Pages

Dec 31, 2015

வந்ததே புதிய ஆண்டு!..

அன்பு உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
~~~~~~~

வந்ததே  புதிய ஆண்டு!

வந்ததே  புதிய ஆண்டு!
  வளம்பெறத் தினமும் வேண்டு!
செந்தமிழ்ச் சிறப்பைப் பாடு!
  சீர்பெறும் வாழ்வாம் கூடு!
சொந்தமே உலகோர் என்று
  சூழ்ந்தவர் அன்பைப் போற்று!
தந்திடுன் கரங்கள் சேர்த்துத்
  தழைத்திடப் பணிகள் ஆற்று!

எண்ணமும் செயலும் தூய்மை!
  என்றிட எங்கும் நன்மை!
கண்ணிலே கருணை! வாய்மை!
  கடவுளும் இருப்பான் அண்மை!
மண்ணிலே கொள்வாய் காதல்!
  மாண்புகள் பெருகும் உண்மை!
திண்ணமாய்க் கடமை செய்யச்
  சேருமே வாழ்வில் மேன்மை!

செந்தமிழ் மொழியை என்றும்
  செல்வமாய்ப் போற்றி வாழு!
விந்தையே என்று சொல்லி
  வியந்திடும் வண்ணம் சாற்று!
வந்தனை செய்தே வாழ்வின்
  வசந்தமாய் எண்ணிச் சேர்த்துத்
தந்தைதாய் நிகராம் எங்கள்
  தமிழ்மொழி வாழ வாழ்த்து!

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

50 comments:

  1. கவிதை அருமை சகோ
    இனிய 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      அன்போடுடன் வந்து அகம் நிறைய வாழ்த்தினீர்கள்!
      மிக்க நன்றி!

      உங்களுக்கும் என் உளம் நிறைந்த
      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே!

      Delete
  2. வணக்கம்
    கவிதை மிக அருமை..இரசித்தேன்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ரூபன்!

      அன்பான வருகையுடன் ரசித்து இட்ட வாழ்த்துக்கண்டு
      உள்ளம் நிறைகின்றேன்! மிக்க நன்றி!

      உங்களுக்கும் இனித்திடட்டும் இணைகின்ற
      இப்புத்தாண்டு! நல் வாழ்த்துக்கள்!

      Delete
  3. வாங்கம்மா தோழி நலம் தானே!
    மீண்டும் காண மகிழ்வு!
    தங்கள் இனிய வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவை நல்குகின்றது.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...! உரித்தாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்புத் தோழி இனியா!

      நலம்! நாடலுக்கு மிக்க நன்றி! நீங்களும் நலம் தானே!.

      வாழ்த்துக் கண்டு உள்ளம் பூரித்தேன்!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  4. கவிதை அருமை அக்கா...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      உங்களின் வாழ்த்துக் கண்டு மகிழ்வுற்றேன்!
      மிக்க நன்றி!
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  5. புத்தாண்டுக் கவிதை அருமை சகோதரி! ரசித்தோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலன்களையும் அருளிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இந்த வருடமும் இனி தொடரும் வருடங்களும் தங்களுக்கு இனிய வாழ்வைத் தந்திடவும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்களின் வரவும் இனிய வாழ்த்தும் மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது!மகிழ்வுடன் என் நன்றி!

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  6. வணக்கம் சகோ !

    அருமையான வாழ்த்து !



    வளர்பிறை வண்ணம் போலே
    ........வாழ்மனை சிறக்க! மக்கள்
    இளமையின் பூரிப் பாக
    .......எழிலுற நெஞ்சம் எல்லாம்
    அளவிலாச் செல்வம் சேர்த்தும்
    .......அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
    வளமுடன் வாழ்க வென்று
    .......வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நெஞ்சம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!

      வண்ணமய வாழ்வும் வசந்தம் வருடிடவும்
      எண்ணமதில் கொள்வோம் இறை!

      அழகான விருத்தத்தில் உளம் நிறைக்க
      வாழ்த்துத் தந்தீர்! மிக்க நன்றி!

      உங்களுக்கும் என் அன்பான
      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ!

      Delete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு!

      வாழ்த்திற்கு நன்றியுடன்
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

    புலர்ந்த இவ்வாண்டில் முதற் கவிதையாகத் தங்கள் கவிதையைப் படித்தேன்.

    சுவைத்தேன்.

    மிகவும் அருமை.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      வாழ்த்திற்கு மிக்க நன்றியுடன்
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      ஐயா!.. இவ்வாண்டுத் தொடக்கத்தில் தாங்கள் படிக்கும் முதற்கவிதை அடியேனுடையதா?...
      ஆனந்தத்தில் நெக்குருகிப் போனேன் நான்!..

      என்ன தவம் செய்தனை இளமதியே
      இப்படியோர் வாழ்த்துரை கேட்க
      என்ன தவம் செய்தனை.... எனப் பாடத்
