Pages

Jan 19, 2013

வாழும் காலம்


நாம் வாழும் காலம் எவ்வளவு தெரியுமா?....

        ஜென் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம் "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்கு சீடர்களுள் ஒருவன் "வேறு எத்தனை... நூறு வயது தான்" என்று கூறினான். குருவோ, "இல்லை" என்றார். "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவன் கூறினான். 

அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு "ஒரு வினாடி தான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். 

அதற்கு குரு "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்கு சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார். 

இனையத்தளம் ஒன்றில் படித்த ஜென் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்...
>>>>>>>>>>0<<<<<<<<<<

வாழும் காலமதில் இணை பிரியாமல் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு ஜோடிக்கு செய்த க்விலிங் வாழ்த்து மடல்இப்போதாயினும் சொல்....

                 ஓராயிரம் கவிதை சொல்லுகிறாயே வாயால் இல்லையடி 
                 பா ஆயிரம் படிக்கத் தூண்டும் உன் கண்களால்
                 மின்னலடித்துக் கண்கள் இருண்டதடி நிலை தடுமாறுகிறேன்
                 ஓ நிலவின் வெண்மையென நீ சிந்திய புன்னகையாலோ
                 
                 இருளினில் அது என்ன செந்நிறத்தில் மின்னுகிறது
                 உன் கூந்தலில் இருக்கும் ஒற்றை ரோஜாவோ
                 எத்தனை பேர் என்னருகில் நின்றாலும் சட்டென ஏதோ 
                 என் காதுகளுக்கு மட்டும் கேட்கிறதே அது உன் 
                                                                                                  - வளையோசையோ
                 
                 எத்தனை வித்தைகள் செய்தென்னை மயக்குகின்றாய்
                 நித்திரை போச்சுதடி நினைவெல்லாம் நீயே ஆனாய் 
                 சித்திரமே செந்தேனே என் சித்தமெல்லாம் நீதானடி
                 இப்போதாயினும் சொல் உன் மனத்திலும் நானா...
--__--__--__--__--


அருள்தாராய்...

                                      இறைவா உன்னிடம்  கேட்கின்றேன்
                                      எம் இனம் வாழ உன்தன்  அருள்தாராய்
                                      குறைவாய் எமதன்பு என்றிடாமல்
                                      நிறைவாய் வாழ வரம்தாராய்...

இளமதி   


மேலே உள்ள மயில் இறகு க்விலிங் கைவேலையாக எத்தனையோபேர் இணையத் தளங்களில் விதவிதமாகச் செய்திருக்கிறார்கள். 
அவற்றில் சிலவற்றைப் பார்த்து நானும் செய்துள்ளேன்...
------------------------------------------------

என்னைக் கவர்ந்த பாடலில்..:
 பாடகர் அவரின் குரல், இசை, கவிதை அத்தனையும் இணைந்த நல்ல காட்சியுடனான அருமையான பாடல்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 
எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன். (நன்றி கூகிளாரே..:).


+++++++++++++++++++

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

52 comments:

 1. ஹையா, இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ

  அதிரா இல்லையாக்கும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைகோ ஐயா...வாங்கோ..ஓம்..நீங்கள்தான் ஃப்ர்ஸ்டூ...அதில சந்தேகமே இல்லை...:)

   நல்வரவு..மகிழ்ச்சி எனக்கும்...:)

   Delete
  2. மீ த 1ஸ்ட்டூஊஊ:)

   Delete
  3. அதிரா வாங்கோ... //மீ த 1ஸ்ட்டூஊஊ:)//
   ஓம் அதிரா! எனக்கு என் மனசில் நீங்கதான் எப்பவும் 1ஸ்டூ அண்ட் பெஸ்ற்டூ...:)

   Delete
 2. நேற்றைய வலைச்சரத்தில் தாங்களும் என்னுடன் வைரமாக ஜொலித்து மின்னியதில் நான் அகம் மகிழ்ந்து போனேன் தெரியுமோ!

  நான் நம் அதிராவுக்கு நிறையவே வைர நகைகள் தர வேண்டிய பாக்கியுள்ளது. அதனால் இது விஷயம் நமக்குள் மட்டும் இருக்கட்டும். அதிராவிடம் சொல்ல வேண்டாம்.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்சா நீங்க மட்டும் படிச்சிட்டு, இரேஸர் போட்டு அழிச்சிடுங்கோ. ஸ்டவ்வில் போட்டு கொளுத்திடுங்கோ, ப்ளீஸ்.

