Pages

Mar 16, 2013

கதவு திறந்தே...

வசந்தம்வரக் கதவு திறந்தே...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~மனக்கதவு திறந்தே...

                                  மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே
                                  மௌனம் வெளியேதான் வரத்துடித்தே
                                  இமைகள் கண்களைத் தழுவ மறந்தே
                                  இருக்கின்ற நிலைதனைச் சொல்லிவிடவா

                                  உறவே சிறையாகி என்றென்றுமே என்
                                  உணர்வுகள் தனைக்கொன்று குவிக்கின்றதே
                                  விழிநீர் தினந்தோறும் வலியோடுதிர்த்தே
                                  விழுந்தேன் வெங்காற்று வெட்டைதனிலே

                                  நினைவே  நீயெனக்குப் பகைதானா
                                  நிலவும் சுடுதே இது உண்மைதானா
                                  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
                                  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்

                                  உணர்வேயுன் உறவினில் தொடங்கியவாழ்வே
                                  உலர்ந்தாலும் என்னுயிர் உன்னோடுதானே
                                  கலந்தே இருப்பேன் உன்னோடு  நானே
                                  கணமே பிரியேன் கடவுள் கைகொடுப்பானே...

                                                                                                                       இளமதி
***************************


#################

என்னைக் கவர்ந்த பாடல்: சின்னக்குயில் சித்ராவின் அதி உச்சஸ்தாயியில் பாடும் மென்மையான மனதை வருடும் பாடல். ந.முத்துக்குமார் அவர்களின் கவிதை வரிகள் அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போகிறது. G.V. பிரகாஷின் இசையும் சொல்ல வார்த்தையே இல்லை. 
(சித்ரா பாடிய பாடலை ஒளிப்பதிவாகத் தேடிக் கிடைக்காதமையால் 
யூ டியூப்பில் இப்பாடலுக்கு வேறு காட்சிப்பதிவு கலந்து வெளியிடப்பட்டதை இங்கு தந்திருக்கிறேன்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~


<<<<<<>>>>>
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

84 comments:

 1. ”வசந்தம்வரக் கதவு திறந்தே”...

  மிகவும் நல்ல தலைப்பு. அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் ந்ன்றிகள்.

  தலைப்பைப்போலவே உள்ளது என் வலைத்தளமும் தங்கள் வருகைக்காக.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைகோ ஐயா!

   உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. கவிதையில் மிகவும் பிடித்த வரிகள்:

  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே

  கலந்தே இருப்பேன் உன்னோடு நானே

  கணமே பிரியேன் கடவுள் கைகொடுப்பானே... ;)))))

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கு மிக்க நன்றி...:).

   Delete
 3. கவிதை அருமை. கவர்ந்த இன்னொரு விடயம் - நீங்கள் எழுத்துப் பிழையில்லாமல் எழுதியிருப்பது.


  வானவிற் பின்னணியில்... வசந்தம், இளமதியின் (இது எடிட்டிங்!) மேலே மீன்கொத்தி - அற்புதம். பார்க்க மனதுக்கு இதமாக இருக்கிறது. ஃப்ரேம் செய்து வையுங்கள். என்னைக் கேட்டால்... உங்கள் கைவினைகளை விற்பனைக்கு விடலாம். அருகில் கைவினை விற்பனை நிலையங்கள் எதுவும் இல்லையா!
  பெண்வண்டும் அழகு, கூட உள்ள பூவும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. //மேலே மீன்கொத்தி//
   ஹ்ம்!! ;)) கண்டவர் ஒருவர் ரகசியமாக கண்(ண)டித்தார். //Isn't it humming bird? Why would a meen kothi go to the flowers! :)))))// சரிதான், பூவுக்குள் குளமா இருக்கிறது மீன் இருக்க! ;D
   இளமதி... என்ன பறவை அது!

   Delete
  2. வாங்கோ இமா...:) வணக்கம்!

