Pages

Mar 23, 2013

உணர்வோடு.....


மனதில் நிலைக்கும் மழலையின் காட்சி
மடிந்திட்டானோ மனமொப்பவில்லை…  ஐயோ!
பேடிகளாய்ப்  பிறந்தநாட்டைவிட்டு வந்து
பேர்சொல்லவும் பிள்ளையில்லாமல் போனதங்கே...

கதிகலங்கி கருவும்கலங்கி கண்ணீர்சொரிந்து

கவலைமட்டுமே அங்கு மிகுந்ததோ எம்மிடம்
உயிர்காக்க ஓடிவந்தோம் தஞ்சமென இங்கு நம்
உணர்வுகளைக் காத்திட்டோமா இல்லையே...

ஊமைகளாய்  என்பிள்ளைக்கொன்றுமில்லை என்று

ஊரூராய் உலாத்துகின்றோம் வெட்கம் வேதனை.....
என்று தணியும் எங்கள் தமிழரின் தாகம்
என்றுமடியும் எங்கள் அடிமையெனும் ஓலம்….
ҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩ


அன்பினாலே உண்டாகும் நட்புவலை
அறிந்திடாமல் இருப்பதுவோ நாமிதனை...

பண்பினாலே வென்றிடலாம் பகையதனை
பழுதிலாத மனம்வேண்டும் பாரினிலே....

வாய்மையொடு வாழ்ந்திடவும்வேண்டுமன்றோ
மனத்தூய்மையுடன்  துயரகற்றித் துணிந்துநிற்போம்...

தமிழ்வாழ்ந்திடவே நாமெல்லாம் உலகினினிலே
தந்திடுவோம் எழுத்தினிலும் நம்உணர்வுகளை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புயலோ மழையோ எதுவந்தபோதும்
விளைவை நொந்து வீணாகிப்போகாமல்
துணிவுதான் எமக்குத் துணையெனப் பற்றிடு 
வினைக்கு அஞ்சியே வீழ்ந்து விடாதே...

==========00000==========

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினைப் பதிவு செய்யத் தலையங்கத்தில் ஒருமுறை ”அழுத்துங்கள்” ...மிக்க நன்றி..:)

45 comments:

 1. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. பின்பு வாறேன்ன் இப்போ நோ ரைமூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. சூப்பர் குயிலிங்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அதிரா...:)
   ஓம் நீங்கதான் எப்பவுமே 1ஸ்டூஊஊ... எல்லாத்திலுமே...:)

   அவசரமில்லை உங்களின் வேலைகளை முடிச்சுக்கொண்டு வாங்கோ.

   உடன் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

   Delete
 2. வீரமிகு வரிகள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்...!

   Delete
 3. அருமையானதொரு படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  கலங்க வைக்கும் உணர்வுகள். ;(

  //புயலோ மழையோ எதுவந்தபோதும்
  விளைவை நொந்து வீணாகிப்போகாமல்
  துணிவுதான் எமக்குத் துணையெனப் பற்றிடு
  வினைக்கு அஞ்சியே வீழ்ந்து விடாதே...//

  நல்லதொரு வீரமிக்க வரிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வைகோ ஐயா...

   மனம் பதறவைக்கும் நிகழ்வுகள் அங்கே. நாங்கள் எங்கள் துடிப்பையும் இழந்தால் வாழ்வதில் அர்த்தமே இல்லை.

   தங்கள் உணர்விற்கு மிக்க நன்றி!

   Delete
 4. உலகத்தமிழ் மக்களை ஒன்று திரட்டும்
  உளிகொண்டு அவர்தம்
  உள்ளங்களைத் தட்டி எழுப்பும் - தமிழர்
  உயர்வுக்கு வழி காணும்
  உன்னதச் சிந்தனை இது ..

  பாடுவேன். கேளுங்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சுப்பு ஐயா!

   உங்கள் உணர்ச்சிக்கவி கேட்க இன்னும் உணர்வு பொங்குதையா!...
   அருமை!

   மிக்க நன்றி ஐயா உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்!

