Pages

Apr 12, 2013

வசந்தமே வருக!...


க்விலிங் கைவேலையில் மலர்ந்த காகித மலர்களோடு
மனதில் நிறைந்த அன்பெனும் சுகந்த மணமுடன் 
வசந்தத்தை வரவேற்கின்றேன்! 
இத்தருணத்தில் சித்திரைப் புத்தாண்டும் மலர்கிறது.

வலையுலக அன்பு உறவுகள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 
என் இதயங்கனிந்த இனிய 
சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மலரும் இப்புத்தாண்டு தாயகத்தில் அல்லலுறும் எம் இனத்திற்கு  
விடிவினைத்தந்து யாவரும் மனஅமைதியும் 
நிறைவுடனும் வாழ்ந்திட 
எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!

வாழ்க வளமுடன்!
¤¤¤¤¤¤¤¤¤


வந்தது வசந்தம்...
ϫϫϫϫϫϫϫ

பனியியில் நனைந்த பூக்கள் சிரிக்கும்
பறவை மெல்ல சிறகினை விரிக்கும்
துயில்கின்ற வானம் கண்ணைத் திறக்கும்
துளிமழை அங்கே தூறித்தெறிக்கும்
இளமைமேலும் துள்ளிக் குதிக்கும்
இனிய கனவைக் கண்டு களிக்கும்
விடியல் கூட சேர்ந்து சிரிக்கும்
வீசும் தென்றல் தழுவிச் சிலிர்க்கும்
வசந்தம் வந்து பாட்டு இசைக்கும்
வாழ்வில் சுகமோ கொட்டிக்கிடக்கும்...

~~~~~~~~~~~~~~~
ஆனந்தம்தானோ...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

அழகிய மரமே ஆனந்தம்தானோ
வந்தது வசந்தம் என்றுணர்ந்தாயோ
களிப்பினைக் காட்டத் துளிர்விடுகின்றாயோ
அதனுடன்கூட மொட்டவிழ்கின்றாயோ
முக்காடுபோட்டு முகம் மூடினாயோ
பூக்காடு நானென்று புளுகுகின்றாயோ...
ᴖᴗᴖᴗᴖᴗᴖᴗᴖ

₪₪₪₪₪₪₪₪

73 comments:

 1. அருமையான பதிவுகள் அத்தனையும் அற்புதம் .கவிதையின் சொற்பதமும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் சகோ...

   இம்முறை வெகுவிரைவாகவும் முதலாவது ஆளாகவும் வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி...:)..

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!..

   Delete
  2. நோஓஓஓஓஓஓஓஓஒ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ... வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்..:)

   Delete
  3. அதீஸ்... இங்கை வந்து நிக்கிறீங்களோ... நான் ஒவ்வொரு படியா ஏறி உங்களைத்தேடிக்கொண்டு வந்தா...க்ஹும்..எப்ப வந்தீங்கள்... வாங்கோ.. சுகமோ????

   சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   விடுமுறை நல்லாப்போச்சுதோ..:).

   Delete
 2. வசந்தத்தை வரவேற்க அழகான பதிவு! உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் இளமதி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ...மகி...:)

   ம். வசந்தம் வந்தாச்சு. வெய்யில்,வெளிச்சம், பூக்களை என்று பார்க்கவே பரவசமாக இருக்கிறது...:)

   அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

   Delete
 3. மிகவும் அழகான பதிவு,

  வசந்தமே வருக!...என்ற தலைப்பே அழகோ அழகு.

  வசந்தமே நேரில் வந்து வாழ்த்தியது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது.

  க்விலிங் கைவேலை சொக்கி மயங்க வைத்து விட்டது.

  >>>>>>

  ReplyDelete
 4. தங்களுக்கு எந்தன் விஜய வருஷ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஏன் சும்மா இருக்கிற விஜயா அக்காவைக் கூப்பிடுறார் கோபு அண்ணன்:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).

