Pages

Mar 28, 2013

தூது செல்லாயோ........

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஹைஷ்!!!

இன்று பிறந்தநாள் காணும் ஹைஷ் என்னும் எங்கள் அன்புச் சகோதரரை நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல 
இறை அருளை வேண்டி வாழ்த்துகிறோம்!!!இந்த அன்னத்தை எமது அன்புக்குரிய சகோதரர் ஹைஷ் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு எங்களின் அன்பினையும் வாழ்த்தினையும் தெரிவிக்க தூது அனுப்புகின்றேன்......

 இந்தக் க்விலிங்க் அன்னத்தினை என் அன்புத்தோழி அஞ்சுவின் http://kaagidhapookal.blogspot.de/2013/02/blog-post.html வலைப்பூவில் இருந்த அன்னத்தைப் பார்த்துச் செய்தேன். மிக்க நன்றி அஞ்சு!!!.
(அஞ்சு என் க்விலிங் கைவேலை மானசீக குரு ஆவார். இப்படித் தன்னைச்  சொன்னால் 
தனக்குப் பிடிக்காதென்றுவிட்டார்... ) 
∞∞∞∞∞∞∞∞∞அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
☺☺☺☺☺☺☺☺☺


எம்முயிர்காக்கத் தூது செல்லாயோ...
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣


முன்பொரு காலத்திலே
நள தமயந்திக்கு நீதானோ
தூதுசென்றாய் அன்னமே
இன்னல்படும் தமிழர் ஈழத்திலே
பாவிகளால் பலியாவதைக்
கூற இப்போதுதூது செல்லாயோ

தென்னவர் தலைவர்க்கும்
சொல்லிய யாவும்
காற்றிலே போதன்னமே
எங்களின் சோதரர் கண்டிடும்
துன்பத்தை யாரும் சிந்தயில்
கொண்டதாய் காணவில்லையே

உன்னதமாய் உன்பங்கு
சங்ககாலத்தில் நிகழ்ந்தது
உண்மையென்றால் அன்னமே
இன்னமும் நம்முயிர் ஈழத்திலே
இழந்திடும் முன்னமே விரைந்து
நீ  தூது செல்லாயோ...
₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪

அன்பு நட்புகளே.....

     வலைப்பூப் பதிவர் சகோதரர் வெங்கட் நாகராஜ்  http://venkatnagaraj.blogspot.com/  தம் வலைப்பூவில் மேற்படி உள்ள படத்தைக்கொடுத்து அதற்கு கவிதை, கதை எழுத ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிதை எழுதும் ஆர்வம் என்னை இதற்கும் எழுதத் தூண்டிட நானும் என் சிற்றறிவுக்கெட்டியவரை ஏதோ கிறுக்கலாக எழுதியுள்ளேன். பிழைபொறுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். வித்தியாசமான முறையில் இதை அறிவித்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. 

சகோதரரே! உங்களின் இவ் அரியபணி சிறக்க என் நல்வாழ்த்துக்கள்!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினைப் பதிவு செய்யத் தலையங்கத்தில் ஒருமுறை ”அழுத்துங்கள்” ...மிக்க நன்றி..:)

93 comments:

 1. நல்ல கவிதை இளமதி.

  பாராட்டுகள். எனது பக்கத்திலும் சில நாட்களில் வெளியிடுகிறேன்....

  நட்புடன்

  வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே! வாருங்கள்!.

   உங்கள் உடனடி வருகை எனக்கு மிக்க மகிழ்வாயிருக்கிறது...

   அன்னத்தின் தூதால்முதன்முதலாக வந்திருக்கின்றீர்கள்...:)

   உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 2. அழகான கவிதை...

  ஹைஷ் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. வாங்கோ சிட்டுக்குருவி ஆத்மா...

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ...:)

   Delete
 3. நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  தூது அழகாக இருந்தது தோழி.

  மையின் அருமை பல கருத்துகளை சொன்னது.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. வாங்கோ சசிகலா...

   தூது உண்மையாக கைமேல் பலன் தந்துவிட்டது....:)

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 4. ஹைஷ் அண்ணனிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி, தேகாரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக,நீண்ட‌ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக,மிக,மிக அழகான அன்னப்பறவை.உங்க கைவேலை நாளுக்குநாள் மெருகேறி வருகின்றது. நான் உங்க கவிதைக்கும்,கைவேலைக்கும் பாராட்ட‌வார்த்தைகளை தேடவேண்டி இருக்கின்றது இளமதி.அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. அழகோஅழகு அன்னம்.
   நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவாதான் குரு.எனக்கும் அவர் மூலமாகத்தான் க்விலிங் தெரியும்.

