Pages

Oct 9, 2015

விழாவோங்க வாழ்த்துங்கள்!..


வலைப்பதிவர் திருவிழா நெருங்குகின்றது!..
இன்னும் இரண்டே நாட்கள்தான்...!
நெஞ்சினில் இனிக்கும் கனவுகளுடன் புதுகையில்
பதிவர்கள் எல்லோரும் கண்டு குலாவி உண்டு நிகழ்வுகளில்
கலந்து மகிழவிருக்கும் இனிய தருணம் கிட்டப்போகிறது!

ஊனுறக்கம் மறந்து தன் வீட்டு மங்கல நிகழ்வாக அத்தனை
உறவுகளும் ஒன்றாக இணைந்து செயலாற்றியமைக்கு
நல்ல ஒரு விருந்தாக நிகழ்ச்சிகள் அரங்கேறப் போகிறது.
ஒவ்வொன்றையும் அகக்கண்ணில் கண்டு மகிழ்கின்றேன்!
வரமுடியாத நிலையாயினும் மனதார உங்களுடன் இவளும்
அங்கே கூடவே இருக்கின்றேன்!..

அன்பு உறவுகளே!..
நிகழ்ச்சிகள் நிறைவாக நிகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்!
இது எங்கள் விழா! இணைந்தே இருப்போம்!

வாழ்க தமிழ்! வளர்க வலைப் பதிவர்கள் பணி!

~~~~~~~~~~~~~


விழாவோங்க வாழ்த்துங்கள்!
~~~~~~~~~~~~
நிலங்கண்ட மழைபோல நிறையும் நெஞ்சம்!
    நிமிடங்கள் ஒவ்வொன்றும் மலராய்ப் பூக்கும்!
பலன்காணும் திருவிழாவை உயர்த்த வேண்டிப்
   பகலிரவாய்ப் உழைக்கின்றார்! தமிழைக் காக்கும்
தலமான புதுகைநகர்  தாங்கும் மாட்சி!
   தனியழகு கொண்டதென மின்னும் காட்சி!
நலமாக விழாவோங்க உங்கள் வாழ்த்தை
   நலியாமல் வழங்கிடுவீர் நன்றி! நன்றி!


கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

46 comments:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் இணைப்பிற்கும்
      மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  2. அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  3. அருமை அருமை
    கிளம்பத் தயாராகிவிட்டோம்
    விழா சிறக்க வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அங்கு போகாமல் விழா நடக்குமா ஐயா!..:)

      அன்பான வரவுடன் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. மிக மிக நன்று....

    என் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பு வரவும் வாழ்த்தும் உளநிறைவு சகோதரரே!

      மிக்க நன்றி!

      Delete
  5. விழா சிறப்புற அமைய என் வாழ்த்துக்கள்.
    விழாக் குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.

    இளமதியின் வாழ்த்துக் கவிதை, அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா!

      கண்டதும் பாராட்டுக் கேட்டதும் சொல்லமுடியாத
      சந்தோஷம் மிகுகின்றது!..:)

      அன்புடன் வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா!

      Delete
  6. வணக்கம் சகோ !

    விழா சிறக்க வாழ்த்துக்கள் அழகான விருத்தப் பாமாலை அருமை வலைப்பதிவர்களுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
    தம கூடுதல் உருவாக்கு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      இனிய வரவுடன் இட்ட வாழ்த்து மனம் நிறைக்கின்றது!
      மிக்க நன்றி சகோ!

      Delete
  7. அருமையான வாழ்த்து பா..!!
    விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிரியா!

      Delete
  8. அருமை நன்றி சகோ!
    வாழ்த்துக்கள்!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  9. அழகான வாழ்த்தோடு அருமையான கருத்தையும் சொன்னிங்க பாருங்க அது தான் எங்க தோழி.(இது எங்கள் விழா! இணைந்தே இருப்போம்!)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இது எங்கள் விழாவேதான்!..

      இணைந்திருந்து கொண்டாடுவோம்! வாழ்த்துவோம்!

      அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

      Delete
  10. அருமை அக்கா...
    விழா சிறக்க வாழ்த்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  11. பாமாலை அருமை கவிஞரே இதோ நான் புறப்பட்டு விட்டேன்
    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  12. Replies
    1. தங்களின் அன்பான வரவுக்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. அருமை! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      சகோதரி
      அரமையான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள்... விழா சிறக்க எனது வாழ்த்துக்கள்.
      த.ம 12

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    2. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோதரர் சுரேஷ்!

      Delete
    3. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோதரர் ரூபன்!

      Delete
  14. அழகான வாழ்த்துப்பாவால் வாழ்த்தியதோடு அனைவரையும் வாழ்த்தக்கோரும் அன்பு உங்களுக்கே உரித்தானது. இது நம்மில்லத் திருவிழாவன்றோ... .. பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கீதா!

      Delete
  15. நானும் வாழ்த்துகிறேன்;அதுதான் இயலும் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  16. மிக்க நன்றி மா

    ReplyDelete
  17. படத்தில் தெரிகிறது தங்களின் மகிழ்ச்சி நன்றி,நீங்களும் எங்களோடு
    இருந்தால் மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது..:(
      அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோதரி!

      Delete
  18. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ!

      Delete
  19. ஜெர்மனியிலிருந்து அழைப்பினைப் பெற்றோம். புதுக்கோட்டையில் அனைவரும் சந்திப்போம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா!
      அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி!

      Delete
  20. என் அன்புத் தோழியே !

    வாழ்த்துப் பா அருமைம்மா! எத்தனை பொருள் பொதிந்த அழகுப் பா. வாழ்த்தை வழங்கவும் வழங்கியும்.....ம்..ம்..ம் .தங்களால் மட்டும் தான் இப்படி சிந்திக்க முடியும் அருமை அருமை வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. அட என்ன இப்படிச் சொல்கிறீர்கள்.. நீங்களும் மிகத் திறமையானவரே!

      அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி!

      Delete
  21. வணக்கம்.

    விழா வாழ்த்து காணாமலும் விழாவிற்குப் போகாமலும் இருந்துவிட்டேன்.

    நிறைய இழந்தாலும் புத்தி தெளிவதாய் இல்லை.

    தங்களின் வாழ்த்து பதிவர் விழாவினைப்போன்றே இனிமை.

    தொடருங்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா!.. எனக்கும் பட்டறிந்தாலும் தெளிவில்லை..
      தெரிவதுமில்லை.. முட்டி முட்டி முயன்று
      ஓய்ந்து மீண்டும் மோதிப் பார்க்கிறேன்.

      நீங்கள் விழாவுக்குச் செல்லாதது எனக்கும் வருத்தமே!
      உங்களைப் பார்த்திட முடியவில்லையே!..:)

      தங்களின் அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  22. வாழ்த்துப்பா அருமை அருமை!!! அனைவரது உழைப்பையும் சொல்லி.....ஆஹா! என்னவென்று சொல்ல சகோ!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

      அன்பான வரவுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி!

      Delete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.