   Delete
 5. //மலரும் இப்புத்தாண்டு தாயகத்தில் அல்லலுறும் எம் இனத்திற்கு விடிவினைத்தந்து யாவரும் மனஅமைதியும்
  நிறைவுடனும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!//

  நானும் சேர்ந்து வேண்டுகிறேன்.

  வாழ்க வளமுடன் + நலமுடன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள்..வைகோ ஐயா...

   உங்களின் அன்பான வருகைக்கும் அழகிய கருத்துப் பகிர்வுகளுக்கும்
   வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
 6. அனைத்தும் அருமை...

  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள்...தனபாலன் சார்...

   அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

   Delete
 7. வந்தது வசந்தம்...

  ஆனந்தம்தானோ..

  மண் - பூமி

  கவிதாயினியின் மூன்று கவிதைகளும் அருமையோ அருமை. அழகோ அழகு. சூப்பரோ சூப்பர்.

  மூன்றாவது குட்டிக்கவிதையின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.

  உயிர்க்கவும் உறங்கவும் உன் மடி வேண்டும்.

  மனதை மயக்கும் மிகவும் அசத்தலான, வரிகள்.

  >>>>>

  ReplyDelete
 8. சத்தான முத்தான பதிவரின் “பொக்கிஷம்” போன்ற பதிவு

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்..

  ReplyDelete
 9. முக்கனிச்சாறு போன்ற ருசியான மூன்று கவிதைகள் கொடுத்துள்ளீர்கள்.மன நிறைவாக உள்ளது. இன்னும் நிறைய எழுதுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ;))))).

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம்தரும் உங்கள் ரசனைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!

   தொடர்ந்து எழுதமுயல்கிறேன்...

   மிக்க நன்றி!

   Delete
 10. கைவேலை அற்புதம் கவிதைகள் படித்ததில் ஆனந்தம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  விடியல் அனைவருக்கும் வசந்தம் வீசட்டும் யாவருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ...பூவிழி..

   மலர்ந்திருக்கும் வசந்தமும் வருடமும் விடியலைத்தரவேண்டும் என்பதே எல்லோரினதும் ஆவல்.

   உங்கள் அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
 11. என்னைத்தான் கூப்பிட்டீங்களாக்கும் என்று ஓ..டி வந்தேன். ;))
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இளமதி.

  இதமான இடுகை. கவிதைகள் & படங்கள் அருமை. கார்ட் வெகு வெகு அருமை. எனக்கு அனுப்புங்கோ. ;)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ...இமா...:)
   ம்.கவனம். ஓ...டி வந்து விழுந்திடாதேங்கோ....:)))

   அட...உங்கட பெயரை
   எப்ப வசந்தமெண்டு மாத்தினனீங்கள்... சொல்லவே இல்லை...;)

   கார்ட் வேணுமோ... அனுப்பினாப்போச்சு. விலாசம் தாங்கோ. உங்களுக்கில்லாததோ...:)))

   அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இமா!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
  2. //என்னைத்தான் கூப்பிட்டீங்களாக்கும் என்று ஓ..டி வந்தேன். ;))//
   நோஓஓஓஓஓ டப்பு இமா டப்பூஊஊஊ அது என்னையாக்கும் கூப்பிட்டவ:) எனக்கு அங்கின:) கேட்டுதே:).

   Delete
  3. ம். உங்களைத்தான் கூப்பிட்டன் எண்டு சரியாத்தான் கண்டு பிடிச்சிட்டீங்கள்...;)

   எங்கையெல்லாம் தேடுறது உங்களை... நல்லபடியா வந்து சேர்ந்திட்டீங்கள்... சந்தோஷம்...:)))

   Delete
 12. அழகான மலர்களுடன் புத்தாண்டைமற்றும் வசந்த காலத்தை வரவேற்றுரிக்கீங்க இளமதி .உங்களுக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் .
  மற்றும் கவிதை superb அருமை ..
