Pages

Apr 6, 2013

தமிழே!!! உயிரே!!!

இந்தக் க்விலிங் கைவேலையில் தமிழ் எழுத்துக்களுக்குப் பயன்படுத்திய வடிவமைப்பு வேறு பல கைதேர்ந்தவர்களின் வலைப்பூக்களில் பார்த்ததைச் செய்துள்ளேன். அவர்கள் ஆங்கில எழுத்துகளுக்கும் இப்படிச் செய்துள்ளனர்.
நானும் எம் தமிழ் எழுத்திற்குச் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்வதில் மனம் மகிழ்கின்றேன். 
தமிழ் எழுத்துக்களில் வளைவுகள் அதிகம் என்பதால் செய்வதில் சற்று சிரமத்தை எதிர்கொண்டேன். 
எதிர்பார்த்த அழகு கிட்டவில்லை...:(.

 என் கைவேலைகள் பற்றிய உங்கள் கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்தும். உங்கள் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் மிக்க நன்றி!
♠♠♠♠♠♠♠♠♠♠


நானுணர்ந்த இன்பமிதை...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

முக்கனியிலும் கண்டிராத இந்தச்சுவை
முழுவதுமாய் நானுணர்ந்த இன்பமிதை

வித்தெனவே ஆழ்மனதில் விழுந்தவிதை
விருட்சமாக வானளாவ வளர்ந்ததிதை

கட்டியெனை ஆட்கொண்ட காவியத்தை
காதலித்தேன் அறிவெனக்குத் தந்தகொடை

இப்புவியில் இல்லைநிகர் என்றிதனை
இயம்புகிறேன் இதனருமை அறிந்தவரை

சித்தமெலாம் சிலிர்க்கவைக்கும் சிறப்பிதனை
சிருங்காரம் சிதைந்திடாத சிற்பமிதை

சொத்தெனவே என்றனிடம் வந்ததிதைச்
சொல்லுகிறேன் தமிழ்மொழிதான் வேறு இலை...
ᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕᵕ

தூய்மை
٭٭٭٭٭٭٭

நல்ல நினைவும்
நாடுகின்ற செயலும்
தொல்லகைள்  இன்றித்
தூய்மையைத் தருமே...
ҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩҩ

67 comments:

 1. க்விலிங் கைவேலை அருமையாக உள்ளது...

  அதை விட சுவையான தமிழுக்கு ஈடு இணை ஏது...? பாராட்டுக்கள்....

  வாழ்த்துக்கள் பல...

  நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தனபாலன் சார்... வணக்கம்.

   தமிழுக்கு இணை தமிழ்தான். அதனை தாய்மொழியாய்ப் பெற்ற நாம் மிக அதிஷ்டசாலிகளே...

   உங்கள் அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல...

   Delete
 2. ''..முக்கனியிலும் கண்டிராத இந்தச்சுவை
  முழுவதுமாய் நானுணர்ந்த இன்பமிதை


  வித்தெனவே ஆழ்மனதில் விழுந்தவிதை
  விருட்சமாக வானளாவ வளர்ந்ததிதை..''
  மிக நன்று. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி வேதா இலங்காதிலகம்...

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 3. அருமையான பதிவு.

  தமிழ் எழுத்துக்களால் குவில்லிங் வேலை நன்றாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள். புதுமுயற்சி தானே. போகப்போக பழகிவிடும். கவலை வேண்டாம். உங்கள் கைகளில் தொழில் உள்ளது இன்னும் சூப்பராகவே செய்வீர்கள் அடுத்த முறை. மனம் தளர வேண்டாம்.

  நானுணர்ந்த இன்பமிதை...என்பதை நாங்களும் உணரச்செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. பாடல் அழகோ அழகு. ;)


  தூய்மை
  ٭٭٭٭٭٭٭

  நல்ல நினைவும்
  நாடுகின்ற செயலும்
  தொல்லகைள் இன்றித்
  தூய்மையைத் தருமே...

