Pages

Dec 1, 2012

அன்பு வணக்கம்                                       அம்மாவுக்கு என் முதல் வணக்கம்!
                                       அறிவு தந்த அப்பாவுக்கும் நல் வணக்கம்!
                                       தங்கத் தமிழுக்கு தனி வணக்கம்! - நான்
                                       தலை வணங்கும் தோழர்களே அன்பு வணக்கம்! 
***************

வாருங்கள் என் அன்புத்தோழர்களே!
அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்!

இளையநிலா வலைப்பூ அறிமுகத்திற்கு வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் இளமதியின் அன்பு வணக்கம்.
முதலில் (கோ)காப்பி, தேநீர், பலகாரம் எடுங்கோ......:)) நன்றி!
அறிமுகம்
~~~~~~~
என்னை அறிமுகம் செய்யுமளவிற்கு நான் அப்படி ஒன்றுமே இன்னும் செய்யவில்லை..:) செய்ய மனதில் எண்ணங்கள் இருப்பினும் கால நேர வாழ்க்கை முறைகளினால் சிலபல தாமதங்கள்....

அவ்வப்போது உங்கள் இல்லங்களுக்கு வந்து சில இடங்களில் காலடி பதித்தும் சில இல்லங்களில் கால் பதிக்காமலும் உள்ளேன். இன்னும் எவ்வளவோபேர் இல்லங்களுக்கும் வரவேண்டும் வருவேன்.

இந்த இளையநிலாவை வானில் முகில் விலக்கி ஒளிவீசுவதற்கு வித்திட்டு மிகுந்த பாடுபட்ட அன்புத் தோழிகள் அதிரா, அஞ்சு, இமா என்ற மூவர்.

ஆரம்பத்தில் ”பிரியசகி” அம்முலுவையும் என்னையும் வலைப்பூ தொடங்குங்கள் என சாதாரணமாகச் சொல்லி வந்த இந்த `முப்பெருந்தேவி`களும் நாளடைவில் மிரட்டல் பண்ணுகிற அளவிற்கு முன்னேறியதால் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து அம்முலு, “பிரியசகி” என்னும் வலைப்பூவை ஆரம்பித்துவிட்டார்.

நான் நழுவி இருந்திட்ட போதிலும் மற்ற இருவரும் ஓய்ந்து போனாலும் எங்கள் அதிரா,.. (என்னை வேறு எதையுமே நினைக்கவிடாமல் ஓயாமல் கேட்டுக்கேட்டு.... இதை ஆரம்பிக்காவிட்டால் இனிப் பேச்சே இல்லை என்கிற அளவிற்கு அன்புக் கட்டளை இட்டுவிட்டார்....:) தட்டமுடியவில்லை....
அன்பிற்கு அடிபணிந்து இளையநிலா இன்று உதயமாகிறது........

 வலைப்பூ தொடங்கியாயிற்று. ஆனால் வலைப்பூவைப்பற்றி எதுவுமே தெரியாது. ஆகையினால் அவ்வபோது  ஏற்படும் சரி, பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்திவிடுங்கள். திருந்துவதுவதற்கு உதவுங்கள். உங்கள் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 
இந்த இளையநிலா வானில் பிரகாசிப்பதற்கு நட்சத்திரங்களான உங்களின் உதவி அவசியமானது தோழர்களே!....

 அவ்வப்போது வானில் நிலவு தோன்றாவிட்டாலும் நட்சத்திரங்களாகிய நீங்கள்  இங்கு தோன்றி உங்களின் பிரகாசத்தினால் ஏனையவர்களை மகிழ்வுறச் செய்யவேண்டும். இது என் பணிவான, அன்பு வேண்டுகோள் _()_ .

 இவ் வலைப்பூ என் ஆருயிர்த் தோழி அதிராவினால்தான் உருவானது. தனது கால நேரத்தைக்கூட பொருட்படுத்தாமல் மிகக் குறைந்த நாட்களில் இவ் வலைப்பூவினை அழகுற அமைத்துத் தந்துள்ளார். 
அதிராவின் தன்னலங் கருதாத இப் பேருதவியை நான் வாழுங்காலம் வரை மறக்கமாட்டேன்.