   பிழையில்லாமல் எழுத முயல்கின்ற ஒவ்வொரு தருணமும் என்னையுமறியாமல் விசைப்பலைகையில் எழுத்துக்களை வேகமாகத் தட்டும்போது எழுத்துப்பிழை ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது...:) சொல்லிவிட்டீர்கள் அல்லவோ.. இன்னும் கவனித்து செயற்படுகிறேன்...:)

   கவிதை, கைவினைகள் உங்களைக் கவர்ந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு இமா.
   ம்.. நல்ல யோசனை கைவினைகளை ஃப்ரேம் பண்ணி வைக்கலாம். ஆனால் விற்பனைக்கா? என்ன விளையாடுகிறீர்களோ...:)))

   ரீச்சர்... அது என்ன பறவை என்று கண்டு பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளீர்களே...;) மீன் கொத்தி அல்ல. அது நீங்கள் சொன்ன ஹம்மிங்பேர்ட் தான். நெட்டில் கிடைத்த படம். அதைத்தான் செய்தேன். தேன் சிட்டு என்றும் சொல்லுவினம். ஆனால் அது சிறிய குருவி இனமல்லவோ... ஆக ஏதோ பூவில் தேன் உறிஞ்சும் ஒரு சிறிய பறவை. அவ்வளவுதான். ஆளை விடுங்கோ ரீச்சர்...:)))

   உங்கள் அன்பான வருகைக்கும் உன்னிப்பான கவனிப்பு, ரசனை மற்றும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி இமா...

   Delete

 4. மீண்டும் வணக்கம்!

  மனத்தின் கதவைத் திறந்திங்கு
  வடித்த கவிதை மிக..அருமை!
  வனத்தின் அழகாய்ச் சொற்கூட்டம்
  வந்து மணக்கும் கவி..யினிமை!
  தனத்தின் செல்வி கதையுண்டு!
  தமிழின் செல்வி இளமதியாம்!
  இனத்தின் உயா்வை ஏந்துகிற
  என்றன் இதயம் வாழ்த்துதுமே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. கவிஞரையா வணக்கம். உங்கள் வருகை மனதிற்கு மகிழ்சியைத் தருகிறது.

   அருமையென அழகாய்ச் சொல்லி என்கவியை
   விரும்பி அளித்திட்ட வாழ்த்தினைக் கண்டு
   பெருமை எனக்குப் பெருகுதையா உங்கள்
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நனிநன்றியே!

   உங்களின் அன்புமிக்க வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete

 5. வணக்கம்!

  வண்ண வசந்தத்தை வாழ்த்தி வரவேற்க
  எண்ண எழிற்சிட்[டு] எழுந்ததுவோ! - கண்கமழச்
  சோலை அளிக்கும் சுடா்ப்பூக்கள்! நாம்மகிழப்
  பாலை அளிக்கும் பருகு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   சிட்டின் வரவேற்பைச் சிறப்பாகவே சொல்லி
   முட்டும் தமிழார்வத்தை மூட்டிவிட்டீர் கை
   தட்டும் என்றுமே தமிழர் நெஞ்சினில்
   கொட்டும் முரசு உங்கள் கவியாலே...

   அருமையாக கவியதனால் வாழ்த்திட்ட பெருங்கவிஞர் ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 6. ரசித்தேன்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தனபாலன் சார்!

   உங்கள் வரவிற்கும் ரசனை மற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 7. அழகான கவிதைகள் ரசித்தேன்
  பாடல் பகிர்வுக்கும் நன்றி
  படங்களும் அருமைஅதற்கேற்ற தலைப்பும் அருமை (கருத்திடுவதற்கு தான் கொஞ்சம் தேடவேண்டியதாகிவிட்டது சகோதரி )

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மலர் பாலன்!

   உங்கள் ரசனை அருமை. மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் தோழி!

   Delete
 8. நினைவே நீயெனக்குப் பகைதானா
  நிலவும் சுடுதே இது உண்மைதானா
  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்
  என்னைக் கவர்ந்த வரிகள். பாடல் ரசிக்க வைத்தது தோழி. படங்கள் வெகுவாக கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ சசிகலா!

   ம்.. உங்களையும் என் கவி கவர்ந்துவிட்டதோ...:) சந்தோஷம்.
   பாடலும், படங்களையும் ரசித்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வரவிற்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றி தோழி!

