Pages

Feb 24, 2013

உறவு

அன்பு தோழியே அதிரா! உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள்
 (22.02)
நல் வாழ்த்துக்கள்!!!
................
என்ன இப்படிக் காலந்தாழ்த்தி ஒரு வாழ்த்தென பார்க்கின்றீர்களோ...:) ஆமாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்றாகிவிட்டது. அதிராவின் பிறந்த தினத்திற்கு அன்றே பதிவேற்றம் செய்ய ஆயத்தப்படுத்திய பதிவு  நான் திடீரென எனது இருப்பிடத்தில் இல்லாது போனதால் தடங்கலாகிப் போய்விட்டது. மனம் மிக வருந்துகிறேன். காலதாமதமானாலும் தயாரித்த வாழ்த்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஏற்றுக்கொள்ளுங்கள்!!

அன்பு அதிரா! உங்கள் உறவினாலும் உதவியாலும்தான் நானும் இங்கு ஒரு வலைப்பூவினை எனதாக்கி விரும்பிய வண்ணம் பதிவேற்றி நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கின்றேன். உங்கள் அன்பும் ஆதரவும் உதவியும் இன்றி நான் இங்கு இல்லை. உங்களின் பிறந்த தினத்திற்காகச் செய்த க்விலிங் வாழ்த்து மடலினையும் ஒரு சிறு கவியையும் உங்களுக்கு என் அன்புப் பரிசாக்குகின்றேன். 
**************

உற்றதோழியடி....
..................

                          உன் முகம் காணாமலேயே
                          உன்னுடன் எனகிந்த நட்பு...
                          உன் அன்பும் பாசமும் பரிவும்
                          உனக்கு ஒரு முகத்தோற்றத்தை என்
                          உள்ளத்தில் வரைய வைத்ததே...
                          உதவியென்றால் மறுக்காமல் சலிக்காமல்
                          உடனடியாகவே உதவிடுவாய்
                          உள்ளபடி நடப்பதும் எதிலும்
                          உறுதியோடு இருப்பதுவும் எப்படியென
                          உனைப் பார்த்துப் பழகிக் கொண்டேன்
                          உணர்வுபூர்வமாக நகைச்சுவையோடு
                          உண்மையாக நட்புதனைப்பேணும்
                          உன்னதமான ஒரு உறவு நீதான்..
                          உயிர்த்தோழி உன் பிறந்தநாள் இன்று
                          உவகையோடு உன்னை வாழ்வாங்கு வாழ்கவென 
                          உளமார வாழ்த்துகிறேன்! வாழ்க நலம்சூழ!!!
~~~~~~~~~~~~~~~~~~~காக்கின்றேன் வா....
~~~~~~~~~~~
                             நீயும்நானும் நாளும் நிறைந்த நேசமொடு 
                             பூவும் மணமுமாய் பொருந்தியேயொன்றாகி
                             ஊனுமுயிருமெனக் கலந்து ஒன்றாய் இணைந்தே
                             தேனிலுமினிய வாழ்வு காண்போம் இன்றே வா... 

                             பொல்லாத கள்வா போக்கிரி உன்கோவம்
                             செல்லாது என்னிடம் சேர்வது இதுதிண்ணம்
                             கல்லாத காரிகையென் கருத்தினில் நீபுகுந்து
                             சொல்லாலணைக்கின்ற சுகமதை என்னவென்பேன்...

                             சின்னச்சின்னக் கதைபேசி செல்மாக இசைபாடி
                             மின்னுங்கண் ஜாடையினால் மெய்தழுவிப்போகிறாய்
                             இன்னுமிவ்வுயிர் உந்தனுக்காய் நான் காத்துப்
                             பின்னும் பாமாலையிதை பெற்றிட நீ வாராயோ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~என்னைக் கவர்ந்த பாடல் இங்கு அதிராவுக்குமாக.....


+++++++++++

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...
++++++++++++++++++
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

80 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ... அதிரா! வந்திட்டீங்களோ...சந்தோஷமா இருக்கெனக்கு...:)
   உங்களுக்காக செய்தது... ரொம்ம்ம்ப லேட்டாப்பாச்சு... கோவிக்காம எடுத்துக்கொள்ளுங்கோ....;)

   Delete
  2. என் அன்பான இதயம் கனிந்த சுவீட் 16 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிரா.... நீங்க வைர நெக்லஷோடு பொல்லூன்றாமல்.. நீடூழி வாழோணும்:).