எங்கோ பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் நாங்கள் அனைவரும் அவரவர்க்கு குடும்பச் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் வலைப்பூக்களில் தமக்குத்தெரிந்த ஆர்வமான விடயங்களை பதிவிட்டு, பகிர்ந்து,  பின்னூட்டங்களில் சிலாகித்து சிரித்து மகிழ்வதைப் பார்க்கின்றேன்.

 எனக்கும் தெரிந்ததை, என்னால் முடிந்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். குறிப்பாக க்விலிங் (Quilling) என்னும் கைவேலை செய்வதில் மிகுந்த ஆர்வவமாயுள்ளேன். அதை நான் அன்புத்தோழி அஞ்சுவிடமிருந்து கற்றுவருகிறேன். எந்தவித பிரதிபலனும் கருதாமல் எனக்கு எப்பவும் உதவிக்கொண்டிருக்கும்  அன்பு அஞ்சுவுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!!!
  அதில் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை சிலவற்றை முயன்றுள்ளேன். அவற்றை உங்கள் பார்வைக்கு இங்கு தொடர்ந்து தரவுள்ளேன்.   வாருங்கள், பாருங்கள், உங்கள் கருத்துக்களையும் தவறாது பதிவிடுங்கள். 

அன்புத் தோழர்களே! குற்றங்குறைகளைத் திருத்தி எப்பொழுதும் கூடவே வந்து இந்த இளையநிலாவை வழிநடத்தித் தரவேண்டுமென உங்களை அன்போடு   வேண்டுகிறேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!!!

அன்புடன்
இளமதி...


என்னைக் கவர்ந்த பாடல்...

என்னைக் கவர்ந்த பொருள் நிறைந்த சூப்பர் ஸ்டாரின் அருமையான பாடல்...
உங்களுக்கும் பிடிக்குமென எண்ணுகிறேன்..,;).. *******************

படித்ததில் பிடித்தது...பகிர்ந்து கொள்ள விரும்பியது...


-----------------


குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

68 comments:

 1. ஆஹா... நிலவிலும் கால் பதிச்சாச்சு:). டிஷம்பர் வரமுன்.. நிலவு வெளி வந்திட்டுது:)).. குயில் கார்ட் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா..வாங்கோ
   ரொம்ப ரொம்பச் சந்தோஷம். வர வைச்சிட்டீங்கள். வெண்டிட்டீங்கள்...:)
   வித்தியாசமா வரவேற்பம் எண்டு இந்த குயில் கார்ட் செய்தன். இன்னும் நன்றாகச் செய்ய மினக்கெட நேரம் போதவில்லை.
   பாராட்டுக்கு மிக்க நன்றி அதிரா...:)

   Delete
 2. //இவ் வலைப்பூ என் ஆருயிர்த் தோழி அதிராவினால்தான் உருவானது. தனது கால நேரத்தைக்கூட பொருட்படுத்தாமல் மிகக் குறைந்த நாட்களில் இவ் வலைப்பூவினை அழகுற அமைத்துத் தந்துள்ளார்.// ..ஙேஙேஙேஙேஙே... விடுஞ்கோ விடுங்கோ நான் கட்டிலுக்குக் கீழ போயிடுறேன்ன்ன்ன்:)) கல்லுகள் வரப்போகுதே:))

  ReplyDelete
  Replies
  1. ஏன் பயந்தோடுறீங்க....நல்லாத்தானே இருக்கு. எனக்கு சூப்பரா இருக்கு....
   உண்மையாகவே என் மனதிற்கு மிகமிக திருப்தியா இருக்கு அதிரா...;)
   நில்லுங்கோ... ப்ளொக் செய்ய ஓடர் வரும்.
   என்னை நம்புங்கோ ...:)))

   Delete
 3. பாடலும் அருமை. விளக்குகதை இன்னும் அருமை.

  மிக்க மகிழ்ச்சி.. நீங்க இப்படி வெளியில் துணிந்து வந்தமை.. புளொக் ஓபின் பண்ணினால் மட்டும் போதாது.. கிழமைக்கஞ்சு:) பதிவாவது போடோணும்..

  வாழ்த்துக்கள்.. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தத்துவப் பாட்டு எனக்கு எப்பவுமே பிடிக்கும்..;)விளக்குக்கதை போல இன்னும் இருக்கு அப்பப்ப தாறன்.