   Delete
  2. மிகவும் நன்றி.

   Delete
  3. அம்முலு... வாங்கோ..:)
   பார்த்தீங்களே... சகோ ஹைஷ் வந்து எங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு நன்றியும் சொல்லீட்டுப் போயிருக்கிறார்.
   எனக்கு இன்னும்தான் இங்கை அவர் வந்ததை நம்ப முடியேலை.

   பள்ளிக்காலத்தில படித்த நண்பர்களும் அந்த நினைவுகளையும் மீட்டிப் பார்க்கிறமாதிரி எங்கள் அன்புச்சகோதரர் எம்முடன் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கும் காலம் வராதோ என ஏங்க வைத்திருக்கிறார்...
   அவரின் ஆன்மீக மற்றும் தத்துவார்த்த வழிகாட்டல் எத்தனை உன்னதமானது. அவர் மீண்டும் வலை உலகில் வந்து பதிவிட வேண்டுவோம்...

   Delete
 5. எல்லா உறவுகளுக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  கவிதையை மிக அழகாக அன்னத்தை வைத்து புனைத்திருக்கிறீங்க இளமதி.அக்கவியில் எனக்கு....
  //உன்னதமாய் உன்பங்கு
  சங்ககாலத்தில் நிகழ்ந்தது
  உண்மையென்றால் அன்னமே
  இன்னமும் நம்முயிர் ஈழத்திலே
  இழந்திடும் முன்னமே விரைந்து
  நீ தூது செல்லாயோ...//
  பிடிதிருக்கு.மிக அருமையான சொல்லாடல். நீங்கள் இப்படி படத்துக்கு கவிதை எழுத தூண்டுகோலாக இருந்த திரு.வெங்கட் நாகராஜ் அவர்கட்கு
  நன்றிகள்.இல்லாவிட்டால் இப்படி அருமையான கவி கிடைத்திருக்குமா.

  ReplyDelete
 6. சிந்தனைத்துளியும் நன்றாக இருக்கு இளமதி. ஹைஷ் அண்ணனுக்கு வாழ்த்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி,மிக அருமையான பகிர்வொன்றை தந்தமைக்கு மிக்க நன்றிகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. அம்முலு... உங்கள் ரசனையே ரசனை... ஒவ்வொன்றாக இப்படி ரசித்திருக்கின்றீர்கள்.. மிக்க நன்றி.

   அன்னப்பறவை அவசரமாகச் செய்தது. நேரம் போதவில்லை. மேலும் அழகு படுத்த...:)

   என் கிறுக்கல் சகோதரர் வெங்கட் நாகராஜ் பக்கத்தில் இடம்பெறவேண்டுமென்பதற்காக எழுதவில்லை. ஆனால் அவர் அங்கு பிரசுரித்த படத்தைப் பார்த்தவுடன் மனதில் ஒரு ஆர்வம் அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு எழுதினேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டதுடன் தன்வலைப்பூவில் இதனைப் பதிவேற்றவுள்தாக கூறியுள்ளார். அங்கு எழுதுபவர்களுக்கு முன்னால் நான் எழுதுவது மிக மிக அற்பம். அங்கு போடப்போகிறார் என்றவுடன் மனதில் பயமாகவும் உள்ளது....

   மிக்க நன்றி அம்மு அன்பான உங்களின் வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்துகளுக்கும்....

   Delete
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. மிக்க நன்றி தனபாலன் சார்!

   Delete
 8. உங்கள் சகோதரருக்கு இனிய் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  குவில்லிங் அன்னபக்ஷி அழகாக உள்ளது.

  இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.

  அன்னத்தினை தூது அனுப்பும் கவிதை அற்புதமாகவும் வித்யாச்மாகவும் நல்ல சிந்தனையுடன் எழுதியுள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  பேனா படத்துடன் எழுதியுள்ள குட்டியூண்டு கவிதை மிகவும் பிரமாதம். க்விதாயினிக்கு ஓர் ஸ்பெஷல் சல்யூட்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. வாங்கோ வைகோ ஐயா...

   எல்லாவற்றையும் மிக அக்கறையாக ரசித்து வாழ்த்தியுள்ளீர்கள்...
   அனைத்திற்கும் என் அன்பார்ந்த நன்றிகள்!