  தூய்மை என்ற குட்டிக்கவிதையும் தூய்மையாக உள்ளது.

  தமிழே! உயிரே!! என்ற தலைப்பும் அருமையாக உள்ளது.

  அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகளம்மா!.[ போதுமா? திருப்தியா? ]


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ... வணக்கம் வைகோ ஐயா!

   அனைத்தையும் ரொம்பவே ரசனையுடன் படித்து கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

   எனது க்விலிங் கைவேலை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி.
   // உங்கள் கைகளில் தொழில் உள்ளது//
   ஆனால் நீங்கள் கூறுவதுபோல இது எனக்குத் தொழில் இல்லை. ஒரு ஆர்வம், மனதுக்கு நிறைவான செயற்பாடு, யாருக்கும் ஏதாவது வாழ்த்துக்கு நானே இவ்வகையாய்ச் செய்து வாழ்த்தனுப்பும் மனநிறைவு அவ்வளவே.

   என் கிறுக்கல்களை- கவிகளை மிகவே ரசித்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
  2. //ஆனால் நீங்கள் கூறுவதுபோல இது எனக்குத் தொழில் இல்லை. ஒரு ஆர்வம், மனதுக்கு நிறைவான செயற்பாடு//

   அதையே தான் நான் ‘தொழில்’ என்று சொல்லியுள்ளேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கான மனநிறைவுகளுடன் கூடிய ஆர்வங்களை என்னால் நன்கு அறிய முடிகிறது.

   எல்லோராலும் எல்லாமே செய்ய முடியாது. உங்களிடன் தனித்திறமைகள் நிறையவே நிறைவாகவே உள்ளன. எனக்கும் சந்தோஷமாக உள்ளது.

   நான் என்றும் மறக்கவே முடியாத, எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் என் மனதுக்குள் வைத்துக்கொண்டுள்ள ஒருசில பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறக்க வேண்டாம்.

   //என் கிறுக்கல்களை- கவிகளை மிகவே ரசித்து //

   அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அப்புறம் நான் அழுதுடுவேன். நீங்கள் எதுசெய்தாலும் மிகவும் நன்றாகவே திருத்தமாகவே அழகாகவே செய்கிறீர்கள்.

   இவ்வளவு திறமைகளையும் இதுவரை எங்கோ ஒளித்து வைத்திருந்திருக்கிறீர்களே! அதுதான் என் வருத்தம்.

   இப்போதாவது எல்லாவற்றையும் தாங்கள் பதிவிடுவது கண்டு சந்தோஷப்படுகிறேன். ;)))))

   வாழ்க ! வளர்க !!

   Delete
  3. ஐயா... ஒவ்வொருவரிடமும் அவரவர்களுக்கான தனித்திறமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெளிக்கொணரச் சந்தற்பம் சூழ்நிலை மிக முக்கியமானது.
   எனக்கும் கிடைக்கின்ற சந்தற்பத்தில்தான் ஏதோ எனக்குத்தெரிந்த - என்னால் இயன்றவற்றை இங்கு பகிர முடிகிறது.

   உங்கள் அன்பான வாழ்த்துக்கள் என்னை ஊக்குவிக்கின்றது.

   அதுபோல் உங்களையும் ஏனைய பதிவர்களையும் ஊக்குவிக்குமுகமாக என்னால் முடிந்தவரை அங்கங்கு வலைகளில் என் கருத்துப்பகிர்வையும் செய்கின்றேன்.
   இங்கே என்னைப் பொறுத்தவரையில் முடிந்தவரை என்பது நேரகாலம் மட்டுமே...

   மீண்டும் அன்பான உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

   Delete
 4. தமிழ் எழுத்துக்களை க்வில்லிங்-ல் செய்வது கடினமான காரியமே! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..தொடருங்கள் இளமதி!

  கவிதையில் எதுகை மோனை நடனம் புரிகிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் மகி!

