Pages

Dec 8, 2012

ஓம்!


இந்து சமயத்தில் தேவநாகரி மொழியில் இக் குறியீட்டினை  ஓம் எனக் கூறுவர்.  இது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான  ஒலி வடிவமாகும்.  ஓங்காரம் அல்லது ஓம்காரம் என இதனைத் தியானப்பயிற்சி முறைகளில் சொல்லுவார்கள். இதனைப்பற்றி பல இணையத்தளங்களில் மேலும் பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
              
         குறிப்பாக அலை பாயும் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த ஓம் என்னும் ஓங்காரத்தினை தினமும்  சில நிமிடங்களுக்கு சரியான ஒரு ரிதத்தில்  திரும்பத் திரும்பக்  கண்களை மூடிக்கொண்டு கூறிப் பார்த்தால் உண்மை விளங்கும்...:) முன்பு இதை எமக்கு அன்புச் சகோதரர் ஹைஷ் பயிற்றுவித்திருக்கிறார். இதனை அப்பியாசிப்பதன் மூலம் எங்கும், எல்லாவற்றிலும் நிறைந்த அன்பினையும் அமைதியையும் உணரக்கூடிய சக்தியை நாம் பெறலாமென  அனுபவசாலிகள் சொல்லுவார்கள்.

    இந்த ஓம் வடிவத்தினைப் பலரும் பலவிதமாகச் செய்துள்ளனர்.  நானும் க்விலிங் கைவேலைப்பாட்டில்  ஏதோ சிறிதளவு முயன்றுள்ளேன்.:) இவ் வடிவம் நான் ஆரம்ப காலத்தில் மூன்றாவதாகச் செய்த ஒன்று ஆகும்...  உங்களின் மேலான கருத்தினை எதிர்பார்க்கின்றேன். மிக்க நன்றி....

சாந்தி நிலவ வேண்டும்...எங்கும் சாந்தி நிலவ வேண்டும்......”

**********

என்னைக் கவர்ந்ததில் இதுவும்......


~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...நன்றி..:)

47 comments:

 1. க்வில்லிங் அருமை.மனதில் உறுதி வேண்டும் பாடல்,கருத்துப் பகிர்வு நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியா அக்கா..
   க்விலிங் இன்னும் நல்லா செய்திருக்கோணும் எண்டு இப்ப தோணுது...:)

   எல்லாம் நல்லாயிருக்கோ..அப்ப சந்தோசம்..:)
   கருத்துச் சொன்னமைக்க மிக்க நன்றி அக்கா!

   Delete
 2. Superb..short & sweet! :)

  Will come later ilamathi!

  ReplyDelete
  Replies
  1. சுருக்கமா சொல்லீட்டு நீங்களும் ஓடீட்டிங்க மகி...:)

   கருத்துக்கு மிகவும் நன்றி...ஆறுதலா வாங்கோ. ..:)

   Delete
  2. மனதில் உறுதி வேண்டும் படப் பாடல்..ஜேசுதாஸ், சிவகுமார், இளையராஜா, பாரதி கவிதை..எதைச் சொல்ல, எதை விட??!... எனக்கு மிக மிகப் பிடிக்கும்.

   புகைப்படத்தில் வாசகங்கள் ரொம்ப நல்லா இருக்கு. இப்படி படங்கள் இணைப்பதை எல்லாப் பதிவிலும் தொடர்கிறீர்கள் போலும்! :) நன்றாக இருக்கிறது.

   ஓம்- க்வில்லிங் நீட்டாக இருக்கிறது. உங்கள் கனவுகள் /வேண்டுதல்கள் எல்லாம் மெய்ப்படட்டும்.