   ஆஹா, எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?

   தெரியாம எழுதிப்புட்டேனே .... அய்யோ ... ஜாமீஈஈஈஈ. அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் வந்து முருங்கை மரத்திலே ஏறி என்னென்ன பேயாட்டம் ஆடப்போகுதோ?

   அதனால் நாம், நம் இளமதிக்காக, மேலும் சில கருத்துக்கள் கூறி விட்டு ஓடியே போய்டணும். ;)))))

   Delete
  2. என் கொப்பி வலது வாக்கியங்களைக் களவெடுத்த குற்றத்திற்காக, உடனடியாக ஜேர்மனி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மேன்மை தங்கிய, பெருமதிப்பிற்குரிய, அன்பும் பண்பும், பெருத்த அறிவும்:)(ஏஎன் முறைக்கிறீங்க:)) நிறைந்த நிதிபதி (அது நாந்தேன்ன்:)) ஆணையிடுகிறார்:).

   Delete
 3. //ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.//

  ஆஹா, இப்படிச்சொல்லிட்டீங்களே, இதுவரை பல கோடி வினாடிகளை முழுமையாக அனுபவிக்காமல் வீணாக்கி விட்டோமே! ஜாமீஈஈஈஈஈ ;)

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா எங்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நாம் நல்ல பல விநாடிகளை நம் வாழ்வையே வீணாக்குகின்றோம்...:)

   தெரிந்தபின்பாவது அதை உணர்ந்து வாழ்ந்திடுவோமே.

   உங்கள் விரிவான அத்தனை கருத்துப்பகிர்வுகளுக்கும் சிறிது நேரத்தில் வந்து பதில் எழுதுகிறேன்.
   உங்கள் அன்பான வரவிற்கும் ஆர்வமான கருத்துக்கள், வாழ்த்துக்கள் அத்தனைக்கும் மிக்க மிக்க நன்றி!

   Delete
 4. //வாழும் காலமதில் இணை பிரியாமல் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு ஜோடிக்கு செய்த க்விலிங் வாழ்த்து மடல்//

  ஆஹா ... ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே ..

  அந்தக்க்குயில் கார்டு ரொம்ப அய்க்கோ அய்க்காச் செஞ்சிருக்கீங்கோ.

  எனக்கு எப்பூடீஈஈஈஈ செய்யணும்ன்னு சொல்லித் தருவதாச் சொல்லியிருக்கீங்கோ எப்போ எப்போ எப்போ? என ஏங்க வெச்சுப்புட்டீங்களே ... அது ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே !!

  மனம் அங்கலாய்த்துப்போகிறதே !

  >>>>>>

  ReplyDelete
 5. கவிதை மிகவும் அருமையோ அருமை தான். இருந்தாலும் ஒரு டவுட்.

  இது நம் கவிதாயினி இளமதியே எழுதியதா?

  இல்லே இது என்னைப்போன்ற ஒரு ஆசாமி எழுதிய்துபோல உள்ளதே!

  அதாவது ஆணின் மன உணர்வுகள் அப்படியே வெளிப்படுத்தப்பட்டுள்ளதே அதனால் மட்டுமே கேட்டேன்.

  ஆணைப்போல பெண்ணும் பெண்ணைப்போல ஆணும் உணர்வுகளைப் பிரதிபலித்து எழுதமுடியும் தான். அதனால் கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்

  //நித்திரை போச்சுதடி நினைவெல்லாம் நீயே ஆனாய்
  சித்திரமே செந்தேனே என் சித்தமெல்லாம் நீதானடி//

  ஆஹா, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! ;)))))

  சூப்பரோ சூப்பரான வரிகள் இவை மட்டுமே. எவ்வளவு பயலுக இது போலப் புலம்பித்திரிகிறார்களோ! “இப்போதாயினும் சொல்....” என்று.

  >>>>>> மீதி நாளைக்குத்தான் தொடருமாக்கும் ஜாக்கிரதை >>>>>>

  ReplyDelete
 6. ஒரு வரி பின்னூட்டம் சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் இந்த என் நண்பர்
  வை. கோ. இந்த பின்னூட்டங்கள் போடும் இடத்தை லான்ட் க்ராப் மாதிரி ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்.
  அவர் சொல்லி முடிக்கட்டும்.
  மிச்சம் அதாவது அவர் சொல்லி முடித்த பிறகும் சொல்ல இருந்தால், இருக்காது என நினைக்கிறேன்.
  பிறகு வருகிறேன்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. சுப்புரத்தினம் ஐயா வாங்கோ....
   வைகோ ஐயாவை உங்களுக்குத்தெரியும் தானே..அவர் இப்படித்தான்..அடுத்தவர்களை ஊக்குவிப்பதில் அப்படி ஒரு மகிழ்வு அவருக்கு...