      தோன்றுகிறது ஐயா!

      உளமார்ந்த என் நன்றிகள் பல!

      Delete
  9. Replies
    1. வாங்க அதிரா!

      வாழ்த்திற்கு மிக்க நன்றி!
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  10. வணக்கம்!

    புத்தாண்டைப் போற்றிப் புகழ்ந்த விருத்தங்கள்
    சத்தாக வாழ்வைச் சமைத்தனவே! - எத்திசையும்
    இன்பம் நிலைக்கட்டும்! இவ்வுலகே நட்பேந்தி
    அன்பில் திளைக்கட்டும் ஆழ்ந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      புத்தாண்டு பூத்த பொலிவோடு இன்தமிழை
      முத்தாகக் காப்பேன் முனைந்து!

      தங்களின் அன்பான வரவோடு தந்த வாழ்த்து வெண்பாவிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete

  11. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்

    இனித்திடும் வண்ணம் இளமதியே உன்னுள்
    கனிந்திடும் கன்னல் கவி!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா!..

      கன்னல் கவிஞருன் வாழ்த்தொடு போதனையும்
      என்னை வளர்க்கும் இணைந்து!

      Delete

  12. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    எங்கும் இனிமை இசைந்தாடக் கற்றோங்கிப்
    பொங்கும் புலமை பொலிந்தாட! - தங்குநலம்
    பூத்துக் கமழ்ந்தாடப் புண்ணியனே! புத்தாண்டைக்
    காத்துப் படைப்பாய் கணித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் புத்தாண்டு வாழ்த்து வெண்பாவிற்கும் நன்றியுடன்
      தங்களுக்கும் என் அன்பா வாழ்த்துக்கள் ஐயா!

      Delete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      உங்களின் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியுடன், எனதன்பு வாழ்த்துக்களையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்!

      Delete
  14. அருமை. வாழ்த்துகளுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      மிக்க மிக்க நன்றி சகோ!

      Delete
  15. கவிதையுடன் கூடிய புத்தாண்டு. அருமை. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      அன்பான வரவுடன் வாழ்த்திற்கு நன்றி ஐயா!
      அங்கு வந்து தங்கள் பதிவிற்குக் கருத்திட்டேன்!
      அருமையான தேடலுடன் உங்கள் பணியின் சிறப்புக்கூற
      வார்த்தை என்னிடம் இல்லை!
      மிக அருமை! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

      Delete
  16. சகோதரிக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!
      தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

      Delete
  17. புத்தாண்டுச் சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா.. தங்கள் மீள்வருகையுடன் கவிதை ரசனையும் வாழ்த்தும் கண்டு மிகவும் பெருமைப்படுகின்றேன்!
      மிக்க மிக்க நன்றி ஐயா!

      Delete
  18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
      தங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள் ஐயா!

      Delete
  19. இனிய நாளில் இனிய கவிதை.
    புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அன்புள்ள சகோதரி,

    புத்தாண்டுக் கவிதை புதுமையாய்ப் பூத்தது கண்டு மகிழ்ச்சி.

    வித்தாகி ஈழம் காண தமிழ்மண்ணாகட்டும் தங்கள் கவிதை

    சித்தம் குளிரப் புத்தாண்டில் இனிமை பூத்துக் குழுங்கட்டும்...!

    நன்றி.

    த.ம.13

    ReplyDelete
  21. அழகான ஒரு செந்தமிழ் கவிதையுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், சகோதரி!

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! நலமா சகோதரி!

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

    ReplyDelete
  24. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. வாழ்க நலமுடன்..
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. புத்தாண்டு வாழ்த்துக்கள்சகோதரியாரே

    ReplyDelete
  28. அருமையான கவிதையுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கும்
    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இளமதி..!!

    ReplyDelete
  29. வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. புத்தாண்டில்,முதல் தமிழ் மண மகுடம் சூடியிருக்கும்... உங்களின் கவிதை வாழ்த்துக்கு நன்றி :)

    ReplyDelete
  31. அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. இனிய 2016 புத்தாண்டு வாழ்த்துகள்
    (வேதாவின் வலை)

    ReplyDelete

உங்களின் ஊக்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி! _()_

Note: Only a member of this blog may post a comment.