   உங்களுக்கும் பிடிச்சிருக்கோ சந்தோசம்...:)

   // கிழமைக்கஞ்சு:) பதிவாவது போடோணும்..// ஆளை விடுங்கோ சாமீஈஈஈஈ...:)

   அதிரா...முதல் வருகைக்கும் இணைவுக்கும் கருத்துக்ககும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி_()_

   Delete
 4. வணக்கமே அசத்தலாக இருக்கே! முதல் பகிர்வு மிக அருமை. தொடர்ந்து பகிருங்கள்.நல்வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியா அக்கா..:)
   வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 5. வலைப்பூ உலகிற்கு நல்வரவு! தங்கள் பயணம் இனிதாகவும் வெற்றிகரமாகவும் தொடர வாழ்த்துக்கள் இளமதி!
  :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ..மகி. வெல்கம்...;)

   பயணம்ங்கிறீங்க, அப்புறம் வெற்றிகரமாக எண்டும் சொல்லுறீங்க...போருக்கு போறமாதிரி உணர்வா இருக்கு...
   ப்ளொக் நடத்துறது அவ்வளோ கஷ்டம்போல இருக்கே.. அவ்...;)))

   நன்றி மகி. உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்...!

   Delete
 6. எனக்கு வருகுதே...

  ReplyDelete
  Replies
  1. ஓம் அதிரா. அஞ்சுவுக்குத்தான் ஏதோ பிரச்சனை. இப்ப மகியும் எழுதியது வந்திருக்கே...

   மிக்க நன்றி உங்கள் அக்கறைக்கு...:)

   Delete
 7. ஆகா உங்களையும் வரவைத்தாயிற்று இளமதி. நல்வரவு.உங்க நிலவுப்பயணம் நல்லபடியாக தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு. நல்வரவு...:)

   ம். ம். வரவைச்சதில எவ்வளவு சந்தோஷம் உங்கள் எல்லாருக்கும்...:)
   எனக்குத்தான் திக்கு திக்கெண்டு இருக்கூஊ..:)
   அடுத்த பதிவுக்கு என்ன செய்யப்போறேனோ....

   ”அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்”...;)))

   அன்பான வரவிற்கும், வாழ்த்திற்கும், கருத்துக்கும் மிக்கநன்றி அம்மு...:)

   Delete
 8. அழகாக இருக்கு உங்க ப்ளாக். அழகாக செய்துதந்திருக்கிறா அதிரா. சூப்பரா இருக்கு. அதிராவுக்கு நானும் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓமோம் அம்மு. வாழ் நாள் கைதிபோல வாழ் நாள் கடமை எங்களுக்கு...:)

   எனக்கு இந்த வலைப்பூவுக்கு ஏதும் வருத்தமெண்டா எங்கட டாக்டர் அதிராதான். உடனை வருவா. வரோணும்...ஐயோ கேட்டா வந்து ஏதும் ஏறுமாறா மாத்திவிட்டுட்டு போயிடுவா....:))

   Delete
 9. உங்க க்வில்ட் கார்ட்கள் (முதல் வணக்கம்,தாங்க்யூ) ரஜினிப்பாடல்,(எனக்கும் பிடிக்கும்)விளக்கின் தத்துவம் சூப்பர்,கடைசியில் எழுதியுள்ள பாடல்(நிலவென்ன பேசும்..)எல்லாமே மிக நன்றாக இருக்கு இளமதி.
  அதைவிட அறிமுகம் மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete
  Replies
  1. க்விலிங் கார்ட் டிசைன்கள் உங்களுக்கும் பிடிச்சிருக்கோ மிக்க நன்றி.

   ரஜனிப்பாடல் என்றில்லை தத்துவம் அது ஆர் நடிச்சதெண்டாலும், பாடினதெண்டாலும், இல்லை எழுதினதெண்டாலும் எனக்கும் ரொம்ம்ம்பப் பிடிக்கும். ஆரம்பம் எல்லாம் மாயா என்னும் தத்துவத்தோட இருக்கட்டுமே எண்டு போட்டேன்...;)

   நிலவென்ன பேசும்... பாடல்.. எண்டு கண்டுபிடிச்சிட்டியள்...:)
   கெட்டிக்காரிதான்.;) எல்லாமே உங்களுக்கும் பிடிச்சிருக்கு.. சந்தோசம். மிக்க நன்றி!