   Delete
 3. மிக அழகான க்விலிங்.3வதாக செய்தது என்றால் நம்பமுடியவில்லை.
  க‌ருத்தாழமிக்க பகிர்வு. நல்லதொரு பாடல் தெரிவு.கருத்துக்கேற்ற படம். அழகான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அம்மு...க்விலிங் அழகா இருக்கோ..ஏதோ மற்றவை செய்திருக்கிறதைப் பார்த்து நானும் முயற்சி செய்தன். ஆகா ஓகோ சொல்லுற அளவுக்கு என் மனதில் படவில்லை..:) ஆனா உங்களுக்கு பிடிச்சிருக்கோ..அப்ப எனக்கும் பிடிச்சிருக்கு..;)

   ரொம்பப் புகழுறீங்க என்னை...:)
   கருத்துகளுக்கு மிக்க நன்றி அம்மு!

   Delete
 4. ஆஹா.. ஆஹா.. யஞ்மூனோ கொக்கோ கலக்குறீங்க போங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... வந்திட்டீங்களோ...:)
   நிலவும் வெள்ளை கொக்கும் வெள்ளை அதுக்காக தடுமாறக்கூடா...:) நிலவு நிலவுதான் கொக்கு கொக்குதான்...:)
   எப்பூடீஈஈஈ...;)

   Delete
  2. அர்ர் சொன்னது நிலவு வெள்ளை என?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நிலவுக்குக் கலர் இல்லை:))

   Delete
  3. ஹா..இதென்ன புதுக்கதை..பால்போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்.... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலாஆஆஆ..

   இப்புடி எல்லாம் பாடினது....வெள்ளை இல்லாமலே...:)))

   Delete
  4. அது கற்பனை:))கவிஞர்கள் பொய் சொல்லுபவர்கள்:)))

   Delete
 5. சூப்பர் ஓம் கார்ட். பாட்டு அண்ட் கவிதை... அனைத்துமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. கவிதையோஓஓ...ங்கை....:)
   அவ்....இதை கவிதை எண்டா கவிதாயினி ஹேமா எங்காலும் மாடிலையில இருந்து கீழ குதிச்சிடப்போறா.....;)))

   ஏதோ சும்மா கிறுக்கினன். வேணுமெண்டா கிறுக்கல் எண்டு சொல்லுங்கோ..:)

   எல்லாம் பிடிச்சிருக்கு எண்டிட்டீங்க.. ஓம் கார்ட்ல ஒரு பிழையும் தெரியேலையோ சும்மா சொல்லக்கூடா...:)))

   கருத்துக்கு மிக்க நன்றி அதிரா!

   Delete
  2. ஹேமா குதிச்சால் அதுக்கு முழுப்பொறுப்பும் இளமதிதான்.. நான் இல்லப்பா:)).. எனக்கே நான் இன்னும் லைஃப் இன்சூரன்ஸ் செய்யல்ல:))

   Delete
  3. நல்ல எஸ்கேப்.....;)))

   Delete
 6. உந்தக் கார்ட்டிலே எனக்கொரு சந்தேகம்.. அவுட்லைனைக் கடேசியில் போட்டீங்களோ? இல்லை முதலில் போட்டு விட்டு உள்ளே அடைத்தீங்களோ? விளக்கம் பிளீஸ்ஸ்ஸ்?

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ..இது... இதுதான் உண்மையா நீங்க விரும்பி ஒண்டை படிக்கிறீங்கள் இல்லாட்டி பழகுறீங்கள் எண்டதுக்கு சான்று.

   ஆர்வமா அக்கறையா இருந்தா கேள்வியும் கூட இருக்கோணும் அப்பதான் அந்த விடயம் மனதில் பதிவாகிறது எண்டு முந்தி எங்களுக்கு சரித்திரம் படிப்பிச்ச ரீச்சர் சொல்லுவா..