   ம். தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பு வளைவுகள் நிறைந்தது. அதுவே அதன் அழகுங்கூட. ஆனால் அவ்வெழுத்துக்களில் இப்படிக் கைவேலை செய்வது கொஞ்சம் சிரமமானது. ஒருவேளை எனக்குத்தான் இன்னும் பயிற்சி தேவையோ தெரியாது...:)
   என் முயற்சியைப் பாராட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி!

   ம். கிறுக்கலில் என்னமோனை இருக்கு???...

   எங்கள் யாழ்ப்பாணத்தமிழில் செல்லமாக சின்னவர்களை என்னமோனை, என்னபிள்ளை இப்படிக் கூறுவது வழமை. அதுதான் அப்படிக்கேட்டேன்...:)))
   தப்பாக நினைச்சிடாதேங்கோ...;)

   உங்க அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி!

   Delete
 5. இதுவரை பார்த்த உங்கள் க்வில்லிங் அனைத்தையும் விட இது சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் இமா!

   ம்.. அப்பிடியோ???
   சரி... கைவேலை செய்வதில் திறமையான ஆசிரியை நீங்களே சொல்வதால் மனதில் திருப்திப்பட்டுக்கொள்கின்றேன்...;)
   ஆனால் ஏதும் தப்பா இருந்தால் அதையும் சுட்டிக்காட்டுங்கோ. அதுவும் மிக முக்கியம் சரியோ...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா...:)

   Delete
 6. இளைய நிலாவிலே ஒரு அழகான கவிதை படித்துவிட்டு
  இங்ஙன எங்க ப்ளாக் க்கு வந்தா இங்க ஒரு மயிலு பாடுதுங்க..

  இங்கன வாங்க...

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   உங்கள் வலைபூவிற்கு வந்தேன். அருமையாகப் பாடியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருகிறதெனக்கு.

   இத்தனை சிறப்பாக உங்கள் குரலில் நல்ல மெட்டில் கேட்கும்போது அத்தனை ஆனந்தமாக இருக்கிறது.

   உங்களின் இந்தச்சேவை இப்படிக் கவி எழுதும் ஆரம்பநிலையில் இருக்கும் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பாக இருக்கின்றது.


   உங்கள் வரவும் இங்கு என் கிறுக்கலுக்கு உங்கள் குரலில் பாடித்தந்த அங்கீகாரமும் ஆசியும் மிகப்பெரிய விருதாக மகிழ்கின்றேன்.

   உங்களுக்கு என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
   மிக்க நன்றி!

   Delete
 7. தோழி மிகவும் அழகானா திறமையான சிரமமானா கைவண்ணம் ரசித்தேன் பிறகு தேன் தமிழ் கவிதையை குடித்தேன் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் பூவிழி!

   வந்ததும் ரசித்ததும் வாழ்த்தியதும்
   தந்ததே எனக்கும் நிறைவு
   உங்களின் அன்பது இருந்திட்டால்
   ஆகிடுவேன் மேலும் உயர்ந்து...

   உங்கள் அன்பான வரவும் ரசிப்பும் கவிநடைக் கருத்தும் அருமை.
   மிக்க நன்றி தோழி!

   Delete
 8. https://mail.google.com/mail/u/0/?shva=1#label/Blog.RajaRajeshwari%2Fmails/13de3150fa349c54

  ஐயா அவர்கள் தித்திக்கும் பகிர்வாக அளித்து நிறைவு செய்து பெருமை சேர்த்திருக்கிறார்...

  எத்தனை திறமையான வேலைப்பாடு ..!
  வியக்கவைக்கிறது தங்கள் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் இராஜராஜேஸ்வரி!

   உண்மைதான் சகோதரி. சுப்பு ஐயாவின் பக்கத்திற்குச்சென்று பார்த்துவந்து வியந்து சொக்கிப்போனேன். தன்னலமேதுமில்லா அன்பான சேவை செய்கின்றார் அவர்.
   அவர் என் கிறுக்கல்களை பாடிப் பதிவிடுவதை இங்கே எனது வலையில் இணைப்பாக இணைத்துவிட்டேன்.
   அவருக்கு அவர் வலையை ஏனையவர்கள் போய்ப்பார்த்து அவரை ஊக்குவிக்க என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன்.

