Pages

Oct 26, 2015

மங்கல வாழ்த்து!


25.10.2015 மணவாழ்வில் இணைந்திட்ட 
அன்பு மகள் மருமகனை
வாழ்த்திப் பாடிய மங்கல வாழ்த்து!
~~~~~~~~

மங்கலம் சேர்க்கும் மகளே! மருமகனே!
பொங்கட்டும் உம்வாழ்வு பூத்து!

அன்னைத் தமிழும் அருஞ்சுவை  போலும்
ஒன்றாய் இணையும் உங்கள் வாழ்வு!
மன்றம் ஏறி மங்கலம் சேர்க்கையில்
குன்றில் ஒளியெனக் குவலயம் போற்ற
அன்பெனும் தெய்வம் ஆள்கவே! என்றும்
பண்பே கோவிலாய்ப் பாசம் கருணை
ஒழுக்கம் உயிராய் உண்மையே மூச்சாய்
தொழுகை தூய்மையும் சுடரும் வாழ்வாய்
இத்தரை போற்ற இல்லறம் காண்க!
புத்தொளி சூழ்ந்திடப் புகழொடு வாழ்கவே!

இல்லற வாழ்வில் இணைகின்ற பூக்களே!
நல்லறம் பூண்டு நலங்காண்க! - உள்ளத்துள்
வெல்லமென இன்பம் விளையட்டும் பல்கோடி!
பல்லாண்டு வாழ்க படர்ந்து!

கண்ணன் திருவருளும் கந்தன் கழலருளும்
வண்ணமலர்க் கோதை மகிழ்வருளும் - திண்ணமுடன்
என்னினிய செல்வங்கள் ஏற்று வளர்கவே!
இன்றமிழாய் என்றும் இனித்து!

ஈருடல் ஓருயிராய் என்றும் இருந்திடுவீர்!
பேருடன் பேறுகளைப் பெற்றிடுவீர்! - சீரோங்க
எப்போதும் உம்மோ(டு) இருக்கும் இனிக்கின்ற
அப்பாவின் அம்மாவின் அன்பு!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

46 comments:

  1. அன்புள்ள சகோதரி,

    இல்லறம் என்னும் இனியவாழ்வில் அடியெடுத்து வைக்கும் அன்புள்ளங்களுக்கு அடியேனின் இதயப்பூர்வமான வாழ்த்துகள். பதினாறும் பெற்றுப் பெறு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

    எல்லா நாள்களிலும் மகிழ்ச்சியே பொங்கட்டும்.

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  2. நாங்களும் வாழ்த்துகிறோம்..
    வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  3. மணமக்களுக்கு எம் அன்புநிறை நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  4. அன்னைத்தமிழும் அருஞ்சுவை போலும் ஆஹா! என்னே இனிமையான இதமான வாழ்த்து.
    என்றும் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
    வாழிய மணமக்கள் பல்லாண்டு!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும்
      உளமார்ந்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி மா!

      Delete
  5. அருமையான கவிதை..மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி மகி!

      Delete
  6. அருமையான வாழ்த்துப் பாடல்

    முன்பு எப்போதோ நான் எழுதிய
    மண நாள் வாழ்த்துப் பாடலை
    நினைவுறுத்திப் போனது

    வாழ்கவெனும் வாழ்த்தொலிக்க
    வாழ்வென்னும் காவினுள்ளே
    விரைகின்ற நண்பாஉன்
    வாழ்வெல்லாம் நலம் சிறக்க
    வரையின்றி வளம் கொழிக்க
    வண்தமிழால் வாழ்த்துகிறேன்
    வாழியவே வாழியவே

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. அருமையான கவிதை ஐயா!
      தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  7. மணமக்கள் வாழ்க. உங்களுடன் நாங்களும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  8. புதுமணத் தம்பதியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு இனிதாக!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி கிரேஸ்!

      Delete
  9. அருமையான வாழ்த்துப்பாடல்!
    என் வாழ்த்துகளும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  10. அருமையான வாழ்த்துபாக்கள் கண்டு மகிழ்ந்தேன். எல்லாச் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் !

    உள்ளம் உவகையால் ஓங்கிட அன்பெனும்
    வெள்ளக் கடல்தன்னில் வீழ்ந்து -அள்ளமகிழ்
    நல்மகவும் சொல்தமிழும் நாடி மணமக்கள்
    இல்லறம் காண்க இனிது!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வெண்பா வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி மா!

      Delete
  11. மணமக்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளும்.... சகோ
    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  12. எங்கள் வாழ்த்துகளும்.

    வாழ்க வளமுடன் பல்லாண்டு.
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  13. வணக்கம்
    புதுமணத் தம்பதியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  14. புதுமணத் தம்பதியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! வாழ்க பல்லாண்டு இனிதாக!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  15. சிறப்பான வாழ்த்து! என்னுடைய வாழ்த்துக்களும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  16. பாசம் சொரியும் பா. ரசித்தேன்...மணமக்களுக்கு எம் அன்பும் ஆசியும் சேர்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  17. எங்களது வாழ்த்துகளும்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  18. இல்லறம் என்றும் நல்லறம் ஆகட்டும் இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள் மனம்மக்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன் வாழட்டும் தலைமுறை !

    அருமையான வாழ்த்துப்பா சகோ
    வாழ்த்துக்கள் தம +1

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  19. என் வாழ்த்துக்களும் இல்லறம் காணும் இருவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  20. இளமதி இல்லை ..நீங்கள் முழுமதி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்களின் முதல் வருகை இங்கு கண்டு
      மிகவே மகிழ்வுறுகின்றேன்!
      கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  21. \\அன்னைத் தமிழும் அருஞ்சுவை போலும்
    ஒன்றாய் இணையும் உங்கள் வாழ்வு!\\

    இதை விடவும் அருமையான உவமை கொண்டு இருமனம் இணையும் திருமண பந்தத்தை வாழ்த்திவிடமுடியுமா? அழகுப்பா தோழி... மணமக்களுக்கு என் அன்பும் ஆசியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. வாங்கோ கீதமஞ்சரி!

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  22. மணமக்கள் நீடுவாழ எந்தன் வாழ்த்துகள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி!

      Delete
  23. வணக்கம்!

    அன்பு மணமக்கள் இன்பத் தமிழாக
    என்றும் எழிலை எழுதுகவே! - தென்னரங்கன்
    எல்லாம் வளமும் இருக்க அருள்தருவான்
    பல்லாண் டுரைத்தேன் பாரிந்து!

    வண்ண மலர்ச்சோலை வஞ்சி திருக்கோலம்!
    கண்ணில் கவிகள் கமழ்ந்தாடும்! - எண்ணமெலாம்
    ஒன்றி உறவாடும் நற்றுணைவன்! ஓங்கிடுமே
    குன்றின் விளக்காய்க் குலம்!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      பாடரசர் வந்திங்கே பாக்கொண்டு வாழ்த்தியது
      தேட்டமாய்ச் சேர்ந்த சிறப்பென்பேன்! - நாட்டமொடு
      நல்வாழ்வு வாழ்ந்திடும் நங்கையவள் உம்பெயரைச்
      சொல்வாளே என்றும் சுடர்ந்து!

      சிறப்பான வெண்பாவால் சேர்த்திட்ட வாழ்த்து
      மிக மிக அருமை ஐயா!

      நிறைந்த மகிழ்வுடன் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.