Pages

Sep 24, 2015

எழுச்சி கொள்வீர்!..


இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும்
‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி - இளைய சமூகத்திற்கு
நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய - மரபுக் கவிதை.

இது என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் 
வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். நன்றி!
உண்மையுள்ள
இளமதி.


எழுச்சி கொள்வீர்!
~~~~~~~~~

அறிவுதனை வளர்த்திடவே பெருகும் ஆற்றல்!
  அன்புதனை வளர்த்திடவே பெருகும் இன்பம்!
தறிகெட்டுப் போகின்ற வாழ்வை மாற்றித்
  தருமநெறி தழைக்கின்ற தொண்டே மேன்மை!
நெறியோடு வாழ்கின்ற வாழ்வே ஓங்கும்!

  நிலமெங்கும் தமிழ்மணந்தால் மாட்சி மின்னும்!
சிறியதுதான் கடுகதுவும் பெரிதாம் காரம்
  சிறுதுளிகள் பெருவெள்ளம் எழுச்சி கொள்வீர்!

தடையகற்றித் தமிழ்த்தாயை ஆட்சி மன்றில்

  தழைத்தோங்கச் செய்திடுவீர்! இனத்தைக் காக்கப்
படைதிரட்டி முன்நிற்பீர்! பாரில் என்றும்

  பகுத்தறிவுக் கதிரோங்க வழிகள் செய்வீர்!
இடையினிலே வருமிடர்கள் யாவும் ஓட
  எப்போதும் விழிப்போடு பாதை காப்பீர்!
மடைதிறந்த வெள்ளமெனப் பெருகும் மாண்பு!
  மனமோங்கக் குறள்துணையே எழுச்சி கொள்வீர்!

கண்களெனக் கல்விதனைக் காக்க வேண்டும்!
  கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்!
பெண்ணினத்தின் விடுதலையைப் பேண வேண்டும்!
  பேதையரென் றிகழ்வாரை உமிழ வேண்டும்!
மண்மகிழ நன்மனிதம் மணக்க வேண்டும்!
  மாறாத கொள்கையினைப் போற்ற வேண்டும்!
பண்போடும் அன்போடும் வாழ வேண்டும்!
  படர்புகழைப் படைத்திடவே எழுச்சி கொள்வீர்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

62 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலைப்பதிவர் சந்திப்பு விழாக் குழுவினரே!
   தங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி!

   சகோதரர் தனபாலனுக்கும் என் நன்றி!

   Delete
 2. அதி அற்புதமான கவிதை
  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் அன்பு வருகையும் ஊக்கம் தரும் கருத்துடன்
   வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞரே தங்களை கவிதைகளை பாராட்டும் பக்குவம் எமக்கு போறா இரசித்தேன் அருமை வெற்றி நிச்சயம்
   தமிழ் மணம் 6

   Delete
  2. வணக்கம் ஜெயக்குமார் ஐயா!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் வாக்கும் கண்டேன்.
   மிக்க மகிழ்வுடன் நன்றி ஐயா!

   Delete
  3. வாருங்கள் வணக்கம் அன்புச் சகோதரரே!

   இதெலென்ன பக்கும் இருக்கிறது சகோ!
   அன்பின் பக்குவம் ஆதரவாகி அனைவரையும் வாழ்த்தும் மனம். இதுதானே வேண்டும். அது உங்களிடம் நிறைய உண்டு! வெற்றியும் தோல்வியும் பொருட்டல்ல..!
   பங்களிப்பு முக்கியமென நினைத்தேன்!

   அன்புடன் வழங்கிய அத்தனைக்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 5. ஆற்றோட்டத்தில் உருண்டோடும் கூழாங்கற்கள் போல.. மரபுக்கவிதை வெகு சரளமாக வருகிறது உங்களுக்கு.. வரிகள் ஒவ்வொன்றும் சீரிய கருத்துகளோடு இனிய தமிழின் சுவையும் கூட்டி மனம் கொள்ளைகொள்கின்றன. பாராட்டுகள் இளமதி. வெற்றிபெற என் இனிய வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் இந்தக் கருத்துப் பகிர்வே எனக்கு வெற்றி கிட்டியதற்குச் சமானமாக இருக்கிறது.
   மனம் மிகவே மகிழ்கின்றேன்.
   வெற்றி தோல்வி என்பதைவிட உங்களைப் போன்றோரின் இந்த ஊக்கம் தரும் கருத்தே உயர்வு!

   இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கீதா!

   Delete
 6. அன்புத் தோழியே எழுச்சிபெற அமைந்த கவிதை அற்புதம். மரபில் கலக்கிவிட்டீர்கள். உங்களுக்கு இது சதாரணம் தானேம்மா வெற்றிபெற என் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இனிய தோழியே!
   இது சாதாரணமா?..
   ஒரு வேளை உங்களுக்குச் சாதாரணமோ..:) ஹா ஹா ஹா..!