  ஹைக்கு கவிதைகளிலும் கலக்குறீங்க

  ReplyDelete
 13. jute துணியை பயன்படுத்தியவிதம் அழகா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஹா... அஞ்சு.. வணக்கம்.. வாங்கோ...:)

   சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க. பூக்கண்டுக்கு தோதா இருக்குமெண்டு இந்தக்கலரில் இருந்த jute துணியை சேர்த்துச் செய்தேன்...:)

   ஹைக்கூ எனக்கும் பிடிக்கும். இன்னும் இருக்கு. தொடர்ந்து தருவேன்...

   மிக்க நன்றி அஞ்சு உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்.

   உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

   Delete

 14. வணக்கம்!

  வருக! வருக! இளவேனி
  வண்ண நிலவு அழைக்கிறது!
  தருக! தருக! வளம்யாவும்
  தரணி தழைத்து மணக்கிறது!
  உருக! உருகக் கவிபாடி
  உரைத்த அடிகள் இனிக்கிறது!
  பருக! பருக! உயிர்க்கூட்டில்
  படரும் தமிழே வணங்குகிறேன்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ... வாருங்கள் ஐயா!

   இளவேனில் வந்தெம் இருள்தொலைய
   தரும்பாடலைப் படித்திங்கு வந்து
   அருங்கவியால் வாழ்த்துச்சொல்லி
   அகம்மகிழவைத்த ஐயா! என் நன்றிகள்!

   உங்கள் அன்பான வருகைக்கும் கவிவாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
 15. //முக்காடுபோட்டு முகம் மூடினாயோ
  பூக்காடு நானென்று புளுகுகின்றாயோ...// அருமையான கற்பனை..
  வசந்தம் வந்தது ஆனந்தமே! கவிதைகள் அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ கிரேஸ்...

   வசந்தம் வந்தாலே புத்துணர்வும் சேர்ந்து வந்திடும்...:)

   உங்கள் அன்பான வருகைக்கும் இனிய ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
 16. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாங்கோ சகோதரி!

   உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

   Delete
 17. மிக அருமையான பகிர்வு.தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ..ஆசியா! வணக்கம்..

   மிக்க நன்றி உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்திற்கும்...:)

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   Delete
 18. " துயில்கின்ற வானம் கண்ணைத் திறக்கும்
  துளிமழை அங்கே தூறித்தெறிக்கும்.."
  இதமான வரிகள்.

  இதயங்கனிந்த இனிய சித்திரைப்
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்... முகானந்தம் ஐயா!

   முதன்முதலாக இங்கு வருகிறீர்கள்! வாங்கோ...!

   மிக்க மகிழ்சியாக இருக்கின்றது உங்கள் ரசனை.மிக்க நன்றி ஐயா!

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   Delete
 19. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு.. வணக்கம்...:)

   மிக்க நன்றி வாழ்த்திற்கு....

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   Delete
 20. மிகமிக அழகாக வசந்தத்தை வரவேற்றிருக்கிறீங்க. அழகான க்விலிங் வேலைப்பாடு. பொருத்தமான நேரத்தில் நல்லதொரு பதிவு.
  "வந்தது வசந்தம்" அழகானதொரு தென்றல். "ஆனந்தம்தானோ" அழகிய நறுமணம் வீசும் பூக்கள். ஹைக்கூ அழகு. நன்றாக, அருமையாக, பொருத்தமான படங்களுடன் கவியை வடித்திருக்கின்றீர்கள்.நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ம்.ம் உங்கள் அன்பான வரவும் ரசனையும் மிக்க மகிழ்வாயிருக்கு எனக்கும்...:)

   அத்தனைக்கும் மிக்க நன்றி அம்மு...

   Delete
 21. சித்திரை மத பிறப்பு வாழ்த்துகள் ... தமழருக்கு தை மாதம் தான் ஆண்டு பிறப்பு ... பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் தோழி!

   Delete
 22. இன்னுமொரு சித்திரையின் எழில் வாழ்த்தை
  இளையநிலா உதிர்க்கின்றாள் மொழி கோர்த்து
  மண்ணிலுள்ளோர் மகிழ்ச்சியுற பாடுகின்ற
  எண்ணமெலாம் எனை உருக வைத்ததுவே ..!