   உங்கள் அன்பான வரவும் ரசனையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி சகோதரி!

   Delete
 9. நீயுணர்ந்த இன்பத்தின்
  நிகரில்லா தமிழ் தாயின்
  நினைவுகள் பூத்திங்கே
  நிழலாட மனசெல்லாம்
  முப்பதிவும் மூச்சாகி
  முழுநிலவின் பேச்சாக
  இப்பதிவில் காண்கின்றேன்
  இறைதந்த இன்சொல்லோ
  தித்திக்கும் கவிவரிகள்
  நித்தமும் படைக்கின்றீர்
  பெத்தவள் பாசம்போல் என்றும்
  சொத்தாவீர் தமிழ் தாய்க்கு...!

  அழகிய படங்களும் கவிதைகளும்
  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் சீராளன்!

   பற்றுடன் இங்குவந்து
   பரிவுடன் பாவிசைத்த
   உற்ற உறவான சீராளா
   உம் வாழ்த்தெனக்கு
   மெத்த இனிதான
   மேன்மை மிகத்தருகிறது
   சித்தம் களிப்போடு
   சொல்கிறேன் நன்றியுனக்கு!

   அன்போடு வருகைதந்து மிகவே ரசித்து கவிதையில் வாழ்தினை நல்கிய உங்களுக்கு நன்றிகள் பல!
   வாழ்க வளமுடன்!

   Delete
  2. //பற்றுடன் இங்குவந்து
   பரிவுடன் பாவிசைத்த
   உற்ற உறவான சீராளா//

   உற்ற உறவென்று
   உரிமையுடன் அழைத்தீரே
   இப்பிறப்பில் என் செய்தேன்
   இனியவர்கள் எனைச்சேர..!

   மிக்க நன்றி நன்றி இளமதி தாழ்பணிகின்றேன் தங்கள் அன்புக்கு வாழ்கவளமுடன்

   Delete
  3. சகோதரரே சீராளனே...

   நாடுவிட்டு, ஊர்விட்டு, உறவுகளையும்விட்டு வாழும், வாடும் நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் நல்ல உறவுகள்தான்.
   இந்த வலைப்பூ உலகில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்கிறோம். ஆதரவாய் அனுசரணையாய் உணர்வுகளைப்பரிமாறிக் கொள்கிறோம்.
   இந்த அன்பு எல்லோரையும் வாழ வைக்கும்.

   தாழ்பணிதல் ஒன்றும் அவசியமில்லை.
   உங்கள் அன்பிற்கும் என் நன்றிகள் பல.

   வாழ்க வளமுடன்!

   Delete
 10. மிக நன்று. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்! வணக்கம் ஐயா...

   முதன்முதல் இங்கு வருகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி!

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 11. அழகான ஆத்மார்த்தமான வேலைப்பாடு,மிக அழகு.கவிதை பகிர்வுகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ. வணக்கம் ஆசியா!

   தமிழ் எங்கள் உணர்வுமல்லவா... அதை நினைத்தாலே மனதில் ஒரு துணிவும் வந்துவிடுகிறது.

   உங்களின் அனபான வருகைக்கும் ஆழ்ந்த ரசனைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி ஆசியா...

   Delete
 12. மிக அழகாக இருக்கு இளமதி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வனக்கம் ஜலீலா...:)

   உங்கள் வரவும் மனதிற்கு மகிழ்வே...

   வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 13. நல்ல நினைவும்
  நாடுகின்ற செயலும்
  தொல்லகைள் இன்றித்
  தூய்மையைத் தருமே...//
  உண்மைதானே சொன்னீர்கள்
  உணர்வலையாய் செய்தீர்கள்
  நன்மையாகப் பலருக்கும்
  நம்தமிழில் கண்டீர்கள் -அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ. வணக்கம் கவிஞரே!