   Delete
 10. நான் வந்துட்டேன் :)) வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .மிக அருமையாக என்ட்ரி தந்திர்க்கீங்க ..நேரமிருக்கும்போது வருகை தருவேன் ..கொஞ்சம் பிசி ஸோ காணோம்னு திரடி அழகூடாது :))) ..நீங்க தொடருங்க கலக்குங்க ..

  ReplyDelete
  Replies
  1. ஹையோஓஓஓஓ அஞ்சூஊஊஊ...... குருவே வணக்கம்.

   வாங்கோ இந்த ஏழைக்குடிலுக்கு வந்திருக்கீங்க... எனக்கு சந்தோஷத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேலை.....:)

   நிஜமாகிலும் அவ்வளவு மகிழ்வா இருக்கு உங்களை இங்கு காண்பது.வருக. வருக...:)

   Delete
 11. ஸ்பெல்லிங் மிஸ்டேக் //தேடி //

  ReplyDelete
 12. பதிவு வானத்தில் அழகிய இளமதி உதயமானதைக் கண்டு ஆனந்தம் ..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வரவேண்டும் அன்புச் சகோதரியே....

   எனக்கும் உங்களையும் இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சியே...
   வருகைக்கும், வாழ்த்திற்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 13. quilling..ஏகலைவி :))) வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏகலைவி.....இங்கினதான் பயமாகிடக்கூஊஊ...:)
   எப்ப என் கட்டைவிரலை அல்லது கையையே குருதட்சணையா கேட்டிட போறீங்களோன்னு...;)))

   மிக்க நன்றீம்மா அன்பான வருகைக்கும், வாழ்த்திற்கும், கருத்திற்கும்!

   Delete
 14. எல்லா ச்வீட்டையும் பூசார் சாப்பிடட்டும் ..நான் விட்டு கொடுத்திட்டேன்
  மேடம் கிட்ட

  ReplyDelete
  Replies
  1. சரி ஸ்வீட் வேணுமின்னா பூசார் எடுக்கட்டும், காரம் இருக்குதில்ல...:)))

   ஹாஆ...அஞ்சு இப்படி போட்டோக்களை கொலேஜில் போட காட்டித்தந்தமைக்கும் மிக்க நன்றீஈஈஈ...;))

   Delete
 15. பதிவு வானத்தில் அழகிய மூன்றாம் பிறைச்சந்திரனாக இளமதி இன்று உதயமானதைக் கண்டு ஆனந்தம் ..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் ஐயா!

   எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் வரவு....
   மட்டற்ற மகிழ்ச்சி.

   வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 16. //அம்மாவுக்கு என் முதல் வணக்கம்!
  அறிவு தந்த அப்பாவுக்கும் நல் வணக்கம்!
  தங்கத் தமிழுக்கு தனி வணக்கம்! -
  நான் தலை வணங்கும்
  தோழர்களே / தோழிகளே அன்பு வணக்கம்!//

  ஆரம்பமே அருமை. பாராட்டுக்கள்.

  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பக்கிறுக்கல்..:)
   ஏதோ என் மனதில் தோன்றியதை எழுதினேன்.
   தோழர்களே என்னும்போது தோழன், தோழி இருபாலரையும் சேர்த்து தோழர்கள் என்றேன்.

   எழுதி வெளியிடும்போது மனதில் தயக்கம் . ஆனால் இப்போது உங்கள் பாராட்டுதலினால் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.
   மேலும் ஏனைய விடயங்கள் உங்களுக்கும் பிடித்திருப்பது
   மகிழ்ச்சி + நன்றி...:)

   Delete
 17. //வாருங்கள் என் அன்புத்தோழர்களே!
  அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்!

  அழையா விருந்தாளியாகப்போகிறோமே என சற்றே தயங்கினேன். ஆனாலும் இங்கு அழைத்துள்ளீர்கள். சந்தோஷம். வந்தேன் .. வந்தேன் .. வந்தேன்.