   Delete
 9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை உங்கள் தளம் மூலம் நானும் தெரிவித்துக்கொள்கின்றேன் நண்பருக்கு!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
 10. கவிதை காலத்தின் நிகழ்வை பதிவு செய்கின்றது அருமை வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன்...

   உங்கள் அன்பான வாழ்த்திற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!..

   Delete
 11. தூது மிக அழகாக உள்ளது, நேரத்திற்கு ஏற்றபடி!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கிரேஸ்...

   ம்.அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 12. தூது செல்லாயோ ... ?

  கவிதை இனிக்கிறது.
  சொல்லிய
  கருத்தோ
  சுடுகிறது.

  செயத்தக்க செய்யாமை யானும் கெடும் என்றார் வள்ளுவர்.

  என்று செய்யவேண்டுமோ அன்று வாளா இருந்துவிட்டு
  இன்று எட்டு ஊருக்கு கத்துவோர் 2014 மே மாதத்திற்குப்பிறகும்
  கத்துவார்களா என்ன ?

  சுப்பு தாத்தா.
  உங்கள் இ மெயில் ஐ.டி. சொல்லலாம் என்றால் என் பதிவுக்கு பின்னூட்டமாக அளியுங்கள்.
  அதை நான் பிரசுரிக்கவில்லை. நான் உங்கள் கவிதையை நீலாம்பரி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
  அனுப்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சுப்பு ஐயா...

   காலத்தே பயிர் செய் என்பார்கள். என்ன செய்வது ஒரேயடியாகக் கவனிக்காமல் இருக்காமல் எம்மால் முடிந்தளவு செய்யகூடியதை செய்தல் நல்லதல்லவா.
   நீங்கள் கேட்பது போலவே செய்யலாம் ஐயா...:)

   என் கிறுக்கல்களை பாடலாக்கிப் பெருமைப்படுத்துகின்றீர்கள்.. மிக்க சந்தோஷமாக இருக்கிறது.

   நான் எழுதியவற்றை நீங்கள் பாடலாகப் பாடும் பாடல்களை இங்கே இணைக்க விரும்பிகிறேன். விரைவில் செய்வேன்.

   மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ரசனை என்னை மேலும் எழுதுவதற்க்கு ஊக்கப்படுத்துகிறது. மிக்க மிக்க நன்றி!

   Delete
 13. உங்கள் சகோதரருக்கு நீங்கள் செய்த அன்னம் மிக அழகு இள‌மதி! உங்களின் கவிதையும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. அக்காவுக்கு மிகவும் நன்றி.

   Delete
  2. மனோ அக்கா வாங்கோ...
   பார்த்தீங்களோ சகோ ஹைஷ் இங்கே வந்து எல்லாருக்கும் நன்றி சொல்லீட்டுப் போயிருக்கிறார்...:)

   உங்களை அக்கா என்று கூப்பிட்டும் சொல்லியிருக்கிறார்..:)
   உங்கள் அன்பான வரவுக்கும் நல்ல ரசனைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அக்கா!

   Delete
 14. அந்த கடைசி வரிகள் மிக அருமை! எதையுமே இழக்கும் வரை அதன் அருமை நமக்குப் புரிவதில்லை!

  ReplyDelete
 15. இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
  உங்கள் சகோதரருக்கு இனிய் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  குவில்லிங் அன்னபக்ஷி அழகாக உள்ளது.
  நல்வாழ்த்து.
  Vetha.Elangathilakam

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வேதா இலங்காதிலகம்...

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 16. அன்னம் அழகாய் இருக்கிறாங்க. :)

  /(அஞ்சு என் க்விலிங் கைவேலை மானசீக குரு ஆவார். இப்படித் தன்னைச் சொன்னால்
  தனக்குப் பிடிக்காதென்றுவிட்டார்... ) / :))) இதைப் படிக்கையில் படையப்பா படத்தில் வரும் "மாப்பிள்ளை இவர்தாங்க, ஆனா இவர் போட்டிருக்கும் ட்ரெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...என்னுது இல்லைங்க!" என்ற ரஜினி-செந்தில் காமெடி நினைவுக்கு வருகிறது! :))))) மக்காஸ், சும்மா டமாசுக்கு சொல்றேன், சீரியஸா எடுத்துக்கிராதீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  சகோதரர் ஹைஷ் கண்டிப்பாக இப்பதிவினைப் படிப்பார் எனத் தோன்றுகிறது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! விரைவில் மீண்டும் உங்களது வலைப்பூவைத் தூசி தட்டி எடுக்கவேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ஹைஷ் அண்ணா! :)

  கவிதை பிரமாதம் இளமதி! வழக்கம் போல சுகராகம் சோகம்தான் என்பதை நிரூபித்துவிட்டீங்க. நினைக்கையில் மனது வலிக்கிறது. விரைவில் ஈழப் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவ என் ப்ரார்த்தனைகள்!

