Pages

May 4, 2013

அமைதி தருகின்ற...சின்முத்திரை
ΩΩΩΩΩΩ

நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.
மனம் மகிழ்ச்சியாகவும் துக்கமோ அழுத்தமோ அணுகாமலும் சிறந்த சிந்தனை, மன அடக்கம், அமைதியைத்தரவல்ல இந்த முத்திரையைச் சின்முத்திரை என்று கூறுவர்.
ஆள்காட்டி விரலை மடக்கி,கட்டை விரலின் நுனியோடு ஒட்டி ,மற்ற மூன்று விரல்களையும் முன்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும்.

இதனை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சில நிமிட நேரங்களுக்கு பயிற்சியாக செய்து உயர்ச்சி அடையலாமென  ஆன்மீகக் கட்டுரைகள் கூறுகின்றன.  

இதனையே கோட்டுச்சித்திரத்தில் இங்கு க்விலிங் கைவேலையாகச்  செய்துள்ளேன்.
*************


அமைதி..
◘◘◘◘

                                    அமைதி தருகின்ற ஆனந்தம்மிகவே
                                    அகமதில் தூய்மை அதிகமாகுமே
                                    கனிவுடன் தருமே காருண்யவாழ்வே
                                    இனிமை இளமை இயல்பாய்வருமே...

                                    அழகினைக் கூட்டும் அதிபகை ஓட்டும் 
                                    அகத்தின் அமைதியே அடக்கத்தைக்காட்டும்
                                    ஆயுளைப் பெருக்கும் அழிவதைத்தடுக்கும்
                                    ஆணவம் அழிக்கும் அன்பினைப்பூக்கும்...

                                     பார்க்கின்ற யாவும் பரவசமாகும்
                                     வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்
                                     ஊருக்கும் உறவுக்கும் உன்னதமாகும்
                                     நேரிதற்குமுண்டோ நிகர்  நீசொல்!... 
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘


தனியேவிடு...
**********

                                        நினைவேயென்னைத் தனியேவிடு
                                        துணையாய்ப்பின்னே தொடர்வதைவிடு
                                        வினையேவாழ்வை வாழ்கிறேன்விடு
                                        புனைகிறேன் புதுக்கவி புரிந்துநீவிடு...

♫♫♫♫♫
∞∞∞∞∞∞∞

பதிவோடு ஒரு அறிமுகம்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

வைத்தியர் முருகானந்தன் ஐயாவின் வலைப்பூக்களை இம்முறை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்வடைகின்றேன்.

மிக அவசியமான பல விடயங்களை உள்ளடக்கிய மூன்றிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களின் பதிவாளர் வைத்தியர் ஐயா.  வைத்தியம் மட்டுமல்லாமல் படங்கள் எடுப்பதும் அதற்கேற்றவகையில் பாக்கள் இயற்றிப்போடுவதுங்கூட இவரிடம் காணலாம். அவர் வலைப்பூகளுக்குச் சென்று பாருங்கள். அவரையும் ஊக்குவித்து பலனடையுங்கள். மிக்க நன்றி!

இங்கு அவர் வலைகளில் மூன்று முகவரிகளைத் தந்துள்ளேன்.

http://hainallama.blogspot.de/      ஹாய் நலமா

http://stethinkural.blogspot.de/     steth இன் குரல்

http://muruganandanclics.wordpress.com/     முருகானந்தன் கிளிக்குகள்

96 comments:


 1. வணக்கம்!

  சின்முத் திரையைப் பதிக்கின்ற
  சிந்தைக் குள்ளே ஒளிமேவும்!
  பொன்முத் திரையைப் பதிக்கின்ற
  புதுமை உன்றன் கைவண்ணம்!
  இன்முத் திரையைப் பதிக்கின்ற
  எழிலார் படங்கள்! சுவைகவிகள்!
  நன்முத் திரையைப் பதிக்கின்றேன்
  நற்றேன் விருத்த யாப்பினிலே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!...

   உங்கள் வரவும் விருத்தப்பா வாழ்த்தும் சிந்தை நிறைக்கின்ற மகிழ்ச்சியைத் தருகிறது...

