Pages

Oct 5, 2015

அன்பாலே அரசாள வேண்டும்!..


அன்பாலே அரசாள வேண்டும்!
~~~~~~~~~~~
விடியாத பொழுதாகத்
தினமேங்கும் ஏழைக்கு
விடிகின்ற நாளொன்று வேண்டும் - வறுமை
முடிகின்ற நாள்தோன்ற வேண்டும்!

படியாத சமுதாயம்
பழிபோக்கி அவரோங்க
மனிதங்கள் மலர்ந்தாட வேண்டும்! - எங்கும்
புனிதமுறும் மாற்றங்கள் வேண்டும்!

மிடிமை தனில்மூழ்கி
மீளாத துயர்கொண்டோர்
மேதினியில் வாழவழி வேண்டும்! - அவர்தமை
மேன்மையெலாம் சூழும்வழி வேண்டும்!

நடைபாதை இருள்போக்கி
நற்பாதையை உருவாக
நாள்தோறும் நற்செயல்கள் வேண்டும்! - அதனால்
நலிந்தோர்கள் உயர்ந்தோங்க வேண்டும்!

கடிகார நெடுமுள்ளாய்க்
கடமைகள் உணர்ந்திளையோர்
துடிப்போடு செயலாற்ற வேண்டும்! - மனத்
துணிவோடு முன்னேற வேண்டும்!

உளம் சோர்ந்து போவார்க்கு
வளம்சேரும் வண்ணத்தில்
அறிவாலே ஒளியேற்ற வேண்டும்! - நாளும்
அன்பாலே அரசாள வேண்டும்!
~~~~~~~~~~~

வாசகர் விமரிசனப் போட்டி!
யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000
செய்யவேண்டியது என்ன?...


விமரிசனம் செய்யுங்கள்!!
பரிசினை அள்ளுங்கள்!!!

இந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி 
விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி, 
விழா அரங்கில் தவிர வேறெங்கும் தன் பெயரை 
வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட 
"அந்த" நல்ல உள்ளத்திற்கு நாமும் நன்றி கூறுகின்றோம்!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

44 comments:

  1. வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும். அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      அன்பு வரவும் இனிய வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
      மிக்க நன்றி!

      Delete
  2. அடடா அருமைத் தோழியே ! இட்ட பதிவு மனதைத் தொட்டதும்மா. கவிதையில் அழைப்பு பிரமாதம். நன்றி வாழ்த்துக்கள் ...!


    விடிகின்ற பொழுதெல்லாம் உனதாகும் - விரைவில்
    வினையாவும் தீர்ந்தேஉன் விழிகாயும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தோழி!
      உங்கள் அன்பும் வாழ்த்தும் என்றும் தொடர வேண்டும்!

      மிக்க நன்றி மா!

      Delete
  3. அன்புள்ள சகோதரி,

    வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திட வேண்டும்.
    அருமை.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா!
      எத்தனையோ வேண்டல்கள்! அத்தனையும் நிறைவேறாவிடினும்
      அதிலொன்றிரண்டாவது நிறைவேறின் அதைவிட மகிழ்வேது..!

      அன்பான வரவுடன் இனிய கருத்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  4. அன்பாலே அரசாளுவோம்
    அருமை சகோதரியாரே நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! அன்பேதான் எதிலும் வேண்டும்!

      தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  5. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்போடு வந்து பாராட்டுத் தந்தமைக்கு
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  6. தலைப்பும் அதனைச்சார்ந்து சொல்லிச்சென்ற கருத்துகளும் ஏன் தேர்வு செய்த படமும் கூட மனதில் சம்மணமிட்டு அமர்ந்தது. வாழ்த்துக்கள் மா. தங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நன்றிங்க மா.

