Pages

Apr 22, 2013

இயற்கையோடு!...இயற்கையோடு இயல்பான சிறு பறவை ஒன்று 
க்விலிங் கைவேலையில்...:)
ooOoo
                                                     இயற்கை தரும் இளமை...
                                                                ▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫▫

                             வெற்றுமூங்கில் தந்திடுமே வேணு கானமாம்
                             காற்றிலாடும் பூக்கள்தரும் சுகந்த வாசமாம்
                             கருங்குயிலும் சேர்ந்துநல்ல கீதம்பாடுமாம்
                             காதல்கிளிகள் சோடியாகக் கதைகள் கூறுமாம்

                             தென்னங்கீற்று தீண்டும் தென்றல் மேனிவருடுமாம்

                             திரண்டமேகம் கறுக்கமயில் துள்ளி ஆடுமாம்
                             இயற்கைஅன்னை எமக்குத்தந்த இன்பம் கோடியாம்
                             இறுதிவரை அனுபவிக்க  இளமை ஓங்குமாம்...

        ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ
                                                                 அறுவடை
                                                                       ᶱᶱᶱᶱᶱᶱᶱ

                                             துளிர்க்கின்ற மரத்தினில்
                                             தலைகாட்டும் அரும்போடு
                                             மிளிர்ந்திடும் இலைகளும்
                                             மேலான பூக்களாக
                                             எனக்குள்ளே வேகமாய்
                                             எழுந்தாடும்  எண்ணங்கள்
                                             மனத்திற்குள் அறுவடையாய்
                                             மகிழ்வைத்தான் தாராதோ...
                                                                  ﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬﻬ
                                                           மழை
                                                              ****
                                              பேரிகை முழங்க
                                              பெருவெளிச்சம்தான் ஒளிர
                                              மாமழை மன்னன் வந்து
                                              மாலையிட்டான்
                                              (பூ)மாதேவியையே...
                                                            ~~~~~~~

100 comments:

 1. //இயற்கையோடு இயல்பான சிறு பறவை ஒன்று
  க்விலிங் கைவேலையில்...:)//

  ஆஹா, அழகோ அழகாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. karrrrrrrrrrrrrrrr:) mee the firstuuuuuuu:))

   Delete
  2. வாங்கோ... இங்கே இரண்டுபேரும் முதலாவதாக வந்திருப்பதால் இரண்டுபேருக்குமே ஆறுதல் பரிசு மட்டுமே ...

   பறவை வாயில் இருக்கும் பழம் தரப்படுகிறது... :)

   Delete
  3. //இளமதி 22 April, 2013 22:28
   வாங்கோ... இங்கே இரண்டுபேரும் முதலாவதாக வந்திருப்பதால் இரண்டுபேருக்குமே ஆறுதல் பரிசு மட்டுமே ...பறவை வாயில் இருக்கும் பழம் தரப்படுகிறது... :)//

   பறவை வாயில் இருக்கும் பழத்தை முழுசாக அதிராவுக்கே தாங்கோ, எனக்கு வேண்டாம். அதிராவுக்குப் பழம் என்றால் கொள்ளைப்பிரியம் என்று கேள்வி.

   பொக்கிஷம் பகுதி-10 ஒரே இருட்டாக உள்ளதாக்கும். இளயநிலா வருகைதந்து வெளிச்சம் தரவேண்டும்.

   அதுவே மிகப்பெரிய பொக்கிஷமான பரிசாக இருக்கும்.

   துணைக்கு அஞ்சு அவர்களையும் கூட்டிட்டு வாங்கோ.

   அதிராவுக்கு இது தெரிய வேண்டாம்.அவங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பழம் சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா ரெஸ்டில் இருக்கட்டும். ஏற்கனவே எட்டு முறை வருகை தந்து, கருத்தளித்து க்ளைத்துப்போய் இருக்காங்கோ ...... பாவம்.. ;)))))

   Delete
  4. ///பழம் சாப்பிட்டுக்கொண்டு ஜாலியா ரெஸ்டில் இருக்கட்டும். ஏற்கனவே எட்டு முறை வருகை தந்து, கருத்தளித்து க்ளைத்துப்போய் இருக்காங்கோ ...... பாவம்.. ;)))))///

   இளமதி எப்ப வியாழக்கிழமை வருது?:) இல்ல நான் ஒரு வெடி வைக்கோணும் ஓரிடத்தில:)..

