Pages

Oct 2, 2015

வாருங்கள் உறவுகளே!..

நான்காம் ஆண்டு
வலைப்பதிவர் திருவிழா - 2015
புதுக்கோட்டை

வாருங்ள் வுளே!

 புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் நம்ம பதிவர் திருவிழாவுக்கு
அனைவரையும் வருக! வருக! என இருகரங்கூப்பி வரவேற்கின்றேன்!
நாள், நேரம், முகவரி யாவும் இணைத்துள்ள விழா அழைப்பிதழில் காணுங்கள்!
சேருங்கள்!.. கூடுங்கள்!.. கொண்டாடுங்கள்!..

இது எங்கள் விழா!
பொங்கும் தமிழர் வலைப்பூத் திருவிழா!!
 
வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன் உறவுகளே! - பெண்
சிலைகூட சிலிர்த்தெழுந்து சேலைகட்டிப் புறப்படுதே!
வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன்!

மலைத்தேதான் பார்ப்பதுமேன்?
மாண்புடைச்  சோதரரே! - ஒன்றாய்க்
கலைவிழா கொண்டாடிடவே
காற்றெனவே  விரைகின்றார்!
வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன்!

அலையெனவே திரளுங்கள்!
அகிலத்தில் உள்ளோரே! - என்றும்
நிலைபெற்றே நெஞ்சினிக்கும்
நிகழ்வுகளைக் காண்பதற்கே!
வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன்!

தொலைவில்லை! தூரமில்லை!
தொட்டிடலாம் புதுகைநகர்! - வலைப்பூக்
கலைஞரெல்லாம் கூடுகின்றார்
கலந்தொன்றாய் மகிழ்வுறவே!

வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன் உறவுகளே! - பெண்
சிலைகூட சிலிர்த்தெழுந்து சேலைகட்டிப் புறப்படுதே!
வலைப்பதிவர் விழாக்காண வாருங்களேன்!
~~~~~~~~~~~~

34 comments:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  2. அழகிய பாமாலையுடன் அன்பின் அழைப்பு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. ”அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாள்”
      அழக்க மட்டுமே முடிகிறது ஐயா!
      கலந்து கொள்ளமுடியவில்லை எனும் ஏக்கம்
      வருத்துகிறதே!..

      அன்புடன் வரவிற்கும்
      இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  3. அட்டகாசமான அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் பார்த்து மகிழ்வதோடு சரி உங்கள் தோழி அம்பாளடியாள் இதுவரைக்கும் ஒன்றுமே எழுதவில்லை இதை விடவும் என்னத்த எழுத முடியும் சொல்லுங்கள் தோழி ?..:))) நானும் உங்களோடு அணியில் திரள்கின்றேன் என்னையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள் தோழி .விழா சிறக்க அரும்பா தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இல்லாமல் இளமதியா..:)

      என்னோடு எப்பவும் எதிலும் நீங்கள் இருப்பீர்கள் தோழி!
      இணைந்தே வாழ்த்துவோம்!
      அங்கு போகும் தருணம் கிட்டினும் இணைந்தே போவோம்!

      உங்கள் அன்பில் கரைகிறேன்! நன்றி மா!

      Delete
  4. அருமைம்மா! அலையலையா வரும்படி பாடியே யழைத்துள்ளீர்கள். நன்றியம்மா.
    அடுத்த முறை விழாவிற்கு சேர்ந்து போவோம். நன்றி நன்றி ! விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள்.. இப்போதான் அம்பாளும் என்னுடன் என்றுவிட்டார்.
      பிறகென்ன அடுத்த பயணம் அது நம் வலைப்பதிவர் திருவிழாவே!..

      இப்பவே ஆயத்தங்கள் நிறையச் செய்ய வேண்டும்!..:)

      இனிமை சேர்க்கும் இனியாத் தோழிக்கு
      இதயம் நிறைந்த நன்றி மா!

      Delete
  5. பெண் சிலைகூட சிலிர்த்தெழுந்து சேலைகட்டிப் புறப்படுதே !

    பாமாலை நன்று கவிஞரே விழா சிறக்க தூரத்திலிருந்து வாழ்த்துவோம்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  6. வாழ்த்துக்கள் அக்கா..
    அருமை..
    விழா சிறக்க வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  7. வணக்கம் சகோ !

    அடடே அருமை அசத்தல் அழகு எல்லாம் ஒன்றாகி இருக்கு இனிமையான பாடல் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  8. அழைப்பு அருமை சகோதரியாரே
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  9. தொலைதூரத்திலிருந்து ஓர் அழகிய அழைப்பு, கவிதை வடிவில். வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் ஒன்று சேருவோம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. விழா அழைப்பு க் கவிதை அருமை இளமதி

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  11. உங்கள் அழைப்பென்றால் தனி வசீகரம் தான். அசத்தல் தோழி. தாங்கள் விழாவிற்கு வருகை தந்தால் இன்னும் நன்றாகத்தான் இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. ம்.. உங்கள் ரசனயும் சிறப்பு சசிகலா!
      அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மா!

      Delete
  12. அன்புள்ள சகோதரி,

    அழைப்பு கண்டு மகிழ்ந்தேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. உங்க அழைப்பிதழ் அருமையிலும் அருமை.இதை பார்த்தாலே(வாசிக்க) போகனும் எனும் ஆர்வம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் இளமதி.
    விழா சிறப்பாக நடைபெற இங்கிருந்து வாழ்த்துவோம். ..!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. அப்படியா பிரியா!
      அடுத்த வலைப்பதிவர் சந்திப்புக்கு நாமெல்லாம்
      சேர்ந்தே போய் வருவோம் சரியா!..:))

      அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிரியா!

      Delete
  14. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  15. அழகான பாமாலையில் அன்பின் அழைப்பு,,
    வாழ்த்துக்கள்மா,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  16. கவிதை வழி அழைப்பு நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  18. ஆஹா அழகு தமிழ் கவிதையில் அழைப்பு! கலக்குகின்றீர்கள் சகோதரி!! விழாவில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று என்றாலும் தங்களை சகோ அம்பாளடியால் வலையில் அவர்களுடன் நிழற்படத்தில் கண்டது மகிழ்வாக இருந்தது....சந்திக்கும் நாள் வராமலா போகும்..!!

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.