Pages

Oct 14, 2015

எங்குமே உன்னருள்!..

எங்குமே உன்னருள் ஏந்திடும் பொன்னெழில்
  என்றுமே காணுகிறேன்!
 ஏற்றமே நான்பெற இன்னலும் நீங்கிட
  என்னையும் காத்திடுக!

தங்கிடும் இன்பமும் இங்கெனை மேவிடும்
  தாயுன தன்பினாலே!
 சங்கடம் போக்கியே தண்டமிழ் தந்திடும்  
  சக்தியே சௌந்தரியே!

பொங்கிடும் கங்கைபோல் பூத்திடும் என்மனம்
  பொற்புடை நாயகியே!
 பூவுல கேஉனைப் போற்றியே பாடிடப்
  புன்னகைப் பூத்தவளே!

சங்குமு ழங்கிடச் சிங்கமே வாகனம்
  தரித்திடும் சங்கரியே!
 தண்டையொ லித்திட வந்தெமைக் காத்திடு
  சக்தியே சாம்பவியே!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

43 comments:


 1. வணக்கம்!

  அரிமா அமர்ந்தவளை அள்ளி அளித்த
  வரி..மா மகிழ்வை வழங்கும்! - புரி..மாத்
  தவத்தால் புனைந்த தமிழ்க்கவியை நாளும்
  சுவைத்தால் அகலும் துயர்!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தெரியாத சொல்லெடுத்துச் சேர்த்திட்ட வெண்பா!
   அரிதாய்க் கிடைத்த அமுது!

   அரிமா என்ற வெண்பாவிற் கண்ட சொல்லைப்போல வலையுலகில் தங்கள் வரவும் அரிதாகிப் போயிருந்த வேளையில் இன்று, இங்கு உங்கள் வரவு கண்டு உள்ளம் மிகவே மகிழ்கின்றேன்!

   அன்போடு வருகை தந்து அருமையான வெண்பா வாழ்த்து இட்டமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. வணக்கம்
   சகோதரி
   நவராத்திரி காலம் அல்லவா சக்தியை போற்றி பாடிய பாடல் நன்று.
   தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
   ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
  3. வணக்கம்
   த.ம 5

   Delete
  4. வாருங்கள் ரூபன்.
   அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
   தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வேண்டுகிறேன்!.

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 2. Replies
  1. அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 3. எனக்கு ரசிக்க மட்டுமே தெரிகிறது! அருமை.

  ReplyDelete
  Replies
  1. ரசிப்பதுவும் எனக்கு மகிழ்ச்சிதான் சகோதரரே!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கு
   உளமார்ந்த நன்றி!

   Delete
 4. navarathri 2nd Day celebrations.
  Your composition is the main paadal in subbu thatha blog
  today in a couple of hours.
  Please visit and sing this song yourself.

  Of course thatha is also singing.
  www.subbuthathacomments.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அங்கு வந்து பார்த்துக் கேட்டு ரசித்து
   அதன் இணைப்பை இங்கு உங்கள் பாடற்பதிவுப் பெட்டகத்தில்
   இணைத்துவிட்டேன்.

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies


  1. தாயேநின் அன்பினை தாவென்று கேட்டதும்
   நாயகியே வந்திங்கு நல்லருளை நல்கிடம்மா !
   தூயவளே வெண்மதியின் துன்பமதை போக்கிடவே
   வாயார வந்தவரை வாழ்த்து!

   என் அன்புத் தோழியே! அற்புதமான வேண்டுதல் அவள் அன்பு என்றும் உமை தேடி வரும். இப்படிப் பாடினால் அவள் எப்படி அங்கிருப்பாள் சொல்லுங்கள் ஓடி வரமாட்டளா....எனக்கே ஓடி வரவேண்டும் போல் இருக்கிறது. ம்..ம் நன்றி பாராட்டுக்கள் பாவலரே.
   இது என் சிறிய முயற்சி எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!

   எங்குமே உன்முகம் அன்புறும் பொன்மனம்
   இணையிலை உன்றனுக்கு
   எண்ணமும் இன்பமாய் ஏற்றிடும் வண்ணமாய்
   இணை மன வானிலுன்னை!

   தங்கிடும் உன்றனை தாய்மையில் தோய்ந்திடும்
   தவிப்பினை என்னசொல்வேன்.
   தாயுனைப் போற்றிநின் சந்நிதி வந்துநான்
   சந்ததம் பாடுவேனே!

   சிங்கமே வாகனம் சீறிடும் உன்முகம்
   செங்கதிர் வேலுடனே
   சின்னதாய் தப்புகள் செய்வதைக் கண்டதும்
   சிலிர்த்திடும் சௌந்தரியே !

   பொங்கிடும் உள்ளமும் புன்னகை பூத்திடும்
   பொன்மனச் செல்விநீயே
   பொற்பதம் பற்றுவேன் புண்ணியம் சேர்த்திடும்
   புகழெலாம் உன்றனுக்கே!