   முயற்சிதான் தோழி! வெற்றியோ தோல்வியோ இப்படியொரு சந்தற்பம் அமைவதும் நம்மை வளர்த்துக்கொள்ளவும் பலப்படுத்தவுமே!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்து வாக்கிற்கு
   மிக்க நன்றி தோழி!

   Delete
 7. அருமையான கவிதை அக்கா....
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிய வரவுகண்டு மகிழ்கின்றேன் சகோ!
   உளமார்ந்த நன்றி!

   Delete
 8. அசத்திட்டிங்க தோழி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் எழுதியுள்ளீர்களே..
   உங்களுக்கும் வெற்றி கிட்டலாம் தோழி!

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி தோழி!

   Delete
 9. கவிதையை ரசித்தேன். எழுச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் வாழ்த்துக்கண்டு உள்ளம் மகிந்தேன்!
   இதயம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 10. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 11. வெற்றிபெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. பெண்னினத்தின் விடுதலையைப் பேண வேண்டும்!..
  பேதையரென் றிகழுவாரை உமிழ வேண்டும்!..

  அருமை!..

  வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 13. அருமை ! அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கே வெற்றி கிட்டலாம் தோழி!

   அன்பு வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி!

   Delete
 14. இனிமே நான் எழுதணுமா!!! போங்கப்பா:))) சூப்பர் தோழி!!!!
  **படைதிரட்டி முன்நிற்பீர்! பாரில் என்றும்
    பகுத்தறிவுக் கதிரோங்க வழிகள் செய்வீர்!
  இடையினிலே வருமிடர்கள் யாவும் ஓட
    எப்போதும் விழிப்போடு பாதை காப்பீர்!** காலத்திற்கேற்ற அறிவுரை!!! புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் தோழி!!

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க.. நிறைய எழுதுங்க இன்னும்..:))

   அன்போடு வந்து அழகாகக் கருத்திட்டு
   இன்முகமகாய் வாழ்த்தினாய் இதயம் நிறைய!
   என்னருமைத் தோழியே!
   நன்றியென்றேன் உளம் நிறைந்து!

   Delete
 15. அருமைமா,,,
  வாழ்த்துக்கள்,,,,,,,, வளம்பலபெற்று வையத்தில் பல்லாண்டு வாழ என் மனம் நிறைய வாழ்த்துக்கள்,,,,,,,
  இக்கவி அழகை சுவைக்க,,,,,,,,,,
  சரிமா நானும் எப்படியாவது கவி எழுதனும் என்று நினைத்தேன்,,,,,,,
  வேண்டாமா?
  அருமையான நடைஓட்டம்,,,,,, அழகு வாழ்த்துக்கள்,,,
  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா.. ! நீங்க எழுதாம எங்க போகபோறீங்க..:)

   எழுதுங்க படிக்க ஆவலோடு இருக்கிறேன்.
   அன்பான வரவும் இனிய கருத்தோடு வாழ்த்தும் கண்டு
   உள்ளம் மகிழ உரைத்தேன் நன்றி! நன்றி!

   Delete
 16. அருமை! வெற்றிபெறவாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 17. பகுத்தறிவுக் கதிரோங்க வழிகள் செய்வீர்!
  இடையினிலே வருமிடர்கள் யாவும் ஓட
    எப்போதும் விழிப்போடு பாதை காப்பீர்!
  மடைதிறந்த வெள்ளமெனப் பெருகும் மாண்பு!
    மனமோங்கக் குறள்துணையே எழுச்சி கொள்வீர்! ஆற்றொழுக்காய் அமைந்த நடை. தலைப்புகேற்றாற் போல் வாசிக்கும் போதே எழுச்சி கொள்ளச் செய்யும் அருமையான கவிதை. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!

   ரசனையால் என்னை நெகிழச் செய்தீர்கள்!
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி மா!

   Delete
 18. "கண்களெனக் கல்விதனைக் காக்க வேண்டும்!
    கல்லாரைக் கற்றவராய் மாற்ற வேண்டும்!" என்ற
  கருத்தை வரவேற்கிறேன்!

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

   Delete
 19. ஆஹா அருமைமா...நான் இனி என்ன போட்டியில் எழுத....மரபுக்கவிதைப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி!

   Delete
 20. உற்சாகமூட்டும் இனிய கவி. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி! நன்றி சகோதரி!

   Delete