  //இளையநிலா வலைப்பூ அறிமுகத்திற்கு வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் இளமதியின் அன்பு வணக்கம். முதலில் கோப்பி, தேநீர், பலகாரம் எடுங்கோ......:))

  இது உங்களின் வீடு. தயக்கமோ கூச்சமோ வேண்டாமே......:) தாராளமாக விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கோ......:))//

  ஆஹா, அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொள்ளப்பார்த்தேன். எனக்கு முன்னாள் பந்தியில் சாப்பிட்டவர்கள் முக்கால்வாசிக்கு மேல் காலி செய்து விட்டனர். அதனால் பரவாயில்லை. யாராவது நன்றாக, வயிறு முட்டச் சாப்பிட்டால் சரி.

  தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு தான் என்பார்கள். ஆனால் நான் அப்படிச்சொல்ல மாட்டேன். வீணாக்காமல் யாராவது சாப்பிட்டால் சரி என நினைப்பவனாக்கும்.

  ReplyDelete
 18. சுய அறிமுகமும், பிடித்த திரைப்படப்பாடலும், படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொண்டதும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. பாராட்டுக்கள்.

  >>>>>>>>

  ReplyDelete
 19. தாங்கள் இந்த புதிய வலைத்தளத்தினைத் துவங்க காரணமாக இருந்த முப்பெரும் தேவியர்களான

  என் அருமைச் சகோதரிகள்

  [1] இமா
  [2] நிர்மலா [அஞ்சு / ஏஞ்சலின்]
  [3] குட்டித்தங்கை ஸ்வீட் சிக்ஸ்டீன்
  அதிரடி அலம்பல் அட்டகாச அதிரா

  ஆகிய மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மியாவும் நன்றி_()_...

   Delete
  2. athira 08 December, 2012 14:27
   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மியாவும் நன்றி_()_...

   THANKS A LOT TO MIYAAAAAAAV ALSO. ;)))))))

   ANBUDAN ...
   GOPU ANNAN

   Delete
 20. முதல் பதிவிலேயே நிறைய படங்களையும் காணொளியையும் இணைத்துள்ளது அழகோ அழகு.
  பாராட்டுக்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 21. நான் இன்று அகஸ்மாத்தாக ”என் பக்கம்” அதிராவின் வலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது கீழேயுள்ளது என் கண்களில் பட்டது.

  ****************
  இளையநிலா
  அன்பு வணக்கம்
  1 day ago


  வழிவிடுங்கோ அம்முலு வாறா:)
  தீபாவளி வாழ்த்துக்கள்
  2 weeks ago

  ****************

  நம் அம்முலுவை ஏற்கனவே எனக்குத்தெரியும். அதனால் அவங்களுக்கு அதிரா சொன்னபடி வழிவிட்டுவிட்டு, ;)))))) இது யார் “இளைய நிலா” என ஓர் ஆர்வத்தில் க்ளிக்கிப்பார்த்தபோது தான், இளமதி தான் இளையநிலா என்ற வலைத்தளத்தில் புதிதாக எழுத ஆரம்பித்துள்ளார்கள் என தெரிய வந்தது.

  மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

  அன்புள்ள இளமதி,

  தாங்கள் தொடர்ந்து பல நல்ல தரமான பதிவுகளாக வெளியிடுங்கள்.

  எழுத்துலகிலும் வலையுலகிலும் தாங்கள் என்றும் ஜொலித்திட என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
  Replies
  1. நீங்களாக இப்படி கவனித்து வந்திருப்பது உண்மையில் சந்தோஷமே. நான் யாருக்கும் தனிப்பட்ட அழைப்புக் கொடுக்கவில்லை.

   என் அன்புத்தோழி அதிரா தனது வலைப்பூவில் நல்ல ஒரு சேவை செய்கின்றார். அதை தனக்காக மட்டும் செய்யவில்லை. தன்னிடம் வருபவர்கள் ஏனைய நண்பர்களையும் தெரிந்துகொள்ளட்டும், நட்பு வட்டத்தை பலப்படுத்திக் கொள்ளட்டும் என்ற ஒரு நல்ல உயரிய நோக்கில் செய்திருக்கின்றா. அதற்காக அவருக்குத்தான் நன்றிகளை சொல்லிக்கொள்ள வேண்டும்.

