Pages

Nov 3, 2015

என்ன செய்தாயோ!..

என்ன செய்தாயோ என்னைநீ!
இப்படி மாற நானின்று!
என்ன செய்தாயோ என்னைநீ!
எக்கண மும்உன் நினைவே
என்னை ஆட்டிப் படைக்கவே!
என்ன செய்தாயோ என்னைநீ!


சின்ன அசைவிலுமென் சிந்தை நிறைகின்றாய்!
சிந்தும் மழைபோலென் உள்ளம் குளிர்கின்றாய்!
செல்லமுனைத் தீண்டவே சேரும் சுகம்கோடி
தென்றலாய்த் தழுவு..நீ! தீருமென் ஏக்கங்கள்!

என்ன செய்தாயோ என்னைநீ!..

கண்களை மூடினாலும் கனவிலும் வருகின்றாய்!
காலமும் கைசேர்ந்து கலந்து மகிழ்கின்றாய்!
கற்பனைச் சிறகடித்துக் காற்றிலே பறக்கின்றேன்!
கண்ணே விலகாதே என்றுனைக் கேட்கின்றேன்!

என்ன செய்தாயோ என்னைநீ..

முக்கனி என்றுனை முழுவதும் சுவைக்கிறேன்!
முத்தமிட்டு அணைத்தே மூழ்கித் திளைக்கின்றேன்!
முல்லையே உன்வாசம் மோகம் பெருக்குதடி!
முத்தமிழே! சொத்துசுகம் மூச்சும்நீயே எனக்கு!

என்ன செய்தாயோ என்னைநீ!
இப்படி மாற நானின்று!
என்ன செய்தாயோ?.. இன்தமிழே!
என்ன செய்தாயோ?.. செந்தமிழே!
என்ன செய்தாயோ என்னைநீ!
தமிழே!... என்தாய்த் தமிழே!..

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

60 comments:

  1. தமிழ் மீது கொண்ட அன்பு இனிமையாய்ப் பொங்குகிறது உங்கள் வரிகளில்..அருமை தோழி
    த.ம.+1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அன்புத் தோழியே!

      தமிழ்மீது காதல் தருதே மகிழ்வே!
      அமிழ்தம் அதுவொன்றே ஆம்!

      தமிழ்மீது கொள்ளும் அன்பு தாய்மீது கொள்ளும்
      அன்பிற்கு இணையன்றோ!..
      இசைப் பாடலாக முயன்றேன் இதனை!
      உங்கள் உடன் வரவும் ரசனையும் கண்டு
      மிக்க மகிழ்ச்சி தோழி! நன்றி!


      Delete
    2. தமிழ் மீதான உங்க காதல் சிலிர்க்க வைக்கு பாவலரே! ரசித்தேன்.

      Delete
    3. உங்கள் அன்பான வரவும் இனிய ரசனையும்
      என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.

      உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  2. அருமை. படிக்கும்போது எளிமையாய்த்தான் இருக்கிறது. எழுத நினைக்கும்போதுதான் வர மாட்டேன் என்கிறது!

    :)))
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆகா..:) அப்படியா சகோ!
      படிப்பது சுலபமாயின் நயமான சொற்கோர்வை கொண்டு
      கொஞ்சம் ரசனையுடன் முயன்று பாருங்கள்!
      கவிதை வசமாகும் உங்களுக்கும்!

      ஸ்ரீராம் என்ற கவிஞரை விரைவில் நான் காணவழி செய்யுங்கள்!..:)

      அன்பான வரவுடன் உங்கள் இனிய ரசனை எனக்கு
      மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது!
      மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  3. Replies
    1. அன்பான வரவுடன் இனிய ரசனை கண்டு
      மிக்க மகிழ்ச்சி ஐயா!

      உளமார்ந்த நன்றி!

      Delete
  4. எழுதியவரின் தாக்கத்தை படிக்கும்போது உணரமுடிகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தின் தாகம் தாக்கமாய் எங்கும் எதிலும்
      பிரதிபலிக்கின்றது ஐயா!