   Delete
 9. ஆம்! மிக அமைதியான பாடல் இனிமையே.
  இதே போல தங்கள் கவிதையும் நன்றாகவே உள்ளது.
  கைவினைகள் இரண்டும் மிக அழகே!
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி!
   சோகப் பாடல்களில் சுகம் இருக்கும் இனிமையும் இருக்கும். தனியே சோகத்தை ரசிப்பது என்பதில்லைத்தான். ஆனாலும் இசையில் பாடல்களில் அந்த சோகத்தையும் ரசிக்கவைக்கின்றது என்பது உண்மையே.
   உங்கள் அனபான வருகையும் சிறப்பான ரசனையும் கருத்துக்களும் வாழ்த்தும் மிக்க மகிழ்வைத்தருகிறது. மிக்க நன்றி!

   Delete

 10. காதல் நிலையதனைக் கவிதையாய் வடித்த மனக்காட்சிப் படிவமது மனதுள் பதிந்தது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி சந்திரகௌரி! வாருங்கள்!
   முதன்முறையாக இங்கு வருகை தந்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி...

   உங்கள் ரசனை கண்டு மனம் மிகவும் மகிழ்கிறது.
   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 11. வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்//
  காதல் கைவிடாது

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா...:) வாங்கோ சகோதரரே!
   காதல் ஆரை விட்டது கைவிட...:)

   உங்கள் ரசனையும் கருத்தும் சிரிக்க வைக்கின்றது...:)))
   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 12. இனிய வணக்கம் சகோதரி...
  முதலில் உங்கள் கைவண்ணத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும்...
  மிகவும் அழகு...

  பூம்பொழில் சோலையிலே
  பூமரக் கிளையினிலே
  இசைவாய் வந்தமர்ந்து
  பூமலரும் வேளையதை
  நாவுலர கூவிக்கொண்டு
  விழியேற்று நிற்கிறாயோ???

  இது போன்று ஆயிரமாயிரம் கவிகளுக்கு
  விதையிடுகிறது கைவண்ணங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கவிஞரே!
   ம்.. காண்பதத்தனையும் உங்கள் கவிப் பொருள்தானே...:). எதைத்தான் விட்டு வைப்பீர்கள்....:) அருமையாக அந்தப் பறவைக்கும் பாட்டெழுதி விட்டீர்களே...:)

   பார்க்கும் பொருளெல்லாம்
   பாட்டுக்குத்தானடி தமிழ்
   கேட்கும் திசையெல்லாம்
   தேன் தமிழ் ஊற்றடி எனப்
   போற்றும் கவிபுனைந்த
   கவிஞரே மகி! உம்வரவால்
   காணுதே இவ்வலை சிறப்பு...

   உங்கள் அழகான ரசனைக்கும் கவிக்கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 13. மனக்கதவு மெல்ல மெல்ல
  திறக்கிறது உங்கள் கவி கண்டு....
  தாழ் போட்டு அடைத்திருக்கும்
  உள்ளமும் விண்டு எழுந்துவிடும்...
  அவ்வளவு அழகான வார்த்தைப் பிரயோகம் சகோதரி...
  அழகு அழகு...

  ReplyDelete
  Replies
  1. அருங்கவியியில் வாழ்த்தினீர்.. உமதன்பு இந்தச்
   சிறுகுழந்தை சீர்பெறச் செய்யுமே...

   கவிபுனைவதில் உங்களின் முன்பு நான் இன்னும் சிறுமிதான்.
   கற்க இன்னும் உள்ளது.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி!

   Delete
 14. அருமையான படமும் கவிதையும் ரசிக்கும் பாடலும் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. நேசன் வாங்கோ....
   உங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத் தருகிறது.
   மிக்க நன்றி!

   Delete
 15. மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே
  மௌனம் வெளியேதான் வரத்துடித்தே
  இமைகள் கண்களைத் தழுவ மறந்தே
  இருக்கின்ற நிலைதனைச் சொல்லிவிடவா //

  மனக்கதவை திறந்தே அழகாய் சொல்லிவிட்டீர்களே!

  உங்கள் கைவேலையா அழகாய் இருக்கிறது, பறவை தூது செல்கிறதோ!
  பூவின் பக்கத்தில் வரும் சின்ன சிவப்பு வண்டும் அருமை.
  சித்ராவின் பாடல் பகிர்வு அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அரசு!
   எத்தினை நாளைக்குத்தான் பூட்டியே வைக்கிறது. அதுதான் கதவைத்திறந்து காற்று வர வழிவிட்டிருக்கிறேன்...:)

   ஆமாம் நான் செய்த கைவேலைகள்தான் இங்கு பதிவேற்றியுள்ளேன்.
   அனைத்தையும் நன்கு ரசித்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சி.
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 16. நினைவே நீ எனக்குப் பகைதானா ?

