Pages

Jan 8, 2013

நட்பு


நட்புக்களே நலமோ?......

என்னவோ கனநாள் காணாதமாதிரி ஓர் உணர்வு அதுதான் கேட்டேன்..ஜேர்மனி காலநிலை இம்முறை ஸ்நோ வீழ்ச்சி நான் இருக்கும் இடத்தில் குறைவென்றாலும் குளிருக்கு பஞ்சமில்லை...:) 

மாலையில் 4 மணி 4.30 மணிக்கே இருட்டத் தொடங்கீடும். அடுத்தநாள் விடிஞ்சு 8.00 மணிவரை இருள் சூழ்ந்தே இருக்கும்....மனசும் சூரிய வெளிச்சம் இல்லாதமையாலும் அதிக நேர இருள் சூழ்ந்திருப்பதாலும் உற்சாகமில்லாமல் சோர்ந்து போய்விடுகிறது..


இதோடு நட்புகளை அதிகம் காணக்கிடைக்காமல் போகும்போது மனதில் வெறுமை, சலிப்பு இப்படி ஆக்கிரமிக்கப் பார்க்குது....ஆகவே ஃப்ரண்ஸ்... வாங்கோ சுகமா இருக்கிறீங்களோ? வேறை என்ன புதினங்கள்... புது வருஷ விஷேசங்கள்... சொல்லுங்கோ. கதைப்பம்... 


நானும் செய்த க்விலிங் கார்ட்டையும், கவிதை (எண்டு சொன்னா அடிக்கவருவீங்க...:) )  என  என் மனசில தோன்றினதை எழுதினதையும் பாருங்கோ....:))
*********************

நீங்கா நட்பு


                                      சூரியன் போல நிறைவான ஒளியை
                                      மாறாமல் தருவது நட்பு…

                                      ஓயாமல் கரை மோதும் கடலலை போல
                                      கணம் தோறும் நீங்காமல் தேடுவதும் நட்பு..

                                      அநீதிதனை பொசுக்கும் அக்கினி பிழம்பாக
                                      என்றென்றும் துனைவரும் அனலாயுதம் நட்பு…

                                      எதையும் தாங்கும் பொறுமைக்கு நிலமாம்
                                      எனக்கும் எப்பொழுதும் எனைத் தாங்குவதும்
                                      என் அருமை நட்புகளே…

அன்பான கவிஞர்களே..... என்னை அடிக்கவராதேங்கோ...:) எனக்கும் கவிதை மாதிரி எழுத சரியான விருப்பம். ஏதோ தத்துப்பித்தென்று கொஞ்சம் பிதற்றினதை மன்னிச்சு சரி பிழைகளை சொல்லுங்கோ...திருத்தி இன்னும் நல்லா எழுத ஆசை இருக்கு...கொஞ்சம் கொஞ்சமா நானும் கவிஞி...:) ஆகவேணமெல்லோ ....:))) உங்களின் பொறுமையை சோதிச்சிட்டன் போல.....:))) மன்னிச்சுக்கொள்ளுங்கோ....நட்புக்கு மிக்க நன்றி...:)

>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<


என்னைக் கவர்ந்தது: நட்பென்றால் என்னவென்று கூறும் கருத்துச் செறிந்த அருமையான பாடல்.  பாடகர்களின் குரலும்.காட்சியமைப்பும் மிக மிக அருமையாக என்னையும் அந்த நினைவலைகளுக்குள் இழுத்துச்செல்கிறது. கல்லூரி வாழ்க்கையையும் நண்பர்களையும் மறக்க முடியுமா...மறக்கக்கூடியதா....... ================

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன்.
(நன்றி கூகிளாரே..:).

~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

69 comments:

 1. ஆஆஆஆஆஆவ் மீத 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:))

  மெளனம் கலகாஸ்திரமாம்ம்.. இது ஹைஸ் அண்ணன் சொல்லித் தந்தவர் :).

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...அதிரா..என் நட்பே...என்ன சொல்ல மனசுக்க நீங்க முதல் ஆளா வந்து பார்க்கமாட்டீங்களோ எண்டு எண்னம் ஓடிக்கொண்டிருக்க.....என்ன ஆச்சரியம்....என்னால நம்ப முடியேலை....

   வாங்கோ...முதல் முடிவு எனக்கு எல்லாம் நீங்கதான்....:)

   Delete
  2. உண்மை அதிரா...ஹைஷ் வழிகாட்டியாய் எங்களுக்கு எவ்வளவோ, எத்தனையோ சொல்லித்தந்திருக்கிறார்...

   உங்களை எனக்கு கைகாட்டிவிட்டவரும் அவரே...எங்கிருந்தாலும் மிக்க நன்றி சகோதரர் ஹைஷ்...

   Delete
  3. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)... அஞ்சு கலைக்கிறா யங்மூன் ஓடுங்கோ..