   வேண்டிய இடம் உங்களுக்கும் இருக்கிறது நீங்கள் ஆறுதலாக வந்து உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்...:)

   உங்கள் வரவிற்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 7. ஜென் கதையும் க்வில்லிங் வேலைப்பாடும்,உங்களை கவர்ந்த பாடலும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸாதிகா...நலமோ?

   ஜென் கதைகள் உண்மையிலேயே எம்மை நிறையச் சிந்திக்கவைப்பவைதான்.

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி!

   Delete
 8. //அருள்தாராய்...
  இறைவா உன்னிடம் கேட்கின்றேன்
  எம் இனம் வாழ உன்தன் அருள்தாராய்
  குறைவாய் எமதன்பு என்றிடாமல்
  நிறைவாய் வாழ வரம்தாராய்...

  - இளமதி//

  அற்புதமான பிரார்த்தனை தான்.

  அந்த

  ”சு கா னு ப வம்
  மீ ள க் கி ட் டி டா தோ”

  என நினைக்க வைக்குது.

  என் மனம் இப்போதும் ”அங்கலாய்க்கிறதூஊஊஊ”

  இந்த இரண்டு சொல்லாடல்களும் உங்களிடமிருந்தே நான கற்றது.

  உடனே நம் அதிரா கேட்பார்கள்.

  ”தமிழ் வகுப்பு தனியாக தங்களுக்குள் நடைபெறுகிறதோ” என்று.

  கேட்பார்கள் என்ன சென்ற பதிவினில் கேட்டே விட்டார்களே!

  அதைப்படித்ததும் என் மனம் மீண்டும் அங்கலாய்த்ததே.


  >>>>>>>

  ReplyDelete
 9. இறைவா உன்னிடம் கேட்கின்றேன் எம் இனம் வாழ உன்தன் அருள்தாராய்//அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரர் கவியாழி கண்ணதாசன்...

   முதன்முதலாக இங்கு வந்திருக்கின்றீர்கள். மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

   மொழியும் இனமும் எம் இரு கண்கள் அல்லவோ...
   வேண்டு வரம் கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்!

   உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 10. //படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...

  //மறக்காமல் இருப்பது மட்டுமே அன்பல்ல
  என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மை அன்பு....//

  அருமை .... மிக அருமை ....

  நான் இன்றுவரை என் மனதுக்குப்பிடித்த யாரையும் ’மறப்பதும்’ இல்லை.

  எவ்வளவோ இடையில் நடந்து விட்டபோதும் ’வெறுப்பதும்’ இல்லை.

  அப்போ என்னுடையது உண்மையான அன்பல்லவோ!

  //உங்களது உண்மையான உறவுகளை
  மறந்தும் வெறுக்க வேண்டாம்//

  மாட்டேன், மாட்டேன், ஒருபோதும் மாட்டேன்.

  “வெறுக்க மனம் கூடுதில்லையே...”

  //பிரிவும் முறிவும் உயிர்போவதை விட
  அதிக வலியைத்தரும்.//

  ஆம். உண்மை. அந்த வலியை நான் மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளேனாக்கும்.

  -=-=-=-=-=-=-

  தாங்கள் படித்ததில் பிடித்ததை [தங்களிடமே பிடித்துக்கொண்டு பிடிவாதமாக விடாமல்] எங்களுக்கும் சொன்னதற்கு என் நன்றியோ நன்றிகள், இளமதீஈஈஈஈஈஈ.

  இன்றைய தங்களின் பதிவு வெகு அருமையாக அமைந்துள்ளதூஊஊ.

  அன்பான பாராட்டுக்கள்.
  என் இனிய நல்வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  -=-=-=-=-=-=-=-=-

  வேறு யாரும் வந்து என்னை வம்பிழுப்பதற்குள் நான் எஸ்கேப் ஆகிவிடுகிறேன். கோச்சுகாதீங்கோ, இளமதி.

  வருகைதரும் நம் ஆட்களை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லுங்கோ.