  இருக்கும் போது அதன் அருமை தெரியாது, இழந்தபின் தான் தெரியும் என்பதற்கு உதாரணமாய்க் கடைசிக் கவிதையும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. வாங்கோ மகி...

   //சகோதரர் ஹைஷ் கண்டிப்பாக இப்பதிவினைப் படிப்பார் எனத் தோன்றுகிறது.//

   இங்கை நடந்ததைப் பார்த்தீங்களோ...:) உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடோணும். சகோ ஹைஷ் இதைப்பார்த்து நான் மனசுக்குள் நினைத்தது போல இங்கும் வந்து கருத்தெழுதியும் விட்டிருக்கிறார். பெரீய சந்தோஷம்தான்.

   ஹையோ மகீஈஈ... அஞ்சுவிட்ட ஏன் என்னை இப்படி மாட்டிவிடுறீங்க... இனி என்ன கேட்டாலும் எனக்கு சொல்லித்தர ஏலாது எண்டு சொல்லப்போறா...அவ்வ்வ்வ்....:)

   ம்.ம்.. அது ஏனோ என்னிடம் சோகராகம் மட்டுமே ஒட்டிக்கொண்டது மகி... என்ன செய்வது மாறி மாறி வரும் சூழல், நிலைமை அப்படித்தான் எண்ணவைக்கிறது... மாற்றம் கொண்டரத்தான் வேண்டும்.. என் கிறுக்கலில்.. முயற்சிக்கின்றேன்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனை, நகைச்சுவையான கருத்துப்பகிர்வு, வாழ்த்துக்கள் அத்தனைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மகி!!!


   Delete
 17. உங்கள் அன்பு சகோதரருக்கு என் இனிய பிறந்த நாள்
  வாழ்த்துக்கள் .கவிதையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
  2. வாங்கோ அம்பாளடியாள்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

   Delete
 18. அன்பு சகோதரிக்கு, இன்னும் நினைவு வைத்து வாழ்த்து பதிவிட்டமைக்கும் என் அன்பான நன்றிகள். வலையுலகம் தற்சமயம் வரமுடியாத நிலமை:(

  அன்பு சகோதரன்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே... வாங்கோ.. வந்திருக்கிறீங்களோ இங்கே... கடவுளே... என்னால் நம்ப முடியவில்லை... அழுகையே வருகிறது...
   தேடல் உண்மையானதென்றால் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் என்று அன்று நீங்கள் சொன்னதை இன்று நினைக்கின்றேன்.

   மிக்க மிக்க நன்றி சகோதரரே... உங்கள் வரவால் எங்கள் மனம் நிறைகிறது... மீண்டும் எங்களிடையே இப்படி இடையிடையே வந்துபோகவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்...

   Delete
 19. வாழ்க வளமுடன், உங்களின் இந்த வலை பூவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளை உள்ளே வைத்து ஏன் ஒன்றுமே உங்களிடம் இல்லை என நினைத்திருந்தீர்கள் ??? :)

  அன்ன பறவை மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே.... திறமை என்பதெல்லாம் இல்லை. உண்மையில் உங்களின் கட்டளையால் வெளியே பின்னூட்டம் மட்டும் எழுதிவந்தேன். பின்னர் அன்பு அதிராவால் வலைப்பூ ஆரம்பித்து இன்று பதிவராக உள்ளேன்.

   இன்னும் இங்குள்ள ஏனைய உறவுகளால் மேலும் என்னை வளர்த்துக்கொண்டு வருகிறேன்.

   அன்னத்தின் தூது உங்களை இங்கு அழைத்து வந்தது என்மட்டில் உண்மையே... இன்னும்தான் என்னால் இந்தச் சந்தோஷத்தை நம்பமுடியவில்லை...

   மிக்க மிக்க நன்றி சகோதரர் ஹைஷ்! உங்கள் வரவால் மனம் நிறைந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
   வாழ்க வளமுடன்!!!

   Delete
 20. ஹைஷ் அவர்கள் வலைக்குச் சென்று ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க சென்றேன்.
  அவர் தன்னை ஒரு விமானி என்றும் ஹீலர் என்றும் அறிமுகமாகி இருந்தார்.
  அவர் பல மாதங்களாக பதிவிடவில்லை. நேரம் இல்லை போலும்.