   Delete
 2. எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகொணும்.. என்ர பேர்த்டே எப்பவோ முடிஞ்சுதே :) அப்போ உந்த பேர்த்டே கார் ஆருக்குச் செய்தவ?:) சொல்லாட்டில் மீ தீக்குளிப்பேன்ன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. இதொ பெட்ரோல் கொண்டாரட்டா

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு எடிரி:)) வெளில இல்ல:))) இங்கயேதான் சாமீஈஈஈஈஈஈ:)

   Delete
  3. அதிரா...பேர்த்டே கார்ட் பேர்த்டே வந்தவைக்கு குடுக்கத்தான் செய்தது...குடுத்தாச்சு..:)
   அவைட பெயர் போட்டபடி பப்ளிக்கில காட்டவேணாம் எண்டதால பெயரை அழிச்சிட்டு போட்டுவிட்டிருக்கு...:))

   அது என்ர மச்சாள் ஒராளுக்கு செய்திட்டு அனுப்பீடன்...:)))
   சொல்லீட்டனெல்லோ தீக்குளிப்பு வேணாம்....:)

   அஞ்சுவேறை பெற்றோல் கானோடை திரியுறா...:) கவனம்ம்ம்...:)

   Delete
  4. //athira08 January, 2013 20:43 எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகொணும்.. என்ர பேர்த்டே எப்பவோ முடிஞ்சுதே :) அப்போ உந்த பேர்த்டே கார் ஆருக்குச் செய்தவ?:) சொல்லாட்டில் மீ தீக்குளிப்பேன்ன்ன்ன்:)//

   //angelin08 January, 2013 22:55 இதொ பெட்ரோல் கொண்டாரட்டா //

   ஹாஹ்ஹா! ஏஞ்சல் அக்கா, வாட் எ டைமிங்?! வெறி வெறி குட் ஜாப்! நேத்து சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு! அதான் இன்னிக்கு வந்து கமென்ட் டைப் பண்ணிருக்கேன், ஹிஹிஹ்!;)))))

   Delete
 3. ///அன்பான கவிஞர்களே..... என்னை அடிக்கவராதேங்கோ...:)/// பறவாயில்லை.. பறவாயில்லை.. இருக்கட்டும் இருக்கட்டும் :)) ஹையோ ஏன் வைரமுத்து அங்கிள் கலைக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:) அப்போ மீயும் கவிஞர் இல்லையோ?:))

  ReplyDelete
  Replies
  1. இப்ப என்ன சொல்லுறீங்க அதிரா...நானும் கவிஞரோ இல்லையோ..

   வைரமுத்து அங்கிள் கலைக்கிறாரோ...ங்கை.....:) ஆ..அது உங்களை ஏதோ படத்துக்கு பாட்டெழுதிதரட்டாம்..அவருக்கு நேரமில்லையாம் அதுதான். நீங்க எப்பவோ கவிஞர் ஆகீட்டீங்க எல்லோ பயப்பிடாதேங்கோ....:)

   இப்ப அதுவல்ல கேள்வி...:)))நானும் கவிஞர் ஆகிட்டனோ.. சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்காம சட்டெண்டு சொல்லுங்கோ...:)))

   Delete
 4. குயில் வேர்க் சூப்பர் அண்ட் நீட்....

  என்னிடம் இருக்கும் ஸ்ரெட்டர் குட்டி குட்டியா வெட்டுதென நினைக்கிறேன்ன்ன்ன் :...

  ReplyDelete
  Replies
  1. குலிங்க் இப்படி மாங்காய் பற்ரன் மாதிரி செய்யோணுமெண்டு கனநாளா நினைச்சது இப்ப முடிஞ்சுது. மிக்க நன்றி வாழ்த்துக்கு...

   நீங்க வைச்சிருக்கிற ஸ்ரெடர் குட்டி குட்டியா வெட்டுதோ..குட்டி எண்டா வெட்டின பேப்பர்ட அகலத்தை எத்தினை மில்லிமிற்றரில வெட்டுது உங்களின் ஸ்ரெடர்.... நான் வெட்டுர ஸ்ரெடர் அண்ணளவா 3மி.மீற்றல தான் வெட்டுது. அதிலதான் இதெல்லாம் செய்யுறன்...

   ஆனா அதிலயும் முதல் பற்றன் ரெடிமேற் கட்டிங் பேப்பராக விற்றதை வாங்கி செய்தது. இரண்டாவது என் ஸ்ரெடரில் வெட்டினது.......
   ஸ்..ஸப்பா போதுமோ விளக்கம்...:)))

   Delete
 5. இளமதி நான் ரொம்ப பிசி ..அதான் மீட் செய்ய டைம் இல்லை
  க்விலிங் சூப்பர் கவிதை சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு..வாழ்த்திற்கும் வரவிற்கும் ரொம்ப சந்தோஷம்...
   நீங்க பிஸியா இருக்கிறதால நானும் எவ்வளவோ கேட்க இருக்கு...வெயிட் பண்றேன்..:)

   ஆறுதலா வாங்கோ..மிக்க நன்றி..

   Delete
 6. ஆஹா! 2 காடும் கலக்கல். பாட்டு இப்பதான் முதல்தரம் கேட்கிறன்.
  உங்கட 'கவிதை' சூப்பர். தொடர்ந்து எழுதுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. இமா வாங்கோ..இந்தப்பாட்டு இப்பதான் கேக்குறீங்களோ...அவ்...இப்பிடியும் சிலபேர் இருக்கினம்...:) ச்சா... இவ்வளவுகாலம் இதை கேட்காம காதை வேஸ்ட் பண்ணீட்டீங்களேஏஏஏ...:)))

   சூப்பர் பாட்டு இது...நான் சரியான ரேடியோ சினிமாப்பாட்டுப் பைத்தியம். சினிமாப்பாடல்கள் பாட்டின் கவிநயம், பாடகர் குரல், அதைவிட இசை இப்படி என்னைக்கவரும்...

