Pages

Feb 15, 2013

அன்பு வாழ்த்து!


பிறந்தநாள் வாழ்த்து 15.02
************************************
ஊரில் ஒரே வீதியில் பதினைந்து வீடுகள் இடைவெளியில் உள்ள வீடுகளில் வாழ்ந்து கொண்டு ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த என் ஆருயிர்த்தோழி பூங்குழலிக்கு இன்று  15.02  பிறந்ததினம். உங்கள் அனைவருடனும் சேர்ந்து அவளை மனமார வாழ்த்துவதில் மகிழ்வுறுகிறேன்.

அன்புத்தோழி பூங்குழலி!... நீ எல்லா நலன்களும் பெற்று  நீடூழி காலம் நிறைந்த வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

நாம் பாடசாலை வாழ்க்கை முடிந்து  நான் வேறு துறையில் என் மேற் படிப்பை மேற்கொள்ள அவளும் தன் படிப்பைத் தொடர்ந்து வேலை கிடைத்து தன் பெற்றோருடன் வேறு ஊருக்கு மாறிப்போய்விட்டாள். பின்னர் நான் திருமணம் முடித்து  வேறூரில் கணவருடன் வாழ்ந்து வரும்போது  கடிதத்தொடர்போடு மட்டுமே இருந்தோம். நாட்டுச் சூழலால் சொந்த நாட்டை விட்டு நானும் பூங்குழலியும் திசைக்கொருவராய் பிரிந்துவிட்டோம்.  

நீண்ட காலமாக எங்கிருக்கிறாள் எனத்தெரியாமல் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும்போது சில வருடங்களுக்கு முன்தான் அவளை பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்சமயம் கண்டு பேச்சிழந்து போனேன். இங்கு ஜேர்மனியில்தான் தன் கணவர் மகனுடன் வசித்து வருகிறாள். நாம் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 500 கிலோமீற்றர் தூரத்தில். .. அடிக்கடி காணமுடியாதுவிட்டாலும் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவளுக்கு ஒரு திடீர் ஆச்சரியமாக இருக்க இங்கு அவளின் பிறந்ததினத்தை உங்களுடன் பகிர்ந்து அவளை வாழ்த்துகிறேன்.   

******************

பூங்குழலிக்காகச் செய்த வாழ்த்து மடலுக்கான க்விலிங்.
*******************

இதுவும் இன்னொருவருக்குச் செய்த வாழ்த்து மடலுக்கான க்விலிங்.
+++++++++++++++++++


காதலித்துப் பார்!   
............................

விழிகள் மோதி சிந்திச்சிதறி சிக்கிப் போகும் வார்த்தை
அனலேயானாலும் அடங்கமாட்டாமல் ஆளைக்கொல்லும் குளிர்
தரையில் நடக்காமல் உயரத்தாவிச்  சாதனை படைக்கும் வித்தை
மலையேசரிந்தாலும் வாய்மொழிமறந்து மௌனம்காக்கும் பிரமை
இவ்வுலகே தெரியாமல் தனியே சிரிக்கும் அழும் புலம்பும் பைத்தியம் 
காதலித்துப்பார்!   உன்னிடம் கணநேரத்தில் கவிதையும் பிறக்கும்!