      தங்களின் ரசனைமிக்க கருத்தினைக் கண்டு மகிழ்கின்றேன்.
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  5. o!!!*
    முக்கனி என்றுனை முழுவதும் சுவைக்கிறேன்!
    முத்தமிட்டு அணைத்தே மூழ்கித் திளைக்கின்றேன்!
    முல்லையே உன்வாசம் மோகம் பெருக்குதடி!
    முத்தமிழே! சொத்துசுகம் மூச்சும்நீயே எனக்கு!*
    இதை படிக்கும் வரை என்ன காதல் ரசம் சொட்டும் பாடல் என்றே நினைத்தேன் தோழி! தமிழ் மேல் காதல்! அருமையோ அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. வாங்கோ மைதிலி!..

      உங்கள் ரசனை என்னை இந்தவகைக் கவிதையும் பாட வைத்திடுமோ..:)
      அதெல்லாம் பாட என்னால் ஆகாதம்மா!..

      தமிழ்க் காதல் தமிழ்மேல் காதல் மூச்சு நிற்கும்வரை
      இருக்கும் அன்றோ!
      அன்பான வரவுடன் இனிய ரசனைமிக்க கருத்தூட்டம் கண்டு
      மிக்க மகிழ்ச்சி தோழி! உளமார்ந்த நன்றி!

      Delete
  6. அப்படி அது செய்தது
    எங்களுக்குத் தான் அதிகப்
    பயன் தந்து போகுது
    அது தொடர்ந்து அப்படியே செய்து போகட்டும்
    நாங்கள் அனுபவித்து மகிழ்கிறோம்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வனக்கம் ஐயா!

      ஆகா.. தங்கள் ரசனையும் அற்புதமே!
      உள்ளம் நிறைந்தேன் அருமையான கருத்துப் பகிர்வினால்!
      உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  7. //என்ன செய்தாயோ என்னைநீ!
    இப்படி மாற நானின்று!
    என்ன செய்தாயோ?.. இன்தமிழே!
    என்ன செய்தாயோ?.. செந்தமிழே!
    என்ன செய்தாயோ என்னைநீ!
    தமிழே!... என்தாய்த் தமிழே!..//

    அருமையான கவிதை. கடைசி வரிகள் கிளாஸ்..!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      நீங்கள் ஊன்றிக் கவனித்து ரசித்துக் கருதிட்டமை
      என்னை மேலும் எழுததூண்டுகிறது.
      மிகுந்த மகிழ்வுடன் உளமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  8. என்ன செய்தாயோ?.. செந்தமிழே!
    என்ன செய்தாயோ என்னைநீ!..

    அருமையான வரிகள்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      அன்போடு வருகைபுரிந்து ரசித்து வாழ்த்தியமைக்கு
      உளம் நிறைந்த நன்றி ஐயா!

      Delete
  9. Replies
    1. வாருங்கள் சகோதரரே!

      நன்றுக்கு என் நன்றி!..:)

      Delete
  10. தமிழ் மேல் கொண்ட தீராக்காதல் உங்களுக்கு. அதனாலே அழகாக வரிகளை மாலையாய் தொடுத்திருக்கிறீங்க.
    தென்றலாய் தழுவி என்னை தாலாட்டியது உங்கள் கவிதை. அருமையா,எளிமையா எழுதியிருக்கின்றீங்க இளமதி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்படித்தீரும் இந்தக் காதல்!..

      சுட்டெரித்துச் சாம்பலாக்கும் வரைக்கும்
      ஒட்டியுள்ள உணர்வன்றோ தமிழ்மேற் காதல்!
      கைதட்டியெனை ஊக்குவிக்கும்
      பட்டுரோசா பிரியசகியின் அன்பும் வாழ்த்தும்
      கட்டிவெல்ல இனிப்பாகுமே!
      இட்டமுடன் இங்கே உமக்கும்
      இணைத்தேன் என் நன்றியே!

      Delete
    2. please listen to your song here:
      www.youtube.com/watch?v=mH0CnHLVTiM&feature=youtu.be
      actually, I sang this so beautiful song in three ragas right from yesterday, first in mohanam, then in Abhogi, now in bhimplas.
      subbu thatha.
      www.subbuthathacomments.blogspot.com

      Delete
    3. www.youtube.com/watch?v=mH0CnHLVTiM&feature=youtu.be

      actually i sang this so beautiful song in three raagas mohanam, abhogi, then bhimplas.

      sorry for the delay.

      please , please let your fans and family and why, the whole tamil world listen to this song. so beautiful you know.

      this is also published in my blog
      www.subbuthathacomments.blogspot.com

      Delete
    4. ஐயா.. தங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் மேம்படுத்த உதவுகிறது.
      3 ராகங்கள் என்பதனை நானும் உணர்ந்தேன். அற்புதமாக இருக்கின்றன அனைத்தும்.
      இங்கு வரும் வலையுறவுகள் கட்டாயம் கேட்பார்கள்!