   Delete
 2. //தென்னங்கீற்று தீண்டும் தென்றல் மேனிவருடுமாம்
  இயற்கைஅன்னை எமக்குத்தந்த இன்பம் கோடியாம்
  இறுதிவரை அனுபவிக்க இளமை ஓங்குமாம்...//

  மிகவும் அழகோ அழகான பாடல் இது. மேலேயுள்ள வரிகளை மிகவும் ரஸித்தேன். மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


  ReplyDelete
 3. //எனக்குள்ளே வேகமாய் எழுந்தாடும் எண்ணங்கள் மனத்திற்குள் அறுவடையாய் மகிழ்வைத்தான் தாராதோ.//

  அறுவடையான மகிழ்வினை தங்களுக்கு நிச்சயமாகத்தந்திடக் காத்திருக்கிறது.

  கவ்லையே வேண்டாம்...வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. // மழை
  ********
  பேரிகை முழங்க பெருவெளிச்சம்தான் ஒளிர மாமழை மன்னன் வந்து மாலையிட்டான் (பூ)மாதேவியையே...//

  ஹைய்ய்யோஓஓஓஓ ! எக்ஸலண்ட் கற்பனை.
  மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  எப்படித்தான் மிகச்சிறிய கவிதையில், இவ்வளவு பெரிய மழையைத் வரவழைத்து, எங்கள் மனதை குளிர்விக்கச் செய்கிறீர்களோ. .இங்கு அடிக்கும் வெயிலுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் கவிதையைக்கொடுத்துள்ளீர்கள்.

  அதுபோலவே நடந்தால் வெட்கையும், மனம் + தேகம் எரிச்சல் இல்லாமல் ஜாலியாக இருக்கும்.

  >>>>>>

  ReplyDelete
 5. ”இயற்கையோடு” என்ற தலைப்பில் தாங்கள் கொடுத்துள்ள இன்றைய பதிவு, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சூப்பரோ சூப்பராக உள்ளதுங்க.

  தங்களின் திறமையைப்பார்த்து வியந்து போனேன்.

  குற்றால அருவி போல சும்மா, ஜில்லுன்னு, தங்களிடம் இதுநாள்வரை ஒளித்து வைத்திருந்த பல்வேறு தனித் திறமைகளை வெளிக்கொண்ந்து மகிழ்வளிப்பது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்க! வாழ்க!! வாழ்க!!!!

  மேலும் மேலும் வளர்க! வளர்க!! வளர்க!!!

  ReplyDelete
 6. க்விலிங் கைவேலை தவிர மீதி மூன்று படத்தேர்வுகளும் அருமை.

  அவற்றையும் நன்றாகவே ‘அறுவடை’ செய்துள்ளீர்கள்.;))))

  அதாவது இயற்கையான இளமையுடன், மழையையும் வரவழைத்து நன்றாகவே அறுவடை செய்துள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வரவும் நல்ல ரசனையும் வாழ்த்தும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

   கோடைகாலம் வந்தாலே அங்கெல்லாம் கொடுமைதான். இங்கு இன்னும் சரியாக வெய்யிலே வருகிறபாடில்லை.

   மிக்க மிக்க நன்றி ஐயா! உங்கள் வரவு வாழ்த்துக்கள் அத்தனைக்கும்!...

   Delete
 7. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பறவை மிக அழகு.......

  கவிதையில கலக்குறீங்க.... கவிதாயினிப் பட்டம் வழங்கி கெளரவிக்க இருக்கிறோம்ம்....

  ReplyDelete
  Replies
  1. கவிதாயினிப்பட்டமோ... ஐயோ அதெல்லாம் வேண்டாம் அதிரா... உண்மையில் இங்குவரும் பெரும்பாலான கவிஞர்கள் இதைக்கேட்டால் உங்களையும் என்னையும் கட்டிவைத்து அடிப்பார்கள்...:)

   ஏதோ கொஞ்சம் நானும் அப்பிடி இப்படி கிறுக்கிப்பார்ப்பம் எண்டு விளையாடுறேன். உண்மையாகச் சொன்னால் ஆரிட்டை அடி வாங்கி இதை நிப்பாடப்போகிறனோ எனக்கே தெரியாது...:)

   Delete
  2. //athira 22 April, 2013 20:59

   கவிதையில கலக்குறீங்க.... கவிதாயினிப் பட்டம் வழங்கி கெளரவிக்க இருக்கிறோம்ம்....//

   ஏற்கனவே நான் பலமுறை வழங்கியாச்சு. பிரித்தானிய குயினின் பேத்தியும் இளவரசியுமான நீங்களும் அஃபீஷியலாக பட்டம் வழங்கி கெள்ரவிங்கோ. ஜோரா கைத்தட்ட நான் கட்டாயம் வாரேன். ;)))))

   Delete
  3. // ஜோரா கைத்தட்ட நான் கட்டாயம் வாரேன். ;)))))//

   கை தட்டினால் மட்டும் போதாது.. என்வலப்புக்குள் சுளையா வச்சுக் கையில கொடுக்கோணுமாக்கும்:)) பவுன்ட்ஸ்..ல:).

