Pages

Apr 29, 2013

வருத்தும்வினை....


 கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலையில்... 
**********


                                              வருத்தும் ஊழ்வினைதான்
                                                              ****************

                           காலங்கைகாட்டிக் கனிவோடு களிப்பு நல்கி
                           கோலம் மகிழ்வாகக் கொண்டே வாழுங்கால்
                           ஓலமிடவே விரைந்து ஓடிவந்த ஊழ்வினைதான்
                           ஞாலத்தில் இன்று நாதியற்று நலித்ததுவே...

                           மனதில் நெருடும் மயக்கம்மிகக் கொடுக்கும்
                           கனவில் நிலைக்கும் கண்ணீரும் சேர்ந்துதரும்
                           வினவும் வருத்தும் வேதனைமிகச் சேர்ந்துதரும்
                           தினமும் தேடும் தொலைந்துபோன வாழ்வதையே...
~~~~~~~~~~~~~~


தனிமை
>>><<<
சோடியிழந்து சொந்தமிழந்து
வாடிநிக்குறனே எனைவாரியணைச்ச
மன்னவன்தனியே போனதுதானெங்கே
கூடுமிழந்து கொப்புமிழந்து கூவியழுகிறனே
நாடிவந்த என்னருமை நாதனும்
போனதிசைதானெங்கே...
ஆடியது ஆட்டமெல்லாம் இங்கே
அடங்கித்தான் போயிடிச்சே
நான் நாளுமொரு திசையினிலே
வாடித்திரியுறனே கண்ணீரோடை
ஓடித்தான் திரியுறனே...

==========                                                  ஆதரவிலா நிலைதானோ
                                                            *****************  
                            மழைசூழ்ந்து மிரட்டும் மெல்லிருள் வேளை
                            இருள் தோன்றுமோ இன்னல்தான் வாழ்வோ
                            வருங்காலம் விடியலின் வரவது கூடுமோ
                            அருகாமை ஏதுமின்றி ஆதரவிலா நிலைதானோ...

                                                          ~~~~~~~~~~~~~~~~~~~_()_

பதிவோடு ஒரு அறிமுகம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற 27.04.13ல் வலைச்சர பதிவரான சகோதரர் ராஜ் அவர்கள் 

// உங்கள் தளங்களில் ஒவ்வொறு பதிவுகளுக்கு கீழ் நீங்கள் ரசிக்கும் ஒரு புதிய பதிவர் பற்றிய அறிமுகத்தை கொடுங்கள். இதனால் அவர்களுக்கு வாசகர்கள் அதிகரிக்க சந்தர்ப்பம் இருக்கு.திறமைகள் அடையாளம் காணப்படவேண்டும்.

அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.ராஜ் //

 கூறியதற்கேதுவாக இம்முறை என் பதிவில் நானும் சகோதரர் சீராளன் என்பவரின் இரு வலைப்பூக்களை இங்கு அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன். சகோதரர் சீராளன் அழகிய காதல் கவிதைகள் மற்றும் நாடு, பொதுநலம், விழிப்புணர்வுக் கவிதைகளை எழுதுவதில் திறமையானவர். அவரின் தளத்திற்குச் சென்று அவரையும் ஊக்குவிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி!

88 comments:

 1. ஆஜர். நான் தான் 1ஸ்ஸ்ட்டூஊஊஊ. படிச்சுட்டு பொறுமையா திரும்பி வருவேன்.

  ReplyDelete
 2. // கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலையில்//

  சூப்பர். ...

  வருத்தும் ஊழ்வினைதான்

  //வேதனைமிகச் சேர்ந்துதரும் தினமும் தேடும் தொலந்துபோன வாழ்வதையே...//

  ;((((( ஏன் இத்தனை சோகம்? கலங்காதீங்கோ மனமே கலங்காதீங்கோ !
  தொலைந்து போனவை யாவும் ஒருநாள் கிடைத்து விடும். சந்தோஷங்கள் தேடி வரும் ஓடி வரும். சிரியுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
  .

  ReplyDelete
 3. //கூடுமிழந்து கொப்புமிழந்து கூவியழுகிறனே
  நாடிவந்த என்னருமை நாதனும் போனதிசைதானெங்கே...//

  தங்களின் ”தனிமை” பற்றி தனிமையில் படித்தால் பிறருக்கு இனிமையாக இருக்குமோ என்னவோ. எனக்கு வருத்தமாக உள்ளதே. ’தனிமை’ என்பது மிகவும் கொடுமைதானம்மா ;(

  அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் கஷ்டம் தெரியும்.