காதல் நோய்
---------
அன்போடு தினம் ஏங்கி ஆருயிரை நாடி
இணைந்திடவே வேண்டி ஈரவிழிகள் மூடி
உயிரைக் கயிறாக்கி ஊஞ்சலில் மனதையாட்டி
எண்ணத்தில் இனிமைகூட்டி ஏக்கத்தை உதிரமாக்கி
ஐயமதை அகற்றி ஒன்றிணைந்திடப் போராடி
ஔடதந்தேட வைத்த  அன்பேயிந்தக் காதல்நோய்
 அஃதுதேதான் என்வாழ்விற்கும் ஆதாரமானதே...

``````````

எனக்கும் பூங்குழலிக்கும் பிடித்த எம்மைக் கவர்ந்த பாடல்:
------------------------------------------------------------------------------------------------------
உன்னிகிருஷ்ணனின் முதல் திரைப்பட பாடல். அருமையான குரல், இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் குரலுக்கு எழுதியது போலவே அமைந்ததுள்ளது. அருமையான இசை, அருமையான கவிதை. ஒவ்வொரு வரியும் அருமை.  ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கதை சொல்லும். :-) 
திரைப்படம்: காதலன், இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான், 
இயற்றிவர்: வைரமுத்து ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...

=====00000=====

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

34 comments:

 1. அன்புத்தோழி பூங்குழலி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  இனிமையான பாடல்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன். உங்கள் அன்பு வாழ்த்தினை அவளுக்குக் கூறுகின்றேன்.

   உங்கள் அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. நட்பு ஒரு போதும் அழியாதது. ஆனால் இப்பொழுதெல்லாம் உண்மை நட்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் நேசித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கொன்றும் நட்டமில்லை என்பதால்.

  நண்பியின் பிறந்த நாளை ஞாபகம் வைத்து வாழ்த்தியமை தோழி மீதிருந்த அன்பைக் காட்டுகிறது. உங்கள் நட்பு இறுதி வரை நிலைக்க என் வாழ்த்துக்கள்.

  ///மலையேசரிந்தாலும் வாய்மொழிமறந்து மௌனம்காக்கும் பிரமை
  இவ்வுலகே தெரியாமல் தனியே சிரிக்கும் அழும் புலம்பும் பைத்தியம்//// காதலை அழகாக சொல்லியிருக்கிறீங்க...
  உங்கள் தோழிக்கான உங்கள் கைவண்ணம் அழகோ அழகு. வாழ்த்துக்கள்...
  எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பெரிய CLAP/\/\/\/\
  Superb!

  ReplyDelete
  Replies
  1. கோதை வாங்கோ... இம்முறை உடனேயே வந்திருக்கின்றீர்கள்...:)
   மிக்க சந்தோஷம்.

   ஓம் கோதை பூங்குழலிக்கும் எனக்கும் உள்ள நட்பு ஒரே தட்டில் சாப்பிடுமளவிற்கு அப்படி ஒரு நட்பு. இடையில் தவறிட்டிருந்தபோது நானடைந்த வேதனை சொல்லிலடங்காது. மீளக் கிடைத்தது பெரிய கொடை...:)

   அவளிடம் உங்கள் வாழ்த்தினையும் சேர்த்துவிடுகிறேன். மிக்க நன்றி கோதை அவளுக்கான உங்கள் வாழ்த்திற்கு!

   ம்... உங்கள் ரசனை, அன்பான வரவு அத்தனைக்கும் என் உளமார்ந்த அன்பு நன்றி கோதை.

   Delete
 3. அன்பு பூங்குழலி
  அன்புடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே!
   உங்கள் வாழ்த்தினையும் அவளிடம் சேர்த்துவிடுகிறேன்...

   Delete
 4. உங்கள் ஆருயிர்த்தோழி பூங்குழலிக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  உண்மையான புரிந்துண‌ர்வுள்ள நட்பு உங்களது. அதுதான் திரும்பகிடைத்துள்ளது.உங்கள் நட்பு இன்றுபோல் என்றும் இனிதாக தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை அம்மு... அவளின் நட்பு சிறு வயதுமுதல் பாடசாலை நாட்களில் ஒன்றாக எப்பவுமே ஒன்றித்திரிந்த நட்பு.

   மிக்க மிக்க நன்றி அம்மு உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்...
   அவளிடம் இதைச் சேர்த்துவிடுகிறேன்...:)

   Delete
 5. Happy birthday to Ms.Poonguzhali! Nice quilling work Ilamathy!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி...:)

   பூங்குழலிக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

   உங்கள் ரசனைக்கும் வரவிற்கும் எனதன்பு நன்றி!

   Delete