  அவருக்கு இவ்வலை மூலம் எனது வாழ்த்துக்களை தெரிவிக்க ஆவல் மட்டுமல்ல, கடமையும் கூட.

  வில்லம்பு பட்ட புண்ணும் வேதனை தராது.
  சொல்லம்பு பட்ட புண்தான் மாறாது ....

  என என்றோ கேட்ட தமிழ் சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது.

  அன்பின் வழியது உயிர்னிலை... அஃதிலார்க்கு
  என்புதோல் போர்த்த உடம்பு

  எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப
  உள்ளத்தாலும் உடலாலும் அவதிப்படுவோருக்கு
  அள்ளித்தர முன் வருகிறார் ஆறுதலை ஹைஷ் அவர்கள்.

  பிறரது துன்பங்களை, அல்லல்களை தமது துயர்களாகக் கொண்டு
  தன் நலன் பாராது முன் இருந்து அவர் துன்பம் போக்க முயல்வதே மனித நேயம்.

  மனித நேயத்தால் செயல்புரிவோர் மிகக்குறைவு.
  தமிழகத்தில் எண்ணத்துவங்கினால், பத்து விரலே அதிகம்.

  உங்களது வேதனை புரிகிறது.
  மனச்சாட்சி என்று இருப்போர்
  உள்ளம் எரிகிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சுப்பு ஐயா...

   நீங்கள் சொல்வது நூறுவீதமும் உண்மைதானையா.

   மனித நேயத்துடன் செயற்படுபவர்கள் மிகமிக அரிதான இவ்வுலக வாழ்வியலில் எங்கள் சகோதரர் ஹைஷ் போன்றோர் இருப்பது நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமேயாகும்.
   ஆனால் அவருக்கு ஏற்பட்ட நேர நெருக்கடியால் அவர் நடத்திவந்த மிக மிக அருமையான சில வலைப்பூக்கள் முழுதுமாக மூடப்பட்டுவிட்டன. மீண்டும் அவர் அவற்றை மீளத்தந்து மாதமொரு பதிவாகிலும் இட்டால் மிகமிக நல்லதாக இருக்கும்..

   பார்ப்போம். இன்று அவர் இப்படி இங்கு வந்ததே மிகப்பெரிய சாதனைதான். விரைவில் அவருடைய வலைப்பூவில் அவரை நாம் காணும் சந்தற்பத்தையும் அந்தப் பரம்பொருள் கருணையால் நிகழந்திட வேண்டுகிறேன்.

   உங்கள் அன்பான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete
  2. மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்

   Delete
 21. தோழி இளமதி உங்கள் கைவண்ணத்தில் அன்னம் அழகாக உருவெடுத்துள்ளது உங்கள் எண்ணத்தில் உதித்த கவிதையும் கருத்தும் இனியவை
  ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பூவிழி..

   உங்கள் அன்பான வருகையும் என்னை ஊக்கப்படுத்தும் ரசனையும் மிக்க மகிழ்வாக இருக்கிறது.

   உங்கள் வாழ்த்திற்கும் மனம்நிறைந்த நன்றிகள்!

   Delete
 22. ஆவ்வ்வ்வ்.. அன்னம் குயிலிங் சூப்பரா இருக்கு.. அந்த சூபரான அன்னத்தை தூது விட்டு ஒரு பிறந்தநாள் வாழ்த்து... அம்மாவோடு சேர்ந்து நானும் ஹைஸ் சகோவை இனிய பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்...

  அப்புறம்... கவிதை அருமை...
  ////உன்னதமாய் உன்பங்கு
  சங்ககாலத்தில் நிகழ்ந்தது
  உண்மையென்றால் அன்னமே
  இன்னமும் நம்முயிர் ஈழத்திலே
  இழந்திடும் முன்னமே விரைந்து
  நீ தூது செல்லாயோ...//// அன்னத்துக்கே ஒரு சின்ன பிளாக்மெயில்.. ஹ்ம்ம்... ஆனாலும் சூப்பர் அம்மா... பாராட்டுக்கள்.. உங்களுக்கும் என் ஈஸ்ட்டர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ..அன்புமகளே...:)

   பார்த்தீரோ...அன்னம் அழகாக தூது போய் வாழ்த்தினைச் சேர்த்து அவரையும் இங்கு கூட்டி வந்துவிட்டதே...:)