  என்ன ஒரு அழகான வரி இது !!

  இந்தக் கவிதையை எனக்குத் தெரிந்த மெட்டிலே பாடலாமே என்று தோன்றியது.
  ஆயினும் உங்களது அனுமதி கிடைக்குமா இல்லையா எனத் தெரியவில்லை.

  அனுமதி கிடைத்தால் நான் கானடா ராகத்தில் பாடுவேன். நானும் பாடுவேன்.

  தமிழ் வலையில் வெளியாகும் அழகான கவிதைகளுக்கு மெட்டு அமைத்து பாடுவது எனது பொழுதுபோக்கு.
  இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை.

  நீங்கள் எனது வலைக்கு வந்தது தெரிந்தது. நன்றி தங்கள் வருகைக்கு.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா! வணக்கம்!
   கவிதை வரிகளை ரசித்திருக்கின்றீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனக்கு.

   நீங்கள் நன்கு பாடுவீர்கள் என வசந்தமண்டபம் வலைப்பூ பதிவர் சகோதரர் மகேந்திரன் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

   இதிலென்ன எனக்கு ஆட்சேபனை இருக்கிறது ஐயா...
   தாராளமாகப் பாடுங்கள். பாடிப்பதிந்து எனக்கும் தாருங்கள். அதை நானும் இங்கு வெளியிடுகிறேன்.

   நீங்களும் இங்கு வந்தமையும் ரசித்தமையும் எனக்கு மிகுந்த மகிழ்வாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா!

   Delete
  2. இங்கு இந்தப்பாடலைக் கேளுங்கள் இங்கும் கேட்கலாம். சுப்பு தாத்தா

   www.subbuthatha.blogspot.in

   Delete
  3. ஐயா..... மிக்க்க்க நன்றி ஐயா!!!
   அருமையோ அருமை. இத்தனை அழகாக இருக்கிறது. அழகாக மெட்டமைத்துப் பாடியதும் அட இது நான் எழுதியதுதானா என்று வியக்க வைக்கிறது.
   ரொம்ப ரொம்பச் சந்தோஷம். மிக்க நன்றி ஐயா.
   உண்மையாகவே உங்கள் வயதிற்கு எத்தனை அற்புத அபாரத்திறமை உங்களிடம். வியப்பாக இருக்கிறது.

   நன்றி ஐயா நன்றி!!!

   Delete
 17. அழகான quilling மற்றும் மனதை தொட்ட கவிதை வரிகள் ..

  thats humming bird :)) ...இமா சரியா கண்டுபிடிச்சிட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. நான் எங்க கண்டுபிடிச்சேன். ;) அவசரத்தில பார்த்து... கர்ர்.

   Delete
  2. ஆஆஅ:)))ஓகே ஓகே :))

   Delete
  3. அப்புறம் இளமதி ...இதையும் செய்யுங்க ...பதிவுகளின் தலைப்பில் மற்றும் லேபிளில் quilling படங்கள் பெயரை குறிப்பிடுங்க ...அதாவது ரோஸ் செய்தா க்வில்ல்ட் ரோஸ்மலர் /ஓம் செய்தீர்கள் அதற்க்கு லேபிளில் க்வில்ட்ஓம் என்று குறிப்பிடுங்க அப்போ தான் செர்ச் எஞ்சின் மூலம் உங்கள் கிரியேஷன்ஸ் தெரியும் .அதில் இன்னொரு விஷயம் குரிப்பிட்டாகனும்
   ஆனா நீங்க நெட்டில் பார்த்துசெய்திருந்தா யாரை பார்த்து அல்லது எந்த பக்கத்தை பார்த்து செய்தாலும் அவர்களுக்கு டைரக்ட் லிங்க் கொடுக்கணும் ..சேர்ச் எஞ்சின் மூலம் அனைவரும் பார்க்க வாய்ப்பிருக்கு