  >>>>>

  ReplyDelete
 4. // ஆதரவிலா நிலைதானோ *****************==============
  மழைசூழ்ந்து மிரட்டும் மெல்லிருள் வேளை
  இருள் தோன்றுமோ இன்னல்தான் வாழ்வோ
  வருங்காலம் விடியலின் வரவது கூடுமோ
  அருகாமை ஏதுமின்றி ஆதரவிலா நிலைதானோ.//

  ஏன் அடுத்தடுத்து இன்று இவ்வளவு சோக கீதங்கள்?

  உங்களுக்கு எங்கள் அனைவரின் ஆதரவும் எப்போதும் உண்டு.

  ஆதரவில்லா நிலைதானோ என இனி சொல்லாதீர்கள்...

  >>>>>>

  ReplyDelete
 5. ’வருத்தும் வினை’ என்ற இன்றைய தங்களின் பதிவு என்னை மிகவும் வருத்தி விட்டது.

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கவிதைகளுக்கு பாராட்டுக்கள். சோகம் அதிகமாக உள்ளது.

  கற்பனைக்கவிதைகள் என்றால் ஓ. கே.

  நிஜ்வாழ்க்கையில் எதற்கும் கலங்காமல் நம்பிக்கையோடு சந்தோஷமாக இருக்கக்கடவது.

  அதற்கு என் அன்பான நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி வைகோ ஐயா!

   Delete
 6. ஆஹா.. ஆஹா.. குயிலிங் அழகோ அழகு. ஏதோ பழையகாலத்து பிளாக் அண்ட் வைட் படம் போல இருக்கு சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அதிரா!

   Delete
 7. சூப்பர்ப் .க்வில்லிங் இளமதி ..பாராட்ட வார்த்தையில்லை .
  ..கவிதைகள் பிறகு வந்து படிச்சிட்டு கருத்திடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 8. அதிலே கண்ணீருக்காக என்ன பாவித்திருக்கிறீங்க? ஹம் ஆ? சூப்பர் ஐடியா... கீப் இட் மேல.. கண் தத்ரூபமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அதிரா... கண்ணீருக்கு பாவித்தது 3D Crystal Lacquer எனப்படும் பசை. இதை மழைத்துளி, கண்ணீர்த்துளிக்கு பயன்படுத்தலாம்.

   Delete
 9. என்ன இன்று ஒரே சோக கீதமா இருக்கே.. அடுத்து சந்தோசக் கவிதைகள் வடியுங்கோ. கவிதையில் கலக்குறீங்க. அனைத்தும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிரா...

   Delete
 10. மயிர்க்கற்றைகள் சில விடுபட்டு இருக்கு ..அவற்றையும் முடிந்தால் ஒட்டிவிடுங்கள் ..இல்லையெனில் இனி பிரிண்ட் எடுக்கும்போது grey scale இல் எடுங்க நிறம் காட்டி கொடுக்காது .
  ..அப்புறம் மிக முக்கியம் இதை frame போட்டுவிடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் பார்க்கும்போது விடுபட்டவையும் அழகாத்தானிருக்கு ..அப்படி இருக்கட்டும் .

   Delete
  2. மிக்க நன்றி அஞ்சு...

   Delete
 11. Athis you may use Kaiser pearls-snow ...or silicone glue drops for eyes

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீ அதுக்கெல்லாம் எங்கினபோவேன் சாமீஈஈஈஈ:)

   Delete
  2. இதில பின்னூட்டம் போட்டேன் 2 காணல்ல. கூகிள் கோளாறோ?

   Delete
 12. ஆ..கா இளமதி சூப்ப்ப்பராக இருக்கு க்விலிங். அந்த பெண்ணின் கண். அப்பப்பா உண்மையான கண் போல வந்திருக்கு. அதில் வடியும் கண்ணீர், முடிக்கற்றைகள் எல்லாம் மிக தத்ரூபமா வந்திருக்கு இளமதி. அழகாக‌ செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. //கனவில் நிலைக்கும் கண்ணீரும் சேர்ந்துதரும்
  வினவும் வருத்தும் வேதனைமிகச் சேர்ந்துதரும்//
  மனதைப் பிழியும் வார்த்தைகள்.எல்லாக்கவிதைகளும் மிகவும் அருமை. சோகத்திலும் அழகான‌ கவிதைகள். அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அம்மு!