  அது தான் மங்கோ குல்பி குடித்துக்கொண்டு, கையும் ஓடாம, காலும் ஆடாம, இருக்காங்களே!

  இப்போதைக்கு வர மாடாங்கோன்னு நினைக்கிறேன்.

  Bye for now.

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 11. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" - அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இராஜராஜேஸ்வரி...

   எத்தனையோ அனுபவிக்கும் எமக்கு இதை தெரிந்திடாமல் இருப்பது இழப்பே...நன்குணர்ந்து நல்வாழ்க்கை வாழ்ந்திடுவோமே...:)

   வரவிற்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete

 12. வணக்கம்!

  எத்தனை நாள்கள் வாழ்கை!
  இயம்பிய கதையைக் கண்டேன்!
  முத்தென மின்னும் சொற்கள்!
  மூச்சியில் கலக்கக் கண்டேன்!
  புத்தனைப் போன்றே சென்கள்
  புகன்றதை எண்ணிப் பார்த்தேன்!
  இத்தனைக் காலம் வீணோ!
  எதிர்வரும் வினாடி வாழ்வு!

  ReplyDelete

 13. வணக்கம்

  பாக்கள் ஆயிரம் சொல்லுகிற - பாடல்
  பூக்கள் மணக்கும் பூஞச்சோலை!
  ஈக்கள் போன்றே என்எண்ணம் - அமா்ந்து
  இன்தேன் பருகும் இக்காலை!

  ------------------

  நம்மினம் வாழ நவின்ற கவிபடித்துச்
  செம்மனம் கொண்டேன் செழித்து!

  ------------------

  மைவண்ணம் கண்டேன்! இளமதியே உன்னுடைய
  கைவண்ணம் கண்டேன் கமழ்ந்து!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ஐயா. வாங்கோ....

   கவியே பாரதிதாசன் ஐயாவே கண்கள் பனிக்கின்றதையா
   கள் உண்ட வண்டாக உள்ளம் உவகை காணுதையா
   சின்னவளின் சிந்தை மகிழ சிறப்பாகக் கவி சொன்னீர்
   முன்செய்த நற்பலனே உங்கள் வாழ்த்து பெறுவதற்கு நான்...

   அன்பான உங்கள் வரவும் ரசனையான கவி வாழ்த்தும் எனக்கு மிக மிக மகிழ்வாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா!

   Delete
 14. அருமையான க்விலிங்குடன் மனதை கொள்ளை கொண்ட கவிதை .
  புது புது அர்த்தங்கள் படப்பாடல் எப்பவும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் .
  மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த தம்பதியருக்கு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு...
   அந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொன்ன உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

   ஓம் அஞ்சு அந்தப் படப்பாட்டுகள் ஞாபகம் இருக்கு ஆனா படத்தை இன்னுமொருக்கா தேடிப்பார்க்கோணும்..நல்ல படமும்கூட...

   கவிதை கொஞ்சம் கொஞ்சமா எழுதிப் பார்க்கிறேன். உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு எண்டது எனக்கும் சந்தோஷமே...:)

   க்விலிங் எனக்கும் பிடிச்சிருக்கு. அந்தத் தம்பதிகளின் சந்தோஷத்திற்கு அளவில்லை...அவைக்கு ரொம்பவே பிடிச்சிருக்காம்...:)

   உங்க வரவிற்கும் நல்ல ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி அஞ்சு!

   Delete
 15. ஜென் கதையின் தத்துவம் அருமை .

  ReplyDelete
  Replies
  1. ஓம் அஞ்சு ஜென் கதைகளில் ஏதேனும் நல்ல அறிவுரைகளோ தத்துவமோ இருக்கும். அதனாலேயே நானும் தேடி வாசிப்பதுண்டு.

   Delete
 16. ஜென் கதையின் ததுவம் சூப்பர். நல்ல க்விலிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் டுல் வைத்திருக்கேன்.என் தோழி எனக்கு கிப்ட் குடுத்தது. இதுவரை நான் ட்ரை செய்ததில்லை. இனிமேல் இதை பார்த்தாவது செய்ய முயற்சிக்கனும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். வாங்கோ விஜி...
   முதன்முறையாக இங்கு வருகிறீங்கள்...