   Delete
  4. ஹாஆ.. அஞ்சு... வாங்க.
   நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க. ரொம்ப நல்லது...:)
   ஆனா மேற்படி நீங்க சொல்றது சிலது எப்படி இங்கை சேர்த்துக்கிறது..... அதுதான் எனக்குப் பிரச்சனை.
   லேபிள் சேர்க்கணும். உதவி வேணுமே....:(

   Delete
  5. அப்புறம்.. நான் செய்யும் கைவேலைக்கு நிச்சயமா நிறையப்பேரின் பக்கங்கங்களின் கைவேலைதான் காரணம். ஒருத்தர் , அல்லது இரண்டு பேர்னா லிங்க் அல்லது பெயரைக் குறிப்பிடலாம். ஏகப்பட்டோர் விதவிதமா செய்திருக்காங்க. நானும் அங்கின ஒன்று, இங்கின ஒன்றுன்னு அதை இதை சேர்த்துச் செய்யும்போது எப்படிக் கொடுப்பது... அதையும் சொல்லுங்க...:)
   நிச்சயம் செய்கிறேன்.

   உங்க ஆலோசனை உண்மையில் மிக நல்லது அஞ்சு. வழிவகைகளை நான் கண்டுபிடிச்சோ அல்லது கேட்டோ செய்கிறேன்.
   உங்க அன்பான கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்துது.
   உங்க வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 18. Nice quilling work as usual Ilamathy!
  I am hearing this song for the first time! ;)
  Kavithai-yil sokam izhaiyodinaalum rasikka mudikirathu. Innum niraiya ezhuthunga!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி...:)
   இந்தப்பாட்டும் முன்பு கேட்டதில்லையா.... அவ்வ்வ்வ்வ்....:)
   இது ஒன்றும் புத்தம்புதிய படப்பாடல் இல்லையே. 2008-9ல் வெளிவந்ததென்று நினைக்கிறேன்.
   அடுத்தமுறை கேபி சுந்தராம்பாள் பாடின பாட்டு ஏதாச்சும் போடுறேன் அப்பவாச்சும் கேட்டபாட்டென்று சொல்லுவீங்களோ பார்ப்போம்...;)
   கைவேலை, கவிதை உங்களுக்கும் பிடிச்சதெனில் எனக்கும் மகிழ்வே.
   கவிதை இன்னும் எழுதச் சொல்லீட்டீங்க.. அப்புறம் கண்ணால் காதால் ரத்தம் வடியுதென்று சொன்னீங்க... ஆமா... சொன்னீங்கன்னா அழுதுடுவேன்-னேன்....:)))

   உங்க அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி!

   Delete
 19. வசந்தம் வர கதவு திறந்தே மிக அருமை இளமதி..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியா...

   அன்பு நன்றிகள் உங்கள் ரசனைக்கு...

   Delete
 20. கவிதை அருமையம்மா...
  /// நினைவே நீயெனக்குப் பகைதானா
  நிலவும் சுடுதே இது உண்மைதானா
  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்///

  நெஞ்சைத் தொடுகின்ற வரிகளா விருந்து படைத்தீர்கள்.. மனக்கதவை நன்றாகத் திறந்திருக்கிறீர்கள்...

  குயிலிங் வேக் அருமையாக இருக்கிறது.. தொடருங்கள்.. இன்னும் வருவேன் விருந்து சுவைக்க....

  ReplyDelete
 21. அதுசரி.. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை ஏன் இணைக்கேல்ல.. ஒருக்கா ஆரும் தொழில்நுட்பம் தெரிஞ்சவையைக் கொண்டு இணையுங்கோ. அப்பத்தான் பலரும் வந்து உங்கள் விருந்தை சுவைக்கமுடியும்...

  ReplyDelete
  Replies
  1. வரவேண்டும் அன்புமகளே...

   கவிக்கோதை உமக்கே என் கவி விருந்தா? பரிகாசம் ஏனோ...:)

   ம்..ம் நல்ல ரசனை. உமது வரவும் ரசிப்பும் மிகுந்த மகிழ்வாயிருக்கிறது.