   Delete
 14. "அறிமுக" பகுதி வரவேற்கத்தக்க விடயம் இளமதி. நல்லதொரு ஆரம்பம். அழகிய பகிர்வொன்றை தந்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மு...

   Delete
 15. அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிரா...

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. இனிய வணக்கம் சகோதரி..
  கைவேலைப்பாட்டில் இருக்கும் பெண்ணுருவம் கண்டு
  கொஞ்சம் மலைத்துத்தான் போனேன்...
  நேரில் நின்று கதைபேசும் தோரணை அந்த உருவத்துக்கு...
  அருமையான வேலைப்பாடு.
  =====
  இன்றைய கவிகளின் வரிகள்
  நெஞ்சினில் சுமையேற்றுகின்றன.
  வரிகளை வாசிக்க வாசிக்க
  சுவாசமே சுமையாகிப் போகுமளவுக்கு...
  தேர்ந்தெடுத்த படங்கள் ஆயிரம் கதை பேசுகின்றன.
  ===
  அறிமுகப்படுத்திய புதியவரை சென்று பார்க்கிறேன் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ. மகேந்திரன்!

   Delete
 18. ஊருக்குபதேசம் உவந்தளிக்கும் சமூகத்தில்
  பேருக்கு வாழ்பவரின் பேதைமை நீக்கிவிட
  தேருக்கு வடம் போலே தேவையான வார்த்தைகளை
  பாருக்கு சொல்கின்ற பைந்தமிழின் சகோதரியே..!

  ஊழ்வினைக்கவி தந்தாய் உள்ளம் துடிக்கிறது
  வாழ்மனையில் வலிமட்டும் வரமல்ல அறிவாய் நீ
  மாழை மருகுவதும் மழைவெள்ளம் பெருகுவதும்
  வாழையடி வரலாறு மாற்றிவிட முடியாதே...!

  ஆதரவு தேடி அடுத்தொரு அருங்கவியில்
  அங்கலாய்க்கும் வேளையிலும் அகமகிழ்ந்தேயென்னை
  அறிமுகம் செய்துவிட்ட ஆரணங்கே அன்பே
  அன்னை போல் வணங்குகின்றேன் அகமகிழ்ந்தே...!

  எல்லாம் ரசித்தேன் இதயம் மகிழ
  என்னையும் அறிமுகம் செய்தாய் நன்றி
  எனக்கும் அறிந்தவர் வலைப்பூவை
  எப்போதும் கொடுப்பேன் இன்று தொட்டு...!

  மிக்க நன்றி சகோ அத்தனையும் அருமை

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்


  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க மிக்க நன்றி சகோ!

   Delete
 19. kavithaikal ...!
  azhaku...!

  arimukam nalla muyarchi...

  mikka nantri..!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ!

   Delete
 20. வருங்காலம் விடியலின் வரவது கூடுமோ
  அருகாமை ஏதுமின்றி ஆதரவிலா நிலைதானோ...
  வேதனைதீரும்
  விடிவும் கிடைக்கும்
  சோதனை மட்டுமே வாழ்க்கையல்ல
  சொந்தமும் சுற்றமும் இருக்க
  சாதனை நாள் வரும்
  சந்திக்கும் நிலையும் வரும்
  கலங்காதே மதிமயங்காதே!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ கவியாழி கண்ணதாசன்!

   Delete
 21. அழகான க்வில்லிங், ஆழமான கவிதைகள்! பாராட்டுக்கள் இளமதி!

  அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி mahi


   வாழ்க வளமுடன்

   Delete
  2. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி மகி!

   Delete
 22. கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலையில் அழகாய் இருக்கிறது. ஊழ்வினை கவிதையும் நன்று. தனிமைக் கவிதை எங்கள் பிளாக் தளத்தில் படித்தேன்.நன்றாக இருக்கிறது.
