Pages

Oct 22, 2015

உய்கின்ற வழியொன்று உரைத்திடுக!..

விஜயதசமித் தினத்தில் வித்தைகளை ஆரம்பித்தால் விருத்தியடைந்து சிறப்புறுவர் என்பது சைவசமயிகளின் நம்பிக்கை ஆகும்.
அன்றையத் தினத்தில் திருவருளுடன் குருவருளையும் 
வேண்டல் மிகச் சிறப்புடையது.
நானும் கல்விக்கதிபதியான அன்னை சரஸ்வதியை வணங்குவதுடன்
எனக்கு யாப்பிலக்கண வித்தையைக் கற்றுத்தருகின்ற
ஆசான் கி. பாரதிதாசன் ஐயாவின் ஆசியையும் வேண்டுகின்றேன்!

வலையுலக உறவுகள் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்  
விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~

நாமகளை அருள் வேட்டல்!
~~~~
கைவீணை தனைமீட்டும் கலைவாணி தாள்தொழுது
  காலம் எல்லாம்
உய்கின்ற வழியொன்றை உரைத்திடவே வேண்டினனேன்!
  ஒளியை நல்கி
மெய்யென்று போற்றுகின்ற மேன்மைமொழிச் செந்தமிழைக்
  கற்பாய் என்று
பைந்தமிழின் பாட்டரசர்  பாரதிதா சக்குருவைப்
  பற்றும் என்றாள்!
~~~~~~~


குருவருள் வேட்டல்!
~~~~~~ 


சொல்லாட்சிக் குவியலொடு சுவைக்கவிகள் தேன்சொட்டத்
  தொடுக்கும் ஐயா!
நல்லாசி பெறவேண்டி நானுமிங்கு நன்நாளில்
  நவின்றேன் பாக்கள்!
பல்லாண்டு பார்போற்ற வாழ்ந்திடுவீர்! படர்தமிழால்
  பாவை என்றன்
பொல்லாத கவிப்பசியைப் போக்க..யாப்பி லக்கணத்தைப்
  புகட்டு வீரே!

முதற் கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

32 comments:

 1. அன்னை கலைவாணியின் நல்லருளால் நலமே எங்கும் நிகழட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் ஆசியும் வாழ்த்தும் உடனே கிட்டியது
   பெரும் மகிழ்வே!..

   உளமார்ந்த நன்றியுடன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா!

   Delete
 2. அன்புள்ள சகோதரி,

  விஜயதசமி அன்று அருமையான பாடல். வாழ்த்துகள்.

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 3. வணக்கம் கவிஞரே பாடல் மிகவும் நன்று வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 4. அருமையான வேண்டுகோள்!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி அருணா!

   வருகைகண்டு மனம் மகிழ்கின்றேன்! நலம் தானா?

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 5. வாணியின் திருவருளும்.உங்கள் குருவருளும் உங்களின் புலமையை மேலும் மேன்மையடையச் செய்யும்!
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   தங்களின் வாழ்த்தும் எனக்குப் பெரும் பேறே!
   மிக்க மகிழ்சியுடன் நன்றி ஐயா!

   Delete
 6. வணக்கம்

  இரசிக்கவைக்கும் வரிகள்.. வாழ்த்துக்கள் த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சகோ!
   மிக்க மகிழ்வுடன் நன்றி!

   Delete
 7. விஜயதசமி நல்வாழ்த்துக்கள் இளமதி.!!
  இனிய கவியால் கல்விக்கரசியையும், குருவையும் வணங்கி ஆசி வேண்டியது சிறப்பு. அன்னையின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவும் வாழ்த்தும் கண்டு
   உள்ளம் நிறைகின்றேன் பிரியா!

   மிக்க நன்றி!

   Delete
 8. அழகிய விருத்தம் சகோ இன்றைய நாளில் நல்லதே நடக்கட்டும் வேண்டியவரங்கள் கிடைக்கட்டும் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே!

   உங்களின் அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும்
   எனக்கு மட்டற்ற மகிழ்வே! மிக்க நன்றி சகோ!

   Delete

 9. வணக்கம்!

  பெற்றோர் திருவருளும் பேரிறையின் பொன்னருளும்
  கற்ற குருவருளும் கண்டிடுவோம்! - நற்றமிழின்
  யாப்பணியை நன்றே இயம்பிடுவோம்! நாமகளே
  காப்பணியாய் நிற்பாள் கமழ்ந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உற்ற குருவே உடனிருந்து வேண்டிடப்
   பற்றுவேன் நானும் பணிந்து!

   தாங்களும் எங்களுக்காகவும் வாணியருளை வேண்டுவது
   நாம் செய்த பேறே!.
   அருமையான வெண்பா வேண்டல்!

   அன்பான வரவுடன் வாழ்த்தியமை கண்டு மகிழ்கின்றேன் ஐயா! மிக்க நன்றி!

   Delete
 10. இறை வணக்கமும், குரு வணக்கமும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவும் இனிய கருத்தும் கண்டு
   உள்ளம் மகிழ்ந்தேன்! மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 11. அருமை அருமை தோழி! இன்றைய நன்னாளில் எல்லா வேண்டுதலும் பலிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி ...!

  உய்யும் வழியை உமக்கீந்த ஆசானின்
  மெய்யன்பில் மின்னும் மிளிர்ந்து !

  அன்னையும் ஆசானும் இன்புற் றருளவே
  மின்னும் கவிதை மிகுந்து !

  இன்றமிழைக் கற்றிணை யில்லாப் புகழ்சேர
  இன்னுமொளிர் வாயே இனிது !


  ReplyDelete
  Replies
  1. குறளாலே வாழ்த்து! குளிர்ந்ததென் நெஞ்சம்!
   சிறப்பித்தாய் தோழியே தேர்ந்து!

   எல்லோருக்கும் அவரவர் வேண்டுதல்களும்
   சித்திக்கட்டும்!
   அன்புவரவுடன் இனிய குறள் வாழ்த்துகளுக்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 12. வேண்டியன கிட்டட்டும்
  அருமை சகோதரியாரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 13. கவிப்பசி தீர்ந்திடவே காவியங்கள் பாடு
  புவியும் மகிழும் பொலிந்து.

  என்றும் கவிபாடி இன்பம் பெற வேண்டும். தோழி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பாடிடவே ஆவல் பகலிரவாய்க் கற்கின்றேன்!
   நாடிடுவேன் நற்தமிழை நான்!

   அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்
   உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 14. அன்பின் இளமதி!

  எந்தத் திருநாளுமே புது நம்பிக்கைகளை அளிக்கவும், உள்ளவற்றை உறுதிப் படுத்தவும் ஏற்பட்ட நல்ல நாட்கள். நல்ல தமிழுக்காய் மெனக்கெடும் ஊக்கமுள்ளவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் மனோரதங்கள் நிறைவேறட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பற்றிய தங்களின் உயர்ந்த எண்ணக்கருத்தினைக் கண்டு உள்ளம் மகிழ்கின்றேன் சகோதரரே!

   தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
   இதயம் நிறைந்த நன்றி!

   Delete

 15. அன்னை தந்தை
  ஆசான் இறைவன்
  அகம் தூய்மை பெற
  ஆதரவு தரும்
  இணையிலா உறுதுணையாம்

  நல்வினை
  நல்லதோர் குரு விடம்
  நம்மைச்சேர்க்கும்
  நானிலம் புகழச் செய்திடும் .

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் இனிய பாவினைக் கண்டு மிகவே மகிழ்வு கொண்டேன்!
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 16. அருமையான பாடல் அக்கா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் தந்தமைக்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.