   த.ம ஓட்டுப்பட்டை இணைப்பு மட்டுமல்ல நிறைய வேலைகள் இருக்கிறது. யாராவது மாட்டினால் நல்லாயிருக்கும் பார்ப்போம்...:)

   மிக்க நன்றி இங்கு உமது வரவிற்கு...:)
   தொடரும் வரவிற்காய் காத்திருக்கும் அன்னை...

   Delete
  2. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை உங்கள் பக்கத்தில் இணைப்பது இலகுவான காரியம் இளமதி
   தங்களிற்கு ஆட்ச்சேபனை இல்லையென்றால் சொல்லுங்கள் நான் வழிகாட்டுகிறேன்

   நன்றி

   Delete
  3. ஓ.. சீராளன் மன்னிக்கோணும் நான் இப்பதான் இங்கே நீங்க எழுதினதைப் பார்த்தேன்...

   ஓ.. அதனாலென்ன.. சந்தோஷம். நீங்க உதவ வந்ததை நான் மறுப்பேனா... தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைத்திடுவோம்.
   உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
   உங்கள் உதவும் மனப்பான்மைக்கு என் அன்பார்ந்த இனிய நன்றிகள் சீராளன்!!

   Delete
 22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். வாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்!

   அங்கு சென்று பார்த்து என் வாழ்த்தினையும் நன்றியையும் பகிர்ந்துவிட்டு வந்தேன்.

   மீண்டும் உங்களுக்கு என் அன்பு நன்றிகள்!

   Delete
 23. எனக்குப் பிடித்த வரிகள்.
  \\வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்//
  கைவேலையும் அழகோ அழகு.
  பாராட்டுக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கவிஞரே! வணக்கம்!
   உங்கள் வரவு எனக்கு மட்டற்ற மகிழ்வாயிருக்கிறது.

   தங்களின் வரவிற்கும் ரசனைக்கும் அன்பான பாராட்டிற்கும் மனம்நிறைந்த நன்றிகள்!

   Delete
 24. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். என்னுடைய
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.தனபாலன் சாருக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு வாங்கோ...:)

   என்ன உங்களையும் எங்கள் அதிராவையும் காணவில்லையே என கவலைப்பட்டேன். நலமாக இருக்கின்றீர்களோ?

   ம்.ம் மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு அம்மு!

   Delete
 25. மிகமிக அழகான க்விலிங் இளமதி. இரண்டுமே அழகாக செய்திருக்கிறீங்க.முதலாவது க்விலிங்கிற்கு பொருத்தமான தலைப்பு. பின் backround கண்ணுக்கு இதமா இருக்கு.
  ஆனா இங்கு வசந்தம் இல்லை. பனிப்பொழிவாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ.. அம்மு..வசந்தம் வரும். காத்திருப்போம்.
   பனியும் கடந்து போகும்...:)

   க்விலிங்க் இன்னூம் அழகாக வந்திருக்கணும். நேரம் போதவில்லை. அப்படியே முடித்து இங்கு போட்டாயிற்று.

   ரசிப்புக்கு நன்றி!

   Delete
 26. உங்க கவிதையை மிகவும் நன்றாக,ஆழமாக(சோகம்) எழுதியிருக்கிறீங்க.
  "நினைவே நீயெனக்குப் பகைதானா
  நிலவும் சுடுதே இது உண்மைதானா
  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்"
  இந்த இடம் இதயத்தை தொட்ட இடம்.
  சித்ரா பாடியபாடலும் கவிதைக்கு பொருந்திப் போகிறது. "வெள்ளித்திரை" பிடித்தபடங்களில் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. ம்.ம். அதிகமாக பலருக்கு நீங்க சொன்னவரிகள் பிடித்திருக்காம்.மகிழ்சிதான் எனக்கும்.
   பாடல் நான் விரும்பிய பாடல் அதுவாகப் பொருந்திக்கொண்டது இங்கே...:)

   Delete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. படக்கவிதையும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் தேன்துளியாய்... நன்றாக இருக்கு. படித்ததில் பிடித்ததா அல்லது நீங்க எழுதியதா.எதுவாயினும்
  அழகான படம்,அழகான கவிதை. நிறைய உங்களிடத்திலிருக்கும் திறமைகளை(முக்கியமாக கவி) வெளிக்கொணர வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.என் வாழ்த்துக்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. பூவுக்குள் ஒளிந்திருக்கும் தேந்துளியும் என் கற்பனையே. இந்தப் படத்தைக் கூகுளில் பார்த்ததும் படம் பிடித்துப்போக அதற்கு இப்படி எழுதத்தோன்றியது. எழுதிவிட்டேன்.