  வருங்காலம் விடியலின் வரவது நிச்ச்யம் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

  ராஜ் அவர்கள் அறிவுரையும் நன்று
  //சகோதரர் சீராளன் என்பவரின் இரு வலைப்பூக்களை இங்கு அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன்.//

  இந்த அறிமுகம் நல்ல விஷ்யம்.
  சீராளன் அவர்களுக்கும்., ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  சீராளன் அவர்கள் கவிதை படித்துவிட்டு கருத்து இடுகிறேன்.
  நன்றி வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.


  ReplyDelete
 23. சீராளன் கவிதையை இங்கும் வாசித்து விட்டேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அரசு

   வாழ்க வளமுடன்

   Delete
  2. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 24. சோகமும் ஏக்கமும் கலந்த கவிதைகள். ஜோர். க்வில்லிங்-கோட்டுச்சித்திரம்- அருமை. நான் புதியவன் இங்கு. க்வில்லிங் எப்படிச் செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். சீராளன் அவர்களின் பின்னூட்டக் கவிதை ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

   வாழ்க வளமுடன்

   Delete
  2. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

   Delete
 25. அழகான க்விலிங்...

  கவிதைகள் அருமை... (ஏனிந்த சோகம்...?)

  தள அறிமுகத்திற்கு நன்றி... சீராளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!

   Delete
 26. ‘க்விலிங் மஹாராணி’ என்று உங்களுக்கொரு பட்டம் தருகிறேன் இளமதி. அத்தனை ஜோராக அசத்துது ஒவ்வொண்ணும் ஒண்ணை ஒண்ணு மிஞ்சி. காதல் கவிதைகள், மகிழ்ச்சிக் கவிதைகள் போல மென்சோகம் தடவின கவிதைகளும் ஒரு ரசனைதான். மிக ரசிக்க வைத்தது என்னை. சீராளன் அவர்களி் தளத்துக்கு நீங்கள் இணைப்புக் கொடுத்திருப்பது கண்டு மகிழ்கிறேன்! உடன் சென்று பார்க்கிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 27. ஆனாலும் நீங்களும் இந்தச் சீராளனும் கவிதையிலயே கருத்தும் எழுதி என்னை பெருமூச்சு விடத்தான் வெக்கறீங்க! ஹுஊஊஊம்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ பால கணேஷ் !

   Delete
 28. கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலை அழகாய் இருக்கிறது...அழகாக‌ செய்திருக்கிறீங்க வாழ்த்துக்கள். கவிதையும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி விஜி பார்த்திபன் !

   Delete
 29. [im]http://2.bp.blogspot.com/-wuuc12FLFeE/UX97jf28d7I/AAAAAAAAAmo/SfZMtbxJb4Q/s400/sorry.jpg[/im]

  அன்பினை நல்கும் ஆருயிர்உறவுகளே...
  என்பும் எனக்குருகியதை எழுதவரவில்லை

  மின்னும் கணத்தில் மிகுவிதிவலிமையால்
  தன்ணுணர்வு எல்லாம் தகர்ந்திடஇங்கு

  பன்னொருவருடமாய்ப் படுத்துறங்கியிருக்கும்
  மன்னவன் மாலைதந்த நாளெனைவருத்த

  என்னிலை மறந்திங்கு விதியதைமிகநொந்து
  சின்மதிகொண்டே சிதறிட்ட வேதனையால்

  குன்றிநிற்கின்றேன் குற்றமதாய் உணர்கின்றேன்
  நன்றிகூறவருவேன் நட்புகளே பொறுத்திடுங்கள்.....

  அன்புடன்
  இளமதி.

  ReplyDelete
  Replies
  1. உன்செய்தி கேட்டே உயிரெல்லாம் அழுகிறது
   வன்வலியில் துடிக்கின்ற மனதும் கேட்க்கிறது
   மென்னுள்ளமாகி வினையெல்லாம் கலைந்தோடி
   நன்றி சொல்ல வரும்வரைக்கும் காத்திருப்போம்..!

   கண்ணீர் சிந்தி கவலை கொள்ளாதே
   மணநீர் கொண்டு வளருகின்ற செடிபோலே
   உன்னுள்ளம் செழிப்படைந்து உயர்வு பெற
   உருகி வேண்டுகிறேன் உமையவன் பொற்பாதம் ..!