 6. உங்கள் தோழிக்கான க்விலிங் மிக அழகாக,அருமை யாக செய்திருக்கிறீங்க இளமதி.2வது இன்னும் அழகாக இருக்கு. உங்க கைவண்ணம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தோழிக்கு பூக்கள் ரொம்பப் பிடிக்கும். அதனால் இந்தப் பூங்கொத்தினைச் அவளுக்காகச் செய்தேன்.

   இரண்டாவது எனக்குத்தெரிந்த ஒரு ஜேர்மனிய நண்பருக்குச் செய்த க்விலிங். அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போயிற்று.

   வாழ்த்திற்கு மிக்க நன்றி அம்மு...:)

   Delete


 7. மிக இனிமையான, இதமான‌ மனதை வருடிச் செல்லும் பாடல்.எனக்கு பிடித்த‌பாடல்.

  காதலித்துப்பார்,காதல்நோய் 2 கவிதைகளும் மிகமிக அருமையாக எழுதியிருக்கிறீங்க. அதுவும் காதல்நோய் கவிதையை அழகாக முதலெழுத்து உயிரெழுத்துக்களாக வைத்து புனைந்திருக்கிறீங்க இளமதி. நன்றாக இருக்கிறது.
  நல்லதொரு க(கை)வி(னை)தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் பிடிக்குமா இப்பாடல். சந்தோஷம்...:)
   இந்தப் பாடல் உன்னியின் குரலுலோடு அற்புதம். கவிதையை தன் குரலில் இழைத்துப் பாடுகிறார். அதோடு அந்தப் பெண்குரலின் இடையில் ஹமிங்... அப்படியே என்னை எங்கோ கொண்டு செல்வது போல இருக்கும். அருமை.

   காதல் நோய் கவிதையை உயிரெழுத்துக்களில் வரவேண்டுமென நினைத்து எழுதினேன்...:)
   ம்.ம் சந்தோஷம் அம்மு. ரொம்பவே ரசிச்சிருக்கிறீங்க...:)

   உங்க அன்பான வரவிற்கும், ரசனைக்கும், அழகான கருத்துப்பகிர்வு, வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி அம்மு!

   Delete
 8. இரண்டு கார்ட்சும் அழகு ..உங்க தோழிக்கு எனது வாழ்த்துக்களையும் சேர்த்திடுங்க.உங்க கவிதை அருமை


  படித்ததில் பிடித்தது ..superb !!!..

  ReplyDelete
  Replies
  1. உங்க அன்பான வாழ்த்தினை தோழியிடம் சேர்த்திட்டேன்...:)

   ம்.ம் உங்க அன்பான வரவிற்கும் ரசிப்புக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி அஞ்சு...

   Delete
 9. கைவேலைகள் அனைத்தும் அழகு.
  பதிவுக்குப்பாராட்டுக்கள்.
  தங்கள் தோழிக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்,

  ReplyDelete
 10. வணக்கம் வைகோ ஐயா.
  தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!
  தோழிக்கும் உங்கள் வாழ்துதனை பகிர்ந்துவிட்டேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 11. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி.... பாடலை நினைவு படுத்துது உங்கள் நண்பிக்கு வைத்த பெயர். எனக்கது ரொம்ப.. ரொம்ப.... ரொம்பப் பிடித்த பாடல்ல்ல்ல்...

  பூங்குழலிக்கு என் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள். அவவுக்கும் இந்த புளொக் தெரியுமோ?

  ReplyDelete
  Replies
  1. ஆ..ஆ... வாங்கோ அதிரா...:0

   தோழியின் பிறந்ததினம் முடியுறதுக்குள்ள வந்து வாழ்த்தீட்டீங்கள்.. மிக்க நன்றி!

   அது அவவுக்கு நாங்கள் அப்ப வைச்ச பெயர். நானும் அவவும் இ.ஒ.கூ ஸ்தாபன வர்தகசேவை நிரந்தர ரசிகைகள். எப்பவும் எல்லா நிகழ்ச்சிக்கும்ம் எழுதிப்போடுவம்.

   அவக்கு எனது வலைப்பூவென்ன உங்கள்ட அஞ்சுட எல்லாம்ம் தெரியும். சைலண்ட் றீடர்...:)
   உங்களின் பெரிய ரசிகை அவ தெரியுமோ உங்களுக்கு...:)))

   ம்.இப்பவும்ம் இதுவும் பார்த்துக்கொண்டிருப்பா.

   Delete
 12. குயில் கார்ட்ஸ் அழகு. சிம்பிளாகச் செய்திட்டிங்க இம்முறை.. பூ இதழ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சூப்பராக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஓம் அதிரா.. பூ இதழ் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று வித்தியாசமாத்தான் செய்தன். அதில எனக்கும் நல்ல விருப்பம். புதுப்புது விதமாக செய்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம்...

   நீங்களும் செய்து பாருங்கோ... சுலபம்.

   Delete
 13. காதலர் தினத்தில காதல் நோயோ?:)...

  என்னவளே பாடல் சூப்பர்..

  கடைசியில் படித்ததில் பிடித்தது, நானும் படித்திருக்கிறேன்ன் சூப்பர்... ஆனா அதெல்லாம் ச்ச்ச்சும்மா உல்லுல்லாயி:)).. நம்பாதீங்கோ:)

  சரி அப்ப நான் போட்டு வரட்டே.... நாளைக்கு வீட்டில விஷேசமுங்க:) அதாவது என் பக்கத்தில:) முடிஞ்சால் கண்டுபிடியுங்கோ:).

  ReplyDelete