   Delete
 8. /// மழை
  ****
  பேரிகை முழங்க
  பெருவெளிச்சம்தான் ஒளிர
  மாமழை மன்னன் வந்து
  மாலையிட்டான்
  (பூ)மாதேவியையே...///

  ஆஹா ஆஹா.. சூப்பர் கற்பனை... இதில் மாலைக்குப் பதில் முத்தமிட்டான் என்பது கூடப் பொருந்துமென நேக்குத் தோணுது.

  ReplyDelete
  Replies
  1. ம். உங்கள் கற்பனையும் பொருந்தும். இதை நானும் நினைச்சிட்டு... (இங்கை சத்தமா சொல்லேலாது... கிட்டவாங்கோ சொல்லுறேன்...:)..)
   பேரிகை முழக்கத்துக்கையும் பெரீசா வெளிச்சதிலயும் உங்கட கற்பனை இதுக்கு ஒத்துவராது...;))) அதுதான் அதை நிப்பாட்டிப்போட்டு மாலையிட்டான் எண்டு எழுதினேன். இப்ப விளங்கிச்சோ..:).

   அதிரா... உங்கள் அன்பான வரவிற்கும் நல்ல ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!...

   Delete
 9. கவிதைகளனைத்தும் அருமை சகோதரி !!! வாழ்த்துகள் !!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தமிழ்முகில்...:)

   மிக்க நன்றி உங்கள் அன்பு வருகைக்கும் வாழ்த்திற்கும் சகோதரி!

   Delete
 10. இளமதி மழை பற்றி எழுதின கவிதை ஆஹா.அதிராவ் .கைகொடுங்கஇளமதிக்கு ஒரு வைர மோதிரம் போடணும் .(உங்க மோதிரத்தை தான் எடுத்து இளமதிக்கு போடபோறேன் :))))))

  ReplyDelete
  Replies
  1. ஹாஆ.. அஞ்சு... வாங்கோ...:)

   நீங்க அதிராவை ஆருக்கு கைகொடுக்கச்சொல்றீங்க... உங்களுக்கோ... மோதிரம் கழட்டவோ...:)
   கடவுளே! அஞ்சு... எனக்கு உந்த தங்கம் வைரம் வைடூரியம் ஒண்ணுமே வேணாம். உங்கள் எல்லாருடைய அன்பால தொடுத்த புன்னைகச்சரம் தாங்கோ அதுபோதும்...:)

   மழைப்பாட்டுத்தான் பிடிச்சிருக்கோ நன்றி!
   அப்ப மற்றதெல்லாம்...:(

   Delete
  2. //நீங்க அதிராவை ஆருக்கு கைகொடுக்கச்சொல்றீங்க... உங்களுக்கோ... மோதிரம் கழட்டவோ...:)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   மொத்தத்தில் அதிராவிடமிருந்து மோதிரத்தைக் கழட்டி விடுவதாக முடிவே செய்துட்டீங்க்ளா !!!!!!!!!!!

   அது மட்டும் நடக்கவே நடக்காதூஊஊஊஊ. ;)))))).

   அதிராவா .... கொக்கா?

   Delete
  3. அதானே அதிராவோ கொக்கோ:) என் வைரத்தை.. ஐ மீன் மோதிரத்தை லொக்கரில வச்சுப் பூட்டி, கீ யை தேம்ஸ்ல வீசிட்டேன்ன்.. ஹா..ஹா..ஹா.. கண்டு பிடிக்கவே முடியாதே:).

   //கடவுளே! அஞ்சு... எனக்கு உந்த தங்கம் வைரம் வைடூரியம் ஒண்ணுமே வேணாம்.//

   அப்பூடியோ?:)ரொம்ப நல்லது, அட்ரஸ் தாறேன் டக்கென அதிராவுக்கு, உங்களிட்ட இருப்பதை எல்லாம் அனுப்பிடுங்கோஓஓஓஓஓஓஒ:).

   Delete
 11. அழகான க்வில்லிங் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஞ்சு. மிக்க நன்றி! உங்கள் அன்பு வாழ்த்து கண்களில் கண்ணீரை வரவைக்குது...:)

   Delete
 12. அருமைக் கவி வரிகள்.
  அழகு க்விலிங் வேலை இளமதி!
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரி!

   உங்கள் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் என் உளமார்ந்த நன்றிகளும்!

   Delete
 13. //தென்னங்கீற்று தீண்டும் தென்றல் மேனிவருடுமாம்
  திரண்டமேகம் கறுக்கமயில் துள்ளி ஆடுமாம்// - அழகோ அழகு தோழி!
  அறுவடை மற்றும் மழை கவிதைகளும் நல்ல விளைச்சல் தான் :) வாழ்த்துக்கள் தோழி! க்விலிங் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கிரேஸ்!