   வருவீர்கள் மகிழ்வாக அதுவரை காத்திருப்போம்

   வாழ்க வளமுடன்
   Delete
  2. பெரிய துயர் கொண்டாலும்
   அரியதல்ல உனக்கவைகள்
   உரியவன் நினைவுச் சாரல்
   தெரிகிறது உன் பதிலில்

   வரும் வழி பார்த்தே
   உருகும் உறவுகள் நாம்
   என்றும் காத்திருப்போம்

   நலம் பெற்று மீள்வர வேண்டுகிறேன்
   Delete
  3. உன்றன் அன்புதனை உள்ளம் உணர்ந்து
   என்றன் நன்றியினை எடுத்திங்கு கூறவந்தேன்
   மன்றம் வருவதற்கு முடியவிலை என்றாலும்
   இன்றும் கூறாதாயின் இன்நன்றி மறந்தவளாவேன்...

   அன்புச் சகோதரா... உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனம்நிறைந்த நன்றிகள்.

   மனதில் போதிய வலுவைதிரட்டிகொண்டு உங்கள் விருப்பத்திற்கிணங்க வலையுலகில் முடிந்தவரை உலவுகிறேன். மிக்க நன்றி அன்புறவே...

   Delete
  4. ஏங்கி நின்றேன் உன்வரவை
   எதிர்பார்த்து காத்திருந்தேன்
   தூங்கும் நேரத்தில்
   துயர்தட்டி எழுப்புகையில்
   இங்குவந்து தேடிநிர்ப்பேன்
   என்னுயிர் உறவைத்தேடி
   இன்றுவந்து பதில் கண்டேன்
   இனி என்றும் சோகமில்லை

   இழப்புக்கள் பழக்கப்பட்ட
   இதயத்தை சுமந்தவர் நாம்
   என்னிலை வந்தபோதும்
   ஏங்குவது பயனில்லை
   தவறவிட்ட தாயன்பாய்
   தடுமாறி நிற்கையிலே
   உறவுவிட்டு போகவில்லை
   என்றுணர்த்த இன்றுவந்தாய் ...!

   நன்றி உறவே

   உங்கள் வருகையில் மகிழ்கின்றேன்
   என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன் சகோ


   Delete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. முதல் இரண்டு கவிதையும் மனதை வாட்டி நிற்கின்றது.

  கோட்டு ஓவியம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி மாதேவி !

   Delete
 32. அருமை கோட்டோவியத்தில் செய்த பின்னல் வேலைப்பாடு கவிதை இன்னும் சுவையூட்டுகின்றது தொலைந்து போன வாழ்வைத்தேடியே!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நேசன் !

   Delete
 33. சீராளன் என்ற சிந்தனைக்கவிஞனை
  சீராட்டும் சிந்தையில் இளையநிலா
  சீமாட்டி என்று சிந்திப்பதில் பெருமையே
  சீராளனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனிமரம்

   இங்குநான் பெறுகின்ற
   மங்காத புகழெல்லாம்
   பொங்கி மனம் பூரிக்க
   புடம்போட்ட என்னுயிர்க்காய்
   வாழ்த்துகின்ற உம்மனது
   வழங்குகின்ற சிறப்பதனை
   வாஞ்சையோடணைத்து
   வழிபார்த்தே சேமித்து
   இதயத்தில் வைத்திருப்பேன்
   இளையநிலா வரவிற்காய்...!

   மிக்கநன்றி தனிமரம்
   வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

   Delete
  2. மிக்க நன்றி நேசன்...

   மிக்க மிக்க நன்றி சீராளன்...

   Delete
 34. கோட்டு சித்திர கைவேலை மிக அழகு இளமதி!
  ஏனிந்த சோக கீதங்கள்? அதுவும் என்றும் குதூகலமாய் சிரிக்கும் உங்கள் வலையில்? மனதைப் பிசைகிறது!

  ReplyDelete
  Replies
  1. க்வீலிங் மிக அருமை
   மனதை தொடும் கவிதைகள்
   தொடர்க இளமதி

   Delete
  2. மனோ அக்கா...

   உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி !

   Delete
  3. சகோதரரே முரளிதரன்...

   உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி !

   Delete
 35. கோட்டுச் சித்திரத்தில் செய்த க்விலிங் கைவேலை மிக மிக அருமை... சோகம் கூட அழகான வார்த்தைகளால் இனிமை ஆகும் போகுது வாழ்கை இனித்திடாமல் போகுமோ... தைரியம் இழக்காதீர்கள் சகோ... வாழ்கை அனைவருக்குமான வசந்தங்களை தன்னகத்தே நிச்சயமாய் கொண்டிருக்கும்...

  ReplyDelete
 36. சீராளன் அண்ணாவின் கவிதைகள் என்றுமே குறையாத இனிமை...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete

 37. வணக்கம்!

  என்னென்பேன்? ஏதென்பேன்? நீயுற்ற வாழ்வறிந்து!
  துன்குறைப்பேன் கண்ணனை நான்தொழுது! - என்தோழி!
  ஊழ்வினையோ? உள்வினையோ? உன்றன் உயிர்வினையோ?
  பாழ்வினையோ? நீங்கும் பறந்து!

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்...

   உற்ற என்வினை துன்பம்மிகவாக்கி
   சுற்றநின்று சுருக்கிட உள்ளுணர்வை
   அன்றில் பறவை நிலையைத்தந்து
   செற்றிடவைத்திடுமோ சிந்தையை மயக்கி...

   உங்கள் அன்பான வார்த்தைகள் ஆறுதலைத்தருகிறது ஆசிரியப்பெருந்தகையே...
   என்னை உணரவைக்கும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
   முடிந்தவரை வலையுலகில் என் பயணத்தை தொடருகிறேன்...

   Delete
 38. கவிதையில் என்றன் மனமோ கனத்துத்
  தவிக்கையில் கைவேலை தாவியது! - புவியில்
  பிறந்தவர்க்கு என்றும் பொறுமையே போதும்!
  சிறந்தவர் ஆவீர் சிரித்து!

  வாழ்த்துக்கள் தோழி.
  சீராளன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்புத்தோழி! உங்கள் வரவிற்கும் அன்புக்கவிக்கும் நன்றிகள் பல.

   மனங்கனத்த விதியால் அன்பு
   இனம்வருந்தச் செய்த என்
   புலன்கள் கட்டில்லாமல் குலைந்து
   கலங்கவைத்தேன் பொறுத்தருள்க.

   Delete
 39. கோட்டு சித்திர கைவேலை மிக அழகு ..!

  வாடித்திரியுறனே கண்ணீரோடை
  ஓடித்தான் திரியுறனே...

  வருத்தும்வினை....!!!  சீராளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி!

   Delete
 40. //பன்னொருவருடமாய்ப் படுத்துறங்கியிருக்கும்
  மன்னவன் மாலைதந்த நாளெனைவருத்த//

  ;(((((

  தயவுசெய்து கலங்க வேண்டாம். இராமாயணத்தில் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ ஸீதாதேவியும் 14 வருடங்கள் பிரிந்து இருந்து பின் சேர்ந்து மகிழ்ந்ததாக அறிகிறோம்.

  ராமஜயம் ஸ்ரீராமஜயம் ..... நம்பியபேருக்கு ஏது பயம்?

  விரைவில் நல்லவை நடக்கும். ;) வாழ்த்துக்கள். ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான ஆசிகளுக்கு மிக்க நன்றி ஐயா!

   Delete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. நண்பர் சீராளன் சிறந்த நண்பர். வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சசிகலா

   Delete
  2. தோழியின் வரிகள் அழகோ அழகு. எனை மிகவும் கவர்ந்தது தனிமை பற்றிய வரிகள்.

   தங்களைப் போல கவிதையாக பின்னூட்டமிட உங்களிடம் தான் பயில வேண்டும்.

   Delete
  3. மிக்க நன்றி சசிகலா!

   உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் என் நன்றியும் மகிழ்ச்சியும்...

   Delete
 43. மனதை உருக்கி எடுத்தன உங்கள் கவிதை வரிகள்

  "சோடியிழந்து சொந்தமிழந்து
  வாடிநிக்குறனே எனைவாரியணைச்ச
  மன்னவன்தனியே போனதுதானெங்கே
  கூடுமிழந்து கொப்புமிழந்து கூவியழுகிறனே
  நாடிவந்த என்னருமை நாதனும்
  போனதிசைதானெங்கே....."

  ReplyDelete
 44. சித்திர வேலை பிரமாதம்.
  எனக்கு இது போல ஒன்று செய்து தருவீர்களா?

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_