Pages

Dec 14, 2012

மியாவ்...

நான்..மீரா! எனக்கு (14.12.12) இன்றைக்கு பிறந்தநாள்...:)))


இவ தான் எங்கள் வீட்டுச் செல்லக்குட்டி மீரா...:). இவளுக்கு இன்று 1 வயது. இவளை எட்டுக் கிழமைக் குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்தோம்.  இவளுடன் இன்னும் 7 பேர் சகோதரர்கள். அவர்களை விட்டு எம்முடன் வந்ததும் ஒரு சில மணித்தியாலங்களுக்கு கொஞ்சம் தனிமையாய் ஒதுங்கி ஓரமாக இருந்தாள். அவளுக்கென வாங்கி வைத்திருந்த தன் குஷன் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டாள்.  சிறிது தூங்கி எழுந்ததும் பழகிய வீடு போல் எல்லா இடமும் போய்ப் பார்த்து நுழைந்து ஓடி விளையாடி இயல்பாகிவிட்டாள்....;) 

இன்று எம் வீட்டில் குடும்ப அங்கத்தவர்களில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒருவரும் அவளே. அவளின் விளையாட்டும் குறும்புகளும் ஏராளம்.... 

சில வேளைகளில் எம் மனதில் கவலை, குழப்பம், சோகம் என எத்தகையதொரு மனநிலை ஏற்பட்டாலும் அவள் எம்மிடம் வந்து ஏறிக் குதித்து விளையாடும்போது அத்தனையும் அடுத்த நொடியில் மறைந்து மறந்து நாமும் இயல்பாகிவிடுவோம். யார் வீட்டுக்கு வந்தாலும் எல்லோருடனும் விரைவில் சேர்ந்து பழகிவிடும் இயல்பானவள்....  

என் அன்பான ஆசையான அருமை மீராக்குட்டியின் பிறந்ததினத்தை உங்களுடன் பகிர்வது எனக்கு மிக மகிழ்வாய் இருக்கிறது!!!.

இந்த க்விலிங் என் அன்புத்தோழி அதிராவுக்காகச் செய்து அவரின் வலைப்பூவில் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இப்போ மீண்டும் மீராவுக்காகவும் இன்னுமொருதரம் உங்கள் பார்வைக்கு.....மீராவுக்காக பழைய திரைப்படப் பாடலான ”மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி”.... தேடினேன் கிடைக்கவில்லை..:(
அதற்குப் பதிலாக இந்தக் காணொளியைப் பாருங்கள்.....:)))இதில் வரும் சூட்டி பூஸ்களைப்போல எங்கள் மீராவும் தண்ணீர்க் குழாயில் தண்ணீர் குடிக்கும் அழகு...பாருங்கள்...:)))69 comments:

 1. ஹாப்பி birthday மீரா :)))

  இளமதி ஒன்னு கவனிச்சீங்களா :))

  ஆல் தி பிரபலம்ஸ் லைக் மீசைகவி பாரதியார் ,ரஜனி காந்த் , நானு ...:))மீரா எல்லாருமே டிசம்பர்

  ReplyDelete
  Replies
  1. ஓ...நன்றி..நன்றி...அஞ்சு....:)

   ஆமால்ல...மீராவும் பிரபலம்ம்ம்ம்...:)))

   முத ஆளாவந்து வாழ்த்தியிருக்கீங்க..ரொம்ப நன்றி..மீரா சார்பில...;)))

   Delete
  2. angelin said .....

   //ஆல் தி பிரபலம்ஸ் லைக் மீசைகவி பாரதியார் ,ரஜனி காந்த் , நானு ...:))மீரா எல்லாருமே டிசம்பர்//

   ஆனாலும் டிஸம்பரில் பிறந்த நான் இன்னும் பிரபலம் ஆகவில்லையே ! ;((((((

   ஏன ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் நண்பியே !