   இப்போ நீங்கள்கூட அங்கு பார்த்து இங்கு வந்திருப்பதே அதற்குச் சான்று.....

   Delete
  2. நோஓ.. இதுக்கு எனக்குத்தான் நன்றி சொல்லியிருக்கோணும் கோபு அண்ணன்:)) நான் ஒத்துக்க மாட்டேன்ன்:))

   Delete
  3. OK ATHIRAAAAAAAA; SORRY ATHIRAAAAAAAAAA,

   THANK YOU VERY MUCH ATHIRAAAAAAAAA
   THANK YOU SO MUCH ATHIRAAAAAAAAAAA
   THANKS A LOT ATHIRAAAAAAAAAAAAAAAA

   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU
   THANK YOU THANK YOU THANK YOU THANK YOU THANK YOU

   GOPU ANNAN

   Delete
  4. இது ஒண்ணொன்னா ரைப்பண்ணப் படவில்லை.. கொப்பி பேஸ்ட் தானே?:))) அப்போ முதலாவதை மட்டும்தான் கணக்கில சேர்ப்பேனாக்கும்:))))

   Delete
 22. //நிலவென்ன பேசும்.. குயிலென்ன பாடும்... மலரென்ன சொல்லும்...... இங்கே சொல்லிடுங்கோ...:)..
  நன்றி....//

  ஆஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு.

  சொல்லியாச்சு, சொல்லியாச்சு, சொல்லியாச்சு.

  நன்றிக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றையும் உன்னிப்பாக அவதானித்து கருத்தெழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

   வலையுலகிற்குள் வந்தபின்புதான் என்ன செய்வது.. செய்யப்போகிறேன் என யோசிக்கின்றேன். ஏதும் விடயம் கிடைக்காமலா போகும். பார்ப்போம்...:)

   நேரத்திற்கு வந்து பதிலளிக்க முடியாமல் வேலைப்பழு... பொறுத்தருளியமைக்கும் நன்றிகள் பல...

   Delete
 23. அம்மாவின் ஆசியுடம் ஆரம்பம் அழகு . வாழ்த்துக்களுடன் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சசிகலா..

   உங்களை இதுவரை அறிந்ததில்லை. இனி அறிந்துகொண்டால் போச்சு..:)

   வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete

 24. ஏதோ வெல்கம் போர்டு இருக்கிறதே அப்படின்னு உள்ளே வந்தா ஏகப்பட்ட பலகாரம்..
  பஃபெ போல இருக்கு. வித விதமா தட்டு தட்டா.. ஜோர்.. ஜோர்.
  ஏதோ பார்ட்டி போல இருக்கிறது. இருந்தாலும் யாருக்கு கல்யாணம் சரியா தெரியல்லையே

  பரவாயில்லை.. அவங்க நீங்க யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடி,
  டிஃபனை சாப்பிட்டு முடிப்போம்.

  ஆசிகள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சுப்பு தாத்தா...

   உங்..களை...எங்கோ பார்த்..திரு.க்கிறேனே...

   ஹாஆ...நினைவுக்கு வருகிரது.. சகோதரி மஞ்சுபாஷினி இல்லத்தில் அடிக்கடி வருபவர்தானே...:)

   சந்தோஷம் அதிர்ச்சியூட்டும் வரவு..

   பார்த்து பட்சணங்களை அளவோடு சாப்பிடுங்கள்..அப்புறம் கொலஸ்றோல், ஸுகர் அப்பிடி ஏதாகிலும் எகிறீடப்போறது....:)))

   அறிமுகமில்லாவிட்டாலும் வந்து ஆசிகள் தந்தமைக்கு மிக்கநன்றி!

   Delete
 25. இனிய உதயம்! அற்புதமான ஆரம்பம்! தொடர்க! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சேஷாத்ரி அவர்களே!

   அறிமுகமில்லாதவர்களாயினும் உங்கள் வாழ்த்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றி!!!

   Delete
 26. இனிய உதயம்...
  முதல் பகிர்வு மிக அருமை.
  தொடர்ந்து பகிருங்கள்.
  நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் குமார் அவர்களே!