      தாமதம் இதிலொன்றும் இல்லை ஐயா!
      மீண்டும் மீண்டும் என் நன்றிகள் உங்களுக்கு!

      Delete
  11. காதல் ரசம் மிக்க கவிதை என்று வாசித்து வருவையில் இறுதியில் தெரிந்ததே தங்களின் தமிழ் காதல்!!!அருமை அருமை.....சகோ

    ReplyDelete
    Replies
    1. www.youtube.com/watch?v=mH0CnHLVTiM&feature=youtu.be

      madam,
      earlier i attempted to sing this in mohanam and abhogi too. but i am not able to sing beyond the melsura nee . the next ga i am not able to go, because of my ageing voice.

      i preferred to sing in bhimplas. you agree ?

      i should thankful if you respond.

      subbu thatha.

      Delete
    2. ஆமாம் சகோதரர் துளசி அவர்களே!..
      தமிழைக் காதலிப்பதால் இதுவும் காதல் பாட்டுத்தான்!

      அன்பான வரவுடன் இனிய ரசனைக்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  12. தமிழின் இனிமை தந்திடக் கவிதை
    அமுதென உண்டேன்! அருமை இளமதி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      தமிழினிமைக்கு உண்டோ நிகர்!
      தங்கள் ரசனையும் வாழ்த்துமே எனக்கு அமிர்தம்!
      மிக்க நன்றி ஐயா!

      Delete
  13. முதலில் ஒரு குழந்தைதான் மனசில் வந்தது, பின்தான் அது தமிழாய் மாறியது தெரிந்தது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!
      ஆகா.. தங்கள் ரசனை இப்படி இருக்கிறதே! அதுவும் சிறப்புத்தான்!

      வரவிற்கும் இனிய ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  14. தமிழை சிறப்பிக்கும் கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வரவுடன் இனிய வாழ்த்தும் இட்டீர்கள் சகோ!
      உளமார்ந்த நன்றி!

      Delete
  15. உங்கள் பாடலை வாசித்தாலே மனம் தமிழின்பால் மையல் கொண்டுவிடுகிறது.. நெஞ்சம் நிறைந்து நெகிழ்கிறது. பாராட்டுகள் இளமதி.

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. வாருங்கள் கீதா!
      தாங்கள் தரும் தமிழிலக்கியப் பாடல்களும் பொருளும்
      தேனாமிர்தமன்றோ எனக்கு!..

      ரசித்துப் பாராட்டி நிறைத்தீர்கள் அன்பால் என்நெஞ்சை!
      உளமார்ந்த நன்றி கீதா!

      Delete
  16. இனிய பாடல்.

    எங்கே எங்கள் சுப்புத்தாத்தா?

    இனியமையும் சுவையும் அருமை.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. www.youtube.com/watch?v=mH0CnHLVTiM&feature=youtu.be

      subbu thatha

      Delete
    2. வணக்கம் சுப்பு ஐயா!

      உள்ளம் உருக உருகப் பாடினீர்கள் ஐயா!
      என்னை நானே இப்பாடல் என்னுடையதுதானா
      என்று வியந்து கேட்க வைக்கும் வகையில் அதி அற்புதமாகப் பாடித் தந்துள்ளீர்கள் ஐயா!

      எப்படி என் நன்றியினைக் கூறுவேன்?..
      மெய்சிலிர்த்துப் போனேன் மென்மையான குரலில்
      நீங்கள் மிக மிருதுவாகப் பாடிய விதம் கண்டு!

      அங்கு வந்து உங்களுக்குப் பதிவிணைப்புத் தந்துவிட்டுக் காத்திருந்தேன். பாடலுடன் வந்து என் விருப்பினைப் பூர்த்தி செய்தமைக்குக் கோடானு கோடி நன்றி ஐயா!

      நீடு நலமுடன் வாழ வேண்டுகிறேன்!
      விரைவினில் பாடற்பதிவுப் பெட்டகத்திற் சேர்த்துவிடுகின்றேன். மிக்க மிக்க நன்றி ஐயா!

      Delete
    3. வணக்கம் விஜு ஐயா!