   Delete
 5. அருமையான உணர்வின் வரிகள்!
  வீரம் வீசுகிறது...
  உணர்வுகளை எழுத்தாக்கும்
  உரம் பேற்றொர் யாவரும்
  உரிமைக்காய் குரல் கொடுக்க
  உணர்வுகளால் ஒன்றிணைவோம்
  உலகத்தமிழரை ஒன்றிணைப்போம்...
  பாராட்டுக்கள் அம்மா!
  அம்மா, தமிழ்மண ஓட்டுப் பட்டை ஏன் இன்னும் செய்யவில்லை... விரைவில் செய்யுங்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வா.வா.. அன்பு மகளே கோதை!

   அருமையாகச் சொன்னீர் உம் கருத்தை.

   ஏனைய வழிகளில் பங்குகொள்ள முடியாவிடத்து எழுதமட்டுமே முடிந்தவர்கள் தம் எழுத்தினாலாவது இப்படித் தமது உணர்வுகளை கொட்டி எழுதி ஏனையோரை விழிப்புறச் செய்யவேண்டும் என்பதை மனதில் நினைத்து எழுதினேன்.

   தமிழ்மன ஓட்டுப்பட்டையை இணைக்க முயற்சி செய்கிறேன். சிறிது காலதாமதமாகிறது. அவ்வளவே..

   வருகைக்கும் உணர்ச்சிமிக்க வரிகள்தந்து பாரட்டியமைக்கும் நன்றி கோதை!

   Delete
 6. ஆங்... மறந்து விட்டேன்... குயிலிங் கைவண்ணம் அருமையாக இருக்கிறது... உங்களுடைய, அதிரா, அஞ்சு அக்கா ஆகியோருடைய கைவண்ணங்களைப் பார்க்கும் போது எனக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. அது பற்றி உங்களிடம் கேட்க வேண்டும்.. தனி மடலில் கேட்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ம்.ம் குயிலிங் பற்றி பாராட்டியதற்கு மிக்க நன்றி.

   இது செய்வது ஒன்றும் பெரிய வித்தை இல்லை. கொஞ்சம்...:) மேலதிக பொறுமை ஆரம்ப காலத்தில் வேண்டும். பழகிவிட்டால் எல்லாம் இலகு.
   தாராளமாக தெரிந்ததைச் சொல்வேன். எங்கள் அஞ்சுவின் பக்கத்தில் போய்ப் பாரும் அங்கே படிப்படியான விளக்கவுரைதந்து விளங்கப்படுத்தியிருக்கின்றாவே...

   உதாரணத்திற்கு
   http://kaagidhapookal.blogspot.de/2013/02/no-tool-flower-tutorial-quilling.html

   இங்கு போய்ப் பாருங்கோ...

   Delete
 7. மடிந்திட்டானோ மனமொப்பவில்லை… ஐயோ!//

  வாளால்உள்ளத்தை கிழித்து போட்டது உங்கள் கவிதை வரிகள் ((

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு...

   உடல் வதைபட்டு
   உயிரையே இழக்கின்றனர்
   அங்கே எங்கள் உறவுகள்.
   இங்கே நாம் நம் மனது
   வதைப்படுவதை
   மறைக்க முடியாதுதான்...

   Delete

 8. வணக்கம்!

  உயிர்காக்க ஓடினோம்! நம்மின் உணா்வாம்
  பயிர்காக்க ஏன்மறந்தோம்! பாரில் - உயா்வெல்லாம்
  நீங்கிக் கிடக்கின்றோம்! ஈழ மகனிழந்து
  ஏங்கிக் கிடக்கின்றோம் இன்று!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞரையா!
   உங்கள் உணர்ச்சிமிக்க உரம்மிக்க வார்த்தைகள் இன்னும் எம்மை ஊக்கப்படுத்துகின்றன.

   வரவிற்கும் கருத்துப்பாக்கள் தந்தமைக்கும் என் பணிவான நன்றிகள்...


   பயிர்காக்க மறந்ததோம் இல்லையெனவில்லை மேலும்
   துயர்காத்துத் துவண்டிட்டால் எதிரியவன் துள்ளிக்கொண்டு
   இடுந்துயரம் மேலாகும் பயனிலையென்று பல்லிளித்திருக்காமல்
   சுடும் சொற்களாலும் குறிபார்த்துக் கொன்றிடலாமே அவனை...