   என்ன இங்கு வருவது அருமையாகிவிட்டதே...
   உங்கள் வருகையினால் மிக்க மகிழ்வடைகிறேன்.

   ம்.நம் தாய்மொழி உணர்வும் பற்றும் இல்லாவிட்டால் நாம் தமிழர் என்று பேர்சொல்வதில் பொருள் இல்லையே.
   உங்கள் அனபான வரவும் வாழ்த்துக்கவியும் மகிழ்வாயிருக்கின்றது.
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
  2. சில நேரங்களில் எனக்கு சமயம் கிடைக்காதபோது எல்லா பதிவுகளையும் பார்க்க முடியாமல் போகிறது அதுபோல் நேர்ந்தததால் உங்களின் பதிவைக் காணமல் இருந்திருப்பேன் மன்னிக்கவும்.இனிமேல் தொடர்ந்துவருகிறேன். எனது பதிவுகள் பஐம்பாலும் அட்டவணை செய்துதான் வெளியிடுகிறேன்.நண்பர்களின் உதவியோடு அதை தமிழ்மணத்தில் இணைக்கிறேன்.இப்போது நான் சென்னைக்கு மாறுதலாகி விட்டதால் இனிமேல் தொடர்ந்து படிப்பேன்.தவறுக்கு மீண்டும் வருந்துகிறேன்

   Delete
  3. சகோதரரே... எனக்கு யாருடனும் மனவருத்தமோ குறையோ கிடையாது. எல்லோரும் அவரவர் வேலைகளுக்கு மத்தியில்தான் சக பதிவாளர்களின் வலைப்பூக்களுக்குச் சென்று தம் கருத்தினைப் பதிவு செய்கின்றனர்.
   அவ்வகையில் நீங்களும் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் வந்து கருத்திட்டுச் செல்லுங்கள். வந்தால் மகிழ்வேன்.

   இதில் தவறென்பதோ மன்னிப்புக்கேட்பதென்பதோ அவசியமில்லாதது. மனம் வருந்தவேண்டாம்...:).

   Delete
 14. ini ..!

  naanum thodarkiren ...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்! வணக்கம் சகோதரரே...

   முதன்முதல் இங்கு வருகிறீர்கள்.மகிழ்ச்சி!
   உங்களை அடிக்கடி அநேகமாக எல்லா வலைபூக்களிலும் கருத்துப் பகிர்வோடு கண்டுள்ளேன்.

   உங்கள் அன்பான வரவிற்கும் தொடர்தலுக்கும் மிக்க நன்றி!

   Delete
 15. தமிழ் எழுத்துக்கள் க்விலிங் அழகாக உள்ளது தோழி! உங்கள் திறமை கண்டு வியக்கிறேன்.

  உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் பலாச்சுழையாய்த் தித்திக்கிறது. அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வணக்கம் கிரேஸ்...

   க்விலிங் முயற்சிதான். நான் இன்னும் இதில் முன்னேறவேண்டும். உங்கள் வியப்பு என்னை இன்னும் வலுப்படுத்துகிறது தோழி...:)

   ஹையோ... பாலாச்சுழை என்றுவிட்டீர்கள் நான் அதைக்கண்டே வருடம் ஒன்றாகிறது. இப்ப சாப்பிட ஆசைவந்துவிட்டது நான் எங்கே போவேன்...:)))

   கவிதையா....நான் வெறும் கத்துக்குட்டிதான். உங்களுக்குமுன் நான் ஒண்ணுமே இல்லை.ரொம்பவே புகழுகின்றீர்கள் என்னை...:)
   ஆனாலும் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் நன்றாக எழுதும் ஆர்வம் வருகிறது எனக்கு...

   தோழி! உங்கள் அன்பான வரவிற்கும், ஊக்குவிக்கும் நல்ல ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!

   Delete
 16. இளமதி தமிழின் மேல் உள்ள பற்று உங்கள் கைவேலைப்பாடில் புரிகிறது:)

  ReplyDelete
  Replies
  1. இதைத்தான் நானும் சொல்ல வந்தேன் .மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி !

   Delete
  2. வாங்கோ... வணக்கம். ஸாதிகாவும் அம்பாளடியாளும் சோடிபோட்டுக்கொண்டு வந்து கூறுகின்றீர்கள்...:)

   நன்றி நன்றி!!! தமிழ்ப்பற்று மூச்சோடு கலந்தது. அதை இவ்வேலையில் முயன்று பார்த்தேன். கையெழுத்து தலையெழுத்தாகி கொஞ்சம் கோணல் மாணலாக வந்துவிட்டது.
   அதைவிட வேலையும் இன்னும் மெருகாக்கவேண்டும். பார்ப்போம்.
   உங்களின் ஊக்குவிப்பான ரசனைக்கும் வாழ்த்திற்கும் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

   Delete
 17. இளையநிலா,இல்லை பூர்ணநிலா, பௌர்ணமி இளமதி உன் கவிதை மனதில் ரீங்காரமிடுகிறது. உன் திறமை வியக்க வைக்கிரது.க்வில்லிங்
  என்றால் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். உன் கவிதையில்
  சொத்தெனவே என்றனிடம் வந்தததைச் சொல்லுகிறேன் தமிழ் மொழிதான்
  வேறு இலை என்ற வரிகள் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. இளமதி வளர்ந்த மதிதான். பெருமையாக இருக்கிரது உன்னை நினைக்கையில்.அன்புடன்

  ReplyDelete
 18. அம்மா.. வாங்கோ.. வணக்கம்!

  அச்சச்சோ வந்ததுமில்லாமல் இப்படி சந்தோஷப் பூக்களால் வாரி இறைத்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டீர்களே...
  மிக்க சந்தோஷம் அம்மா...

  ஆமாம் க்விலிங் என்பது மெல்லியதாக வெட்டிய காகிதத்தாள்களைச் சுருட்டிச் செய்யும் ஒரு அழகியல் கைவேலைப்பாடு. அதை முறையாகச் சுருட்டுதல் அல்லது மடித்தல்தான் அதன் வேலையே.

  கவிதையையும் ரொம்பவே ரசித்திருக்கிறீங்கள் அம்மா. உண்மையாகவே மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

  அன்பான உங்கள் வரவும் நல்ல ரசனையும் வாழ்த்தும் என்னை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்துகிறது. மிக்க மிக்க நன்றி அம்மா...

  ReplyDelete
 19. தமிழும் அழகு!
  அதன் மேலுள்ள பட்டாம் புச்சியும் அழகு.
  பாடல் அழகோ.. அழகு.

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ அருணா செல்வம்!

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!

   Delete

 20. வணக்கம்!

  அன்னைத் தமிழின் அழகினை நீபடைத்து
  என்னைப் பறித்தாய்! இதங்கொடுத்தாய்! - பொன்னை
  முடித்துத் தருகின்றேன்! உன்கவியை முற்றும்
  படித்துத் தருகின்றேன் பாட்டு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாருங்கள் ஐயா!

   அன்பும் பண்பும் அமைந்தகவியே உங்கள்
   இன்சொல் மிகவே இனிக்குதையா எம்
   தங்கத் தமிழின் பெருந்தகையே உம்வரவால்
   மங்காப்புகழ் மலர்கிறதே மகிழ்வும் மிகத்தருகிறதே...

   வரவுகண்டு உவகை கொண்டேன்...

   Delete


 21. வணக்கம்!

  ஈடிலாச் செந்தமிழே! உன்னை இளமதியார்
  சூடிய பாட்டே சுவை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நலந்தரும் வருகையும்
   நல்வாழ்த்தும் எனக்கு
   வளம்மிகத்தருதே என்னகம்
   நிறைந்த நன்றிகளுமக்கே...

   Delete

 22. வணக்கம்!