   Delete
  3. ஆஹா... வைரமும் பொன்னும் எதற்கு அதிரா...
   மின்னிடும் உம் புன்னகைக்கு இந்நகை ஈடாகுமோ...:)

   புன்னகையோடு பூத்திட்ட வசந்தமதாய்
   வருடங்கள் நூறு வளமாக வாழ்வீரே...

   Delete
 2. ஹையோ... மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. நான் நாளைக்க்கு வாறேன்ன்ன்ன்

  ReplyDelete
  Replies
  1. மன்னித்தோம்...:)))

   Delete
 3. இரண்டு கார்டுகளுமே அழகாய் இருக்கின்றன இளமதி! கலக்கறீங்க..2வது படம் கோலத்தில் போடுவது போல டிசைன்..நல்லா இருக்கு.

  கவிதை அருமை..உங்கள் நட்பு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்! சினேகிதியே- படப்பாடல் நல்ல பொருத்தமான பகிர்வு.

  பூஸார் முதல் ஆளா வந்து அட்டனன்ஸ் போட்டுவிட்டு போயிட்டார் போலிருக்கு! :)

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் மகி வந்து பார்த்தனா... வைர நெக்லெஸ் ஏதுமில்ல:)) அதேன்ன் உடனேயேெ போயிட்டேன்ன்ன்ன்:)) வாழ்த்து மட்டும்தான் சொல்லீனம் ஆரும் வைரம் வச்சு ஒண்ணுமே தரமாட்டினமாமே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னாது வாழ்த்துவதே ஓவரோ.. ஹையோ ஏன் இப்பூடி கலைக்கிறீங்க:)))....

   Delete
  2. அன்பு மகி வாங்கோ...
   ம்.. வாழ்த்து அட்டைகளில் இரண்டாவது கோலமேதான்...:)

   நம் நட்பு வாழ வாழ்த்திய அன்பு நட்பே மகி உங்கள் அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

   அன்போடு வந்த வரவிற்கும் அருமையான ரசனைக்கும் அழகிய வாழ்த்திற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 4. நல்ல வரிகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே...

   Delete
 5. உங்களோடு சேர்ந்து தங்கை அதிராவை அன்புடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா... என்ன வந்ததும் சென்றதுமாய் விரைந்துவிட்டீங்கள்...:)

   Delete
 6. இளமதி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். அதிராவுக்கு நீங்க போடப்போகும் உங்க கவியையும்,க்விலிங் எதிர்பார்த்தேன். பரவாயில்லை
  லேட்டானாலும் அன்பு அன்புதானே.
  மிக,மிக அழகாக இருக்கு உங்க இரண்டு க்விலிங்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு...

   என்ன செய்வது நாமெல்லோரும் மனிதர்கள்தானே... இயற்கையின் சில விளையாட்டுக்களால் சில தவிர்க்கமுடியாத நெருக்கடிகள். அதனால் என் தனிப்பட்ட ஓரிரு அலுவல்களும் தடைப்பட்டுபோயிற்று...
   அன்புக்கு காலநேரம் இல்லைத்தான். ஆனாலும் அததை அந்தந்த நேரத்தில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்...:)

   க்விலிங் கார்ட் ரசிப்பிற்கு நன்றி!

   Delete
 7. "உற்றதோழியடி",காக்கின்றேன் வா இரு கவிகளும் ரெம்ப அருமையாக இருக்கு. 2வது கவியில் எனக்கு பிடித்ததிருக்கு இவ்வரிகள்.
  கல்லாத காரிகையென் கருத்தினில் நீபுகுந்து
  சொல்லாலணைக்கின்ற சுகமதை என்னவென்பேன்

  படப்பாடல்,படித்ததில் பிடித்தது நன்றாக இருக்கு.உங்களுடன் சேர்ந்து மீண்டும் என் வாழ்த்துக்களை அதிராவுக்கு தெரிவிக்கின்றேன்.
  நல்லதொரு பகிர்வு.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஓ.. கவிதைகளை நன்றாக ரசித்திருக்கிறீங்கள். ஏதோ கொஞ்சம் கொஞ்சம் இப்படி எழுதிப்பார்க்கின்றேன். ரசிப்பதற்கு நீங்கள் இருக்கின்றீங்கள் என்னும் தைரியத்தில்...:)

   அன்பான வரவிற்கும் அத்தனையையும் ரசித்ததிற்கும் அழகிய கருத்திற்கும் அதிராவுக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அம்மு!!!