   ஏன் ரேடியோ பைத்தியம்ன்னு சொன்னேன்னா அதில நாங்க எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத பாடல்கள் எமக்கே தெரியாம ஆச்சரியமாக சிலபல தருணங்களில் ஒலிபரப்பாகும் கேட்கேக்கை சுகமோ துக்கமோ அந்த உணர்வே தனி..அதனால ரேடியோ சினிமாப்பாட்டுன்னு சொன்னேன்...:)

   நான் எழுதினதை கவிதைன்னு நீங்களும் சொல்லுறீங்களோ....ஆர்வத்தில எழுதீட்டன்..இருந்தாலும் உள்ளூறச் சரியான பயம் இருந்தது..உங்க வாயால இதைக் கவிதை எண்டிட்டீங்க. அப்ப நிச்சமா நானும் கவிஞி தான்...:)))

   வாழ்த்திற்கு மிக்க நன்றி இமா...

   Delete
 7. Both the cards look beautiful Ilamathy! Hearing this song for the first time! Collage days are golden memories in everybody's life right? :)

  Kavithai is superb!

  ReplyDelete
  Replies
  1. மகி வாங்கோ...ரொம்ப சந்தோஷம்..
   நீங்க ஆங்கிலத்திலத்தில ரைப்பினாலும் நான் தமிழ்லதான் பதில் தருவேன்... ஏன்னா என் தாய் கோவிச்சுக்குவாங்க...
   நம்ம தமிழ்த்தாய் அவங்களைச் சொன்னேன்...:)))

   என்னதிது நீங்களுமா இந்தப்பாட்டு இப்பதான் கேக்குறீங்க....:(
   இந்தப்பாட்டு வந்து 4,5 வருஷமாகுதே..அப்பல்லாம் நீங்க பொறக்கவே இல்லையோஓஓ...அவ்வ்வ்வ்...:)))

   ஆமா...கல்லூரி வாழ்க்கை! அந்த நினைவுகள்!தனிதாங்க...நினைச்சா நிறைய மிஸ் பண்ணிட்டோம்னு நெஞ்சுக்குள்ள சுள்ளுன்னு வலிக்கும்...
   ரொம்ப நன்றி மகி உங்க வாழ்த்திற்கு...

   Delete
  2. இளமதி, கோவிச்சுக்காதீங்க! லேப்டாப்பில் உங்க ப்ளாக்-ஐப் பார்த்தா நான் தமிழில் தட்டுவேன். ஆனா டேப்லட்-ல தமிழ் எழுத்துக்கள் இல்லையல்லோ? அதனால இப்படி கட்ச்சு குதறருறேன்! :)

   லேப்டாப்-ஐ விட ஐபேட் யூஸ் பண்ணுவது அதிகமாகிவிட்டதால்தான் இப்படியெல்லாம்! படிச்சதும் கருத்து சொல்லணும் என்ற ஆர்வத்தில் ஆங்கிலத்தில் தட்டிடறேன். :)

   //இந்தப்பாட்டு வந்து 4,5 வருஷமாகுதே..அப்பல்லாம் நீங்க பொறக்கவே இல்லையோஓஓ...அவ்வ்வ்வ்...:)))// அப்ப நான் நினைவு தெரியாத பேபியா இருந்தேனாம் இளமதி, அதான் தெரிலை. [இங்க யாரும் சிரிக்கப் படாது, கர்ர்ர்ர்ர்ர்!]

   தமன்னா படமெல்லாம் நான் பார்த்ததே இல்லீங்கோ! ;))

   Delete
 8. "நீங்கா நட்பு" பற்றி அழகிய கவிதை படைத்துள்ள

  கவிதாயினி “இளமதி” ”இளைய நிலா” “யங்க் மூன்”

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  மீண்டும் மீண்டும் நேரம் கிடைக்கும் போதும்
  வருவேனாக்கும், ஜாக்கிரதை. ;)))))

  >>>>>>>> பிரியமுள்ள >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வைகோ ஐயா...

   என்ன என்னையைபோய் கவிதாயினியா....ஐயோ நீங்க.. வேறயாரோடை கவிதையையும் இதுக்கு முன்னே படிச்சதில்லையோ.....:)

   இப்பிடி தத்துப்பித்துன்னு எழுதியிருக்கிற என்னைப் பார்த்து கவிதாயினின்னா....

   அங்கை பாருங்க..என் ஃப்லோவரா சமீபத்துல சேர்ந்திருக்காரு சகோதரர் கவிஞர் பாரதிதாசன், நீயெல்லாம் கிறுக்கி அதுக்குப்பேர் கவிதைன்னு சொல்லுறியான்னு கேட்கிற மாதிரி அவர் என்னையை முறைச்சுப் பாக்கிறாப்போல எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே நடுங்கிப்போய் இருக்கேன் நான்...:)))

   நிறைய வரிக்குவரி கருத்துப்பகிர்வு எழுதியிருகீங்க.. சந்தோஷம்..எனக்குத்தான் நேரச் சிக்கல்.பொறுத்துக்கொள்ளுங்க.. விரைவில் வந்து பதில் எழுதுகிறேன்...

   மிக்க மிக்க நன்றி உங்கள் வருகை, வாழ்த்துக்களுக்கு..

   Delete
  2. அன்புள்ள இளமதி,

   கவிதை என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்ற என் கருத்தினை நான் இன்று 09.01.2013 பகிரங்கமாக, வலைச்சரத்தில் பின்னூட்டமாகக் கொடுத்துள்ளேன். போய்ப்பாருங்கோ.

