Pages

Feb 8, 2013

மாறுபாடாக...

அதென்ன மாறுபாடாக என்று எண்ணத் தோன்றுமே...

இம்முறை கதை, கட்டுரை என்றில்லாமல் எனது க்விலிங் கைவேலைகளுடன் சொந்த முயற்சியான கவிதைகளுடனும் வந்திருக்கிறேன். அதைத்தான் மாறுபாடாக என்றேன்...:)

முதலில் இருப்பது லைன் ஆர்ட் என்று சொல்லப்படும் கோட்டுச் சித்திரம். அதை அப்படியே வெறும் கோடுகளாக க்விலிங் கை வேலையாகச் செய்திருக்கிறேன். கீழே கூகுளில் பெற்ற அந்தக் கோட்டுச்சித்திரத்தையும் இணைத்துள்ளேன். வேறு சிலர் வெவ்வேறு படங்களை இம்முறையில் வெவ்வேறு விதமான கற்பனைகளுடன் செய்திருக்கிறார்கள். நானும்  மாறுபாடாக என் கற்பனைக்குத் தோன்றியதைச் செய்துள்ளேன்.
==()==()==()==()==()==()==

மற்றுமொரு க்விலிங் வேலைப்பாடு...


~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாழ்க்கை...

கனவுகள் ஆயிரம் காட்சியாய்  தோன்றுமே
மனதினில் ஏக்கங்கள் மறுபடி மூளுமே
நினைவினில்  நிகழ்ந்தவை  நிழலாய்ப் போகவே
வினைதனை நொந்து மனம் வெறுமையில் வாடுமே

வதைபட்ட வாழ்வுதனில் வசந்தம் வீசுமா
சிதைபட்ட  சிற்பமதில் சிருங்காரம் தோன்றுமா
பதைக்கின்ற மனதோடு பண்பாட முடியுமா
விதைத்திட்ட விதையாவும் வீணாகிப் போனபின்னே...

வளமாக வாழ்ந்திடவே வனப்போடு காத்திருந்தோம்
பழமாகும் என்றே நாம் பசியோடு பார்த்திருந்தோம்
சுழலதில் சிக்கிய சருகாகி நம்வாழ்வு விதிசெயலால்
அழல்மேல் விழுந்த மெழுகாகிப் போனதுவே...
 - இளமதி -  
-----------------------------

நான் எழுதிய குறுங்கவிதையை கூகிளில் கிடைத்த படத்துடன் இணைத்துள்ளேன்.

 
வற்றிப்போன கண்களோடு
முற்றிய நினைவுச் சுமைகொண்டு
இற்றுப்போன வாழ்க்கையாகி
செற்றுப் போகிறேன் கணமும் நான்...
()()()()()()()()()()()()()()()()()()()()


என்னைக் கவர்ந்த பாடல்..:
 இப்பாடலைப் பாடும் எஸ் ஜானகி அம்மாவின் குரல் இதில் மிகமிக அருமையாக சோகத்தினை அப்படியே பிழிந்து தந்துள்ளது. அத்துடன் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள், இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு இப்படி அத்தனையும் அருமையாக இணைந்த நல்ல காட்சியுடனான அருமையான பாடல்...


%%%%%%%%%


படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 

எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன். (நன்றி கூகிளாரே..:).

***********

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

45 comments:

 1. கூகுளில் பொறுக்கிய படமும் உங்கள் வேலைப்பாடும் முற்றுமுழுதாக பொருந்துகிறது ...

  கவிதை அருமை.....
  பாடலும் சூப்பர் ஜானகி அம்மாவின் குரலில் இன்பம் காணாதவர் யார்தான் இருப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆத்மா! முதலாவது ஆளாக வந்து எல்லாவற்றையும் ரசித்துக் கருத்துச் சொல்லியுள்ளீர்கள் சந்தோஷம்.

   ஆமாம் ஆத்மா. கண்ணதாசன் கவிகளும் அதற்கேற்ப வசீகரிக்கும் வகையில் பாடுபவர் குரலும் சேரும்போது அதன் சுகமே தனி!