   Delete

  3. sorry ரெண்டு பேரை மறந்திட்டேன் ..நீங்க அப்புறம் எங்க வீட்டு சின்ன மேடம்

   Delete
  4. //ஆல் தி பிரபலம்ஸ் லைக் மீசைகவி பாரதியார் ,ரஜனி காந்த் , நானு ...:))மீரா எல்லாருமே டிசம்பர் //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுஞ்கோ விடுங்கோ.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:))

   Delete
  5. வாங்கோ வைகோ ஐயா...வந்ததும் வந்தீங்க ஏன் இந்த துக்கம்...:).

   ஓ...உங்க பிறந்ததினத்தை எல்லோரும் மறந்திட்டமோ...அட ஆமா...சரி...ஒரு நாளைக்கு எல்லோருமா சேர்ந்து சிறப்பிச்சுடுவோம்..இங்கெல்லாம் பிறந்தநாள் வந்தா 1 மாசம் கழிச்சும் கொண்டாடுவாங்க..

   சரி,.. காலம் கடந்திட்டாலும் வயசில மூத்தவர் உங்ககிட்ட ஆசிதான் வாங்கணும்...

   [co="red"]எங்கள் எல்லோரினதும் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!
   நீங்கள் நோய் நொடி இன்றி நீடூழி காலம் நிறைந்த நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறோம்...[/co]

   Delete
  6. ஹா...அஞ்சு..சின்ன மடமும் நீங்களும் ஒண்ணுன்னுதான் முதல்ல நான் நினைச்சிருந்தேன்..
   அப்புறம் அதீஸ்தான் சரியானதை சொன்னாங்க...:)

   ஏன் அதிரா..நீங்க இப்ப தேம்ஸ்க்கு...:)
   உங்க வூட்டிலயும் யாராவது...டிசம்பர்ல....;)

   Delete
 2. மீரா ரொம்ப கியூட் :))
  உண்மைதான் இளமதி செல்ல பிராணிகள் வளர்ப்பது மனதுக்கு ரிலாக்சிங்கா இருக்கும் .
  அதுவும் பூனைகளும் நாய்களும் மிக மிக அன்போடு மன பாரத்தை குறைக்கும்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அஞ்சு. குழந்தைங்க போலவே அதுவும். எப்பவும் ரொம்ப அன்பானதுங்க...

   மீரா..அழகுக்கு யாரும் இணை இல்லை...:)))

   Delete

  2. மீரா..அழகுக்கு யாரும் இணை இல்லை...:)))//

   ஆஹா வசமா மாட்டுபட்டீங்க இப்ப இன்னொரு பூனை cat walk இல் வர மாறி இருக்கு ..நான் எஸ்கேப்

   Delete
  3. //மீரா..அழகுக்கு யாரும் இணை இல்லை...:)))//// என் ஃபிரெண்டைப் புகழ்ந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.... ஹாப்பி பேர்த்டே மை ஃபிரெண்ட்:)

   Delete
  4. தாங்யூ தாங்யூ அதிரா....:)
   உங்க ஃப்ரண்டும் சந்தோஷத்தில என்னை பிறாண்டீட்டா...:)))

   Delete
 3. பூனை க்விலிங்கும் அழகு ..இன்னிக்கு இன்னொரு பூனை:)))
  Oppa Gangnam Style இல் டான்ஸ் ஆடபோகுது :)))

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு...இந்த பூனை அங்கை போட்ட அதேதானே..:)
   இப்பதான் புதுசா எல்லாரும் பாக்கிறாய்ங்க...:)
   ரொம்ம்ம்ப நன்றி ரீச்சர்...;)

   Delete
 4. என் மகள் பார்த்த அவ்ளோதான் ..பூனைக்குட்டி வேணும்னு ரொம்ப நாளா கேக்கறா .
  ஒ ரே பிரச்சினை ..நாம் எங்கும் ஒரு நைட் கூட ஸ்டே செய்ய முடியாது ..

  நிபியும் ஷாரனும் மீராவை விஷ் பண்ணதா சொல்லிடுங்க

  ReplyDelete
  Replies
  1. மீயும்..மீயும்...:)))

   Delete
  2. நிபிக்கும் ஷரோனுக்கும் மீரா நன்றி சொல்லச்சொன்னா..சொல்லீடுங்க அஞ்சு!!!