   ம்.ம் நீரே எனக்குப் பாராட்டும் அளவிற்கு நானொன்றும் பெரிதாக அப்படி எழுதிவிடவில்லை. ஏதோ என் மனதில் உதித்ததை ச்சும்மா கிறுக்கினேன். அவ்வளவுந்தான்...:)

   ஹையோ அன்னத்துக்கு ப்ளாக்மெயில் வெள்ளைமெயில் எண்டு ச்சும்மா தன்பாட்டில் கொடுத்த வேலையை அழகாக முடிக்கும் அதை குழப்பிவிடாதீர். கோபித்துக்கொள்ளப் போகிறது அன்னம்...:)))

   உங்கள் அன்பான வரவு, வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் எல்லாவற்றிற்கும் மிக்க மிக்க நன்றி கோதை!

   Delete
  2. மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்

   Delete
 23. இளமதி ஸபாஷ். அன்னம் விடுதூது அருமை. எவ்வலவு அழகாக கவிதை வருகிரது. இந்தமாதிரி லிங்க் கொடுத்து விட்டால் ஓடிவந்து பார்ப்பேன் நன்றி. ஈஸ்டர் வாழ்த்துகள். உன் ஸகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ காமாட்ஷி அம்மா!

   உங்கள் வரவுகண்டு மனம் மிகவும் மகிழ்வாயிருக்கிறது.

   அனைத்தையும் ரசித்து சகோதரர் ஹைஷின் பிறந்ததினத்திற்கு வாழ்த்திய உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அம்மா!

   நீங்கள் இங்கு என் ஃபோலோவராக உங்களைச் சேர்த்துக்கொண்டால் நான் புதுப்பதிவிட்டவுடன் உங்களுக்கு அதைப்பார்த்து வர சுலபமாக இருக்கும். பாருங்கள்!

   Delete
 24. அன்புச் சகோதரர் ஹைஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க. (ஏற்கனவே வேற ஒரு இடத்தில வாழ்த்தினேன். பார்த்த மாதிரி தெரியேல்ல.)

  க்விலிங் கலக்குது இளமதி. கவிதையும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா..
   ம்.சகோ. ஹைஷ் வந்து கருத்துக் கூறிப்போயிருக்கிறார் பார்த்தீங்களோ... சந்தோஷம் பொங்குதே...:)

   ஓ..நீங்கள் அங்கை சொன்னீங்களோ...:) சரி சரி.. பார்த்திருப்பார்....:)))

   மிக்க நன்றி இமா உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும்!

   Delete
  2. மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்

   Delete
 25. உங்கள் சகோதரருக்கு என் இனிய பிறந்த நாள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பிறேம்... வாருங்கள்!

   முதன்முதலாக இங்கு வந்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சி!

   உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
  2. மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்

   Delete
 26. இளமதி அழகிய அன்னம் ...
  ஹைஷ் சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .உங்களைப்பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு...:)

   ம்.ம். உங்களின் இரட்டை அன்னத்தைப் பார்த்து இந்த ஒற்றை அன்னத்தைச் செய்தேன்...:) நேரம் போதாத காரணத்தால் இன்னும் அழகுறச் செய்ய முடியாமல் போயிற்று.

   சகோ. ஹைஷ் நேற்று இரவு வந்திருந்தாரே இங்கு. அன்னத்தின் தூது வீண்போகவில்லை...:) உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி அஞ்சு...

   Delete
  2. மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்

   Delete

 27. கவிதை மிகவும் அருமை //எல்லாரும் பெரும்பாலும் அன்னத்தை பற்றி எழுதும்போது காதலுக்கு தூதாக தான் அனுப்புவார்கள் ..உங்கள் சிந்தனை வித்தியாசமானது ..தொடருங்கள்

  க்வில்லிங் மற்றும் கவிதை பயணத்தை ..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அஞ்சு... நான் இதனை இப்படி மாறுபாடாக சிந்தித்தால் நல்லதென நினைத்துத்தான் எழுதினேன். ஏனோ எதை எழுதினாலும் நாட்டுச் சிந்தனையும் அங்கு எம் மக்கள்படும் துயரமும்தான் நினைவுக்கு வருகிறது...

   ம்.. நீங்கள் இப்படி ஊக்கம் தரும்போது எனக்கும் ஆர்வமாக இருக்கிறது. நேரம் கிடைப்பதைப் பொறுத்து தொடர்கிறேன்.

