Pages

Oct 30, 2015

அகிலம் சேர்ப்பீர்!..


அகிலம் சேர்ப்பீர்!
~~~~~~~
மொழியென்று முன்னோர்கள்
 முதுமதியால் ஒலிசேர்த்தெம்
  முன்னே வைத்தார்!
வழிவழியாய் வந்தோரும்
 வடிவங்கள் பலபடைத்து
  வழங்கிச் சென்றார்!
விழிகொள்ளா வரிசையது
 வியந்தின்றும் பார்க்கின்றார்
  வேற்று நாட்டார்!
செழிப்புறவே காத்திடுவோம்
 சீர்பரவச் செய்திடுவோம்
  சிந்தை ஏற்றே!

சிறப்பிக்கும் சிந்தனையும்
 சீரளிக்கும் யாப்பழகும்
  தேனாய்ப் பாயும்!
பிறப்பென்றால் தமிழரெனப்
 பெருமையொடு பேசவைக்கும்!
  பெரியோர்  ஈந்த
மறப்பிக்க முடியாத
 மாண்பெல்லாம் காவியமாய்
  மணக்கும்நன்றே!
திறந்திருக்கும் நறுஞ்சோலை
 தேனருந்தித் திளைப்போமே
  சேர்வீர் இன்றே!

உள்ளத்தில் விளக்காக
 ஒளிர்ந்துநல் உணர்வூட்டி
  உலவச் செய்யும்!
பள்ளத்திற் பாய்கின்ற
 பாலருவி போலெழிலைப்
  படைப்பில் நல்கும்
வள்ளல்கள் எனமாற்றி
 வடிக்கின்ற படைப்பெல்லாம்
  வாழும் என்றும்!
அள்ளிடவே குறையாத
 அமுதமொழி பரவிடவே
  அகிலம் சேர்ப்பீர்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

41 comments:

 1. *பாலருவி போலெழிலைப்
    படைப்பில் நல்கும்* அப்படிதான் இருந்தது தோழி உங்கள் கவிதையை படிக்கும் போதும்:)

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!..

   பாலருவி போலே பகிர்ந்த கருத்திற்கு
   மேலென்ன சொல்ல மிகுத்து!

   நீண்ட இடைவெளியின் பின் நெஞ்செல்லாம் நிறைக்கின்றது
   அன்புத்தோழியின் வரவும் வாழ்த்தும்!

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மா!

   Delete
  2. பாதை என்ன வோ காதிர்காம மலை யேற்றம் போல இருக்கு ஆனால் ஜோடி சேரும் இருவருக்கும் ]பாலாறு போல இருக்கு வாழ்த்துகின்றேன்!

   Delete
  3. ஆகா..:) அப்படியா நேசன்..:)

   அன்பான வரவுடன் வாழ்த்தியமைக்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 2. அருவி போல் கொட்டும் அமுதமொழியை ரசித்தேன் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசனையும் தருகிறது எனக்கு மகிழ்வே!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 3. மொழியின் பெருமையை உணர்த்தும் அழகான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. மொழியின் பெருமையை உயர்த்தும் தங்களின் வாழ்த்தும்
   எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது ஐயா!

   அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. அருமையான கவிதை கவிஞரே அழகான வரிகள் மிகவும் ரசித்தேன் நன்று
  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. பன்முகத் திறமைசாலியான உங்கள் வாழ்த்து
   எனக்கு ஊக்கம் தருகிறது சகோதரரே!

   அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 5. சிந்தை சிறந்தோங்க சீர்மிகு யாப்பழகை
  தந்தீர் சிறக்கும் தமிழ்.

  அங்கம் நிறைந்த அழகுத்தமிழ் அருவியாய் ... பாய்ந்தோடும் அகிலம் முழுக்க.

  ReplyDelete
  Replies
  1. வந்தனை செய்கிறேன் வாழ்த்திடும் தென்றலே!என்
   சிந்தனைசிட் டானதே சேர்ந்து!

   தேனென இனிக்க திரட்டித் தந்த குறள் வாழ்த்து தித்திக்கின்றது!
   மிக்க நன்றி மா!

   Delete
 6. Replies
  1. நன்றி சகோதரரே!

   Delete
 7. வணக்கம்!

  அரும்சீர் மிளிரும் அறுசீர் விருத்தம்!
  பெரும்சீர் சுவையைப் பிழியும்! - வரும்சீர்
  எனவெண்ணி ஈந்த எழிற்கவிதை என்றன்
  மனந்தன்னில் வாழும் மணந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   மனதில் மணம்பரவ வைக்கும் தமிழே!
   தினமும் தருமே சிறப்பு!

   அன்புடன் இங்கே அளித்திட்ட வெண்பா!
   என்றும் எனக்கு இனிப்பு!

   மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் நான்!
   மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete
 8. உங்களின் கவிப்புலமைக்கு என் முதல் வணக்கங்கள் ஐயா.இனி உங்களின் வலைப்புவில் தொடர்கிறேன்.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   தங்களின் முதல் வருகை இங்கு கண்டு மகிழ்கின்றேன்!