   தொல்தமிழ்மொழியில் தூள்கிளப்பும் கவிஞர் உங்கள் ரசனை என் பாக்கியம்...
   மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி!

   உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் பல...

   Delete
 14. azhakiya kavithai sonthame...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ!

   உங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்...

   Delete
 15. இயற்கையோடு இயல்பான சிறு பறவை ஒன்று
  க்விலிங் கைவேலையில்...:)//
  உங்கள் கைவேலை அழுகு, அற்புதம்.


  எல்லா கவிதைகளும் மிக நன்றாக இருக்கிறது இளமதி.
  பேரிகை முழங்க
  பெருவெளிச்சம்தான் ஒளிர
  மாமழை மன்னன் வந்து
  மாலையிட்டான்
  (பூ)மாதேவியையே.../// //

  மழை கவிதை மிக் மிக அருமை. உங்கள் கவிதை மழை போல்
  நேற்று எங்கள் ஊரில் இடி பேரிகை முழந்கியது , அரை மணி நேரம் மழை பெய்து எல்லோரையும் மகிழ்வித்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி...

   உண்மையாகவோ நேற்று மழை என்கிறீர்கள்...:)

   ’நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்றார் ஔவையார்.
   நீங்களெல்லாம் அங்கிருப்பதால் வந்துவிட்டது மழை...:)

   உங்கள் வரவும் அலாதியான ரசனையும் நிறைந்த மகிழ்வைத் தருகிறது சகோதரி.

   மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும்...

   Delete
 16. க்விலிங் வேலையிலும்
  இனிய கவிபடைத்த
  இளையநிலா
  கவிதையிலும்
  களம் கண்டுள்ளார்.
  அதிரா சொன்னதுபோல்
  அப்படியே செய்ய வேண்டும்
  இன்றைய படைப்பு
  இளமை துள்ளலுடன்
  நன்றே உள்ளது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிந்தனைச் சிற்பியாம் கண்ணதாசனின் கவி
   விந்தையும் வியப்பும் தந்ததே உம்வலையில்
   பண்புடன் பகரும் பாக்களும் சொல்லுமே
   உம்புகழ் வாழ்த்திங்கு உவகைதருதே எனக்கு...

   உங்கள் அன்பான வரவும் ரசனையும்
   நிறைந்த மகிழ்வாயிருக்கிறது சகோ!.

   மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கும்...

   Delete
 17. மழையைப் போற்றி இப்படி சிறப்பான கவிதை அருமை
  "மாமன்னன் வந்து மாலையிட்டான் பூமாதேவியை"ஆஹா என்னே அருமை.தொடருங்கள்
  தினமும் கவியுடன் மழைப் பொழியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி... மிக்க நன்றி!

   Delete
 18. அருமையான க்வில்லிங்...

  பிரமாதமான வரிகள்...

  வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ’நட்சத்திர கருத்துரையாளர்’ தனபாலன் சார்!...
   வணக்கம்!

   உங்கள் அன்பான வரவும் வாழ்த்துக்கருத்துமே என் போன்ற பதிவுதருபவர்களுக்கு நிரந்த ஒரு ஊக்குவிப்பு.
   மிக்க நன்றி சகோ...

   தவறாது அனைத்துத்தளங்களுக்கும் சென்று கருத்துப்பதிவும் வாழ்த்தும் கூறும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...

   Delete
 19. இளமதியின் இளமை வயலில்
  இளமை ஊஞ்சல் ஆடியது அருமையாய்
  மழை மனதினுள் சந்தோஷத்தை பொய்தது
  க்விலிங் அழகை பாடியது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பூவிழி...:)

   பூவிழிப் பார்வையால் பூலோகமே மகிழ்ந்திடுமே
   பாவிழித்த வாழ்த்துக்கு பகர்கின்றேன் நன்றிதனை...

   மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு.
   நன்றி தோழி!

   Delete
 20. மழைக்கு முந்தைய வானிலையும் அழகிய நீலப்பறவையும் இயற்கை தரும் இளமை ரகசியத்தைக் காட்டி மனம் மயக்க, மாமன்னன் பூமாதேவிக்கு மாலையிட்ட அழகை கவிச்சரங்களால் தொடுக்க, மழைக்குப் பின்னான மரங்கள் துளிர்க்கும் அழகை அறுவடைக் கவிதையில் அறுவடை செய்ய.... என்னவென்று சொல்ல... மழையில் நனைந்த சுகம்!

  பாராட்டுகள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வாங்கோ கீதமஞ்சரி!