   உங்கள் அன்பான வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சகோ...

   Delete
 2. அழகான வேலைப்பாடு...

  கவி வரிகள் அருமை...

  வாழ்த்துக்கள்...

  அலுக்காத இனிமையான பாடல்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ திண்டுக்கல் தனபாலன்! முதல் முறையாக இங்கு வருகின்றீர்கள். சந்தோஷம்.

   உங்கள் அன்பான வருகைக்கும் அக்கறையான ரசனை மற்றும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

   Delete
 3. ஆர்ட் லைன் க்விலிங் மிகமிக அழகாக இருக்கு இளமதி.மற்றைய க்விலிங் வித்தியாசமான முறையில் அழகாக‌ சிம்பிளாக செய்தி
  ருக்கீங்க. உங்க திறமைக்கு என் பாராட்டுக்கள் இளமதி.

  "வாழ்க்கை" கவிதை நன்றாக எழுதியிருக்கிறீங்க. குறுங்கவிதையில் படமும்,கவிதையும்.. மனம் கன‌த்துப்போயிற்று. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீங்க.

  ஜானி படப்பாடல் எனக்கு விருப்பமான பாடல்களில் ஒன்று.
  இம்முறை உங்க க்விலிங்,கவிதை, குறுங்கவிதை ப.கொ.விரும்பியது,படப்பாடல் எல்லாத்திலும் ஒரு ஒற்றுமை.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு...:)
   இந்தமாதிரி க்விலிங் இந்த வலைப்பூ ஆரம்பத்திற்காக வணக்கம் கூறும் பெண் முகம் செய்திருந்தேன். இது இரண்டாவது. ஆனாலும் இதில் அதைவிட வேலை சற்று அதிகம்.

   செய்யத்தொடங்கிய பின்பு தலைவலி வந்துவிட கொஞ்சம் அவதானம் தப்பிவிட்டது பின்னர் தெரிந்தது...:)

   இரண்டாவது எனக்கும் திருப்திதான்... உங்கள் பாராட்டுக்கு நன்றி அம்மு.

   Delete
  2. அம்மு... கவிதைகள் பற்றி இவ்வளவு ஆர்வமா கதைக்கிறீங்க ஏன் நீங்களும் முயற்சி செய்யலாமே. எனக்கு ரொம்பவே கவிதையில் ஆர்வம். அதனால் இப்பதான் தட்டுத்தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா எழுத்துக்கூட்டுறேன். உங்களை மாதிரி ஆர்வமா வாசிச்சு கருத்துச் சொல்லும்போது இன்னும் அழகாக எழுதும் ஆர்வம் எழுதுபவர்களுக்கு வரும். உங்கள் ரசனைக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்கநன்றி அம்மு.

   இந்தக் கவிதைகள் `கன`மான கவிதைகள்தான்...:)
   இதனால உங்கள் மனசும் கனத்துப்போச்சோ..
   ஓ! சந்தோஷம்...:)
   கோவிக்காமல் கேளுங்கோ... ஏன் சந்தோஷம் எண்டனான் என்றால்... கவிதையில் சோகத்தை சரியாக தெரிவிச்சிருக்கிறதாலதானே மனம் கனத்துப்போச்செண்டு சொன்னனீங்கள். அந்தவகையில் எனக்கு மகிழ்ச்சிதான்...:)))

   மேலும் அனைத்தும் உங்களுக்கும் பிடிச்சிருக்கிறது எனக்கும் சந்தோஷம்தான் அம்மு. அன்பான உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மிக்க நன்றி அம்மு!

   Delete
 4. வளமாக வாழ்ந்திடவே வனப்போடு காத்திருந்தோம்
  பழமாகும் என்றே நாம் பசியோடு பார்த்திருந்தோம்

  பகிர்வுகள் அனைத்தும் அருமையானவை ..வாழ்த்துக்கள் ..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இராஜராஜேஸ்வரி!
   நீங்க வந்ததே சந்தோஷம் எனக்கு...:)

   உங்கள் அன்பான வரவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 5. இரண்டுபடங்களுமே வித்திடாசமாக அருமையாக இருந்தது.இளமதியின் கவிதை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸாதிகா! வாங்கோ...:)

   ம். எப்பவுமே வித்தியாசமான டிசைன்களில் க்விலிங் செய்ய விரும்புவதுண்டு. இம்முறை அது பலித்தது...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா!