   நீங்களும் அக்கறையாத்தான் க்விலிங் பழக தொடங்கியிருக்கிறீங்களெண்டு விளங்குது...:)
   அதுக்காக நான் ரீச்சர் இல்லை. அஞ்சுதான் எங்களுக்கு ரீச்சர்...:)

   அவுட்லைன் போட்டு ஒட்டீட்டுத்தான் உள்ளுக்குள் அடைக்கோணும். நான் அப்பிடித்தான் செய்தேன். கொஞ்சம் மினக்கேடு ஆனால் அழகாக கீறி அதில் நேர்த்தியா ஒட்டீட்டால் வேலை சுகம்...:)

   விளக்கம் தந்தாச்சு..ரீச்சர் வரமுன் ஃபீஸ் அதை தந்திடோணூம் சரியோ...:)))

   Delete
  2. கிரிஸ்மஸ்க்கு குயில் கார்ட் செய்ய பொருட்கள் வங்கி வந்திட்டன்... ஆட்களுக்கு கொடுக்க:)) இனி அந்த ஆண்டவனே வந்தாலும் நான் செய்யப்போவதைத் தடுக்கேலாதாக்கும்:))

   Delete
  3. துணிந்து நில்...தொடர்ந்து செல்...தோல்வி கிடையாது டம்பீஈஈ எண்டு அப்பவே பாடி இருக்கினம்.

   இறங்கீட்டீங்களெல்லோ....எல்லாம் அந்த மாதிரி வரும்...:)

   செய்யுங்கோ. முதல்லை கொஞ்சப்பேப்பர், பேஸ்ட் ஏன் நேரமுமே வேஸ்ட்டாப்போச்சோன்னும் தோணும்...:)))
   ஆனா செய்யச் செய்ய கை பழகீட்டுதெண்டா விடமாட்டீங்க பாருங்கோவன்...:)))

   Delete
 7. எளிமையாக தெளிவாக வந்திருக்கிறது இளமதி. இதற்கு மேல் அலங்கரித்திருந்தால் ஓங்காரத்தின் முக்கியத்துவம் குறைந்து போயிருக்கும்.
  சேர்த்திருக்கும் நிறங்கள் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

  அந்தப் பாடலில்... குரலில் தொனிக்கும் கம்பீரம் மிகவும் பிடிக்கும், சிவகுமார் நடிப்பும் கூட.

  இறுதியில்... பகிர்ந்துகொள்ள விரும்பியது பார்த்தேன். வேண்டியது கிடைக்க என் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 8. இமா...வாங்கோ...ஒரு தேர்ந்த சிறந்த அனைத்துக் கைவேலைகளையும் செய்வதில் குவீன் நீங்கள்.. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...;)) உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
  இன்னும் நேராக நேர்த்தியாக செய்திருக்கோணும் அதுதான் என் கருத்து..:)

  சிவகுமாரின் நடிப்பைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களோ...:)

  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி இமா...:)

  ReplyDelete
 9. “சாந்தி நிலவ வேண்டும்...எங்கும் சாந்தி நிலவ வேண்டும்......”

  ஓம் க்விலிங் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி...

   Delete
 10. நல்லதொரு பாடல் தெரிவு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாலதி. வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 11. ஆஹா!

  டிஸம்பர் முதல் தேதி முதல் பதிவு.

  டி ஸ ம் ப ர் - எ ட் டா ம் - தே தி யே

  இரண்டாவது பதிவு.

  ஒருவார இடைவெளியில் இரட்டை பிரஸவங்கள்.

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வை.கோ ஐயா..

   நான் கணக்கிட்டு பதிவிட எண்னவில்லை. எப்ப முடிகிறதோ அப்ப புதிய பதிவினை இட்டுவிடுகிறேன். அடுத்தது எப்பவோ எனக்கே தெரியாது. தோன்றியவுடன் செய்திடுவேன்.. அவ்வளவே....:)

   Delete
 12. // குறிப்பாக அலை பாயும் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த ஓம் என்னும் ஓங்காரத்தினை தினமும் சில நிமிடங்களுக்கு சரியான ஒரு ரிதத்தில் திரும்பத் திரும்பக் கண்களை மூடிக்கொண்டு கூறிப் பார்த்தால் உண்மை விளங்கும்.//

  ஆஹா! அப்படியே செய்வோம்.

  ஓங்காரமான விளக்கத்தினை அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஓம்கார விளக்கம்... உங்கள் வயது, அனுபவத்தினோடு பார்க்ககையில் நான் ஒன்றும் புதிதாய் சொல்லவில்லை.