   Delete

 9. மீண்டும் வணக்கம்

  என்று தணியும் தமிழினத் தாகமே!
  என்று மடியும் அடிமையெனும் மோகமே!
  இன்று படைத்த இளமதி பாட்டடிகள்
  வென்று மணக்கும் விரைந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மீசைக்கார பாரதிதந்த வீரவரிகளுடன்
   ஆவேசக்கவிபாடும் உங்கள் வரியிணைந்து
   நாசக்கார நரபலிவாதிகளின் கொட்டமடக்க
   மோசமாக மனம்நொந்து படித்திட்டேன் பாடலை...

   Delete

 10. மீண்டும் மீண்டும் வணக்கம்!

  உங்களைச் சாதாரண பெண்மணியாய் எண்ண முடியவில்லை!
  சாதனைப் பெண்மணியாய் என்கண்முன் தெரிகின்றீா்!
  பாட்டிற்குத் தகுந்த படங்கள்!

  தும்பிப் படமிட்டுத் துாண்டிய பா..படித்து
  எம்பிக் குதிக்குமே என்னுள்ளம்! - நம்பிநான்
  வாழ்த்துகிறேன்! வான்மதி உன்றன் தமிழ்கண்டு
  தாழ்த்துகிறேன் என்றன் தலை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா...எதிரிதான் நான் என்ன ஆயுதம் தூக்கவேண்டுமென்பதை எனக்குக் கற்றுதருகிறான் என்று எங்கள் தலவன் சொன்னார். அவ்வகையில் என்னால் தூக்க முடிந்த ஆயுதம் இதுவெனக் கொண்டேன்.

   சாதாரணமானவர்களைச் சாதனையாளர் ஆக்கியது தமிழ்மொழி. அது என் குருதியிலும் கலந்த ஒன்று, அதைவிடவும் மிகையாகக்கூறவில்லை உங்கள் கவிமேல் நான் கொண்ட காதலும்தான் ஐயா...

   இன்னும் மகேந்திரன் என்னும் இனிய சகோதரன் http://ilavenirkaalam.blogspot.de/ அவர் தரும் நிழற்படக் கவிகள் என்னை வளர்க்க உதவுகின்றது.
   அவரே எனக்குச் சென்ற வாரம் இந்நிழற்படம் தந்து இதற்குக்கவி எழுது என்று பணித்தார். அங்கிருந்து ஆரம்பித்தது இவ்வடிவம்... இனிய சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

   நிழற்படத்தின் நிஜம்கூறினேனென
   வழம்கொளிக்கும் வார்த்தைக்கவி
   உளம்நிறைய புனைந்த கவிமாலை
   விழுந்தது எந்தோள்களிலே மகிழ்வே ...

   தருகின்றேன் ஈரநன்றிகளை... வியப்பில் நீங்கள்
   தலை தாழ்த்தவேண்டாமையா ஒருபோதும்
   தமியேன் கவிகற்க ஆசானாய் இருமெனக்கு
   தாழ்வணங்கி வேண்டுகிறேன் வரமே.......

   உரம்தந்து உரைத்திட்ட வாழ்துகளுக்கும் வரவிற்கும்
   அகம்நிறைந்த இனிய வணக்கங்களும் நன்றிகளும்
   உங்களுக்கு ஐயா!

   Delete

  2. வணக்கம்!

   தங்களின் பதிலுரை படித்து நெகிழ்ந்தது நெஞ்சம்!
   வாழ்த்துக்கள்!

   நல்ல தமிழுக்கு நான்அடிமை! உன்னுடைய
   வல்ல தமிழை வணங்குகிறேன்! - தொல்லெல்லாம்
   தேனேந்தித் தந்த இளமதியே! சிந்தனையாம்
   வானேந்திக் காண்க வளம்!