   Delete
 6. ஆஹா சூப்பர்.... அச்சு அசலாக ஒரேமாதிரி இருக்கு..தொப்பியின் இடப்பக்கத்தை மட்டும் அதே நீல நிறத்தில் அடைத்து விட்டிருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்போல தோணுது எனக்கு.

  இரண்டாவது குயிலிங் புது முயற்சி.. சூப்பர்.... நானும் பார்த்தேன் நெட்டில்... முயற்சி செய்ய பயமாக இருந்துது. இப்போ ஒன்று செய்கிறேன்ன்.. எப்படி வருகுதெனப் பார்ப்போம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா...:) வரவர நீங்களும் சரியான பிஸியாகீட்டீங்கள்...:) காணக்கிடைக்குதில்லை..
   க்விலிங் வேலைக்கு இருந்த படத்தை மாற்றம் ஏதும் செய்யாமல் செய்தன். நீங்களே அச்சு அசலாக ஒரேமாதிரி இருக்குதெண்டு இப்ப சொல்லுறது நான் பின்பக்கத் தொப்பியை சரிப்பண்ணி இருந்தா சொல்லியிருக்க மாட்டியள் எல்லோ அதுதான் அப்பிடியே விட்டனான்...:)

   ஓம் நெட்டில இருந்ததைத்தான் இரண்டாவது க்விலிங்காக நான் செய்தன். எனக்குத்தான் இப்பிடி செய்தது புதுசு.

   சரி நீங்கள் செய்கிறதை கெதியா உங்களின் வலைப்பூவில போடுங்கோ.. எல்லாம் நல்லா வரும். பார்க்க ஆவலாய் இருக்கு...:)

   Delete
 7. //வற்றிப்போன கண்களோடு
  முற்றிய நினைவுச் சுமைகொண்டு
  இற்றுப்போன வாழ்க்கையாகி
  செற்றுப் போகிறேன் கணமும் நான்...//

  கவிதை அழகுதான் ஆனா எதுக்கு இத்தனை சோகம். இதில செற்று என்பது தவறான சொல்லோ? செத்து என்பதுதான் சரியாக இருக்குமோ? அல்லது கவிதைக்கு எப்படியும் பாவிக்கலாமோ? தெரியவில்லை எனக்கு...

  ReplyDelete
  Replies
  1. கவிதை சோகமாய் இருந்தா எனக்குப் பிடிக்கும். அதுதான் சோகத்தை பிழிஞ்சுவிட்டிருக்கிறன்...:)))
   ஐயோ... குற்றமா... எங்கு கண்டீர். பொருள் குற்றமா..எழுத்துக் குற்றமா... குற்றங்கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்..... திருவிளையாடலில் தருமி சொல்கிறமாதிரி சொல்லிப் பார்த்தன்.. அதிலையும் பிழை வரப்பாக்குது...:)

   தெரியேலை அதிரா.. ஒரு ஆர்வத்தில எழுதத்தொடங்கீட்டன். செத்து என சொல்லேக்கை ஒலி மேலுள்ளவைகளோடு ஒத்துவரவில்லை. அதோடு அகராதியில் பார்த்தன் செற்று என்பதும் செத்து என்பதும் ஒரே அர்த்தமாய் இருக்க, செற்று என்று எழுதிவிட்டுட்டன். பார்ப்போம் யாரவது இதற்கு இன்னும் சரி பிழை சொல்கினமோ எண்டு.

   நானும் கத்துக்குட்டிதானே...:)
   திருத்தம் சொன்னா திருத்திவிடுகிறேன்.

   Delete
 8. பாடல் அடிமை.. படித்ததில் பிடித்ததும் சூப்பர்.... தொடருங்கோ..