   ஏதோ நான் அறிந்ததை பகிர்ந்தேன். பாராட்டுக்கு மகிழ்ச்சி + நன்றி...

   Delete
 13. //இந்த ஓம் வடிவத்தினைப் பலரும் பலவிதமாகச் செய்துள்ளனர். நானும் க்விலிங் கைவேலைப்பாட்டில் ஏதோ சிறிதளவு முயன்றுள்ளேன்.:)//

  நன்றாகவே செய்துள்ளீர்கள். உற்றுப்பார்த்த எனக்கு அதில் ”ஓம்” மட்டுமல்லாது வேறு சிலவும் தெரிகிறது.

  அதாவது ஒரு ”உ” போன்ற பிள்ளையார் சுழி.

  முகமதியர் வழிபடும் பிறை சந்திரன்

  மேலே முதன் முதலாக ஓர் கார்த்திகை அகல் விளக்கு

  வலதுபுறம் குதிரை லாடம் போன்றவை.

  //இவ் வடிவம் நான் ஆரம்ப காலத்தில் மூன்றாவதாகச் செய்த ஒன்று ஆகும்...//

  மூன்று வயதிலேயே செய்தீர்களோ என நினைத்தேன்.

  மூன்றாவதாகச் செய்ததே இப்படி என்றால், இனிமேல் செய்யப்போவது யாவும் மேலும் மேலும் ஒரே அசத்தலாகத்தான் இருக்கக்கூடும்.

  //உங்களின் மேலான கருத்தினை எதிர்பார்க்கின்றேன். //

  இதுபோன்ற வேலைகளில் மிகவும் EXPERT ஆன நம் நிர்மலா தான் இன்னும் மேலான கருத்துக்களைச் சொல்ல முடியும். வந்து என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

  >>>>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. // ”உ” போன்ற பிள்ளையார் சுழி, பிறை சந்திரன், அகல் விளக்கு, குதிரை லாடம்//

   இதை செய்யும்போது ஓம் என்பதை தவிர என் சிந்தனையில் இவ்வளவும் இருப்பதாய் தெரியவே தெரியாது...

   அடடா... நல்லாய்த்தான் கவனிக்கிறீங்கள்....
   3வது என குறிப்பிட்டுச் சொன்னது குற்றங்குறை நிறைய இருக்கும் அஜெஸ் பண்ணிக்கொள்ளுங்கோ என்பதுக்காக்கும்...:) அதுக்காக பின்னே வரும் ஏனையவை திறமாக இருக்குமோ அது எனக்கே சஸ்பென்ஸ்.....:)

   அஞ்சு என் குரு. வந்து பார்க்கணும்.வருவா. வந்து பார்த்து கருத்துச் சொல்லட்டும். அதுதான் எனக்கும் பெரீய எதிர்பார்ப்பு...

   Delete
  2. இளமதி 09 December, 2012 16:24

   //அடடா... நல்லாய்த்தான் கவனிக்கிறீங்கள்....
   3வது என குறிப்பிட்டுச் சொன்னது குற்றங்குறை நிறைய இருக்கும் அஜெஸ் பண்ணிக்கொள்ளுங்கோ என்பதுக்காக்கும்...:)//

   நான் நல்லா கவனித்ததில் மற்றொன்றும் உள்ளதூஊஊஊ.

   வடமொழியில் [சம்ஸ்கிருதத்தில்] எழுதப்பட்டுள்ள அந்த ”ஓம்”
   என்பதே ”3” என்ற எண்ணின் வடிவத்தில் உள்ளது தானே!

   நீங்கள் மூன்றாவதாகச் செய்துள்ளது என்பது எப்படி அருமையாகப் பொருந்தியுள்ளது பாருங்கோ ! ;)))))

   மேலும் நீங்கள் செய்துள்ள அந்த மூன்று என்ற எண்ணை ஒரு பூட்டாக பாவித்தால், அதனுடன் இணைத்துள்ள லாடம் ஒரு சாவி போலவும் தெரிகிறது பாருங்கோ.