   இணைப்பு இதோ:

   http://blogintamil.blogspot.in/2013/01/2518.html

   அதில் நான் சொல்லியுள்ள முக்கியமான பகுதி மட்டும் இதோ உங்கள் பார்வைக்காக:


   *****
   வை.கோபாலகிருஷ்ணன் said...

   பொதுவாக கவிதைகளைப் பொறுமையாகப் படிக்கவோ,
   அதன் பொருளைப்புரிந்து கொள்ளவோ, ரஸிக்கவோ நான் பெரும்பாலும் விரும்புவது இல்லை.

   பெரும்பாலானவர்கள் கவிதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதி அவர்கள் நேரத்தை வீணாக்குவதுடன் நம் நேரத்தையும் வீணாக்குகிறார்கள், என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

   நான் கவிதையே இயற்றத் தெரியாதவனும் அல்ல.

   எதிலும் ஒரு கவித்துவமும் நகைச்சுவையும் கலந்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன்.

   அதே சமயம் படிப்பவர்களுக்கும் உடனடியாக அது புரிய வேண்டும்.

   என் சிற்றறிவுக்கு எட்டாதவை ஏதும் கவிதையே அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளவன்.

   அதற்காக நான் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வெறுப்பவனும் அல்ல.

   தமிழ்நாட்டின் பிரபல கவிஞர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களால் ON THE SPOT தலைப்பு கொடுக்கப்பட்டு, தலைப்புக்கேற்றபடி நானும் கவிதை எழுதிக்கொடுத்து, மிகவும் பாராட்டுக்களும் கரவொலிகளும் பெற்றவன் தான், நான்.

   அந்த நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன.

   சுமார் கால் மணி நேரததிற்கு மேல் ஆயிரக்கணக்கானவர்களால் தொடர்ந்து கரவொலி எழுப்பப்பட்ட என் கவிதை ஒன்றும் இன்னும் என் நினைவினில் பசுமையாக உள்ளது.

   ஒருசில அரசியல் காரணங்களால் நான் அதை இங்கு இப்போது எழுதி சுட்டிக்காட்ட விரும்பவில்லை..

   *****

   எனவே யங்க்மூன்,

   யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து கவிதைகள் எழுதுங்கோ.
   நான் என் மேற்படி கருத்தினில் சொல்லியுள்ள கவித்துவமும், நகைச்சுவையும் கலந்தே அது இருக்கட்டும்.

   அன்பான வாழ்த்துக்களுடன் உங்கள் VGK

   Delete
  3. கவிதையைப் படிப்பவர்கள் சாமானியவர்களாகவே இருப்பினும் அவர்களுக்கும், அவர்கள் சிற்றறிவுக்கும் புரியும்படியாக இருக்கட்டும் தங்கள் கவிதைகள்.

   இன்று பாரே கொண்டாடும் நம் முண்டாசுக்கவிஞர் பாரதியார் கவிதைகளை நினைவில் கொண்டு அழகாக புரியும்படியாக, கவித்துவம் வாய்ந்ததாக நகைச்சுவையும் கலந்து எழுதுங்கோ.

   நீங்கள் “கவிதாயினி” என்று நான் சொன்னது சொன்னது தான். அதை நிச்சயம் நீங்கள் நிரூபிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. வாழ்த்துகள்.

   VGK

   Delete
  4. அன்பு நிறைந்த வைகோ ஐயா...உங்கள் நட்பின், அன்பின் வலிமையை புரிந்தவள்தான் நானும்.

   நீங்கள் என் எழுத்துக்களை என் கவிதை எழுதும் ஆர்வத்தினை தூண்டிவிடும் நோக்கிலேயே கவிதாயினி என்று சொல்லி மெச்சுகின்றீர்கள் என்பதையும் அறிவேன்...
   அதானாலேயே நானும் நீங்கள் கூறிய அதே நகைச்சுவையாகவே //.ஐயோ நீங்க.. வேறயாரோடை கவிதையையும் இதுக்கு முன்னே படிச்சதில்லையோ.....:)// என்று கூறினேன்.
   உங்களை தாழ்த்தியோ இல்லை குத்திக்காட்டிப் பேசுவதாகவோ வேறெந்த நோகமுடனும் நான் இப்படிக் கூறவில்லை.

   உங்கள் திறமையை நானும் அறிவேன்..ஏனைய பதிவர்களும் அறிவார்கள்.
   உங்களை என் எழுத்துக்கள் நோகச் செய்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...வருந்துகிறேன்...

   நீங்கள் தந்துள்ள வலைப்பூவுக்கு போய்ப் பார்க்கின்றேன்.

   மிக்க நன்றி ஐயா உங்கள் ஊக்கத்திற்கு.

   //நீங்கள் “கவிதாயினி” என்று நான் சொன்னது சொன்னது தான். அதை நிச்சயம் நீங்கள் நிரூபிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.//

   அடடா...இப்படி ஊக்கப்படுத்தும்போது அதைச் சொன்ன உங்கள் பெயர் நிலைக்கவென்றாலும் நான் முயன்று கவிதை எழுத வேண்டாமோ...:))) எழுதுகிறேன் ஐயா....

   மீண்டும் மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 9. இரண்டு கார்ட்ஸூம் மிகமிக அழகாக செய்திருக்கிறீங்க. கவிதை நன்றாக‌
  எழுதியிருக்கிறீங்க. பாடல்,படித்ததில் பிடித்தது எல்லாமே நன்றாக இருக்கு இளமதி.

  ReplyDelete
  Replies
  1. அம்மு...வாங்கோ ...என் ஆத்மார்தமான ரசிகையல்லவா நீங்க...;)

   ம்..என்னவோ கவிதை போல எழுதணும்னு தமிழ்மேல் தீராக்காதல்...அதனால் நானும் இப்பதான் கவிதையை எழுத்துக்கூட்டதொ.ட..ங்கி இருக்கிறேன். பார்க்கலாம் தேறுவேனா என்று....