   கவிதை, கதைக் கடலல்லவோ நீங்கள். உங்களை என் சிற்றறிவுக்கிறுக்கல்கள் கவர்ந்தது மட்டற்ற மகிழ்வே எனக்கு...

   அதை நான் எழுதியதைவிட நீங்கள் தொகுத்தவிதம் அபாரம். இதுதான் கீதமஞ்சரியின் திறமை. எல்லோருக்கும் இப்படி சிந்தனை வருவதில்லை.

   உங்கள் ரசனை அற்புதம் அதையும் ரசித்தேன். அன்பான வரவும் வாழ்த்தும் மகிழ்ச்சிதருகிறது.
   மிக்க நன்றி தோழி!!!

   Delete

 21. வணக்கம்!

  மைவிழிப் பெண்ணே! மனத்தை மயக்கும்!உன்
  கைவழி வந்த கலை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள் கவிஞர் ஐயா!...

   வாழ்த்தினைக்கண்டு வாய்மொழி மறந்தேன்.

   நன்றி ஐயா...

   Delete

 22. வணக்கம்!

  இளமை இனிக்கும் இயற்கைக் கவிதை
  வளமைத் தமிழின் வரவு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

 23. வணக்கம்!

  அறுவடை

  மலா்ந்தாடும் பூக்கள்! இளமை மனத்துள்
  வளா்ந்தாடும் ஆசை வயல்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. இனிமை இருந்திட்டால் இளமை கூடவரும்
   தனிமை போக்கிநல்ல தகைமை தந்துவிடும்
   பெருமை கொள்கிறேன் பெருங்கவி உம்வரவால்
   அருமைக் கவிவாழ்த்து அழகு அனைத்துமேதான்!

   Delete

 24. வணக்கம்!

  மழை

  மழையைக் குறித்து வடித்த கவிதை
  குழைய கொடுக்கும் குளிர்தேனை! - அழகாய்
  விழைத்த வரியாவும் வெல்லும் உலகை!
  தழைத்த தமிழ்ச்சுவை தந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தன்னிகரில்லா நம் தமிழின் தனிப்பெருங்கவியே!
   உன்னிப்பாக இங்கு உணர்ந்துரைத்த நல்வாழ்த்து
   எண்ணில்லா உவகை எப்படியுரைப்பேன் நான்
   மண்ணில் உள்ளவரை மனதிலேற்றினேன் நன்றியுடன்...

   ஐயா... உங்கள் அன்பான வரவும் ஆழ்ந்துரைத்த நல்வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகின்றது.
   உளமார்ந்த நன்றிகள் உங்களுக்கு!

   Delete
 25. கவிதைகள் அருமை.இயற்கை தந்த இளமை மிகவும் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டினேஷ்சாந்த்!... வாங்கோ!

   மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவுகண்டு...

   அழகிய ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ!

   Delete
 26. தலைப்பும்,கவிதைகளும்,க்வில்லிங்கும் மிக அருமை இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆசியா...

   மிக்க மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் ரசனைக்கும்!

   Delete
 27. அழகான கவிதைகள்.
  இரசித்துப் படித்தேன்.
  அனைத்தும் அருமையாக உள்ளது தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தோழி அருணா செல்வம்!

   நீங்களும் ரசித்துப்படித்திருப்பது மேலும்மேலும் மகிழ்வே எனக்கு.

   உங்கள் வரவிற்கும் நல்ல ரசனைக்கும் மிக்க நன்றி!

   Delete
 28. பஞ்சவர்ணக் கிளி படு எழிலாக உள்ளது! அதோட வாயில் வைத்திருக்கும் பழமும் அழகு! :) அதை அதிராக்கு குடுத்துட்டீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....மீதியிருக்கும் ரெண்டு கொத்துப் பழமும் எனக்கே எனக்கு! :))

  கவிதைகள் அருமை..நான் சொல்லவந்த கருத்தையெல்லாம் எல்லாரும் எனக்கு முன்பே சொல்லிட்டாங்க இளமதி. ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி...:) உங்களில்லாத பழமோ... வேணும்ங்கிறதை எடுத்துக்கோங்கோ... அதிராக்கு சொல்லாட்டிச்சரி...:)))

   உங்களுக்கு முன்னே எல்லோரும் சொல்லீட்டாங்கன்னாலும் அவங்க யாருமே சொல்லாத கேட்காத பழத்தை கேட்டிருக்கீங்களே அதுவும் ஒரு விஷயம்தானே..:)

   உங்க அன்பான வரவிற்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி!

   Delete
 29. படங்களே கவிதையாக,கவிதையே படங்களாக,நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ! வணக்கம்...