  வண்ணநிலா விளக்கேற்றும் வானத்தில்
  வைகறையை தேடாத விண்மீன்கள்
  இவ்வினிய வாழ்த்தின் இனிமைகேட்டோ
  இறங்கியது காலைத் தென்றல் தொட்டு ..1


  இனிய கவிதை இளமதி

  உளமார்ந்த சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
  வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரா சீராளா!...

   அனைத்திற்கும் மிக்க மிக்க நன்றி!
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

   வண்ணமுடன் அன்பு வார்த்தை மிகச்சேர்த்து
   எண்ணமதை நீயுரைத்த எழில்மிகு பாக்கள்
   திண்ணமாய் மனதில் இனிக்கிறதே சீராளா!
   மண்ணில் உள்ளவரை மங்காது உனதன்பு...

   அருமைமிகு ரசனையும் அழகு கவிவாழ்த்தும்
   உரிமையான உன்வரவும் உவகை தருதே
   திறமை கண்டு தீராத்திகைப்புடன் நவில்கிறேன்
   நறுமிகு வாழ்த்தும் நனிநன்றியும் உனக்கே...

   Delete
  2. பாட்டுக்கு பாட்டில் பாசத்தை சேர்க்கின்றாய்
   வீட்டுக்குள் விளக்கு வீதிக்கு மரங்கள்
   நாட்டுக்கு நன்மக்கள், நலமுறவைப்பதுபோல்
   நட்பாக நீ வந்தாய் நான் பெற்றேன் நலம்கோடி ..!

   மிக்க நன்றி நன்றி என்னுறவே.....!
   அன்பு சகோதரியே,,,,!

   Delete
  3. மிகுநன்றி உன்றனுக்கும் சோதரா...:)

   வாழ்க வளமுடன்!

   Delete
 23. பூக்காடு --இனிய கவிதை

  இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 24. வாங்கோ வணக்கம் சகோதரி!

  மிக்க மகிழ்ச்சி.
  உங்கள் வரவுக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. சொற்கூட்டம் மொழிக்கூட்டம் ஆகி இங்கு கவிக்கூட்டம் காண்கின்றேன். அனைத்தும் இணைந்து இங்கு அழகுக் கவித்தோட்டம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ.. வணக்கம் சகோதரி...

   உங்கள் வருகையும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
   மிக்க நன்றி!

   நான் இன்னும் உங்கள் பக்கத்திற்கு வரவில்லை. விரைவில் வருகிறேன்...:)

   Delete
 26. அடடா !1 வருவதற்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது.

  வசந்தம் இருக்கா இல்லயா அப்படின்னு தெரியல்ல..

  நல்ல உள்ளங்களெல்லாம் வந்து வாழ்த்து சொல்லிட்டு போயிட்டாங்க...

  பரவாயில்ல...பெட்டர் லேட் தான் நெவர்.

  வாழ்த்துக்கள். இளமதி.

  லேட் ஆ இருந்தாலும் லேடஸ்டா இத நான் கானடா ராகத்துலே பாடப்போறேன்.

  பொறுமை யோட கேட்கணும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுப்பு ஐயா... வாங்கோ!

   நீங்க இங்கை அப்படி ஒண்ணும் லேட்டா வரலை...:)

   இப்பவும் வந்தது எனக்கு மிகுந்த சந்தோஷமே. அத்தோடு ரொம்பவே ரசிச்சு யு டியூப்பில் பாடியும் தந்திருக்கின்றீங்களே...:)
   அதைவிட வேறு என்ன எனக்கு வேணும்... மிக்க மகிழ்ச்சியா இருக்கு.

   அருமையாப் பாடியிருக்கிறீங்க. நன்றாக இருக்கிறதையா.
   மிக்க மகிழ்வாயிருக்கிறேன்.

   உங்களின் இவ்வரிய செயல் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.

   இதோ வலப்பக்கத்தில இருக்கிற சைட்பாரில இந்தப்பதிவிற்கு நீங்க பாடியதை இணைச்சிருக்கிறேன்.
   இதுதான் நான் உங்களுக்குத் தரக்கூடிய மிகச்சிறிய ஒரு நன்றி, கௌரவம் ஐயா!!!