  ReplyDelete
  Replies
  1. பாடல் அருமை என எழுதினேன்ன் டங்கு ஸ்லிப்பாக “அடிமை” என வந்திட்ட்டுதே:).. என்னே விதியின் விளையாட்டு:)

   Delete
  2. ஹா,,ஹா,,ஹாஆ...:) விதி விளையாடிவிட்டதோ...:)))

   Delete
 9. //Your comment will be visible after approval. ///
  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
  இருட்டினில் யாவும் மறையட்டுமே...
  தன்னாலே வெளிவரும் தயங்காதே..
  ஒரு பூஸு இருக்குது கலங்காதே... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:)..

  நீங்கள் எல்லோரும் மொடரேஷன் போட்டால் என் கை மட்டும் என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ?:) இதோ நானும் போடுகிறேன்ன்.. மொடரேஷந்தேன்ன் :)).. பூஸ் ஒன்று புறப்படுதே... :).  ReplyDelete
  Replies
  1. என்ன பூஸ் பாட்டோடை வெளிக்கிட்டாச்சு...:) இங்கை ஒண்டும்ம் நடக்கேலை. நான் உடனுக்குடன் பின்னூடம் போடுபவர்களின் கருத்துக்களைப் பார்க்கத்தவறினாலும் எண்டிட்டு இப்படி மொடரேஷன் போட்டு விட்டிருக்கிறன். நானும் கொஞ்சம் பிஸி. கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும். பிறகு மாத்துவம்...:)

   மிக்க நன்றி அதிரா வந்து கலகலப்பாய் கதிச்சு கருத்துக்கள் சொல்லி பாராட்டினதுக்கு...:) நேரம் கிடைக்கேக்கை இங்கை அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துட்டு போனோணும் சரியோ...:)))

   Delete
 10. தங்கள் கைவண்ணம் அழகு. வெகுவாக கவர்ந்தது.

  வளமாக வாழ்ந்திடவே வனப்போடு காத்திருந்தோம்
  பழமாகும் என்றே நாம் பசியோடு பார்த்திருந்தோம்
  சுழலதில் சிக்கிய சருகாகி நம்வாழ்வு விதிசெயலால்
  அழல்மேல் விழுந்த மெழுகாகிப் போனதுவே...

  கவிதை சிறப்பு. ஆமாம் இரண்டு கவிதைகளிலும் ஏன் சோகம் ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சசிகலா...
   உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி! தெரியவில்லை எனக்குப் பெரும்பாலும் உணர்ச்சிக் கவிதைகள் கட்டுரைகள் பிடிக்கும் அதிலும் சோகத்திற்கு தனி இடம்...:) பிரத்தியேகமாகக் காரணம் ஏதுமில்லை. எழுதத்தோன்றியது எழுதிவிட்டேன்.

   உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

   உங்கள் வலைப்பூ எது என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தால் வருவேன். அறியத்தாருங்கள்...:)

   Delete
 11. அழகான க்வில்லிங் இளமதி! ஸ்டைலாக தொப்பி போட்டுகிட்டு ரொம்ப க்யூட்டா இருக்கிறாங்க! :)

  இரண்டாவது க்வில்லிங்கும் நல்லா இருக்கு. பாடல் எனக்கும் மிகப் பிடிக்கும். கவிதைகள் படிகக் பிறகு வருகிறேன். தவறா நினைக்காதீங்க..வீக் எண்ட் அல்லவா, அதனால்தான்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி... சுகமா இருக்கிறீங்களோ?

   ம். உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   ஒன்றும் அவசரமில்லை ஆறுதலாக வந்து கவிதையையும் படித்து கருத்துச் சொல்லுங்கோ. ஏனெண்டால் இப்பதான் நான் எழுதத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் கருத்தும் என்னைக் வளர்க்கும்...:)

   Delete
 12. த்லைப்பு: ”மாறுபாடாக...”

  இந்தாங்க, மாறுபாடாக... என் பின்னூட்டம்:

  எல்லாமே நன்றாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  -=-=-=-=-=-=-=-

  விருப்பம் இருந்தால் வருகை தாருங்கள். கட்டாயம் ஏதும் இல்லை.

  http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வைகோ ஐயா...