   ஆமா எங்காலும் போறதுன்னா செல்லப்பிராணி வளர்க்கிறது கஷ்டம்தான்...
   பக்கத்து வீட்டுக்காரரை பட்டர்பூசி வைங்க நீங்க 2பேரும்...:)))

   Delete
 5. அன்புள்ள இளமதீஈஈஈஈஈஈ

  எனக்கு இப்போ ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதூஊஊஊஊஊஊ

  நம் அதிராவின் உண்மைப்பெயர் ஒருவேளை மீராவோ?

  எது எப்படியாயினும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா... இது என்ன பிரித்தானியாவுக்கு க்கு வந்த சோதனை:))

   Delete
  2. ஐயோ அதிரா....:) எங்கை போக இப்ப நான்...அவ்வ்வ்..:)))

   Delete
 6. ”மியாவ்” என்ற தலைப்புத்தேர்வு அருமை.

  ஆனாக்க ..... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

  ஜொள்ளிட்டேன் .... ஜொள்ளிட்டேன்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ம்.. “மியாவ்” என்பது என் கொப்பிவலதாக்கும்:)) அதைச் சொல்லும் உரிமை எனக்கும் மீராவுக்கும் மட்ட்டுமே உண்டு.. மீயும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))

   Delete
  2. சரி. நீங்க 2 பேருமே சொன்னப்புறம் நான் என்ன ஜொள்ள இருக்கூஊ;)

   Delete
 7. பூனைப்படங்கள் யாவும் அருமை.

  யானையை வளர்ப்பது தான் கஷ்டம்.

  பூனை அதுபாட்டுக்கும் ஒரு ஓரமாக கட்டிலுக்கடியில் போய் அடிக்கடி பதுங்குக்குழியில் ஒளிந்து கொள்ளும்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. மீராவை ரசித்ததுக்கு மிக்க நன்றி...
   ஊரில் எப்படியோ ஆனால் இங்கு அது பூனை எண்டால் என்ன யானை எண்டால் என்ன அது அதை அந்தந்தமுரையில் கவனமெடுத்து வளர்க்கணும். இல்லாவிட்டால் நோய்க்காளாகி பெருந்துயரமாகிவிடும்.

   அவ்வப்போது தடுப்பு ஊசி, மருந்துகள், தோல் உரோம பாதுகாப்பு, அதன் ஸ்பெஷல் உணவு இப்படி....

   நிறைய அக்கறையுடனும் அன்புடனும் பொறுமையுடனும் செய்தல்வேண்டும் ஐயா.

   Delete
 8. //சில வேளைகளில் எம் மனதில் கவலை, குழப்பம், சோகம் என எத்தகையதொரு மனநிலை ஏற்பட்டாலும் அவள் எம்மிடம் வந்து ......//

  துயர் துடைக்கும் .....ரா வாழ்க ! வாழ்கவே !!

  >>>>>>

  ReplyDelete
 9. சென்ற பின்னூட்டத்தில் மீ டைப்பும்போது ”மீ” விழ மறந்துபோய் உள்ளதூஊஊஊஊ.

  அது அகஸ்மாத்தாக நடந்துள்ளதூஊஊஊஊ. பர்பஸ்ஸா இல்லை.

  நம்புங்கோ! நம்பச்சொல்லுங்கோ !!

  மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹையோ.. மதுரை எரியப்போகுதேஏஏஏஏஏஏஏ:)).. தேம்ஸ் வற்றப்போகுதே இதப் பார்த்தால்ல்ல்.. யங்மூன் இது உங்களுக்குத் தேவையோ?:))

   Delete
  2. சரி...மீ..விழுந்துட்டுது...அவ்வளவுதானே...:)))

   இதுக்காக மீரா கோவிக்கவில்லையாம் சொல்லச்சொன்னா...:)

   Delete
 10. //இந்த க்விலிங் என் அன்புத்தோழி அதிராவுக்காகச் செய்து அவரின் வலைப்பூவில் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இப்போ மீண்டும் மீராவுக்காகவும் இன்னுமொருதரம் உங்கள் பார்வைக்கு.....//

  அப்போ சந்தேகமே இல்லை.