   Delete
 28. எனக்கு தாமரை மலரை பார்த்ததும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது ..
  தாமரை இலையே தூது செல்லாயோ .:))).எந்த படம்னு நினைவில்லை .
  அன்னம் மலரை பார்த்து பாடுவதைபோல இருக்கு ..மெலோடியஸ் சாங் அது .

  ReplyDelete
  Replies
  1. ஆகா.. அதென்ன பாடல்... எனக்குத் தெரியவில்லையெ...
   நல்ல ரசனை உங்களுக்கு....:)

   Delete
 29. அப்புறம் இளமதி ..நீங்க செய்யும் க்வில்லிங்கின் முழு அழகும் வெளிப்படனும்னா ..ரெடிமேட் strips வைத்து செய்யுங்க ....பேப்பர் ஸ்ரெட்டர் பழக மற்றும் எளிமையான வாழ்த்து அட்டைகள் செய்ய பயன்படுத்தவும் ..
  frame செய்யனும்னா கண்டிப்பா ரெடிமேட் காகிதம் வைத்து செய்யுங்க

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அஞ்சு நானும் நினைத்தேன்... என்ன என்னிடம் போதிய ரெடிமேட் ஸ்ரிப்ஸ் இருக்கவில்லை. அதனால் இப்படிச்செய்தேன்..
   ரெடிமேட் எப்பவும் இன்னும் அழகு அதிகம்தான்...

   உங்க ஆலோசனை ரொம்ப பிரயோசனமானது... நன்றி அஞ்சு!

   Delete
 30. அன்பினையும் வாழ்த்தினையும் தெரிவிக்க தூது அனுப்பிய அன்னம் சகோதரர் மீண்டும் தன் பயனுள்ள தளத்தில் பதிவிட வேண்டிக்கொள்ளட்டும் ..


  ஹைஷ் சகோதரருக்கு மனம் நிறைந்த
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இராஜராஜேஸ்வரி... இதைத்தான் நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அந்த அன்னமும் சகோ. ஹைஷும் மனம் வைத்தால் நடக்கும்...:)

   வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

   Delete
 31. நீங்கள் கவிதையை வெங்கட் நாகராஜ் தளத்திற்கு அனுப்பவில்லையா?

  ஹைஷ் சகோதரருக்கு நீங்கள் செய்த வாழ்த்துமடல் வெகு அழகு.
  கவிதைகள் இரண்டும் மிக நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி...

   மிக்க நன்றி உங்க வாழ்த்திற்கு...

   சகோ. வெங்கட் நாகராஜிற்கு அனுப்பியாயிற்று. அவர் தனக்குக்கிடைத்த வரிசைக்கிரமத்தின்படி பிரசுரம் செய்வார்ன்னு சொல்லியிருக்கிறார் சகோதரி... :).

   Delete
 32. கவிதை அருமை சகோதரி !!! வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தமிழ்முகில்... :).

   மிக்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு...

   Delete
 33. உங்களின் சகோதரருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  கவிதை அருமையாக உள்ளது.
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி அருணா செல்வம்...

   வஸிஸ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் கிடைச்ச சந்தோஷம் எனக்கு... :).
   உங்கள் வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 34. உங்க கவிதை அருமை...

  //உன்னதமாய் உன்பங்கு
  சங்ககாலத்தில் நிகழ்ந்தது
  உண்மையென்றால் அன்னமே
  இன்னமும் நம்முயிர் ஈழத்திலே
  இழந்திடும் முன்னமே விரைந்து
  நீ தூது செல்லாயோ...
  //

  அழ வைக்கிறது உங்க கவிதை.... எப்பவுமே ஏன் சோகமாவே எழுதறீங்க....  உங்க அன்னம் சூப்பர்....ரொம்ப அழகா செய்து இருக்கீங்க....

  ReplyDelete
 35. வணக்கம் பிரியா ராம். வாங்கோ...:)

  ம். எங்க நாட்டில நம் மக்களின் நிலை, நினைவு சோகத்திலேயே என்னைத் தள்ளிவிட்டிருக்கிறது. அதனாலோ என்னவோ என் எழுத்துக்களிலும் அதுவே ஆகிறது.
  மாற்ற முயலுகிறேன்...:)

  மிக்க நன்றி பிரியா உங்கள் வாழ்த்திற்கும் வரவிற்கும்...:)

  ReplyDelete

 36. வணக்கம்!