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   புதுப்பதிவு போட்டுள்ளீர்களா? காட்டாயம் வருகிறேன்...:)

   Delete
 13. கைவினைகள் கண்டேன்
  வாழ்க்கை கவியழகும் கண்டேன்
  மெய்வலிகள் அகல்கிறதே
  மீதமுள்ள பாடல்கேட்டு..!

  எல்லாமே அருமை வாழ்த்துக்கள் இளமதி படைப்புக்கள் தொடரட்டும்

  ReplyDelete
 14. சீராளனே...

  தந்தது உவகை இங்குமது வருகை
  கண்டது ரசனை மனதுக்கும் பெருமை
  சொன்னது அருமை நல்வாழ்துதனை
  நவின்றது இனிமை, நன்றி உமக்கும்...

  ReplyDelete
 15. கவிதை க்விலிங் எல்லாமே அருமை

  ReplyDelete
  Replies
  1. ஆ.ஆ..வாங்கோ அஞ்சு...:)

   என்னதிது வந்ததும் வராததுமா ஓடீட்டீங்கள்...:(

   சுகமாய் இருக்கிறீங்களோ? சரியான பிஸி எண்டு அறிஞ்சேன்.
   பரவாயில்லை உங்களின் நேரமின்மைக்குள்ளும் இங்குவந்து பார்த்து வாழ்த்தியிருக்கிறீங்கள். மிக்க நன்றி அஞ்சு...:).

   Delete
 16. சோகக் கவிதைகள் இரண்டும் அருமை. அடுத்த உணர்ச்சியாய் சந்தோஷத்தை எதிர்பார்க்கிறோம். :)

  எதுகை மோனையெல்லாம் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கீங்க இளமதி, ரசித்தேன்! :)

  ReplyDelete
  Replies
  1. சொன்னது போல திரும்பவும் வந்திருக்கிறீங்கள். ரொம்பச் சந்தோஷம்...:)

   ம்.. சோகமும் ரசிக்கின்றபோது நன்றாகத்தானிருக்கும். அனுபவிக்கும்போதல்ல..:).
   உணர்ச்சிக் கவிதை பார்ப்போம்..தொடரும் பதிவுகளில் தர முயற்சிக்கின்றேன்.

   உங்கள் வரவும் ரசனையும் கருத்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மகி... ரொம்ப நன்றி!

   Delete

 17. வணக்கம்!

  கோடுகள் கோலமிடக் கொண்ட கலையொளிக்கு
  ஈடுகள் உண்டோ இயம்பு!

  -----------------------------------------------------------------

  கனவுகள் ஆயிரம் காட்டும் கவிதை
  மனத்தைக் கிழிக்கும் வலி!

  -----------------------------------------------------------------

  வற்றிய கண்கள் வடித்துள்ள சொல்யாவும்
  முற்றிய பாட்டின் மொழி!

  -----------------------------------------------------------------

  படித்ததை நெஞ்சுள் படிந்ததைத் தந்தீா்!
  மடித்ததைக் காக்கும் மனம்

  -----------------------------------------------------------------

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு


  ReplyDelete
  Replies
  1. கன்னல் கவிதைகளைக் கட்டும் கவிஞரே!
   பன்னல் கொள்ளுதே உன்பாக்கள்! - என்வணக்கம்!
   இன்னல் எனக்கில்லை! சோகக் கவிதைக்கும்
   மின்னல் கொடுத்தீா் மிகுத்து!

   உங்கள் வரவும் தந்த கவிப்பினூட்டங்களும் எனக்கு மிகுந்த மகிழ்வாயிருக்கிறது கவிஞர் ஐயா!
   மிக்க நன்றி!

   Delete
 18. ஆஹா... முதன்முதலா வந்து மூன்று வகை விருந்து கொண்டேன்..
  கண்ணுக்கு விருந்து- குயிலிங் வேக்
  செவிக்கு விருந்து - ஜானகி அம்மாவின் இனிய குரல்
  இலக்கிய விருந்தாக -கவிதை

  மாறுபாடாக இருந்தாலும்..சூப்பரா இருக்கு...

