Pages

Dec 13, 2012

அன்பு மொழி...


இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஒரு தம்பதியினரின் திருமண நாளுக்காக, அவர்களுக்கு அவர்களின் நிழற்படத்தினையே இதில் இணைத்து வாழ்த்து மடல் க்விலிங் கைவேலைப்பாட்டுடன் செய்திருந்தேன். 
அவர்களின் படத்தினை இங்கு சேர்த்துத்தர அனுமதி இல்லாதமையால் ஒரு கார்ட்டூன் படத்தை இதில் இணைத்துத் தந்துள்ளேன்.....:)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌன மொழி
*******
கண்கள் நான்கும் பேசும் போது, 
காதல் மொழி மௌனமொழி.... 
பெண்கள் நாணம் கொள்ளும் தருணம், 
பிறக்கும் மொழி மௌனமொழி.... 

கரையெங்கும் அலை ஓய்ந்த பின், 
அவை உரைக்கும் மொழி மௌனமொழி.... 
மழலை பேசும் அமுத மொழி, 
அமைதி எனும் மௌனமொழி.... 

தூக்கம் இமையைத் தழுவும் நேரம், 
கனவுகளின் மொழி மௌனமொழி.... 
நோக்கம் எதுவும் இல்லா நேரம், 
நாம் பேசும் மொழி மௌனமொழி.... 

மழை அடித்து ஓய்ந்த பின், 
மண்வாசனை ஒரு மௌன மொழி.... 
சிலை வடிவாய் வடித்த போதும், 
அது பேசும் மொழி மௌனமொழி.... 

அமைதி தேடும் மனங்கள் நாடும்,
உண்மை மொழி மௌன மொழி...
அருளாளன் சொன்னமொழி
அகிலம் காக்கும் அன்பு மொழி ..... 
(நான் ரசித்த கவிதை...)
------------------------------------------------------------------------------

என்னைக் கவர்ந்தது: கவிதை, நடிகர்கள், நடிப்பு, இசை, காட்சி அமைப்பு அத்தனையும் எனக்கு ரொம்பவே பிடித்த அருமையான பாடல்....... =============

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

28 comments:

 1. அழகான க்ரீட்டிங் கார்ட் இளமதி! உங்கள் நண்பர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! (அஃப்கோர்ஸ், அடுத்த வருஷத்துக்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கள்தான்! ;))

  அன்புமொழி கவிதை அருமையாய் இருக்கிறது. பாடலும் நல்லா இருக்கு.

  நன்றி கூகுளாரே///// :)))))))) அவருக்குத் தமிழும் படிக்கத் தெரியுதோ இப்போ?! ஆனாலும் ரொம்பப் பொறுப்பா நன்றி நவிலறீங்க! வெறி குட்! ;):)

  நல்ல வரிகள், நல்ல படம், மொத்தத்தில் நல்ல்ல்ல்ல்ல்ல்லதொரு பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி...
   ஸ்..ஸப்பா அடுத்த வருஷத்து திருமண நாளுக்கு நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துச் சொன்ன ஒரே முதலாவது ஆள் நீங்கதான்...:))) நானும் அட்வான்ஸ்ஸாக அவிங்க சார்பிலேயும் உங்களுக்கு நன்றிகளை இப்பவே சொல்லிடறேன்..சரிதானே..:)

   கார்ட் மற்றும் எல்லாமுமே நல்லா இருக்கோ... மிக்க சந்தோஷம்..

   உங்கள் வரவிற்கும் அன்பான கருத்துக்கும் மிக்க்க்க்க்க்க்க்க நன்றி மகி....;)))

   Delete
 2. ங்கொக்க மக்கா!! மீ த ஃபர்ஸ்ட்டூஊஊஊ! :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஆமா...நீங்க தான் ஃபர்ஸ்ட்டூஊஊ......

   மகீஈஈஈ.....இது ரகசியம்...உங்களுக்காகவே மத்தவங்க தூங்கினாப்பிறகு பதிவைப் போட்டேன்...:) அவிங்களுக்கு தெரிஞ்சிடாம படிச்சவுடனே இதை அழிச்சிடுங்கோ..இதை...சரியா..:))).