   நல்ல ரசனைதான். மகிழ்ச்சி.

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 30. மழையைப் பற்றிய கவிதையை மிகமிக ரசித்தேன். மற்ற கவிதைகளும் மனங் கவர்ந்தன. பறவையோ மனங்கொத்திப் பறவையாக அல்லவா இருக்கிறது! எல்லாமே சூப்பருங்கோ!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ப்ரதர்...:) வணக்கம்!

   மனங்கொத்திப்பறவையோ அப்பிடி ஒரு படமெல்லோ வந்தது. அதில்லை இது. அது வேறை இது வேஏற...:)

   உங்கள் அனபான வரவுக்கும் நகைச்சுவையுணர்வுடனான ரசனைக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி சகோ!

   Delete
 31. பறவை கொள்ளை அழகு. உங்கள் கவிதைகள் எப்பொழுதும் போல அருமை இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா...

   ரொம்ப ரொம்ம்ப நன்றி இமா! உங்கள் வரவும் ரசனையும் மிகுந்த மகிழ்வாயும் இருக்கு எனக்கு...

   Delete

 32. வெற்று மூங்கில் இசைத்திட்ட வேணு கானத்தைக் கேளாது
  வெற்றிலே இரு நாளை வீணாய்க்கழித்த சுப்புவே !!
  கருங்குயில் ஒன்று இன்று பாடுவதைக் கேளு - முடிந்தால்
  அருமை மெட்டு ஒன்று போட்டு நீயும் பாடு.


  பாடிட்டேனே !!

  சூபர் இளமதி மேடம்.
  கன்க்ராட்ஸ்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா...
   மீண்டும் உங்கள் மெட்டமைப்பில் இந்தப்பாடலையும் பாடியிருப்பதைக்கேட்டேன். மிக அருமையாக இருக்கிறது. அவ்வளவு சிறப்பாக உள்ளது ஐயா.

   நல்ல துள்ளிசையாய் என் எழுத்துக்கு இசைவடிவம் கொடுத்து அசத்தியிருக்கின்றீர்கள்.
   எப்படி என் நன்றியை உங்களுக்குச் சொல்வேன்?.... அத்தனை மகிழ்வாய் இருக்கின்றது...

   உளமார்ந்த என் வணக்கத்தையும் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன்.

   அவசர வேலையாய் இருப்பதால் இன்னும் சிறிது நேரத்தில் அதன் இணைப்பை இங்கு சேர்த்துவிடுவேன்.

   உங்கள் வரவிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
 33. https://www.youtube.com/watch?v=N1MxxGMFkIw

  இங்கே வாருங்கள்
  கேளுங்கள்.

  சுப்பு ரத்தினம்.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. ஐயா!...

   தன்னலமில்லாத உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!!!

   Delete
 34. வழமைபோல் சூப்பர் உங்க கவிதையும்,க்விலிங். எனக்கு உங்க இயற்கை தரும் இளமை கவிதை
  ரெம்ப பிடித்திருக்கு இளமதி. இயற்கையை அனுபவிக்கத்தெரிந்தவன் மனதை தெளிவாக வைத்திருப்பான் என வாசித்த ஞாபகம். இயற்கை எவ்வளவு ரசித்தாலும் சலிப்புத்தோன்றுவதே
  இல்லை. சூப்பர் இளமதி.
  "எனக்குள் எழும் எண்ணங்கள் மனத்திற்குள் அறுவடையாய் மகிழ்வைத்தான் தாராதோ"
  அழகிய சொல்லாடல் இளமதி. பிடித்த வரிகள்." மழை" கவிதையும் மிக நன்றாக இருக்கு.
  அழகிய பொருத்தமான படங்கள். நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
  சுப்பு ஐயா அவர்கள் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். நான் கேட்டும்விட்டேன். அவரின் இந்த தன்னலமில்லாசேவைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்மு... என்ன உங்களை இப்பெல்லாம் காணவே கிடப்பதில்லை...:)

   அம்மு... மனதில் இனிமையும் ரசனையும் இருந்துவிட்டால் மகிழ்ச்சி கூடவே இருந்துகொள்ளும். சலிப்போ கவலையோ தூரமாகிவிடும்.

   படங்களுக்கு பாடலும் பாட்டுக்கு படமுமாய்த் தேடியவைதான். எல்லாம் கூகிளாரின் உபயம்...:)

   சுப்பு ஐயாவின் பணி என்னைபோன்று தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பிபவர்களுக்கு பெரிய உந்துசக்தி அல்லவோ. அவர் பாடித்தரும்போது அடுத்தமுறை இன்னும் இன்னும் மெருகேற்றி எழுதத் தோன்றுகிறது...