  நண்பா் ஹைஷ் அவா்களுக்கு
  பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  சீரெல்லாம் பெற்றுச் சிறுப்புறுக! சால்புடைய
  பேரெல்லாம் பெற்றுப் புகழுறுக! - தாரெல்லாம்
  கொண்டமணங் காண்க! குளிர்ந்த தமிழன்னை
  கண்டவளங் காண்க கழம்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   அன்பொடு வாழ்தினை நல்கிய பாவலரே
   அருமைச்சகோதரர் இன்புறுவர் இதனைக்கேட்டு...

   ஐயா... உங்கள் அன்பான வரவிற்கும் சகோதரர் ஹைஷ் அவர்களின் பிறந்தநாளுக்கு
   மனமுவந்துதந்த வாழ்த்துக்கவிக்கும் மிக்க நன்றி !

   Delete

 37. வணக்கம்!

  வண்ணத்தில் மின்னுகின்ற அன்னத்தின் துாதுமொழி
  எண்ணத்தில் வன்மையினை ஏற்றியதே! - பெண்கவியே!
  தென்னகத்து வீரத்தைத் தெய்வத்தை நான்கண்டேன்
  உன்னகத்துப் பாட்டில் ஒளிர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. ஐயா...

   எங்களின் இன்னல் தீர
   இயற்றுமும் ஆற்றலுக்கு
   சின்னவள் உரைத்தது துரும்பே
   வல்லகவியே உம் வாழ்த்திற்கு
   வழங்கினேன் என் நன்றி!

   Delete

 38. வணக்கம்!

  வாழ்வின் பெருமையை வார்த்த வரியுணா்ந்தால்
  தாழ்வின் நிலையைத் தகா்த்திடலாம்! - சூழ்ந்தோங்க
  நல்ல கருத்துகளை நன்றே படைத்திட
  வல்ல இளமதியே வா!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. அன்பொடு வந்து அழகிய பாக்களால்
   என்பதிவை ரசித்துத் தந்த வாழ்த்தெனக்கு
   இன்னும் பல இனியன எழுதிப்பதிந்திட
   உன்னல் தருகுதே உவகை ஆனதே...

   உங்கள் அன்பான வருகைக்கும் எனை ஊக்குவிக்கும் நல்ல கருத்துப்பாக்களுக்கும்
   மனமார்ந்த நன்றிகள் ஐயா!

   Delete
 39. மிகசிறந்த படத்திற்கு மிகசிறந்த உண்மையில் பாராட்டக் கூடிய சிறந்த வரிகள் அன்னம் தூது சொல்லட்டும் முரட்டுத் சிங்கள தடியன் களுக்கும் துணை போனவன் களுக்கும் ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மாலதி!...

   முதன்முதல் இங்கு வருகிறீர்களென நினைக்கின்றேன் வாருங்கள்...

   ம்.தமிழுணர்வோடு எம்மால் முடிந்தவற்றை எவ்வகையிலென்றாலும் செய்யவேண்டும்.

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete
 40. சகோ.ஹைஷ்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.சகோவை நீண்ட நாட்கள் பின்பு இங்கு கண்டதில் மகிழ்ச்சி.
  கவிதையும் வாழ்த்தும் மிக அழகு இளமதி.உங்கள் பெயர் எனக்கு பரிச்சயமானதாக தெரிந்தது,எங்கு என்று இத்தனை நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்தது,தற்சமயம் நினைவிற்கு வந்தது,சாண்டில்யனின் சேரன் செல்வி என்ற படைப்பின் கதாநாயகி..:)!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியா...

   ஹைஷின் பிறந்தநாளிற்கு வாழ்த்துத் தந்தமைக்கு மிக்கநன்றி!
   அவர் இங்கு வந்தது உண்மையில் என் மனதிற்கும் மிகமிக மகிழ்சியாக இருந்த்து ஆசியா...:)

   சாண்டில்யனின் கதை எனக்குப் படிக்கக்கிடக்கவில்லை இன்றுவரை...
   என்ன...அதில் வந்த பெயரா என்னுடைய பெயர்???
   சரி சரி அப்ப நானும் பெரீஈஈய ஆள்தான்...;)))

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆசியா...:

   Delete
 41. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் வாழ்கவளமுடன்

  தூதுசெல்ல அழைக்கின்றீர்
  துயரமுறும் எம்மவர்க்காய்

  அழகிய கவிதை இளமதி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சீராளன்!

   சகோதரர் ஹைஷிற்கு வாழ்த்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி!

   நாமும் தூது அனுப்பி முயன்றிடுவோம் எம்மவர் துயர்துடைக்க...

   மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் சகோதரரே!

   Delete
 42. nantraaka ullathu sako..!

  nantri!

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_