   Delete
  2. அன்புத் தோழியே!

   தாயைநான் வேண்டித் தவிப்புடன் பாடவே
   நீயுமிங் கிட்டகவி நேர்த்தியே! - சேயாகி
   ஓங்காரி பாதத்தை ஒற்றி வணங்குவோம்!
   நீங்கட்டும் இன்னல்கள் நீர்த்து!

   பாட்டுக்குப் பாட்டெனப் பாடிய பாக்கள் மிக அருமை தோழி!
   உள்ளம் மகிழ்கின்றேன் உங்கள் முயற்சி கண்டு!..:)

   உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களம்மா!

   Delete
 6. https://www.youtube.com/watch?v=rXgikVnk3kg&feature=youtu.be
  LISTEN YOUR SONG HERE ALSO\
  SUBBU THATHA
  www.subbuthathacomments.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் குரலில் இந்தப் பாடலும் கொண்டது பெருமை!
   மிக மிக அருமை ஐயா!

   என்னைப் போன்ற ஆரம்பகாலக் கவிஞர்களின் கவிதைகளையும் பாடி ஊக்குவிக்கும் உங்கள்
   செயல் மனதை நிறைக்கின்றது.

   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. வணக்கம் ஐயா! எப்படி நன்றி சொல்வேன். பின்னூட்டத்தையும் பாடி மகிழ்ந்தமை கண்டு உள்ளம் பூரித்தேன் ஐயா மிக்க நன்றி! தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் ஐயா! நன்றி !

   Delete
 7. பொங்கிடும் கங்கைபோல் பூத்தது என் மனமும் அழகான பாமாலை கண்டு. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ஆகா.. அப்படியா தோழி!
   மிக்க மகிழ்ச்சி!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி மா!

   Delete
 8. அருமை கவிஞரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 7

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

   இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 9. வேண்டுதல்கள் நிறைந்த பாமாலை. எல்லாம் கிடைக்க அவள் அருளட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 10. வணக்கம் மா
  அருமையான பாடல் வரிகள், வாழ்த்துக்கள்,
  நன்றிமா

  ReplyDelete
  Replies
  1. உளம் நிறைந்த நன்றி சகோதரி!

   Delete
 11. நவராத்திரிக்கேற்ப சக்தியை சிறப்பித்த பாமாலை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்சியுடன் நன்றி சகோ!

   Delete
 12. பாடிக் களித்தேன்
  சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் ஊக்கம் என்னை மேம்படுத்தும் சக்தி!
   மிக்க மகிழ்சியுடன் நன்றி ஐயா!

   Delete
 13. அன்புள்ள சகோதரி,

  எங்கும் நின்னருள் போற்றி பாராட்டப்பட வேண்டும். பாடல் அருமை!

  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. ஐயா!.. தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்வடைகின்றேன்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 14. சக்தி காக்கட்டும்.சிறப்பான கவிதை

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா!

   ரசனைகண்டு மிகவே மகிழ்கின்றேன்!
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 15. பன்னிரு சீர் விருத்தம்.

  பாடலும் பொருளும் அருமை.

  நிறைய எதிர்பார்ப்பிருக்கிறது உங்கிடமிருந்து தமிழுக்கு!

  தொடருங்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்கள் பாராட்டுக் கண்டு உள்ளம் நிறைகிறது!

   இன்னும் கற்கவேண்டியுள்ளது. காலம்தான் போதவில்லை..!

   அன்புடன் வருகைக்கும் நற்கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 16. வணக்கம் சகோ !

  அன்னைக்காய் ஈன்ற அருங்கவி அழகோ அழகு சகோ
  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பாவலரே!

   படைத்தகவி பார்த்துப் பகர்ந்த கருத்துக்கண்டு
   மனம் மிகவே மகிழ்கின்றேன்!

   வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 17. நவராத்திரி நன்நாளில் அருமையான வரிகள். வேண்டுதல்கள் நிறைவேற அன்னை அருள் கிடைக்க நானும் வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வேண்டுதலினாலும் நல்லவைகளே நடக்கட்டும்!

   உளமார்ந்த நன்றி பிரியா!

   Delete
 18. உங்களின் பாக்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன....தமிழும் ...எங்களால் பா எழுதி உங்களை வாழ்த்த முடியாது சகோ...ஹாஹ்ஹ

  ஆனால் மிகவும் ரசித்து வாசிக்கின்றோம்....

  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே!

   கற்றிட இன்னும் எவ்வளவோ இருக்கின்றது.
   காலம் போதவில்லை.. இருப்பினும் எழுதியதைப் பார்த்துப்
   பாராட்டியமை கண்டு மனம் மிகவே மகிழ்கின்றேன்.

   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 19. தித்திக்கும் தமிழில் தேவிக்கான பா அருமை சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   அன்பின் வரவும் ரசனையும் தருகிறது சிறப்பு!
   மிக்க மகிழ்வுடன் நன்றி சகோதரி!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.