  Replies
  1. காதலர் தினத்தில மட்டுமில்ல காதல் என்பதே நோய்தான்...
   அது எப்பவும் வரும். வந்து அப்பிடியே இருக்கும்...:)))

   படித்ததில் பிடித்தது ஏன் உல்லுலாயி...கர்ர்ர்ர்...:)

   ஆ...இவ்வளவு பிந்திவந்து அதுக்குள்ள ஓடுறீங்க...:)
   நாளைக்கு விஷேசமோ... ஹாஆ... என்னது... ஓ!... அதுக்கு இன்னும் சில நாட்கள் இடைவெளி இருக்கே...:)
   சரி விடிஞ்சாப்பிறகு பாப்பம். இப்ப எனக்கு நித்திரை கண்ணைக்கட்டுது...

   மிக்க நன்றி அதிரா... ரொம்ப பிஸியா இருந்த நேரத்திலும் வந்து ரசிச்சு, வாழ்த்தியதுக்கு.
   பூங்குழலியும் உங்களை விசாரிச்சதாய் சொல்லச்சொல்லுறா...:)

   மிக்க நன்றி... இனிய நல் இரவு வணக்கம்... குட்நைட்...:)


   Delete
 14. அன்புத்தோழி பூங்குழலி!... நீ எல்லா நலன்களும் பெற்று நீடூழி காலம் நிறைந்த வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

  நிறைந்த அன்புடன் தோழிக்கு அன்பளித்த - பூங்குழலிக்காகச் செய்த வாழ்த்து மடலுக்கான க்விலிங்.கண்களையும் கருத்தையும் நிறைத்தது

  ReplyDelete
 15. வாங்கோ ராஜேஸ்வரி...

  உங்கள் அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்கமிக்க நன்றி!

  ReplyDelete
 16. [box] [co="red"]என் அன்புத்தோழி இளமதியின் வலைப்பூவில் இங்குவந்து என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!!!

  அன்புடன்
  பூங்குழலி[/co][/box]

  [im]http://1.bp.blogspot.com/-uz_I8L1wHyY/UR9vsX2xlRI/AAAAAAAAAak/ohA3pJ36cZg/s400/poonkulali1.jpg[/im]


  பூங்குழலி எனக்கு மின்மடலில் உங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கக் கூறி இதனை அனுப்பியிருந்தாள்...

  ReplyDelete
 17. உங்கள் தோழி பூங்குழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளமதி! அப்புறம் காதல் தத்துவங்கள் அருமை! ஆனால் எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை! ஹா ஹா !!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா..ஆ.. வாங்கோ வாங்கோ மணி..
   வணக்கம்.. முதல்தரமா நிலாவில இறங்கியிருக்கிறீங்க...:)
   சந்தோஷம்... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

   தோழிக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறீங்கள் மிக்க நன்றி அவள் சார்பாக!
   காதலே தத்துவமானதுதானே...:) ஏன் உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போச்சு... எங்கையோ இடிக்குதே..;)

   சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு. காதலை வெறுக்கவில்லை. ஆனால் நம்பிக்கைதான் உங்களுக்கில்லாமல் போயிருக்கு...:)

   மிக்க நன்றி மணி உங்கள் அன்பான வரவிற்கும் ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும்!

   Delete
 18. வாங்கோ ஜலீலாக்கா...
  சுகமா இருக்குறீங்களோ...:) கனநாளாக் காணேலை...
  நானும் உங்களிட்ட வரேலைதான். நேரமில்லாமல் இருக்கு...:)
  வருவன். ஆனா என் உங்களின் புதுப்பதிவுகளை எனக்கு என் ப்ளொக்கர் டாஷ்போர்டில் காட்டுவதில்லை. அதனாலும் நான் அங்கே வரக்கிடைப்பதில்லை அக்கா. ஏனைய பதிவர்களின் புதுப்பதிவுகளை உடனுக்குடன் காட்டுதே.... அதிராவிடம் கேட்போம்...:)

  மிக்க நன்றி உங்க வரவுக்கும் வாழ்த்திற்கும்...

  ReplyDelete
 19. கவிதையிலும் கை வண்ணத்திலும் அசத்துகிறீர்கள் இளமதி! அதுவும் அந்த உயிரெழுத்தில் உயிர்ப்பித்த கவிதை மிகவும் அசத்தல்!
  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா...
   உங்கள் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

   ஓ.. கவிதையில் ஆர்வம் அதிகம். எழுதுவதற்குப் பயின்றுவருகிறேன். உயிரெழுத்தில் எழுதிப்பார்க்கும் ஆவலில் எழுதினேன். உங்களைக் கவர்ந்ததென்னும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

   உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அக்கா...:)

   Delete
 20. மூன்று க்விலிங்கும் அழகாக இருக்கின்றன.
  கவிதை... வெகு அருமை. தொடருங்கள்.

  வெகு தாமதமாகச் சொல்கிறேன், பூங்குழலிக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_