   மகி..முதலாவது வரவிற்கு ஸ்பெஷல் தாங்ஸ்ஸு....;)

   Delete
 3. ஆஹா..அழகான க்வில்லிங்..பர்த்துக்கொண்டே இருக்கதூண்டுகிறது.நீங்கள் ரசித்து எழுதிய கவைதையைந் நானும் ரசித்து வாசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...வாங்கோ ஸாதிகா அக்கா.

   க்விலிங் அவ்வளவு நல்லாவா இருக்கு...

   இந்தக் கவிதை எப்பவோ நான் வாசித்ததில் மனதில் பதிந்த கவிதை. இப்போ இங்கு பொருத்தமாக இருக்கும் என்று சேர்த்தேன். உங்களுக்கும் ரசிக்கும்படியாக அமைந்தது சந்தோஷமே.

   அன்பான வரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

   Delete
 4. அஆஹா அழகான க்விலிங் ..நானும் கவிதையை ரசித்தேன் எல்லாம் அருமை ..தொடர்ந்து கலக்குங்க .

  ReplyDelete
  Replies
  1. ஆ..ஆ அஞ்சூ..என்ன..சட் பட் எண்டு சொல்லீட்டு ஓடுறீங்க போல இருக்கு...:)
   கிறிஸ்மஸ் நேரம் ரொம்ம்ம்ப பிஸின்னு தெரிகிறது..
   நேரமில்லாத இந்த வேளையிலும் வந்து பார்த்திருக்கிறீங்க..சந்தோஷம்...:)

   அன்பான உங்க வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அஞ்சு...:)

   Delete
 5. மிக அழகான வரிகள்.எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் முதலில் சொல்கிறேன். க்விலிங் அழகாக இருக்கிறது.மொழிபடப்பாடல், கவிதை
  மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு...நீங்களும் ரொம்ப பிஸியாகீட்டீங்க...;)))
   மிக அழகான வரிகள் எண்டு நீங்க சொல்லுறது வாழும் வரை வாழ்க்கை....அதைத்தானே.. எனக்கும்தான்...

   அதுக்கு ஏற்றாப்போல பூஸும் கிளியும் நட்பா இருக்கிற படம் கிடைச்சதும் அப்படியே அதில வரிகளைச் சேர்த்திட்டேன்...:)

   ஏனையவையும் உங்களுக்கும் நல்லா இருந்துச்சா.. சரி..சந்தோஷம்..

   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மு....:)))

   Delete
 6. அவ்வ்வ்வ்வ் சூப்பர் கார்ட்.... வெல்டன்... குட் ஜொப்... யங்மூன்ன்... பின்பு வாறேன் மிகுதிக்கு.....

  ReplyDelete
  Replies
  1. அதிரா...வாங்கோ..நன்றி நன்றி...:)

   அவசரம் ஒண்டுமில்லை...ஆறுதலா வாங்கோ...;)))

   Delete
  2. உப்பூடிச் சொன்னா, நான் பிறகு அடுத்த வருஷம்தான் வருவன் சொல்லிட்டன்:))

   Delete
 7. அமைதி தேடும் மனங்கள் நாடும்,
  உண்மை மொழி மௌன மொழி...
  அருளாளன் சொன்னமொழி
  அகிலம் காக்கும் அன்பு மொழி .

  அழகு மொழி !! ரசித்த கவிதை அருமை .. வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி... அன்பு மொழி.. அழகு மொழி..நீங்கள் ரசித்த வழி... என் நன்றி மொழி...:)

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 8. //அருளாளன் சொன்னமொழி
  அகிலம் காக்கும் அன்பு மொழி ..... //

  பூஸானந்தா சொன்ன மொழி..
  உலகம் போற்றும் தத்துவ மொழி:))).. அவ்வ்வ்வ் ஆரது முறப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

  ReplyDelete
  Replies
  1. ஆகா...இதுவும் பூஸானந்தா மொழியோ....:)

   Delete
 9. அழகான தத்துவம்.. கவிதை...

  வாழும்வரை போராடு எனச் சொல்லிப்போட்டு ஏன் பூஸும் கிளியும் நித்திரை கொள்ளீனம்?:)) உவை எப்போ போராடி எப்போ வென்று....??:)))..