   உங்கள் அன்பான வரவும் இத்தனை அக்கறையான நல்ல ரசனையும் வாழ்த்துகளும் எனக்கும் மனம் நிறைந்த மகிழ்வினைத்தருகிறது.
   அத்தனைக்கும் மிக்க நன்றி அம்மு!

   Delete
 35. சிறந்த ஆக்கம் பாராட்டுகள் தொடர்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாலதி!

   உங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

   Delete
 36. இனிய வணக்கம் சகோதரி....
  பாடல்கள் ஒவ்வொன்றும் மனதுக்குள் கும்மிகொட்டி நிற்கின்றது.
  வாசித்த வரிகள் வசந்தமாய் வாசமிட்டுக்கொண்டது நெஞ்சுக்குள்.

  கைவண்ணம்
  சிறுபறவையின்
  மெய்வண்ணம் காட்டி
  சிலிர்க்க வைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ மகேந்திரன்!

   வசந்த மண்டப வலைப்பதிவாளரல்லவோ அதுதான் வரிகளும் வசந்த வாசனையாயுள்ளது உங்களுக்கு...:)

   உங்கள் ரசனையைக்கண்டு நான் ரசித்தேன். மிக்க மிக்க நன்றி சகோ!
   உங்கள் வரவும் வாழ்த்தும் மனதிற்கு நிறைவே.. நன்றிகள் பல!

   Delete
 37. பேரிகை முழங்கி தாமதமாக கேட்டதோ எனக்கு ... வரிகள் அருமை அழகு தோழி தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சசிகலா...

   அட தாமதமென்று ஒன்றுமே இல்லை. உங்கள் வரவும் ரசனையும் எப்பவும் எனக்குத்தரும் மகிழ்வே...

   மிக்க நன்றி தோழி!

   Delete
 38. இயற்கையோடு இயல்பான சிறு பறவை ஒன்று
  க்விலிங் கைவேலையில்...:)

  சிறப்பு சேர்த்தது பகிர்வுக்கு ..

  இசைமழையாய் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரி!...

   மிகுந்த மகிழ்ச்சி.
   உங்கள் வரவும் பாராட்டும் தருகிறது உயர்ச்சி...

   மிக்க நன்றி சகோதரி!

   Delete


 39. கடல்போன்ற மறுமொழியைக் கடந்துவர நெடுநேரம்
  திடமில்லா கிழவன்நான் தேடிவந்தேன் வெகுதூரம்
  படம்போட்டு பாங்குடனே பாடலதும் தந்திட்டீர்
  நடமாடும் மயிலாக நற்றமிழில் குயிலாக!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் புலவர்பெருந்தகயே... வாருங்கள் ஐயா!

   உங்கள் வரவும் வாழ்த்தும் உவகை தருகிறது.
   இனி வருங்காலங்களில் உடனேயே உங்களுக்கு அறிக்கை தருகிறேன். உடன்வந்து பார்த்திட்டால் குறையும் சிரமம்.
   வரவிற்கும் வாழ்த்திற்கும் மனம்நிறைந்த நன்றிகள் பல ஐயா...

   Delete
 40. அருமையான் கலர் காம்பினேஷன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜலீலா...

   எங்கே இப்பெல்லாம் உங்களைக் காணக்கிடைக்கிறதே இல்லை...:)

   வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜலீலா!...

   Delete
 41. மழை கவிதை இன்னும் அழகாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   முதல்வருகை இங்கு. வாங்கோ...

   மழையை விரும்பாதோர் இல்லையே...:)
   உங்களுக்கும் பிடித்தது மகிழ்வே எனக்கும்.

   மிக்க நன்றி சகோ உங்கள் வரவிற்கும் ரசனைக்கும்...

   Delete
 42. http://engalblog.blogspot.co.uk/2013/04/199.html

  இங்கே ஒரு கவிதை போட்டி இருக்கு பாருங்க ..நீங்க பார்டிசிபேட் செய்யுங்க இளமதி

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு...:)

   ஓ.. பார்க்கிறனே...:)
   நன்றிமா...

   Delete
  2. அஞ்சு... முன்பும் ஒருமுறை அங்கு போய்வந்துள்ளேன்.
   இப்போ கவிதை இணைத்துவிட்டு வந்தேன். பாருங்கள்.

   உங்கள் உதவிக்கு மிக்க நன்றி அஞ்சு...:)

   Delete
 43. அறுவடையும், அதைவிட மழையும் அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் ஐயா. வணக்கம்!

   உங்களின் முதல் வருகை இங்கு. அத்துடன் உங்கள் ரசனையும் தருகிறது மேலும் மேலும் மகிழ்ச்சி!

   மிக்க நன்றி ஐயா!

