அடைந்த மகிழ்ச்சியை ,விமானம் ஏறாமலே எனக்கு தருகிறதே உங்க பதிவு !வாழ்த்துகள்:)

  ReplyDelete
  Replies
  1. அட.. அப்படியா சகோதரரே!

   மிக்க மகிழ்ச்சியும் என் உளமார்ந்த நன்றியும் உங்களுக்கு!

   Delete
 31. நிகழ்ச்சிகளை நாங்களும் காண முடிந்தது - உங்கள் பதிவு மூலம்.

  உளமார்ந்த வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவுடன் வாழ்த்தும் நல்கக் கண்டு
   உள்ளம் மகிழ்கின்றேன்! மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 32. அட அன்பான தோழியே இன்று தான் காணொளி கண்டேன் என்ன அருமையான குரல் ...ம்..ம் ஆற்றிய விதமும் அருமைம்மா அருமை! எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சிறப்பாக இருக்கிறது சொற்பொழிவு. மிக்க மகிழ்ச்சிம்மா. மேலும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.