   பூட்டு + சாவி நல்ல பொருத்தமாக அமைந்துள்ளதூஊஊஊஊ.

   ஒரு படத்தை நான் உற்றுப்பார்த்தால் அதில் எனக்கு இதுபோன்ற பலவித கற்பனைகள் தோன்றும்.

   அன்புடன் VGK

   Delete
 14. //“சாந்தி நிலவ வேண்டும்...எங்கும் சாந்தி நிலவ வேண்டும்......”//

  ஆம், அதே அதே !

  “சாந்தி நிலவ வேண்டும்...
  எங்கும் சாந்தி நிலவ வேண்டும்......”

  ஓம் சாந்தி! - ஓம் சாந்தி!! - ஓம் சாந்தி!!!

  [யார் அந்த சாந்தி ? எனக்கேட்கக்கூடாது.
  ”சாந்தி” என்றால் “அமைதி” என நினைக்க வேணும்]

  >>>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. சாந்தி...என்டு மட்டும் சொல்லியிருந்தால் உங்கள் வீட்டில் யாரையோ கூப்பிடுகிறீங்கள் என்டு நினைச்சிருப்பேன்... ஆனா ஓம் சாந்தி என்று 3 தடவை சொல்லி அதற்கு விளக்கமும் சொன்னதால் விட்டுவிட்டேன்...:)))

   Delete
 15. சிந்து பைரவி “மனதில் உறுதி வேண்டும்” பாடலும், பாடல் காட்சியும் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  பாராட்டுக்களும் நன்றிகளும் .......

  >>>>>>>>

  ReplyDelete
 16. படித்ததில் பிடித்தது எனக்கும் படிக்கப் பிடித்துள்ளது.

  [ இருப்பினும் சில செருப்புகள் காலை வாரி விட்டு நம்மை கீழே விழ வைத்து விடுவதும் உண்டு தானே?
  உலகம் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் அல்லவா? எல்லவற்றிற்கும் நமக்கு நல்லதொரு கொடுப்பிணை வேண்டும் ]

  >>>>>>>>

  ReplyDelete
 17. இன்றைக்கும் நான் நம் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவின் ”என் பக்கம்” போய் அங்கிருந்து தான் இந்தப்பக்கம் வந்தேனாக்கும்.

  நம்புங்கோ ப்ளீஸ் ....

  இதோ அதற்கான அத்தாட்சி:

  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  நீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்

  இளையநிலா
  ஓம்!
  1 day ago
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  எனவே நம்

  அதிரடி
  அலம்பல்
  அட்டகாச
  அல்டீஈஈஈ
  அதிராவுக்கு

  என் மனமார்ந்த நன்றிகள்.

  [அப்பாடி, மறக்காமல் சொல்லிப்பூட்டேன்ன்ன்ன்]

  oooooooooooooooooo

  அன்புள்ள இளமதி,

  தங்களின் இந்தப்பதிவுக்கு என்
  மனமார்ந்த் பாராட்டுக்கள்
  அன்பான வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
  Replies
  1. சரி.. சரி...நான் நம்புகிறேன்..நான் யாருக்கும் தனிப்பட்ட அழைப்புக் கொடுக்கவில்லை.. நீங்களும் இம்முறையும் அதிராவின் பக்கத்தில் பார்த்துத்தான் வந்திருக்கிறீங்கள்.

   ஆனால்... இதை யாருக்காக இப்படி ஒவ்வொரு முறையும் சொல்லுறீங்கன்னுதான் எனக்குப் புரியவில்லை....:)
   அதிரா.. உங்களுக்கு ஏதும் புரியுதோ....;)))

   உங்களின் அன்பான வருகைக்கும் மிக்க ரசனையோடு கூறிய கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க மிக்க நன்றி ஐயா...