  ReplyDelete
  Replies
  1. பூஸ் கிடைக்கிற இடத்தில சொகுஸா நித்திரைதானே கொள்ளும்...;)
   போராடச் சொன்னது அவைக்கில்லை....:)

   புரிஞ்சாச்சரி....:)))

   Delete
 10. //குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)//

  ஹையோ முருகா.. நான் என்பக்கத்து தலையங்கத்தை கிளிக் பண்ணிப் பண்ணியே களைச்சுட்டேன்:)).. எந்தத் தலையங்கம் எனச் சொன்னால்தானே புரியும் எனக்கு:))

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும்.... எண்டா பக்கத்து வலைப்பூ தலையங்கத்தை எண்டு ஆர் சொன்னது....:)))

   எனக்கும் இதை எப்பூடி சரிப்பண்ணுறதெண்டு தெரியேலை...ஆராகிலும் இங்கின வாறவை ஐடியா தந்தா நல்லம்..பார்ப்போம்....:)

   Delete
 11. சரி பூஸ் ரேடியோ ஓஃப் ஆகப்போகும் நேரம் வந்திட்டுது:))

  மொத்தத்தில பதிவு அருமை.. சூப்பர்ர்... உங்களிடம் இருப்பவற்றை எல்லாம்.. கடகடவெனப் போடுங்கோ.... புது வருடம் பிறக்க முன்..பின்பு புது வருடத்தில புதுஷாச் செய்து போடலாம்ம்...

  ReplyDelete
  Replies
  1. //மொத்தத்தில பதிவு அருமை//
   என்ன...பதிவு மொத்தத்தில தான் அருமையோ...அப்ப பதிவு தப்பித்தவறி மெலிஞ்சுதெண்டா...அவ்வ்வ்வ்...:)

   எல்லாத்தையும் கடகடவென போட்டா ஆர் பார்க்கிறது. சலிச்சுப்போயிடுமெல்லோ...;)

   இப்பவே வாசலிலை வந்துட்டு ஓடீனம்...:)))
   எல்லாரும் வருஷமுடிவு கிறிஸ்மஸ் எண்டு பிஸி அதைச்சொன்னன்...;)

   நீங்களும் பிஸியான நேரத்திலும் வந்து கலகலப்பா கருத்துச்சொல்லி ரசிச்சு வாழ்த்தினதுக்கு ரொம்ப நன்றி..:)

   Delete
 12. அன்புள்ள இளமதி,

  நான் இந்தப்பதிவினை கவனிக்கவே இல்லை. அப்போ இதுதான் மூன்றாம் பிறை போன்ற மூன்றாவது பதிவா? நான் மியாவ் தான் மூன்றோ என நினைத்து தப்பாக் கருத்துக்கூறி விட்டேன்.

  இதற்குத்தான் புதிய பதிவு ஏதும் வெளியிட்டா மெயில் மூலம் தகவல் கொடுக்கணும்னு சொல்றேன். நீங்களும் உங்க மியாவும் கேட்டாத்தானே!
  OK அதனால் பரவாயில்லை.

  இந்தப்பதிவிலும் எல்லாமே அழகோ அழகாகத்தான் இருக்கிறது.

  //(நான் ரசித்த கவிதை...)//

  அடடா “மெளனமொழி” நீங்களே எழுதினதோ என அசந்து போனேன்.

  >>>>>>>

  ReplyDelete
 13. //இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஒரு தம்பதியினரின் திருமண நாளுக்காக, அவர்களுக்கு அவர்களின் நிழற்படத்தினையே இதில் இணைத்து வாழ்த்து மடல் க்விலிங் கைவேலைப்பாட்டுடன் செய்திருந்தேன். //

  சூப்பரா செய்திருக்கீங்கோ. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 14. படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்துள்ளது.
  மிகவும் அருமையான தேர்வு. பகிர்வுக்கு நன்றி.

  >>>>>

  ReplyDelete
 15. //நிலவென்ன பேசும்.. குயிலென்ன பாடும்... மலரென்ன சொல்லும்...... இங்கே சொல்லிடுங்கோ...:)..//

  சொல்லிட்டேன் Bye Bye ....

  Bye for now.

  vgk

  ReplyDelete
 16. உங்கள் ரசனை சூப்பர் இளமதி.வாழ்த்துமடல்,பாடல்,படித்ததில் பிடித்தது எல்லாமே !

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_