  ///வளமாக வாழ்ந்திடவே வனப்போடு காத்திருந்தோம்
  பழமாகும் என்றே நாம் பசியோடு பார்த்திருந்தோம்
  சுழலதில் சிக்கிய சருகாகி நம்வாழ்வு விதிசெயலால்
  அழல்மேல் விழுந்த மெழுகாகிப் போனதுவே...////

  கவி வரிகள் அழகாக எதுகை மோனை கோர்த்து வந்திருக்கு..பாராட்டுக்கள் இளமதி.. தொடர்ந்தும் வருவேன்.. விதவிதமான விருந்து உண்ண.. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பூங்கோதை... வணக்கம்...:)

   மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. என்னதவம் செய்தனை யசோதா...
   அந்த யசோதையின் மகிழ்ச்சி எனக்கு இப்போது...:)

   அருமையான எழுத்தாளினி நிலவிலும் தன் காற்றடங்களைப் பத்தித்தது நிலவே மேலும் குளிர்ந்து உறைந்துவிடும் நிகழ்வு...:)

   Delete
  2. கலந்துண்ணப் படைத்த உணவுதனை மனம்விரும்பி
   விருந்தென்று மகிழ்ந்துண்டு விரைந்து வாழ்த்தினாய்!- உன்வரவால்
   மலர்ந்ததென்மனது மேலும்கலந்த நம்உறவு நலமாக
   பலம்பெற்றதின்று! நன்றிமகளே உனக்கு!


   Delete
 19. இளமதி தந்த இனிய பதிவோ
  உளமதில் நிற்கும் உவந்து!

  அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. அருமைத்தோழி அருணா! நவின்றேன் அன்புடன் வணக்கம்
  உரிமையாக அழைத்திட்டேன் உங்கள் வரவு சிறக்கட்டும்
  பெருமைதரும் வாழ்த்துதனைப் பகர்ந்தீர் உள்ளம் உவந்தே
  கருமைக்கண்ணன் துணையே இனிய நன்றியுமக்கே!

  வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

  ReplyDelete
 21. முதல் க்வில்லிங் வொர்க் அருமை... கவிதை அழகா எழுதி இருக்கீங்க.... படிச்சதும் மனசு ரொம்ப கனமா ஆகிடுச்சு.... அடுத்த கவிதை சந்தோஷமா எழுதுங்க....இந்த பாடல் எனக்கும் ரொம்ப புடிக்கும்....

  ReplyDelete
 22. வாங்கோ பிரியா ராம்...:) உங்க வரவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

  ஆமால்ல கவிதை கனமா போயிடிச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க. சோகம்னா கனம்தான். ஈரச்சாக்கை தோளில் போட்டது போலன்னு நானும் வலைகளில படிச்சிருக்கேன்...:)

  சரி அடுத்ததை மாத்திடுவோம்... ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க ரசிச்சு கருத்துச்சொன்னது.

  உங்க அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பிரியா.

  ReplyDelete
 23. ஓவியம் கவிதை படம் பாடல் க்வில்லிங் வொர்க் அத்தனையும் அருமை.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. வாருங்கள் கவியாழி கண்ணதாசன். வணக்கம்.
  முதன்முதலாக இங்கு வருகிறீர்கள். மகிழ்ச்சி!

  அன்பான உங்கள் வருக்கைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

  ReplyDelete
 25. ஓவியம் வரைந்து அதற்கு அழகு சேர்க்க க்வில்லிங் வேலை செய்து அழகாகி அதை சிரத்தையுடன் படம் எடுத்து அதை மிக அழகாய் பதிவில் இணைத்து கொடுத்துள்ளது மிக அருமை கவிதையும் அருமை இப்போதான் அனைவரையும் அறிந்து கொண்டு வருகிறேன் நான்
  poovizi.blogspot.in

  ReplyDelete
 26. ஓவியம்,Quilling,கவிதை அனைத்துமே அருமை...அபாரம் !!!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_