  நம்பறோம். நம்பறோம்.

  க்விலிங் அய்கோ அய்கூஊஊஊஊஊ ;)))))

  >>>>>>>

  ReplyDelete
 11. //இதில் வரும் சூட்டி பூஸ்களைப்போல எங்கள் மீராவும் தண்ணீர்க் குழாயில் தண்ணீர் குடிக்கும் அழகு...பாருங்கள்...:)))//

  தண்ணி கூட அடிக்குமா??????
  ஸாரி ................
  தண்ணி கூட குடிக்குமா??????

  அய்காத்தான் குடிக்குதூஊஊஊ

  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பான, நகைச்சுவையான கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி ஐயா...

   Delete
 12. Happy Birthday Meera! Wish You Many More Happy Returns!

  P.S. will be back after a few hours.

  ReplyDelete
  Replies
  1. மகி அக்காவுக்கு தங்கூ எண்டு மீரா சொல்லச்சொன்னா மகி...:)

   Delete
 13. யங் மூன் ..... தொடர ஒரே போரிங்கா இருக்குதூஊஊஊஊ.

  டயர்டு ஆயிடுச்சு ......

  அதனால் அப்புறமா வாரேன் [உண்மை ஏதாவ்து புலப்படுதான்னு பார்க்க] Bye for Now.

  யங் மூன், சொல்ல மறந்துட்டேனே !

  மூன்றாம் பிறை போல இது உங்களின் மூன்றாவது பதிவு. அருமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புள்ள
  VGK

  ReplyDelete
  Replies
  1. வைகோ ஐயா.. ஏன் போரிங்ங்ங்....
   இருங்கோ வாறன்....:)

   Delete
 14. ...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீரா குட்டி....
  ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுறீங்களா மீராவ நான் காதலிக்கிறதா சொல்லிடுங்க எங்க இரண்டு பேரயும் சேர்ந்து வைக்கிற பொருப்பு உங்களுடையது :P

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா.. யங்மூன்ன்.. மீராவுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிட்டீங்களோ?:)).. ஜிட்டு ரெடியாமே:)) ஹையோ..ஹையோ...

   Delete
  2. வாங்கோ ஆத்மா...முதல் முதல் வானமேறி வந்திருக்கிறீங்கள்...:)

   உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி மீரா சார்பில்..:)

   ஹையோ வந்ததும் வராததுமா இதென்னதிது...மீராவை லவ்வோ...அடங்கொப்புரானே...அதுக்கு இப்பதான் 1 வயது டம்பீ...:)))

   காலம் இன்னும் இருக்கு. அப்ப இருக்கும் உங்க றேஞ்சுக்கு மீராவுக்கு உங்களைப் பிடிச்சா அப்புறம் பார்க்கலாம்...சரியோ...:)))

   Delete
 15. சரி இனி நிகழ்ச்சிக்கு வாறன்:))... இதிலதான் கார்ட்டின் அழகே தெரியுது யங்மூன்ன்... சூப்பர்ர்....

  வீடியோ சூப்பரோ சூப்பர்.... அதிலயும் அந்தக் கப்பை இழுத்து தண்ணி குடிக்கும் பூஸ்.. சொல்லி வேலையில்லை:))

  ReplyDelete
  Replies
  1. ஏஏஏன்ன்ன் அன்னிக்கு இந்த கார்ட் அழகா தெரியலை...:)

   நீங்க அன்னிக்கு ரொம்ம்ம்ப களைச்சுப்போயிருந்தீங்க...வடிவா பார்க்கலை...இல்லாட்டி, இன்னிக்கு மீராவோடு பார்க்கேக்கை அழகா இருக்குப்போல...:)))

   ஓம் அதிரா. நானும் இண்டைக்குத்தான் இந்த வீடியோ தற்சமயம் பார்த்தன். உங்களை மாதிரிதான் நானும் விழுந்துருண்டு சிரிச்சதிலை அடி பட்டும்போனேன்...;)))

   Delete
 16. பூஸ் எண்டாலே அழகுதான்:)) இதை நான் சொல்லித்தான் தெரியோணுமெண்டில்லை:)).. மீரா கொள்ளை அழகு...