   உங்கள் தயவால் ஏதோ கொஞ்சம் என் அறிவில் ஏற்றியதை இங்கு எழுத்தில் தந்துள்ளேன்.
   கற்க இன்னும் உள்ளது. நேரம் கூடவில்லை. தொடருவேன்.
   மிக்க மிக்க நன்றி ஐயா !

   பாவலரே பணிகின்றேன் பசுந்தமிழின் நேசமுறு
   காவலருங்கள் கனிவான கவியதால் மிகமகிழ்ந்து
   கூறும் நல்வாழ்த்திங்கு கோடிபெறுமே என்றிறமை
   நாரும் மணக்குதே சேர்ந்திங்கு பூவுடன்தான்...

   Delete
 2. சின்முத்திரை பற்றி அறிந்திருக்கிறேன் சகோதரி...
  அதற்கான மருத்துவப் பின்னணியும்
  அதற்குண்டான பலன்களையும் இப்போது
  தங்கள் மூலமாக அறிந்துகொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மகேந்திரன்!...

   சின்முத்திரை விளக்கம் முன்பு நான் எங்கள் ஆன்மீகச் சகோதரர் ஹைஷ் மூலம் அறிந்திருந்தவைதான் இவை. அதைவிடவும் இனையத்தேடல்களில் அறிந்தவையும் சில...

   உங்களுக்கும் இங்கு அறியதந்தது எனக்கும் மகிழ்ச்சிதான் சகோ...

   Delete
 3. உங்களின் அமைதி கவிதையைப் படித்து
  முடிக்கையில் மனதில் அமைதி
  ஆனந்தமாக ஆர்பரிப்பாமல் குடி ஏறிக்கொண்டது சகோதரி.

  மனமது ஆங்கே
  அமைதியாய் நின்றிட்டால்
  நகரும் பூமியும்
  நமக்குள் அடக்கமே....

  ReplyDelete
  Replies
  1. // மனமது ஆங்கே
   அமைதியாய் நின்றிட்டால்
   நகரும் பூமியும்
   நமக்குள் அடக்கமே....//

   உண்மை சகோ...
   ஆனால் மனமது மந்திதானே மரம்தாவாது நிற்குமோ...:)

   Delete
 4. நினைவுகள் இங்கே
  நமைத் தொடரும்
  நிழலின் சாரமே...
  இருப்பின் நிலையறிந்து
  நினைவே எனைத் தொடராதே..
  சற்றே ஒதுங்கி நில்...
  சாதுவாகிக் கொள்கிறேன்...
  சாகசம் செய்வோம் பின்....

  ReplyDelete
  Replies
  1. சகோ.மகேந்திரன்...

   நிழலும் நினைவும் நீங்கா இரட்டையர்
   தொழுதும் அழுதும் தொடர்ந்தே இருப்பவர்
   சுழலும் வாழ்வில் சூழ்ந்தும் சுற்றியும்
   கழல் விரல்கள் கட்டும்வரை கலைந்திடாரே...

   நிழலும் நினைவும் எம்மை எங்கேவிடப்போகின்றது...:)))

   Delete
 5. மருத்துவர் ஐயா முருகானந்தம் அவர்களின்
  வலைப் பதிவுகள் மிகவும் அருமையான ஒன்று.
  அறிமுகத்திற்கு நன்றிகள் பல சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மருத்துவர் ஐயாவின் வலைப்பூக்கள் நிறைய இருக்கின்றன. எனக்கும் நேரப்பற்றாக்குறையால் எல்லாவற்றிற்கும் போகமுடியவில்லை. இருந்து பார்த்தவற்றை இங்கு பகிர்ந்தேன்.

   உங்கள் ஆர்வத்திற்கும் நன்றிசகோ!
   இங்கு வந்து அத்தனையையும் ரசித்து கருத்துக்கவிகள் நல்கி வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 6. எல்லாமே அருமை. குறிப்பாக விழி தரும் விடை. சின் முத்திரை க்வில்லிங் அபாரம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸ்ரீராம்...