   பாடல் உங்களுக்கும் உங்கள் பழைய நினைவுகளை மீட்டி இருக்குமே....
   முதலாவது கார்ட் செய்தவற்றில் எனக்கும் பிடித்த்த்தமானதே..:)

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மு...;)

   Delete
 10. //நட்புக்களே நலமோ?......

  என்னவோ கனநாள் காணாதமாதிரி ஓர் உணர்வு அதுதான் கேட்டேன்.//

  ஆம் வருஷக்கணக்கில் ஆனது போலத்தான் உணர்கிறோம்.

  எப்போதுமே ஒருவருக்கொருவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் மட்டுமே இருக்கும் போது..

  ”நலம் தானா ..... நலம் தானா ..... உடலும் உள்ளமும் நலம் தானா” என்ற அந்த நாட்டியப்பேரொளி பத்மனியின் பாடலும் ஆடலும் மட்டுமே இப்போ நினைவுக்கு வருகிற்து. [படம்: தில்லானா மோஹனாம்பாள்] இந்தப்பாடலையும் இணைத்து காணொளியாகக் காட்டியிருந்தால் தங்களின் தலைப்புக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

  >>>>>>>

  ReplyDelete
 11. //ஜேர்மனி காலநிலை இம்முறை ஸ்நோ வீழ்ச்சி நான் இருக்கும் இடத்தில் குறைவென்றாலும் குளிருக்கு பஞ்சமில்லை...:) //

  ”குளிரடிக்குதே ...... கிட்டவா கிட்டவா” என்ற பாடலைப்பாடிக்கொண்டு போர்வையால் இழுத்துப்போத்திக்கொண்டு பேசாமல் இருப்பீர்களாக்கும்..

  இங்கு திருச்சியில் மார்கழியிலும் பகலில் வெயில் கொளுத்துகிறது.

  பேசாமல் ஜெர்மனிக்கே குடிபெயர்ந்து சென்று விடலாமோ என நினைக்கத் தோன்றுகிறது.

  ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு இடம் செல்லவா முடியும்?

  இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று நினைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

  அந்தப்போர்வை ஜாக்கிரதை. பத்திரமாக ஒன்றுக்கு இரண்டாக வைத்துக்கொள்ளுங்கள். குளிருக்கு அது மட்டும் தான் இதம் தரும் அல்லவா? ;))))))

  >>>>>>

  ReplyDelete
 12. //மனசும் சூரிய வெளிச்சம் இல்லாதமையாலும் அதிக நேர இருள் சூழ்ந்திருப்பதாலும் உற்சாகமில்லாமல் சோர்ந்து போய்விடுகிறது..//

  அடடா, மனம் சோர்ந்து போனால் எல்லாமே போச்சு. உண்மை தான்.

  ஆனால் எனக்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும் கூட அதன் கடுமை தாங்க முடியாமல் மனம் சோர்ந்து விடுவது உண்டு.

  என்ன தான் ஏ.ஸி. அறையாக இருப்பினும், தொடர்ந்து மின்சார சப்ளை வேண்டுமே!

  மின்சாரம் போன்ற அதிர்வு அளிக்கும் சம்சாரம் மட்டுமே எப்போதும் சப்ளையில் இருப்பதால், ஏதோ ஒரு மாதிரியாக ஓட்டி வருகிறோம்.

  அருகில் பல்பைக் கொண்டு சென்றாலே போதும். கப்புன்னு அது எரிய ஆரம்பிக்கும். அவ்வளவு பவர் உள்ளவர்களாக்கும். ;)

  >>>>>

  ReplyDelete
 13. //இதோடு நட்புகளை அதிகம் காணக்கிடைக்காமல் போகும்போது மனதில் வெறுமை, சலிப்பு இப்படி ஆக்கிரமிக்கப் பார்க்குது....ஆகவே ஃப்ரண்ஸ்... வாங்கோ சுகமா இருக்கிறீங்களோ? வேறை என்ன புதினங்கள்... புது வருஷ விஷேசங்கள்... சொல்லுங்கோ. கதைப்பம்... //

  அச்சா, பஹூத் அச்சா! இந்த ’கதைப்பம்’ அல்லது ’கதைப்போம்’ தான் எந்த நாட்டு எந்த மொழிக் காரர்களாக இருக்கும் என்பதைக் கதைப்பதாக உள்ளது. ;)

  >>>>>>>>.

  ReplyDelete
 14. //நானும் செய்த க்விலிங் கார்ட்டையும், //

  குயில் கார்டு [க்வில்லிங்] இரண்டும்
  நல்ல அய்கோ அய்கூஊஊஊ

  அதுவும் முதலில் உள்ளது மயில் தோகை போல சூப்பரோ சூப்பர்.

  ’கை’ வேலைகளில் ’கை தேர்ந்தவராக’ இருப்பீர்கள் என்று அறிய முடிகிறதூஊஊஊ.

  உங்களிடம் தான் நான் இதைச்செய்ய நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

  எப்படி அழகாகச் செய்யணும்ன்னு சொல்லித் தருவீங்களா இளமதீஈஈஈஈ.;)))))

  >>>>>>

  ReplyDelete
 15. நான் கொஞ்சம் சோம்பேறிப்பையன் தான், ஆனால் இளம’தீ’ சொல்லிக் கொடுத்தால் டக்கென பிடித்துக்கொள்ளும் கற்பூர புத்தி எனக்கு உண்டு.