   முதல்பதிவு அறிமுகம் மட்டுமே..ஆனால் உங்களை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை..

   இருப்பினும் உங்கள் வரவிற்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்கநன்றி!

   Delete
 27. மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ திவ்யாமோகன்...
   உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி.

   Delete
 28. வலைப்பதிவுலகில் புதிதாக உதயமான இளமதி மேலும் மேலும் மெருகுடன் வளர வாழ்த்துக்கள்!
  உங்களுக்கு இந்த வலைப் பதிவுலகத்தை அறிமுகம் செய்து வலைப்பூவையும் அழகுற அமைந்துக் கொடுத்த அதிராவுக்கும் வாழ்த்துக்கள்!
  http://ranjaninarayanan.wordpress.com
  http://pullikkolam.wordpress.com
  http://thiruvarangaththilirunthu.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ரஞ்சனி நாராயணன்..
   உங்கள் வரவிற்கும் அன்பான வாழ்த்திற்கும் அதிரா சார்பிலும் மிக்க நன்றி!

   Delete
 29. வலைப்பூ உலகிற்கு வருக.... எழுத்துநடை அருமை.... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பிரியா ராம்...அன்பான வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 30. ஹா!! இது எப்போ!! அதிராவின் பக்கம் பார்த்துத்தான் உள்ளே நுழைந்தேன்.

  மிக்க சந்தோசஷம். நல்வரவு இளமதி. என மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  டெம்ப்லேட் பிடிச்சிருக்கு. இரண்டு க்வில்லிங்கும் அருமை.

  அதிராத அதிராவுக்கும் என் அன்பு நன்றிகள். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா வாங்கோ....:)
   அடடா..முப்பெருந்தேவியருள் ஒருவர் இங்கு வந்தபோது நான் வரமுடியாமல் போச்சே...:)))

   முதலும் அதிரா பக்கம் வந்துட்டு என்னைக் காணாமல் போயிட்டீங்கள். 2ம்தரம் வந்தபோதுதான் கண்டுபிடிச்சியள். சந்தோஷம் உங்களை இங்கு கண்டு எனக்கும்தான்..;)

   வரவிற்கும் அன்பான வாழ்த்திற்கும் கருத்திற்கும் அதிராவுக்கும் சேர்த்து மிக்க நன்றி இமா...:)

   Delete
  2. மியாவும் நன்றி இமா:)

   Delete
 31. வணக்கம் இளமதி....அழகான பெயர்.வாழ்த்துகள்.தொடருங்கள் தோழி.“நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை” ...உண்மைதான்...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கோ ஹேமா..:) அழகான பெயர்....எனதா? வலைப்பூவின் பெயரா?..:))

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

   Delete
 32. [co="purple"]வருகை தந்தோருக்கு மிக்க நன்றி. கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். விரைவில் பதில் தர வருவேன். மன்னிக்க வேண்டுகிறேன்ன்ன்..:)[/co]

  ReplyDelete
 33. வலைப்பூ நல்வரவு . விளக்கின் விளக்கம் விளக்கிய விதம் சிறப்பே தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சந்திரகௌரி...வரவிற்கும், வாழ்த்து மற்றும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி!

   Delete
 34. பின்னூட்டம் மட்டிலுமே போட்டு வந்த நீங்கள் வலைபூதாரர் ஆகியாச்சா.வாழ்த்துக்கள்.நிறிய எழுதுங்கள்.உங்கள் ஆக்கக்ங்களை படிக்க காத்திருக்கிறோம்

  ReplyDelete
 35. ஸாதிகா அக்கா...வாங்கோ..வாங்கோ..

  உங்களை அதிரா அஞ்சு வீட்டில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். உங்க வீட்டுக்கும் வந்து போயிருக்கிறேன். ஆனா ஒன்றும் சொல்லாமல் வந்திருக்கிறேன். நீங்கள் இங்கு வந்ததையிட்டு மிகவும் சந்தோஷம் அக்கா.

  அதிராவின் கைங்கர்யம் எனக்கும் சின்னக்குடில் கட்டித்தரப்பட்டிருக்கு...:)

  எழுதுவதற்கு என்றில்லை, வேறு ஏதாகிலும்தான்...:)

  உங்க அன்பான வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_