   உங்கள் ரசனை கண்டு மகிழ்ந்தேன்...

   அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும் என் மனமுவந்த நன்றிகள் பல...

   Delete
 7. பார்க்கின்ற யாவும் பரவசமாகும்
  வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்//
  நேர்த்தியான வரைதலுடன்
  நேர்மையாக கருத்தைச் சொல்லி
  கீர்த்தியான ஆன்மாவை
  போற்ற சொன்ன உங்களுக்கு
  நாடிக் கமலத்திலிருந்து
  நன்றிச் சொல்லி மகிழ்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவியாழி கண்ணதாசன்!...

   வந்திங்கு மிகரசித்து வளமான பாவிசைத்து
   தந்தஉம் நல்வாழ்த்து தங்கமென ஆனதுவே
   சொந்தமே! சோதரரே! சொல்லுகிறேன் நானும்
   வந்தனமும் நன்றியும் வருகையிங்கு தந்ததற்கே...

   Delete
 8. மருத்துவர் முருகானந்தம் அவர்களின் தொடர் வாசகன் நான்.நீங்கள் குறிப்பிட்டதுபோல் அனைத்து அம்சங்களுடன் உள்ள நல்ல தளம்.அறிமுகம் செய்த உங்களுக்கும் என் நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரரே... நீங்கள் அநேகமாக அனைத்து வலையுறவுகளிடமும் போகின்ற ஒருவர்...:)
   அறியாதவர்களுக்கு அறிய ஒரு உதவியென வைத்தியர் ஐயாவை இம்முறை இங்கு இணைத்தேன்.

   மிக்க நன்றி சகோ. உங்கள் வரவும் அழகான ரசனைக்கவியும் வாழ்த்துக்களும் எனக்கும் மகிழ்வாயுள்ளது. அனைத்திற்கும் மனமார்ந்த என் நன்றிகள்!!!

   Delete
 9. கோட்டுச்சித்திரத்தில் கவிலிங் கைவேலை அழகு, அது சொல்லும் செய்தி அருமை,அன்பு,அமைதி அடக்கம் அற்புதம்.

  பார்க்கின்ற யாவும் பரவசமாகும்

  வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்

  ஊருக்கும் உறவுக்கும் உன்னதமாகும்

  நேரிதற்குமுண்டோ நிகர் நீசொல்!... //

  அமைதி கவிதை அருமை.  வினையேவாழ்வை வாழ்கிறேன்விடு//

  தனிமை கவிதை சொல்லும் செய்தி அருமை.
  கண்ணீர் குளம் படம் அழகு.விடை தரும் விழிகள் மனதை என்னவோ செய்கிறது.

  வைத்தியர் முருகானந்தன் ஐயாவின் ஹாய் நலமா மட்டும் போய் படித்து இருக்கிறேன். மற்றவைகளை பார்க்கிறேன் சகோதரி.
  நன்றி.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி கோமதி அரசு!...

   உங்கள் அன்பான வரவும் மிகவே ரசித்தபாங்கும் என்னை மேலும் ஊக்குவிக்கின்றது. மகிழ்வாயும் இருக்கிறது...

   ஏனைய பதிவர்களை ஊக்குவிக்கும் பதிவர் ராஜ் அவர்களின் முயற்சிக்கு என் பங்கு இம்முறை வைத்தியர் ஐயாவின் அறிமுகம்.

   உங்களின் வரவு, ரசனை, வாழ்த்து அத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல சகோதரி!...

   Delete
 10. சின் முத்திரை க்வில்லிங் அருமை... விளக்கமும்...

  முருகானந்தன் ஐயாவின் வலைத்தளங்கள் பலரும் அறிவார்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் சார்!...

   ஆமாம் நீங்கள் பார்க்காத பதிவர்கள் இருக்கின்றனா என்ன...:)
   உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எனக்கு தற்போது சில நாட்களாகத்தான் தெரியும். அதனாலும் இவரின் வலைப்பூக்களைப் பகிர்ந்தேன்.

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் என் அன்பான நன்றிகள் பல.