  என் கற்பூர புத்தியில் [இளம]தீ ப்பிடிக்கும் நாள் எந்த நாளோ?

  காத்திருப்பேன் காத்திருப்பேன் ... காலமெல்லாம் காத்திருப்பேன்!

  ”பிச்சைப்புகினும் கற்கை நன்றே” என்றல்லவா சொல்லியிருக்கிறாங்கோ.

  அதனால் குயிலிங் கற்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருப்பேன்.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. எண்ட திருச்செந்தூரானேஏஏஏஏஏஏஏ :))))

   Delete
  2. //athira09 January, 2013 14:24
   எண்ட திருச்செந்தூரானேஏஏஏஏஏஏஏ :))))//

   இளமதி, இவங்க ஏன் நடுவில் வந்து வம்பு இழுக்கிறாங்கோ?

   ஏன் அந்த ரெட்டைப் பெண்டாட்டிக்காரனான திருச்செந்தூர் முருகனைக் கூப்பிடுறாங்கோ? எனக்கு இது பிடிக்கவில்லை.
   எனக்கு இந்த முருகனையே பிடிக்காதூஊஊஊஊ.

   நேக்கு ஏகபத்னி விரதனான ஸ்ரீராமனைத்தான் பிடிக்குமாக்கும்.

   ஏகபத்தினி என்றால் ஏகப்பட்ட பத்தினி என்று நினைச்சுக்காதீங்கோ.

   ’ஏகம்’ என்றால் ஒன்றே ஒன்று என்று தான் அர்த்தமாக்கும்.
   ஸ்ரீராமனுக்கு ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் மட்டுமெ.

   ஆனாக்க அவங்க அப்பா தஸரத மஹாராஜாவுக்கு பத்தாயிரம் பெண்டாட்டிகள்ன்னு சொல்லுவாங்கோ.

   கஷ்டம் கஷ்டம் ..... ஒருத்தியை சமாளிப்பதே மஹா கஷ்டம். அவருக்கு அபீஸியலாகவே மூன்று மனைவிகள். அதைத்தவிர இந்த பத்தாயிரம் ஸ்டெப்னிகள் ... மஹா மோசம் ... ;)

   இந்த நம் அதிரடி அதிரா கிட்டே, நம்மைப்பத்திக்கொஞ்சம் சொல்லி வையுங்கோ. இந்த தடவை மன்னிச்சுப்புட்டேன்னு.

   OK ... YOUNG MOON! .... Bye for now. vgk

   Delete
 16. //கவிதை (எண்டு சொன்னா அடிக்கவருவீங்க...:) ) என என் மனசில தோன்றினதை எழுதினதையும் பாருங்கோ....:))//

  அடிக்கவும் மாட்டோம்., கடிக்கவும் மாட்டோம்.

  படிப்போம். ரஸிப்போம், பாராட்டுவோம் .... அம்புட்டுத்தான்.

  >>>>>>>>

  ReplyDelete
 17. //நீங்கா நட்பு
  சூரியன் போல நிறைவான ஒளியை
  மாறாமல் தருவது நட்பு…
  ஓயாமல் கரை மோதும் கடலலை போல
  கணம் தோறும் நீங்காமல் தேடுவதும் நட்பு..
  அநீதிதனை பொசுக்கும் அக்கினி பிழம்பாக
  என்றென்றும் துனைவரும் அனலாயுதம் நட்பு…
  எதையும் தாங்கும் பொறுமைக்கு நிலமாம்
  எனக்கும் எப்பொழுதும் எனைத் தாங்குவதும்
  என் அருமை நட்புகளே…//

  நீங்காத நினைவலைகளை தாங்கி நிற்கும் தங்கமான கவிதை இது.

  வரிக்கு வரி அன்பு பிரவாகமெடுத்து முட்டுது மோதுது .... இனிமையோ இனிமை.

  என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்புள்ளம் கொண்ட உங்களுக்கு ”கவிதாயினி இளமதி” என்ற சிறப்புப் பட்டம் தந்து இன்று நான் மகிழ்கிறேன்.

  [அதிரா, அஞ்சு, அம்முலு, இமா முதலியோர் ஜோராகக் கைத்தட்டுங்கோ ப்ளீஸ்]


  >>>>>>>

  ReplyDelete
 18. // கல்லூரி வாழ்க்கையையும் நண்பர்களையும் மறக்க முடியுமா...மறக்கக்கூடியதா....... //

  அது எப்படி முடியும்?

  “மறக்க மனம் கூடுதில்லையே” தான்.

  இன்று பதிவுலக நட்புக்களையும் மறக்கத்தான் முடியவில்லை.

  >>>>>>

  ReplyDelete
 19. //பேசும் வார்த்தைகளை விட பேசாத மெளனத்திற்குத்தான் அதிகம் அர்த்தம் உண்டு.

  பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும், ஆனால் மெளனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்!.//

  ஆஹா, அருமையோ அருமை.

  இனி நான் என்ன பேச இருக்கிறது?

  ஆகையால் நானும் மெளனம் காத்து வருகிறேன்.

  உலகில் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்தத்தெருவில், எந்த வீட்டில் எந்த அறையில் என்னை நேசிப்பவர்கள் இருந்தாலும் புரிந்து கொள்ளட்டும் என் அன்பினையும், பண்பினையும்.

  எல்லோரும் நீடுழி வாழ்க என வாழ்த்தி ஆனந்தக்கண்ணீருடன் விடைபெறுகிறான்
  உங்கள் பிரியமுள்ள V G K.