   தங்களின் பின்னூட்டம் என் ஆசானுக்காக எழுத்தப்பட்டது என்று எண்ணுகிறேன்!..
   மிக்க நன்றி!

   Delete
 9. இனிமைத் தமிழ்மொழி எமது.

  உங்கள் பாடலைக் காண இன்னொருமுறை சொல்லத் தோன்றுகிறது.

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. எங்கள் தமிழ்மொழி என்றும் இனிக்கும் மொழியே!

   தங்களின் அன்பான வரவுடன் இனிய வாழ்த்துக்கும்
   உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 10. அன்புள்ள சகோதரி,

  அன்னையவள் உயந்திட உன்தமிழ் படியாகட்டும்
  படியேறி வந்திடுவாள் படிக்க உன்வழியாய்ச் சிந்திடுவாள்
  சிந்தைகுளிர வைத்திட்டே உன்னை சிகரத்தில் ஏற்றிடுவாள்
  ஏற்றியே போற்றிடுவாய் உன்தமிழை அகிலத்தில் உயர்த்திடுவாய்!

  நன்றி.
  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்னைத் தமிழாள் அனைத்தும் அள்ளித் தந்திடுவாள்!

   அன்பான வரவுடன் இனிய கவிவாழ்த்திட்டு
   வாழ்த்தியமைக்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

   Delete
 11. அருவியாய் கொட்டும் வார்த்தைகள்
  அருமை சகோதரியாரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அன்புடன் வரவிற்கும் வாழ்த்திற்கு
   மனம் நிறைந்த நன்றி ஐயா!

   Delete
 12. வணக்கம் சகோ !

  விண்ணிலுள்ள தாரகைகள் மேகமுடன் பேசிவிடும்
  வியப்பைப் போலே
  மண்ணிலுள்ள பூவெல்லாம் மாயவனைச் சேர்ந்ததுவாய்
  மகிழ்ந்து துள்ளக்
  கண்ணிலுள்ள கனவுகளைக் கவியின்பம் காட்டிவிடக்
  காலம் யாவும்
  பெண்ணிலுள்ள ஆற்றலதைப் பெரிதுவக்கும் மாந்தரிடைப்
  பெற்றாய் பேறே !

  அருமையான விருத்தம் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. பெண்ணிவள் ஆற்றலிது பெற்றிடச் செய்ததெலாம்
   விண்புகழ் ஆசான் விரலசைவே! - மண்ணின்
   மணமுடனே மாண்புறும்பா தந்தீர்! மகிழ்ந்து
   வணங்கி இணைத்தேனென் வாழ்த்து!

   அருமைப் பா வாழ்த்தால் அகம் மகிழச் செய்த சகோதரரே!..
   உளமார்ந்த நன்றி உமக்கும்!

   Delete
 13. கவியழகு. மொழியழகு.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவும் வாழ்த்தும் அழகு சகோதரரே!
   மிக்க நன்றி!

   Delete
 14. அருமை! வாழ்த்துக்கல்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 15. வணக்கம்
  பாதை தொடர்ந்தாலும் பயணங்கள் முடிவதில்லை.... மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம14
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மேலே மேலே ஏறிச் சென்று மொழியின் நறுமணத்தை
   உலகெலாம் பரவ விசிற வேண்டும்!

   விருப்போடுவந்து வாழ்த்தியமைக்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 16. அழகுதமிழில் அருவிகொட்டியது போல் அருமையான விருத்தம். அமுதமொழி அகிலம் முழுக்க பாய்ந்தோடும் . அழகான படம். வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. பாயும் பெருநதியாய்ப் பைந்தமிழ் பார்நிறைக்கத்
   தேயுமே நம்குறை தீர்ந்து!

   கவியாகக் கண்டேன் கருத்தினில் வாழ்த்து!
   குவித்த..கரம் நன்றி குறித்து!

   அன்பிற்கு மிக்க நன்றி பிரியா!

   Delete
 17. அருமையான கவிதை அம்மா...

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் இனிய கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 18. மனதில் தேனூற்றும் கவிதை வாசிக்க வாசிக்க இனிமை . வாழ்த்துக்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் இனிய கருத்த்தும் வாழ்த்தும் தந்தமைக்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 19. அருமை.... ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வரவுடன் இனிய கருத்திற்கு
   உளமார்ந்த நன்றி சகோதரரே!

   Delete
 20. அள்ளிடவேக் குறையாத அமுதமொழி பரவிடவே அகிலம் சேர்ப்பீர்.. ஆகா.. அருமையான கவிதைப்படைப்பு..தமொழை வளர்க்க அனைவருமே பாடுபட வேண்டும்.

  ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.