   Delete
 11. கோட்டுச்சித்திரத்தில் சின்முத்திரை பார்த்தாலே மன அமைதி உண்டாகிறது. க்வில்லிங் நேர்த்தி.. நகம் கூட வடிவாய்.. பாராட்டுகள் இளமதி.

  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் ஆக்கங்கள். மன அமைதி தரும் ஆனந்தப்பட்டியலை அகங்குளிர வாசித்தேன். அமைதிக்காய் நிலவையும் தள்ளிவைக்கும் கவிதையை ரசித்தேன். மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தரும் விழிகள் கண்டு வருந்தினேன். விடை தரும் விழிநீரும் விடைபெறும் நாள்வரவேண்டும்.

  மருத்துவர் முருகானந்தம் அவர்களின் வாசகி என்பதில் நானும் பெருமை கொண்டேன்.

  நன்றி இளமதி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதமஞ்சரி!...

   உங்கள் ரசனையைக்கண்டு நான் ரசிக்கின்றேன்...:) க்விலிங்கில் அந்த நகவேலைதான் சொதப்பியதோ எனப்பயந்துகொண்டிருந்தேன்.
   இங்கே என் வீட்டில் அதுஎன்ன உங்கள் கைவிரலோ ரோஸ் கலரில் நகம் என சிரித்தனர்...:))).
   அதையே நீங்கள் ரசித்திருக்கின்றீர்கள்.

   ம். உங்கள் ரசனைதான் பெரியதொரு ஊக்குவிப்பு எனக்கு. ரசித்து அதனை தொகுத்து அதைவெளிக்கொணரும்விதமிருக்கே... அலாதி! அற்புதம்! எல்லோருக்கும் இப்படி வாய்ப்பதில்லை. ரசைத்தாலும் எழுததெரிவதில்லை. எனக்கும்தான்...;).

   நீங்கள் அறிமுக வைத்தியர் ஐயாவின் வாசகி என்பது மகிழ்வே.

   உங்கள் அன்பான வரவு, ரசனை, வாழ்த்து அத்தனைக்கும் என் மகிழ்வான நன்றிகள் பல தோழி!...

   Delete
 12. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  -=-=-=-=-=-=-

  அன்புடையீர்,

  வணக்கம்.

  இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.

  தலைப்பு:

  ”ஸ்வர்ண குண்டல அனுமன்”

  இணைப்பு:

  http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html

  தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி,

  இப்படிக்குத்தங்கள்,

  வை. கோபாலகிருஷ்ணன்
  gopu1949.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வைகோ ஐயா!..

   உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

   சகோதரி அவர்களிடம் சென்று வாழ்த்திவிட்டேன் ஐயா. நன்றி!

   Delete
 13. மிக அருமையான் அறிமுகம்
  ஹாய் நலமா? நானும் அடிக்க்டி சென்று கருத்திடுவதுண்டு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜலீலா!.

   அறிமுகப் பதிவர் தெரிந்தவரா...:) நல்லது.

   மிக்க நன்றி உங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் சகோதரி!...

   Delete
 14. வித்தியாசமான பதிவுகள். அற்புதம். இளமதி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் முரளிதரன்!...

   பதிவினை ரசித்து வாழ்த்திய உங்களுக்கும் என் நன்றிகள்!...

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. காலையில் அமுதமாய் உண்டேன்
  கைவிரல் முத்திரை உணர்ந்தேன்
  ஆனந்த வழிகளும் கண்டேன்
  அமைதியே முதலெனக கொண்டேன் ..!

  தவிப்புகள் செருகிய உள்ளத்தின்
  தனிமையை தேடிய நினைவுகளின்
  தாகம் கண்டு உளம் சிதைந்தேன்
  தவிர்த்திட வழிகளை தேடுகிறேன்...!

  ஊனை உருக்கும் உள்காயம்
  உனக்குள் மருகிட வேண்டுகிறேன்
  தேனை சுரக்கும் பூப்போலே
  தெளிந்த வாழ்வை பெற்றிடுவாய்...!

  நெறிமுறை காட்டும் உன்பணியில்
  அறிமுக மாகும் ஐயாவின்
  செறிந்த தமிழ்கவி கண்டிடவே
  சென்றே நானும் பார்க்கின்றேன்....!