  -oOo-.

  ReplyDelete
  Replies
  1. ///ஆனந்தக்கண்ணீருடன் // கோபு அண்ணன் இந்தாங்கோ டிஷ்யூ.. துடைச்சிடுங்க:)

   Delete
  2. athira 09 January, 2013 14:25
   ***ஆனந்தக்கண்ணீருடன்***

   கோபு அண்ணன் இந்தாங்கோ டிஷ்யூ.. துடைச்சிடுங்க:)

   தக்க நேரத்தில் தடாலடியாக டிஷ்யூ கொடுத்து என் கண்ணீரைத் துடைத்து களிப்பளித்த அதிராவுக்கு ..... ஜே !

   மிக்க நன்றி, அதிரா. [சிரிக்கிறேன் ;) OK யா?]

   Delete
 20. "ஸ்ரீநிவாசா .. கோவிந்தா ..!!"

  என்ற பதிவினை எல்லோரும் படிக்கப்போங்கோ. கருத்தும் கூறுங்கோ. மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

  இளமதீ, நீங்க ஏற்கனவே படிச்சுட்டீங்கோ, அதனால் மறுபடியும் படிக்கப்போய், மறுபடியும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கோ.

  நம் அம்முலு, அதிரா, அஞ்சு எல்லோரையும் அனுப்பி வையுங்கோ .... ப்ளீஸ்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. என்னாது புதுப்பதிவோ நான் பார்க்கல்லியே.. ஈவிங் வருகிறேன்ன் சுனாமியாக:)

   Delete
 21. ”ஸ்ரீநிவாஸா ... கோவிந்தா”

  இணைப்பு: http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_9.html

  இன்று புதன் கிழமை பெருமாளுக்கு உகந்த நாள்.

  மாதமோ மார்கழி.

  மாதங்களில் நான் ”மார்கழி” என்று சொல்கிறார் ஸ்ரீமந் நாராயணன்.

  இன்று பிரதோஷ புண்ணிய காலமும் சேர்ந்துள்ளது. அது சிவனுக்கு மட்டுமல்ல பெருமாளாகிய ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்திக்கும் ஏற்ற நாள்.

  அதனால் எல்லோரும் போய் அந்தப்பதிவினைப்பார்த்தாலே புண்ணியம் உண்டு.

  எவ்வளவுக் கெவ்வளவு அந்தப்பதிவினைப் பாராட்டிப் பின்னூட்டம் இடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு புண்ணியம் சேரும்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 22. இளா....அழகான கை வேலை.அசத்தல் !

  கவிதை நட்பின் பாடலாய் அருமை.எனக்கும் பிடிச்ச பாட்டு.தொடர்ந்தும் எழுதுங்கோ.இன்னும் அழகாகும் கவிதை !

  மௌனங்களை மொழி பெயர்க்கப் பழகிக்கொண்டிருக்கிறேன் உன்னை நேசிப்பதால் !

  ReplyDelete
  Replies
  1. அன்பு ஹேமா...:) வாங்கோ...சரியான சந்தோஷமாய் இருக்கு எனக்கு...

   நட்பு என்ற சொல்லிற்கு எத்தனை வலிமை பாருங்கோ..
   நான் நாடும், விரும்பும் நட்புகள் எல்லாம் எனை நாடி வந்ததை எண்ணி நட்பின் தன்மை கண்டு வியக்கிறேன்...

   //தொடர்ந்தும் எழுதுங்கோ.இன்னும் அழகாகும் கவிதை//
   ம்.ம் வஷிஷ்டர் வாயால் பிரம்ரிஷி பட்டம் கிடைச்சமாதிரி இப்பவே சந்தோஷமா இருக்கு எனக்கு...

   உங்க வரவு வாழ்த்து அத்தனைக்கும் மிக்க நன்றி ஹேமா...


   Delete
 23. வணக்கம் இளமதி அக்காள்.
  நட்பினைப்பற்றி நிறைவான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஆ..வணக்கம் நேசன்..உங்கள் முதல் வரவு..
   மிக்க சந்தோஷம்..
   நட்பின் வலிமை இதுவல்லோ..

   நேசன் என்னை அக்காள் எனவெல்லாம் வேண்டாம்...இளமதி என்றே சொல்லுங்கள்...

   நீங்கள் எல்லாம் மெச்சும் அளவிற்று இல்லை ஏதோ சும்மா எழுத்துக்கூட்டி இருக்கிறேன்...

   அன்பான உடனடி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நேசன்!

   Delete
 24. ஸ்நோ-பனிமழை என்று வந்தால் இன்னும் அழகாய் இருக்கும் அக்காள். (புது வெள்ளை மழை பொழிகின்றது -வைரமுத்து எழுதியது:))))))

  ReplyDelete
  Replies
  1. ம்.ம் ஸ்நோ இம்முறை நோ..நோ எண்டு ஓடீட்டுது போல இருக்கு...பார்ப்போம். கொட்டினால் நீங்கள் சொன்ன பாடலைப் போடலாம்...

   Delete
 25. வாழ்த்து அட்டை பிரமாதம் நல்ல பொறுமைசாலி இந்துமதி அக்காள். தொடர்ந்து எழுதுங்கள் கவிதைகள் பல.