   ம். மிக்க நன்றி அம்மு. உங்கள் ரசனையே அலாதிதான். என்னைப்போன்றோரை ஊக்குவிக்க உங்களைபோன்று ரசிக்கும் (சீமான்) சீமாட்டி இருந்தால் வானம் அதிக தூரமில்லை...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் மிக உன்னிப்பாக ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்!!!

   Delete
 29. வசந்தம் வர திறந்த கவிதைக் கதவு அழகு ...
  அழகான quilling , அருமையான பாட்டுப்பகிர்வு ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி!

   வசந்தம் வந்தே ஆகணும்க்கிற நிலையாகிப்போச்சு இங்கே நம்ம பிழைப்பு. குளிர் தாங்கலை.
   அதுதான் வரவேற்கக் காத்திருப்பு.

   உங்கள் ரசனை அருமை. வரவிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 30. திறந்தவுன் மனக்கதவில்
  தித்திக்கும் பூச்சரங்கள்
  மறைந்திருக்கும் காதலினை
  மணம்வீசி கவி எழுத
  புன்னகைக்கும் இதழோரம்
  பூத்திருக்கும் வார்த்தைகளை
  விழிகொண்டு வாசித்தேன்
  மொழிகூட அழுகிறது...!

  அழகிய கவிதையும் ,படங்களும் அத்தோடு உங்கள் ரசனைமிகு பாடலும் அருமை வாழ்த்துக்கள் இளமதி

  ReplyDelete
  Replies
  1. அன்பு சீராளனே நல்வரவு...

   உங்கள் அன்பான வரவிற்கும் அனைத்து ரசனைக்கும் மனமார்ந்த நன்றிகள்!

   மனவோலம்தன்னை
   மலர்கொண்டு உரைத்ததென
   இன உணர்வோடும்
   மொழியழகோடும்
   உணர்வதனோடும் நீசொன்ன
   கவிக்கருத்துக் கண்டு
   பலகோடி நன்றிகளை
   பகர்கின்றேன் உந்தனுக்கே...

   Delete
 31. உங்கள் கவிதை திரைப் பாடல் போலவே உள்ளது. அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் முரளிதரன்!

   முதன்முறையாக இங்கு வருகிறீர்கள். வாருங்கள்!

   ஆஹா.. அப்படியா அப்போ திரைப்படத்திற்கும் என்னை கவி எழுதச்சொல்கிறீர்களோ....:) நல்ல நகைச்சுவை.. ரசித்தேன்.

   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 32. நிலவோடு உறவாட வந்தேன்
  அவள் சொன்ன கவி கண்டு
  தடு மாறி நின்றேன் ..........
  தமிழோடு விளையாடும் பெண்ணே
  உனதாற்றல் பெரிதென்று தளராமல்
  சொல்வேன் !இனிதான வாழ்த்துக்கள்
  உனக்காகவே இனி என்றும் என் நாவில்
  உதிரட்டுமே என் தோழி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்பாளடியாள்!
   முதன்முறையாக இங்கு வருகிறீர்கள். வாருங்கள்!
   உங்கள் பெயர் சொல்லும்போதே ஒரு இனிமை. அருமையான பெயர். அழகானதும்கூட...

   நிலவோடு உறவாட
   தடை இங்கு இல்லை
   என் பருவம் இன்னும்
   இங்கு சிறுமழலைதானே
   எனதாற்றல் உன்முன்னே
   மிகச் சிறிது தோழி! நான்
   நெடுந்தூரம் நடைபோட
   உன்னுதவி தாநீ!தந்தால்
   அடிவானமும் காலடியில்
   அரை நொடியில் தானே!

   Delete
 33. இப் பாடல் மனதை உருக்கிச் செல்கிறதே !
  என் நினைவில் நின்றாடும் பாடலும் கூட ...:(

  ReplyDelete
  Replies
  1. ம். பாடலும் உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தது.

   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய கருத்துக்கவிக்கும், வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் தோழி!