  கவிலிங் படங்கள் கவிதைகளும்
  கனியாய் பருகி மகிழ்ந்திங்கே
  கருத்தினை இட்டு வாழ்த்துகின்றேன்
  காலங்கள் உன்வலி அகற்றிடவே....!

  இனிய கவிதை படங்கள் அருமை

  வாழ்த்துக்கள் சகோ
  வாழ்கவளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரா சீராளா!...

   அழகிய பாமாலைதந்தே அகமகிழ வாழ்தினாயிங்கே
   புகழிங்கு எனக்கில்லைதம்பி புரியவைக்கும் கவியாசானுக்கே
   திகழ்ந்திடவேண்டும் மேலும் திடமாய் கவியினையாக்க
   பழகிட பயிலநாமும் பயன்பெற்று உயரலாம்மேலே...

   உணர்வுகள் உடைந்தாங்கே உறுதியை உலுக்குங்கால்
   மனமது புரவியிலேறி மருண்டுமிக வேகமாயோடி
   ரணங்கள் பலதோன்ற வருநிலை வலிதரும்போது
   கணங்களை இறையிடம் கொடுக்க கைவந்தகலையிதாமே...

   உங்கள் அன்பான வரவும் நயமிக்க கவிக்கருத்தும், உளமார்ந்த வாழ்த்துகளும் மனம் நிறைந்த உவகையைத் தருகிறது.

   அன்பு உறவே... உங்கள் கவிக்கருத்தும் அருமை. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
   உங்களுக்கும் மனமார்ந்த என் நன்றிகள் பல!

   வாழ்க வளமுடன்!

   Delete
  2. மிக்க நன்றி சகோ

   Delete
 17. கவிதையால் இதயத்தை அமைதி கொள்ள வைத்துக்
  கைவேலையால் மனதை மகிழ வைத்த என் அன்புத் தோழிக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள் .குறுங் கவிதை வரிகளை ஏந்தி வந்த
  வண்ணப் படங்களும் கண்ணைக் கவர்ந்து நிற்பது இங்கே
  மற்றுமொரு சிறப்பு ! தாங்கள் சொல்வது போல் முருகானந்தா
  ஐயாவின் வலைத்தளங்களில் பயனுள்ள அரிய நற் தகவல்கள்
  உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை தோழி .இந்த அறிமுகப்
  பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்பாளடியாள்!...

   உங்கள் ரசனை மிகவே ஊக்கத்தை தருகிறது தோழி!

   நுட்பமாக அனைத்தையும் ரசிக்கின்றீர்கள்...:) மிக்க நன்றி!
   அன்பான வரவும் ரசனையும் வாழ்த்தும் எனக்கு நிறைந்த மகிழ்ச்சியாயிருக்கின்றது.

   உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

   Delete
 18. க்வில்லிங் சின் முத்திரை,கவிதை ,பகிர்வுகள் மிக அருமை.தொடருங்கள் இளமதி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 19. சின் முத்திரை சூப்பர். அதன் விளக்கமும் அருமை.. எப்பூடி இப்பூடியெல்லாம்?:)

  ReplyDelete
 20. கவிதையில் கலக்குறீங்க...

  உங்கள் கண்ணீர்க் கவி பார்த்ததும், நான் மாத்தி ஓசிச்சனே ஹைக்கூ..:)

  புன்னகை:
  கேள்விகள் மனம் கேட்க...
  விழிகள் இமைக்க மறக்க...
  விடைதருதே உதடுகள்...

  ஹா..ஹா..ஹா.. ஹவ் இஸ் இட்?:)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 21. அறிமுகத் தளம் அருமை, நேரம் கிடைக்கையில் சென்று வருகிறேன்.

  ReplyDelete
 22. ஏதோ ஒரு வைரஸ் இங்கு உலாவுதுபோலும், பின்னூட்டம் போட்டதும் தெரியுது, பின்பு மறைந்திடுது, கொஞ்ச நேரத்தின் பின் மீண்டும் தெரியுது:) ஒண்ணுமே பிரியல்ல சாமீஈஈஈஈஈஈஈ:).