    ReplyDelete
    Replies
    1. ஆகா..:)
      அப்படியா?.. என்னிடம் கற்பதென்றால் ரொம்ப செலவாகுமே..:))
      பரவாயில்லையா?.. என்ன கேட்கப் போகிறேன். உங்கள் அன்பை மட்டும் என்றும் எப்பவும் மறுக்காமல் தரவேண்டும். சரியா?..:)

      ம்.. இனிய கருத்தால் இதயம் நிறைந்தது மா!
      மிக்க நன்றி சசிகலா!

      Delete
  7. நிறையவே :” வேண்டும்” கள். கிடைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! வேண்டும் வேண்டும் என்றுதான் சொல்கிறோமே தவிரப் போதும் போதும் என்பது எப்போது?..

      அன்பான வரவுக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  8. வணக்கம் சகோ !

    அன்பாலே அரசாள வேண்டும் ம்ம் உண்மைதான் சகோ கவிதை அருமை தொடர வாழ்த்துக்கள் ஆமா கவிதைப் போட்டிக்கு எழுதிய கவிதையா இது அப்போ பத்தாயிரம் உங்களுக்குத்தான் வெற்றி உமதே சகோ வாழ்க வளமுடன் !
    தம +1


    .....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!..
      இங்கு உங்களின் முதல் வருகை! மிக்க மகிழ்ச்சி ஐயா!

      இது போட்டிக்கான கவிதை அல்ல.
      தங்களின் அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  9. அன்பாலே அரசாளுவோம். அதற்கு நிகரில்லை. உண்மையே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      எங்கும் அதிலும் அன்பே வேண்டும்!

      வரவிற்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. அனைத்தும் நிறைவேறும் நம்புவோம் கவிஞரே அருமை வாழ்த்துகள்
    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோதரரே!

      நம்பிக்கையிலேயே வாழ்க்கை நகருகின்றது.
      அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      Delete
  11. //கடிகார நெடுமுள்ளாய்க்
    கடமைகள் உணர்ந்திளையோர்
    துடிப்போடு செயலாற்ற வேண்டும்! - மனத்
    துணிவோடு முன்னேற வேண்டும்!

    உளம் சோர்ந்து போவார்க்கு
    வளம்சேரும் வண்ணத்தில்
    அறிவாலே ஒளியேற்ற வேண்டும்! - நாளும்
    அன்பாலே அரசாள வேண்டும்!
    ~~~~~~~~~~~ // அருமையான சிந்தனை வரிகள்! அற்புதம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      தங்கள் அன்பு வரவுடன் இனிய ரசனை உளம் நிறைக்கின்றது.
      மிக்க மகிழ்ச்சி! நன்றி சகோ!

      Delete
  12. வணக்கம் சகோ !

    அன்பாலே அரசாள வேண்டும் என்னும்
    ........அடிமனத்தின் எண்ணங்கள் நெஞ்சில் பாயும்
    மின்சாரக் கனவுகளை மீட்டிக் கொள்ளும்
    .........மிகைபடவே வரும்வலியை தீர்த்துக் காயும்
    தன்பாலைப் தந்தெங்கள் தாகம் போக்கும்
    .........தகைசான்ற பசுத்தாயின் பண்பைப் போலும்
    பொன்பாட்டில் பொலிகின்ற புதுமை எல்லாம்
    .........புத்துலகைப் பூவாக்கிப் புகழைச் சூடும் !

    இனிமையான பாடல் தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
    தம கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
    Replies
    1. அரசாளும் சக்தியென அன்பே இருந்தால்
      அதன்மேலும் வரமேதும் எமக்கு வேண்டாம்!

      இனிமை மிகு விருத்தப்பாவால் கருத்திட்டமைகண்டு
      உள்ளம் மகிழ்கின்றேன்!

      வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  13. தன்பாலைத் தந்தெங்கள் தாகம் போக்கும்...
    .
    என வாசித்துக் கொள்ளவும் சகோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் சகோ!

      Delete
  14. மிக மிக அருமையான கவிதை சகோதரி! என்னம்மா எழுதுகின்றீர்களப்பா....