  உள்ளத்துள் துாய்மை உருபெற்றால்! நம்வாழ்வு
  பள்ளத்துள் போகுமோ பாய்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. திங்களோ தென்றலோ
   தெவிட்டாத தேன்சுவையோ
   உங்களின் வரவும்வாக்கும்
   மங்காது தமிழுள்ளவரை

   எங்களின் எண்ணமும் என்றும்
   எம்மொழி காப்பதன்றோ
   திண்ணமாய் ஒன்றாய்நாம்
   திகழ்ந்திட்டால் வாழுந்தமிழே...

   ஐயா!... உங்கள் வருகையும் வாழ்த்துக் கவியும் மனநிறைவினைத்தருகிறது.

   மிக்க மிக்க நன்றி ஐயா...

   Delete
 23. ஆஆ இளமதி சூப்ப்ப்ப்பர் க்விலிங். வரவர நீங்க கலக்கிறீங்க.வாழ்த்துக்கள்.
  மிக அருமையாக,அழகாக இருக்குது "தமிழ்" என்ற க்விலிங்.
  கவிதையை பாராட்டுவதா,க்விலிங் பாராட்டுவதா தெரியவில்லை. இரண்டிலும் போட்டி போட்டுக்கொண்டு அசத்துறீங்க.
  கவிதை மிகமிக அருமையாக எழுதியிருக்கிறீங்க.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பெரியசொத்தே உங்களிடத்து இருக்கு.திறமை எனும் சொத்து. அதை நன்றாக பயன்படுத்துங்கள். வெளிக்கொண்டுவாருங்கள்.
  கடைசியில் குறிப்பிட்ட சிந்தனையின்படி உங்க எண்ணங்களும்,செய்யும் செயலும் மிக நன்றாக(தூய்மையாக) உள்ளது. நல்ல கருத்து. அழகான‌,நல்லதொரு பகிர்வு.மிக்க நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ அம்முலு...:)

   எங்கே ரொம்பநாளாக் காணோம்... நலம்தானோ?...

   ம்.நீங்களுமா... க்விலிங் வேலையில் சொதப்பல் ஏதும் தெரியேலையொ..:) இன்னும் நல்லா வந்திருக்கலாம்ம்ம்...

   ம்ஹும்.. ரொம்ம்பப் புகழுறீங்க... ஏதோ மனதில் தோணூறதை இப்படி எழுதிவிடுகிறேன். அதற்கு நீங்கள் என்னபெயர் சொல்லி அழைத்தாலும் சரியே...:)

   ஓம் அம்மு. மனதினாலும் அடுத்தவருக்கு துன்பம் கொடுக்காமல் இருக்கிறகாலத்தில் நல்லனவற்றைச் செய்து வாழ்ந்திடோணும். அதுவே பெரிய விடயம்...

   அன்பான உங்கள் வருகைக்கும் நல்ல ரசனைக்கும் அருமையான வாழ்த்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல.

   Delete
 24. இப்புவியில் இல்லைநிகர் என்றிதனை
  இயம்புகிறேன் இதனருமை அறிந்தவரை

  சித்தமெலாம் சிலிர்க்கவைக்கும் சிறப்பிதனை
  சிருங்காரம் சிதைந்திடாத சிற்பமிதை

  சொத்தெனவே என்றனிடம் வந்ததிதைச்
  சொல்லுகிறேன் தமிழ்மொழிதான் வேறு இலை...

  தமிழுக்கு மணிமகுடம் இக் கவிதை! கண்டேன்! உண்டேன் களிப்பு
  மிக உள்ளத்தில் கொண்டேன்! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ புலவர் ஐயா!...

   தமிழ்தந்த சிறப்பு இங்கு உங்கள் வரவு...

   முதன்முதல் இங்கு வந்திருக்கின்றீர்கள்.
   என்மனம் சொல்லமுடியாத ஆனந்தத்தில் மிதக்கின்கிறது.

   இப்பொழுதுதான் இப்படி எழுதப்பழகுகிறேன் ஐயா... அதற்கு நீங்கள் மணிமகுடம் சூட்டியுள்ளது நான் செய்த புண்ணியமே.