   Delete
 8. சூப்பரான வாழத்து கவிதை (கள் ) உங்க கவிதை மழை யில் நனைந்து செல்ல என்னுயும் உங்கள் தோழியாக ஏற்று கொள்ளுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்புத்தோழி மலர் பாலன்... வணக்கம். முதன்முதல் இங்கு வருகிறீர்களென எண்ணுகிறேன்...:)

   அன்பான வரவு, அழகிய கருத்து அனைத்துக்கும் மிக்க நன்றி!

   உங்கள் அன்பு வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டேன் தோழி...:)

   Delete
 9. உயிர்த்தோழி
  உன் பிறந்தநாள் இன்று
  உவகையோடு
  உன்னை வாழ்வாங்கு வாழ்கவென
  உளமார வாழ்த்துகிறேன்! வாழ்க நலம்சூழ!!!


  இளமதியின்
  இரண்டு கார்டுகளும்
  இரண்டு கவிதைகளும் பிறந்த நாளுக்கு அழகாய்
  இனிமை சேர்த்து
  இருக்கின்றன.. வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி ராஜராஜேஸ்வரி...

   மிக்க மிக்க நன்றி உங்கள் அன்பான வரவிற்கும் அருமையான ரசனை மற்றும் வாழ்த்திற்கும்...:)

   Delete
 10. //அன்பு தோழியே அதிரா! உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள்
  (22.02)
  நல் வாழ்த்துக்கள்!!!///

  மியவும் மியாவும் நன்றி இளமதி... இப்பத்தான் கொஞ்சம் ஷை இல்லாமல் நிமிர்ந்து நடந்தனான்.. மீண்டும் வாத்துத் தலைப்பைப் போட்டு என்னைச் ஷை ஆக்கிட்டீங்க:)...

  ReplyDelete
 11. ரோஜாப்பூ குயில்கார்ட் சூப்பர் இளமதி.. நல்ல கற்பனை பண்ணி இலைகளை வடிவமைச்சிருக்கிறீங்க...

  2வது கார்ட் ஒரு புதுவிதமாக இருக்கே.. ஏதோ பஞ்சினுள் புதைச்ச மாதிரி.. அது எப்பூடி?.. ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் போட்டால் என்னவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நானும் என் நண்பிக்கு அன்னம் செய்யோணும்.. வீட்டில் இருக்க முடியுதில்லையே..

  ReplyDelete
  Replies
  1. ம்.. றோசாப்பூ சின்ன றோசாப்பூ அது உங்களுக்குத்தான்.
   ஏதோ இலையும் சரி வந்திட்டுது... மீ இப்ப ஹப்பி...:)

   இரண்டாவது கார்ட் சாதாரண கோல டிசைன். இதுக்கு இஸுரெப்பா வேணுமோ... ரொம்பச்சுலபம்... எல்லாரும் செய்யலாமே...:)
   கெதியா அன்னத்தை கொண்டாங்கோ பார்க்க ஆவல்ல்ல்...:)

   Delete
 12. அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்.. கவிதைக்குப் பொய்யழகு என வைரமுத்து அங்கிள் சொல்லியிருக்கிறார்ர்...:))

  // உதவியென்றால் மறுக்காமல் சலிக்காமல்
  உடனடியாகவே உதவிடுவாய்//
  ...ஙேஙேஙேஙேஙேஙேஙே.....:))

  ReplyDelete
  Replies
  1. என்ன... பொய்யோ.. கர்ர்ர்ர்ர்....:)

   [co="red"]மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார்
   மற்றவர் பணிந்து கொள்வார்
   மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
   மற்றவர் எடுத்துக் கொள்வார்
   வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
   வைப்பவன் கர்ண வீரன்
   வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்
   வாழ்கவே வாழ்க வாழ்க ஆ...[/co]

   உதவி செய்யும் உங்களுக்குத் தெரியாது ஆனா வாங்குகின்ற எமக்குத் தெரியும் தானே...:)

   Delete
 13. பாடல் உட்பட.. மொத்தமா அனைத்துக்கும் மியாவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான வரவிற்கும், அட்டகாசமான ரசனைக்கும், அழகான கருத்துரைகளுக்கும் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அதிரா...