  ReplyDelete
  Replies
  1. பொறுமை அது என்னிடம் நிறைய என்றில்லாவிட்டாலும் இந்தக்கைவேலை செய்யுமளவிற்கு இருக்கு...:)

   கவிதை குட்டிக்குட்டியா எழுதி வைச்சிருக்கிறேன்..இப்ப உங்க எல்லாரின் வாழ்த்தோடு கொஞ்சம் தைரியம் வந்திருக்கு..தொடரலாம் என நினைக்கிறேன்.

   மிக்க நன்றி நேசன் வாழ்த்திற்கு.

   Delete
 26. ''குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:'' 'தலையங்கத்தில்' என்பதை பதிவின் 'தலைப்பில்' என்று போட்டால் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
  'துனைவரும்' -- துணைவரும் என்றல்லவா இருக்க வேண்டும்
  பிழைகளை சொல்லுங்கோ.என்று எழுதியிருப்பதால் குறிப்பிட்டுள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அவைநாயகன்...:) முதன்முதல் இங்கு வந்திருக்கிறீங்கள்..
   // 'தலையங்கத்தில்' என்பதை பதிவின் 'தலைப்பில்' என்று போட்டால் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்//
   ஓ..அது நாங்கள் கதைக்கும் பாஷையிலயே எழுதிவிட்டேன்ன்ன்.. அதனாலென்ன அடுத்த பதிவுடன் மாற்றிவிடுகிறேன்.

   துனை..துணை எழுத்துப் பிழை உணர்தியமைக்கும் மிக்க நன்றி..:)
   அவசரமாக எழுதி பதிவேற்றம் செய்யும்போது சில சமயங்களில் என் கண்களை ஏமாற்றி இப்படி நடந்துவிடுகிறது...கவனத்தில் வைத்துக்கொள்கிறேன்.

   அன்பான வரவிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி!

   Delete
 27. சூரியன் போல நிறைவான ஒளிய மாறாமல் தருவது நட்பு…

  இளவெய்யிலின் அருமை இளைய நிலாவின்
  இனிய பனிப்பொழிவில் உணரப்படுகிறது ...

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி...

   அன்புமிக்க வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete

 28. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ஐயா..

   தமிழர் திருநாளாம் தைத்திருநாளில்
   தங்களின் வரவு என் மனைக்கு
   தந்திடுதே தனி மகிழ்வு எனக்கு.

   நவில்கின்றேன் நயமுடன் என் நன்றிதனை!

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் என் இதயபூர்வமான இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

   Delete
 29. அன்புள்ள இளமதி, வணக்கம்.

  தங்களுக்கும் தங்கள் இல்லத்திலும்
  உள்ளத்திலும் உள்ள அனைவருக்கும்
  என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! ;)

  2
  =
  ஸ்ரீராமஜயம்
  -----------

  செங்கரும்புச் சாறெடுத்து
  இதழினிலே தேக்கி,

  சிந்துகின்ற புன்னகையால்
  துன்பம் நீக்கி,

  மதமதத்த வளையணிந்த
  கைகள் வீசி,

  மங்களாம்
  “தை” என்னும்
  மங்கை வருவாள்!

  பொங்கியெழும்
  புத்தின்ப உணர்ச்சி
  தருவாள்!!

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. அழகு தமிழ் சொல்லெடுத்து
   அலங்காரமாய் வாழ்த்திய ஐயா!
   ஆனந்தமுடன் என் நன்றியும்
   அன்பு வாழ்த்துக்களும் உங்களுக்கு!!

   மிக்க நன்றி வைகோ ஐயா உங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

   Delete
 30. கை வேலை அழகு, அருமை.
  சூரியன் போல நிறைவான ஒளியை மாறாமல் தருவது நட்பு…//
  கவிதை மனதுக்கு நிறைவு.

  நட்பு பாடல் பகிர்வு கேட்டு ரசித்தேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோமதி அரசு...
   முதன்முறையாக இங்கு வருகிறீர்கள் வாங்கோ ...

   உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!

   நேரப்பற்றாக்குறை உங்கள் வலைப்பூவுக்கும் விரைவில் வருகிறேன்.

   Delete
 31. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா...

   என்னதிது என்னால இன்னும் நம்பவே முடியேலை...
   அங்கை இப்ப ஓடிப்போய்ப் பார்த்திட்டு பின்னூட்டம் குடுத்திட்டு வாறன்......

   பெரீய பூக்கூடையை தலையில தூக்கி வைச்சிட்டீங்கள்...ஐயோ பாரமாகிடக்கு..பூக்கூடை எண்டதால பாரமாயிருந்தாலும் சந்தோஷமாயும் இருக்கு...:)

   பெரிய பெரிய பதிவாளர்களுக்கு இடையில என்னையும் ஒரு ஆள் எண்டு அறிமுகப்படுத்திவிட்டிருக்கிறீங்கள்.
   உங்கள் எதிர்பார்ப்பு வீணாகிவிடாமல் இன்னும் இன்னும் சிறந்த நல்ல பதிவுகளை இங்கு தர வேண்டுமென என் மனதில் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

   உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி மனோ அக்கா!

   Delete
 32. வணக்கம்
  இளமதி
  19,01,2013 இன்று உங்களின் நட்பு என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வீடியோ பாடல் மிக அருமை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்...
   முதன்முறையாக இங்கு வருகிறீர்கள் வாங்கோ ...

   வலைச்சரத்தில் எனது இவ் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்துச் சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்!

   உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

   நேரப்பற்றாக்குறை உங்கள் வலைப்பூவுக்கும் விரைவில் வருகிறேன்.

   Delete
 33. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆசியா!

   அசத்துகிறீர்கள் நீங்களும்..:) உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_