   Delete
 34. // உணர்வேயுன் உறவினில் தொடங்கியவாழ்வே
  உலர்ந்தாலும் என்னுயிர் உன்னோடுதானே
  கலந்தே இருப்பேன் உன்னோடு நானே // - எனக்கு பிடித்த வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் உஷா அன்பரசு!

   முதன்முறையாக இங்கு வருகிறீர்கள். வாருங்கள்!

   மிக்க நன்றி உங்கள் அன்பான வரவிற்கும் இனிய ரசனைக்கும்...:)

   Delete
 35. சுப்பு தாத்தா அருமையாக பாடியிருக்கார் .அப்பாடலை லிங்குடன் ஒரு பதிவாகவே போடுங்க இளமதி

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ... அஞ்சு. வாங்கோ அடிக்கடி காணாம போயிடுறீங்க...:)

   உண்மை! தாத்தாவை என்னசொல்லிப் பாராட்ட... அருமையாகப் பாடியிருக்கிறார்.
   நானும் அதையேதான் நினைச்சிருக்கிறேன்.
   நன்றி உங்க ஆலோசனைக்கு...:)

   Delete
 36. ஆஹா வசந்தம் வர இங்கே கதவு திறந்திட்டுது.. நாங்களெல்லாம் கொஞ்ச நாளைக்கு கதவடைக்கிறோம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. அதிரா.... வாங்கோ... வணக்கம்..._()_..
   என்ன வரவர நீங்க இப்பிடி .... வேணாம் ஒண்ணும் சொல்லலை.. அழுதிடுவேன்...:(..

   மழை வர எப்பிடி எல்லாரும் வேண்டி ஆடிப்பாடுவினமோ அப்பிடி வசந்தத்தையும் வெள்ளனவே வந்து வரவேற்கோணும். இல்லாட்டி இங்கின எங்களை இந்தக் குளிர் கொண்டேபோட்டிடும்...:)

   கதவை திறவுங்கோ...
   காத்து வரட்டும்...அடைக்கப்படாதூஊஊ... :).

   Delete
 37. குயிலிங் அழகோ அழகு.. நீங்க எங்கேயோஓஓஓஓஒ போயிட்டீங்க?:).. எதில எண்டெல்லாம் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  கவிதை நீங்க எழுதியதை விட... சூப்பர் தாத்தா பாட்டால அதனை மெருகேட்டிட்டார் வாழ்த்துக்கள்.... மீண்டும் தொடருங்கோ..

  ReplyDelete
  Replies
  1. //நீங்க எங்கேயோஓஓஓஓஒ போயிட்டீங்க//
   கர்ர்ர்ர்ர்ர்... ங்கை.. ஆர் போனது... நான் இங்கைதான் இருக்குறன். நீங்கதான் இத்தனை நாளா எங்கையோஓஓ போயிட்டு இப்ப வந்து என்னைச்சொன்னா...:)))

   சுப்புத்தாத்தா அருமையா பாடித் தந்திட்டார்...
   அவர் எனக்கு மட்டும் ரேட் சொல்லேலை. வேணுமெண்டா உங்களையும் நான் அறிமுகபடுத்திவிடுறன் கெதியா ஒண்டெழுதித் தாங்கோ அவரிட்டை குடுத்து பாடவைச்சு பதிஞ்சிடுவம். பிறகு அவரும் ஃபீஸை ஏத்தீடுவார். அதைவிட அவைக்காண கியூவில நிக்கோணும். ஆனபடியால கெதியா எழுதுங்கோ.. சரியே...;)))

   உங்க அன்பான வரவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க மிக்க நன்றி அதிரா!

   Delete
 38. தனிமையின் துயரை தெளிவாய் படம் பிடித்துக் காட்டும் அற்புத கவிதை.
  இரண்டு Quilling ம் அழகோ அழகு !!! வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி உங்கள் அன்பான வரவிற்கும் இனிய ரசனைக்கும்...:)

   Delete
 39. நினைவே நீயெனக்குப் பகைதானா
  நிலவும் சுடுதே இது உண்மைதானா
  வருவேன் விரைந்தே உன்னிடம் நானே
  வனமே நீபோய்த்தான் ஒளிந்திருந்தாலும்//////////

  சூப்பரோ சூப்பர்......

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_