   Delete
  2. இளமதி 09 December, 2012 16:29

   //ஆனால்... இதை யாருக்காக இப்படி ஒவ்வொரு முறையும் சொல்லுறீங்கன்னுதான் எனக்குப் புரியவில்லை....:) //

   நம் அதிராவுக்காக மட்டுமே தான். தங்களின் போன பதிவினில் நான் அவர்களுக்கு மட்டும் தான் நன்றி கூறியிருக்க வேண்டும் என STRICT ஆகச் சொல்லியிருந்தார்களே, ஞாபகம் இல்லையா?

   பிரித்தானியா குயினின் [மஹாராணியின்] செல்லப்பேத்தி. அவர்கள் சொல்லை நான் எப்படித்தட்ட முடியும்?
   அவங்க ஆறு வயசிலிருந்தே GOOD GIRL வேறு.
   அவங்க ரொம்ப ரொம்பப் பெரிய்ய்ய்ய்ய இட்ம் [TOO BIGக்கு]
   நான் என்ன இருந்தாலும் மிகச்சாதாரணமானவன் தானே! அவங்களின் [பெரிய்ய்ய்ய இடத்தின்] தயவு வேண்டுமோள்யோ!

   அதனால் தான் ஞாபகமாக, அவங்க தளத்திற்கு விசிட் செய்துவிட்டு பிறகு உங்கள் பக்கம் வந்ததை மறக்காமல்
   நன்றி சொல்லி தெரிவித்துள்ளேன்.

   இல்லாவிட்டால் அவங்களுக்குக் கோபம் வந்துவிடும்.
   பிறகு அவங்க்ளுக்கு ஹேண்டும் ஓடாது ... லெக்கும் ஓடாது.
   ஆஆஊஊன்னா
   தேம்ஸில் குதிக்கப்போவதாகவும்
   காசிக்குப்புறப்பட்டுச்செல்வதாகவும்
   தீக்குளிக்கப்போவதாகவும்
   முருங்கை மரத்தில் ஏறப்போவதாகவும்
   ஏதேதோ சொல்லி பயம் காட்டுவார்கள்.

   நமக்கு எதற்கு வீண் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ?

   Delete
  3. //அதிரடி
   அலம்பல்
   அட்டகாச
   அல்டீஈஈஈ
   அதிராவுக்கு

   என் மனமார்ந்த நன்றிகள்./// நோஓஓஓஓஓ இது பத்தாது.. இன்னும் சொல்லி.. நன்றி சொல்லியிருக்க வேணும்:)).. அடுத்த தடவை நிறையச் சொல்லாவிட்டால்ல்ல்.. தேம்ஸ் கரையில் தீக்குளிப்பேன்ன்ன்ன்:))) இளமதியைக் கையில பிடிச்சுக்கொண்டு:)) தனியநெருப்பில்போக பயமாக்கும் எனக்கு:)))

   Delete
 18. புதிய வலைப்பூ தொடங்கி முதல் இரன்டு பதிவுகளிலுமே நல்ல க‌ருத்துக்களைப் பதிவு செய்துள்ளீர்கள் இளமதி!! இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா...

   எல்லாம் உங்களைப்போன்றோரின் அன்புதான் அக்கா.
   உங்களின் அன்பான வரவிற்கும், வாழ்த்திற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 19. இளமதி க்விலிங் சூப்பர் அருமை ...ஓம் விளக்கமும் அருமை


  இவ்ளோ திறமையை எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க !!!!!!

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு...வங்கோஓஓஓ..:)
   உங்க வரவை பார்த்து பார்த்து எண் கண்ணும் ஒளி மங்கிப்போற தறுவாயில் வந்து காப்பாத்தீட்டீங்க...:)

   ரொம்பச் சந்தோஷம்..:)

   திறமையோ இது குருவே..எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்.;)

   பாராட்டுக்கு மிக்க நன்றி அஞ்சு. நேரமில்லாவிட்டாலும் வந்திட்டீங்களெல்லோ மிக்க சந்தோஷம்...:)

   Delete
 20. படித்ததில் பிடித்தது அருமை இளமதி.பாடலும் எனக்குப் பிடித்தது.உங்கள் கைவேலை முயற்சியும் அருமை.தொடருங்கள்.பாராட்டுக்கள் !

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_