 21. மடைதிறந்தநீரைப்போன்றசொல்லாடல்........அன்புச்சகோதரியே!!தாங்கள்எழுதுவதற்குமுன்பேஎனக்குத்தெரியும்
  வெற்றிஉமதேஎன்று வாழ்த்துக்கள்சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. அட எழுதுமுன்பே தெரியுமா?.. அதெப்படி..:)

   தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்வுடன் நன்றி சகோதரி!

   Delete
 22. அன்புள்ள சகோதரி,

  இடையினிலே வருமிடர்கள் யாவும் ஓட
    எப்போதும் விழிப்போடு பாதை காப்பீர்!

  காத்தருள வேண்டும்... அருமையாக கவிதை. வெற்றிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..
   தங்களின் கவிதைக்கு முன்னிற்குமா எனது படைப்பு!..:)

   தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சி! நன்றி ஐயா!

   Delete
 23. அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோ!

   Delete
 24. அருமை.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   மிக்க மகிழ்வுடன் நன்றி சகோதரரே!

   Delete
 25. கவிதை வெகு அருமை இளமதி. உங்கள் கவிதை பரிசுக்குத் தெரிவாக என் அன்பு வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
  Replies
  1. அய்ய்ய்.. இமா!..:)

   இங்கு உங்களைக் கண்டதே பெரும் பரிசு எனக்கு!..:)
   ரொம்பச் சந்தோசம் இமா!
   அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி இமா!

   Delete
 26. மிகவும் அருமையாக இருக்கு கவிதை
  போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
  டாஷ்போர்ட் ல் பதிவு வராமையால் இப்பதிவைக் கவனிக்கவில்லை. மன்னிக்க.

  ReplyDelete
  Replies
  1. குறையொன்றும் இல்லை பிரியா!

   வரவும் வாழ்த்துமே மனம் நிறைக்கின்றது!
   மட்டற்ற மகிழ்சியுடன் நன்றி!

   Delete
 27. வணக்கம் சகோ !


  பூவில் வடியும் தேனாகப்
  .....பொலியும் தமிழைக் குழைத்திங்கே
  பாவில் மணக்கத் தருகின்றாய்
  ....பாடும் நெஞ்சம் மகிழ்கிறது
  கோவில் வேண்டாம் பக்திக்கும்
  .....கொள்கை வேண்டாம் வாழ்வுக்கும்
  நாவில் இனிக்கும் இப்பாடல்
  ......நயம்போல் இளையோர் வாழ்ந்தாலே !

  அருமை சகோ போட்டியில் வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   விருத்தப்பாவினால் வாழ்த்துத் தந்தீர்!
   மனம் மகிழ்வுடன் நன்றிகள் பல!

   Delete
 28. வணக்கம் சகோ!

  ஆர்கின்ற கடலோர அலையைப் போல
  அருந்தமிழச் சொல்கரைக்க எழுச்சி யுற்றேன்!
  கார்மேகக் கவிக்காட்டில் மழையின் தூறல்
  கனநேரம் நனைந்தேநான் எழுச்சி யுற்றேன்!
  போர்நாதம் முழங்கக்கேள் தினவுத் தோள்கள்
  பொங்குதல்போல் பாபாடி எழுச்சி யுற்றேன்!
  யார்வெல்வர்? உம்பாடல் வென்ற தென்ற
  எழிற்சொல்கேட் கின்றேன்நான் எழுச்சி யுற்றேன்!

  மீண்டும் வாழ்த்த வருவேன் சகோ!!

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஐயா வாருங்கள்!

   தங்கள் பாடல்தரும் எழுச்சிபோல் என்ன உண்டு?..

   அரும் பா பாடி அகம் மகிழச் செய்தீர்கள்!
   உளமார நவின்றேன் நன்றி!

   Delete
 29. எண்சீர் விருத்தத்தில் எழில் கவிதை
  இளையோர்தம் இதயத்தில் விதைத்த விதை

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புலவர் ஐயா!

   என் குடிலில் உங்கள் வரவுகண்டு மகிழ்வெய்துகின்றேன்!

   உங்களைப் போன்றோரின் முன் இவள் பா போட்டிக்கு வருவதா?..
   அப்படி இல்லை ஐயா.. அவர்களுக்கு என்னால் இயன்ற ஒத்துழைப்பு நல்கினேன்.

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் தந்தீர்கள்!
   நன்றியுடன் வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா!

   Delete
 30. கல்லாரைக் கற்றவராய் மாற்றும் பணியொன்றைச்
  சொல்லாது சொன்னதிப் பண்.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா! வணக்கம்!

   தாங்கள் இப்போதான் இங்கு முதன் முறையாக வருகின்றீர்களென எண்ணுகிறேன்! மிக்க மகிழ்ச்சி!

   அன்பான குறட்பா பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.