   மிக்க மகிழ்ச்சி! உங்கள் அன்பான வரவும் சிறந்த ரசனையும் வாழ்த்தும் என்னை மேலும் ஊக்குவிக்குமென்பதில் சந்தேகமே இல்லை.

   மிக்க மிக்க நன்றி ஐயா...

   Delete
 25. நிறையப் பெரியவங்க வந்து வாழ்த்தியிருக்காங்க. நான்தான் ரொம்ப லேட்டா இளையநிலாவை ரசிக்க வந்திருக்கேன் போலருக்கு சகோதரி! உங்கள் கைவண்ணத்தில் தமிழை ரசித்தேன். அதன்பின் தமிழின் எழில் வண்ணம் பொங்கி வழிந்த கவிதையையும் சுவைத்தேன். மிக மகிழ்வு கொண்டேன். (கூடவே இத்தனை நாள் இளையநிலாவுக்கு வராமல் போனதில் லேசான வருத்தமும்). அருமை! அரு‌மை! தொடர்கிறேன் நான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாலகணேஷ் வாங்கோ...
   முதன்முதல் நிலாவில் கால் பதித்துள்ளீர்கள்...உங்கள் வரவும் நல்வரவாகட்டும்...:)

   நீங்களும் பெரியவர்தானே... உங்கள் வருகையும் எனக்கு நிறைந்த மகிழ்ச்சி!
   ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்கள் ரசனையே அலாதிதான்.
   தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கும்.

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே...

   Delete
 26. க்விலிங் கவிதை இரண்டும் அருமை .
  ஆங்கில fontsடிசைன் வேறு விதம்.
  தமிழ் எழுத்துக்கள் fonts எழுதி அதில் செய்யுங்க அப்ப சுலபமாக வரும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு...:) வணக்கம்.
   இப்பெல்லாம் காணக்கிடைகுதில்லை உங்களை...:(

   ம்.உங்கள் யோசனையும் நல்லதுதான். அடுத்தமுறை முயன்றுபார்ப்போம்.

   உங்கள் அன்பான வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 27. Quilling அருமை சகோதரி.சுவையான தமிழ் மொழி கவிதை அருமையிலும் அருமை. வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ தமிழ்முகில்...

   உங்கள் அன்பான வருகையும் வாழ்த்தும் மகிழ்வைத்தருகிறது.
   மிக்க நன்றி.

   Delete
 28. கிவிலிங் கை வேலையில் தமிழ் நன்று.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ விமலன்...

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 29. kai velai nantraakave ullathu!

  kavithai kalum-
  makizha seythathu...!

  nantri sako..!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சீனி!

   திரும்பவும் வந்து பார்த்து வாழ்த்தியுள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி!

   நல்ல ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 30. க்விலிங் கைவேலையில் தமிழ் எழுத்துக்கள் அழகாகத்தானே வந்திருக்கின்றன
  வாழ்த்துக்கள்.

  சொத்தெனவே வந்த தமிழ்மொழியை
  சந்தமிகு நடையில்
  அற்புதமாகச் சொன்னீர்கள்
  ஆனந்தம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   ரொம்ப மகிழ்ச்சி உங்கள் ரசனைக்கு...
   கைவேலையில் இன்னும் கொஞ்சம் மெருகேறினால் நல்லதோன்னு இருந்தது அதுதான் கவலைப்பட்டேன்...:)

   மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பான வரவும் நல்ல ரசனையும் கருத்துப்பகிர்வும் ஊக்கத்தினைத் தருகிறது வைத்தியர் ஐயா.
   மிக்க நன்றி!

   Delete
 31. உங்கள் கைவேலை அருமை, அழகு.


  சொத்தெனவே என்றனிடம் வந்ததிதைச்
  சொல்லுகிறேன் தமிழ்மொழிதான் வேறு இலை...//

  இதைவிட வேறு செல்வம் வேண்டுமோ!


  நல்ல நினைவும்
  நாடுகின்ற செயலும்
  தொல்லகைள் இன்றித்
  தூய்மையைத் தருமே...//

  மிக் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_