   Delete
 14. அதிராவுக்கு அழகிய கவிபடைத்த இளமதிக்கு பாராட்டுக்கள்.அதிராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றிகள் சகோதரரே!
   அன்பான வரவும், ரசனையும், வாழ்த்துகளுக்கும் எமது மனமார்ந்த இனிய நன்றிகள்!

   Delete
 15. [im]http://3.bp.blogspot.com/-1L-oGJ_06Mg/UKlNuIHmb-I/AAAAAAAAC1I/0uw_vIJIftw/s1600/Thank_You_Kitty.png[/im]

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கு நன்றி அதிரா...:)))

   Delete
 16. கவிதையும் வாழ்த்து அட்டையும் மிக அருமை..நல்வாழ்த்துக்கள் அதிரா..;)!

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி..

   Delete
  2. வாங்கோ ஆசியா...
   பிறகென்ன அதிராவே உங்களுக்கும் நன்றி சொல்லீட்டா.

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் என் இனிய நன்றிகள்

   Delete
 17. [co="purple"]Mahi25 February, 2013 00:25

  திண்டுக்கல் தனபாலன்25 February, 2013 02:41

  ஸாதிகா25 February, 2013 04:57

  priyasaki25 February, 2013 05:51

  malar balan25 February, 2013 09:20

  இராஜராஜேஸ்வரி25 February, 2013 10:08

  கவியாழி கண்ணதாசன்25 February, 2013 11:32

  வாழ்த்திய அனைவருக்கும் மனங்கனிந்த அதிராவின் நன்றிகள்...


  [/co]

  ReplyDelete
  Replies
  1. இங்கு வந்து என் தோழி அதிராவை வாழ்த்திய வாழ்த்திகொண்டு இருக்கின்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

   Delete
 18. Love cards ,once again wishing athis. May all your wishes come true :))

  ReplyDelete
  Replies
  1. Lovely cards ,once again wishing athis. May all your wishes come true :))

   Delete
  2. அஞ்சு... வாங்கோ... ரொம்ப அவசரமாய் கால்நுனிவிரலில் நின்று எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிட்டீர்கள்...:)
   ம். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...

   திரும்பவும் வாங்கோ வந்து இன்னும் உங்கள் மிகுதிக் கருத்துக்களையும் தாங்கோ. அவைகள்தான் என்னை ஊக்கப்படுத்தும் ஊக்க மருந்து...:)

   Delete
 19. லேட்டான வாழ்த்தானாலும் லேட்டஸ்ட்டா இருக்கு இளமதி... சூப்பர்..
  அழகிய கோலம், ரோஜாக் கைவண்ணங்கள்.. தமிழ் விளையாடும் கவிதை...அழகிய பாடல்.. எல்லாமே அருமை.. அருமை...
  பிந்திய வாழ்த்து என்றாலும் உங்கள் சிறந்த படைப்பாற்றலோடு வாழ்த்தியது பெறுமதியானது.. இது தோழி அதிராவை நிச்சயம் மகிழ்வித்திருக்கும்.தொடருங்க இளமதி...
  தோழி அதிராவுக்கு மீண்டும் ஒருமுறை இளமதியோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோதை... வரவேண்டும்..._()_ .

   உங்கள் வாயால் தமிழ்விளையாடும் கவிதை என்றதும் எனக்கு பூமாரி பொழிந்ததுபோல அவ்வளவு மகிழ்வாயிருக்கிறது. நல்ல ரசனை. அழகிய கருத்துப் பகிர்வு.
   ம்.. அதிராவுக்கும் பெரீய சந்தோஷம்தான். அவவின் நன்றியை எவ்வளவு பெரிதாகக் காட்டியிருக்கிறா பார்த்தனீங்களோ...:)

   அனைத்துக்கும் அன்பு நன்றிகள் கோதை!

   Delete
 20. ஓ..... நீங்கள் வாழ்த்திய ஆதிரா..... இந்தப் ’பூனை“ தானா...
  ஓ.கே... ஓ.கே.... நானும் வாழ்த்தி விடுகிறேன்.