      நான் போய்க் கூப்பிட்டும் வருகையில் தாமதமான சுப்பு ஐயா உங்களின் ஒரு வார்த்தை கேட்டவுடன் பாட்டுடன்
      ஓடோடி வந்துவிட்டார்!..:)
      தாத்தாவை வரவைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

      இசைப்பாடலாய் எனது சிறு முயற்சி இது ஐயா!
      நன்றாக உள்ளதென்று உங்கள் வாயாற் கேட்பதும் பெருமகிழ்வே! உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  17. எனென்னமோ செய்து திக்குமுகாட செய்கிறீர்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. அட.. அப்படியா சகோதரரே!

      தாங்களும்தான் அங்கு அப்படி எழுதுகிறீர்கள்!
      மிகவும் ரசித்தேன்!
      அன்பான வரவுடன் இனிய ரசனை கண்டு மகிழ்கின்றேன்!
      மிக்க நன்றி சகோ!

      Delete
  18. அன்புள்ள சகோதரி,

    தமிழ்த்தாய் தவமிருந்தாளோ இந்தச் சேயைப் பெற்றெடுக்க...!

    தமிழச்சியின் தமிழ்க் காதல் அருமை.

    த.ம. 14

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!

      தமிழர் என்றாலே எங்களின் தன்மை தனித்தன்மையன்றோ!
      காதலும் அவ்வாறே!
      தமித்தாயை என் தாயாகக் கிடைத்த நான் பாக்கியசாலியே!

      அன்பான வரவுடன் இணைத்த இனிய கருத்துப் பகிர்வுகண்டு
      உள்ளம் மகிழ்வில் துள்ளுகிறது ஐயா!

      மிக்க நன்றி!

      Delete
  19. உங்கள் தமிழ்காதலியை நானும் சைட் அடித்தேன் ,தப்பில்லையே :)

    ReplyDelete
    Replies
    1. ஆகா.. //உங்கள் தமிழ்க்காதலியை//.. யா..
      ம்.. பரவாயில்லை நீங்களும் வேறில்லை சைட் அடியுங்கள்!..:)

      அன்பான வரவுடன் இனிய கருத்துப் பகிர்வும் இட்டமைக்கு
      மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  20. முடிவின் வரிகள் மிகவும் இனித்தது கவிஞரே நன்று
    தமிழ் மணம் 16

    ReplyDelete
    Replies
    1. கரும்பின் அடிதான் இனிக்கும் என்பார்களே..
      இதுவும் அப்படியோ?..:)

      தங்களின் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
      உளமார்ந்த நன்றி சகோ!

      Delete
  21. அருமை... அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆ... அருமை.. இது அருமை!
      அதிரா வரவும் அருமை!
      அன்பாற் கிடைத்ததிப் பெருமை!..:)

      வாங்கோ அதிரா!.. வரவிற் சொக்கிப்போய் நின்றுவிட்டேன்!
      இனிய வரவிற்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி அதிரா!

      Delete

  22. வணக்கம்!

    என்ன எனைச்செய்தாய் என்னும் இசைப்பாட்டுப்
    பொன்னை நிகர்த்த பொலிவென்பேன்! - அன்னை
    அருளென்பேன்! இன்ப அமுதென்பேன்! வாழ்வின்
    கருவென்பேன் நன்றே கணித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      வாழ்வில் இனிக்க வழங்கும் தமிழமுதம்
      ஏழ்பிறப்பும் என்றென்றும் எட்டுமே! - சூழ்ந்திடும்
      உங்களாசி என்னை உயர்த்திடல் போதுமே!
      தங்கிடுமே பேருவகை தான்!

      அன்பான வரவுடன் இட்ட இனிய வெண்பா வாழ்த்து
      என்னை இன்னும் ஊக்குவிக்கின்றது ஐயா!

      உளமார்ந்த நன்றி!

      Delete
  23. மயக்கும் தமிழாயிற்றே!
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா!
      மயக்கும் தமிழாகிலும் மயங்கிடாமல் வந்து மகிழ்ந்தமை
      எனக்கும் தருவது பெருமையே!

      தங்கள் அன்பிற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
  24. Replies
    1. மிக்க நன்றி சகோ!

      Delete
  25. அருமையான கவிதை. பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  26. என்ன செய்தாயோ?.. செந்தமிழே!
    என்ன செய்தாயோ என்னைநீ!..

    தங்களின் அருமையான, பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..
    தொடரட்டும் .....
    Joshva

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.