  இத்தனை நாள் நீங்க போட்ட பதிவுகளில் இதுதான் டாப்பூஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. ஹையையையோஓஓஓ.....எங்கன்னு தொடங்க....அவ்வ்வ்..;)

   நான் மீராவுக்கு கேக் வெட்டி தீத்தீஈஈ விழா கொண்டாடீட்டு வாரதுக்குள்ள இங்க பெரீஈஈய அட்டகாசமே நடந்தேறி இருக்குதே....:)))

   சரி இங்கிருந்து மேலுக்கு வாறேன்...

   வாங்கோ அதிரா...மீரா...பக்தமீராவாச்சே...எல்லாரிலும் அவ்வளவு பக்தி...;)
   அதுதான் இந்தப் பதிவு டாப்பில ஏறிடிச்சு...:)))

   Delete
 17. மீராவுக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
  அழகாய் இருக்கிறா மீரா. நல்ல பெயர். எனக்கு எங்க வீட்டு ரோஸி ஞாபகம்தான் வருகிறது.
  நடுவில் இருக்கும் 3 படங்களும் மிக்க அழகு.தூங்கும்போது பப்பியை விட பூஸ் அழகோஅழகு. வாலை சுருட்டி அடக்கொடுக்கமா!! படுத்திருப்பினம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு....:)

   மீரா சார்பில் உங்களுக்கு மிக்க நன்றி!!!

   எம் மனதுக்கு எப்பவுமே மிக மிக விருப்பமானவைதானே நம் செல்லப்பிராணிகள். அவை செய்கிற அத்தனை செயல்களையும் நாள் முழுக்கவும் பார்த்து ரசிக்கலாம்..:)

   ரசனைக்கு மிக்க நன்றி அம்மு!

   Delete
 18. நிச்சயமா இளமதி. என்னதான் மனப்பாரங்கள் இருந்தாலும் சிறுகுழந்தைகள் போல் அவைகளும். உண்மையில் என்னால் எழுதவே முடியவில்லை.இப்படி ப்ளாக் வைத்திருப்பேன் என்றால் அப்பவே போட்டோ எடுத்திருப்பேன்.இன்று நித்திரை போச்சு.

  ReplyDelete
  Replies
  1. ம்ஹும்...பழசை மீரா கிளறிவிட்டுட்டாவோ...அவ்...;)

   Delete
 19. மிக அழகான பூஸ் க்விலிங்கில் செய்திருக்கிறீங்க. வீடியோவும் நன்றாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ம்ப ரொம்ப நன்றி!

   Delete
 20. இங்கு உள்ளவர்கள் பிள்ளைகளை விட வளர்ப்புபிராணிகளில் உயிராக இருப்பார்கள்.எங்க வீட்டைச்சுற்றி நாங்களும்,இன்னொருவீட்டினரும்
  தவிர மற்றைய வீட்டில் வளர்ப்புப்பிராணிகள் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. ஓ...ஏன் உங்களுக்கும் வளர்ப்பதில் ஏதும் கஷ்டமோ..

   சிலருக்கு அலர்ஜிப் பிரச்சனை இருக்கும். அதுவும் கவனிக்க வேண்டும்தான்..

   வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அம்மு..:)

   Delete
 21. மீராக்குட்டிக்கு என் வாழ்த்தும் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...ஹேமாக்குட்டீ...:)))

   Delete
 22. மீராக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளமதி! ஊரில் பூனைகள் என்றால் மீனா-என்ற பெயர்தான் ஸ்டாண்டர்டாக வைப்பாங்க. அது நினைவு வருது மீரா என்கையில்! :) எங்க வீட்டிலும் ஒரு மீனா இருந்தா! :) பிறகு அஞ்சலி, ஷைலு, மிக்கி..ஹ்ம்ம்..கன்டினியஸா ஆட்கள் இருந்துட்டே இருப்பாங்க. இவர்களுடன் விளையாடுவது ரொம்ப நல்லா இருக்குமே! கையை நீட்டி நீட்டி அடிப்பாங்க, அழகா இருக்கும். :)))))