  ReplyDelete
 23. சின் முத்திரை சூப்பர் சூப்பர் சூப்பர்... அதன் விளக்கமும் அருமை.. அமைதி அடக்கம் அற்புதம் அருமை.கவிதை அருமை....அருமை...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 24. எல்லாமே அருமை இளமதி ..சின்முத்திரை விளக்கம் சூப்பர்ப் !!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 25. "..நினைவேயென்னைத் தனியேவிடு
  துணையாய்ப்பின்னே தொடர்வதைவிடு.."

  ஆழமான கருத்துள்ள கவிதை. நன்று

  சின்முத்துரை பற்றிய தகவல்கள் எனக்குப் புதிது

  எனது வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 26. சின்முத்திரை பற்றிய விளக்கம் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 27. //பார்க்கின்ற யாவும் பரவசமாகும்
  வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்
  ஊருக்கும் உறவுக்கும் உன்னதமாகும்
  நேரிதற்குமுண்டோ நிகர் நீசொல்!.//
  பார்க்கின்ற சின்முத்திரை கூட பரவசத்தை,அமைதியைத் தருகின்றது இளமதி. அதை எவ்வளவு அழகாகசெய்திருக்கிறீங்க.வார்த்தையில்லை இங்கெனக்கு.
  கவிதைகள் அனைத்தும் அருமையாக,அழகாக எழுதியிருக்கின்றீர்கள்.
  Dr.முருகானந்தம் ஐயாவின் 3 தளங்களையும் வாசித்திருக்கிறேன்.
  மிக பயனுள்ளதளங்கள். பார்த்து,பயனடையவேண்டியதளங்கள். அறிமுகத்திற்கு நன்றி இளமதி. பகிர்வுகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 28. சின்முத் திரையின் சிறப்பை அறிந்திட்டேன்!
  நன்முத் திரைகவிகள் நற்றோழி! - அன்பாய்
  அறிமுகமும் சேர்த்தே அமைத்தப் பதிவின்
  நெறிவரை கண்டேன் நெகிழ்ந்து.

  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 29. Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 30. அன்புறவுகளுக்கு வணக்கம்... ஒருசில காரணங்களால் உங்களுக்கு தனித்தனியே கருதுப்பகிர்வு செய்யமுடியவில்லை. மனம் வருந்துகிறேன்...

  கருத்துப்பகிர்வு செய்த யாவர்க்கும் மனமார்ந்த நன்றிகள் பல...

  ReplyDelete
 31. வணக்கம். சின் முத்திரை சூப்பர். அதன் விளக்கமும் அருமை.கவிதை கலக்கல். அழைப்பினை ஏற்று 900வது பதிவினை சிறப்பித்துக்கொடுத்ததற்கு மிக்க நன்றி. Please visit my blog for a new post if time permits..
  http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html அன்புடன் கோகி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 32. பார்க்கின்ற யாவும் பரவசமாகும்
  வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்
  ஊருக்கும் உறவுக்கும் உன்னதமாகும்
  நேரிதற்குமுண்டோ நிகர் நீசொல்!...

  சின்முத்திரை பற்றி சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  எமது பதிவுக்கு வருகை தந்து வாழ்த்திச்
  சிறப்பித்தமைக்கு மன்ம நிறைந்த இனிய நன்றிகள்...

  முருகானந்தம் ஐயாவின் பயனுள்ள வலைத்தளங்களின் அறிமுகத்திறகு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 33. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 34. சின்முத்திரை பற்றிய தகவல் அருமை. அதைக் காட்டும் க்விலிங் அழகு.
  // பார்க்கின்ற யாவும் பரவசமாகும்
  வேர்விடும் உறவும் விழுதுகளூன்றும்
  ஊருக்கும் உறவுக்கும் உன்னதமாகும்
  நேரிதற்குமுண்டோ நிகர் நீசொல்!... // உண்மை..அமைதிக்கு நிகர் ஒன்றுமில்லை தோழி.
  'தனியே விடு' கவிதை அருமை..ஒவ்வொரு வரியும் உண்மைதான்..நினைவுகள் தொடராமல் இருந்தால் நிம்மதிதானே!
  கண்ணீர் கவிதை படத்துடன் மிக அருமை..
  அறிமுகப்பதிவும் நன்று..

  உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 35. அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

  அமைதி தருகின்ற சின்முத்திரை படம் அருமையோ அருமை.

  // கோட்டுச்சித்திரத்தில் இங்கு க்விலிங் கைவேலையாகச் செய்துள்ளேன்//

  இதனால் எங்களுக்கும் அமைதி கிட்டிடுமா??????.

  [சொ ல் ல டீ ........... அ பி ரா மி ............ ]

  நிலவென வாராயோ ! ஒரு பதில் தாராயோ !!

  http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 36. சின்முத்திரை இப்போது தான் அறிந்து கொண்டேன்.

  கோட்டுச்சித்திரத்தில் அசத்துறிங்க.

  கவி வரிகள் மனதை வருடிச்சென்றன. அருமை தோழி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 37. க்விலிங் கைவேலை alaku.
  கவி வரிகளும் மிக மிக நன்று. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 38. சின்முத்திரைப் பற்றிய விளக்கம்! தற்போதுதான் அறிந்தேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 39. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க நீங்க வெளி நாட்டில் இருக்கிங்க இல்ல . சரிங்க பரவாயில்ல.

   Delete
 40. well come to my web.
  vetha.Elangathilakam.

  ReplyDelete
 41. மிகச் சிறந்த படங்கள் படத்திற்கேற்ற பா வரிகள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 42. தாங்கள் கூறிய படி நானும் இந்த சின்ன முத்திரையை பயன்படுத்திப் பார்கிறேன் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மீள்வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 43. கோட்டுச்சித்திரம் எளிமையில் அழகு! ' அமைதி' கவிதையில் அழகு! அனைத்தையும் விட நினைவுகளை விலகிப்போகச் சொல்லும் கவிதை மிக அருமை இளமதி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 44. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! இணைக்கின்றேன்.

   Delete
 45. க்விலிங்கில் உங்கள் கை வணணம் வழக்கம் போல் ரசனை! சின் முத்திரை பற்றி நான் அறிந்த விடயம்தான் என்றாலும் இங்கே அழகுற நீஙகள் பகிர்ந்ததை மீண்டும் படித்து ரசித்தேன். ‘கண்ணீர்’ கவிதையும் படமும் மனசை கொள்ளையிட்டது! மற்ற எல்லாக் கவிதைகளும் முத்துக்கள்தான்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 46. சின் முத்திரை குறித்த விளக்கமும்
  அதை மிக நேர்த்தியாகக் கவிதையில்
  சொல்லிச் சென்றவிதமும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 47. படமும் பாடலும் தகவலும் மூன்று
  முத்துக்கள் இளமதி !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 48. முதன் முறையாக தங்களின் வலைப் பூவிற்கு வருகை தந்தேன். சின் முத்திரை விளக்கமும், படம அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வாருங்கள்...

   உங்கள் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் வாழ்திற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல!...

   Delete
 49. Replies
  1. ம்.ம். நன்றி சகோ.சீனி..:)

   Delete
 50. கவிதைகள் வழமைபோல அருமை. க்வில்லிங் அற்புதம். வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி, விரைவில் சென்று படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அட நம்ம இமா இங்கை வந்ததெப்போ...

   பார்கலையே... மனமிக வருந்துகிறேன்.

   மிக்க நன்றி வரவே வரப்பிரசாதம்!
   வாழ்த்து அதற்கும் மேலே...:).

   Delete
 51. வைத்தியர் முருகானந்தன் ஐயாவின் வலைப்பூக்களை அறிமுகம் செய்தமை பலருக்கு நன்மை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் யாழ்பாவாணன் ஐயா!

   உங்கள் அன்பு வரவும் வாழ்த்தும் தருவது எனக்கு மகிழ்ச்சி!
   மிக்க நன்றி ஐயா!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_