    விமரிசனப் போட்டியில் நீங்களும் கலந்து கொள்ளலாமே சகோ! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் வந்து ரசித்து இத்தனை உரிமையாய்
      போட்டியில் கலந்துகொள்ளச் சொன்னமைக்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  15. வணக்கம்மா,
    நலம் தானே,,
    அன்பாலே என்றும் அகிலத்தை ஆக்கும்
    மனம்தான் வேண்டும் நமக்கு
    தங்கள் பா அருமைமா,,,,,, இன்னும் எழுதுங்கள் நிறைய,,,,,,
    வாழ்த்துக்கள், நன்றி

    ReplyDelete
    Replies
    1. நலம் நலமே சகோதரி! தாங்களும் நலமா?..

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

      Delete
  16. கவிதை தாளம் போட வைக்கிறது! அருமை !

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஐயா!..

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  17. //உளம் சோர்ந்து போவார்க்கு
    வளம்சேரும் வண்ணத்தில்
    அறிவாலே ஒளியேற்ற வேண்டும்! - நாளும்
    அன்பாலே அரசாள வேண்டும்//
    அன்பாலே எல்லோரையும் ஆட்கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சி. போட்டி,பொறாமை,சூது ஒன்னுமே இருக்காது. மனம் வைத்து செயல்படனும். மிக அருமையாக எழுதியிருக்கின்றீங்க இளமதி.
    தளத்தில் உங்க பாவலர் பட்டம் பெற்ற சான்றிதழ்,பதக்கம், நிகழ்வின் படங்களை இணைத்தமை உங்கள் தளத்திற்கு கூடுதல் அழகு.!!!!
    மேன்மேலும் உங்க திறமை வளரட்டும். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பிரியா!..

      எத்தனை அக்கறையாக இங்கு பார்க்கின்றீர்கள்..:)
      மிக்க மகிழ்ச்சி!

      அன்பே உலகை ஆளும் பெரிய சக்தி!
      அதற்காகவே வேண்டுவோம்!

      அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி பிரியா!

      Delete
  18. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  19. எண்ணங்கள் ஈடேற வேண்டும்!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  20. வணக்கம் சகோ.

    மனதில் எழுதுகின்ற ஓசையை மையமாக வைத்து கருத்துகள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் இது கவிதையாயிற்று என்பேன்.

    இலக்கணங்களைப் பார்த்து வடிவம் அமைத்தல் ஒருவகை என்றால் வடிவமைத்த பாடல்களுக்கான இலக்கணங்களை மீட்டெடுத்தல் இன்னொருவகை.

    அதற்கு மரபில்அசாத்திய தேர்ச்சியும் அறிவும் அவசியம்.

    நீங்கள் அதை நோக்கி நடையிடத் தொடங்கிவிட்டீர்கள் என்பதை இப்பாடலின் வா யிலாக அவதானிக்கிறேன்.

    உங்களுக்கும் உங்களின் ஆசிரியர்க்கும் என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      எல்லாம் உங்களைப் போன்றோரின், வளர்ச்சிக்கு உரமூட்டும்
      இத்தகைய வாழ்த்துக்களாலும் கருத்துக்களாலுமே சாத்தியம்!

      மெல்ல மெல்ல நடை போடுகிறேன் கவிதை வீதியிலே..:)

      தங்களின் அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி ஐயா!!

      Delete
  21. Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  22. கம்பன் விழாவில்
    (இளமதி )நீங்கள் பேசுகிற காணொளி
    இருக்கிறதா என்ன ?
    நன்றாகப் பேசுகிறீர்கள் என
    ஒருவர் பின்னூட்டமிட்டு இருக்கிறாரே
    இருந்தால் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் வரவு கண்டு உள்ளம் மகிழ்கின்றேன்!

      தங்களினதும் இன்னும் சில அன்புறவுகளின்
      வேண்டுகோளுக்காகவும் இதோ இங்கேயே யூ டியூப் பதிவாக இணைத்துள்ளேன்.
      தங்களின் மேலான கருத்தினையும் வேண்டுகிறேன்.
      நன்றி ஐயா!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.