   கவிஞா் கி. பாரதிதாசன்
   தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 11. தமிழ்வாழ்ந்திடவே நாமெல்லாம் உலகினினிலே
  தந்திடுவோம் எழுத்தினிலும் நம்உணர்வுகளை....//

  தமிழ்வாழ நாமும் வாழ்வோம்.......உணர்வுடன்
  நல்ல கவிதைகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பூவிழி...

   தமிழை வாழவைப்போம் வாழுவோம்...

   மிக்க நன்றி வரவிற்கும் வாழ்த்திற்கும்....

   Delete
 12. மூன்று கவிதையிலும்
  முன்னூறு தாகங்கள்

  முடியவில்லை எம்மூச்சு
  முள்ளிவாய்க்கால் மண்ணோடு

  விழிப்புத்தான் விடுதலைக்கு
  முதல்படி என்றான் தலைவன்

  ஆதலால் விழித்திருப்போம்
  விவேகம் வளர்த்தே ...!

  மிக அருமை இளமதி வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சீராளன்... வரவிற்கும் அருங்கவிக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   வேகமுடன் விவேகம் கொண்டிட
   வீழ்த்திடலாம் பகையையுந்தான்...

   Delete
 13. மனத்தூய்மையுடன் துயரகற்றித் துணிந்துநிற்போமஆ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாலசுப்ரமனியன்!
   முதல்முறை உங்கள் வரவிங்கு. வாருங்கள் !

   துயரகற்றிடத் தூய்மையும் அவசியம்தான்...

   வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 14. ''...அன்பினாலே உண்டாகும் நட்புவலை
  அறிந்திடாமல் இருப்பதுவோ நாமிதனை...

  பண்பினாலே வென்றிடலாம் பகையதனை
  பழுதிலாத மனம்வேண்டும் பாரினிலே....

  வாய்மையொடு வாழ்ந்திடவும்வேண்டுமன்றோ
  மனத்தூய்மையுடன் துயரகற்றித் துணிந்துநிற்போம்...

  தமிழ்வாழ்ந்திடவே நாமெல்லாம் உலகினினிலே
  தந்திடுவோம் எழுத்தினிலும் நம்உணர்வுகளை..'' மிகப் பிடித்த வரிகள் .இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனிய சகோதரி வேதா. இலங்காதிலகம்!

   உங்கள் அன்பு ரசனையும் வாழ்த்தும் என்னை உவகைப்படுத்தியது.
   மிக்க நன்றி!

   Delete
 15. வீறுகொண்டு எழச் செய்யும் கவிதை சகோதரி...
  பாடல் வரிகளில் அப்படியே மெய்மறந்து அமர்ந்துவிட்டேன்...

  எவ்வளவு அற்புதமா எழுதி இருக்கீங்க
  அந்த தும்பி கூட தன்னம்பிக்கையுடன்
  தலைதூக்கி நின்று சாதிக்கும் உங்கள் கவி வரிகளினால் சகோதரி....

  ReplyDelete
  Replies
  1. இனிய சகோதரரே மகி!

   வீரமிக்க தமிழனின் தீரமிக்க குருதி என்னுடலில்
   ஊரும் உறவும் உணர்வும் அதுவன்றி வேறேது...

   நம்பிக்கை தந்ததம்பி உன்கருத்தால் விளைந்த
   தன்னம்பிக்கை வரிகள் அவை...

   படந்தந்து வரிஎழுதச்சொன்ன தகை உமதல்லவா...
   உமக்கு என் மனம்நிறைந்த நன்றிகள்!

   வரவிற்கும் உணர்வுநிறை வாழ்த்திற்கும்
   உளமார்ந்த என் நன்றிகள்!!!

   Delete
 16. இக்கணத்திற்கேற்ற நல்லதொரு பதிவு.இவ்வுணர்வுகள் கொஞ்சகாலம் முன் எழுச்சி பெற்றிருந்தால் இப்பாலகன் படம் இங்கிடபெற்றிருக்காது. மிகவும் நன்றாக கவிதனை வரைந்த உமக்கு என்ன பதில் உரைப்பது.
  கவிவரியில்..
  "ஊமைகளாய் என்பிள்ளைக்கொன்றுமில்லை என்று
  ஊரூராய் உலாத்துகின்றோம் வெட்கம் வேதனை....."
  மிக யதார்த்தவரி,மனதை தொட்டவரி.