   க்விலிங் ஆரம்பம்தான் கொஞ்சம் கஷ்டம் போல தோன்றும் விடாமுயற்சியுடன் மிகுந்த பொறுமையுடனும் செய்து பழகீட்டால் மிகச்சுலபம். டூல் வைச்சிருக்கிறீங்கள் மெல்லியதாக 3mm அளவில பேப்பரை வெட்டி சுருட்டி முயற்சி பண்ணுங்கோ...:)

   எனக்கு எங்களின் அஞ்சுதான் குரு. அவவிடம் கேளுங்கோ விபரமாக சொல்லித்தருவா...:)..

   உங்கள் அன்பான வரவிற்கு மிகவும் நன்றி விஜி!

   Delete
 17. நோஓஒ மீதான் 1ஸ்ட்டூஊஉ.. என் பின்னூட்டங்களைத்தான் முதலில் படிக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்....
  ஊ.கு:
  இங்குதான் பின்னூட்டங்கள் ஆரம்பமாகின்றன:)..

  ///

  ReplyDelete
  Replies
  1. ஓம் அதிரா உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றேன்...
   ஏனெண்டால்...

   [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSp5ena7zL8mns6FjWt1XRTXXVCrxsval1pe-2ksjfB6EIROmNzEQ[/im]

   Delete
 18. //ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" /// இது ஜூஊஊஊப்பர்... அதனால்தான் நான் ஒவ்வொரு வினாடியையும் சிரிச்சபடியே கழிக்கிறனாக்கும்:) அதுக்காக லூஸோ என ஆரும் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. //அதுக்காக லூஸோ என ஆரும் கேட்டிடப்பூடா //
   உஸ்ஸ்.. ஆர் அப்பிடிச் சொல்லுறது உங்களை ...>:O...:)

   ம்..நீங்கள் கெட்டிக்காறி! முன்பே இதெல்லாம் தெரிஞ்சு நடக்குறீங்கள். எனக்கு இப்பதான் தெரியும் அதான் இங்கை போட்டபிறகெண்டாலும் அதன்படி நடப்பமெண்டு யோசிக்கிறன்...:)

   Delete
 19. உங்கட குயிலிங் கார்ட்ஸ் சொல்லி வேலையில்லை இளமதி.. நான் உதை எல்லாம் பார்த்த பின்பு, என் கார்ட் செய்யும் பொருட்களை எல்லாம், தேம்ஸ்ல வீசிட்டேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. //என் கார்ட் செய்யும் பொருட்களை எல்லாம், தேம்ஸ்ல வீசிட்டேன்ன்// கர்ர்ர்ர்...:) நோ..அப்பிடிச் சொல்லப்பிடாது, செய்யவும் படாது...:)
   ஏன் அப்பிடி நினைக்கிறீங்க நானும் ஆரம்பத்தில இப்பிடித்தான் யோசிச்சன் ஆனா விடாமுயற்சியாய் செய்யுற காரியம் எல்லாம் சக்ஸஸ் ஆகும். உங்களுக்கு நான் சொல்லுறன்..காலம்...:)))

   Delete
 20. பாடலும் தத்துவமும் சூப்பர்ர்...

  //உங்களது உண்மையான உறவுகளை மறந்தும் வெறுக்க வேண்டாம்ம்/// தத்துவம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அந்த உண்மையான உறவைக் கண்டுபிடிப்பதுதானே கஸ்டம்:)

  ReplyDelete
  Replies
  1. ம்..தத்துவம் சொல்லுறது எங்களின் உற்ற உறவென்பதை...:) விளங்கேல்லையோ? கணவன் மனைவி உறவை.
   இப்ப பெரும்பாலும் மணமுறிவு சர்வசாதாரணமாய் இருக்கெல்லோ அதானாலை எண்டு நான் நினைக்கிறன்...:)

   நல்ல்ல நட்புக்கும் பொருந்தும். இப்ப நான் இருக்கேலையே என்னவந்தாலும் எனக்கு உங்கள் நட்பு முக்கியமெண்டு...:)))
   ஐயோ முறைக்காதேங்கோ...:)))

   Delete
 21. அந்த வாழ்த்து அட்டை வேலைப்பாடு அருமை. பிடித்திருக்கிறது.
  மயிலிறகும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா...சுகமா இருக்கிறீங்களோ?

   கனநாளாக் காணேலை.. பிஸி போலை...:)))
   கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சுதோ?

   உங்கள் வரவு வாழ்த்து எல்லாத்துக்கும் மிக்க நன்றி இமா!