   உங்கள் வரவிற்கும் வாழ்த்தாக இப்படி இதனை அழகாகப் பாடித்தந்திருப்பதற்கும் மிக்க மிக்க நன்றி ஐயா!

   Delete
 27. சரி விஷயத்துக்கு வருவம்.... சூப்பராக இருக்கு வசந்தத்தை வரவேற்கும் மலர்க் கொத்து.... எல்லா இடமும் போகோணும் இனித்தான்..:)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்தாங்கோ கை விஷேடம் எடுங்கோ.. பவுன்ஸ்சில வச்சிருக்கிறனாக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ... அதிரா... வாங்கோ.. ங்கை... எப்ப இங்கை வந்தனீங்க... ஆங்.... பொறுங்கோ... வாறன்..

   Delete
  2. ஒருமாதிரி எங்கை ஓடினினனிங்கள் எண்டு கண்டுபிடிச்சு அங்கையும் கேட்டிட்டுட்டு வந்திட்டேன்...

   அப்புறம் புதுவருஷக் கொண்டாட்டம் எங்கை இங்கிலாந்தில ராணியின் பலஸ்ஸிலயோ... அல்லது அங்கை ஈபிள் டவரிலயோ...:)))
   சரி எங்கையெண்டாலும் நல்லாக்கொண்டாடினீங்களோ?
   உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   பவுன்ஸ்சில கைவிஷேடத்துக்கும் உங்க அன்பான வரவிற்கும் கலகலப்பிற்கும் மிக்க நன்றி அதிரா...:)

   Delete
 28. வணக்கம் தோழி, உங்கள் வலைப்பக்கம் இதுயென் முதல் வருகையென்று அறிகின்றேன்..வசந்தமே வருகவென்று ஆரம்பித்து மண்-பூமி
  உயிர்க்கவும் உறங்கவும் உன்மடி வேண்டுமென முடித்த இடம் என் மனதில் துளிர்ந்தது வசந்தம் நிச்சயம் வருமென்றே... நல்ல வரிகள் தோழி.. இனி அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம் .வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரேவா! வாருங்கள்...

   ஆமாம் இதுவே உங்கள் முதல்வருகை. மகிழ்ச்சி!

   உங்கள் ரசனையும் மிக்க மகிழ்வைத் தருகிறது.
   அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி!

   Delete
 29. Replies
  1. வணக்கம் கே.பி. ஜனா. வாருங்கள்!

   உங்கள் முதல்வருகை இங்கு. மகிழ்ச்சி!

   உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

   Delete
 30. வணக்கம்...

  இது எனது முதல் வருகை...

  நல்ல கவிதை...

  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சே. குமார்!. வாருங்கள்!...

   ஆமாம் இதுவே உங்கள் முதல் வருகை. மிக்க மகிழ்வாயிருக்கிறது எனக்கு...:)

   அன்பான உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல சகோ.!

   Delete
 31. வசந்தகாலப்பூக்கள் எப்படி இத்தனை நேர்த்தியாய்.. கலைநயத்தோடு...மிக மிக ரசித்தேன். மரங்கள் கண்டால் பொறாமைப் படக்கூடும் என்றுதானே கவிபாடி அவற்றை காலத்தே வாழ்த்தி வரவேற்றுவிட்டீர்கள். அழகான கைவேலைப்பாட்டுக்கும் மனதை இதமாய் வருடிய வசந்த வரவேற்புக் கவிதைக்கும் பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி! வாருங்கள்...

   இங்கு உங்கள் முதல்வருகை இது. மிக்க மகிழ்ச்சி!

   ஓ.. மிக்க நன்றி தோழி! உங்கள் ரசனையே தனி...:)
   மரங்கள் பொறாமைப்படகூடுமென்றதை வாசித்துச் சிரித்தேன்...:)

   உங்கள் அன்பான வரவும் கலைநயமிக்க ரசனையும் வாழ்த்தும் மனதிற்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது தோழி!

   உங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல...