  க்விலிங் அருமை.அழகு. அழகான கவிதைகள் இளமதி.மிக்க நன்றி உணர்ச்சிமிக்க பதிவுக்கு.

  ReplyDelete
  Replies
  1. அன்பு அம்மு...

   காலங்கடந்த உணர்வுதான் நம் எல்லோருக்கும் ஆனாலும்
   தன்மானவுணர்வுகளை இனியாவது செத்திடாமல் காத்திடுவோமே...

   ”ஆழியின் ஆழம் மேலால் தெரிவதில்லை”...

   அன்பு வருகைக்கும் ஊன்றிய ரசனைக்கும் உணர்வு நிறைந்த கருத்திற்கும் உளமார்ந்த நன்றிகள்!

   Delete
 17. அருந்தமிழில் அழகிய கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஸாதிகா...

   வரவிற்கும் ரசனைக்கும் மிகவும் நன்றி!

   Delete
 18. உணர்வு பூர்வமான கவிதை.
  எதார்த்தத்தைச் சொல்லி விட்டு போய் இருக்கிறது.
  மனம் கனக்க வைக்கிறது இளமதி தோழி.

  ReplyDelete
  Replies
  1. அன்புத்தோழி அருணா செல்வம் வணக்கம்!

   உணர்வும் உயிரும் உலர்ந்துவிடின்
   ஊழ்முடிந்ததென்று எண்ணுகிறேன்
   மனதில் கனக்கும் வரிகளா இவை
   இங்கு சினத்திலுரைத்தது மிகச்சிலதானே....

   அன்புடன் வருகைக்கும் கனக்கும் கருத்திற்கும் மனம்நிறைந்த நன்றிகள்!
   --------------------------------------
   வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கும் உளமார்ந்த நன்றிகள்!

   Delete
 19. //தமிழ்வாழ்ந்திடவே நாமெல்லாம் உலகினினிலே
  தந்திடுவோம் எழுத்தினிலும் நம்உணர்வுகளை....//.தமிழும், தமிழ் மக்களும் எங்கும் அச்சமின்றி சுதந்திரமாய் வாழும் காலம் விரைவில்...!

  ReplyDelete
 20. //ஊமைகளாய் என்பிள்ளைக்கொன்றுமில்லை என்று
  ஊரூராய் உலாத்துகின்றோம் வெட்கம் வேதனை.....// -
  என்று தணியும் எங்கள் தமிழரின் தாகம்
  என்றுமடியும் எங்கள் அடிமையெனும் ஓலம்….//

  மனதை உலுக்கி நெகிழ செய்துவிட்டது. உணர்வு போராட்டம்!

  கருத்து பெட்டியை open ஆக வைத்தால் கருத்திட எளிதாக இருக்கும்.

  ReplyDelete
 21. //அன்பினாலே உண்டாகும் நட்புவலை
  அறிந்திடாமல் இருப்பதுவோ நாமிதனை...

  பண்பினாலே வென்றிடலாம் பகையதனை
  பழுதிலாத மனம்வேண்டும் பாரினிலே....///  மிக அருமை

  http://samaiyalattakaasam.blogspot.com/2013/03/grapefruit-pancake_26.html

  ஜலீலாகமால்

  ReplyDelete
 22. புயலோ மழையோ எதுவந்தபோதும்
  விளைவை நொந்து வீணாகிப்போகாமல்
  துணிவுதான் எமக்குத் துணையெனப் பற்றிடு
  வினைக்கு அஞ்சியே வீழ்ந்து விடாதே...

  உணர்வுகள் ததும்பும் கவிதைக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 23. மெய் சிலிர்க்கும் வரிகள்........

  ReplyDelete
 24. ovvontrum manam thottathu...!

  ReplyDelete
 25. அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது
  வாழ்த்துக்கள்

  இங்கே கிளிக்குக

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   ஓ.. அப்படியா?.. பார்க்கின்றேன்!

   அறியத் தந்தமைக்கும்
   வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_