  நம் கவலைகள் மறக்க இவர்கள் ஒரு நல்ல வழிதான். மீராவின் பெட் அழகாய் இருக்குது..எல்லா இடமும் தூங்குவாவோ? ;) பொதுவா எங்க வீட்டுப் பூனையம்மாக்கள் எல்லாரும் மெத்தை மேலேதான் தூங்குவாங்க! தண்ணி கூட இவ்வளவு அழகாக் குடிக்கீறாங்களே! சூப்பர்!

  க்வில்ட் கார்ட் ரொம்ப க்யூட்டா இருக்குது! வீடியோவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. ஆமா மகி...செல்ல்ல்லப்பிராணிகள் எல்லாமே க்யூட்தான்..:)
   ஏனோ இந்தப்பெயரில ரொம்ம்ம்ப காதல்..;) அதனால இந்தப் பெயரே நம்ம குடும்பத்தவர் எல்லோருக்கும் பிடிச்சுப்போனதாலே வைச்சாச்சு...)

   ஆமா..மீரா கண்களை நாம உத்துப்பார்த்தா ம்.உம்..ன்னுகிட்டு கிட்டக்க வந்து பட்டுன்னு நம்ம கன்னத்தில ஒரு தட்டு தட்டீட்டு ஓடிடுவா...அவ பேர் சொல்லி கூப்பிட்டாலும் அதே ம்.உம் சொல்லிகிட்டு ஓடிவருவா...எங்காச்சும் தனியே வீட்டில விட்டுட்டு அவசரமா போய் வந்தா கிட்ட வந்து நம்மில உராஞ்சி மியா பாஷைல ஏதேதோ நொன் ஸ்ரொப்பா சொல்லுவான்னா பார்த்துக்கோங்களேன்....:)

   தண்ணீர் குடிக்குறது மட்டுமா...நாம குளிச்சு முடிஞ்சு வெளியால் வந்தவுடன் பாத்ரூமுக்கு ஓடி...அந்த தொட்டில தொபக்குன்னு குதிச்சு அங்கின ஒட்டியிருக்கிற ஈரத்துல விழுந்து புரண்டு அவ படுற குஷி இருக்கே...சொல்லி வேலையில்லை மகி...;)))

   ரொம்ப நன்றி மகி வாழ்த்துக்கும் கருத்துக்கும் வரவுக்கும்...:)

   Delete
 23. பூனை பாசத்தில் நம்ம பிரித்தானியா பூஸாரையும் மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கே.

  க்விலிங்க் வெகு அழகு இள‌மதி.ரொம்ப நேரம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸாதிகா அக்கா..பாசம் எல்லாருக்கும் இருக்கு. அதை ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் விதமா வெளிப்படுத்துவாங்க...

   ஊரிலேயே பூஸ் குடும்பமே அம்மா அப்பா பிள்ளைங்கன்னு 5 பூஸ்கள் என் வீட்டில் இருந்துச்சு...அதுகளோடை வாழ்ந்த வாழ்க்கை..அது வேற..இப்ப நினைச்சாலும் கண்களிலிருந்து என்னையுமறியாம கண்ணீர் பெருகும்.

   உதாரணத்துக்கு ஒண்ணு..அந்த பூஸ்குடும்பத்து மூத்தவர் அவருக்கு என் தம்பி பொடியான்னு பெயர் வைச்சு டேய் பொடியான்னா ஓடி வருவான். என்மேல் அலாதி பாசம்... எப்பவுமே என்னோடுதான்..படுக்கும்போதும் காலடியில் வந்து படுத்துக்குவான்..