  மியாவ் மியாவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அன்புத்தோழி அருணா!
   நான் வாழ்த்தியது இங்கே என் அன்புத்தோழியாகிய அதிரா என்னும் தோழியை... நீங்கள் கூறுவது ஆதிரா... அதிராவைத்தான் ஆதிரா என்கிறீர்களோ?... இல்லை.. ஆதிரா என்னும் ஒரு பதிவர் இருக்கின்றாரே அவர் என மாத்தி நினைக்கின்றீர்களோ.... ஙேஙேஙே... உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு எனக்குப் புரியலயே...:(

   ஆனால் மியாவ்மியாவ் என்பதால் நம்ம அதிராவைத்தான்...:)

   உங்கள் அன்பு வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 21. இந்த பூனைக்கு தான் வாழத்தா அடடா அழகிய கவிதை வரிகள்... வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  ReplyDelete
 22. (சும்மாங்க)

  ReplyDelete
  Replies
  1. //நடப்பதும் எதிலும்
   உறுதியோடு இருப்பதுவும் எப்படியென//
   அதே அதேதான் :)) நானும் அதிராவிடம் இருந்து கற்று கொண்டது மற்றும் கடை பிடிப்பது ....மணி சொன்னது போல எதற்கும் அதிராத அதிராவின் மனம் வேண்டும் அனைவருக்கும்

   Delete
  2. ஐன்ஸ்டீனின் தத்துவம் பகிர்விற்கு நன்றி .இரண்டாம் கவிதையும் அழகு ..congrats :)

   Delete
  3. ஆ.. அஞ்சூ... மீண்டும் மின்னும் மீனாக வந்துவிட்டு கையில் அகப்படாமல் ஓடிவிட்டீங்கள்...:)

   ஓம் அஞ்சு... அதிராவிடம் கற்ற கற்க வேண்டிய விடயங்கள் ஏராளம். அவரின் எதையும் தாங்கிச் சமாளிக்கும் சமயோசிதம் இன்னும் எனக்கில்லை. அனுபவத்தில் கற்க வேண்டும்...;)
   மணி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!

   மீண்டும் நேரம் ஒதுக்கி இங்கு வந்து ரசித்து, கருத்துக்கள் பகிர்ந்து வாழ்த்திய உங்களுக்கு என் அன்பு நன்றிகள்!

   Delete
 23. [co="green"]பூஸாருக்கு இனிய திருமண....... ஸாரி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! “சிலர்” தங்ங்கள் பிறந்தநாளுக்கு எதுவுமே தடாமல், தாங்கள் ஒரு மிஸ் நப்பி 2013 என்பதை நிரூபிச்சிட்டினம்! ஹா ஹா[/co]

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மணி... மாத்தி யோசிக்கிறீங்க என்பதற்காக பிறந்தநாளை திருமணநாள் எண்டு மாத்தப்பிடாது...:)

   வாழ்த்துக்களோடு வேறு ஏதோவும் இங்கின வந்து அவங்களுக்கு குடுத்துட்டுப் போறீங்க... அவ்வ்வ்வ்....
   ஐயோ நான் வராலை இந்த விளையாட்டுக்கு...:)

   மிக்கநன்றி மணி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்...

   Delete

 24. வணக்கம்!

  உன்னுடைய தோழி அதிரா உயா்ந்தோங்கி
  இன்புடைய வாழ்வின் எழில்பெறுக! - அன்புடைய
  செஞ்சை அடைக்கும்தாழ் உண்டோ? அரும்நட்பு
  விஞ்சும் உலகை விரிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் கவிஞர் ஐயா!

   வந்தீர் அன்புடன் வந்திங்கு தந்தீர் வாழ்த்துதனை என்தோழிக்கே
   நன்றே பகர்ந்தீர் நட்பினருமை நானும் நவின்றேனுமக்கு என் நன்றியையே!

   Delete

 25. வணக்கம்!

  காக்கின்றேன் கவிபடித்தால் காதல் துள்ளும்!
  கவிஞன்என் உள்ளத்தை மெல்ல அள்ளும்!
  பூக்கின்றேன் எனப்பூக்கள் சொல்வ தில்லை!
  பொன்வண்டு நடமாடத் தடையே இல்லை!
  பார்க்கின்றேன் அடிஅடியாய்க் கரும்பின் தோற்றம்!
  படைத்துள்ள எழுத்துக்கள் இன்றேன் ஊற்றும்!
  சோ்க்கின்றேன் செந்தமிழை உன்னை வாழ்த்த!
  சிறந்தோங்கி இளையநிலா வளா்க! வாழ்க!