   Delete
 44. ஏஞ்சலின் அவர்களுக்கும் உங்களுக்கும் 'எங்கள்' நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அஞ்சுவுக்கும் கூறிவிட்டேன். நன்றிக்கு எம் நன்றிகளும் `எங்கள்’ ஆகிய உங்களுக்கு...

   Delete
 45. மழையைப் பற்றி 'எங்களி'ல் பகிர்ந்திருந்த என் கவிதை முயற்சி ஒன்று! உங்கள் பார்வைக்கு!

  கருப்பு மேகத்தால்
  வெண்மை தேகம்
  கறையானதாக
  வானம் விட்ட கண்ணீர்..

  கண்டு இரங்கிய
  காற்று வந்து
  மேகம் துரத்தியவுடன்
  கண்ணீர் நின்றது.

  ReplyDelete
  Replies
  1. அட அட ... என்ன ஒரு அழகிய கற்பனை! உண்மையில் மிகவே ரசித்தேன் உங்கள் கவிதையை... அருமை! வாழ்த்துக்கள் ஐயா!


   //என் கவிதை முயற்சி ஒன்று! உங்கள் பார்வைக்கு!//

   என்ன ஒரு தன்னடக்கம்... ஹையோ அதுவும் இப்பதான் தத்தி மெல்ல நடைபயிலும் என்கிட்டே...வேணாம் ஐயா இப்படி சொல்லாதீர்கள். உங்கள் திறமைக்கு முன் நான்தான் வெறும் சாதாரணம்...
   தோழி அஞ்சு தந்த ஊக்கத்தினால் அங்கு வந்து ஏதோ கிறுக்கிவிட்டு நிற்கப்பயந்து ஓடிவந்துவிட்டேன்...:)

   உங்கள் அன்பான வரவிற்கும் இனிய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல!

   Delete
 46. இயற்கையின் இளமை சேர்ந்த
  இளமதி கவிதை கண்டேன்
  வியர்த்திடும் விழிகள் தழுவ
  விசிறி போல் முடிவும் கண்டேன்

  பனித்துளி பூக்கள் சிந்தும்
  தனிப்பெரும் கந்தம் போலே
  கனியிலும் காணா வாசம்
  இனித்திட இனித்திடக் கண்டேன்..!

  கவிலிங் அழகோடு ,கவிதைகளும் ரசித்தேன்
  அறுவடை கவியினிலே அழுதுவிட்டேன்
  அந்தோ மழைக்கவி மனதில் சேர
  மகிழ்வெல்லாம் நெஞ்சில் மலர்கிறதே...!

  அற்புதம் சகோ
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  இதுவும் என் வலைப்பூ முடிந்தால் பாருங்கள்
  http://akkinichsuvadugal.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரா! வணக்கம்...

   இனித்த நல்லிதயமுடன் வந்து
   கனித்த வாழ்த்திங்கு இயம்பி
   தனித்தல் நீஇல்லை தம்பியுண்டு
   பனித்தல் ஒறுபலம் நானென்றாய்

   அருத்தமுடன் அதியழகாய்
   ஆழ்ந்த ரசனைமிகவொடு
   விருத்தமாய் வாழ்த்தினாய்
   விளம்பினேன் நன்றிமிகவே...

   உங்கள் அன்பான வருகைக்கும் ரசனைமிக்க கருத்துக்கவிதைகளுக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி உறவே!

   வாழ்க வளமுடன்!

   உங்கள் வலைப்பூவுக்கு ஏற்கனவே வந்துவிட்டேன்...
   மிக்க நன்றி!

   Delete
  2. தங்கள் வருகையினை தாமதமாக கண்டேன் மன்னிக்கவும் சகோ அங்கேயும் பதிலிறுத்தி விட்டேன் நன்றி

   தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்
   வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

   Delete
 47. எவ்வளவு பின்னூட்டங்கள் பெண்ணே!நீ என்ன கவிதையின் அரசியா.
  பிரவாகமாக கவிதைகள், அருவியாகக் கொட்டும் அர்த்தங்கள் .எவ்வளவு எளிமையாக எழுதிவிடுகிராய்? மழை, அறுவடை என கவிதைகள் மனதில் லயிக்க வைக்கிரது. அருமை,பெருமை இரண்டையும் கொடுக்கிரது உன் வலைப்பூ. நிறைய உன்னைப் பற்றி அறிய ஆசை. ென்றும் அன்புடன்

  ReplyDelete
 48. அன்புடையீர்,

  வணக்கம்.

  இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

  தலைப்பு:

  ”ஸ்வர்ண குண்டல அனுமன்”

  இணைப்பு:

  http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

  தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி,

  இப்படிக்குத்தங்கள்,

  வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_