   Delete
 22. நல்லதொரு தொகுப்பு இளமதி! கதை-க்வில்லிங்-கவிதை-பாடல், முத்தாய்ப்பாக படத்தில் ஒரு மெசேஜ்! அடேங்கப்பா, ஒரே பதிவில் புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியைத் தருகிறது. :)))

  இருமனம் இணைந்து திருமண பந்தத்தில் கலந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்கோ..மீரா சுகமா? எங்கே ஆளையே காணேல்ல? ;) :)

  ReplyDelete
  Replies
  1. மகி வணக்கம்...:) வாங்கோ வரும்போதே ஃபுல்மீல்ஸ் நினைப்பிலேயே வாறீங்க..;)
   ஹாஆ ஜலீலாக்காட்டை பரிசு வாங்கியிருக்கீங்கல்லே அதான்.:)
   (கோவிச்சுக்காதீங்க தமாஷு..:)..)
   அதுக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு!

   ம்..உங்க அன்பான வருகை கருத்து வாழ்த்து அத்தனைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மகி!

   Delete
 23. திருமணபந்தத்தில் இணைந்த ஜோடிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
  அதற்காக நீங்க செய்த கார்ட் மிக,மிக அழகாக இருக்கு இளமதி.
  உங்கள் கவிதையை மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்க.
  ஜென்கதை, புதுப்புது அர்த்தங்கள் படப்பாடல் நன்றாக இருக்கு.
  தத்துவம் சூப்பர். மிகமிக உண்மையே. எனக்கு மிகவும் பிடித்துஇருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பிரியசகீஈஈஈ...:)
   எங்கை போயிட்டீங்க.. கனநாளாக் காணேலை.. சுகம் தானே...:)

   அட எல்லாமே உங்களுக்கு சூப்பரா இருக்கோ...மிக்க நன்றி அம்மு.

   எனக்கும் இப்பெல்லாம் க்விலிங் பாதி கவிதை பாதி எண்டு மனம் தாவித்தாவிப் பாயுது...;) நேரம்தான் பிரச்சனை.
   எப்படியும் உங்களைப் போல அன்புள்ளங்களின் ஆசியோடு முன்னுக்கு வருவனெண்டு நினைக்கிறேன்...:)))

   அந்த ஜோடிகளுக்கு உங்க வாழ்த்தினையும் சொல்லீட்டன். அவர்கள் தம் நன்றியை உங்களுக்குச் சொல்லிவிடச் சொன்னாங்க...

   வரவிற்கும் ரசிப்புக்கும் வாழ்த்திற்கும் மிக்கமிக்க நன்றி அம்மு..

   Delete
 24. கதை,க்வில்லிங் கவிதை,பாடல் என்ற அசத்தலான பகிர்வு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. வணக்கம் ஆசியா... வாங்கோ!

  நலமாய் இருக்கிறீங்களோ?
  உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி ஆசியா...:)

  ReplyDelete
 26. கதையும் பாட்டும் கலந்தொரு கலசத்தில்
  கனியமுதத் தமிழ் நிறைவாய்க் கண்டேன்
  காற்றும் கதைபேசும் ,கல்லும் பூப்பூக்கும்
  குற்றம் இல்லா தமிழ் மொழிந்தால்
  இத்தனையும் இன்புற்றேன் இதயத்தில்
  இடைவெளிகள் நிறைந்திட்ட மகிழ்வுடனே
  பதிகின்றேன் நானுமொரு நாலுவரி
  நலம் பெறுவீர் நற்றமிழ் பாடுதர்க்காய்..!


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருக சீராளனே தருகிறேன் நல்வணக்கம்
   அரும்புதான் நானிந்த வலையுலகப் பூங்காவினிலே
   விரும்பும் தமிழ்மொழியில் வரைந்திட்ட உம்கவிதை
   கரும்பென இனித்ததுவே கருத்ததில் கூறினீரே

   சிந்தனையில் வந்தசிலவற்றை நான் தந்தேன் இங்கு
   நின்மனம் நிறைவானதோ அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி
   தந்திட்ட வாழ்த்திற்கும் வருகைக்கும் என்றென்றும்
   எந்தன் உளமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்களுமே...

   Delete
 27. அருமையான கை வண்ணம் - கவிதையிலும் நீங்கள் செய்த வாழ்த்து மடலிலும்..

  ReplyDelete
 28. வணக்கம் கிரேஸ்!
  வாருங்கள். வலைச்சர அறிமுகம் நானும் உங்கள் பக்கத்திற்கு வந்தேன்.

  மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_