   ஒருநாள் மாலை மம்மல் பொழுது கிச்சன் வெளிப்பக்கத்து தொட்டில பாத்திரம் கழுவப் போன என்னை பொடியா வந்து காலை விறாண்டி மோசமான குரல்ல கத்திச்சு. நான் இல்லை போ இப்ப டிஸ்ரேப் பண்ணதைன்னு சொல்லியும் கேட்காம பாய்ஞ்சு என் கையில பிறாண்டாத குறையா தாவிச்சு..சரி ஏதோ விஷயம் இருக்குன்னு அங்கிருந்து விலத்தும்போது தொட்டி பக்கத்திலே இருந்த மரத்தடிக்கு ஓடி கர்ணகடூரமா கத்த அங்கை பார்த்தா... சொன்னா நம்ப மாட்டீங்க...ஒரு நாகபாம்பு தலைவிரிச்சு பொடியாவை பார்த்து உஸ் உஸ்ன்னு சீறீட்டு நின்னுச்சு....

   ஐயோ... இப்ப நினைச்சாலும் மேலெல்லாம் கூசுது..அதுகிட்ட இருந்து நாம நம்ம பூஸை காப்பத்த பட்டபாடு...அப்பப்பா....
   எல்லோரும் பண்ணின அட்டகாசத்தில நாகம் ஒருவழியா அது பாட்டுக்கு வந்தவழியே போயிடிச்சுன்னு வைங்க...

   அன்னிக்கு பொடியா என்னை அலெட் பண்ணி இருக்காட்டா இந்த இளமதி இங்கை இருக்கமாட்டா...:))) நாம அதுகள்ள பாசமா இருந்தா அவையும் அதுக்குமேலால பாசமா நம்மகிட்ட இருக்கும்...நிஜக்கதை நீளமா போச்சு..மன்னிச்சுக்கோங்க...:)

   ஓ..க்விலிங் அவ்வளவுக்கு உங்களை கவர்ந்திடிச்சோ அக்கா..:)
   வரவிற்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி!!!

   Delete
 24. முன்பு இரண்டு முன்று முறை வந்தேன் இங்கு கமெண்ட் பாக்ஸ் இல்லை
  இப்ப ஒகே
  இனி முடிந்த போது வருகீறேன், பூஸார் எல்லாம் அழகு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜலீலாக்கா...மீண்டும் உங்களைக் காண்பது ரொம்ப சந்தோஷம்...

   எனக்கும் என்னன்னு தெரியலை மீரா கமெண்ட் பொக்ஸை வர வைச்சுட்டா போல இருக்கு...:)))

   மிக்கநன்றி அக்கா வரவிற்கும் கருத்திற்கும். ரைம் கிடைக்கிறப்போ வாங்கோ...:)

   Delete
 25. சூப்பர் போஸ்கள்.

  சூப்பர் க்வில்லிங்.

  சூப்பர்... காணொளி.

  மீராக்குட்டி தண்ணீர் குடிக்கிற அழகே அழகு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீரா.

  ReplyDelete
 26. இமாஆ...வாங்கோ...காணேலை எண்டு பார்த்துக்கொண்டு இருந்தேன்....:)

  வரவிற்கும் ரசிப்புக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....

  மீராவும் சொல்லச்சொன்னா...:)))

  ReplyDelete
 27. மீரா மியாவ் மிக அழகு.என்னவொரு சொகுசு...க்வில்லிங் மிக அழகு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியாக்கா...மன்னிக்கோணும் கொஞ்சம் பிஸியா இருந்திட்டன்...:)

   ம்.மியாவ் மீரா சொகுசுப்பேர்வழிதான்..

   மிக்க நன்றி அக்கா..வாழ்த்திற்கும் வரவிற்கும்...:)

   Delete
 28. மீராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  இளமதி, உங்களுக்கும் உங்கள் வலைப்பூக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் !! இளைய நிலா பொழிந்து எல்லோருடைய இதயங்களை நனைத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்!!
  உமா பிரியா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ உமாபிரியா...

   முதல்முறையாக நிலாவிற்கு வந்திருக்கிறீங்கள்..:) உங்களை முன்பு ஹைஷ் அண்ணர் வலைப்பூக்களில் கண்டிருக்கிறேன். அவர்தானே நீங்கள்...:)

   அன்பான உங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!

   வாழ்க வளமுடன்!!!

   Delete
 29. செல்லக்குட்டி மீராவுக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி..:)

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_