  கவிஞா் கி. பாரதிதாசன்

  ReplyDelete
  Replies
  1. ஐயா...

   என்கவிதனைப் பார்த்து பெருங்கவி உவகை கொண்டீரோ?
   சங்க இலக்கியங்கியங்கள் ததும்பும் உங்கள் சொற்களிலே
   திங்களொடு தென்றலும் சேர்ந்த நன்னிலையதுவாய்
   எந்தனது உள்ளத்திலே உவகைதான் பெருகுதையா
   உங்களது வரவினாலும் வாழ்த்தினாலும் இளையநிலா
   மங்காப்புகழோடு வளர்ந்திமே நன்றி ஐயா!

   Delete

 26. வணக்கம்!

  இன்னட்புப் பாட்டிசை! பொன்னட்பு போற்றுமே!
  உன்னட்பு காட்டும் உயா்வு!

  கவிஞா் கி. பாரதிதாசன்

  ReplyDelete

 27. வணக்கம்

  காலம் அறிந்த கடுகளவு செய்கையும்
  ஞால உயா்வாய் நவில்!

  கவிஞா் கி. பாரதிதாசன்

  ReplyDelete
  Replies
  1. அறிஞர் பெருந்தையே!

   அருமையாகக் குறள்பாடி அழகாகக் கருத்துரை தந்தீர்
   பெருமையாக உம்தோழமை பெற்றதென் பேறென்பேன்
   இனிமையாக இயம்பிய உங்கள் வாழ்திற்கும் வரவிற்கும்
   கனிமையாக நானும் சொல்கின்றேன் நன்றிகளை...

   Delete
 28. அனைத்தும் அழகோ அழகு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைகோ ஐயா...

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்கநன்றி...

   Delete
 29. நான் ஏற்கனவே வாழ்த்திட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விச்சு... :)

   Delete
 30. வாழ்த்துக்கள்,

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் விமலன். வணக்கம். முதன்முறையாக வந்திருக்கின்றீர்கள் நல்வரவு.

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 31. க்வில்லிங் இரண்டு, கவிதைகள் இரண்டு.
  நான்கும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ.. இமா... வாங்கோ! எங்கை கனநாளா காணேலை. சுகமா இருக்கிறீங்களோ?

   ம். மிக்க நன்றி உங்கள் ரசனைக்கு...:)

   Delete
 32. வாழ்த்து அட்டையும் கவிதையும் மிக அழகு! தாமதமானாலும், என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிராவிற்கு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா!

   வாழ்த்துவற்கு நேரம் காலம் அவசியமில்லை நல்ல மனம் இருந்தால் போதும்...:)
   ரொம்ப நன்றி அக்கா! உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்... :)

   Delete
 33. கவிதை அழகு !பூசாருக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் சொல்லி விடுகின்றேன் உங்கள் தளம் மூலம்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ.. வாங்கோ நேசன்...:)
   பூசாருக்கு சொல்லிவிட்டேன் உங்கள் வாழ்த்தினை.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 34. வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்கள் தோழியர்க்கும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சிவகுமாரன்! வணக்கம். முதன்முறையாக வந்திருக்கின்றீர்கள் நல்வரவு!

   உங்கள் வாழ்த்திற்கும் வரவிற்கும் மனம்நிறைந்த நன்றிகள்!

   Delete
 35. You are right regarding the songs Ilamathy! All are ilaiyaraja songs,that's it. But let's wait n see..what other people are guessing! :) :)
  Thanks for the comment.

  ReplyDelete
 36. இருவருக்கும் இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கோவைக்கவி. வேதா. இலங்காதிலகம்! வணக்கம். முதன்முறையாக வந்திருக்கின்றீர்கள் நல்வரவு.

   அன்பு நன்றிகள் உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!

   Delete
 37. அதிராவுக்கு அழகிய கவிபடைத்த இளமதிக்கு பாராட்டுக்கள்.
  அதிராவுக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி மலிக்கா. வணக்கம்.
   முதன்முறையாக வந்திருக்கின்றீர்கள் நல்வரவு.

   உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_