   Delete
 32. வசந்தத்தை துயில்கின்ற வானத்துடனும் வீசும் தென்றலுடனும் பனியில் நனைந்த பூக்களுடனும் இத்தனை அழகாய் நீங்கள் வரவேற்றிருப்பதைகக்ண்டதும் மனதிலும் வசந்த மலர்கள் பூக்கின்றன இளமதி!! நான் முன்பே சொன்னேன் நாலு கால் பய்ச்சலாய் தமிழும் இனிய கருத்துக்களும் கவிதைகளும் உங்கள் வலைத்தளத்தில் வந்து விளையாடுகின்றன என்று! அதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபிக்கிறீர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ மனோ அக்கா!

   எனக்கு உங்கள் வார்த்தைகள் மிக்க மிக்க மகிழ்வைத் தருகிறது.
   உண்மையில் உங்களைப்போன்றோரின் அன்பான ஆதரவான ஆசிகளும் வாழ்த்துக்களுமே அனைத்துக்கும் காரணம். உங்கள் வாழ்த்துக்கள் மேலும் என்னை ஊக்குவிக்கின்றன.

   உங்கள் அன்பான வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மனோஅக்கா.!

   Delete
 33. வாச மலர்கள் வண்ண வண்ணமாய் வரவேற்க அன்பாய் சித்திரையை வரவேற்ற விதம் கொள்ளை அழகுங்க. மன்னிக்கவும் தாமத வருகைக்கு எனக்கு இங்கு பவர் சரியில்லை. உங்கள் வரிகளில் ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சசிகலா!. வாங்கோ...

   உங்கள் வரவுகண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
   வருகை தாமதமாவது ஒரு பொருட்டல்ல. மறவாது வருவதே மகிழ்வுதானே...:)

   // உங்கள் வரிகளில் ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது.//

   உங்கள் ரசனையே எனக்கு ஒருவித ஈர்ப்பாக இருக்கிறது தோழி...:)
   இடையூறுகளுக்கு மத்தியில் உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல...

   Delete
 34. இளமைமேலும் துள்ளிக் குதிக்கும்
  இனிய கனவைக் கண்டு களிக்கும்
  விடியல் கூட சேர்ந்து சிரிக்கும்
  வீசும் தென்றல் தழுவிச் சிலிர்க்கும்//
  அருமையான வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன் ரசித்தேன் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அடடா... மீண்டும் வந்து ரசித்திருக்கின்றீர்களோ... :).
   மிக்க மகிழ்ச்சி சகோ.

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் பல...

   Delete
 35. வணக்கம் தோழி.

  நான் இரண்டு வாரமாக ஊரில் இல்லை.
  அதனால் உங்களின் அழகிய கவிதையையும்
  கைவேலையையும் மிக மிக தாமதமாக வந்து
  இரசிக்க வேண்டியதாகி விட்டது.

  மிக அருமையாக மலர்கொத்தை செய்திருக்கிறீர்கள்.
  பாடலும் அருமையாக உள்ளது.
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அருணா செல்வம். வணக்கம்!

   அதுதானா சமாச்சாரம். எங்கே காணவில்லையே என நினைத்தேன்...:)

   தாமதமாக என்றாலும் வந்ததே சந்தோஷமே.
   நானெழுதியதை நீங்கள் பாராட்டியது ஊக்கமாக இருக்கின்றது.

   உங்கள் ரசனைக்கும் வாழ்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் தோழி!

   Delete
 36. மலரும் இப்புத்தாண்டு தாயகத்தில் அல்லலுறும் எம் இனத்திற்கு
  விடிவினைத்தந்து யாவரும் மனஅமைதியும்
  நிறைவுடனும் வாழ்ந்திட
  எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்!

  வாழ்க வளமுடன்!//

  உங்கள் எண்ணம் பலிக்கும் இளமதி.
  எல்லாம் வல்ல இறைவன் அருள்வான்.
  வாழ்கவளமுடன்.
  நீங்கள் கீழே பகிரும் பாடல்களை இப்போது தான் பார்த்தேன் அருமை இளமதி.

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_